Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sakalakala Babu
Sakalakala Babu
Sakalakala Babu
Ebook223 pages56 minutes

Sakalakala Babu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

1987-னில் நான் இந்தியன் எஸ்பிரஸில் பணியில் சேர்ந்தபோது, எனது எடிட்டோரியல் துறையின் தலைவர் மாஸ்டர்ஜி என்று அழைக்கப்படுகிற, சி பி சேஷாத்திரியும், தினமணி ஆசிரியர் ஏ என் சிவராமனும் அன்றாடம் உணவு இடைவேளையின் போது, அரசியல், சரித்திரம் போன்ற விஷயங்களை அலசிக் கொண்டிருப்பார்கள். இரண்டாம் உலக மகா யுத்தத்தின் போது எப்படி தான் தனியாக இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழை கொண்டு வந்தேன் என்று என்னிடம் பலமுறை கூறியிருக்கிறார் மாஸ்டர். என்னை அப்போது பாரின் (வெளிநாடு) டெஸ்க்கில் போட்டிருந்ததால், எனக்கு அன்றாடம் காலை பொழுது பணிதான்

எனவே, மாஸ்டர்ஜியுடன் அதிகம் பொழுதை கழிப்பேன். பல விஷயங்களை கூறுவார். தினமணியில் பணிபுரிந்த ஜெ பி ரோட்ரிகஸ் என்பவரை பற்றியும், அவர் சத்தியமூர்த்திக்கு எவ்வளவு நெருங்கியவர் என்பதையும் கூறுவார். எனவே அந்த ரோட்ரிகஸை பற்றி நிறையவே விஷயங்களை சேகரித்து வைத்திருந்தேன்.

ஒரு நாள் ஜெயலலிதாவுடன் பேசிக்கொண்டிருந்தபோது அந்த ரொட்ரிகஸ் தான் நடிகர் சந்திரபாபுவின் அப்பா என்று கூறினார். அதன் பிறகு சந்திரபாபுவின் வாழ்க்கை பற்றிய தகவல்களை சேகரிக்க துவங்கினேன். மாஸ்டர்ஜி கூறிய விவரங்கள், பெங்களூரில் இருந்தபோது தான் சந்திரபாபுவுடன் பழகிய காலத்தை பற்றி ஜெயலலிதா கூறிய தகவல்கள், போலீஸ்காரன் மகளில் சந்திரபாபுவுக்கு வசனம் எழுதிய எனது தந்தை சித்ராலயா கோபு கூறிய தகவல்கள், எம்ஜிஆர்க்கு மிகவும் நெருங்கிய ஒருவர் கூறிய தகவல்கள், பத்திரிக்கையாளனாக நான் சேகரித்த தகவல்கள், எம். எஸ் வியின் நெருங்கிய உறவினர் கூறிய தகவல்கள், இன்னும் சந்திரபாபுவின் ரசிகர்கள் பலர் என்னிடம் தெரிவித்த தகவல்கள் அனைத்தையும் சேகரித்து உங்களுக்கு தொடராக அளிக்கிறேன். காதலிக்க நேரமில்லை நகைச்சுவையான, ஜாலியான தொடராக இருந்திருக்கலாம்! இந்த தொடர் சற்று சோகத்தையும், நகைச்சுவையையும் கலந்தே கொடுக்கும். எழுதுபவர்கள் நீர் மாதிரி. Water takes the shape of the container! எழுத்தாளரும் எழுதும் விஷயத்தில் உள்ள உணர்வுகளையே பிரதிபலிப்பார்கள்! இதோ தொடங்குகிறேன்...

Languageதமிழ்
Release dateMay 13, 2020
ISBN6580132105368
Sakalakala Babu

Read more from Kalachakram Narasimha

Related to Sakalakala Babu

Related ebooks

Reviews for Sakalakala Babu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sakalakala Babu - Kalachakram Narasimha

    http://www.pustaka.co.in

    சகலகலா பாபு

    Sakalakala Babu

    Author:

    காலச்சக்கரம் நரசிம்மா

    Kalachakram Narasimha

    For more books

    http://www.pustaka.co.in/home/author/kalachakram-narasimha

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    முன்னுரை

    1987-னில் நான் இந்தியன் எஸ்பிரஸில் பணியில் சேர்ந்தபோது, எனது எடிட்டோரியல் துறையின் தலைவர் மாஸ்டர்ஜி என்று அழைக்கப்படுகிற, சி பி சேஷாத்திரியும், தினமணி ஆசிரியர் ஏ என் சிவராமனும் அன்றாடம் உணவு இடைவேளையின் போது, அரசியல், சரித்திரம் போன்ற விஷயங்களை அலசிக் கொண்டிருப்பார்கள். இரண்டாம் உலக மகா யுத்தத்தின் போது எப்படி தான் தனியாக இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழை கொண்டு வந்தேன் என்று என்னிடம் பலமுறை கூறியிருக்கிறார் மாஸ்டர். என்னை அப்போது பாரின் (வெளிநாடு) டெஸ்க்கில் போட்டிருந்ததால், எனக்கு அன்றாடம் காலை பொழுது பணிதான்

    எனவே, மாஸ்டர்ஜியுடன் அதிகம் பொழுதை கழிப்பேன். பல விஷயங்களை கூறுவார். தினமணியில் பணிபுரிந்த ஜெ பி ரோட்ரிகஸ் என்பவரை பற்றியும், அவர் சத்தியமூர்த்திக்கு எவ்வளவு நெருங்கியவர் என்பதையும் கூறுவார். எனவே அந்த ரோட்ரிகஸை பற்றி நிறையவே விஷயங்களை சேகரித்து வைத்திருந்தேன்.

    ஒரு நாள் ஜெயலலிதாவுடன் பேசிக்கொண்டிருந்தபோது அந்த ரொட்ரிகஸ் தான் நடிகர் சந்திரபாபுவின் அப்பா என்று கூறினார். அதன் பிறகு சந்திரபாபுவின் வாழ்க்கை பற்றிய தகவல்களை சேகரிக்க துவங்கினேன். மாஸ்டர்ஜி கூறிய விவரங்கள், பெங்களூரில் இருந்தபோது தான் சந்திரபாபுவுடன் பழகிய காலத்தை பற்றி ஜெயலலிதா கூறிய தகவல்கள், போலீஸ்காரன் மகளில் சந்திரபாபுவுக்கு வசனம் எழுதிய எனது தந்தை சித்ராலயா கோபு கூறிய தகவல்கள், எம்ஜிஆர்க்கு மிகவும் நெருங்கிய ஒருவர் கூறிய தகவல்கள், பத்திரிக்கையாளனாக நான் சேகரித்த தகவல்கள், எம். எஸ் வியின் நெருங்கிய உறவினர் கூறிய தகவல்கள், இன்னும் சந்திரபாபுவின் ரசிகர்கள் பலர் என்னிடம் தெரிவித்த தகவல்கள் அனைத்தையும் சேகரித்து உங்களுக்கு தொடராக அளிக்கிறேன். காதலிக்க நேரமில்லை நகைச்சுவையான, ஜாலியான தொடராக இருந்திருக்கலாம்! இந்த தொடர் சற்று சோகத்தையும், நகைச்சுவையையும் கலந்தே கொடுக்கும். எழுதுபவர்கள் நீர் மாதிரி. Water takes the shape of the container! எழுத்தாளரும் எழுதும் விஷயத்தில் உள்ள உணர்வுகளையே பிரதிபலிப்பார்கள்! இதோ தொடங்குகிறேன்...

    காலச்சக்கரம் நரசிம்மா

    *****

    அத்தியாயம் 1

    எண்ணிக்கையில் 6, என்றும் 16

    திருவல்லிக்கேணி

    தமிழகத்தின் ஸ்ரீஹரிகோட்டா என்று சென்னையின் இந்தப் பகுதியை அழைக்கலாம். காரணம், இங்கு வாழும் மனிதர்கள் பிற்காலத்தில் பெரிய நிலையை அடைவார்கள். எல்லோரும் அல்ல! தங்கள் திறமைகளை வெளியுலத்திற்கு எடுத்து காட்ட முன்வருபவர்கள் மட்டுமே! ஆனால்தங்களை வெளிக்காட்ட விரும்பாமல், கோட்பாடுகளே, புகழை விட முக்கியம் என்று நினைக்கும் மாபெரும் திறமைசாலிகள் இன்னும் இந்த பகுதியில் வசித்துதான் வருகிறார்கள்.

    அரசியல்வாதிகள், திரைப்பட கலைஞர்கள், இலக்கியவாதிகள், ஜோதிடர்கள், இசைக்கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள் என்று பல விவிஐபிகளுடன் பேசி பாருங்கள். தங்கள் இளமைகாலத்தை பற்றி குறிப்பிடும்போது நிச்சயம் திருவல்லிக்கேணியில் அந்த சந்தில் நான் ஒரு காலத்தில் குடி இருந்தேன் என்று கூறுவார்கள். எப்படி கல்லூரி படிப்புக்கு முன்பாக, கிண்டர் கார்டென் படிப்பு அவசியமோ, அப்படி வாழ்க்கையில் பெரிய நிலைக்கு உயர்வதற்கு முன்பாக திருவல்லிக்கேணியில் ஒவ்வொரு மனிதனும் ஒரு காலகட்டத்தில் குருகுல வாசம் பயின்றிருப்பான். நானும் அல்லிக்கேணியில் பிறந்து, வளர்ந்துதான் இன்று இந்த நிலையில் இருக்கிறேன்.

    திருவல்லிக்கேணியில் சிங்கராச்சாரி தெருவில் எங்கள் வீடு இருந்த எதிர்வரிசையில் தான் காங்கிரஸ் தலைவர் சத்யமூர்த்தி ஒரு காலத்தில் குடியிருந்தார். சிங்கராச்சாரி தெரு மிகவும் புகழ் பெற்றது. மகாத்மா காந்தி இந்த வீதியில் நடந்திருக்கிறார். சத்தியமூர்த்தியை பார்க்க நேரு இங்கே வந்திருக்கிறார். வை மு கோதைநாயகி அம்மாளின் ஜெகன் மோகினி பத்திரிக்கை இங்குதான் இருந்தது.

    பாரதியார் ஜகன்மோகினி வீட்டுக்கு வந்து, கோதை! நான் ஒரு பாட்டு எழுதிக்கொண்டு வந்திருக்கேன். உடனே மெட்டு அமைச்சு கொடு, என்று கழுத்தில் கத்தியை வைக்க, தனது குடும்ப பிரச்சனைகளின் நடுவே, அவர் மெட்டு அமைத்து கொடுப்பாராம். சில நாட்கள், மிகவும் பிரச்சனைகள் இருக்கும் தருணத்தில், பாரதியார் வர, நீங்கள் அப்புறம் வாங்களேன், என்று கோதைநாயகி சொல்லியிருக்கிறார், என்று ஜகன்மோகினி பத்திரிகையில் துணை ஆசிரியராக பணியாற்றிய எனது தாய் கமலா சடகோபன் கூறியிருக்கிறார்.

    இராஜாஜி, காமராஜர், சத்யமூர்த்தி ஆகிய மூவரும், சுதந்திர போராட்டத்தின் தூண்கள். திருவல்லிக்கேணி கங்கை கொண்டான் மண்டபம் எதிரே, உள்ள பார்த்தசாரதி கோவிலுக்கு சொந்தமான கட்டடத்தில் ஒரு சிறு அறையில் அப்போது காமராஜ் குடியிருந்தார். இந்த இடம் சத்யமூர்த்தி குடியிருந்த சிங்கராச்சாரி தெருவும், துளசிங்க பெருமாள் கோவில் தெருவும் சந்திக்கும் இடத்தில் இருந்தது.

    காமராஜர்க்கு சத்யமூர்த்தி வீட்டில் இருந்து சாப்பாடு போகும். இரவு நேரங்களில் பார்த்தசாரதி கோவிலில் இருந்து பிரசாதங்கள் வரவழைத்து சாப்பிடுவார் காமராஜர். இதே தெருவில்தான் டாக்டர் நஞ்சுண்ட ராவ் என்கிற ஒருவர் தனது க்ளினிக் மற்றும் மருந்துகடையான எம் சி என் எஸ் (எம் சி நஞ்சுண்டராவ் அண்ட் சன்ஸ் என்கிற மருந்து கடை) வைத்திருந்தார். கன்னடக்காரராக இருந்தாலும், தமிழ் பற்று உடையவர். இப்போது மயிலையில் இருக்கும் ராமகிருஷ்ணா மடம் இருந்த இடத்தில் அரண்மனை போன்ற பங்களா வைத்திருந்தார். அதை மடத்துக்கு அளித்து விட்டார்.

    பாரதியார் சென்னைக்கு வந்து ஆங்கிலேயரை எதிர்த்து பேசி விட்டு இவரது பங்களாவில் ஒளிந்து கொள்வார். நடுநிசியில், கச்சேரி ரோட்டில் இருக்கும் பக்கிங் ஹாம் கால்வாயில் பாரதியாரை ராவ் படகு ஏற்றி விட மாறுவேடத்தில் கூவத்தூர் வரை படகில் சென்று பிறகு பாண்டிசேரிக்கு தப்பி செல்வார். (பாரதியாருக்கே ஒளிந்து கொள்ள இடம் கொடுத்த கூவத்தூர், இப்போது எம் எல் ஏ-க்கள் ஒளிந்துகொள்ள இடம் கொடுத்தது தலைவிதிதான்)

    திருவல்லிக்கேணியில் லேடி வெல்லிங்டன் பள்ளியில் இடம் பெற வேண்டும் என்றால், ஆங்கிலம் கட்டாயம். பாபா பிளாக் ஷீப், சாலமன் கிராண்டி போன்ற ஆங்கில நர்சரி ரைம்களை கட்டாயமாக அந்த பள்ளி வற்புறுத்த, அதைக்கண்டு மனம் வேதனையடைந்த நஞ்சுண்ட ராவ், தமிழ் புலமை மிக்க தனது நண்பர் திருநாராயணனை கொண்டு தமிழ் ரைம்களை எழுத வைத்து, அதை வெளியிட்டு தனது நோயாளிகளுக்கு விநியோகித்தார், நஞ்சுண்ட ராவ். (திருநாராயணனின் மகள் தான் எனது தாய் கமலா சடகோபன்) இந்த நஞ்சுண்டராவ் கடையின் எதிரேதான் எங்கள் வீடு இருந்தது.

    ஆக, திருவல்லிக்கேணி வீதிகளில் தேசியமும், ஆன்மீகமும், இலக்கியமும் கொஞ்சி விளையாடிக் கொண்டிருந்த காலம் அது. ஒரு பக்கம், அடியேன் தாசன் திருமேனி பாங்கா? என்று ஒலிக்கும் வைணவ தமிழும், வட்டி கொடுக்க வூட் மேலே வரான் இல்லே - என்று மிரட்டும் மார்வாடி தமிழும், அரே! கிருஷ்ணசாமி அய்யங்கார் வூட்ல மெத்தை தைக்க வர சொன்னாங்கோ, என்கிற மீர்சாகிப்பேட்டை தமிழும், அனைத்துக்கும் மேலாக, இன்னா நைனா... நேத்து சவாரிக்கு வரலே என்று... ஒருவர் கேட்க, அதை ஏம்பா கேட்கறே, ஜல்பு புடிச்சு போச்சுப்பா என்று மூக்கை உறிஞ்சும் இன்னொரு கைரிட்சாகாரர் பதில் கூற, மொத்தத்தில் எல்லாவிதமான தமிழும் அல்லிக்கேணி வீதிகளில் ஒலிக்கும்.

    1927

    இந்த ஒலிகளிடையே, தூத்துக்குடி தமிழ் பேசியபடி, கைரிட்சாவில் வந்து இறங்கினார் ஒருவர். தெருமுனையில் கோவிலின் மண்டபத்தின் அருகே நின்றபடி இரு ஆங்கிலேய சிப்பாய்கள் அந்த கைரிட்சாவில் இருந்து இறங்கும் இளைஞரையே நோட்டம் விட்டுக் கொண்டிருந்தனர். அவர் பெயர் ரோட்ரிகஸ். மண்ணடி பகுதியில் சுதந்திர வீரன் என்கிற பத்திரிக்கையை நடத்தி கொண்டிருந்தார். சத்தியமூர்த்தியை சந்திப்பதற்காக திருவல்லிக்கேணி வந்திருந்தார்.

    கைரிட்சாவில் இருந்து இறங்கியவர், இருபுறமும் பார்த்துவிட்டு, திருவல்லிக்கேணி சிங்கராச்சாரி தெருவினில் இருந்த சத்தியமூர்த்தியின் வீட்டினுள் நுழைந்தார். அவரது மனைவி ரோஸ்லின் தூத்துக்குடியில் தனது ஆறாவது மகனை வயிற்றில் சுமந்து கொண்டிருந்தார். எண்ணிக்கையின் படி அது ஆறாவது கர்ப்பம். ஏற்கனவே ஐந்து குழந்தைகள் பிறந்து விட்டன. ஐந்தாவது மகனுக்கு சத்யமூர்த்தி ரோட்ரிகஸ் என்று சத்தியமூர்த்தி மீது உள்ள நட்பின் அடையாளமாக பெயர் வைத்திருந்தார். வயிற்றில் இருக்கும் அந்த மகன்தான், இந்த தொடரின் நாயகன், சந்திரபாபு. எண்ணிக்கையில் ஆறு, என்றும் பதினாறு என வாழபோகும் சந்திர பாபு!

    *****

    அத்தியாயம் 2

    சென்னை ஏற்படுத்திய திருப்பம்

    சத்தியமூர்த்தியின் வீட்டுக்குள் நுழைந்த ரோட்ரிகஸை உற்சாகத்துடன் வரவேற்றார், சத்தியமூர்த்தி. சத்தியமூர்த்தியின் வீட்டில் ஏற்கனவே ராஜாஜி, காமராஜர், தூத்துக்குடி மாசிலாமணி பிள்ளை, பெ கந்தசாமி ஆகியோர் அமர்ந்திருந்தனர். வ. உ சிதம்பரம் பிள்ளையின் தூதுவராகத்தான் சத்தியமூர்த்தியை சந்திக்க கந்தசாமி வந்திருந்தார். அங்கிருந்தவர்களுக்கு தனது சுதந்திர வீரன் பத்திரிக்கை பிரதிகளை விநியோகித்ததும் ஒரு பக்கமாக அமர்ந்தார், ரோட்ரிகஸ்.

    ராஜாஜி தான் முதலில் பேச துவங்கினார். 1925-ல் கான்பூரில் சரோஜினி நாயுடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக பதவி ஏற்றிருந்தார். கவி சம்மேளனை நடத்தி சுதந்திர உணர்வை எழுப்ப முடியாது என்று அறைகூவலிட்டு கட்சியின் தீவிர உணர்வு கொண்டவர்கள் எஸ். ஸ்ரீனிவாச ஐயங்காரை காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமித்திருந்தனர். நேதாஜியுடன் நெருக்கம் கொண்டிருந்த ஸ்ரீனிவாச ஐயங்கார், அவருக்கும் சத்தியமூர்த்தி, முத்துராமலிங்க தேவர் மற்றும் வ உ சிதம்பரம் பிள்ளை ஆகியோருக்கும் இடையே பாலமாக இருந்தார்.

    கட்சியில் தீவிர சிந்தனையாளர்களின் கை ஓங்கி கொண்டே போவதை கண்ட மோதிலால் நேரு, காந்தி போன்றவர்கள், சென்னையில் அகில இந்திய காங்கிரஸ்

    Enjoying the preview?
    Page 1 of 1