Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ninaivu Naatkalum Nenjil Alaigalum
Ninaivu Naatkalum Nenjil Alaigalum
Ninaivu Naatkalum Nenjil Alaigalum
Ebook245 pages1 hour

Ninaivu Naatkalum Nenjil Alaigalum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இந்த மண்ணில் தோன்றி இந்தச் சமூகத்திற்காக உழைத்துச் சிறந்தவர்கள் மறைந்தபோதும், அத்தகைய மனிதர்கள் மறைந்த நாட்களின் போதும் கவிஞர் கே. ஜீவபாரதி எழுதிய கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த நூல்.

அரிய செய்திகளை பக்கத்திற்குப் பக்கம் இந்த நூலில் கவிஞர் கே. ஜீவபாரதி பதிவு செய்திருக்கிறார். குறிப்பாக பொதுவுடைமை இயக்கத் தோழர்கள் மறைந்த போது ‘ஜனசக்தி' நாளிதழில் கவிஞர் கே. ஜீவபாரதி எழுதியிருக்கும் கட்டுரைகள் இந்த தேசத்தை நேசிப்பவர்களும், புதுமையை விரும்புபவர்களும் படிக்கவேண்டிய கட்டுரைகளாகும்.

Languageதமிழ்
Release dateOct 9, 2021
ISBN6580144406942
Ninaivu Naatkalum Nenjil Alaigalum

Read more from K. Jeevabharathy

Related to Ninaivu Naatkalum Nenjil Alaigalum

Related ebooks

Reviews for Ninaivu Naatkalum Nenjil Alaigalum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ninaivu Naatkalum Nenjil Alaigalum - K. Jeevabharathy

    https://www.pustaka.co.in

    நினைவு நாட்களும் நெஞ்சில் அலைகளும்

    Ninaivu Naatkalum Nenjil Alaigalum

    Author:

    கே. ஜீவபாரதி

    K. Jeevabharathy

    For more books

    https://www.pustaka.co.in/home/author/k-jeevabharathy

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    உள்ளே புகுமுன்...

    ‘ஜனசக்தி’ நாளிதழில் கட்டுரைப் பகுதி ஆசிரியராக நான் பணியாற்றிக் கொண்டிருந்தபோது நான்காம் பக்கத்தையும் எட்டாம் பக்கத்தையும் கவனிக்கின்ற பொறுப்பு எனக்குக் கொடுக்கப்பட்டது. இந்த இரண்டு பக்கங்களிலும் கட்டுரைகளே இடம் பெறவேண்டும் என்பதனால் தமிழறிஞர்களையும் புதிய படைப்பாளிகளையும் ‘ஜனசக்தி’யில் தொடர்ந்து எழுத வைத்தேன்.

    இருப்பினும் பொதுவுடைமை இயக்கத்தைச் சார்ந்த தோழர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் மறைந்தபோது அவர்களைப் பற்றிய செய்திகளைக் கொண்ட முழுமையான கட்டுரைகளை நான் எழுதவேண்டியதாயிற்று. அடிக்கடி இப்படி எழுதவேண்டிய சூழல் ஏற்பட்டபோது பல்வேறு புனைபெயர்களில் ‘ஜனசக்தி’யில் கட்டுரைகளை நான் எழுதினேன்.

    அதே போன்று இந்த தேசத்திலும் வெளிநாடுகளிலும் பிறந்து சாதனைகள் புரிந்து மறைந்த மகத்தான மனிதர்களின் நினைவு நாட்களின்போது அவர்களைப்பற்றி எழுதி வாசகர்களின் கவனத்திற்குக் கொண்டு சென்றேன். இந்தக் கட்டுரைகள் ‘ஜனசக்தி’ வாசகர்களிடம் பெருத்த வரவேற்பைப் பெற்றன. இதில் நான் எழுதிய ஒரு கட்டுரையின் பின்புலத்தை நான் இங்கே சொல்லியாகவேண்டும்.

    சென்னை ரிசர்வ் வங்கியில் பணியாற்றிக் கொண்டு அந்த வங்கியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளையை அமைத்ததுடன், சென்னையில் உள்ள அனைத்து வங்கிகளிலும் கட்சிக்கிளைகளை அமைத்து வங்கி ஊழியர்களின் அரசியல் விழிப்புணர்வுக்கு வித்திட்டவர் தோழர் ஆர். பார்த்தசாரதி. இவர் தோழர்களால் ‘ஆர்.பி.எஸ்.’ என்று அன்புடன் அழைக்கப்பட்டார். வங்கிப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்பும் ஓய்வெடுத்துக் கொள்ளாமல் நியூசெஞ்சுரி புத்தக நிறுவனத்தின் வெளியீட்டுத் துறையில் இறுதி நாள்வரை பணியாற்றினார்.

    ஒருமுறை நான் அம்பத்தூர் சென்றபோது உடல் நிலை பாதிக்கப்பட்டு வீட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த தோழர் ஆர். பார்த்தசாரதியைச் சந்திக்க தோழர்களுடன் அவர் வீட்டிற்குச் சென்றேன். அப்போது, சென்ற மாதம் தோழர் ஆர். நல்லகண்ணு தோழர்கள் சேதுராமன் முத்தரசுடன் என்னைப் பார்க்கவந்தார். அப்போது தோழர் ஆர். நல்லகண்ணு, உங்களைப்பற்றி ஏதாவது குறிப்பு எழுதிவைத்திருக்கிறீர்களா? என்றார்.

    அதற்கு நான், வங்கியிலிருந்து நான் ஓய்வு பெற்றபோது என்னைப்பற்றி ஒரு சிறு நூல் வெளியிட்டனர். நீங்கள் எதற்குக் கேட்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். நான் இறந்தால் ‘ஜனசக்தி’யில் என்னைப்பற்றி தோழர் ஜீவபாரதி எழுதுவார் என்று கூறினேன் என்று சொல்லிச் சிரித்தார். அதே போன்று தோழர் ஆர். பார்த்தசாரதி மறைந்த செய்தி கேட்டவுடன் நான் ‘ஜனசக்தி'யில் எழுதியதுதான் – ‘அறிவுச்சுடர் அணைந்தது’ என்ற கட்டுரை.

    இதே போன்று இயக்கத் தோழர்கள் மறைந்த போது நான் 'ஜனசக்தி'யில் எழுதிய கட்டுரைகளுக்கும் பின்வரலாறு உண்டு. அவை பற்றி விரிவாக எழுத இங்கு வாய்ப்பில்லை.

    ‘ஜனசக்தி’ நாளிதழில் நான் எழுதிய கட்டுரைகளுடன் ‘தாமரை’, ‘தென்பாண்டி பசும்பொன்’ ஆகிய மாத இதழ்களில் நான் எழுதிய கட்டுரைகளும் இந்த நூலில் இடம் பெற்றிருக்கிறது.

    தியாகப் பாரம்பரிய மிக்க தலைமுறை மெல்ல மெல்ல குறைந்து வருகிறது: கடந்தகால தியாகிகளையும் நினைத்துப் பார்க்க நேரமின்றி தமிழ் சமூகம் தலைதெறிக்க ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தச் சூழலில் இந்த நூல் வெளி வருவது அவசியம் அவசரம் என்று கருதுகிறேன்.

    என்றும் அன்புடன்

    கே. ஜீவபாரதி

    பி1, டர்ன்புல்ஸ் சாலை

    3-வது குறுக்குத் தெரு

    நந்தனம், சென்னை - 600 035

    தொடர்புக்கு: 94454 19088

    நன்றி

    1. ஜனசக்தி

    2. தாமரை

    3. தென்பாண்டி பசும்பொன்

    4. பிலிம் சேனல்

    உள்ளே...

    1. மாவீரன் பகத்சிங்கும் மாமேதை ஜீவாவும்

    2. வற்றுமோ சமுத்திரம்?

    3. இறுதிவரை போராடிய போர்வீரன்!

    4. ஜீவாவைப் பயில்வோம்!

    5. அன்புள்ள அத்தான் அவர்களுக்கு...

    6. பாலன் என்றொரு தோழன்

    7. தாய்ப் பறவை

    8. அண்ணனும் தம்பியும்

    9. கவனிக்கப்படாத தமிழச்சி

    10. ஹோசிமினை சந்தித்த தமிழர்

    11. ஏழ்மையின் தியாகம்

    12. வர்க்கப் போரில் வீழ்ந்த மலர்கள்

    13. சிகாகோவில் சிம்ம கர்ஜனை

    14. ஜனசக்தியும் மக்கள் கவிஞரும்

    15. எளிமைக்குச் சொந்தக்காரர்!

    16. தூக்குக் கயிற்றை துரும்பென...

    17. அணையா விளக்கு அணைந்தது!

    18. அக்னிக் குஞ்சு

    19. அறிவுச்சுடர் அணைந்தது!

    20. கட்சிச் சொத்தே காணாமல் போனதோ?

    21. ஆற்றல்மிக்க சிந்தனையாளர்

    22. சாவிலிருந்து தப்பிய சாதனையாளர்!

    23. முன்னோடி சகாப்தம் முடிந்தது!

    24. பாரதி புகழ் பரப்பிய பணியில்...

    25. தியாகக் குடும்பத்தின் திருவிளக்கு

    26. ஜமீன்தார் மகனாகப் பிறந்து...

    27. பன்முகத் திறன்கொண்ட படைப்பாளி

    28. அந்த இடத்தில்... அந்த நிமிடத்தில்!

    29. மகத்தான கலைஞர்

    30. அப்படிச் சொல்ல அவரால்தான் முடியும்!

    31. கவிஞர்கள் நெஞ்சில் வாழும் கவிஞர்!

    1

    மாவீரன் பகத்சிங்கும் மாமேதை ஜீவாவும்

    இந்த தேசத்தின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் இளைஞர்களின் எழுச்சி நாயகனாக வாழ்ந்து முடிந்தவன்; ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ என்ற முழக்கம் எதிரொலிக்கின்ற இடங்களில் எல்லாம் நினைக்கப்படுபவன்; ஆயதத்தாலேயே இந்தியர்களை அடக்கி ஆள நினைத்த ஆங்கிலேயருக்கு அந்த ஆயுதத்தாலேயே பதில் சொன்னவன்; தூக்குக் கயிற்றில் தொங்கப்போகும் சில மணித்துளிகளுக்கு முன்வரை லெனினை வாசித்துக் கொண்டிருந்தவன்; மரணக் கயிற்றைத் தழுவும்போதுகூட புன்னகையோடு அதை எதிர்கொண்டவன் - இத்துணை சிறப்புகளுக்கும் சொந்தக்காரன் சர்தார் பகத்சிங்!

    நல்லிலக்கியங்களை நாட்டுக்குச் சொன்னவன்; நலிந்தோருக்காக நாளும் உழைத்தவன்; தன்னுடைய தியாகச் செயல்களினால் காந்திஜி போன்றோரையும் திகைக்க வைத்தவன்; இயக்கங்கள் கொள்கைகளைக் கைவிட்டபோது அந்த இயக்கங்களைக் கைகழுவியவன்; மண்வாசனையோடு மார்க்சியம் பேசியவன்; தேசபக்த கம்யூனிஸ்டாக வாழ்ந்து சிறந்தவன் - இத்தகைய சாதனைகளை நிகழ்த்திக் காட்டியவன் ஜீவா!

    1907 அக்டோபர் 7 அன்று பஞ்சாப் மாநிலத்தில் லாகூருக்கு அருகில் ‘பங்கர்’ என்ற கிராமத்தில் கிஷன்சிங் - வித்யாவதி தேவி தம்பதிக்கு பகத்சிங் பிறந்தான்.

    பகத்சிங் பிறந்த அதே 1907-ஆம் ஆண்டில் ஆகஸ்ட் 21 அன்று தென் தமிழகத்தில் குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் அருகில் ‘பூதப்பாண்டி’ என்ற கிராமத்தில், பட்டன்பிள்ளை - உமையம்மை தம்பதிக்கு ஜீவா பிறந்தார். பகத்சிங்கைவிட 46 நாட்கள் மட்டுமே ஜீவா மூத்தவர்.

    ஒத்துழையாமை இயக்கத்திலே...

    1919 ஏப்ரல் 13... பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள ஜாலியன் வாலாபாக் திடல்... ஆயிரக்கணக்கான மக்கள் தேசபக்தர்களின் முழக்கத்தைக் கேட்கத் திரண்டிருந்தனர்... பெரும் படையுடன் திடலுக்குள் புகுந்த ஆங்கிலத் தளபதி ஜெனரல் டயர் என்பவன் கண்மூடித்தனமாக தாக்குதலைக் கூடியிருந்த மக்கள் மீது தொடுத்தான்... பத்து நிமிடம் தொடர்ந்த அவனுடைய வன்செயலால், ஆயுதம் இன்றிக் கூடியிருந்த மக்களின் கூக்குரல் திடல் முழுவதும் எதிரொலித்தது... ‘சுட்டேன்! சுட்டேன்! ஆசைதீரச் சுட்டேன்’ என்று டயர் சொல்லிச் சிரித்தான்... ஆண்களும், பெண்களும், குழந்தைகளுமாக 379 பேரின் ஆவி, அந்தத் திடலிலேயே முடிந்தது. படுகாயமடைந்த 1337 பேர் தப்பவழியின்றி தவித்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு உதவி செய்ய ஓடிவந்தவர்களும் தடுக்கப்பட்டனர்... இந்தப் படுகொலைச் செயல் பாரதம் முழுவதும் பற்றிப்படர்ந்து மக்களின் கோபத் தீயை கொழுந்துவிட்டு எரியச் செய்தது... இந்த நிகழ்வுதான் பகத்சிங்கையும் வெள்ளையர்மீது சினம் கொள்ளச்செய்தது.

    முதல் உலகப் போர் முடிந்ததும், போரில் தோற்ற துருக்கியைத் துண்டாட பிரிட்டிஷ் அரசு முயன்றது. துருக்கி மன்னரை அங்கீகரிக்க மறுத்தது. ‘அலி சகோதரர்கள்’ என்று அழைக்கப்பட்ட மௌலானா முகமதலி, சவுகத் அலி ஆகியோரும், அபுல்கலாம் ஆசாத் போன்ற முஸ்லிம் தலைவர்களும் இந்தப் போராட்டத்தில் இணைந்தனர்.

    காங்கிரஸும் முஸ்லிம்லீக்கும் கைக்கோர்த்து களத்தில் இறங்கின. இந்தப் போராட்டம்தான் ‘கிலாபத் இயக்கம்’ என்று வரலாற்றில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது... முஸ்லீம்களின் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்தும், பிரிட்டிஷாரின் போக்கிற்கு முடிவுகாண விரும்பியும், 1919 ஏப்ரல் 6 அன்று ‘ஒத்துழையாமை இயக்கத்’தை காந்திஜி தொடங்கினார். இதுதான் பகத்சிங் கலந்து கொண்ட முதல் போராட்டம். அப்போது அவனுக்கு வயது 12.

    ஒத்துழையாமைப் போராட்டத்தை மக்களிடம் கொண்டு சென்ற காந்திஜி. இதே காலகட்டத்தில் தீண்டாமை ஒழிப்பு, அன்னியத் துணி எதிர்ப்பு, மது அருந்தாமை போன்ற முழக்கங்களையும் வெளியிட்டார். காந்திஜியின் இந்த முழக்கங்கள் இமயம் முதல் குமரிவரை எதிரொலித்தன. தீண்டாமை ஒழிப்பிலும், அன்னியத் துணி எதிர்ப்பிலும் தேசபக்தர்கள் எழுச்சியோடு பங்கேற்றனர். இந்தக் காலகட்டத்தில்தான் சிறுவன் ஜீவாவின் அரசியல் நுழைவும் அரங்கேறியது.

    காந்திஜி பற்றியும் கைராட்டை பற்றியும் சிறுவன் ஜீவா பாடல்களாக எழுதிக் குவித்தான்... எழுதுவதோடு நின்று விடாமல் இயங்கவும் தொடங்கினான்... தம்முடன் பயின்ற மண்ணடி மாணிக்கம் என்ற தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த மாணவனை உயர் சாதியினர் வாழும் தெருவிலும் கோவில் உள்ளேயும் ஜீவா அழைத்துச் சென்றான். இதை விரும்பாத உயர்சாதியினர் ஜீவாவின் தந்தையிடம் முறையிட்டனர். அவரும் ஜீவாவின் செயலை வன்மையாகக் கண்டித்தார். தமது செயலுக்குத் தடையாக இருக்கின்ற தந்தையோடு முரண்பட்டு, பிறந்த வீட்டை விட்டும், வளர்ந்த ஊரை விட்டும் வெளியேறினார் ஜீவா. தாழ்த்தப்பட்டோருக்காக வீட்டை விட்டு வெளியேறிய அரசியல்வாதி இந்தியாவில் ஜீவா மட்டுமே! அப்போது ஜீவாவுக்கு வயது 14.

    லஜபதி மரணத்திலே...

    மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தம்பற்றி ஆய்வு செய்வதற்காக பிரிட்டிஷ் அரசு சைமன் என்பவர் தலைமையில் ஒரு கமிஷனை நியமித்தது. இது ‘சைமன் கமிஷன்’ என்று அழைக்கப்பட்டது. இந்தக் குழுவில் ஹரிபாலாஸன் வெட்ஸ்டர், டொனால்டு டெர்லிங் பால்னர், எட்வர்ட் செஸில், ஜார்ஜ் கார்டன், ஸ்டீபன் வால்ஷ், ஜார்ஜ் ரிச்சர்டு ஹேன்பாக்ஸ், கிளமன்ட் ரிச்சர்ட் அட்லி ஆகிய ஏழு பேர் கொண்ட இந்தக் குழுவில் ஒரு இந்தியர்கூட இணைக்கப்படவில்லை. அதனால் ‘சைமன் கமிஷ’னை எதிர்ப்பது என்று தேசபக்தர்கள் முடிவு செய்தனர். சைமன் கமிஷன் சென்ற இடங்களில் எல்லாம் மக்கள் தங்கள் எதிர்ப்பை வலுவாக வெளிப்படுத்தினர்.

    1928 அக்டோபர் 30 அன்று லாகூருக்கு வந்த சைமன் கமிஷனை லாலா லஜபதிராய் தலைமையில் திரண்ட பேரணி ஆளுவோரை அச்சம் கொள்ளச் செய்தது. போலீஸ் சூப்பிரண்டண்ட் ஸ்காட், டெபுடி இன்ஸ்பெக்டர் சாண்டர்ஸ் ஆகியோர் தலைமையில் காவல் துறையினர் பேரணியினர் மீது மூர்க்கத்தனமான தாக்குதலைத் தொடுத்தனர். லஜபதிராயும் அந்தத் தாக்குதலுக்கு ஆளாகி, நவம்பர் 17 அன்று மரணத்தைத் தழுவினார். இந்த கொலைபாதகச் செயல் தேசபக்தர்களைக் கோபம் கொள்ளச்செய்தது. லஜபதிராயின் சாவுக்குக் காரணமான வெள்ளை அதிகாரிகளைத் தீர்த்துக்கட்ட பகத்சிங், ராஜகுரு, சுகதேவ், சந்திரசேகர் ஆசாத் போன்ற தீரர்கள் முடிவு செய்தனர்.

    லஜபதிராய் மறைந்தபோது திருப்பத்தூரிலிருந்த ஜீவா, பகலெல்லாம் உணவருந்தாமல் தேம்பித் தேம்பி அழுதார். அன்று மாலை நடந்த பொதுக்கூட்டத்தில், லஜபதிராயின் தேசபக்தி, வீரம், நாட்டு விடுதலைக்காக அவர்பட்ட பாடுகள், வெள்ளை அதிகாரிகள் அந்த வீரனைச் சாகடித்த விதம் ஆகியவைபற்றி எல்லாம் ஜீவா ஆவேசத்துடன் முழங்கினார். இந்த முழக்கம் பலரையும் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடச் செய்தது.

    1928 டிசம்பர் 17 அன்று மாலை 4 மணிக்கு மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்த சாண்டர்ஸை ராஜகுருவும் பகத்சிங்கும் சுட்டு வீழ்த்தினர். இந்தச் செய்தி ஜீவாவையும் தொட்டது. அப்போதுதான் ‘பகத்சிங்’ என்ற திருப்பெயரும் அவனுடைய தோழர்கள் பெயரும் ஜீவாவின் உள்ளத்தில் பதிவானது.

    Enjoying the preview?
    Page 1 of 1