Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kandathai Sollugirean
Kandathai Sollugirean
Kandathai Sollugirean
Ebook247 pages1 hour

Kandathai Sollugirean

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஞாநி 4.1.1954 அன்று செங்கற்பட்டில் எந்த பூர்விக சொத்துமில்லாத ஒரு கீழ் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர். கல்வி ஒன்றே தன் குழந்தைகளுக்குத் தரும் சொத்து என்ற பார்வையில் இயங்கிய தந்தை வேம்புசாமி 1935 முதல் 1975 வரை ஆங்கில இதழியலில் இயங்கியவர். மூன்று சகோதரர்களும் இரண்டு சகோதரிகளும் இதழியலுக்கு வராத நிலையில் ஞாநி அதில் ஈடுபட்ட கடந்த 40 வருடங்களாக இதழியல், சமூக அரசியல் விமர்சனம், நாடகம், தொலைக்காட்சி, சிறுவர் வாழ்வியல் ஆகிய துறைகளில் தீவிரமாக இயங்கி வருபவர். எழுபதுகளில் மாணவராக சோஷலிச அரசியல் ஆதரவுபிரசாரத்தில் ஈடுபட்டார்.பின்னர் நெருக்கடி நிலையின்போது அதை கடுமையாக எதிர்த்த இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் பணியாற்றினார். எண்பதுகளில் மாநிலக் கட்சிகளின் கூட்டமைப்புடன் தேசிய முன்னணி உருவாக்கப்பட்டபோது அதை ஆதரித்து வி.பி.சிங்கின் மொழிபெயர்ப்பாளராக 70க்கும் மேற்பட்ட பொதுக் கூட்டங்களில் பணியாற்றினார். மேதா பட்கர், ஜார்ஜ் பெர்ணான்டெஸ், நிகில் சக்ரவர்த்தி கிருஷ்ணய்யர், அஸ்கர் அலி எஞ்சினீயர், நாகபூஷண் பட்நாயக், தீஸ்தா சேதல்வாட் ஆகியோரின் மேடைப் பேச்சுகளை நேரடியாக மொழிபெயர்த்தவர். அண்மைத் தேர்தலில் மாற்று அரசியலை முன்வைத்தமைக்காக மக்கள் நலக்கூட்டணியை தீவிர்மாக ஆதரித்தார்.எழுபதுகள் முதல் இன்று வரை மனித உரிமைகள், மகளிர் சமத்துவம், சாதி ஒழிப்புக்காகப் பணியாற்றும் பல்வேறு இயக்கங்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். மதவாத எதிர்ப்பில் தொண்ணூறுகளிலிருந்தே தீவிரமாக இயங்கி வருபவர்.

நாடக மேதையான பாதல் சர்க்காரால் பயிற்றுவிக்கப்பட்ட ஞாநி 1978 முதல் இன்றுவரை பரீக்‌ஷா என்ற நாடகக்குழுவை நடத்தி வருகிறார். சென்னையில் வீதி நாடக இயக்கத்தின் முன்னோடி. 40க்கும் மேற்பட்ட நாடகங்களை இயக்கியுள்ளார்.

பெரியார் வாழ்க்கை பற்றிய இரண்டரை மணி நேரப் படத்தை 'அய்யா என்ற தலைப்பில் 2003ல் உருவாக்கினார்.40க்கும் மேற்பட்ட ஆவணப்படங்களையும், ஐந்து கதைப் படத் தொடர்களையும் இயக்கியுள்ளார்.

இதழியலில் செய்தி விமர்சன இதழ்கள் உருவாகாத காலகட்டத்திலேயே 1982ல் தீம்தரிகிட என்ற இதழை நடத்தி முன்னேர் செலுத்தினார். ஜூனியர் போஸ்ட் இதழை ஒரு லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்கும் தரமான இதழாக 1993ல் மாற்றிக் காட்டினார். சுமார் 30 வருடங்கள் முன்பே தொலைக் காட்சிக்கான முதல் இதழ் 'டி.வி.உலகம்' , சென்னை நகரத்துக்கான முதல் இதழ் 'ஏழு நாட்கள்' ஆகியவை இவர் முயற்சிகள். தேங்கிக் கிடந்த சிறுவர் இதழியலை மாற்றும் விதத்தில் 1999ல் சுட்டி விகடன் இதழை வடிவமைத்து உருவாக்கி வெற்றி பெறச் செய்தார்.2016ல் தமிழில் மாணவரகளுக்கான முதல் இதழாக தினமலர் வெளியிடும் பட்டம் இதழை வடிவமைத்து உருவாக்கி அதன் ஆலோசகராக இருந்து வருகிறார். சிறுவர்கள், இளைஞர்களுக்கு உலக சுகாதார நிறுவனம் வரையறுத்திருக்கும் பத்து வாழ்க்கைத்திறன்களைப் பயிற்றுவிக்கும் பணியில் கடந்த பத்தாண்டுகளாக ஈடுபட்டுள்ளார். சிங்கப்பூர் கம்போடியா, பாலி, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஸ்விட்சர்லாந்து,இத்தாலி, வியன்னா, ஜெர்மனி, பெல்ஜியம் ஆகிய நாடுகளில் பயணம் செய்துள்ளார். நாத்திகர். பகுத்தறிவாளர். சாதி மறுப்பாளர். ஞாநியின் குடும்பத்தினரும் அதே நிலையில் உள்ளவர்கள்.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580121203924
Kandathai Sollugirean

Read more from Gnani

Related to Kandathai Sollugirean

Related ebooks

Reviews for Kandathai Sollugirean

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kandathai Sollugirean - Gnani

    http://www.pustaka.co.in

    கண்டதைச் சொல்லுகிறேன்

    Kandathai Sollugirean

    Author:

    ஞாநி

    Gnani

    For more books

    http://www.pustaka.co.in/home/author/gnani

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. உடலை விற்பது அவள் மட்டுமா?

    2. அபத்தக் களஞ்சியம்

    3. மெய்யன்பர்கள் கட்டும் ஆலயம்

    4. படித்தால் மட்டும் போதுமா?

    5. கோடைக் காலக் கொடுமை

    6. சின்னத்திரை உலகம் மாறுமா?

    7. படிச்சவனின் சூதும் வாதும்…

    8. திமுக தேறுமா?

    9. கடைசி நிமிடப் ‘புரட்சி’

    10. அரசின் ஆன்மீகப் புரட்சி

    11. லெனினும் ஜெயலலிதாவும்

    12. தேவை ஆக் ஷன்

    13. வீரமணி உணர்த்தும் செய்தி

    14. பேட் பாய்ஸ்

    15. ஆடு, கோழி, சுகந்தி

    16. நையாண்டிப் பஞ்சம்

    17. மரணங்கள் பயங்கள்

    18. மெத்தப்படித்தவர்களின் ஈனத்தனம்

    19. தண்ணி காட்டும் பிரச்சினை

    20. நமக்குள்ளே ஒரு போர்

    21. போலியோ போ போ...

    22. பதிப்பகங்களா, மிதிப்பகங்களா?

    23. பொதுமக்களும் அப்படித்தான்

    24. இது கவன ஈர்ப்பு நேரம்

    25. காங்கிரஸ் கலாச்சாரம் வாழ்க!

    26. பாபாவுக்கு ஒரு பகிரங்க மடல்

    27. ஜனநாயகக் குளறுபடிகள்

    28. நேற்று இல்லாத மாற்றம்

    29. யோசிக்க வைக்கும் கணக்குகள்

    30. செழிக்கிறது சாமியார் தொழில்

    31. ஞாபகம் இருக்கிறதா?

    32. ஒப்பனைக்குப் பின்னால்…

    33. என்ன பெயரிட்டால் என்ன?

    34. படித்தால் மட்டும் போதுமா?

    35. அறையும் அரசு இயந்திரம்

    36. போதையின் மரணப்பாதை

    37. சினிமாவுக்கு வேண்டியது என்ன?

    38. பாராட்டுக்கள், ஆனால்…

    39. மேலும் ரகசியங்கள் வெளிவரட்டும்

    40. முதியவரும் துறவியும்

    41. காவிக்குப் பின்னால்…

    42. விசிலடிச்சான்களை ஊக்குவிப்போம்

    43. சு.நா.மீ!

    44. பங்கு கேட்டால் தப்பா?

    45. திரைமறைவு உண்மைகள்

    46. பயன் தந்த திருமணம்

    47. விவாகரத்து விரும்பத்தக்கதா?

    48. வரலாற்றில் இடம்பிடித்த தேர்தல்

    வணக்கம்

    சுமார் முப்பதாண்டுகளாக பத்திரிகைத் துறையில் செயல்பட்டுவரும் என்னைத் தன் பத்திரிகையில் தனிப் பத்தி எழுத அழைத்த பத்திரிகை ஆசிரியர்கள் இரண்டே பேர்தான் (நான் பொறுப்பாசிரியராக இருந்த பத்திரிகைகளில் தனிப்பத்தி எழுத எனக்கு நானே வாய்ப்பு கொடுத்துக் கொண்டது தனி.

    1979-80ல் விசிட்டர் அனந்த் அளித்த வாய்ப்பில் அவரது விசிட்டர், விசிட்டர் லென்ஸ் இதழ்களில் ‘திண்ணை’, ‘திக்கு தெரியாத நாட்டில்’ என்ற பொதுத் தலைப்பில் காலம்களை எழுதினேன். அதன் பிறகு 23 ஆண்டுகள் கழித்து தமிழ் இந்தியா டுடே இதழின் இணையாசிரியர் ஆனந்த் நடராஜன் அழைப்பில் கண்டதைச் சொல்லுகிறேன்’ பத்தியை இரண்டு ஆண்டுகளாக எழுதி வருகிறேன்.

    பத்திரிகைகளில் தொடர் கதைகள், தொடர் கவிதைகள், தொடர்கட்டுரைகள் எழுதலாம். ஆனால் தனிப் பத்தி எழுதுவது என்பது பொதுவாக உயர்ந்த கெளரவமாகக் கருதப்படுகிறது. தனிப் பத்தி என்பது கருத்து சொல்வதற்கான அதிக பட்ச சுதந்திரத்தை எழுதுபவருக்கு பத்திரிகை அளிப்பதாகும். ஆங்கில பத்திரிகைகளில் இவ்வாறு தனிப் பத்தி எழுத அழைக்கப்படும் புகழ் பெற்ற பத்திரிகையாளர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். தமிழில் மிகக் குறைவு. ஆங்கிலத்தில் இப்படி தனிப் பத்தி எழுதுபவர்களில் பலர் ஒரே கட்டுரையை வெவ்வேறு மாநிலங்களில் வெளியாகும் வெவ்வேறு பத்திரிகைகளுக்கு அளித்து அதிக பணம் ஈட்டும் வாய்ப்பு இருக்கிறது. குஷ்வந்த் சிங், குல்தீப் நய்யார், கே.ஆர், சுந்தரராஜன், மறைந்த திரேள் பகத், நிக்கில் சக்ரவர்த்தி போன்றோர் இப்படி சிண்டிகேட்டட் காலம் எழுதுவதில் புகழ் பெற்றவர்கள். தமிழில் இத்தகைய வாய்ப்புகளுக்கு வாய்ப்பே இல்லை.

    கண்டதைச் சொல்லுகிறேன் என்ற தலைப்பு ‘சில நேரங்களில் சில மனிதர்கள், திரைப்படத்தில் இடம் பெற்ற எழுத்தாளர் ஜெயகாந்தனின் பிரபலமான பாடலின் முதல் வரி. சென்னை நிருபர்கள் சங்கத்தின் இதழான நியூஸ்மன் பத்திரிகையில் 1978-79ல் முதல்முறை இந்தத் தலைப்பில் தனிப் பத்தியை வம்பன் என்ற புனைப்பெயரில் எழுதினேன். அந்தப் பத்தி பத்திரிகைத் துறைக்குள் நடக்கும் சீர்கேடுகளைப் பற்றி விவாதத்தை கிளப்புவதற்காக எழுதப்பட்டதாகும்.

    இந்தியா டுடே இதழில் பொது அக்கறைக்குரியதாக நான் கருதும் எந்த விஷயத்தைப் பற்றி வேண்டுமானாலும் எழுதலாம் என்று ஆனந்த் நடராஜனும் உதவி ஆசிரியர் சதாசிவமும் எனக்குச் சொன்னார்கள். அந்த வசதியைப் பயன்படுத்தி விபசாரம், ஆன்மீகம், அரசியல், மதம், கல்வி, மீடியா, குழந்தைகள், குடும்பங்கள் என்று வகை வகையான விஷயங்கள் பற்றி என்னுடைய பார்வையை வாசகர்களுடன் பகிர்ந்து வந்திருக்கிறேன். கட்டுரைகளுக்கேற்ற கூர்மையான ஓவியங்களை வரைந்தவர் நர்சிம். அவருக்கும் இதர ஓவியர்கள் அமர்நாத், சத்தியேந்திரன், பிளாட்சோ அகியோருக்கும் நன்றி.

    இந்தப் பத்தியை பல வாசகர்கள் கூர்மையாக கவனித்து வருகிறார்கள் என்பதை உணர்த்தும் பல தொலைபேசிகள், சந்திப்புகள் நிகழ்ந்தன. குறிப்பிட வேண்டியது எழும்பூரிலிருந்து திருச்சி செல்லும் ஒரு ரயில் பெட்டியில் தாம்பரத்தில் ஒரு வாசகர் தன்னை அறிமுகப்படுத்திப் பேசிக்கொண்டிருந்தபோது தற்செயலாக அதே பெட்டியில் ஏறிய சதாசிவமும் அந்த உரையாடலில் கலந்துகொண்டு ஆச்சரியமடைந்ததாகும். பண வசதியும் சமூக அந்தஸ்தும் உள்ளவர்கள் முதல் மிகச் சாதாரண வாழ்க்கையில் இருக்கும் எளிய மனிதர்கள் வரை இந்தப் பத்திக்கு(ம் இந்தியா டுடேவுக்கும்) வாசகர்களாக இருப்பது இங்கு குறிக்கத்தக்கது.

    ஜனவரி 2003ல் என் 50 வயது நிறைவடைந்தபோது, அடுத்த ஓராண்டுக்குள் 50 நூல்களாவது வெளியிடவேண்டும் என்ற என் விருப்பத்தை தினமணி செய்தியாக வெளியிட்டது. ஆனால் ஓராண்டில் 14 தீம்தரிகிட இதழ்களையும், இரண்டு சிறு பிரசுரங்களையும் இந்த நூல் உட்பட இரு பெரிய நூல்களையும் மட்டுமே வெளியிட முடிந்தது. 50 நூல்களுக்கு சமமான ‘அய்யா’ தொலைக்காட்சித் தொடரை தயாரிக்க முடிந்தது. நூல்கள் வெளியிட முடியாமல் போனதற்குக் காரணங்கள் பல. வெளியிடுவதற்கு என் 25 வருட கட்டுரைத் தொகுப்புகள், சிறுகதைத் தொகுப்பு, நாடகங்கள் என்று 50க்கும் மேற்பட்டவை இருந்தாலும் அவற்றை நானே வெளியிடும் பண வசதி இல்லை. என் நூல்களை பணம் செலவழித்து வெளியிடத் துணியும் பதிப்பாளர்கள் இல்லை.

    இந்த நூலை வெளியிடும் நண்பர் பாலமுருகன் இதன் மூலம் பதிப்பாளராகத் தொழிலைத் தொடங்குகிறார். இது எனக்கு பெருமகிழ்ச்சியைத் தருகிறது. நண்பர் எழுத்தாளர் பாஸ்கர் சக்தி மூலம் எனக்கு அறிமுகமான பாலா, 2002ல் தீம்தரிகிட இதழை நான் தொடங்கியபோது ஒவ்வொரு மாதமும் தயாரிப்பில் எனக்கு உதவி செய்வதற்காக தேனியிலிருந்து சென்னை வந்து சென்று. கொண்டிருந்தவர் பிறகு சென்னையிலேயே தங்கி பத்திரிகை, நாடகம், வீடியோ என்று பல துறைகளிலும் பணியாற்றுபவராகி விட்டார்.

    பத்திரிகை, பதிப்புத் துறைகளில் தீவிர அக்கறையுடைய அடுத்த தலைமுறை இளைஞர்களான ஆனந்த் நடராஜன், சதாசிவம், பாலமுருகன் ஆகியோருடன் எனக்குள்ள உறவின்அடையாளமாக இந்த நூல் திகழ்வது எனக்கு மகிழ்ச்சி தருகிறது.

    சுநாமீயில் தப்பித்த

    வீட்டிலிருந்து

    திருவான்மியூர் டிசம்பர் 2004

    ஞாநி

    1. உடலை விற்பது அவள் மட்டுமா?

    விபச்சாரத்தை ஒழிக்க சட்டமும் போலீசும் மீடியாவும்

    உருப்படியான வழிகளை யோசிக்கலாம்

    அண்மையில் சென்னை நகர நீதிமன்றத்தில் ஆஜரான ஒரு டி.வி நடிகை முகத்தையும் உடலையும் மறைக்கும் பர்தா உடை அணிந்து வந்தார்.

    நடிகைகள் பொது இடங்களுக்குச் செல்லும்பொது ரசிகர்கள் தொல்லையிலிருந்து தப்பிக்க இவ்வாறு பர்தா அணிவது நீண்ட காலமாகவே வழக்கத்தில் இருப்பதுதான்.ஆனால் நீதிமன்றத்துக்கு வந்த நடிகை அங்கே குற்றம் சாட்டப்பட்டவராக வந்திருந்தார்.

    அவர் பர்தா அணிந்து வந்ததை சில முஸ்லிம் அமைப்புகள் கண்டித்து அறிக்கை வெளியிட்டன. இதையடுத்து அடுத்த முறை அவர் நீதி மன்றத்தில் ஆஜரானபோது சுடிதார் அணிந்து வந்தார் என்ற ருசிகரத் தகவலையும் முந்தைய இரண்டு செய்திகளை வெளியிட்ட நம்பர் 1 (ஏ-1 அல்ல)நாளிதழ் நமக்கு அக்கறையுடன் தெரிவித்தது.

    முஸ்லிம்களின் புனிதமான பர்தாவை விபச்சார வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நடிகை அணிந்து வந்து இழிவுபடுத்திவிட்டதாகக் கண்டன அறிக்கை வெளியிட்ட புனித பாதுகாவலர்கள் குமுறியிருந்தார்கள். உலகில் பல இஸ்லாமிய நாடுகளில் பெண்கள் பர்தா அணிவது கிடையாது என்பதும் அங்கெல்லாம் பர்தாவின் புனிதம் பற்றி அறைகூவல் விடுத்து காப்பாற்ற ஆளில்லாத அவல நிலை குறித்தும் கூட அறிக்கை வீரர்கள் தற்போது சிந்தித்து திட்டங்கள் வகுத்து கொண்டிருக்கக்கூடும்.

    நமது அக்கறை பர்தாவின் புனிதம் இழிவுபடுத்தப்பட்டு விட்டதா இல்லையா என்பது பற்றியே அல்ல. சினிமா தியேட்டரில் படம் பார்க்கச் செல்லும் போது ஒரு நடிகை பர்தா அணிந்தால், அது ரசிகர்களிடமிருந்து தற்காத்துக் கொள்ள என்று புரிகிறது. நீதி மன்றத்திற்குச் செல்லும் போது அணிவது எதற்கு? யாரிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள?

    இந்த மாதிரி நம்பர் 1 நீயா – நானா நாளிதழ்களிடமிருந்து, பத்திரிக்கைகளிடமிருந்து, டி.வி சேனல்களிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளத்தான். தினசரி இத்தகையப் பத்திரிக்கை பக்கங்களைப் புரட்டினால் அழகிகளின் புகைப்படங்களைத் தரிசிக்கலாம். தமிழ் நாட்டில் கணவனுக்கு விஸ்வாசமாக இருந்து கொண்டு குடும்பம் நடத்தி வரும் எந்தப் பெண்ணும் அழகியல்ல என்ற உண்மையும் நமக்கு தெரியவரும். விபசாரக் குற்றம் சாட்டப்பட்ட பெண்களுக்கு மட்டுமே இந்த அழகிப் பட்டம் அளிக்கப்படுகிறது.

    இந்த அழகிகள் யாரும் பத்திரிக்கைப் படங்களுக்காக போஸ் கொடுப்பதில்லை. அந்த படங்கள் எல்லாம் போலீஸ் துணையுடன் நீதி மன்ற வாசலில் எடுக்கப்பட்டவை. இதை எழுதும் இன்று காலை தினசரியில் பார்த்த ஒரு படத்தில் இருக்கும் ஐந்து பெண்களும் அழுதபடியும், முகத்தை மறைக்க முயற்சித்தபடியும் காணப்படுகிறார்கள். அவர்களுடைய அனுமதி இன்றி போலீசும், பத்திரிக்கையும் இவ்வாறு படம்எடுத்து வெளியிடும் அதிகாரத்தை எங்கிருந்துப் பெற்றார்கள்? இவ்வாறு படங்கள் வெளியாவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று மாநில மகளிர் ஆணையம், நகர காவல்துறை ஆணையருக்குக் கடிதம் எழுதி அவ்வாறே செய்யப்படும் என்று அவரும் பதில் கடிதம் எழுதியபிறகும் எதுவும் நிற்கவில்லை.

    இந்தப் பெண்கள் விபசாரக் குற்றம் செய்தார்களா இல்லையா என்பது ஒரு புறம் இருக்கட்டும். அவ்வாறு குற்றம் சாட்டப்பட்டு அது நிரூபிக்கப்படும் முன்பாகவே அவர்களுடைய படங்களும் பெயர்களும் இப்படி விளம்பரப்படுத்தப்படுகின்றன. குற்றம் நிரூபிக்கப்படும் வரை ஒருவர் நிரபராதியே என்பதுதான் சட்ட சித்தாந்தத்தின் மாட்சிமை என்று அறிஞர்கள் வேண்டுமானால் முழங்கலாம். அது பற்றி அச்சு விபச்சாரிகளுக்கு, மன்னிக்கவும் வியாபாரிகளுக்குக் கவலையில்லை.

    நாளை ஒரு வேளை இந்தப் பெண்கள் குற்றம் செய்யாதவர்கள் என்று விடுதலையாகிவிட்டால், இந்தப் பத்திரிக்கைகளின் கதி என்ன? இவை அமெரிக்காவில் இல்லாமல், இந்தியாவில் இருப்பதால் தப்பித்துக் கொள்கின்றன. அங்கேயாக இருந்தால், அந்தப் பெண்களுக்கு மான நஷ்ட ஈடு கொடுப்பதிலேயே பத்திரிக்கை அதிபரின் குடும்பம் திவாலாகி பிச்சை எடுக்கும் நிலைக்கு வந்துவிடும்.

    விபச்சாரக் குற்றம் நிரூபிக்கப்படுகிறதா என்றால் இல்லை. விபச்சாரத்துக்கு அழைத்ததாக மட்டுமே குற்றச் சாட்டு பதிவு செய்யப்படும். சில இடங்களில் இது மாற்றப்பட்டு பொது இடத்தில் ஆபாசமாக, சேலை விலக்கியோ, கெட்டவார்த்தைகள் பேசியோ நடந்து கொண்டதாகக் குற்றம் பதியப்படும். ஏன் இப்படி என்றால், அப்போதுதான் விபச்சாரத்துக்கு அழைக்கப்பட்ட ஆண் வழக்கில் சிக்காமல் தப்பிக்கச் செய்ய முடியும். (விபசாரத்துக்கு அழைப்பது விபசாரியான பெண் என்று சொல்லுவதே பெரும்பாலான நேரங்களில் ஒரு பொய். நீ வருகிறாயா, உன் ரேட் எவ்வளவு என்று நேரிலோ, நவீனமாக செல் ஃபோனிலோ அழைப்பது ஆண் தான்.)

    விபசார வழக்குகளில் எல்லாம் உடலுறவு கொண்டதாகக் குற்றம் சாட்டுவதும் இல்லை. குற்றமெல்லாம் பெண் மீதுதான். அவள் அழைத்தாள் என்பதுதான்.

    உண்மையில் விபசாரக்குற்றம் என்பது என்ன? ஒரு பெண் தன் உடலை பணத்துக்காகத் தற்காலிகமாக விற்பதுதான். ஃபேக்ஷன் ஷோவில் அதே தானே நடக்கிறது. அண்மையில் சென்னையில் தோல் ஆடைகளை அறிமுகப்படுத்திய ஃபேஷன் ஷோவில் பெண்கள் தோல் ஆடையைக் காட்டியதை விட அதிகமாக்க் காட்டியது தங்கள் தோலைத்தான். தணிக்கை செய்யப்பட்டப்பின் வரும் திரைப்படங்களில் பெண்ணின் உடல்தான் ஏராளமாக, தாராளமாகக் காட்டப்படுகிறது. அதை டிக்கெட் கொடுத்து சென்று பார்க்கும்போது அதுவும் உடலை விற்ற தொழிலாகவே ஆகவில்லையா? ஆனால் ஃபேக்ஷன் க்ஷோ பெண்களோ, சினிமாவில் ஆடைக்குறைக்கப்பட்டப் பெண்களோ விபச்சாரிகளாக சட்டத்தால் கருதப்படுவதில்லை. உடலுறவுக்காகப் பணம் பெற்றுக் கொண்டு விற்ற பெண் மட்டுமே விபச்சாரியாகக் கருதப்படுகிறாள். ஆனால் வழக்கு தொடுக்கும் போதோ, அதை சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல், அழைத்ததாக மட்டுமே சட்டத்தின் முன் குற்றம் சாட்டப்படுகிறது.

    விபச்சாரத்தை ஒழிப்பதற்கான வழி விபச்சாரிகளைத் தண்டிப்பது அல்ல. ஆணின் தேவையே விபச்சாரத்தின் ஊற்றுக் கண். குடும்பத்தை உடைப்பது விபச்சாரம் அல்ல. குடும்ப அமைப்பின் பற்றாக்குறையே விபச்சாரத்தை ஊக்குவிக்கிறது.

    இந்த அடிப்படைகளை கவனிக்க மறுத்துவிட்டு, போலீஸ் மூலம் விபச்சாரத்தை ஒழித்துவிடலாமென்று நினைக்கும் இந்திய அரசாங்க அணுகுமுறை, ஏற்கனவே ஏழ்மையினால் பிழைப்புக்காக விபச்சாரத்துக்குள் தள்ளப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கான பெண்களை மேலும் கொடுமைப்படுத்துவதாகவே

    Enjoying the preview?
    Page 1 of 1