Sandaikarigal
By Gnani
()
About this ebook
ஞாநி 4.1.1954 அன்று செங்கற்பட்டில் எந்த பூர்விக சொத்துமில்லாத ஒரு கீழ் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர். கல்வி ஒன்றே தன் குழந்தைகளுக்குத் தரும் சொத்து என்ற பார்வையில் இயங்கிய தந்தை வேம்புசாமி 1935 முதல் 1975 வரை ஆங்கில இதழியலில் இயங்கியவர். மூன்று சகோதரர்களும் இரண்டு சகோதரிகளும் இதழியலுக்கு வராத நிலையில் ஞாநி அதில் ஈடுபட்ட கடந்த 40 வருடங்களாக இதழியல், சமூக அரசியல் விமர்சனம், நாடகம், தொலைக்காட்சி, சிறுவர் வாழ்வியல் ஆகிய துறைகளில் தீவிரமாக இயங்கி வருபவர். எழுபதுகளில் மாணவராக சோஷலிச அரசியல் ஆதரவுபிரசாரத்தில் ஈடுபட்டார்.பின்னர் நெருக்கடி நிலையின்போது அதை கடுமையாக எதிர்த்த இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் பணியாற்றினார். எண்பதுகளில் மாநிலக் கட்சிகளின் கூட்டமைப்புடன் தேசிய முன்னணி உருவாக்கப்பட்டபோது அதை ஆதரித்து வி.பி.சிங்கின் மொழிபெயர்ப்பாளராக 70க்கும் மேற்பட்ட பொதுக் கூட்டங்களில் பணியாற்றினார். மேதா பட்கர், ஜார்ஜ் பெர்ணான்டெஸ், நிகில் சக்ரவர்த்தி கிருஷ்ணய்யர், அஸ்கர் அலி எஞ்சினீயர், நாகபூஷண் பட்நாயக், தீஸ்தா சேதல்வாட் ஆகியோரின் மேடைப் பேச்சுகளை நேரடியாக மொழிபெயர்த்தவர். அண்மைத் தேர்தலில் மாற்று அரசியலை முன்வைத்தமைக்காக மக்கள் நலக்கூட்டணியை தீவிர்மாக ஆதரித்தார்.எழுபதுகள் முதல் இன்று வரை மனித உரிமைகள், மகளிர் சமத்துவம், சாதி ஒழிப்புக்காகப் பணியாற்றும் பல்வேறு இயக்கங்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். மதவாத எதிர்ப்பில் தொண்ணூறுகளிலிருந்தே தீவிரமாக இயங்கி வருபவர்.
நாடக மேதையான பாதல் சர்க்காரால் பயிற்றுவிக்கப்பட்ட ஞாநி 1978 முதல் இன்றுவரை பரீக்ஷா என்ற நாடகக்குழுவை நடத்தி வருகிறார். சென்னையில் வீதி நாடக இயக்கத்தின் முன்னோடி. 40க்கும் மேற்பட்ட நாடகங்களை இயக்கியுள்ளார்.
பெரியார் வாழ்க்கை பற்றிய இரண்டரை மணி நேரப் படத்தை 'அய்யா என்ற தலைப்பில் 2003ல் உருவாக்கினார்.40க்கும் மேற்பட்ட ஆவணப்படங்களையும், ஐந்து கதைப் படத் தொடர்களையும் இயக்கியுள்ளார்.
இதழியலில் செய்தி விமர்சன இதழ்கள் உருவாகாத காலகட்டத்திலேயே 1982ல் தீம்தரிகிட என்ற இதழை நடத்தி முன்னேர் செலுத்தினார். ஜூனியர் போஸ்ட் இதழை ஒரு லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்கும் தரமான இதழாக 1993ல் மாற்றிக் காட்டினார். சுமார் 30 வருடங்கள் முன்பே தொலைக் காட்சிக்கான முதல் இதழ் 'டி.வி.உலகம்' , சென்னை நகரத்துக்கான முதல் இதழ் 'ஏழு நாட்கள்' ஆகியவை இவர் முயற்சிகள். தேங்கிக் கிடந்த சிறுவர் இதழியலை மாற்றும் விதத்தில் 1999ல் சுட்டி விகடன் இதழை வடிவமைத்து உருவாக்கி வெற்றி பெறச் செய்தார்.2016ல் தமிழில் மாணவரகளுக்கான முதல் இதழாக தினமலர் வெளியிடும் பட்டம் இதழை வடிவமைத்து உருவாக்கி அதன் ஆலோசகராக இருந்து வருகிறார். சிறுவர்கள், இளைஞர்களுக்கு உலக சுகாதார நிறுவனம் வரையறுத்திருக்கும் பத்து வாழ்க்கைத்திறன்களைப் பயிற்றுவிக்கும் பணியில் கடந்த பத்தாண்டுகளாக ஈடுபட்டுள்ளார். சிங்கப்பூர் கம்போடியா, பாலி, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஸ்விட்சர்லாந்து,இத்தாலி, வியன்னா, ஜெர்மனி, பெல்ஜியம் ஆகிய நாடுகளில் பயணம் செய்துள்ளார். நாத்திகர். பகுத்தறிவாளர். சாதி மறுப்பாளர். ஞாநியின் குடும்பத்தினரும் அதே நிலையில் உள்ளவர்கள்.
Read more from Gnani
Ayogiyargalum Muttalgalum Rating: 0 out of 5 stars0 ratingsThavippu Rating: 0 out of 5 stars0 ratingsO Pakkangal Rating: 0 out of 5 stars0 ratingsKandathai Sollugirean Rating: 0 out of 5 stars0 ratingsParisukku Ponen Rating: 0 out of 5 stars0 ratingsArinthum Ariyamalum Rating: 5 out of 5 stars5/5Narendra Modi Atharavu Petra Oru Kaavi Bayangaravaathiyin Oppuhal Vaakkumoolam Rating: 0 out of 5 stars0 ratingsPazhaiya Paper Rating: 0 out of 5 stars0 ratingsO! Pakkangal - Part 4 Rating: 0 out of 5 stars0 ratingsO! Pakkangal - Part 6 Rating: 0 out of 5 stars0 ratingsO! Pakkangal - Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsO Pakkangal Part - 9 Rating: 0 out of 5 stars0 ratingsEn Vaazhkai En Kaiyil Rating: 0 out of 5 stars0 ratingsO! Pakkangal - Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsMarubadiyum Rating: 0 out of 5 stars0 ratingsSankarachari Yar? Rating: 0 out of 5 stars0 ratingsNeruppu Malargal Rating: 0 out of 5 stars0 ratingsOozhale Un Ver Enge? Rating: 0 out of 5 stars0 ratingsChennai Nagara Anubavangal Rating: 0 out of 5 stars0 ratingsO! Pakkangal - Part 7 Rating: 0 out of 5 stars0 ratingsBalloon(Nadagam) Rating: 0 out of 5 stars0 ratingsO! Pakkangal - Part 3 Rating: 0 out of 5 stars0 ratingsApple Desam Rating: 0 out of 5 stars0 ratings
Related to Sandaikarigal
Related ebooks
Ezhuthi Vaithai Ennai! Rating: 0 out of 5 stars0 ratingsTheeppidiththa Thendral... Rating: 0 out of 5 stars0 ratingsDeivam Thantha Poove! Rating: 0 out of 5 stars0 ratingsKonja Neram Konja Neram Rating: 0 out of 5 stars0 ratingsVaal Paiyan Rating: 0 out of 5 stars0 ratingsOru Iniya Manathu Naadagam Rating: 0 out of 5 stars0 ratingsNagaichuvai Nadagangal Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyeri Rating: 0 out of 5 stars0 ratingsYuttha Boomi Rating: 0 out of 5 stars0 ratingsNilavu Uthikkaatha Iravu Rating: 5 out of 5 stars5/5Azhukku Padatha Azhagu Rating: 4 out of 5 stars4/5Kavarchi Illamal Kalyanama? Rating: 0 out of 5 stars0 ratingsMakeup Punnagai Rating: 5 out of 5 stars5/5Erimalai Pookkal Rating: 4 out of 5 stars4/5Unnai Pol Oruthi Rating: 0 out of 5 stars0 ratingsOru Vinaadi Poru Rating: 0 out of 5 stars0 ratingsKondrai Vendhan Rating: 0 out of 5 stars0 ratingsCelluloid Abhayam Rating: 0 out of 5 stars0 ratingsNatchathira Sugam Rating: 0 out of 5 stars0 ratingsNadhiyin Pizhaiyandru Rating: 0 out of 5 stars0 ratingsVannam Konda Vennilave Rating: 5 out of 5 stars5/5Veenaiyadi Nee Enakku... Rating: 5 out of 5 stars5/5Nirangal Iranthana Rating: 2 out of 5 stars2/5Mudhalai Gugai Rating: 0 out of 5 stars0 ratingsNilavu Uthikatha Iravu Rating: 0 out of 5 stars0 ratingsKaathal Oruvanai Kaipidithey Rating: 0 out of 5 stars0 ratingsYudha Bhoomi Rating: 0 out of 5 stars0 ratingsகனாக் கண்டேன் தோழி! Rating: 0 out of 5 stars0 ratingsEllarum Vaanga Rating: 0 out of 5 stars0 ratingsVaanamadi Nee Enakku Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Sandaikarigal
0 ratings0 reviews
Book preview
Sandaikarigal - Gnani
http://www.pustaka.co.in
சண்டைக்காரிகள்
Sandaikarigal
Author:
ஞாநி
Gnani
For more books
http://www.pustaka.co.in/home/author/gnani
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
முன்னுரை
தமிழக, இந்திய வரலாற்றில் பெண்களின் பங்கு, பெண்ணுரிமைக்கான விழிப்புணர்வு மலரத் தொடங்கிய விதங்கள் பற்றி மூன்று வெவ்வேறு ஊடகங்களில் படைப்புகளை உருவாக்கும் வாய்ப்பு தற்செயலாக எனக்கு அமைந்தது.
முதலில் வந்தது தூர்தர்ஷன் பொதிகைக்காக 1997-ல் இந்திய விடுதலைப் பொன் விழாவையட்டி ஒரு தொலைக்காட்சித் தொடர் உருவாக்கும் பணி. வேர்கள்
என்ற தலைப்பில் உருவாக்கிய இந்த நான்கு வாரத் தொடர் பெரும் வரவேற்பைப் பரவலாகப் பெற்றது.
அடுத்த வாய்ப்பு 1999-ல் சென்னை மகளிர் கிறித்துவக் கல்லூரியில் மாணவியர் பங்கேற்கும் நாடகம் ஒன்றை உருவாக்கும் பணி மூன்று ஆசிரியைகளும் 30 மாணவியருமாகப் பங்கேற்ற இரு மாதப் பயிற்சி முகாமில் சண்டைக்காரிகள்
நாடகத்தைத் தினசரி ஒரு காட்சியாக எழுதி உருவாக்கினேன். நாடகத்தின் தலைப்பைக் கல்லூரி நிர்வாகம் ஒப்புக் கொள்ளவில்லை. மாணவியர் அதை எதிர்த்து நாடகத்தையே போட மாட்டோம் என்று போராடலாம் என்றார்கள்.
நாடகம் நடத்தப்படுவது முக்கியம் என்பதால் மாற்று வழியை உருவாக்கினோம். பெயரில்லாத தமிழ் நாடகம்
என்று அறிவித்தோம். வரலாற்றில் பெயர்கள் காணப்படாத பல பெண்கள் பற்றிய நாடகமென்பதால் இந்தப் பெயரைச் சூட்டினோம். கடைசியில் நாடகம் முடிந்ததும் கல்லூரியில் இதை சண்டைக்காரிகள்
என்றே பார்த்தவர்கள் எல்லோரும் சொல்லத் தொடங்கினார்கள்.
கல்லூரியில் மூன்று முறை நிகழ்த்தப்பட்டது. வெளியில் ஆண் பெண் இருவரும் பங்கேற்கும் நாடகமாக இதை நிகழ்த்த 2007-ல் நான் மேற்கண்ட முயற்சிகள் தோல்வியடைந்தன. காரணம் நடிப்பதற்குத் தேவைப்பட்ட சுமார் 15 பெண்கள் கிட்டாததுதான். ஒரு காலத்தில் ஒரு பெண் கூட நடிக்கக் கிடைக்காத நிலை இருந்தது. இன்று சுமார் ஏழெட்டு பேர் இருக்கிறார்கள். ஆனால் சண்டைக்காரிகள்
நாடகத்துக்குத் தேவைப்படுவதோ 15 பேர். 2008-ல் இது நிகழும் என்று நம்புகிறேன்.
இதே தீமில் நான் உருவாக்கிய மூன்றாவது படைப்பு இன்னொரு ஊடகமான பத்திரிகையிலாகும். அவள் விகடன்
இதழில் நெருப்பு மலர்கள்
என்ற தலைப்பில் தொடர் கட்டுரையாகப் பல்வேறு பெண் போராளிகளைப் பற்றி 2005-ல் எழுதினேன். அதை விகடன் பிரசுரம் புத்தகமாகவும் வெளியிட்டிருக்கிறது. இதே தீமில் திரைப்படம் ஒன்றை உருவாக்குவதும் வருங்காலத்தில் சாத்தியமாக வேண்டுமென்று விரும்புகிறேன்.
இந்த மூன்று படைப்புகளிலும் சில விஷயங்கள் பொதுவாக இருந்தாலும் சில அந்தந்த படைப்புக்குரிய தனியானதாகவும் அமைந்திருக்கின்றன. இந்த மூன்றிலும் இடம் பெறாத இன்னும் பல முக்கியமான பெண் போராளிகள் உண்டு. ஒவ்வொரு படைப்பும் உருவான நேரம், இடம், சூழல் இவையே இந்த விடுபடல்களுக்குக் காரணம். தவிர இந்த விஷயத்தைப் பொறுத்தவரை, இன்னும் சொல்ல ஏராளமானவை இருந்து கொண்டேதான் இருக்கின்றன. ஆண் பெண் உறவை ஆரோக்கியமானதாக ஆக்குவதும், ஆண் பெண் இதர மனிதர்கள் அனைவரும் சமத்துவத்துடன் வாழ்வதும் நமது பெருங்கனவு. அதை