Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mudhalai Gugai
Mudhalai Gugai
Mudhalai Gugai
Ebook176 pages1 hour

Mudhalai Gugai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

உங்களுக்காக நான் பிரத்யோகமாக எழுதியுள்ள "முதலை குகை" ஒரு சிறுவர் சிறுகதை நூலாகும். இந்த நூல் நான் எழுதி வெளியாகும் 51வது சிறுவர் இலக்கிய நூலாகும். இந்த நூலில் நான் உங்களுக்காக பதினாறு சிறுகதைகளை எழுதியிருக்கிறேன். சிறுவர்களாகிய உங்களுக்காக கதைகள் எழுதும் போது நானும் ஒரு சிறுவனாகி விடுகிறேன் என்பதே உண்மை.

இந்த நூலில் உள்ள சிறுகதைகள் அனைத்தும் காட்டில் நடைபெறும் சம்பவங்களை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட நீதி நூலாகும்.

ஓவ்வொரு சிறுகதையும் உங்களுக்கு ஒரு நீதியை போதிக்கும். இந்த நூலில் உள்ள சிறுகதைகளில் ஒரு மனித கதாபாத்திரம் கூட இடம் பெறவில்லை என்பது கூடுதல் சிறப்பு. "முதலை குகை" எனும் இந்த நூலைப் படித்து மகிழுங்கள்.

Languageதமிழ்
Release dateMay 2, 2022
ISBN6580138808377
Mudhalai Gugai

Read more from R.V.Pathy

Related to Mudhalai Gugai

Related ebooks

Reviews for Mudhalai Gugai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mudhalai Gugai - R.V.Pathy

    http://www.pustaka.co.in

    முதலைக் குகை

    (சிறுவர் கதைகள்)

    Mudhalai Gugai

    Siruvar Kathaigal

    Author :

    ஆர். வி. பதி

    R.V.Pathy

    For more books

    https://www.pustaka.co.in/home/author/rv-pathy

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    ஆர். வி. பதி

    9443520904

    rvpathi@yahoo.com

    சுட்டிகளே,

    உங்களுக்காக நான் பிரத்யோகமாக எழுதியுள்ள முதலை குகை ஒரு சிறுவர் சிறுகதை நூலாகும். இந்த நூல் நான் எழுதி வெளியாகும் 51 வது சிறுவர் இலக்கிய நூலாகும். இந்த நூலில் நான் உங்களுக்காக பதினாறு சிறுகதைகளை எழுதியிருக்கிறேன். சிறுவர்களாகிய உங்களுக்காக கதைகள் எழுதும் போது நானும் ஒரு சிறுவனாகிவிடுகிறேன் என்பதே உண்மை.

    இந்த நூலில் உள்ள சிறுகதைகள் அனைத்தும் காட்டில் நடைபெறும் சம்பவங்களை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட நீதி நூலாகும். ஓவ்வொரு சிறுகதையும் உங்களுக்கு ஒரு நீதியை போதிக்கும். இந்த நூலில் உள்ள சிறுகதைகளில் ஒரு மனித கதாபாத்திரம் கூட இடம் பெறவில்லை என்பது கூடுதல் சிறப்பு.

    முதலை குகை எனும் இந்த நூலைப் படித்து மகிழுங்கள். இதிலுள்ள நீதிக்கதைகளைப் படித்து அவற்றை உங்கள் மனதில் நிறுத்தி கூறப்பட்டுள்ள நீதி நெறிகளை உங்கள் வாழ்க்கையில் பின்பற்றி வாழ்க்கையைச் செம்மையாக்கிக் கொள்ளுங்கள்.

    முதலை குகை என்ற இந்த சிறுவர் நூலை மின்னூலாக வெளியிடும் புஸ்தகா நிறுவனத்திற்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

    அன்புடன்

    ஆர். வி. பதி

    பொருளடக்கம்

    மங்குவின் கனவு

    முதலை குகை

    யார் பலசாலி?

    சாரா செய்த சதி

    பிளாக் பேபியின் தீர்மானம்

    வாட் ஏன் அழுதது?

    நீதான் ராஜா

    எதிரிகள் ஜாக்கிரதை

    இனிக்கும் வாழ்க்கை

    ஸ்வீட்டி கேட்டி

    இரண்டு முட்டாள்கள்

    இனி ஜாலிதான்

    புலி வருது

    மாஸ்டர் பிளான்

    சூப்பர் திட்டம்

    ரங்குவின் விளையாட்டு

    மங்குவின் கனவு

    அது ஓர் அழகான காடு. அந்த காட்டில் மிகவும் பிரம்மாண்டமான மரங்களும் செடிகளும் கொடிகளும் நிறைந்திருந்தன. நாட்டில் மனிதர்கள் நடத்துவது போல காட்டில் விலங்குகளும் அவ்வப்போது விழாக்களையும் போட்டிகளையும் நடத்துவது வழக்கம். இத்தகைய விஷயங்களெல்லாம் மனிதர்களுக்குத் தெரியாது. காடுகளை அழிப்பதையும் அதிலுள்ள விலைமதிக்க முடியாத மரங்களையும் யானைகளின் தந்தங்களையும் வலிங்குகளின் தோல்களையும் விற்றுப் பணமாக்குவதைத் தவிர அவர்களுக்கு வேறோன்றும் தெரியாது. இயற்கைச் செல்வங்களைப் போற்றிப் பாதுகாக்க வேண்டியது தங்கள் கடமை என்பதை மறந்து போய்விட்டார்கள்.

    அந்த காட்டின் ராஜா கிங் லியோ. அந்த காட்டில் கோடை விழாவினை நடத்த ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. கோடைக் காலத்தில் வருடந்தோறும் இரண்டு நாட்கள் கிங் லியோவின் தலைமையில் கோடை விழா நடத்தப்படுவது வழக்கம். இரண்டு நாட்களும் அந்த காட்டில் உள்ள எல்லா விலங்குகளும் தோழமை உணர்வோடு நடந்து கொள்ளுவார்கள். அவர்களுக்குள் எந்தவித சண்டை சச்சரவும் பகைமை உணர்ச்சியும் இருக்காது. எல்லா விலங்குகளுக்கும் பல வகையான போட்டிகளை கிங் லியோ நடத்துவார். இதுமட்டுமன்றி ஆடல், பாடல், நாடகம் என பலவிதமான கேளிக்கைகளும் நடைபெறும்.

    விழாவின் முதல் நாளன்று மயில், மான், வரிக்குதிரைகள் போன்ற விலங்குகள் நடனம் ஆடி கிங் லியோவையும் கூடியிருந்த விலங்குகளையும் மகிழ்வித்தன. குயில், கிளி போன்ற பறவைகள் பலவிதமான பாடல்களைப் பாடி அனைவரையும் மகிழ்வித்தன. அன்று மாலை விலங்குகளுக்காக பலவிதமான போட்டிகள் நடத்தப்பட்டன.

    முதலில் ஓட்டப்பந்தயம் நடத்தப்பட்டது. அதில் வழக்கம்போல அதிவேகமாக ஓடி புலி முதல் பரிசைப் பெற்றது. மான் இரண்டாவது பரிசையும் குதிரை மூன்றாவது பரிசையும் பெற்றன. அடுத்ததாக நீளம் தாண்டும் போட்டி நடைபெற்றது. இந்தப்போட்டியில் இந்த முறை சிறுத்தை முதல் பரிசைப் பெற்றது. தொடர்ச்சியாக உயரம் தாண்டும் போட்டி, நீச்சல் போட்டி என பலவிதமான போட்டிகளும் நடத்தப்பட்டன. பின்னர் பாட்டுப் போட்டியும் நடனப் போட்டியும் நடத்தப்பட்டன. தனியாகப் பாடும் பாட்டுப் போட்டியும் குழுவாக பாடும் பாட்டுப் போட்டியும் பின்னர் தனியாக ஆடும் நடனப் போட்டியும் குழுவாக ஆடும் நடனப் போட்டியும் நடத்தப்பட்டன.

    அந்த காட்டில் மங்கு என்ற ஒரு குரங்கு வாழ்ந்து வந்தது. அந்த மங்குவிற்கு போட்டிகளில் கலந்து கொண்டு நிறைய பரிசுகளை கிங் லியோவிடமிருந்து பெற வேண்டும் என்ற ஆசை அதிகம் இருந்தது. எனவே அது எல்லா போட்டிகளிலும் ஆர்வத்தோடு கலந்து கொண்டது. ஆனால் பாவம் அதற்கு ஒரு பரிசு கூட கிடைக்கவில்லை.

    அடுத்தநாள் மாலை கிங் லியோவின் தலைமையில் பரிசளிப்புவிழா நடைபெற்றது. பலவிதமான போட்டிகளில் முதல் பரிசு இரண்டாம் பரிசு மற்றும் மூன்றாம் பரிசுகளைப் பெற்ற விலங்குகளும் பறவைகளும் ஆரவாரத்தோடு மேடையேறி கம்பீரமாக வந்து தங்கள் ராஜாவான கிங் லியோவிடமிருந்து பரிசுகளைப் பெற்று மகிழ்ச்சி அடைந்தன. சில போட்டிகளுக்கு ஆறுதல் பரிசும் தரப்பட்டது. ஆனால் மங்குவிற்கு ஒரு ஆறுதல் பரிசு கூட கிடைக்கவில்லை.

    மங்கு கூட்டத்தோடு கூட்டமாக நின்று ஏக்கத்தோடும் மனதில் கவலையோடும் பரிசு வழங்கும் நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தது. காட்டிலுள்ள பரிசு பெற்ற பரிசு பெறாத விலங்குகளும் பறவைகளும் மகிழ்ச்சியாக இருக்கும் இந்த வேளையில் மங்கு மட்டும் கவலையோடு அந்த விழாவை பார்த்துக் கொண்டிருந்தது. மங்குவின் அம்மா கங்கு இதை கவனித்தது.

    ஏன்டா மங்கு. என்னாச்சு உனக்கு? ஏன் ஒரு மாதிரியா இருக்கே?

    ஓண்ணுமில்லேம்மா

    டேய். உன் மனசு அம்மாவான எனக்குத் தெரியாதா? எதுவாயிருந்தாலும் பரவாயில்லை. என்ன விஷயம்னு சொல்லு. என்னாலே ஏதாவது செய்ய முடியுமான்னு யோசிக்கறேன்

    நான் எல்லா போட்டிகளிலேயும் ஆர்வத்தோட கலந்துகிட்டேன். ஆனா எனக்கு ஒரு பரிசு கூட கிடைக்கலை. அதாம்மா எனக்கு ரொம்ப கவலையா இருக்கு

    ச்சீ. முட்டாள் பயலே. இதுக்குப் போயா கவலைப்படறே. முயற்சி செய்து பயிற்சி செய்தா எல்லா பரிசையும் நீயே வாங்கலாம்

    இல்லேம்மா எனக்கு நம்பிக்கையே இல்லை. இனிமேல் என்னாலே எப்பவுமே பரிசை வாங்கவே முடியாதும்மா

    அம்மா மங்குவின் கவலையைப் புரிந்து கொண்டது.

    சாதனை செய்யணும்னா முயற்சி ரொம்ப அவசியம். தன்னம்பிக்கை ரொம்ப ரொம்ப அவசியம். நம்மாலே முடியாதுன்னு நினைச்சிட்டா எதுவுமே முடியாது. நீ தொடர்ந்து முயற்சி செய். நிச்சயம் உன்னாலே நினைச்சதை சாதிக்க முடியும்

    அம்மாவின் பேச்சு மங்குவிற்கு ஒருவித புத்துணர்ச்சியைத் தந்தது.

    மங்குவிற்கு தனியே நடனமாடி பரிசைப் பெற வேண்டும் என்ற ஆசை பிறந்தது. எனவே அது நடனப்பயிற்சியை மேற்கொள்ள முடிவு செய்தது. அந்த காட்டில் நன்றாக நடனமாடக் கூடிய ஒரு மயிலைச் சந்தித்து. அதன் பெயர் பீக்கோ என்பதாகும்.

    பீக்கோ பீக்கோ. நீ எனக்கொரு உதவி செய்வியா?

    வாடா மங்கு. என்ன உதவின்னு சொல்லு. உனக்காக நான் நிச்சயம் செய்யறேன்

    எனக்கு நடனம் கத்துக்கணும்னு ஆசை. எனக்கு நீ நடனம் கத்துத் தருவியா பீக்கோ?

    ஓ. நிச்சயமா. இன்னைக்கே வகுப்பை ஆரம்பிச்சிடலாம். சரியா

    மங்குவிற்கு ரொம்பவே சந்தோஷமாக இருந்தது. அன்று முதல் மயில் பீக்கோ மங்குவிற்கு நடனம் சொல்லிக் கொடுக்கத் தொடங்கியது. பீக்கோ மங்குவிற்கு நன்றாக நடனம் சொல்லிக் கொடுத்து. மங்குவும் ஓரளவிற்கு நடனமாடக் கற்றுக் கொண்டது.

    ஒருநாள் திடீரென்று மங்குவிற்கு ஒரு யோசனை தோன்றியது. ஓரளவிற்கு நடனம் கற்றுக் கொண்டோம். இனி பாட்டு கற்றுக் கொள்ளலாம் என்று நினைத்தது. பாட்டு கற்றுக் கொண்டால் அடுத்த வருஷம் பாட்டுப் போட்டியிலும் கலந்து கொண்டு ஒரு பரிசு வாங்கலாமே என்று நினைத்தது. உடனே நன்றாக பாடக்கூடிய ஒரு குயிலான குக்கூவைச் சந்தித்தது.

    குக்கூ குக்கூ. நீ எனக்கு ஒரு உதவி செய்வியா?

    என்ன உதவின்னு சொல்லு மங்கு. நிச்சயம் செய்யறேன்

    நீ ரொம்ப நல்லா பாடறே. எனக்கு உன்கிட்டே பாட்டு கத்துக்கணும்னு ஆசையா இருக்கு. நீ எனக்கு பாட்டு கத்துத் தருவியா?

    ஓ. நிச்சயமா. இன்னைக்கு வகுப்பை ஆரம்பிச்சிடலாம். சரியா

    அன்றே குயில் குக்கூ மங்குவிற்கு பாட்டு சொல்லித் தரத் தொடங்கியது.

    மங்குவும் தினமும் வந்து குக்கூவிடம் பாட்டு கற்றுக் கொண்டது.

    ஒரு மாதம் தொடர்ந்து வந்த மங்கு ஓரளவிற்கு பாட்டு கற்றுக் கொண்டது.

    இப்போது அதன் மனதில் திடீரென்று ஒரு வேறோரு எண்ணம் தோன்றியது.

    நாம் நீச்சல் கற்றுக் கொண்டால் என்ன? அப்போதுதான் அடுத்த வருடம் நடக்க இருக்கும் நீச்சல் போட்டியிலும் கலந்து கொண்டு நடனம் பாட்டு நீச்சல் என பலவற்றிலும் ராஜாவிடமிருந்து முதல் பரிசை வாங்கலாம் என்று மங்கு தனக்குத்தானே கற்பனை செய்து கொண்டது.

    இப்படி நினைத்த மங்கு காட்டிலிருந்த ஒரு பெரிய குளத்திற்குச் சென்றது. அங்கேயிருந்த குளத்தில் குதித்து தீவிரமாக நீச்சல் பயிற்சியைச் செய்தது. இதுவும் ஒரு மாதம்தான்.

    இப்படியே மங்கு ஒவ்வொன்றாக கற்றுக் கொள்ளத் தொடங்கியது. எதையும் முழுமையாக உருப்படியாகக் கற்றுக் கொள்ளவில்லை.

    ஒரு வருடம் மின்னல் வேகத்தில் ஓடி மறைந்தது.

    அடுத்த வருடத்திற்கான கோடை விழா ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. இந்த வருடம் மங்கு மற்ற விலங்குகளுடன் சேர்ந்து பலவிதமான போட்டிகளில் கலந்து கொள்ள இருந்தது. இந்த முறை எப்படியும் நிறைய பரிசுகளை வாங்கிவிடலாம் என்ற நம்பிக்கையில் அது இருந்தது.

    கோடைவிழாப் போட்டிகள் வழக்கம் போல நடைபெற்று முடிந்தன. ஒட்டகச்சிவிங்கி போட்டியில் வெற்றி பெற்ற ஒவ்வொருவரின் பெயரையும் அழைக்க அவர்கள் ஒவ்வொருவராய் வந்து ராஜா கிங் லியோவிடமிருந்து பரிசுகளைப் பெற்றுச் சென்றார்கள். ராஜாவிடமிருந்து பரிசுகளைப் பெற்ற பெருமிதம் அவர்களின் முகத்தில் நன்றாகத் தெரிந்தது. இந்த முறையும் மங்குவிற்கு ஒரு பரிசு கூட கிடைக்கவில்லை. வழக்கம் போல ஒரு ஆறுதல் பரிசு கூட கிடைக்கவில்லை.

    "ச்சே. போன வருடம் போட்டியில் கலந்து கொண்ட போது எந்த பயிற்சியையும் செய்யவில்லை. ஆனால் இந்த

    Enjoying the preview?
    Page 1 of 1