Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Palli Manavargalukku Pathu Nimida Medai Naadagangal
Palli Manavargalukku Pathu Nimida Medai Naadagangal
Palli Manavargalukku Pathu Nimida Medai Naadagangal
Ebook85 pages32 minutes

Palli Manavargalukku Pathu Nimida Medai Naadagangal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பட்டப்பெயர் தொடங்கி நல்ல உள்ளம் வரை பத்து நாடகங்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. பத்தும் முத்துக்கள். பன்முகப் படைப்பாளி திரு.ஆர்.வி.பதி அவர்கள் என்றாலும் அவர் சிறுவர்களுக்காக அதுவும் குறிப்பாக பள்ளி மாணவர்களுக்காக எழுதும் போது சிறுவனாகவே மாறி விடுகிறார். இந்த ரசவாதம் எல்லாருக்கும் வராது. இயல்பாகவே அவர் குழந்தை மனம் கொண்டவராக இருப்பதால் குழந்தைகளைப் பற்றி நிறையவே அறிந்து வைத்திருக்கிறார். அரும்புகளின் குறும்பு நாடகத்தில் காணமுடிகிறது.
பட்டப்பெயர் நாடகம் அந்த வகைதான். நகைச்சுவையுடன் நாடகத்தைப் படைத்துள்ளார். நாடகத்தின் திருப்பம் வெகுசிறப்பு. கட்டாயம் பள்ளி ஆண்டு விழாக்களில் அரங்கேற்றப்பட வேண்டிய நாடகம். அதே போல “பானுவின் சபதம்” மீண்டும் மீண்டும் படிக்கத்தூண்டும். அற்புதமான நாடகம். இப்படி ஒவ்வொரு நாடகமும் ஒவ்வொரு வகையில் சிறப்பாக அமைந்துள்ளது.
பள்ளி மாணவர்கள் ஆசிரியர் படித்து மகிழ வேண்டிய நூல். அதோடு மட்டுமல்ல பள்ளி ஆண்டு விழாக்களில் நாடகமாக நடிக்க வேண்டிய நாடகங்கள் இடம் பெற்றுள்ள நூல்.
Languageதமிழ்
Release dateJan 4, 2021
ISBN6580138806253
Palli Manavargalukku Pathu Nimida Medai Naadagangal

Read more from R.V.Pathy

Related to Palli Manavargalukku Pathu Nimida Medai Naadagangal

Related ebooks

Reviews for Palli Manavargalukku Pathu Nimida Medai Naadagangal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Palli Manavargalukku Pathu Nimida Medai Naadagangal - R.V.Pathy

    http://www.pustaka.co.in

    பள்ளி மாணவர்களுக்கு பத்து நிமிட மேடை நாடகங்கள்

    Palli Manavargalukku Pathu Nimida Medai Naadagangal

    Author:

    ஆர்.வி. பதி

    R.V. Pathy

    For more books

    http://www.pustaka.co.in/home/author/rv-pathy

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பள்ளி மாணவர்களுக்கு பத்து நிமிட மேடை நாடகங்கள்

    ஆர்.வி. பதி

    அணிந்துரை

    மா.கமலவேலன்

    116 மாசிலாமணிபுரம்

    திண்டுக்கல் 624 005

    99421 73875

    மாணவக் கண்மணிகளின் பல்துறை ஆற்றலை வளர்க்கும் இடமே பள்ளிக்கூடங்கள் தாம். பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, பாட்டுப் போட்டி என மாணவர்களின் தனித்திறமையை அடையாளம் கண்டு ஆசிரியர்கள் ஊக்குவிப்பார்கள்.

    அதே போல பள்ளி ஆண்டு விழாக்களில் கட்டாயம் மேடை நாடகம் இடம் பெறும். நாடகம் என்பது ஒரு கூட்டு முயற்சி. மாணவக் கலைஞர்களை ஒருங்கிணைக்கும் களம். ஒற்றுமையை கூட்டுணர்வை உருவாக்குபவை நாடகங்களே.

    காலம் மாறி வருகிறது. கலை நிகழ்ச்சிகளில் ஆட்டம் பாட்டமே மிகுந்து வருகிறது. கற்பனை வறட்சியையே இது உணர்த்துகிறது. ஆட்டம் பாட்டம் பொழுது போக்க உதவும். ஆனால் மாணவரிடையே நல்ல பண்புகளை வளர்க்க நாடகங்களே நல்வாய்ப்பாக அமையும்.

    ஆண்டுவிழா சமயத்தில் நல்ல நாடகங்களைத் தேடி அலைவார்கள் மாணவர்கள். அவர்களின் தேடலை மனதில் கொண்டே ஆர்.வி.பதி அவர்கள் பள்ளி மாணவர்களுக்குப் பத்து நிமிட மேடை நாடகங்கள் என்ற தலைப்பில் அருமையான நாடக நூல் ஒன்றைப் படைத்துள்ளார்கள்.

    பட்டப்பெயர் தொடங்கி நல்ல உள்ளம் வரை பத்து நாடகங்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. பத்தும் முத்துக்கள். பன்முகப் படைப்பாளி திரு.ஆர்.வி.பதி அவர்கள் என்றாலும் அவர் சிறுவர்களுக்காக அதுவும் குறிப்பாக பள்ளி மாணவர்களுக்காக எழுதும் போது சிறுவனாகவே மாறி விடுகிறார். இந்த ரசவாதம் எல்லாருக்கும் வராது. இயல்பாகவே அவர் குழந்தை மனம் கொண்டவராக இருப்பதால் குழந்தைகளைப் பற்றி நிறையவே அறிந்து வைத்திருக்கிறார். அரும்புகளின் குறும்பு நாடகத்தில் காணமுடிகிறது.

    பட்டப்பெயர் நாடகம் அந்த வகைதான். நகைச்சுவையுடன் நாடகத்தைப் படைத்துள்ளார். நாடகத்தின் திருப்பம் வெகுசிறப்பு. கட்டாயம் பள்ளி ஆண்டு விழாக்களில் அரங்கேற்றப்பட வேண்டிய நாடகம். அதே போல பானுவின் சபதம் மீண்டும் மீண்டும் படிக்கத்தூண்டும். அற்புதமான நாடகம். இப்படி ஒவ்வொரு நாடகமும் ஒவ்வொரு வகையில் சிறப்பாக அமைந்துள்ளது.

    காட்டில் வாழும் விலங்குகளின் அட்டகாசங்களையும் அவருக்கே உரிய கற்பனை வளத்தோடு நாடகமாக ஆக்கியுள்ளார்.

    சிறுவர் நாடகங்கள் எழுதுவோர் குறைவு. அந்தக் குறையைப் போக்க ஆர்.வி.பதி அவர்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். நாடக உலகமே அவருக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறது.

    பள்ளி மாணவர்கள் ஆசிரியர் படித்து மகிழ வேண்டிய நூல். அதோடு மட்டுமல்ல பள்ளி ஆண்டு விழாக்களில் நாடகமாக நடிக்க வேண்டிய நாடகங்கள் இடம் பெற்றுள்ள நூல்.

    பெற்றோர்கள் அவசியம் தங்கள் குழந்தைகளுக்கு விலை கொடுத்து வாங்கிக் கொடுக்க வேண்டிய நூல்.

    பள்ளி மாணவர்களுக்கு பத்து நிமிட மேடை நாடகங்கள் படிப்பவர்களை பரவசத்தில் ஆழ்த்தும். இது நிச்சயம்.

    அன்புடன்

    மா.கமலவேலன்

    (திரு.மா.கமலவேலன் அவர்கள் தனது அந்தோணியின் ஆட்டுக்குட்டி என்ற சிறார் நாவலுக்காக 2010 ஆம் ஆண்டிற்கான பால சாகித்ய புரஸ்கார் விருது பெற்றவர். இந்த விருதினைப் பெறும் முதல் சிறார் எழுத்தாளர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது)

    குறிஞ்சிச்செல்வர், கலைமாமணி

    டாக்டர்.கொ.மா.கோதண்டம்

    தலைவர், மணிமேகலை மன்றம்

    146/1 குறிஞ்சித் தெரு

    பி.எஸ்.கே.நகர் அஞ்சல்

    இராஜபாளையம் 626 108

    9944415322

    வாழ்த்துரை

    பொதுவாக தமிழில் நாடக இலக்கிய வகை போதுமான வளர்ச்சி இன்றியே இருக்கின்றது. ஆயினும் குழந்தை இலக்கியப் பிரிவில் நாடகங்கள் நிறையவே வருகின்றன. நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே எனது சிறுவர் நாடகங்கள் திருச்சி, நெல்லை, மதுரை, தூத்துக்குடி வானொலி நிலையங்களில் ஒலிபரப்பப்பட்டு பின்னர் நூலாகவும் வந்தது. தற்போது தினமணி சிறுவர்மணி ஒவ்வொரு இதழிலும் தவறாது ஒரு நாடகம் அரங்கம் என்ற பெயரில் வெளியிட்டு சிறுவர் இலக்கியத்திற்கு வளம் சேர்த்து வருகிறது.

    நண்பர் ஆர்.வி.பதியின் இந்த நூல் பள்ளி மாணவர்களுக்கு பத்து நிமிட மேடை நாடகங்கள். இதில் பத்து நாடகங்கள் உள்ளன. தினமணி சிறுவர்மணியில் பிரசுரமாகியுள்ள அவற்றை படித்து நான் பெரிதும் மகிழ்ந்துள்ளேன்.

    குழந்தைகள் பலரும் சேர்ந்து பழகுபவர்கள். அவர்களில் சிலருக்கு

    Enjoying the preview?
    Page 1 of 1