Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kuzhanthai Ilakkiya Munnodigal
Kuzhanthai Ilakkiya Munnodigal
Kuzhanthai Ilakkiya Munnodigal
Ebook208 pages1 hour

Kuzhanthai Ilakkiya Munnodigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சில ஆண்டுகளுக்கு முன்னால் “சிறார் இதழ்கள் அன்று முதல் இன்று வரை” என்ற சிறார் இலக்கிய இதழ்கள் தொடர்பான ஆய்வு நூலினை வெளியிட்டேன். இதைத் தொடர்ந்து “தற்கால சிறார் எழுத்தாளர்கள்”, “பால சாகித்ய புரஸ்கார் விருதும் விருதாளர்களும்” முதலான நூல்கள் வெளிவந்தன. தற்போது நான் எழுதியுள்ள “குழந்தை இலக்கிய முன்னோடிகள்“ என்ற நூலானது வாழ்ந்து மறைந்த சிறுவர் இலக்கிய சாதனையாளர்களைப் பற்றியது.

Languageதமிழ்
Release dateNov 17, 2021
ISBN6580138807680
Kuzhanthai Ilakkiya Munnodigal

Read more from R.V.Pathy

Related to Kuzhanthai Ilakkiya Munnodigal

Related ebooks

Reviews for Kuzhanthai Ilakkiya Munnodigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kuzhanthai Ilakkiya Munnodigal - R.V.Pathy

    https://www.pustaka.co.in

    குழந்தை இலக்கிய முன்னோடிகள்

    Kuzhanthai Ilakkiya Munnodigal

    Author:

    ஆர்.வி. பதி

    R.V. Pathy

    For more books

    https://www.pustaka.co.in/home/author/rv-pathy

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    காணிக்கை

    குழந்தை இலக்கிய நூல்களை தொடர்ந்து வெளியிட்டு

    குழந்தை இலக்கியத்தை வளர்த்த

    பதிப்புச்செம்மல்

    தமிழ்வேள்

    முனைவர்.ச.மெய்யப்பன்

    அவர்களுக்கு

    பொருளடக்கம்

    கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை

    மகாகவி சுப்பிரமணிய பாரதியார்

    பாவேந்தர் பாரதிதாசன்

    மு.வரதராசனார்

    மயிலை சிவமுத்து

    பைந்தமிழ்ப் பாவலர் அ.கி.பரந்தாமனார்

    தமிழ்ஒளி

    கா.நமச்சிவாய முதலியார்

    மணி திருநாவுக்கரசு

    வாணிதாசன்

    பெ.நா.அப்புஸ்வாமி

    தி.ஜ.ரங்கநாதன்

    எஸ்.பரசுராமய்யர்

    கி.வா.ஜகந்நாதன்

    ம.ப.பெரியசாமித் தூரன்

    சக்தி வை.கோவிந்தன்

    அழ.வள்ளியப்பா

    தமிழ்வாணன்

    ஆர்.வி.

    தம்பி சீனிவாசன்

    லெமன்

    நெ.சி.தெய்வசிகாமணி

    தங்கமணி

    வாண்டுமாமா

    டாக்டர் பூவண்ணன்

    ரா.பொன்ராசன்

    பூரம் எஸ்.சத்தியமூர்த்தி

    திருச்சி பாரதன்

    நாரா நாச்சியப்பன்

    கே.ஆர்.வாசுதேவன்

    வானொலி அண்ணா கூத்தபிரான்

    பி.வி.கிரி

    அணில் அண்ணா வி.உமாபதி

    பரிதி இரா.வேங்கடேசன்

    அரிமதி தென்னகன்

    மதிஒளி ஆர்.சரஸ்வதி

    நெல்லை ஆ. கணபதி

    ஆலந்தூர் கோ.மோகனரங்கன்

    பி.வெங்கட்ராமன்

    நிறுவனர் – தலைவர்

    குழந்தைக் கவிஞர் பேரவை

    9/2 சத்யா ஃபிளாட்ஸ்

    சீனிவாசன் தெரு, உள்ளகரம்

    சென்னை 600 091

    9841076838 / 044-22421653

    ஆர்.வி.பதி அவர்களின் அரும்பணி பெரும்பணி

    தமிழ் இலக்கிய தளத்தில் இனிதே இன்றியமையா ஏற்றமிகு பங்களிப்பில் பெரும் சாதனை புரிந்து வருபவர் இனிய நண்பர் திரு.ஆர்.வி.பதி அவர்கள். கதை, கவிதை, கட்டுரை, நேர்காணல் என பரந்துபட்ட இவரது பங்களிப்பு பெரிதும் பிரமிக்க வைக்கிறது. இதையெல்லாம் கடந்து இவரது குழந்தை இலக்கியப் பங்களிப்பு வியக்க வைக்கிறது.

    இவரது இணையற்ற தயாரிப்பு குழந்தை இலக்கிய முன்னோடிகள். வானளாவப் போற்றப்பட வேண்டிய அரும்பெரும் பொக்கிஷம். நிபுணர்குழு ஒன்று பல்லாண்டுகாலம் பெரும் உழைப்பைச் செலவழித்து உருவாக்கப்பட வேண்டிய இது போன்ற தொகுப்பை தனிநபராய் தளராத ஆர்வத்துடன் தமிழ்க் குழந்தை இலக்கிய உலகிற்கு ஆற்றியுள்ள இப்பணி மெச்சத்தகு அரும்பணி. மேன்மைமிகு பெரும்பணி.

    அயராத அற்புத நல்லுழைப்புடன் ஆர்வமிகு ஆர்.வி.பதி அவர்கள் ஆவணப்படுத்தியுள்ள இந்த அற்புத நூல் தமிழ்க்குழந்தை இலக்கிய உலகமே பெரிதும் பாராட்டும் நன்னூல். வாழ்த்துகள்.

    அன்பன்

    பி.வெங்கட்ராமன்

    ஆர்.வி.பதி எம்.ஏ. (இதழியல்)., எம்.ஃபில் (இதழியல்).,

    60 குமுதம்

    அணுபுரம் 603127

    செங்கற்பட்டு மாவட்டம்

    9443520904 (Whatsapp)

    rvpathi@yahoo.com

    அன்புள்ள வாசகர்களுக்கு,

    வணக்கம். சில ஆண்டுகளுக்கு முன்னால் சிறார் இதழ்கள் அன்று முதல் இன்று வரை என்ற சிறார் இலக்கிய இதழ்கள் தொடர்பான ஆய்வு நூலினை வெளியிட்டேன். இதைத் தொடர்ந்து தற்கால சிறார் எழுத்தாளர்கள், பால சாகித்ய புரஸ்கார் விருதும் விருதாளர்களும் முதலான நூல்கள் வெளிவந்தன. தற்போது நான் எழுதியுள்ள குழந்தை இலக்கிய முன்னோடிகள் என்ற நூலானது வாழ்ந்து மறைந்த சிறுவர் இலக்கிய சாதனையாளர்களைப் பற்றியது.

    விரைவில் புதுச்சேரி சிறுவர் இலக்கிய வரலாறு என்ற நூல் வெளியாக உள்ளது. அடுத்ததாக தமிழ் சித்திரக்கதைகளின் வரலாறு என்ற தலைப்பில் மற்றொரு நூலினை எழுத உள்ளேன். இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற் போல சிறுவர் இலக்கிய வரலாறு என்ற 1500 பக்கங்கள் கொண்ட நூலினை உருவாக்கி வருகிறேன். இந்தியாவில் சிறார் இலக்கியத்தில் தமிழ்நாடு சிறந்து விளங்கி வருகிறது என்பதை இத்தகைய நூல்களைப் படித்தால் எவரும் புரிந்து கொள்ள இயலும்.

    இந்த நூலினை எழுதும் போது தேவைப்பட்ட தகவல்களையும் எழுத்தாளர்களின் அரிய புகைப்படங்களையும் பல எழுத்தாளர்கள் சிரமம் பாராமல் எனக்குத் தந்து உதவினார்கள். குறிப்பாக ஹைதராபாத்தில் வசித்துக் கொண்டிருக்கும் கவிமாமணி இளையவன் அவர் தான் பழகிய எழுத்தாளர் லெமன் மற்றும் திரு.கே.ஆர்.வாசுதேவன் போன்றோர் பற்றிய இதுவரை வெளிவராத தகவல்களை எனக்கு அனுப்பி உதவினார். புதுக்கோட்டை மாவட்டம் கோனாப்பட்டில் வசித்து வரும் மூத்த சிறார் எழுத்தாளர் திரு.பால நடராஜன் அவர்கள் எழுத்தாளர் திரு.தங்கமணி பற்றிய தகவல்களை கொடுத்து உதவினார். மறைந்த மூத்த சிறார் எழுத்தாளர் திரு.நெ.சி.தெய்வசிகாமணி அவர்களைப் பற்றிய தகவல்களை அவருடைய மகன் திரு.என்.டி.நந்தகோபால் அவர்கள் கொடுத்து உதவினார். எனது இனிய நண்பர் முனைவர்.தாமோதரக்கண்ணன் அவர்கள் திருச்சி பாரதன் பற்றிய அரிய தகவல்களையும் அவருடைய புகைப்படங்களையும் உடனடியாகத் தந்து உதவினார். புதுச்சேரி புதுவை பாரதி இதழின் ஆசிரியர் திரு.பாரதிவாணர் சிவா அவர்கள் திரு.ரா.பொன்ராசன் அவர்களின் அரிய புகைப்படத்தினை அனுப்பி உதவினார். இருபத்தி நான்கு மணிநேரமும் சிறுவர் இலக்கியம் குறித்து சிந்தித்துக் கொண்டிருக்கும் திரு.பி.வெங்கட்ராமன் அவர்களும் இந்த நூலுக்கு நிறைய குறிப்புகளைத் தந்து உதவியர்களில் ஒருவர். அவரே இந்த நூலுக்கு சிறப்பான அணிந்துரையும் அளித்துள்ளார். இவர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

    இது ஒரு முழுமையான நூல் அல்ல. இன்னும் விடுபட்ட குழந்தை எழுத்தாளர்கள் பலர் இருக்கிறார்கள். இந்நூலில் திரு.மணி திருநாவுக்கரசு, திரு.தம்பி சீனிவாசன், திரு.முல்லை தங்கராசன், திரு.கல்வி கோபாலகிருஷ்ணன் ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெறவில்லை. காரணம் எவ்வளவு முயற்சி செய்தும் அத்தகையோரின் புகைப்படங்கள் கிடைக்கவில்லை. இந்நூலில் விடுபட்ட மேலும் பல குழந்தை எழுத்தாளர்களின் வாழ்க்கை வரலாறுகளை சேகரித்து வருகிறேன். விரைவில் அவர்களின் வரலாறும் பணிகளும் இரண்டாம் பாகமாக வெளிவரும்.

    குழந்தை இலக்கிய முன்னோடிகள் என்ற இந்த நூலினை சிறப்பாக மின்னூலாக வெளியிட்டுள்ள புஸ்தகா நிறுவனத்திற்கு என் நன்றிகள்.

    அன்புடன்

    ஆர்.வி.பதி

    2021

    கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை

    இருபதாம் நூற்றாண்டில் குழந்தை இலக்கியம் பல சிறந்த கவிஞர்களால் முழுநிலவென பிரகாசிக்கத் தொடங்கியது. கவிமணி என்றழைக்கப்பட்ட தேசிகவிநாயகம் பிள்ளை அவர்களின் பங்கு இதில் மிக அதிகம் என்றால் அது மிகையாகாது.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோயிலுக்கு அருகில் அமைந்த தேரூரில் திருவாளர்.சிவதாணுப் பிள்ளைக்கும் திருமதி.ஆதிலட்சுமி அம்மையாருக்கும் 25 ஜீலை 1876 அன்று தேசிகவிநாயகம் பிள்ளை மூன்றாவது மகனாய்ப் பிறந்தார். பள்ளி நாட்களிலேயே கவிமணிக்கு நல்ல கவிதைகளைப் புனையும் ஆற்றல் இருந்தது.

    கவிமணியின் கவிதைகளை தொகுப்பாக முதன்முதலில் வெளிவரக் காரணமாக இருந்தவர் ரசிகமணியே. இவர் காரைக்குடி புதுமைப் பதிப்பகத்தின் வாயிலாக கவிமணியின் கவிதைகளை மலரும் மாலையும் என்ற தலைப்பில் புத்தகமாக வெளிவரச் செய்தார். கவிதைகள் புத்தகவடிவம் பெற்றதும் கவிமணியின் புகழ் பரவத் தொடங்கியது. கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை அவர்களின் கவிதைகளை தமிழ்நேசன், தமிழன், லஷ்மி, குமரன், செந்தமிழ், லோகோபகாரி, ஆனந்தவிகடன், கல்கி, கலைமகள் போன்ற தமிழ் இதழ்கள் வெளியிட்டு அவரை பெருமைபடுத்தின.

    கவிமணி பல காலகட்டங்களில் எழுதிய குழந்தைப் பாடல்கள் அனைத்தும் தொகுக்கப்பட்டு 1941 ஆம் ஆண்டில் இளந்தென்றல் என்ற பெயரில் நூலாக வெளிவந்தது. இதன்பின்னர் கவிமணியின் அனைத்துக் கவிதைகளும் டாக்டர்.அ.கா.பெருமாள் மற்றும் டாக்டர்.எஸ்.ஸ்ரீகுமார் அவர்களால் தொகுக்கப் பெற்று நவம்பர் 2002 ஆம் ஆண்டில் கவிமணியின் கவிதைகள் என்ற பெயரில் முழுமையான நூலாக வெளிவந்துள்ளது. இந்த நூலில் கவிமணியின் கவிதைகள் தலைப்பு வாரியாக பிரிக்கப்பட்டு ஆதாரங்களுடன் தொகுக்கப்பட்டுள்ளது. இதில் குழந்தைப்பாடல்கள் என்ற தலைப்பில் கடல், சந்திரன், வெண்ணிலா, மலர்கள், சூரியகாந்தி, கடிகாரம், சைக்கிள், ஆகாயவிமானம், பாண்டியாடுதல், இயற்கை, வசந்தம், ஆறு, முத்தந்தா, தாலாட்டு, அரசே எழுந்திரு, காலைப்பாட்டு, காக்காய், கோழி, நாய், கிளி, கிளியை அழைத்தல், கூண்டுக்கிளி, பசு, பால், பசுவும் கன்றும், பொம்மைக்கலியாணம், எலிக்கலியாணம், புலிக்கூடு என்ற இருபத்தி எட்டு குழந்தைப் பாடல்கள் காணப்படுகின்றன. கதைப்பாட்டுக்கள் என்ற தலைப்பில் ஊகமுள்ள காகம், நெற்பானையும் எலியும், அப்பந்திருடின எலி, ஔவையும் இடைச்சிறுவனும், அன்பின் வெற்றி, ஓர் இராணியின் சாபம், ரஷகர் என ஏழு கதைப்பாடல்கள் காணப்படுகின்றன.

    திரு.கே.என்.சிவராஜப்பிள்ளை, கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, பண்டித முத்துசாமிப்பிள்ளை ஆகிய மூவரும் எழுதிய குழந்தைப் பாடல்களைத் தொகுத்து 1927 ஆம் ஆண்டில் சிறுபாமாலை என்ற பெயரில் திரு.கே.என்.சிவராஜப்பிள்ளை வெளியிட்டார். இதுவே சிறுவர் இலக்கிய உலகின் முதல் தொகை நூல் என்கிறார் டாக்டர் பூவண்ணன்.

    கவிமணி அவர்கள் தன் வாழ்நாள் முழுவதும் கவிதைகளைப் படைத்து வாழ்ந்த பெருமை உடையவர். பலதரப்பட்ட களங்களில் பலநூறு கவிதைகளைப் படைத்தவர். கவிமணி அவர்களின் கவிதைகள் மிக எளிய நடையில் அனைவரையும் கவரும்விதமாக அமைந்துள்ளன. இவர் எழுதிய குழந்தைப்பாடல்கள் பெரும் புகழ் பெற்றவை. எளிமையான வார்த்தைகளை பயன்படுத்திய காரணத்தினால் குழந்தைகளின் மனதில் அவை எளிதாய் பதிந்து போயின. கவிமணியின் குழந்தைப் பாடல்கள் நெஞ்சை விட்டு நீங்காத தன்மையுடையன. கவிமணி இயற்றிய பசுவும் கன்றும் குழந்தைப்பாடலை ஒரு முறை படித்தால் போதும். பிஞ்சுகளின் இதயத்தில் மிகச்சுலபமாகப் பதிந்து விடும் ஆற்றலைக் கொண்டது.

    பசுவும் கன்றும்

    தோட்டத்தில் மேயுது

    வெள்ளைப்பசு – அங்கே

    துள்ளிக் குதிக்குது

    கன்றுக்குட்டி

    அம்மா என்குது

    வெள்ளைப்பசு – உடன்

    அண்டையில் ஓடுது

    கன்றுக்குட்டி

    நாவால் நக்குது

    வெள்ளைப்பசு – பாலை

    நன்றாய்க் குடிக்குது

    கன்றுக்குட்டி

    முத்தம் கொடுக்குது

    வெள்ளைப்பசு –

    Enjoying the preview?
    Page 1 of 1