Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Marma Bungalow
Marma Bungalow
Marma Bungalow
Ebook233 pages1 hour

Marma Bungalow

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பங்களாவில் வசித்து வரும் மூன்று நண்பர்களில் ஒருவனுக்கு அடிக்கடி அமானுஷ்ய தொல்லை ஏற்பட, ஜோதிடரின் கூற்றுப்படி அவனுக்கு மணம் முடித்து வைக்க முயலும் தாயார், தான் நினைத்த பெண்ணையே அவனுக்கு முடிக்க எண்ணுகிறார். அவனுக்கும் அவளை பிடிக்க, அவளோ அவனது செயல்களால் வெறுப்புற்று அவனது நண்பனின் அக்கறையான பேச்சில் ஈர்க்கப்படுகிறாள். மாப்பிள்ளையின் தாயாரின் எண்ணங்கள் ஈடேறுகிறதா? பங்களாவின் உரிமையாளர் யார்? திடீர் திடீரென்று பங்களாவில் நடக்கும் மர்மத்தின் பின்னணி என்ன? மர்ம பங்களா என்ற பெயர் எதனால் வருகிறது என்பதை கதையை வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.

Languageதமிழ்
Release dateFeb 11, 2023
ISBN6580162109533
Marma Bungalow

Read more from K. Anantha Jothi

Related to Marma Bungalow

Related ebooks

Related categories

Reviews for Marma Bungalow

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Marma Bungalow - K. Anantha Jothi

    A picture containing icon Description automatically generated

    https://www.pustaka.co.in

    மர்ம பங்களா

    Marma Bungalow

    Author:

    K. ஆனந்த ஜோதி

    K. Anantha Jothi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/k-anantha-jothi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் - 1

    அத்தியாயம் - 2

    அத்தியாயம் - 3

    அத்தியாயம் - 4

    அத்தியாயம் - 5

    அத்தியாயம் - 6

    அத்தியாயம் - 7

    அத்தியாயம் - 8

    அத்தியாயம் - 9

    அத்தியாயம் - 10

    அத்தியாயம் - 11

    அத்தியாயம் - 12

    அத்தியாயம் - 13

    அத்தியாயம் - 14

    அத்தியாயம் - 15

    அத்தியாயம் - 16

    அத்தியாயம் - 17

    இறுதி அத்தியாயம் - 18

    அனைவருக்கும் வணக்கம்,

    குடும்பம், காதல், நகைச்சுவை, போலீஸ் என்று இதுவரை எழுதி வந்த நான் முதன் முறையாக திகில், மர்மம் கலந்து மர்ம பங்களா எனும் நாவலை எழுதியுள்ளேன்.

    இப்படி ஒரு நாவல் எழுத எனக்கு ஊன்றுகோலாக அமைந்த ஆசான்களாகிய திரு. ஆர்னிகா நாசர் சார், கணேஷ் பாலா சார், சௌந்தர ராஜன் சார், பி.டி. சாமி சார், காஞ்சனா ஜெயதிலகர் மேம் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டு இதோ என்னுடைய படைப்பை உங்கள் முன்பு சமர்ப்பிக்கிறேன்.

    வாசகர்களாகிய தாங்கள் வாசித்து விட்டு எப்படி இருக்கிறது என்று உங்களுடைய கருத்துக்களை தெரிவியுங்கள்.

    நன்றிகளுடன்

    ஜோதி

    கதைக்கான எழுத்தாளர் ஆர்னிகா நாசர் அவர்களின் சிறப்பான கருத்துப் பரிமாற்றம்

    ஆனந்த ஜோதி மிகச்சிறந்த வாசகி. எந்த விருப்பும் வெறுப்பும் இல்லாமல் எல்லாவித எழுத்துகளையும் வாசிப்பவர். தற்சமயம் இவரைப் போலொரு வாசகியை பார்ப்பது அரிதிலும் அரிதான விஷயம். சிறந்த வாசகி சிறந்த எழுத்தாளராக பரிணமித்திருக்கிறார்.

    இவரது மர்ம பங்களா அமானுஷ்ய நாவலைப் படித்தேன். அற்புதமான எழுத்து நடை. முதல் பக்கத்திலிருந்து கடைசி பக்கம் வரை புல்லட் ட்ரெயின் வேகம். இன்னும் ஏராளமாக எழுதி தமிழ் வாசகர்கள் நெஞ்சில் நிரந்தர இடம் வகிக்க வாழ்த்துகிறேன்.

    அத்தியாயம் - 1

    அதிகாலையில் உதயமாகி பூமிப்பரப்பில் படிந்துள்ள இருள்களை துரத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்த ஆதவன், தன் அன்றாட பணிகள் நிறைவடைந்த மகிழ்ச்சியில் ஓய்வெடுக்க சென்றிருக்கும் அந்திமாலை பொழுதில், பொன்னிற கதிர்கள் மறைந்த திசையில் இருந்து செம்மையும், ஆரஞ்சுமாய் படர்ந்து அடிவானம் ஜெகஜெகவென ஜொலித்துக் கொண்டிருந்தது.

    அதற்கு நேர் மாறான நிலையில் சுற்றிலும் அரணாக நின்ற மரங்களுக்கு மத்தியில் தனி கம்பீரத்துடன் காணப்பட்டது அந்த பங்களா. முகப்பில் இருக்கும் அழகும், அமைந்திருக்கும் விதமும் காண்பவர் உள்ளத்தைக் கவரும் வகையில் வடிவமைக்கப் பட்டிருந்தது.

    இரண்டு மாடிகளுடன் கூடிய பங்களாவின் மேற்பரப்பு பிரமிடு வடிவத்தில் காணப்படுகின்றது. அதை தாங்கி நிற்கின்ற சுவர் பகுதிகள் புயல், மழையால் பாதிப்பிற்கு உள்ளாகாத வகையில் உருவாக்கப் பட்டிருந்தது. உட்பக்கம் ஏழு அறைகளும், மேல்தளத்தில் அதே போன்றும் அமைக்கப்பட்டு உள்ளது. தரையெங்கும் வெளி மாநிலங்களை சார்ந்த கிரானைட்டும், டைல்ஸும், பல்புகளும், தொங்கும் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டு, பூலோக சொர்க்கமோ என்று வியக்கும் வகையில் ஜொலித்துக் கொண்டு இருந்தது. தேக்கு மரத்தாலான கதவுகளும், ஜன்னல்களும், மர வேலைப்பாடுகளுடன் கூடிய சாதனங்களும் தனி அழகுடன் மிளிர்ந்து, பங்களாவிற்கு மேலும் மெருகூட்டியது.

    வீட்டின் பின்பகுதியில் பெரிய நீச்சல் குளமும், வீட்டை சுற்றிலும் ஒரே அளவில் வெட்டி விடப்பட்ட புல்தரையும், முன் பகுதியில் காணப்பட்ட தோட்டமும், பங்களாவின் இன்னொரு அழகிய அம்சமாக திகழ்கிறது. சுற்று வட்டாரத்தில் அப்படியொரு வீட்டை பார்த்திருக்க முடியாது. அத்தனை அழகுற, கலைஞர்களின் கட்டட திறன் அமைந்திருந்தது.

    அன்றைய தினம் பங்களாவை விற்பனைக்கு வாங்கியவரின் வாரிசுக்கு பிறந்தநாள். முன் பகுதி முழுவதும் கலர் பல்புகள், அலங்கார தோரணங்களால், மேலும் பொலிவு பெற்று திகழ்ந்தது.

    பிறந்தநாள் விழாவிற்கு தேவையான உணவு வகைகள், குளிர் பானங்கள், அனைத்தும் ஒரு பக்கம் தயாராகி கொண்டு இருந்தன. அங்கு இருந்து வீசிய உணவின் வாசனை அடுத்த நொடி ருசி பார்க்கும் ஆவலை தூண்டியது. 'கபகப'வென்று வயிற்றில் பசி எடுத்தது.

    இரும்பு சங்கிலியால் பிணைக்கப்பட்டு அதற்குரிய இடத்தில் படுத்திருந்த டைகர் சாம், எழுந்து நின்று வாலை ஆட்டியது. இரண்டு செவியும் விடைத்து மேல் நோக்கி நின்றது. நிமிடத்திற்கு ஒருமுறை நாவால் எச்சிலை வடித்துக்கொண்டு, மாமிசத்தை ருசி பார்த்து விடும் ஆவலை அடக்க முடியாமல் அங்கும் இங்கும் உலாவியது. கால்களால் தரையை தேய்த்து தேய்த்து புதையலை தேடும் முயற்சியில் இறங்குவது போல, வயிற்றுக்குள் எழுந்த வெற்றிடத்தை அடக்க முடியாமல் திணறியது.

    இரும்பு சங்கிலியின் பிணைப்புகள் மட்டும் விடுவிக்கப் பட்டிருந்தால் அடுத்த நிமிடம் பாய்ந்து சென்று மொத்த அசைவத்தையும் ஒரு கை பார்த்து விடும் எண்ணத்தில், அது வைக்கப்பட்டு இருக்கும் இடத்தை நோக்கி விழிகளால் துழாவியது. தேடல் தோல்வியுறும் நேரமெல்லாம், குரைத்துக்கொண்டு 'பசியுடன் நிற்கிறேன் மூடப் பிறவிகளே! சற்று என்னையும் கவனியுங்கள்' என்று அறிவுறுத்தியது.

    அதைக் கண்டு கொள்ளாமல் தங்களுடைய வேலையில் மும்முரமாக ஈடுபட்டிருந்த வேலையாட்களுக்கு, அன்றைய தினம் செய்ய வேண்டியது பற்றிய குறிப்புகளை சொல்லிக் கொண்டிருந்தான் சாரதி... பார்த்த சாரதி!

    இருபத்தியேழு வயது கட்டிளங் காளை! சமையலில் கைதேர்ந்தவன். புன்னகையால் அனைவர் மனதையும் வசியம் செய்யும் ஐந்தே முக்கால் அடி உயர ஆணழகன். அரசு அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டு அங்கேயே வசித்து வருகிறான்.

    தலை கொள்ளா கேசம் காற்றில் சிலிர்த்து நிற்க, முகத்தில் தெரிந்த மலர்ச்சியுடன், நீண்ட நெற்றிகள் எப்போதும் யோசனையுடன் சுருங்கி விரிய, கூர்மையான நாசியுடன் ஆண்களுக்கே உரித்தான அழகான மீசையும், அதற்கு கீழே குறும்பாக நெளிந்த புன்னகையில் மலர்ந்த உதடுகளுடன், ஆறடி உயரத்தில் மாயக்கண்ணனின் தோற்றத்தில் காட்சியளித்தான் அபிலாஷ்!!

    சில வருடங்களாக வெளிநாட்டில் வாழ்ந்து வந்த வாழ்க்கைக்கு சான்றாக, உடைகளையும், நடைகளையும் மாற்றியமைத்து, மாலை நேர பார்ட்டிக்கு தயாராகினான். உதடுகளில் உச்சரிக்கும் ஆங்கில வார்த்தைகள் பெரும்பாலும், ஐ லைக் யூ பேபி! யூ ஆர் ஸோ கியூட், ஜஸ்ட் ஒரு வாக் போயிட்டு வரலாமே... என்று கேட்பதாக மட்டுமே இருக்கும்.

    வசதிகள் அதிகப்படியாகி விட்டால் கம்பீரம் தானாக தோன்றி விடுகிறதா? இல்லை, வசதிகள் குறைவான வாழ்க்கையை எதிர்கொள்பவர் அவர்களை போல மிளிர முடியாதா என்றால், அவரவர் எண்ணங்கள் போலவே வாழ்க்கை அமையவும், அமைக்கவும் முடிகிறது எனலாம்!!

    தாய் தந்தையருக்கு ஒற்றை மகனாக பிறந்து, தங்கையின் பாச மழையில் நனைந்து, கவலை என்றால் என்ன என்று தெரியாமலேயே வளர்ந்து, சிறு வயதிலேயே தான் நினைத்ததை நடத்தி விடும் வைராக்கியம் நிரம்ப பெற்றவனாக காணப்படுபவன் அபிலாஷ்

    அவனது எண்ணங்கள் யாவும் ஈடேறுமா பார்க்கலாம்!!

    நேரம் ஆறு மணி கடந்தது.

    சமையல் பணி நிறைவு பெற்றதும், அதைப் பரிமாறுவதற்குரிய நபர்கள் தயாராகி வந்தனர்.

    பிறந்தநாள் விழாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நெருங்கிய நட்புகள் ஒவ்வொருவராக வரத் துவங்கினர். அவனது உதடுகள் புன்னகையுடன் விரிந்து பின் சுருங்கி அவர்களை அன்புடன் வரவேற்றது. விழியசைவில் பணியாட்களை ஏவினான். அருகில் நின்றிருந்த கபிலனிடம் ஏதோ முணுமுணுத்தான்.

    சரியாக ஏழு மணிக்கு பங்களாவின் உட்பகுதியில் அமையப்பட்ட பெரிய அளவிலான ஹாலில் அனைவரும் கூடி நின்றனர். மேஜையின் மீது பெரிய வடிவிலான அழகான 'பிறந்தநாள் கேக்' வீற்றிருந்தது. அதன் ஓரமாக இருந்த மெழுகுவர்த்திகள், தன்னை உயிர்ப்பிக்கும் நாழிகைக்காக ஆவலுடன் காத்திருந்தன.

    சற்று நேரத்தில் மெழுகுவர்த்திக்கு உயிர் வந்தது போல் ஒவ்வொன்றாக மிளிர துவங்கியது. அனைவரும் பிறந்த நாள் வாழ்த்துப்பாடலை ஒரே போன்ற தாள லயத்துடன் பாடிக்கொண்டிருக்க, மலர்ந்த புன்னகையுடன் தலையசைத்து ஏற்றான் அபிலாஷ்.

    பர்த்டே பேபி! சீக்கிரமா அந்த கேக்கை கட் பண்ணி கொடுடா!! பசி உயிர் போகுது அவனை அவசரப்படுத்தினான் சாரதி.

    ஏது பசிக்குதா? அடேய்! உனக்குப் பசிச்சா தயராக இருக்கும் ஃப்ரைட் ரைஸை சாப்பிடுறதை விட்டு, மொத்த கேக்கையும் நீயே ஆட்டைய போடலாம்னு பார்க்கறியா? ஓடிப் போடா அங்கிட்டு நண்பனை துரத்தினான் கபிலன்.

    சரி, சரி! நேரமாகுது. கேக்கை கட் பண்ணு

    மெழுவர்த்திகளை அணைக்க முயலவும், மின்சாரம் தடை பட்டது. யாரோ வேண்டும் என்று நிறுத்தி விட்டதாக எண்ணி நகைப்புடன் அறை முழுவதும் சிரிப்பொலி நிரம்பி வழிந்தது. நேரம் கடந்தும் மின்சாரம் வருவது போன்று தெரியவில்லை. நிஜமாகவே சென்று விட்டது என்ற எண்ணத்தில் சலிப்பு மேலிட்டது.

    ம்ப்ச்... என்னடா இது, இந்த நேரம் பார்த்து கரண்ட் கட் ஆகிட்டது. ம்கும் ... கரண்ட் பில்லை மட்டும் உயர்த்தி, சரியான நேரத்துல கட்டலைனா, கனெக்சனை கட் பண்ணி, ஃபைன் போட தெரியுது. ஒழுங்கா கரண்ட் வர வைக்கிற வழியை மட்டும் பார்க்கறது கிடையாது ஒருவன் கடுப்புடன் கூறினான்.

    ஆட்சிகள் மாறினாலும், நாடும், நாட்டு மக்களின் நிலையும் என்னைக்கும் மாறாது. மாறவும் இன்றைய ஆட்சியாளர்கள் அனுமதிப்பதில்லை. பிறகு, எப்படி மாறி மாறி உறுதிமொழிகளை வழங்கி ஏமாற்ற முடியும்? மற்றொருவன் சந்தடி சாக்கில் அரசியல் பேசினான்.

    மெழுகை அணைக்க மனம் வரவில்லை. கைப்பேசிகளின் உயிர்ப்பில் அறை முழுவதும் வெளிச்ச திட்டுக்கள் பரவி விழிகளை கூச செய்தன. அவர்களது நிழல்கள் சுவரில் மாயத்தோற்றத்தை உருவாக்க முயன்று தோற்று ஒடுங்கியது. வெளியே கேட்ட டைகரின் உறுமலும், இருள் படர்ந்த பங்களாவின் தோற்றமும் அடிவயிற்றை ஜில்லிட செய்தன.

    சாரதி! அந்த இன்வெர்ட்டரை ஆன் பண்ண உனக்கு இத்தனை நேரமா? கடிந்தான் அபிலாஷ்.

    அதுக்குத்தான் போயிட்டு இருக்கேன். இதோ முடிஞ்சிட்டது அவனது பதிலை ஏற்கும் மனநிலையில், இல்லாதவன் போல் காணப்பட்டான் அபிலாஷ். அவன் அணிந்திருந்த விலை உயர்ந்த ஆடைகள் மேனியெங்கும் சூட்டை பரப்பி, வியர்வை துளிகளை வெளியிட்டது. வெறுப்புடன் ஜன்னல் கதவுகளை பார்வையிட்டான். அது வழியாக வீசி வரும் தென்றலுக்கு மனம் ஏங்கியது.

    இன்வெர்ட்டர் வொர்க் ஆகல அபி சாரதியின் குரலில் தடுமாற்றம் நிலவியது.

    டேய்! நீ ஃபர்ஸ்ட் கேக்கை கட் பண்ணு. இங்கே இருந்து வெளியேறி முன்பக்கமோ இல்லை பின்னாடியோ போகலாம். இருட்டுல ஒரே இடத்தில் குழுமி நிற்க முடியல. ரொம்ப வெக்கையா இருக்கு

    நண்பனின் கூற்றை ஆமோதித்தான் அபிலாஷ். மறுபடியும் கேக்கை வெட்டுவதற்காக கத்தியை கையில் எடுத்தான். கையில் ஏதோ பிசுபிசுத்தது. ஒருவேளை கேக்கின் மேற்பரப்பில் காணப்பட்ட 'கிரீம்' ஒட்டி விட்டது போலும் என்ற எண்ணத்தில், கட் செய்ய முயன்றான். அந்த நேரம் பங்களாவிற்கு சற்று தொலைவில் காணப்பட்ட மரத்தில் இருந்து கோட்டான் அபசகுனமாக அலறியது.

    கேக்கின் அருகில் பெரிய வடிவிலான மெழுவர்த்தியை எரியச் செய்தான். ஆங்காங்கு ஒளிச்சிதறல்கள் உருவாகியது. அசைவ உணவுகளின் வாசத்தில் அதை நோக்கி வந்த பறவை ஒன்று, பின்புறமாக திறந்திருந்த ஜன்னல் வழியாக உள் நுழைந்து, அங்கு நின்ற நபர்களைக் கண்டதும், வாயில் இருந்த மாமிசத்தை தவற விட்டு வேகமாக பறந்து ஓடியது. மெழுகின் மீது விழுந்த மாமிச துண்டால், அடுத்த கணமே கேக் முழுவதும் பற்றி எரிய துவங்கியது.

    'ஆ'வென்ற அலறலும், 'வீல்' என்ற சப்தங்களும் நிமிடத்திற்கு நிமிடம் அச்சத்தை அதிகப்படுத்தியது. பிறந்தநாள் வீடு அசந்தர்ப்பங்களில் சிக்கி, அமைதியையும் அச்சத்தையும் தத்தெடுத்தது.

    ஒரு சிலர் கைப்பேசியின் டார்ச் துணையுடன் வெளியேற முயன்று, அபிலாஷின் கடுகடுப்பான பார்வைக்கு கட்டுப்பட்டு நின்றார்கள். மீத நபர்கள் அவனைக் கண்டுகொள்ளாமல் வெளியேறி சென்று விட்டனர்.

    எரிந்து கொண்டிருந்த கேக்கில் இருந்து கெட்ட நெடி வீசியது. அனைவரும் நாசியை தேய்த்தனர். கைக்குட்டையால் அவசரமாக மூடினர். இருந்தும் அறை முழுவதும் பிணம் எரியும் போது வெளிப்படுகின்ற வாடை, அவர்கள் மதிய நேரம் தின்றிருந்த உணவை வயிற்றிலிருந்து மேலே கொண்டு வருவதை போல குமட்டியது. கைப்பேசிகள் அனைத்தும் செயலிழந்து போயின.

    'திக்திக்' நிமிடங்கள் விடாமல் தொடர்ந்தது. திடீரென்று சாம் ஊளையிட துவங்கியது. சங்கிலியில் இருந்து வெளியேற முடியாமல் துடித்தது. 'படபட'வென்று ஜன்னல் கதவுகள் வேகமாக அடித்துக் கொண்டன. தூரத்து மரத்தில் அமர்ந்திருந்த பறவைகள் 'சடசட'வென இறக்கைகளால் ஓசைகளை எழுப்பி, மேலும் அவர்களை நடுங்க செய்தன.

    மெதுமெதுவாக வந்து கொண்டிருந்த பால் நிலாவின் வெளிச்சம், இருளை துரத்தியடிக்கும் முயற்சியில் ஈடுபட்டது. மீத நபர்களும் அவசரமாக பங்களாவை விட்டு வெளியேறினர்.

    சடாரென்று மின்சாரம் வந்தது.

    செய்து வைக்கப்பட்டிருந்த உணவுகள் அனைத்தும் உண்ண ஆளற்று அப்படியே இருந்தன. நடந்த எதையும் ஜீரணிக்க முடியாமல் கோபத்தால் கொதித்து நின்றவன் முன்பு, வெண்ணிற உடை அணிந்து, கூந்தலை விரித்து விட்டு, இரு கரங்களிலும் நீளமான நகத்துடன், நீலமும், கருப்பும் கலந்த நிறத்தில் அவள் தெரிந்தாள்.

    விழிகள் இரண்டும் அச்சத்தால் விரிந்தன. ஜன்னலுக்கு அப்பால் தெரிந்த உருவம், அவனை நோக்கி காற்றில் மிதந்து வந்தது. இதயத்துடிப்பு எகிறியது. கை கால்களில் பலமற்று இரு கரம் கொண்டு முகத்தை மூடினான். சற்று நேரத்திற்குப்

    Enjoying the preview?
    Page 1 of 1