Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Theerkka Sumangali
Theerkka Sumangali
Theerkka Sumangali
Ebook351 pages2 hours

Theerkka Sumangali

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தகப்பனை இழந்து, தாய் தங்கைகளுடன் வாழ்ந்து வருகின்ற மருத்துவரான நாயகன் இளங்கோவன், தனது உயிர் நண்பனின் கோரிக்கைக்கு இணங்க, அவன் அப்பா புதியதாக அமைத்திருக்கும் மருத்துவமனைக்கு பணிபுரிய சம்மதித்து நெல்லைக்கு வருகிறான். இளைய தங்கையின் மீதான நண்பனின் நேசத்தை உணர்ந்து, அவளை அவனுக்கே திருமணம் செய்து கொடுக்கவும் சம்மதிக்கிறான். அங்கு, மார்பு வலியால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற வந்திருக்கும் நோயாளியின் மகளான தனது காதலியை, எதிர்பாராத விதமாகச் சந்திக்க, அவர்களின் பிரிவிற்கான காரணத்தை அறியும் முன்பே திருமணமும் நடைபெறுகிறது.

இந்நிலையில், அவனது இரண்டாவது தங்கையால் குடும்பத்தில் பிரச்சனைகள் உருவாகின்றன. அவள் அண்ணனின் நண்பனை விரும்புவதாகக் கூற, இளைய தங்கை அவனுக்கே அவளை மணமுடித்து வைப்பதற்குச் சொல்ல, நண்பனுக்கு கொடுத்த வாக்கை மீற முடியாமல் அவன் பரிதவிக்க, தாயாரின் வார்த்தைகளால் வீட்டில் பூகம்பம் வெடிக்க, தங்கை எதனால் அப்படியொரு முடிவிற்கு வந்தாள் என்று அறிய முயற்சிப்பவன், அதற்கான விடையைத் தேடி வெளிநாட்டிற்குச் சென்று, எதிரிகளிடமிருந்து தப்பிச் செல்லும்போது, விபத்தில் சிக்கி எதிர்பாராத விதமாக மரணத்தையும் தழுவுகிறான்.

அவனது இரண்டாவது தங்கையின் வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனைகள், வீட்டில் உள்ள அனைவரையும் அவள் எதிரியாகப் பாவிப்பவதற்கான காரணம், வெளிநாட்டிற்குச் சென்ற இடத்தில் நடக்கின்ற மர்மங்கள், கல்லூரி காலத்தில் நடந்த சம்பவங்கள், கைக்குழந்தையுடன் கணவனின் குடும்பத்தில் ஏற்படுகின்ற பிரச்சனைகளை அவள் எதிர்கொள்ளும் விதம், தீர்க்க சுமங்கலி பெயர் காரணம், ... இன்னும் பல்வேறு கேள்விகளுக்கான பதில்களைத் தெரிந்து கொள்ள "தீர்க்க சுமங்கலி" நாவலை வாசியுங்கள்.

Languageதமிழ்
Release dateMar 9, 2024
ISBN6580162110818
Theerkka Sumangali

Read more from K. Anantha Jothi

Related to Theerkka Sumangali

Related ebooks

Reviews for Theerkka Sumangali

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Theerkka Sumangali - K. Anantha Jothi

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    தீர்க்க சுமங்கலி

    (இளங்கோவனின் காதல் பாவை!)

    Theerkka Sumangali

    Author:

    K. ஆனந்த ஜோதி

    K. Anantha Jothi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/k-anantha-jothi

    பொருளடக்கம்

    அத்தியாயம்: 1

    அத்தியாயம்: 2

    அத்தியாயம்: 3

    அத்தியாயம்: 4

    அத்தியாயம்: 5

    அத்தியாயம்: 6

    அத்தியாயம்: 7

    அத்தியாயம்: 8

    அத்தியாயம்: 9

    அத்தியாயம்: 10

    அத்தியாயம்: 11

    அத்தியாயம்: 12

    அத்தியாயம்: 13

    அத்தியாயம்: 14

    அத்தியாயம்: 15

    அத்தியாயம்: 16

    அத்தியாயம்: 17

    அத்தியாயம்: 18

    அத்தியாயம்: 19

    அத்தியாயம்: 20

    அத்தியாயம்: 21

    அத்தியாயம்: 22

    அத்தியாயம்: 23

    அத்தியாயம்: 24

    அத்தியாயம்: 25

    அத்தியாயம்: 26

    அத்தியாயம்: 27

    அத்தியாயம்: 28

    அத்தியாயம்: 1

    மதுரை மாநகரில் சித்திரை திருவிழா களை கட்டியது. கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கப் போகும் நிகழ்ச்சியைக் கண்டுகளிக்க, பெருந்திரளாக மக்கள் கூட்டம் அலைமோதியது.

    இரண்டு வருடமாக வெளிநாட்டிலிருந்து மருத்துவ மேற்படிப்பை முடித்து விட்டு, சொந்தவூரான திருச்சிராப்பள்ளிக்கு வந்து சில மாதங்களே ஆகியிருந்த இளங்கோவன், தங்கை விசாலாட்சியின் அழைப்பிற்கிணங்க, அவளது புகுந்தகம் அமைந்துள்ள மதுரை மாநகருக்கு வருகை தந்திருந்தான். அவனுடன் தாய் முத்துலட்சுமி, தங்கைகள் கவிப்ரீயா, சுமித்ரா இருவரும் வந்து இருக்கிறார்கள்.

    கூட்டம் அலைகடலுக்குப் போட்டியாகத் திரண்டு காணப்பட்டது. கள்ளழகர் ஆற்றில் இறங்கிய நிகழ்ச்சியைப் பார்த்து விட்டு, அதைப் பற்றிப் பேசிக்கொண்டே அங்கிருந்து அகன்றனர்.

    இளங்கோவின் இளைய தங்கை சுமித்ரா துடுதுடுப்பாகப் பேசும் குணமுடையவள். தன் பாட்டியிடம் அந்தக் கோவிலைப் பற்றிய வரலாறு, மன்னர் ஆட்சி முறையைக் கேட்டுத் தெரிந்து கொண்டு, தன்னை ஒரு இளவரசியைப் போல் பாவித்து நடந்து வந்தாள்.

    அதைக் கண்டு அனைவரும் சிரிக்க, அண்ணனைப் பார்த்துத் தன் வேல்விழியால் அழைப்பு விடுத்தாள்.

    அவன், உத்தரவு இளவரசியாரே! என்று பவ்வியமான குரலில் கூறியதும், பார்த்து நின்றவர்கள் சத்தமாகச் சிரித்தனர்.

    சிரித்தவர்களை நோக்கிக் கடுமையான பார்வையை வீசினாள் சுமித்ரா.

    மதிப்பிற்குரிய படைத்தளபதி அவர்களே! சபை நாகரீகம் கருதாமல் சிரித்து என் மனதைப் புண்படுத்திய இவர்களை, இப்போதே தூக்கிச் சென்று வைகை ஆற்றில் முக்கி வாருங்கள்! என்று உத்தரவிட்டாள்.

    இளங்கோ, தங்கைகள் இருவரையும் பிடித்து இழுக்க, அவர்களோ அண்ணனை அணைத்து, சிரிப்பால் அப்பகுதியை சிதறடித்தார்கள்.

    இங்கு என்ன நடக்கிறது தளபதியாரே! என் கூற்றை ஆமோதித்து நடக்கா விட்டால்... டால்...

    திடீரென்று அவளது பேச்சு முற்றுப் பெறாமல் நின்று விட்டது. என்னவென்று தெரிந்து கொள்ள அவள் முகத்தைப் பார்த்தனர் அனைவரும். அவர்களைப் பொருட்படுத்தாமல், வாவ்! வாட் எ ப்யூட்டி!! என்று ஆர்வமிகுதியில் சத்தமிட்டாள் சுமித்ரா.

    என்ன சுமி, அர்ஜூனரை பார்த்துட்டியா?

    அவள் இளங்கோவை பார்த்துவிட்டுச் சிரித்தாள்.இல்லை, இல்லை என் படைத்தளபதியாருக்குப் பொருத்தமான நாச்சியாரை பார்த்தேன்... பார்த்துவிட்டேன்! என்னே ஓர் அழகு!! என்று வியந்தாள்.

    அவள் என்ன கூறுகிறாள் என்று புரியாமல் மற்றவர்கள் பார்த்திருக்க, அவளோ தன் கண் முன்னே தெரிகின்ற பெண்ணைக் காண்பதற்கு ஓடினாள்.

    சுமி, ஓடாதே! கூட்டத்துல எங்கேயாவது மிஸ்ஸாகிடுவே அவளை எச்சரித்துப் பின் தொடர்ந்தான் இளங்கோவன்.

    எவ்வளவு தேடியும் முடியவில்லை. அவள் கூட்டத்தில் ஒரு பக்கம் மாட்டிக்கொள்ள, இளங்கோ மறுபக்கத்தில் மாட்டிக் கொண்டான்.

    பார்த்துடா, கவனமா நின்னுக்கோ. வேற எங்கேயும் போயிடாதே! அவனிடம் சிறு பதற்றம் தொற்றியது. ஆண்கள் ஆங்காங்கு நின்றிருக்க, தங்கைக்கு எதுவும் ஆகிவிடக் கூடாதென்ற அச்சம், அவனை நிலைகொள்ளாமல் செய்தது. அப்போது, முன்னே சென்று கொண்டிருந்தவர்கள் இடித்ததில், இளங்கோவின் மீது மோதி விழுந்தாள் அப்பெண். அவனது கரங்கள் ஆதரவாக அவளைத் தாங்கியது.

    கவனம், அடிபட்டுட போகுது என்று மெல்லிய குரலில் சொன்னான். அடுத்த நிமிடம் அவனை நிமிர்ந்து பார்க்காமல் மாயமானை போல மறைந்திருந்தாள் அந்தப் பெண்! ஆனால், அவனது இளைய தங்கை சுமித்ரா, அவர்கள் இருவரையும் ஒன்றாகச் சேர்ந்து பார்த்த சந்தோசத்தில் இருந்தாள்.

    ‘அண்ணனும், அந்தப் பெண்ணும் சேர்ந்து நிற்கிறப்போ எத்தனைப் பொருத்தமா இருக்கு? அண்ணனுக்காகவே படைச்சு அனுப்பிய மாதிரி இருக்காங்க’ என்று மனதிற்குள் சிலாகித்தாள். அவர்களை நோக்கி வர முடியாமல் கூட்டத்தில் மாட்டிக் கொண்டாள். அந்தப் பெண் வேகமாக இடைபுகுந்து, மறைந்து செல்வது தெரிந்தது. கை காட்டினாள். சத்தமாக அழைத்தாள். அண்ணனிடம் அடையாளம் காட்ட முயற்சித்தாள். அவள் நினைத்த எதுவும் நடக்கவில்லை. கைப்பேசியில் புகைப்படம் எடுக்கலாம் என்றால், அதுவும் அக்காவின் கைப்பையில் உள்ளது.

    கோவில்ல கூட்டம் அதிகமா இருப்பதால், கீழே விழுந்து தொலைஞ்சிடும். மறுபடியும் தேடி எடுக்க முடியாது. அக்காவோட பேக்லே வச்சிடு முத்துலட்சுமியின் அறிவுரையின் பேரில் அக்காவிடம் கொடுத்தது தவறாகி விட்டது.

    ‘இந்த அம்மா பேச்சைக் கேட்டாலே இப்படிதான்’ வாய்க்குள் வசைபாடிக்கொண்டே நின்றவளை, திடீரென யாரோ பற்றி இழுத்ததும், திகைப்புடன் விழித்தாள் சுமித்ரா. அடுத்த நிமிடம் வாவ்!! வேங்கை நாட்டு இளவரசர் ஆதவன் வந்துவிட்டார் என்று சத்தமாகக் கூறினாள்.

    ஆதவன் வாய் விட்டுச் சிரித்தான்.

    என்ன பேபி, ரொம்ப குதூகலமா இருக்கே போலிருக்கு?

    ஆமாம், வேங்கையின் வேந்தே! தக்க தருணத்தில் வந்து எம்மைக் காத்து அருள் புரிந்தீர்!! அவள் மலர்ந்த முகத்துடன் கூறியதும், அவன் புரியாமல் பார்த்தான். அவனது கைப்பேசியை வாங்கி, அந்தப் பெண் எங்கேயேனும் தெரிகிறாளா? என்று தேடி விழிகளை அலைய விட்டாள்.

    ஆதவன், நான் உன் பக்கத்துல நிற்கிறப்போ யாரை சைட்டடிக்கிறே? என்று குறும்பாக வினவினான்.

    அவன் வயிற்றில் ஓங்கி இடித்தாள் சுமித்ரா.

    ஸ்...ப்பா ராட்சஷி! அக்காவைவிட இவள்தான் கலக்கலா இருக்கான்னு கடலைப் போட வந்தா, வர்றப்போ சாப்பிட்டதை வாய் வழியே வர வச்சிட்டாளே. உவ்வா... என்று போலியாக நடித்தான்.

    அவள் சிரிப்பினூடு அங்கும் இங்குமாகத் தேடிப் பார்த்து விட்டு, அவளைக் கண்டுபிடிக்க முடியாமல் சோர்வுற்றாள். அவளைத் தன்னுடன் சேர்த்துப் பிடித்திருந்த ஆதவன், தன் நண்பனைப் பார்த்துக் கை காட்டினான். தங்கை பாதுகாப்பான இடத்தில் இருப்பதை ஊர்ஜிதப்படுத்திய இளங்கோவின் மனம் நிம்மதியடைந்தது.

    ஆமாம்! அப்போ இருந்து யாரைத் தேடுறே?

    ம்ம்... ஒரு அழகான பெண்ணை

    அடடா இதென்ன ஆச்சர்யம்!! ஒரு அழகிய பொற்சிலை இன்னொரு தங்க விக்கிரகத்தைத் தேடுகிறதே? ரசனையுடன் கூறினான் ஆதவன்.

    அவள் கலகலவென நகைத்தாள்.

    சிரிப்பால் என்னைச் சிதறடிக்காம காரணத்தைச் சொல்லு பேபி!

    ஒரு பெண்ணைப் பார்த்தேன். அவங்க ரொம்ப ரொம்ப அழகா இருந்தாங்க. அவங்களைப் பற்றி மேலும் தெரிஞ்சிக்கும் ஆர்வத்தில் பின் தொடர்ந்து வந்து, கூட்டத்துல மாட்டிக்கிட்டேன்... அவங்களையும் காணும்! உதட்டைப் பிதுக்கினாள் சுமித்ரா.

    அவள் முகத்தில் விழுந்த மயிரிழையை விலக்கி விட்டான். பால்நிலா போல் பளிச்சென்று தெரிந்த வதனத்தைப் புன்னகையுடன் ஏறிட்டான்.

    ஏன் சுமி, அவங்களை உனக்கு ஏற்கனவே தெரியுமா? இதுக்கு முன் எங்கேயாவது பார்த்திருக்கறியா?

    அவள் உதட்டைப் பிதுக்கினாள்.

    பிறகும், எதுக்கு இத்தனை முக வாட்டம்?

    அவங்களை நேர்ல பார்த்தா நீங்களும் அப்படித்தான் ஆகுவீங்க. இளங்கோ அண்ணாவுக்குக் கல்யாணம் பண்ண வீட்டுல பெண் பார்க்கும் பேச்சு நடக்குது. இவங்களைப் பார்த்ததும் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்ததால் தேடினேன் என்று கூறினாள்.

    அவளை லேசாக அணைத்துத் தேற்றினான்.

    ஆமாம், உன் படிப்பு எப்படி போகுது?

    இப்போ பீ.ஈ மூணாவது வருஷம் போகுது. இன்னும் ஒரு வருஷ படிப்பு இருக்கு.

    உன் அக்கா?

    அந்த வாயாடிச் சரியா பேசாது. பெரிய பணக்கார வீட்டுப் பெண் மாதிரி பந்தா காட்டிக்கிட்டு இருக்கும். யார் பேச்சையும் கேட்காது. அம்மா பாவம்! அவளை அடக்க முடியாம திணறுறாங்க. அண்ணா வந்த பிறகுதான் கொஞ்சம் அமைதியா தெரிகிறா. அப்புறம்...

    சொல்லு!

    அவளுக்குத் தெரிஞ்ச யாரையோ அண்ணனுக்குக் கட்டி வைக்கப் பார்க்கறா. நம்ம அண்ணாவுக்கு மனைவியா வர்றவங்க அவருக்குப் பிடிச்சவங்களா இருக்கணும்னு நான் ஆசைப்படுறேன் அண்ணனின் மீதான அவளது அளப்பரியாத பாசம், ஆதவனை நெகிழ வைத்தது.

    கவலைப்படாதே பேபி! நான் இருக்கேன் அதுக்கு. என் நண்பனோட மனம் எனக்குத் தெரியும்

    அண்ணா, ‘யாரையுமே கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். செய்ய வேண்டிய கடமைகள் தலைமேல் நிறைய இருக்கு. அதுல எதையுமே இன்னும் செய்யத் தொடங்கல. அதுக்கு முன் கல்யாணமா?’ன்னு கேட்டாங்க. கவி திகைச்சிட்டா. அம்மா எவ்வளவு எடுத்துச் சொல்லியும் அண்ணன் மனசை மாத்த முடியல. நான் என்ன பண்றதுன்னு தெரியாம இருக்கேன் என்று கண் கலங்க கூறினாள்.

    அவளது பேச்சுக்களில் பல விசயங்கள் தெரிய வந்தன. நண்பனின் மனதும் புரிந்தது.

    அவள் கண்களைத் துடைத்து விட்டான்.நான் இருக்கேன் கவலைப்படாதே! எதுவா இருந்தாலும் உடனுக்குடன் தகவல் தரவும் மறக்காதே என்றான்.

    அவளது கைப்பேசி எண்ணைப் பெற்றுக் கொண்டு, மீண்டும் தொடர்பு கொள்வதாகக் கூறினான்.எதையும் நினைச்சுப் படிப்பைக் கெடுத்துக்காதே. எந்த நேரம் உதவி தேவைப்பட்டாலும் தயங்காம கேளு!

    அவள் சம்மதமாகத் தலையசைத்ததும், அவன் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தான். அவர்களின் பேச்சு, சிரிப்பு, தொடுகையை பார்த்து வெறுப்புடன் முகத்தைத் திருப்பினாள் கவிப்ரீயா!

    சற்று நேரத்தில் அனைவரும் ஒரு இடத்தில் சந்தித்தனர். கவிப்ரீயாவை பார்த்துச் சிரித்தான் ஆதவன். அவள் பார்க்காதது போல் முகத்தைத் திருப்பிக் கொள்ள, அவனும் இளங்கோவிடம் பேசுவது போல் பார்வையை மாற்றிக் கொண்டான்.

    தந்தை புதியதாக அமைத்திருக்கும் மருத்துவமனையில் வந்து, தன்னுடன் பணிபுரிய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தான். இளங்கோ பதில் கூறத் தயங்கியதும், நீ என்ன சம்பளம் எதிர்பார்த்தாலும் நான் தருவேன். என் நண்பன் என்பதால் எனக்குக் கட்டுப்படும் அவசியமில்ல. உனக்கு எல்லாவிதமான சுதந்திரமும் உண்டு. உன் விருப்பம்போல் நடக்கலாம் என்றான்.

    அவன் அமைதியாக இருப்பதைக் கண்டு, இளங்கோ, உனக்கும் எனக்கும் இடையில் உருவான நட்பு, ஏழு வருஷங்களா தொடருது. அது ஆயுளுக்கும் தொடரணும்னு நான் ஆசைப்படறேன். நீ மறுப்பது என்னைக் காயப்படுத்துது. வேறு ஒருத்தருக்கு கீழே பணிபுரிய எப்படியும் போவாய் இல்லயா? அதை உன் நண்பனிடம் செய்வதில் என்ன தவறு? நாம வெளிநாட்டுல படிச்சிட்டு வந்த வித்தையை, நம் தமிழக மக்களுக்கு ஒண்ணா சேர்ந்து செய்வோம். ‘பணம் மட்டுமே வாழ்க்கையல்ல; குணம்தான் எப்போதும் நிலைச்சு நிற்கும்’னு சொல்லுவியே? என் நண்பன் உன்னோட அடக்கம், அமைதி, நற்குணத்தில் கவரப்பெற்று நானும் நிறைய மாறிட்டேன். அது உனக்கும் தெரியும்! என்னை இதே கட்டுக்கோப்புடன் கடைசிவரை வழி நடத்த எனக்கு உதவ மாட்டியா? என்று வருத்தமாகக் கேட்டான்.

    அந்த வார்த்தைகள் இளங்கோவின் மனதைப் பிசைந்தன.

    கல்லூரி நாட்கள் கண்களில் நிழலாடின. மறக்க முடியாத நாட்கள் வந்து போயின. கண்ணீருடன் நண்பனை அணைத்தான் இளங்கோ. அதற்கு மேலும் மறுப்பது நாகரீகமாக இருக்காது என்று சம்மதம் தெரிவித்தான். புன்னகையுடன் நண்பனை அணைத்து விடுத்தான் ஆதவன். அனைவரிடமும் விடைபெற்றுக் கிளம்பினான்.

    இரண்டு நாட்கள் தங்கையின் வீட்டிலிருந்து விட்டுக் கிளம்பும்போது, அவனது திருமணப் பேச்சை ஆரம்பித்தார் முத்துலட்சுமி. இளங்கோ, நான் இப்பதான் வேலையில் ஜாயின் பண்ணப் போறேன். செஞ்சு முடிக்க வேண்டிய கடமைகள் நிறைய காத்திருக்கு. கல்யாணம் எல்லாம் இப்போதைக்கு முடியாது. கவிக்கு நல்ல வரன் வந்தா பாருங்க. சீக்கிரம் முடிச்சிடலாம் அத்துடன் பேச்சைக் கத்தரித்து வெளியேறி விட்டான். அண்ணன் முன் வாய் திறக்காமல் அடக்கமாக இருந்து கொண்டாள் கவிப்ரீயா.

    திருச்சிக்குச் சென்றதும், தன் உடைமைகளுடன் நெல்லைக்குப் புறப்பட்டான் இளங்கோ.

    அங்குச் சென்று மூன்று மாதம் கடந்திருந்தது. நண்பனுடன் சேர்ந்து பணிபுரிவது இருவருக்கும் பல வழிகளில் பயன்படும் விதமாக அமைந்தது. ஒருவருக்கொருவர் உதவி புரிவது, சிகிக்சை முறைகளைப் பற்றிக் கலந்து ஆலோசிப்பது, சோர்வுற்று இருக்கும் நேரங்களில் அதிலிருந்து புத்துணர்வு பெறுவது, கலாட்டா பேச்சுக்களை சிதற விட்டுப் புன்னகையுடன் இருப்பது, ஏழை எளியவர்களுக்கு உதவி புரிவது என்று மகிழ்ச்சியுடன் நாட்களைக் கடத்தி வந்தான்.

    ஆதவனிடம் திருமண விசயமாகப் பேசினான் இளங்கோ. அவனோ இளங்கோவிற்கு முடிந்த பிறகு மணந்து கொள்வதாகக் கூறி, அவன் வாயை அடைத்து விட்டான்.

    அன்றைய தினம் ஒருவித பரபரப்புடன் காணப்பட்டான் ஆதவன். விசயம் இளங்கோவிற்கும் தெரிய வந்தது. நண்பனிடம் நோயாளியைப் பற்றிய தகவல்கள், அறுவைச் சிகிச்சை செய்வதற்குரிய நேரம், அவருக்குக் கொடுக்க வேண்டிய மருந்துகள்... என ஒவ்வொன்றாகக் கேட்டுக்கொண்டு, மருத்துவ செவிலியரை அழைத்து, அடுத்து செய்ய வேண்டியதைக் கூறி அனுப்பி வைத்தான்.

    அறுவைச் சிகிச்சை நடக்கும் அறையில் அவர்கள் கூறிய அனைத்தும் தயாராக இருந்தது. இருவரும் அங்கு நோக்கிச் சென்றார்கள். அப்போது இளங்கோவின் கால்கள் தன்னிச்சையாக நின்றன. கண்கள் அழுது கொண்டிருந்த பெண்ணின் மீது நிலைத்தன. பேசிக்கொண்டே சென்ற ஆதவன், அருகில் வந்து கொண்டிருந்த இளங்கோவை காணாமல் திடுக்கிட்டுத் திரும்பினான்.

    எதற்காக இப்படி மலைப்புடன் நிற்கிறான் என்று எண்ணிக் கொண்டே, அவன் பார்வை சென்ற திசையை நோக்கித் தானும் விழிகளைத் திருப்பினான். ஆச்சர்ய அதிர்ச்சி அவனைத் தாக்கியது. ‘ஸ்வாதி! மை காட்!! ஸ்வாதி தானா இது??’ என்று எண்ணிய ஆதவன், அவள் தானா என்று அறிந்து விடும் முனைப்பில் வேகமாகச் சென்றான். இளங்கோ தானும் நகர்ந்தான்; அவளை நோக்கி நடந்தான்!

    ஸ்வாதிகா மார்பு வலியால் துடித்து, மயக்கத்தில் விழுந்திருந்த அப்பா, செளந்தரப்பாண்டியனை மருத்துவமனையில் அனுமதித்து, அவருக்கு எதுவும் ஆகிவிடக் கூடாதென்ற அச்சத்தில் இருந்தாள். அருகில் அவள் அம்மா அபிராமி அழுது அழுது சோர்ந்து போயிருந்தார்.

    மருத்துவமனையின் காரிடாரில் நடந்து வந்த இளங்கோவின் கண்கள் தாய், மகளை அளவிட்டன. இருவரும் முகத்தில் நீலநிற முகக் கவசத்தை அணிந்திருந்தார்கள். முன்னை விடச் சற்று வனப்புடன் காணப்பட்டாள் ஸ்வாதிகா.

    அறுவைச் சிகிச்சைக்கு மருத்துவர்கள் வருவதைக் கண்டு, அபிராமியின் கண்கள் உடைப்பெடுத்த குளம்போல் உடைந்து சிதறின. அவர்களை நோக்கி வேகமாகச் சென்றவரைப் பற்றி நிறுத்தினாள் ஸ்வாதிகா.கொஞ்சம் நிதானமா இருங்கம்மா. அவங்க கிட்டே நான் பேசுறேன் என்று தாயாரை அமைதிபடுத்தினாள்.

    இருவரும் அவளையே பார்த்தார்கள்.

    ஆதவனை பார்த்துக் கைக்குவித்து கண்ணீர் மல்க நின்றாள்.

    எனக்கு இருப்பது எங்க அப்பாவும் அம்மாவும் மட்டும்தான். ப்ளீஸ் டாக்டர்... எங்க அப்பாவுக்கு எதுவும் ஆகிடாம நீங்கதான் காப்பாத்தி கொடுக்கணும் தழுதழுத்த குரலில் கூறினாள் ஸ்வாதிகா.

    தலையசைத்தான் ஆதவன். அவளையே பார்த்து நின்றான் இளங்கோ.

    ஆதவன், கவலைப்படாம இருங்க. எங்களால் முடிஞ்ச வரை முயற்சிப்போம். ஆண்டவன் உங்களை ஒரு போதும் கைவிட மாட்டார் அவளிடம் ஆறுதலாகக் கூறி விட்டு, நண்பனையும் அழைத்துக்கொண்டு உள்ளே சென்றான்.

    இளங்கோவின் முகம் முழுவதும் குப்பென வியர்வை துளிகளால் நனைந்து இருந்தது. முகத்தில் அணிந்திருந்த பச்சை நிற முகக் கவசத்தை அகற்றி விட்டு, கைக்குட்டையால் ஒற்றி எடுத்தான்.

    அவன் மனதைப் புரிந்து கொண்டு, இளங்கோ, அங்கே நிற்பது யாருன்னு உனக்குத் தெரியுதா? என்றான் ஆதவன். பதில் கூறாமல் கண்ணாடி தடுப்பிற்கு வெளியே தெரிந்த உருவத்தை, பார்த்துக்கொண்டு இருந்தான் இளங்கோ!

    அத்தியாயம்: 2

    ஆதவனின் கேள்விக்குப் பதில் கூறாமல் ஸ்வாதிகாவை பார்த்து நின்றான் இளங்கோ. அவன் மனதைப் புரிந்து கொண்டு தோளில் கை வைத்து அழுத்தினான் ஆதவன். சிரமப்பட்டு அவளிடமிருந்து பார்வையைத் திருப்பி ‘என்ன?’ என்பது போலப் பார்த்தான்.

    இளங்கோ, நம்ம ரெண்டு பேரையும் சேர்த்துப் பார்த்ததும், அவளுக்கு யாருன்னு தெரிஞ்சிடுச்சின்னு நினைக்கிறேன்.

    இளங்கோ தலையசைத்தான்.

    ஸ்வாதிக்கு இன்னும் கல்யாணம் ஆகல. ஒருவேளை உனக்காகக் காத்திருக்காளோன்னு தோணுது... என்று இழுத்தான்.

    அவன் மறுத்தான்.அப்படியிருக்க வாய்ப்பில்ல

    ஏன்?

    பிடிக்காதவனுக்காக யாராவது காத்திருப்பாங்களா?

    அவசரமாக இடையிட்டான் ஆதவன்.இருக்காது. நீ ஏன் அப்படி நினைக்கிறே? ஸ்வாதி அப்படிப்பட்ட பெண் இல்ல

    அப்போ, தவறு என் மீதுன்னு சொல்ல வர்றியா?

    நான் அப்படி சொல்லல

    ஆதவா, பழையது பற்றிப் பேசி இனிமேல் ஆகப்போவது இல்ல. நாம் மருத்துவர்! ஸ்வாதி நாம பார்க்கப் போகிற நோயாளியின் உறவினர். இதைத்தவிர வேறு பேச்சு அநாவசியம்!! என்று முடித்து விட்டான் இளங்கோ.

    அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்தான் ஆதவன்.

    நீ என்ன சொல்றே? நான் நம்ப மாட்டேன். பிறகும், எதுக்கு வீட்டுல பார்த்த பெண்ணைக் கல்யாணம் செய்ய மறுத்தே? எதனால், உன் கல்யாண விசயமா பேசக் கூடாதுன்னு கட்டளையிடுறே?

    ‘உனக்கு எப்படி தெரியும்?’ என்பது போலப் பார்த்தான் இளங்கோ. சமாளிப்பாக ‘நீதான் சொன்னே!’ என்று பேச்சை மாற்றினான் ஆதவன்.

    வயசுப் பொண்ணுங்களை வீட்டுல வச்சிட்டு, என்னால எப்படி கல்யாணம் செஞ்சிக்க முடியும்? குடும்பத்தலைவனா அவங்களுக்கு ஒரு குறையும் இல்லாம பார்த்துக்கறது, என் கடமை இல்லயா? அதை விட்டுச் சுயநலமா இருக்க முடியாது என்றான்.

    சாதூர்யமான பேச்சு. ஆனால், எதையோ இழந்து விட்டது போல் அவனிடம் தெரிந்த பரிதவிப்பு, உயிர்ப்பற்ற வார்த்தைகள், சொல்லமுடியாத உணர்வின் தத்தளிப்புகள், விழிகள் செல்லும் பாதைகள், திருமணத்திற்கு தெரிவித்த மறுப்புகள், இவை யாவும் அவன் மனதை நன்றாகவே எடுத்துரைத்தன.

    இப்படி சொல்லித் தப்பிக்க முடியாது. எனக்குச் சரியான பதில் வேணும்

    நாம எதுக்கு வந்திருக்கோம்னு உனக்குத் தெரியாதா? இந்த நேரத்துல என்ன பேசுறே? வா போகலாம்! அவனை அடக்கி அழைத்துச் சென்றான் இளங்கோ.

    சௌந்தரபாண்டியன் மயக்க மருந்தின் வீரியத்தில் ஆழ்ந்த நித்திரையில் இருந்தார். அவரைப் பார்த்ததும் முதன் முறையாகச் சந்தித்த நாள் கண்ணில் வந்து போனது. மனதை வேறு திசைக்கு அலைய விடாமல் அறுவைச் சிகிச்சைக்குத் தயாரானார்கள்.

    அனைத்தும் முடிவுற்றதும் பேசிக்கொண்டே வெளியே வந்தார்கள். அவர்களின் வருகையைக் கண்டு அருகில் விரைந்தாள் ஸ்வாதிகா.

    ஆதவன் தானாக முன் வந்து, ஆப்பரேஷன் சக்ஸஸ்! இனிமேல், உங்க அப்பாவைப் பற்றிக் கவலைப்படும் அவசியமில்ல. உங்க அப்பாவுக்கு மயக்கம் தெளிஞ்சதும், உங்க அம்மாவையும் கூப்பிட்டுப் போயி தாராளமா பார்க்கலாம் என்று கூறியதும், அவளது கண்கள் நீரால் நிரம்பி வழிந்தன. உதடுகள் துடிக்க, நன்றி பெருக்குடன் கைக்குவித்தாள்.

    எங்க கடமையை தான் நாங்க செஞ்சிருக்கோம். மத்தபடி எதுவுமில்ல அவன் அடக்கமாகப் பதிலுரைத்து புன்னகைத்தான்.

    இளங்கோவின் விழிகள் அவளையே பார்த்தன. ஆனால், ஸ்வாதிகா எள்ளளவும் தன் பார்வையை மாற்றிக் கொள்ளவில்லை. இருவரும் அங்கிருந்து அகன்று விட்டார்கள்.

    அவள் தனது தாய் அபிராமியை காண ஓடினாள். விசயத்தை அறிந்தவர் மகளை அணைத்து, குல தெய்வத்திற்கு நன்றி தெரிவித்தார். கணவரைப் பார்க்கும் ஆவலுடன், அவசரமாக எழுந்து செல்ல முயன்றார். ஸ்வாதிகா, ‘இப்ப உள்ளே போயி பார்க்க முடியாது. அப்பா மயக்கத்துல இருக்காங்க’ என்று கூறியதும், அவர் தலையை மட்டுமே அசைத்தார்.

    தகப்பனாருக்கு மார்பு வலி வந்த நேரத்திலிருந்து, அழுது அழுது, உணவையும் மறுத்து, கண்ணீர் வடிந்த முகத்துடன் தாயார் இருந்த தோற்றம் அவளைப் பெரிதும் வருத்தியது. கணவன் மனைவி உறவிற்கு இடையே உள்ள பாசம், பந்தம், அரவணைப்பு, அக்கறை முன்பை விட அதிகமாகப் புரிந்தது. ஈருடல் ஓருயிராக வாழ்வது என்பது பேச்சுக்கு அல்ல, அது மனதார உணர்ந்து கூறுவது என்பதை, நேரில் பார்த்துத் தெரிந்து கொண்டாள்.

    மாலை நேரம் செளந்தரபாண்டியன் கண் திறந்து விட்டதை அறிந்து, அவரைப் பார்க்க விரைந்தான் இளங்கோ. ஆதவன், அவனது அப்பாவைப் பார்க்கச் சென்று விட்டதால் அவனே பரிசோதித்தான். அவரிடம் அக்கறையுடன் பேசினான்.

    தன் எதிரில் நிற்பது யாரெனத் தெரியா விட்டாலும், போக இருந்த உயிரை மீட்டுக் கொடுத்தவனுக்கு அவர் நன்றியுரைத்தார்.

    புன்னகையுடன் அவரது உடல் நிலையைப் பற்றி விசாரித்து விட்டு, ஸ்வாதிகாவையும் அவள் அம்மாவையும் அழைத்து வர, மருத்துவ செவிலியரை அனுப்பி விட்டான் இளங்கோ. அடுத்த கணம், அழுகையினூடு வந்த இருவரையும் கண்டு, அமைதியாக ஒதுங்கி நின்றான்.

    செளந்தரபாண்டியன் அவர்களைப் பார்த்து வேதனை கலந்த சிரிப்பை உதிர்த்தார். இருவரும் பாச மிகுதியில் அவரது கைகளைப் பற்றிக்கொண்டு கண்ணீர் விட்டார்கள்.

    அவருக்குக் கொடுக்க வேண்டிய மருந்துகள், உணவு முறைகள், அறைக்கு மாற்றுவது குறித்து மருத்துவ செவிலியரிடம் பேசிக்கொண்டிருந்த இளங்கோ, ஸ்வாதிகாவின் விழிகளில் தெரிந்த அலைப்புறுதலை கண்டு கொண்டான். அவள் தன்னைப் பார்க்கக் கூடாது; பேசக் கூடாது என்று பிடிவாதமாக இருப்பது தெரிந்தது.

    இரவு நேரம் மருத்துவமனையிலேயே தங்கினான். ஏதேதோ புத்தகங்களைப் புரட்டினான். மருத்துவ செவிலியரை அழைத்து அவரைப் பற்றி விசாரித்தான். தானும் சென்று அவரைப் பார்த்துவிட்டு வந்தான். உறக்கம் வரும் வரை வராந்தாவில் நடை பயின்றான்.

    காலை நேரம் அவரைப் பரிசோதித்துப் புன்னகையுடன் பேசியபடி இருந்தான். அப்போது, ஸ்வாதிகா அருகிலிருந்த ஆலயத்திற்குச்

    Enjoying the preview?
    Page 1 of 1