Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Anaikka... Anaikka...
Anaikka... Anaikka...
Anaikka... Anaikka...
Ebook328 pages2 hours

Anaikka... Anaikka...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பிரசவத்திற்காக தாய் வீடு சென்ற மனைவி ஜெயாவின் பிரிவால் தவிக்கும் மதனின் வாழ்க்கையில், சதி திட்டதுடன் வந்த ஸ்வீட்டி யார்? அவளது திட்டம் பலித்ததா? தன் கணவனுக்காக ஜெயாவின் போராட்டங்கள் எவை? இறுதியில் மதன் அணைக்க விரும்பியது ஜெயாவா? ஸ்வீட்டியா...

Languageதமிழ்
Release dateJun 25, 2022
ISBN6580152008268
Anaikka... Anaikka...

Read more from Punithan

Related authors

Related to Anaikka... Anaikka...

Related ebooks

Reviews for Anaikka... Anaikka...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Anaikka... Anaikka... - Punithan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    அணைக்க... அணைக்க...

    Anaikka... Anaikka...

    Author:

    புனிதன்

    Punithan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/punithan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    டியர் ஸ்வீட்டி!

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    டியர் ஸ்வீட்டி!

    இந்த நாவலின் கதாநாயகியை எனக்கு அறிமுகம் பண்ணி வைத்தவர் எனது மதிப்புக்குரிய நண்பர் அமரர் என். அமிர்தலிங்கம் அவர்கள், அவருக்கு நன்றி.

    அவள் ஒரு கால் கேர்ள். எத்தனையோ ஆண்களுக்குத் துணைபோகும் ஒரு பெண், கதாநாயகி ஆக முடியுமா? அவள் அனுதாபத்துக்கும் மதிப்புக்கும் உரிய ஒரு பாத்திரமாய் மாற முடியுமா? முடியும். முடித்துக்காட்ட வேண்டும் என்பதை ஒரு சவாலாகவே வரித்துக் கொண்டேன்.

    என் எழுத்தை உருவாக்கும் எனது ஆசான் எஸ்.ஏ.பி. அவர்களும், எனது இனிய நண்பர் ரா.கி. ரங்கராஜன் அவர்களும், என்னைத் தட்டிக் கொடுத்து உற்சாகமூட்டி வழிகாட்டித் துணை நின்றார்கள், இதோ, உங்கள் கையில் ‘அணைக்க அணைக்க’ முழு வடிவம் பெற்று உங்களை மகிழ்விக்கக் காத்திருக்கிறது.

    ஸ்வீட்டி! என் டியர் ஸ்வீட்டி! அவள் எத்தனை நெஞ்சங்களில் பித்தேற்றி நிறைந்து நின்றாள்! எழுதிக் கொண்டிருந்த போதே எனக்கு வந்த கடிதங்கள், நேருக்கு நேர் சொன்ன நண்பர்களின் பாராட்டுக்கள் நிரூபித்தன.

    ஒருமுறை எனக்கு வந்த உருக்கமான ஒரு தொலைபேசி வேண்டுகோளை என்னால் மறக்க முடியாது. கதை, முடிவை நெருங்கிக் கொண்டிருந்த சமயம். அப்பொழுதுதான் அந்தப் பெண் குரல் கேட்டது தொலையில் சார், ஸ்வீட்டிக்காக நான், வாதாடுவதாய் நினைத்து விடாதீர்கள். ஆனால், ஸ்வீட்டியின் நிலையை என்னால் புரிந்துகொள்ள முடியும். எனக்குத் தெரியும் சார். எல்லோரையும் போல் அவள் வாழக் கூடாதவள் என்று நீங்களும் நினைத்து விடாதீர்கள். தயவுசெய்து அவளை வாழ விடுங்கள், அவளுக்கு வாழ்வு கொடுங்கள்.

    அந்த நெகிழ்ந்த குரலுக்குரியவர் யார் என்று எனக்குத் தெரியாது. அவர் கருத்துக்குத்தான் மேலே வடிவம் கொடுத்திருக்கிறேனே தவிர, அந்த நீண்ட வேண்டுகோளின் நேரான வார்த்தைகளை என்னால் தர முடியவில்லை. ஆனால், அந்த வேண்டுகோளில் நான் நெக்குருகிப் போய்விட்டேன்.

    என்ன செய்ய? அன்றும் இன்றும் என்றுமே ஒரு மனைவியின் கடமையில் மாறுதல் இருக்க முடியும் என்று என் மனச்சாட்சி ஏற்றுக்கொள்ளவில்லை. தன் கணவன் தனக்கு மட்டுமே சொந்தமாய் இருக்க வேண்டும் என்ற சுயநலத்தை மட்டும் தியாகம் செய்ய, எந்த பாசமுள்ள மனைவியாலும் இயலாதே! தன் கணவனைப் பிடித்து வைத்துக் கொள்ளும் முயற்சியில், அவள் எதையும் மோதி மிதித்தெறியத் துணிந்து விடுவாளே!

    நான் என் மனச்சாட்சிக்கு விரோதமில்லாமல் கதையை முடித்துவிட்டேன். ஸ்வீட்டி இறுதிவரை ஸ்வீட்டியாகவே இருந்துவிட்டாள். ஜெயா பாசமுள்ள மனைவியாக நடந்து கொண்டுவிட்டாள். நடுவில் சிக்கித் தவிக்கும் மதனின் மனநிலை உங்களோடு சேர்ந்து நானும் அவனுக்காக அனுதாபப்படுவதைத் தவிர வேறு வழியில்லை, மன்னியுங்கள்.

    எனது தொடர்கதையைத் தேர்ந்தெடுத்து தலைப்புக் கொடுத்து, விளம்பரப்படுத்தி, எழுத இடமளித்து வாசக அன்பர்களின் பாராட்டுதலைப் பெற வாய்ப்புக் கொடுத்த குமுதத்துக்கு, என்றென்றும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளேன்.

    என்னைப் பத்திரிகையாளனாக்கிய அமரர் தமிழ்வாணன் நிறுவனம் என் நாவலுக்குப் புத்தக வடிவம் தருகிறது.

    சென்னை -10

    என்றுமுங்கள்,

    புனிதன்.

    1

    ஜெயா!

    எந்தப் பொல்லாத பார்வையும் பட்டிராத தனித் தீங்கனியாய், பாலாய், தெவிட்டாத தேனாய், காத்துக் கொண்டிருக்கிறாள் மதன் கண்ணெதிரே.

    ஆசையைப் பச்சையாய் வெளிக்காட்டிவிட்டால் ஆண்மை போனதாகிவிடுமோ என்ற குறுகுறுப்பு மதனுக்கு. தானாக முன்வந்து பேசினால் பெண்மைக்கு இழுக்காகி விடுமோ என்ற தயக்கம் ஜெயாவுக்கு.

    ஜாதி மல்லிகைப் பூப்பந்தின் மணம் அறையெங்கும் கம்மென்று மணம் நிரப்ப, குளுமையான சுடரொளி பட்டுத்தெறிக்கும் பேஸரியின் வேலைப்பாட்டைக் கருவிழியின் பார்வை தாழ்த்திருக்க, மாடல் பொம்மையைப் போல் நின்று கொண்டே இருக்கிறாள் அவள்.

    அந்த மருட்சியைக் கண்டு மதனுக்குச் சிரிப்பு பொத்துக்கொண்டு வருகிறது. அதை அடக்கிக்கொண்டு மெள்ளச் செருமுகிறான்.

    அசைவில்லாத அறையில் எரியும் சுடரொளி தென்றல் விட்டாலும் நெளியுமே அதைப் போல, ஜெயாவின் உடலில் ஓர் அசைவு தெரிகிறது.

    மதன் தன்னை இழக்க அந்த அசைவே போதுமானதாய் இருக்கிறது. தாவிச்சென்று அவளை அப்படியே அள்ளியெடுத்துக் கொண்டுவந்து கட்டிலில் போட்டுக் கொள்கிறான். ஜெயா அந்தப் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள முயல்பவளைப் போல், அவனுடைய திரண்ட தோள்களில் கை வைக்கிறாள். அவள் பார்வை அவன் பார்வையை நேருக்கு நேர் சந்திக்கிறது. அவளுடைய மென்மையான உதடுகள், அவனுடைய மூச்சுக் காற்றில் பூவிதழாய்த் துடிக்கின்றன.

    என்ன பயமா உனக்கு? அவன் புருவத்தை உயர்த்திக் கேட்கிறான்.

    அவளுக்குச் சிரிப்பு வருகிறது. குழந்தைபோல் அவன் பரந்த நெஞ்சில் முகம் புதைத்துக் கொள்கிறாள். ஹூம்! நீங்கள் ரொம்ப முரடு... அவனுடைய சுருண்ட கேசம் அவளது மென் விரல்களின் கொஞ்சலில் அளைந்து சுகம் காண்கிறது. ஜெயா... ஜெயா... ஜெயா..

    ‘கிணிங், கிணிங்!’ தெருவிலே ஒரு சைக்கிள் ரிக்ஷாவின் சத்தம்.

    மதனின் கனவுகள் கலைந்தன.

    சடக்கென்று படுக்கையில் எழுந்து உட்கார்ந்தான். ஜெயா அவன் அருகிலேயும் இல்லை. ஊரிலேயும் இல்லை.

    அந்த முதலிரவு நிகழ்ச்சிகள் மட்டும் கருக்கழியாமல் அவனை வதைத்துக் கொண்டிருந்தன.

    ஜெயாவை ஊருக்கு அனுப்பி இரண்டு மாதம் ஆகிவிட்டது. கல்யாணமான பிறகு முதல் பிரிவு. அவனுடைய ஏக்கம், அவனுக்கல்லவா தெரியும்!

    மதன்! பெண்டாட்டியையும் கூடவே வைத்துக் கொண்டு பாங்க் வேலைகளைப் பார்க்க வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று யூனியனில் ஒரு தீர்மானம் போட்டிருக்கிறார்கள் தெரியுமோ உனக்கு என்று அவனுடைய நண்பன் கண்ணன் கேட்டபோது, அப்பாவித்தனமாக நிஜமாகவா?" என்று கேட்டு, நண்பர்களின் கேலிக்கு இரையானதுகூட உண்டு.

    சுவரில் மாட்டியிருந்த புகைப்படத்தைப் பார்த்தான், திருமணத்தின் போது எடுக்கப்பட்ட குரூப் படம் அது. ஜெயாவுக்கு அந்தண்டைப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த அவனுடைய மாமியாரைப் பார்த்ததும், அவனுக்குப் பற்றிக்கொண்டு வந்தது. தம்பி, ஜெயாவுக்கு இது ஏழாம் மாதம். இந்த மாதத்தை விட்டால் ஒன்பதில்தான் கூட்டிப்போக வேண்டும். தலைச்சன், பாருங்கள். எப்படியிருக்குமோ என்னவோ! நான் இப்போதே ஜெயாவைக் கூட்டிப் போகலாமென்றிருக்கிறேன் என்று சொல்லி, அடாவடியாக ஜெயாவை அழைத்துப் போனவள், இந்தப் பாழாய்ப் போன மாமியார்தான்.

    கட்டிலை விட்டிறங்கிப் பீரோவைத் திறந்தான், ஜெயா எடுத்துச் சென்றது போக, நாலைந்து புடவைகள் மிச்சம் இருந்தன. அந்த நேவி ப்ளூ டெரிவாயில் புடவையை அவளுக்குத் தெரியாமல் அவனாக வாங்கிக்கொண்டு வந்தபோது எத்தனை பூரித்துப் போனாள் அவள். அன்றைக்கே அதைக் கட்டிக்கொண்டு அவள் வெளியே புறப்பட்டது டிரைவின் ஓட்டலில் ஒருத்தரும் கவனிக்காத வேளையில் கால்களில் சேட்டை செய்து கொண்டு, இந்தத் தட்டிலிருந்து அந்தத் தட்டுக்கும், அந்தத் தட்டிலிருந்து இந்தத் தட்டுக்குமாய்ப் போட்டி போட்டுக்கொண்டு, பாதம் அல்வாவை அவர்கள் சாப்பிட்டது. மியூஸிக் அகாடமியில் ஒரு ஹாஸ்ய நாடகத்தைப் பார்த்துவிட்டு இருவரும் விழுந்து விழுந்து சிரித்தது. அந்தச் சாக்கில் அவளுடைய முதுகுக்குப் பின்னால் அவன் குறும்பு செய்தது. அவள் செல்லமாகச் சிணுங்கியது. நேரே வீடு திரும்பாமல், கடற்கரை மணலில் தனிமையில் அவள் மடியில் தலை சாய்த்திருந்தது. எத்தனை எத்தனை இன்பக் கொள்ளை! சே இரண்டு மாதமாய் ஒன்றும் இல்லை. ஒன்றுமே இல்லை வாழ்க்கையே வெறிச்சிட்டு விட்டதே?

    அந்தப் புடவையை எடுத்து நெஞ்சோடு அணைத்துக் கொண்டு, கனவின்பத்தில் அவன் மிதந்து கொண்டிருந்த போது,

    பஸ்ஸரின் ஓசை கேட்டது:

    வேண்டா வெறுப்பாகச் சென்று கதவைத் திறந்தான்.

    பாங்கில் அவனுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து எஸ்.பி. செக்ஷனைக் கவனித்துக்கொள்ளும் கண்ணன்தான் நின்று கொண்டிருந்தான்.

    என்னடா இது? என்று அவன் வாயைப் பொத்திக் கொண்டு சிரித்ததும்தான், மதன் தன்னையே பார்த்துக் கொண்டான். சரியான கிறுக்கு! பீரோவிலிருந்து எடுத்த புடவையைத் தன் தோள் மேலேயே போட்டுக் கொண்டு கதவைத் திறந்துவிட்டோமென்று புரிந்தது. முகத்தில் அசடு வழிய மெள்ள அதை எடுத்து மடித்தபடி, வா உள்ளே என்று அழைத்துப் போனான்.

    கண்ணன் இன்னும் கால் கட்டு விழாதவன். சினிமாத் தயாரிப்பாளர்களுக்கு ஃபைனான்ஸ் செய்யும் பிரமுகர் ஒருவரின் பிள்ளை, அவனுக்கு என்ன குறைச்சல். நாடக சங்கங்கள், சபாக்கள், கிளப்புகள், இப்படிப் பல தொடர்பு உண்டு.

    கண்ணன் ஒரு சிகரெட்டைப் பற்றவைத்துக் கொண்டு பித்தம் தெளிய ஒரு மருந்து தான் இருக்கிறது என்று ஆயிரம் தரம் சொல்லிவிட்டேன். நீ கேட்க மாட்டேன் என்கிறாய் என்றான்.

    என்ன பித்தம்?

    இப்போது தோளிலே புடவையைப் போட்டுக்கொண்டு போஸ் கொடுத்தாயே அந்தப் பித்தம்!

    சும்மா இரப்பா! நீ ஒன்று மதன் துணி பீரோவில் ஜெயாவின் புடவையை வைத்துவிட்டு சாத்தினான்.

    கர்ஃசீப் ஒன்று கீழே விழுந்திருக்கிறது, பார்! தரையைக் காட்டினான் கண்ணன்.

    அதைக் கையில் எடுத்தான் மதன். ஆனால் பீரோவில் வைக்கவில்லை.

    கைக்குட்டை கலர் நன்றாய் இருக்கிறதே! உன் ஒய்ஃபுடையதா? என்று கேட்டான் கண்ணன்.

    அந்த நீலவண்ணக் கைக்குட்டையின் முனையில் w என்ற ஆங்கில எழுத்துப் பொறித்திருந்தது.

    மதன் சொன்னான், இந்த டே கர்ச்சீப் செட்டை வாங்குவதற்காக, ஜெயா டவுனில் எத்தனை கடைகள் ஏறி இறங்கினாள் தெரியுமா?

    டே கர்ச்சீஃப் செட்டா?

    ஆமாம். ஃபார் லேடீஸ் ஒன்லி, ஏழு நிறத்தில் ஏழு கைக்குட்டைகள் ஒரு நாளைக்கு ஒன்று. இது பார்த்தாயா? W என்று இருக்கிறதில்லையா? வென்னஸ்டே, புதன்கிழமையன்று உபயோகிக்க வேண்டும். இதேபோல் ஸண்டேக்கு ‘எஸ்’, மண்டேக்கு ‘எம்’ என்று போட்டிருக்கும். அவசரத்தில் அதை மட்டும் விட்டுவிட்டுப் போய்விட்டாள். புதன்கிழமைகளில், பாவம் இது இல்லாமல் முழிப்பாள்.

    அங்கே உன் மனைவி தவிக்கிறாளோ இல்லையோ, இங்கே நீ தவிக்கிறதைப் பார்க்கத்தான் கண்ராவியாக இருக்கிறது! என்றான் கண்ணன்.

    மதன், பேச்சை மாற்ற நினைத்தான். ஆல்ரைட்! ஏது ரொம்ப தூரம்? என்ன சமாசாரம்?

    மதன், நானும் உன்னை ஒரு வாரமாய்க் கவனித்துக் கொண்டுதான் வருகிறேன். இதோ பார், நீ இன்னும் கொஞ்ச நாளைக்கு இப்படியே இருந்தால், அப்புறம் உன்னை மென்ட்டல் ஆஸ்பத்திரியில்தான் கொண்டு சேர்க்கும்படி இருக்கும்.

    சிரித்துச் சமாளித்துப் பார்த்தான் மதன். ஏன் எனக்கென்ன? எப்படியிருக்கிறேன்?

    கண்ணாடியைப் பார் தெரியும், இப்படியா ஏங்கி ஏங்கிச் சாவாய்; எனக்குத் தெரிந்து எவ்வளவோ பேர். மனைவி போன பிறகுதான் குஷியில் துள்ளுகிறார்கள். சுதந்திர வாழ்க்கை ஜாலி லைஃப்! ஒருத்திக்குப் பதில் ஒன்பது பேர்!

    சீ சீ! என்ன பேச்சப்பா பேசுகிறாய்? என்றான் மதன்.

    அட தெரியுமப்பா! பெரிய மகான் வந்துவிட்டாயாக்கும்! குறைந்தபட்சம் ஒரு சேஞ்ச் வேண்டாமா மனசுக்கு? எப்பப் பார்த்தாலும் இப்படி ஊருக்குப் போய்விட்டவளைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தால்...? ஒன்றும் வேண்டாம், மனசுக்குப் பிடித்த ஒருத்தரோடு அட்லீஸ்ட் ஒரு பிச்சருக்குப் போகக் கூடாது?

    கண்ணா! உனக்குத் தெரியாததல்ல. நான் கல்யாணத்துக்கப்புறம் ஒய்ஃப் இல்லாமல் எங்கேயாவது போனதுண்டா? அவளில்லாமே என்னாலே சினிமா பார்க்க முடியுமா? அப்படியே போனாலும் அங்கே பார்க்கிற ஒவ்வொரு ஜோடியும் என் ஏக்கத்தை அதிகமாக்குமே தவிர குறைக்குமா?

    ஆ! அப்படி வா வழிக்கு என்று பாய்த்தெழுந்த கண்ணன், அவன் கையைக் குலுக்கினான். மதன், ஒப்புக் கொண்டாயா கடைசியில்? ஜோடி போட்டுக்கொண்டு சினிமாவுக்கோ ஓட்டலுக்கோ போக முடியாமலிருக்கிறது அதுதான் உன் ஏக்கம், இல்லையா?

    மதன் சிரித்தான். அப்படியே வைத்துக் கொள். அதற்கென்ன பண்ண முடியும்.

    நான் ஏற்பாடு பண்றேன் கண்ணன் ஒரு விஸிட்டிங் கார்டைத் தன் பர்சிலிருந்து எடுத்தான். பின்னால் ஒரு போன் நம்பரைக் குறித்துக் கொடுத்தான். இத்தா, இந்த நம்பருக்கு போன் பண்ணு. ஒரு ஸ்வீட் வாய்ஸ் கேட்கும்: இஸ் ஸ்கைலார்க்தேர்? என்று கேள் கிடைக்கும். அப்புறம் உனக்கு எந்த இடத்துக்குத் துணை தேவையோ அங்கே வரச் சொல், வந்து சேருவாள் ஒரு மான் குட்டி போதுமில்லையா?"

    மதன் முகம் ரத்தச் சிவப்பாயிற்று. நண்பன் கொடுத்த விசிட்டிங் கார்டை வீசி எறிந்தான் சிறிது கோபத்துடன்.

    கண்ணன் சிரித்தான். அழகான பூவை, அழகான கட்டிடத்தை, சினிமாவை, சர்க்கஸை, ரசித்துப் பார்க்கிற மாதிரி அழகான பெண்ணையும் பார்த்து ரசிக்கிறதில் தப்பில்லை பிரதர். அவளைத் திருட்டுத்தனமாய்ப் பார்க்கிறவன் இருக்கிறானே, அவன்தான் - ஆபத்தானவன்!

    நீ பிரம்மச்சாரி எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ளலாம். நான் அப்படி இல்லை. என் ஜெயாவுக்கு என்னால் துரோகம் செய்ய முடியாது. மன்னித்துவிடு.

    இதிலே துரோகம் எங்கேடா வந்தது. ஜஸ்ட் ஃபிரண்ட்ஸ் பையா, நாடு எவ்வளவோ முன்னேறிவிட்டது. இன்னும் குதிரைவண்டிக் காலத்துப் பேச்சே பேசிக் கொண்டிருக்காதே அவமானம். ஒரு பத்து வருஷத்துக்கு முன்னாலே நைட் கிளப் என்று சொன்னால், இங்கேயெல்லாம் அப்படி வரமுடியுமா என்பார்கள். இப்போ எவ்வளவோ வந்துவிட்டது என்னமோ அலட்டிக் கொள்கிறாயே நீ. உன் ஒய்ஃபை நினைத்துப் பாவம் ரொம்பத் தடுமாறிக் கொண்டிருக்கிறாயே என்பதற்காகச் சொன்னேன். நீ உன் பாங்க் பாலன்ஸைப் பற்றிக் கவலைப்படுகிறாய் போலிருக்கிறது! ஓகே! வரட்டுமா?

    மூச்சு விடாமல் குரலை ஏற்றி இறக்கிப் பேசிவிட்டுக் கடைசிப் பகுதியில் ஏளனத்தையும் நையாண்டியையும் குழைத்து மெழுகிட்டுப் போய்விட்டான் கண்ணன்.

    தன்னனப் பற்றி யார் எது சொன்னாலும் மதன் பொறுத்துக் கொள்வான். ஆனால் செலவுக்கு அஞ்சுகிற கஞ்சன் என்று யாரேனும் அவனைச் சொன்னால் பொறுக்காது.

    குறுக்கும் நெடுக்குமாக அறைக்குள்ளே உலாவினான் மதன், பிறகு அலுப்புடன் படுக்கையில் விழுந்தான்.

    விட்டத்து இரும்பு கர்டர் இடுக்கில் ஒரு குருவிக்கூடு தெரிந்தது.

    அந்தக் கூண்டில் ஆண்குருவி மட்டும் ஏக்கத்தோடு எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது. ஜன்னலோரமாய் ஒரு பெண் குருவி சிறகடித்துச் சாகசம் பண்ணிக் கொண்டிருந்தது. ஆண்குருவி இரண்டு முறை தலையைச் சாய்த்துப் பார்த்துவிட்டுப் பறந்து போயிற்று. ஜோடி சேர்த்து கொண்டு இரண்டும் வானவெளியில் உல்லாசமாய்ப் பறந்தன.

    மதன் புரண்டு படுத்தான். கீழே பார்வை சென்றது.

    மேசைக்கு அடியிலே அந்த விசிட்டிங் கார்டு கிடந்தது. சில நிமிடங்கள் அதையே பார்த்தபடி இருந்தான். பிறகு குனிந்து எடுத்தான். திருப்பித் திருப்பிப் பார்த்தான்.

    ‘ஸ்கைலார்க்’ என்ற பெயர். அதற்கு கீழே ‘ரூ’50 - என்ற குறிப்பு.

    அவன் மனம் படபடவென்று அடித்துக் கொண்டது. கண்ணன் சொன்ன மாதிரிக் கூப்பிட்டுப் பார்த்தால்... நிஜமாக இல்லை. சும்மா விளையாட்டுக்காக... என்னதான் நேருகிறது பார்க்கலாமே?

    டயலைச் சுற்றினான்.

    எஸ் என்றது இனிமையான குரல். அவன் படபடப்பு அதிகரித்தது.

    ஸ்கைலார்க்கோடுதான் பேசுகிறேனா? என்று ஆங்கிலத்தில் விசாரித்தான்.

    யெஸ்... ஸ்பீக்கிங், நான் உங்களுக்கு என்ன உதவி செய்ய வேண்டும்? குரல் தானா? இல்லை, இனிய வாத்திய இசை ஏதாவது மனிதக் குரலில் பேசுகிறதா?

    மதன் கடிகாரத்தைப் பார்த்தான். 6-15. குரோட்டன்ஸ் செடி முற்றி வருவதைப் போல் வெளியே இருட்டுப் படர்ந்து கொண்டு வந்தது. துணிவை வரவழைத்துக் கொண்டு, உங்களால் ஸஃபையருக்கு வர முடியுமா? ஏழு மணி ஷோ, பாக்ஸுக்குப் போகலாம்" என்றான்.

    வித் ப்ளஷர் ஒரு மென் சிரிப்பு. ஆனால் நான் எங்கே சந்திப்பது?

    நீங்கள் இருக்கும் இடம் சொன்னால், நானே அங்கு கார் எடுத்துக் கொண்டு வருகிறேன்.

    நோ... நோ. அவசரமாக மறுத்தது அந்தக் குரல். நீங்கள் எங்கே இருப்பீர்கள் என்று சொன்னால் நான் டாக்ஸியில் வந்து விடுகிறேன்.

    மதன் தயங்கினான். இங்கே வீட்டுக்கு வரச் சொல்லக் கூடாது. அத்தனை பேருக்கும் தெரிந்துவிடும்.

    நான் தியேட்டருக்கு வந்து விடுகிறேன் என்றான்.

    என்னை உங்களுக்கு, அடையாளம் தெரியுமா? என்று அவள் கேட்டாள்.

    இனிமேல்தானே தெரிந்துகொள்ள வேண்டும்?

    மறுபடியும் அதே மென் சிரிப்பு. ஒன்று செய்யுங்கள், நீங்கள் ஸஃபையருக்கு வந்து வீகம்ஸி அண்டர் கிரவுண்ட் ஷோருமில் சிவப்பு சோபாவில் உட்கார்ந்திருங்கள். நானே வந்து உங்களை மீட் பண்ணுகிறேன். ஓகே?

    ஓகே! என்று ரிஸீவரை வைத்தான் மதன். அவன் கைகள் மெல்ல நடுங்கிக் கொண்டிருந்தன. பயத்தாலா? பரவசத்தாலா?

    2

    சஃபையர் தியேட்டரின் படிகளில் இறங்கி அடித்தளக் கட்டிடத்துக்குச் சென்று கொண்டிருந்தான் மதன். தான் செய்துவிட்ட காரியம் சரிதானா? முன்பின் தெரியாத ஒரு மங்கையை இங்கே சந்திப்பதாக வாக்களித்தது - அதற்காக இங்கே வந்திருப்பது முறைதானா? மதன் குழம்பினான்,

    வீகம்ஸி ஷோரூமில் கண்ணைப் பறிக்கும்படி அடுக்கி - வைக்கப்பட்டிருந்தன, பல நகை ஸெட்டுகள், அவற்றைப் பார்க்கப் பார்க்க ஜெயாவின் நினைவுதான் அவனுக்கு மேலோங்கி நின்றது. மூன்று மாதங்களுக்கு முன் இங்கே வந்திருந்தான். அவர்களுடைய ஸ்பெஷல் நெக்லஸ் ஸெட் ஒன்றைக் கையிலெடுத்துப் பார்த்துக்கொண்டு நின்றாள் ஜெயா. அவள் முகத்தில் தெரிந்த ஆவலைக் கண்டதும், மதன் எங்கே நான் கொஞ்சம் பார்க்கிறேன், என்று அவள் கைகளிலிருந்த நெக்லஸை வாங்கிக்கொள்கிற மாதிரி, சட்டென்று அவள் கழுத்தில் அணிவித்து விட்டான். மூன்று பக்க ஷோ கண்ணாடியின் முன் அவளைக் கொண்டு போய் நிறுத்தி, எப்படி? என்றான்.

    என்னங்க இது? என்று ஜெயா வெட்கத்துடன் சிணுங்கும் போதே, கெட்டிக்கார சேல்ஸ்மேன் பில்லைக் கொண்டுவந்து நீட்டினார்.

    அச்சச்சோ! வாங்கியே விட்டீர்களா? யார் கேட்டது இது வேண்டுமென்று?

    Enjoying the preview?
    Page 1 of 1