Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Yaathreegan
Yaathreegan
Yaathreegan
Ebook238 pages1 hour

Yaathreegan

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மனிதனின் வாழ்க்கையில் தேடல் இன்றியமையாதது. பணமுள்ளவன் ஆரோக்கியத்தைத் தேடுகிறான். ஆரோக்கியமானவன் பதவியைத் தேடுகிறான். பதவியில் உள்ளவன் பணத்தைத் தேடுகிறான். இவை அனைத்தும் உள்ளவன் நிம்மதியைத் தேடுகிறான். யாத்ரீகன், தன் காதலைத் தொலைத்துவிட்டு தேடி அலையும் ஒரு யாத்ரீகனின் கதை. வழியில் அவன் கற்றுக் கொள்ளும் பாடங்கள், சந்திக்கும் மனிதர்கள், அவர்கள் இவனது வாழ்க்கையில் ஏற்படுத்தும் தாக்கங்கள் அவனது மனிதத்தைப் புனிதமாக்குகின்றன. வாருங்கள், யாத்ரீகனுடன் ஒரு யாத்திரை செல்வோம்.

Languageதமிழ்
Release dateNov 17, 2021
ISBN6580148007715
Yaathreegan

Read more from Kava Kamz

Related to Yaathreegan

Related ebooks

Reviews for Yaathreegan

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Yaathreegan - Kava Kamz

    https://www.pustaka.co.in

    யாத்ரீகன்

    Yaathreegan

    Author:

    கவா கம்ஸ்

    Kava Kamz

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kava-kamz

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    அத்தியாயம் 34

    அத்தியாயம் 35

    அத்தியாயம் 36

    அத்தியாயம் 37

    அத்தியாயம் 38

    அத்தியாயம் 39

    புனைவுக் கதைகள் மட்டுமே எழுத முடியும் என்று நம்பிக் கொண்டிருந்த என்னை, யாத்ரீகன் போன்றதொரு மனிதத்தின் கதையையும் எழுத வைத்ததற்கு இயக்குநர் 'ழகரம்' க்ரிஷ் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்!

    வாழ்த்துரை

    யாத்ரீகனாக...

    திருமதி கவா கம்ஸ் அவர்கள் திருப்பூரைச் சார்ந்தவர். அரசுப் பள்ளியில் படித்து, கணினிப் பொறியாளர் ஆனவர். வெளிமாநிலவாசி. இவரின் முதல் நாவல் 'டான் பிரவுன்' பாணியில் துப்பறியும் தேடல் மயமான யாத்திரைப் பற்றியது. திருப்பூர் சக்தி விருது பெற்றது. அது முழுத் திரைப்படமாகிவிட்டது.

    அந்த யாத்திரை இந்த இரண்டாம் நாவல் யாத்ரீகனிலும் தொடர்கிறது. சரியான தலைப்புதான். இந்த நாவல் ஒருவகையில் பெண்கள் மீதான பாலியல் வன்முறையை கோடிடுகிறது. சுமன் தன் காணாமல் போன மனைவி கனியைத் தேடிபோகிறான். அந்தத் தேடல் காடு, அனாதை இல்லம் என்று ஆரம்பித்து காஷ்மீர் வரை செல்கிறது. அது 370 பிரிவு நீக்கப்படாத காஷ்மீர். அங்கு கனி இல்லாமல் இருப்பதும், அவள் பெற்றக் குழந்தை நலமுடன் பெரியவளாகி நடமாடுவதும் தெரிகிறது. தந்தை மகள் இணைப்பு, சுபம். இயற்கையைப் பற்றிய பிரமிப்பு இருக்கிறது. உடல் பற்றிய பல அம்சங்கள் விரிவாய் உள்ளன. இன்றைய தலைமுறை பற்றிய ஆதங்கம் இருக்கிறது.

    இவர் இன்னும் தமிழ் இலக்கிய உலகிலும், பிரதேச யாத்ரியிலும் தொடர வேண்டிய அவசியம் இருக்கிறது. அதை யாத்திரையாகத் தொடர்வார். தொடர்ந்து யாத்ரீகனாக இருப்பார். வாழ்த்துகள்!

    சுப்ரபாரதிமணியன்

    அணிந்துரை

    யாத்ரீகன்அன்பிற்குமுண்டோ அடைக்குந்தாழ்

    ஒவ்வொருவரும் கண்டிப்பாகப் பயணம் செய்யக்கூடிய வாழ்க்கை வண்டி இது. கதையாசிரியர் நம் பயணத்தை தனக்கே உரிய தனித்துவத்தில் மிக அழகாக வடிவமைத்துள்ளார். மிக சுவாரஸ்யமான நிறுத்துங்களுடன், எதிர்பாராத வளைவுகளோடும், வித்தியாசமான பயணிகளுடனும் நாம் பயணம் செய்தாலும், அன்பு என்ற பயணச்சீட்டு அனைவரையும் ஒரே பாதையில் எடுத்துச்செல்வது மிக அருமை. தொழில்நுட்பம் நம் உணர்வுகளை நிர்ணயிக்கும் வல்லமையும், உறவு நிலைகளை மாற்றும் ஊடுருவலும் பெற்றுள்ள இந்த நூற்றாண்டில், சின்னச் சின்ன சந்தோஷங்களையும், நாம் மறந்த மனித உணர்வுகளையும் நினைவுப்படுத்தியதற்கு மனமார்ந்த நன்றிகள்!! அதி வேகத்தில் சுழலும் காலக்கடிகாரத்தை மனிதம் மற்றும் அன்பு என்ற இரு முற்களால் நிறுத்தி அழகாக சுழலும் காலக்கடிகாரமாய் மாற்றும் சக்தியை, இந்தப் பயணத்தை மேற்கொள்ளும் ஒவ்வொரு யாத்ரீகனும் உணர வைக்கும் கதையாசிரியருக்கு கைத்தட்டல்கள் நிச்சயம்!! அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு என்ற திருக்குறளின் உருவமாய் ஒவ்வொரு கதாப்பாத்திரமும் வலம் வந்திருப்பது கதையாசிரியருக்கு, அன்பின் மேல் இருக்கும் அளப்பெரிய நம்பிக்கையைத் தெளிவாகப் பிரதிபலிக்கிறது!! இந்நாவலை இளைஞர்களின் புதினம் என்று சொன்னால் அது மிகையாகாது!! அன்பைக் காதலிக்கும் ஒவ்வொருவரும் இந்த பயணத்தை மேற்கொள்ளுங்கள்!! அதுவே, கதையாசிரியரை இன்னும் நிறைய அறம் போற்றும் மகிழ்ச்சிதரும் படைப்புகளை உருவாக்க ஊக்கப்படுத்தும்!! பயணங்கள் தொடரட்டும்!! புதுவுலகம் பிறக்கட்டும்!! இன்னும் பல வெற்றிப்படைப்புகள் சமுதாயத்திற்குத் தந்திட என் இதயப்பூர்வமான வாழ்த்துகள்!!

    இளந்தமிழ்

    நன்றி

    இந்நாவலின் பிழைகளைத் திருத்தி, மெருகேற்றிய புதேரி தானப்பன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    தனது பல்வேறு பணிகளுக்கு நடுவே, எனக்காக நேரம் ஒதுக்கி இந்நாவலைப் படித்து வாழ்த்துரை வழங்கிய எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் அவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    எழுத்தாளர்களை ஊக்குவிப்பது வாசகர்களின் விமர்சனமே. அவ்வகையில் யாத்ரீகன் நாவலுக்கு குட்ரீட்ஸ்ஸில் தம்பி இளந்தமிழ் வழங்கிய விமர்சனத்தையே இந்நாவலுக்கு அணிந்துரையாக வைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். நன்றி இளந்தமிழ்.

    எனக்கு எப்பொழுதும் உறுதுணையாய் இருக்கும் எனது குடும்பத்தினருக்கும் என்னுடைய முதல் நாவல் 'ப்ராஜக்ட் ஃ' கிற்கு வரவேற்பு கொடுத்த வாசகர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    1

    அந்தச் சிவப்பு நிறம் பூசப்பட்ட வட்ட வடிவப் பாத்திரத்திற்குள் ஒருவித நறுமணத்துடன் கூடிய ஆவி, வெளியேற முடியாத தவிப்போடு அடைபட்டுக் கிடந்தது. அந்தப் பாலகன் கடிகாரத்தை ஒருமுறை உற்று நோக்கி விட்டு அவளைப் பார்த்துச் சைகை செய்தான். அவள் ஒரு சிறிய பதற்றத்துடன் உள்ளே சென்று அந்த ஆவியை விடுவித்தாள். அது மெல்ல, மேலே எழும்பிச் சிறிது சிறிதாகக் காற்றுடன் கலந்து அந்த அறையைச் சுற்றி வந்தது. ஆவிக்கடியில் தனது வெள்ளை முகத்தை மறைத்துக் கொண்டிருந்த இட்டலிகள் தற்போது வெளியுலகைக் காண குதூகலத்துடன் காத்துக்கிடந்தன. அவள் அவற்றிலிருந்து மூன்றைக் கையிலெடுத்துத் தட்டில் பாசத்தோடு பரப்பினாள். பச்சை நிறச் சட்டினியையும் கூட்டணிச் சேர்த்து வேகமாய் எடுத்துச் சென்றாள்.

    பள்ளிச் சீருடை அணிந்து, தயார் நிலையில் அமர்ந்திருந்த பாலகன் தொலைக்காட்சியில் ‘மம்மி 2017’ படம் பார்த்துக் கொண்டிருந்தான். அவனிடம் நீட்டப்பட்ட தட்டும் கண்ணுக்குத் தெரியவில்லை. அந்த மணமும் மூக்கிற்குள் நுழையவில்லை. ஏக்கத்தோடு அவனைப் பார்த்துக் கொண்டிருந்த இட்டலிகள் திரும்பி மம்மியை ரசிக்கத் தொடங்கின. தொலைக் காட்சியில் ஒரு மம்மி பிணம் ஓர் உயிருள்ள ஆணின் மீது கத்தியோடு அமர்ந்திருந்தது. அது அவனைக் குத்திவிடுமோ என்ற பயம் அந்தப் பாலகனின் கண்களில் அப்பட்டமாய்த் தெரிந்தது. சிறுவன்தானே!

    டேய்! ஸ்கூலுக்கு நேரமாகுது. முதல்ல சாப்பிடுடா

    வலுக்கட்டாயமாய் அவனது கையில் தட்டைத் திணித்தாள் அவனது தாய்.

    மா… படம் செமையா போயிட்டிருக்கு தொலைக் காட்சியை விட்டு கண்களை விலக்காமல் கூறினான் அவன்.

    அவளும் திரும்பி நோட்டமிட்டாள். அப்போது மம்மி ஓர் அழகியப் பெண்ணைத் துரத்திக் கொண்டு ஓடியது. தொலைக்காட்சிப் பெட்டியின் இடது மேல் மூலையில் ‘மம்மி 2017’ என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது.

    உயிரோட இருக்கிற இந்த மம்மியை யாரும் கண்டுக்காதீங்க. ஒரு பிணம் எழுந்து…. ஏதோ சொல்ல வாயெடுத்த அவளை.., ம்மா… காலங்காத்தால கடுப்பேத்தாத. போ மா என்று அவன் துரத்தினான்.

    ஐந்து நிமிடங்களில் ஆறு வயது அழகிய சிறுமி ஒருத்தி, கை கழுவி, வாயைத் துடைத்துக் கொண்டே அவசரமாய் வந்தாள்.

    டேய்… ரிமோட்டைக் கொடுடா. நான் ‘சோட்டா பீம்’ பார்க்கணும் என்று தன் அண்ணனைப் பார்த்துக் கறாராகக் கூறினாள்.

    அதெல்லாம் முடியாது இவனும் பதிலுக்குக் கோபமாய்ச் சீறினான்.

    அங்க பாரு. மணி எட்டு. ஏழு மணியிலேயிருந்து எட்டு வரைக்கும்தான் உனக்கு. கொடு. விருட்டென்று ரிமோட்டைப் பிடுங்கிக் கொண்டு சற்றுத் தள்ளிப்போய் அமர்ந்தாள்.

    கோபமாய் எழுந்த அவன் நறுக்கென அவள் தலையில் குட்டிவிட்டு ரிமோட்டைப் பிடித்து இழுத்தான்.

    ஐயோ வலிக்குது, என்று அலறிவிட்டு, அம்மா என்று கத்தினாள்.

    அவன் ரிமோட்டை அவளிடமே விட்டுவிட்டு, உன்னைச் சாயங்காலம் வந்து பேசிக்கறேன் என்று கூறிவிட்டு அருகிலிருந்த அவனது பழைய இடத்திலேயே அமர்ந்துகொண்டு இட்டலியைப் பிட்டுச் சட்டினியில் உரசி வாயில் வைத்தான்.

    அவள் மகிழ்ச்சியாய்ச் ‘சோட்டா பீம்’ பார்க்கத் தொடங்கினாள். பீம் எனப்படும் அந்தச் சிறிய பாலகன் ஒரு பெரிய பயில்வானை, மேலே ஏறித் தாறுமாறாய் மிதித்து நொறுக்கிக் கொண்டிருந்தான். அவளது அண்ணனும் வேறு வழியில்லாமல் அதையே பார்த்துக் கொண்டிருந்தான்.

    அவர்களது தந்தை அலுவலகத்திற்குத் தயாராகி, வேணி… சீக்கிரம் பிரேக்பாஸ்ட் கொண்டு வா! என்று அதட்டியவாறு இவர்களுடன் வந்தமர்ந்தார்.

    எப்பப் பார்த்தாலும் டிவி தானா? ஹோம் ஒர்க் எல்லாம் ஒழுங்கா பண்ணிட்டீங்களா? என்று முறைத்தார்.

    ‘சோட்டா பீம்’மை ஐந்து நிமிடங்கள் பார்த்துவிட்டு, அப்பப்பா எவ்வளவு அடிதடி சண்டை. எதுக்கு குழந்தைகள் கார்டூனில் கூட இவ்வளவு வன்முறை. இதைப் பார்த்து, வளர்கிற குழந்தைகள், நாளைக்கு எப்படித் துப்பாக்கி எடுக்காம இருப்பாங்க. இதெல்லாம் பார்க்கக் கூடாது. கொண்டா என்று கூறி, ரிமோட்டை அந்தப் பிஞ்சுக் கைகளிலிருந்து பிடுங்கிக் கொண்டார்.

    இல்லப்பா. பீமுக்கு லட்டு சாப்பிட்ட உடனே சக்தி வந்திடும். உடனே கெட்டவர்களை எல்லாம் அடித்துப் போட்டிடுவான். எனக்கும் நிறைய லட்டு வாங்கித் தறியா? நானும் பெரிய சக்திசாலி ஆகிடுவேன் என்றாள் கண்களில் பூரிப்போடு.

    சிறு கடுப்புடன் அவர், உருப்பட்ட மாதிரிதான். லட்டு சாப்பிட்டா சக்தி வராது.. சுகர்தான் வரும் முகத்தை சலிப்போடு வைத்துக்கொண்டு ரிமோட்டில் கைகளைத் தவழ விட்டார்.

    மதுரையில் ரயில் நிலையத்தில் குண்டு வெடிப்பு. முப்பது பேர் பலியாகியிருக்கலாம் என்று அச்சம்

    ம்ச்ச்! என்று உச்சுக் கொட்டிக் கொண்டே வேறு சேனலை மாற்றினார்.

    ஐந்து வயது சிறுமி அநாதை இல்லத்தில், பணியில் இருந்த காவலாளியால் கொடூரமாய்க் கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்ட செய்தி தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

    அருகில் குழந்தை இருப்பதால் சிறிது பதற்றத்துடன் பட்டனைத் தட்டினார்.

    ஒரு தனியார் பேருந்தும் இரு சக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில்.. இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்த கணவன் மனைவி நான்கு மாதக் கைக்குழந்தையோடு சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கிப் பரிதாபமாய் உயிரிழந்தனர்.. போலீசார் வழக்குப் பதிவு செய்து..

    மீண்டும் பட்டன் அழுத்தப்பட்டது.

    தூங்கிக் கொண்டிருந்த மனைவியின் கழுத்தை அறுத்துவிட்டு கணவன் தப்பி…

    காலித் தட்டை அந்தச் சிறிய மேஜை மேல் வேகமாய் வைத்துவிட்டு எழுந்த அவன், நீங்க மட்டும் என்னத்தைப் பார்க்கிறீங்களாம்?, என்று நக்கலாய் அவனது அப்பாவைக் கேட்டுவிட்டு அவரது பதிலுக்காக காத்திராமல், எந்திருச்சு வா.. பஸ் வந்திடும். லேட் பண்ணின விட்டுட்டுப் போயிடுவேன்.. என்று தன் தங்கையைப் பார்த்து எச்சரித்தான்.

    அவளும் அவசரமாய்ப் புத்தக மூட்டையைத் தூக்கிக்கொண்டு பின் தொடர்ந்தாள் பை ப்பா…, இருவர் குரலும் ஒன்றாய் ஒலித்தது. பை ம்மா.., இது சமையலறையை நோக்கி காற்றில் மிதந்தவை.

    பார்த்துப் போங்க, கையில் கரண்டியோடு முகத்தில் புன்சிரிப்போடு வந்து வழியனுப்பினாள் வேணி.

    கதவைத் தாளிட்டுவிட்டு வந்த அவள், தனது கணவர் ஏதோ யோசனையாய் இருப்பதைப் பார்த்து அருகில் வந்தாள்.

    நம்ம பையன் என்னைப் பார்த்து என்ன கேள்வி கேட்டான்னு தெரியுமா?

    கேட்டுது கேட்டுது. நல்லாவே கேட்டுது. நான் சீரியல் பார்க்கும் போது மட்டும் ஐயையே என்ன இது? எப்பப் பார்த்தாலும் யாரைக் கொலை பண்ணலாம். எப்படி ஏமாற்றலாம்? அவனை அவகிட்ட இருந்து எப்படிப் பிரிக்கிறது? குடும்பத்துல எப்படிக் குழப்பத்தைக் கொண்டுவரது? குழாயடிச் சண்டை. கள்ளக் காதல். அழுகை. பித்தலாட்டம். இதையெல்லாம் பார்த்தால் குடும்பம் எப்படி விளங்கும்? அப்படீன்னு கேட்பீங்களே. இப்ப என் பையன் கேட்டதுல என்ன தப்பு? டிவியில் வரது எல்லாமே எப்பவும் எதிர்மறை செய்திகள்தான்… என்னமோ தினம் செய்தி பார்த்தா உங்க உலக அறிவு அப்படியே பொங்கி வழியப்போற மாதிரி, இருபத்தி நாலு மணிநேரமும் அந்தக் கருமத்தை உட்கார்ந்துப் பார்த்துட்டு இருக்கீங்க என்று முகத்தில் ஒரு ‘உக்கும்’ போட்டுவிட்டுக் கரண்டியோடு சமையலறைக்குள் புகுந்தாள்.

    இவகிட்ட போய் சொன்னேன்பாரு! என்று தன்னைத் தானே நொந்துகொண்டு மீண்டும் ரிமோட்டில் விரல் பதித்தார்.

    பச்சை நிற பனியனும் முட்டியில் கிழிந்து போன ஜீன்ஸும் அணிந்த ஓர் அழகிய வாலிபன் தொலைக்காட்சியில் மைக்கைப் பிடித்துக் கொண்டு அலறிக் கொண்டிருந்தான்.

    தகுதியே இல்லாத ஒரு நபருக்கு ‘சாகித்ய அகாதமி’ விருது கொடுப்பதா? என்று கோபமாய் கர்ஜித்துக் கொண்டிருந்தான். அவர்கள் வீட்டில் மட்டுமல்ல; அந்த மாநிலம் முழுவதும் அனைத்து ஊடகங்களிலும் அன்றைய தினத்தின் அனல் பறக்கும் செய்தி இதுதான்.. அங்கங்கே போராட்டங்களும் பரவலாக வெடித்துக் கொண்டிருந்தன.

    கைது செய்.. கைது செய்.. எங்கிருந்தோ கதையைத் திருடி அதைத் தனது கதை என்றுகூறி விருது வாங்கியவனைக் கைது செய் என்று ஒரு கும்பல் கூக்குரலிட்டது.

    அந்தாளுக்குக் கொடுத்ததால் இந்த விருதோட மதிப்பே போச்சு

    சினிமாவுலதான் கதையைத் திருடுறாங்கன்னா இங்கேயுமா?

    "நிச்சயமா… ஒரு குழு அமைச்சு. அவர் பணம் கொடுத்தாரா இல்லை சிபாரிசா.. எங்கேயிருந்து கதையைத் திருடினாரு. எல்லாத்தையும் கண்டுபிடிக்கணும்னு

    Enjoying the preview?
    Page 1 of 1