Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Aabathu August 10!
Aabathu August 10!
Aabathu August 10!
Ebook108 pages33 minutes

Aabathu August 10!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100604323
Aabathu August 10!

Read more from Devibala

Related to Aabathu August 10!

Related ebooks

Related categories

Reviews for Aabathu August 10!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Aabathu August 10! - Devibala

    http://www.pustaka.co.in

    ஆபத்து ஆகஸ்ட் பத்து!

    Aabathu August 10!

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    http://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    1

    மல்லிகார்ஜுனன்-(என்ன பெயர் வாயில் நுழையவில்லையா கோவை உமார்த்தி?) சரி, மல்லிக் என்கலாமா? - சென்ட்ரல் ஸ்டேஷனுக்குள் நுழையும்போது இரவு 8.50.

    நேற்று இரவு 8.50க்கு வேலூர் சிறைச் சாலையில், நாலாந்தர, ஷெல் ஒன்றில் கெட்ட காற்றைச் சுவாசித்துக் கொண்டிருந்தான் இதே மல்லிக்.

    இப்போது தப்பி வந்து விட்டான்.

    உபயம்: தேவசகாயம்.

    யார் தேவசகாயம்?

    இந்த கதைக்குத் தேவையில்லாத நபர். அவன் உதவியால் சிறைச் சாலையிலிருந்து தப்பிய 12வது நபர் மல்லிக். அவ்வளவுதான்.

    இன்று ஆகஸ்ட் ஒன்று - திங்கட் கிழமை.

    மல்லிக் நிஜமாக விடுதலை ஆக வேண்டுமானால் அவனது பதினாலு வருட கடுங்காவல் தண்டனையில் இன்னும் ஐந்து வருடங்களை முடித்தால் தான் வெளியே வர முடியும்.

    ஆனால்

    ஆகஸ்ட்-10ம் தேதி அவனால் முடிக்கப் பட வேண்டிய கடமை ஒன்று பாக்கியுண்டு. அதற்காகத்தான் இந்த தப்பித்தல்.

    சில நாட்களின் ரோம மிச்சங்கள் முகத்தை கணிசமாக முற்றுகையிட்டிருந்தது. உடைகள் அங்கங்கே அழுக்கை அணிந்து கொண்டிருக்க, சகதியில் விழுந்து தப்பிய பூனை போல இருந்தான் மல்லிக்.

    தேவசகாயம் தந்த நூறு ரூபாய் தாள் சட்டையின் உள் பாக்கெட்டில் உறுத்தியது.

    டிக்கெட் வாங்கலாமா என்று யோசித்த போது சிரிப்பு வந்தது.

    பயணிகளின் கவனத்திற்கு -

    சென்னையிலிருந்து மேட்டுப் பாளையம் செல்லும் நீலகிரி எக்ஸ்பிரஸ் எட்டாவது பிளாட் பாரத்திலிருந்து இன்னும் சில நிமிடங்களில் புறப்படும்...

    ஒலி பெருக்கி தன் கடமையை முடித்துக் கொள்ள -

    மல்லிக் வெகு இயல்பாக ஹிக்கின் பாதம்ஸ் கடந்து விஸ்தாரமான அந்த ஹாலில் நியான் சிதறல்களை அலட்சியம் செய்தபடி மெதுவாக எட்டாவது பிளாட்பாரத்தைக் குறி வைத்து நடக்கத் தொடங்கினான்.

    ஏராளமான பயணிகளை, வழியனுப்ப வந்தவர்களை தன் மேல் வாங்கிக் கொண்டு, ஆஸ்த்மா நோயாளிபோல நீலகிரி எக்ஸ்பிரஸ் திணறிக் கொண்டிருந்தது.

    ஒவ்வொரு கோச்சாகப் பார்த்துக் கொண்டே நிதானமாக நடக்கத் தொடங்கினான் மல்லிக்.

    முதல் வகுப்பு ஏர்கண்டிஷன் செய்யப்பட்ட பெட்டியைக் கடந்ததும் நின்றான்.

    ஒரு நிமிடம் யோசித்தான்.

    மெல்லக் கால் பதித்து உள்ளே நுழைந்தான்.

    முதல் கூபேக்குள் பார்வையை வீசினான். ஒரு இளம் ஜோடி காதல் பார்வையோடு பாத்திரத்தை திறந்து வைக்க –

    ஒதுக்கிவிட்டு அடுத்த கூபேக்குள் கவனம் பதித்தான்.

    சற்று கனமான மனிதர்--வயது 55-60க்குள் நல்ல மார்பிள் நிறத்தில், சூட், கோட், டை சகிதம், முன்னுச்சியில் லாமினேஷன் தடவப்பட்ட வழுக்கையுடன், ஒரு ஆங்கில பத்திரிகையில் மூழ்கியிருந்தார். அவருக்கு எதிர்பெர்த் காலியாக இருந்தது.

    உள்ளே நுழைந்தான் மல்லிக்.

    காலடி ஓசையில் ஒரு நொடி பார்வை உயர்த்தி, சற்று முகச் சுருக்கத்துடன் அவனைப் பார்த்துவிட்டு, மறுபடியும் பத்திரிகையில் அமிழ்ந்தார்.

    ரயில் புறப்படுவதற்கான சாத்தியங்கள் வெளியில் தெரிய, சட்டென வெளிப்பட்டு காரிடாரில் நடந்தான். கதவை ஒட்டி நின்று எட்டிப் பார்த்தான். ஆம்பர் விழுந்து, கைகள் அசைக்கப்பட, நீலகிரி எக்ஸ்பிரஸ், மெல்ல நகர்ந்தது.

    சட்டென பாத்ரூமூக்குள் தன்னை நுழைத்து உள்ளே தாளிட்டுக் கொண்டான்.

    இனி ஒரு மணி நேரத்துக்கும் மேல் இங்கு சமாளிக்க வேண்டும். கண்டக்டர் வந்து டிக்கெட் பரிசோதனை முடியும் வரை நீடிக்க வேண்டும்.

    வெளிச்சம் விலகி, இருளில் பிரவேசித்து நீலகிரி எக்ஸ்பிரஸ் ஓடுவது புரிபட-

    வெள்ளை நிற வாஷ்பேசின் மேல் சரிந்து நின்று கொண்டான். கண்களை மூடிக் கொண்டான். நுரையீரல்கள் 'நிக்கோடின் தா' என்று கெஞ்ச –

    பாக்கெட்டை வழக்கம் போல தன்னிச்சையாகத் தடவி சற்று ஏமாற்றத்துடன் கைகளை எடுத்தான். கதவோரம் ஒரு துண்டு சிகரெட் நசுங்கிக் கிடக்க அதையே ஆவலுடன் பார்த்தான்.

    இந்தா மல்லிக் சிகரெட்!

    நீட்டிய சேதுவை ஒரு நொடி இமைக்காமல் பார்த்தான் மல்லிக்.

    இது சாதாரண சிகரெட் சேது. நான் பில்டர் சிகரெட் தவிர வேறெதையும் தொட மாட்டேன்னு உனக்குத் தெரியாது?

    ஜம்பமா? துண்டு பீடிக்கு அலையப் போற ஒரு நாள். அப்ப சேது ஞாபகம் வரும் ஒனக்கு.

    சட்டென கலைந்தான் மல்லிக்.

    கன்னத்தில் சூடாக ஒரு துளி கண்ணீர் பிரவேசித்தது.

    அதன் வெதுவெதுப்பு ஒவ்வொரு நரம்புகளையும் ஞாபகப்படுத்தியது!

    எப்ப வாங்கின மல்லிக் இந்த மொபெட்டை?

    போன வாரம் தான் ஜீவா. 36 இன்ஸ்டால்மென்ட். மாசம் நூத்தி இருபது ரூவா!

    ஏண்டா போற போக்குல பெண்டாட்டியைக் கூட இன்ஸ்டால்மென்ட்ல வாங்கிரு வான்டா இவன்!

    சேதுவின் கிண்டல் மல்லிக்கின் தாடை நரம்புகளை இடம் பெயர வைக்க

    ஏண்டா மல்லிக் கோச்சுக்கற? அவன் பேசினதுல அர்த்தம் இருக்குடா! ஜீவா.

    மல்லிக் மெளனமாக இருந்தான்.

    ஜீவா மெல்ல அவன் தோளைத் தொட்டான். "ஈ.ஸி மல்லிக் என்ன சம்பளம் உனக்கு? பிடித்தமெல்லாம் போக கையில ஐநூத்திச் சொச்சம் வரும்? இதுல வீட்டு வாடகை,

    Enjoying the preview?
    Page 1 of 1