Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vasantham Varum
Vasantham Varum
Vasantham Varum
Ebook189 pages1 hour

Vasantham Varum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

லட்சுமி சுப்பிரமணியம் அவர்கள் சுமார் முப்பது ஆண்டுகளாகச் சிறுகதைகளும் நாவல்களும் எழுதி உள்ளார். இவர் சுமார் அறுநூறுக்கும் மேல் சிறுகதைகளும், ப நாவல்களும் வெளிவந்துள்ளன,. 'ஆனந்த விகடன்', 'கல்கி ' பத்திரிகைகளின் வெள்ளிவிழாச் சிறுகதைப் போட்டிகளில் பரிசு பெற்றவர். 'துடிப்பின் எல்லை' என்ற இவருடைய நாவல் 'கலைமகள்' பரிசைப் பெற்றது. திரு. லா. ச, ராமாமிருதம், திரு. தி. ஜானகிராமன் இருவரையும் மானசீகக் குரு நாதராகக் கொண்டாடுபவர்.

படைப்பிலக்கியம் தவிர, மருத்துவம், தொழில் நுட்பம், சமயம், மனோதத்துவம், இசை ஆகிய துறைகளிலும் ஏராளமான கட்டுரைகளை எழுதி இருக்கிறார்.

Languageதமிழ்
Release dateSep 13, 2019
ISBN6580127504495
Vasantham Varum

Read more from Lakshmi Subramaniam

Related to Vasantham Varum

Related ebooks

Reviews for Vasantham Varum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vasantham Varum - Lakshmi Subramaniam

    http://www.pustaka.co.in

    வசந்தம் வரும்

    Vasantham Varum

    Author:

    எஸ். லட்சுமி சுப்பிரமணியம்

    S. Lakshmi Subramaniam

    For more books

    http://pustaka.co.in/home/author/lakshmi-subramaniam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    1

    சேகர் நடக்கத் தொடங்கினான். மாலைக்காற்றுக் குளிர்ந்து வீசிற்று. கோயில் தோட்டத்துப் பூக்களின் மணம், கழனிகளுக்குப் பாயும் நீரோடையின் சலசலவென்ற ஒலி, ஆற்றைக் கடந்து அக்கரைக்குச் செல்லப் பரிசில் ஓட்டுபவனின் பாட்டு யாவும் சேர்ந்து அவன் மனத்தில் ஒரு கனவுலகை எழுப்பின.

    பெரிய பறவையாய் இரவு சிறை விரித்து அமர்ந்து கொண்டிருந்தது. அதன் கால்நகங்கள் வானின் மார்பில் பதிந்ததும் பொங்கும் இரத்தச் சிவப்பாய் அடிவானம் தோன்றியது. ஆற்றங்கரை ஓரம் மணலைக் காலால் நீவிவிட்டுச் சேகர் உட்கார்ந்து கொண்டான். மறுகரையில் வானின் பின்னணியில் நிமிர்ந்து நின்றது கரிய கோபுர வடிவம். நாகக் கண்களாய் விளக்குகள் ஒளிரும் அதன் முடி.

    அந்த இடத்தின் அமைதியைக் கலைக்க விரும்பாததுபோலக் கோயில் மணியின் நாதம் மெதுவாய் வீங்கி எழுந்து அடங்கிற்று. ஆற்று நீரில் மேலே வளைந்த மரக்கிளையிலிருந்து எப்பொழுதேனும் ஒரு சிறு காய் விழுந்ததும் எழும்பும் சிறு வட்ட அலைகள், உடனே நீரோட்டத்தில் கலந்துவிடுவதைப் போல், அந்த மணியோசை காற்றின் அலைப்பில் உருவழிந்து நின்றது.

    கைபிடிச் சங்கிலியின் கட்டுப்பாட்டைத் தளர்த்திக்கொண்டு டைகர் சுற்றும் முற்றும் அலைந்து கொண்டிருந்தது. வீட்டில் அவன் இல்லாவிட்டால் அதற்குப் பொழுது போகாது. சடை சடையாய் மயிர் கண்களின் மேல் வழிய, நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு, வாசற்படியிலேயே அவனை எதிர்பார்த்து உட்கார்ந்திருக்கும். அவன் கார்ச் சப்தம் கேட்டதும் 'ஹார்ன்' ஏதும் ஒலிக்காவிட்டாலும் வாசற் 'கேட்டை' நோக்கிப் பாய்ந்து ஓடி வந்துவிடும்.

    அங்கு அவன் வந்து டாக்டர் தொழில் தொடங்கியபோது, அவனால் குணம் அடைந்தவர் ஒருவர் கொடுத்த பரிசு அது. அப்போது அது புதிதாகப் பிறந்த குட்டி. இப்போது டைகருக்கு மூன்று வயது முடிந்துவிட்டது. கண்களின் மினு மினுப்பில், வாளிப்பாய் வளைந்த உடலில், முன்னங்காலை ஊன்றி. நிமிரும் துடிப்பில், வாலிபம் தெரிகிறது.

    சேகர் மணலில் கையை மடித்துத் தலைக்கு அடியில் வைத்துப் படுத்துக் கொண்டுவிட்டான். முன் நிலாக்காலம். வெளிச்சம் இல்லாவிட்டாலும் பார்வைக்கு இனிமையாய், உடலுக்குக் குளிர்ச்சியாய், தேய்ந்த வெள்ளிப் பாத்திரத்தின் மெருகுபோல ஓர் ஒளி படர்ந்து நின்றது. அண்ணாந்த பார்வையில் பிசிர் விழுந்தாற்போன்று தெரிந்தன, மேகத் துணுக்குகள்.

    அன்று இரவு எப்படியானாலும் நமசிவாயத்தைப் பார்த்து விட வேண்டியதுதான். டாக்டர் கோபாலின் யோசனைப்படி அவரை ஆஸ்பத்திரியில் சேர்க்க டவனுக்குக் கொண்டு போகத் தான் வேண்டும். அவன் சோதனை செய்து வந்த முடிவு சரியாக இருக்கலாம். ஆனாலும் கோபால் ஒரு தடவை பார்த்து அவன் வந்த முடிவுக்கே வந்துவிட்டால் நல்லது. வழக்கம்போல் நமசிவாயம் சால்ஜாப்புச் சொல்வார். அவன் அதைக் கேட்டுக் கொண்டு வந்துவிடக் கூடாது.

    மறுநாளைக்காவது பானுமதியின் பெற்றோர்களையும் பார்த்துவிட வேண்டும். பிற்பகல் வேளையில் போனால் நல்லது. அப்போது தான் அந்தப் பெண் பள்ளிக்கூடத்துக்குப் போயிருப்பாள். அவள் தந்தை கடையை மூடிக்கொண்டு சாப்பாட்டுக்குத் திரும்பியிருப்பாள். பானுவைப் பற்றி அவர்களிடம் பேச வசதியாக இருக்கும். அவனுடைய மருந்துகள் மட்டும் அவளைக் குணப்படுத்திவிட முடியாது. அதைச் சொன்னால் அவர்கள் ஏனோ ஏற்பதில்லை.

    டைகர் நீரில் இறங்கிக் கால்கள் நனைய நின்றுகொண்டிருந்தது. மரக்கிளையின் இருள் அடந்த இலைகளில் ஏதோ ஓர் அசைவாகத் தெரிந்த சிறு பறவையைக் கண்டு இரண்டொரு முறை குரைத்தது. சட்டென்று நீரிலிருந்து தாவி வெளியே ஓடிவந்து, சற்று எட்ட நின்றுகொண்டு உடலை ஒரு முறை வேகமாகச் சிலுப்பிக்கொண்டது.

    போகலாமா? என்று கேட்டுவிட்டுச் சேகர் எழுந்து வந்து அதன் முதுகைத் தட்டிக் கொடுத்தான். இன்னொரு தடவை நன்றாகச் சிலுப்பிக் கொண்டுவிடும். இல்லாவிட்டால் நீலா உனக்குச் சோறு போடமாட்டாள். ஈரத்தோடு நீ வீட்டுக்குள் வந்தால் அவளுக்குக் கட்டோடு பிடிக்காது. அவன் பேச்சுப் புரிந்ததேபோல், டைகர் மறுமுறை சிலுப்பிக் கொண்டது. நீலாவின் முகம் சுளிக்கும் பாவனையைக் கற்பனை செய்துகொண்ட சேகர் மெளனமாகச் சிரித்துக்கொண்டான்.

    ஆற்றங்கரை ஓரம் இரு புறமும் வளர்ந்த புல்லின் நடுவே நடக்கத் தொடங்கினான். காற்றில் அலையோடும் புல்லிதழ்கள். அவற்றின் பின் மளமளவென்று சரிந்த மண்மேடு. அடியிற்கசிந்தோடும் ஆற்று நீர். அங்கிருந்து சாலை ஓர மரங்களின் வரிசை வரை, கட்டானிட்டு அறுத்தது போலத் தெரியும் வயல். லேசான நிலவொளியில் கம்பளம் விரித்ததுபோல, சாம்பல் வெண்மையாகத் தெரிந்தன இளங்கதிர்கள்.

    தூரத்தில் மினுக்கலாய் வெளிச்சம் தெரிந்தது. அதுதான் அவன் வீடு. தோப்புக்கு நடுவே இரட்டைமாடியோடு உயர்ந்து நின்ற பழைய கட்டிடம் அது; அந்தக் காலத்து வீடு. வயது ஆக ஆக மேல்தோல் சட்டை உரியும் மரத்தைப் போல, சுண்ணாம்பு உதிர்ந்து சிமென்டுப் பூச்சுக் கொடுத்து, பாதி புதியதும் பாதி பழையதுமாகத் தெரியும் சுவர். முன்புறம் இன்னும் அதே தட்டு ஓடுகள்தாம். அவற்றில் இருக்கும் குளிர்ச்சி மெஷின் ஓடுகளுக்கு இல்லை தான். மாடி ஜன்னல் வரை வந்து தலையசைக்கும் பழையதொரு வேப்பமரம், முன்புறம் மொட்டை மாடியில் வந்து நின்று பார்த்தால் அந்த ஊர் முழுவதும் தெரியும். ஊரின் எல்லையில் கூட்டுரோட்டுப் பிரிவில் பஸ் வந்து நின்று புள்ளி புள்ளியாக ஜனங்களைக் கொட்டுவதுகூடத் தெரியும் மாடியில் இடப்புறம் அவனுடைய அறை. சிறியதானாலுங்கூட அதில் சாமான்களுக்குக் குறைவில்லை. கட்டிலும் நாற்காலி மேஜையும் அடைத்துக் கொண்ட இடம் போக, மிச்சத்தில் இரண்டு புத்தக ஷெல்புகள், பரிசோதனைக் கண்ணாடியும் விளக்கும் பொருந்திய உயர முக்காலி, பக்கத்தில் தொட்டியும் குழாயும் வைத்த மார்புயரப் பரணை ஒட்டினாற்போலக் கண்ணாடிக் குப்பிகளின் வரிசை; ஜன்னல் ஓரம் ஒரு ஸ்டவ், கண்ணாடிக் குழாய்களைக் காய்ச்சுவதற்கு.

    வீடு வந்துவிட்டது. மாடியில் மற்ற அறையில் விளக்கு வெளிச்சம் தெரிந்தது. நீலா மாடியில்தான் இருக்கிறாள். அவன் வருவதற்கு அறிவிப்பாய் டைகர் ஒருமுறை குரைத்ததும், மளமள வென்று படிகளில் இறங்கி ஓடி வருவாள், கையில் வைத்துப் படித்துக்கொண்டிருந்த புத்தகத்தை அப்படியே போட்டுவிட்டு. பாவம்! அந்தச்சிறிய ஊரில் அவளுக்கு எப்படித் தான் பொழுது போகும்? அவனுக்கு வேலை இருக்கிறது. அவளுக்கு எவ்விதமாய் நேரம் கழியும்?

    மேஜைக்கு முன் அவன் சாப்பிட உட்கார்ந்ததும், மாதவன் தட்டும் கரண்டியும் கொண்டுவந்து வைத்தான். வெண்ணிறக் கோப்பை ஒன்றைக் கையினால் மூடியபடி எதிரே வந்து நின்றாள் நீலா.

    இது என்ன சொல்லு அண்ணா?

    கண்ணை மூடிக்கொண்டு மூக்கை உயர்த்தி மூச்சை இழுத்து விட்டுப் பார்த்தான் சேகர்; தெரியவில்லை. தலையை ஆட்டினான். சிரித்துக்கொண்டே அவள் கோப்பையை மேஜைமேல் வைத்தாள். விரல்கள் பிரிந்து தெரிந்ததும், உள்ளே பார்த்தான் மஞ்சள் நிறமாகச் சுண்டக் காய்ச்சிய பால்; அதில் பவுன் நிறமாய்த் துணுக்குகளாக மிதந்தன பலாப்பழத் துண்டுகள். அவளுக்குத் தெரியும், அவனுக்கு அது பிடிக்கும் என்று.

    கொஞ்சம் வெட்கத்தோடு மாதவன் சிரித்தபடி ஒதுங்கிக் கொண்டான். அந்தப் பாயசம் அவன் கைவரிசை; மலையாளத்துப் பிரதமன். மாதவன் சமையல் சரியாக இருப்பதாக நீலா லேசில் ஒப்புக்கொள்ளமாட்டாள். ஆனால் இது அதற்கு விலக்கு. இதன் சுவையில் மயங்கி, நாக்கைச் சப்பிட்டுக் கொண்டு அவள் இரண்டாவது கோப்பை கேட்காத நாள் இல்லை.

    ஹாலின் பக்கம் போன நீலாவின் காலடியில் டைகர் தடுக்கிற்று. அவள் முகம் சுளித்தது. ''சாப்பிடுகிற இடத்தில் இதற்கு என்ன வேலை? ஒரு நாள் இல்லாவிட்டால் ஒரு நாள் இருட்டில் இதன் மேல் நான் தடுக்கி விழுந்து கையை முறித்துக் கொள்ளப் போகிறேன். அப்புறம் என்னோடு உனக்குச் சரியான வேலை இருக்கும்" என்று பொறுமை இழந்த குரலில் சேகரைப் பார்த்துக் கூச்சலிட்டாள்.

    எப்படியோ அது உன் வாயில் அகப்பட்டுக் கொண்டாலும், காலில் சிக்கிக்கொள்ளாமல் தப்பி ஓடிவிடுகிறதே, அதைச் சொல்லு என்று சேகர் ஓரக் கண்களால் அவளைப் பார்த்தபடி சிமிட்டினான்.

    சேகர் கோப்பையை எடுத்து வாயில் வைத்து மெதுவாய் உறிஞ்சினான். கொஞ்ச தூரம் காற்றாட நடந்து போய்விட்டு வந்தது உடம்புக்கு இதமாக இருந்தது. நாற்காலியில் சாய்ந்தபடியே கால்களை நீள வழியவிட்டுக் கொண்டான். அன்று இரவு நமசிவாயத்தைப் பார்க்க வேண்டும். இன்னும் அரை மணியில் கிளம்ப வேண்டியதுதான். அவன் சொல்வதை அவரும் அவர் மனைவியும் லேசில் ஒப்புக்கொள்ளமாட்டார்கள். ஆஸ்பத்திரி, சோதனைகள், அறுவைச் சிகிச்சை இவற்றில் அவருக்கு நம்பிக்கை இல்லை. அவர் மனைவிக்குப் பயம். ஆனாலும் சொல்லி விடவேண்டியதுதான் அவன் பொறுப்பு.

    அவன் எழுந்து வெளியே வந்தான். நீலாவும் கூடவே வந்தாள். நீலா நல்ல உயரம், அவர்கள் தந்தையைப் போல இருவருக்கும் ஒரு விரல் உயரந்தான் வித்தியாசம் இருக்கும். பெண்ணுக்கு அந்த உயரம் சற்று மிகையாய் எடுத்துக் காட்டிற்று. நீலா எலுமிச்சம்பழ நிறம். கோபித்துக்கொண்டால் கன்னம் சிவப்புத்திட்டாய்ப் பூக்கும். சிறுவயதில் மணிக்கட்டை அழுத்திப்பிடித்து விளையாடியது நினைவிருக்கிறது. அழுத்திய இடம் ரோஜாவின் சிவப்பாய் அப்படியே நின்றுவிடும் கொஞ்ச நேரத்துக்கு. அவன் கறுப்பு. அதுவும் அவள் பக்கத்தில் நின்றால் சற்றுக் கூடுதலாகவே தெரியும், அவள் பரிகாசத்துக்குச் சாதகமாய்.

    என் பையை எடு நீலா என்றான்.

    வியப்பில் அவள் நெற்றி சுருங்கிற்று. கண்ணகல, "மறுபடியும் வெளியில் போக வேண்டுமா அண்ணா?'' என்று கேட்டாள்.

    ஆமாம். ஒரு நோயாளியைப் பார்த்துவிட்டு அரைமணியில் வந்துவிடுகிறேன்.

    அவளுக்குத் தெரியும்: அந்த அரைமணி வரம்பில் அடங்காதது. அவன் வரும்முன் அவள் தூங்கிப் போய்விடுவாள். மணி எட்டு இருக்கும். பகலில் தனியாக இருப்பதைக்கூடப் பொறுத்துக்கொள்ளலாம். இந்த இரவு நேரம்? பயமும் குழப்பமுமாய், எதை எதையோ எண்ணிக்கொண்டு, அயர்ச்சி தோன்றினாலும் தூங்கப் பிடிக்காமல் -

    சில சமயம் அவளுக்குச் சேகரின் மேல் வெறுப்பும் கோபமும்மாக மிதக்கும், இது அதைப்போன்ற ஒரு வேளை.

    "நீ இவ்வளவு நேரத்துக்கு மேல் வேலை வேலை என்று உயிரை விடுவது

    Enjoying the preview?
    Page 1 of 1