Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Naathamenum Kovilile…
Naathamenum Kovilile…
Naathamenum Kovilile…
Ebook314 pages2 hours

Naathamenum Kovilile…

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

முன்னுரை - இசை விமர்சகர் திரு. சுப்புடு

விமர்சன வேலை மிகவும் தொல்லைகள் நிறைந்தது. ஒரு கச்சேரியையோ, புத்தகத்தையோ “நன்றாக இருக்கிறது” என்று எழுதினால் “ஹும்! அவருக்கு வேண்டியவர் போல இருக்கிறது!” என்பார்கள். “நன்றாக இல்லை!” என்று எழுதிவிட்டாலோ, “ஹும்! இவனுக்கு என்ன தெரியும்? பிராக்ஞன் என்று எண்ணம்!” என்று உதட்டைப் பிதுக்குவார்கள். (இவருக்கு என்ற மரியாதைப் பதத்தை இச்சமயங்களில் உபயோகிக்க மாட்டார்கள்!)

ஆக எப்படி எழுதினாலும், விமர்சகனுக்கு ஒன்றும் தெரியாது என்றுதான் முடிவு கட்டுகிறார்கள்.

எனவே எஸ். லட்சுமி சுப்பிரமணியத்தின் “நாதமெனும் கோயிலிலே...” நாவலைப் பற்றி என்ன எழுதுவது என்று தவிக்கிறேன். அதே சமயம் என்னை முன்னுரை எழுதும்படி கேட்டுக் கொண்டதன் காரணமும் தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறேன். (இப்படி விழிப்பது எனக்குத் திண்ணைப் பள்ளிக்கூட நாட்களிலிருந்தே பழக்கம்.)

இரண்டு இசைக் கலைஞர்களைப் பற்றிய நாவலானதால் என்னைத் தேர்ந்தெடுத்திருக்கலாம். அல்லது, எங்களிருவருக்கும் அமைந்த பெயர்ப் பொருத்தம் காரணமாக இருக்கலாம். இக்கதை தொடர்ந்து வெளி வந்த போது, நான் ஆர்வத்துடன் படித்து வந்தேன். ஏனெனில் இதில் மருந்துக்குக்கூட, தமிழில் “பச்சை” - ஆங்கிலத்தில் “நீலம்” என்பது இல்லை. செயற்கை அம்சம் இல்லாத சுருதி சுத்தமான படைப்பு, ஏகப்பட்ட கதாபாத்திரங்களைத் திணித்துக் கடாபுடா பண்ணவில்லை. எல்லாமே மாசு மறுவற்ற (ஸ்டெயின்லெஸ்) பாத்திரங்கள் தாம். நீங்களும் நானும், வீட்டில், தெருவில், வாழ்க்கையில், சந்திக்கும் நபர்களைக் கதையில் பார்க்கும் போது நமக்கு ஈடுபாடு அதிகமாகிறது.

“கதையோ, நாகரீகமோ நமது புறச்சூழ் நிலைக்கு - அப்பாற்பட்ட ஒரு யதார்த்த நிலையில் உள்ள ‘சர் - ரியலிஸ்டிக்’ வழியில், ஆழமான மன நெருடல்களை உணர்வு பூர்வமாக வெளிப்படுத்துவதுடன், மனக்கிலேசங்களை உருவமைக்கும் சாத்தியக் கூறுகளை ஒருமுனைப் யாட்டுடன் ஆராய வழி வகுக்க வேண்டும்.” இது என்ன அபஸ்வரம் என்கிறீர்களா?

(நமக்குள் ஒரு சின்ன இரகசியம். மேலே கூறியுள்ள வாக்கியத்துக்கு எனக்கும் பொருள் தெரியாது. நீங்களும் தெரிந்து கொள்ள முயல வேண்டாம்!) இப்படி எழுதினால் தான் இலக்கிய விமரிசனம் என்று சிலர் ஒத்துக் கொள்வார்கள். அவர்களுக்காக இப்படி எழுதியுள்ளேன். கதையை விமர்சிக்கப் போவதில்லை. படிப்பவர்களுக்கு ‘சஸ்பென்ஸ்’ போய்விடும்.

இன்னும் கூட முன்னுரையை நீளமாக எழுத ஆசை தான். ஆனால் நாவலை விட முன்னரை “பிரமாதம்” என்று சொல்லிவிடப் போகிறீர்களே என்ற அச்சத்தாலும், தன்னடக்கத்தாலும் இவ்வளவோடு நிறுத்திக் கொள்கிறேன்.

நட்புக்குரிய லட்சுமி சுப்பிரமணியம் மேலும் பல நாவல்களை எழுதி நம்மை மகிழ்விப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஆனால் மறுபடியும் என்னை முன்னுரை எழுதும்படி கேட்பார் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை! அதற்கு அஸ்திவாரம் போட்டுவிட்டேன்...

நாதமெனும் கோயிலிலே நல்லதொரு நாவலாம் கீதத்தின் இரகசியமும் நாதத்தின் ஒலிவடிவும் போதைதரும் பொருட்சுவையும் ஆதாரமாய் அமைந்த சாதனை இது வாகும் சத்தியம் - சத்தியமே!

Languageதமிழ்
Release dateJul 21, 2019
ISBN6580127504372
Naathamenum Kovilile…

Read more from Lakshmi Subramaniam

Related to Naathamenum Kovilile…

Related ebooks

Reviews for Naathamenum Kovilile…

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Naathamenum Kovilile… - Lakshmi Subramaniam

    http://www.pustaka.co.in

    நாதமெனும் கோயிலிலே...

    Naathamenum Kovilile…

    Author:

    எஸ். லட்சுமி சுப்பிரமணியம்

    S.Lakshmi Subramaniam

    For more books

    http://pustaka.co.in/home/author/lakshmi-subramaniam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    என்னுரை

    திரு. ஆர். சுப்பிரமணியம் அவர்கள் தமிழக அரசின் நெடுஞ்சாலைத் துறையில் தலைமைப் பொறியாளராக இருந்து ஓய்வு பெற்றவர். தன்னுடைய துணைவியாரின் பெயரை இணைத்துக் கொண்டு லட்சுமி சுப்பிரமணியம் என்ற பெயரில் நிறையச் சிறுகதைகளும் நாவல்களும் எழுதியுள்ளார். ‘கலைமகள்’ நாவல் பரிசு, ‘ஆனந்த விகடன்’ சிறுகதைப் பரிசு, ‘கல்கி’ சிறுகதைப் பரிசு ஆகியவற்றைப் பெற்றுள்ளார். இலக்கியமேதை களான் லா. ச ராமாமிர்தம், தி ஜானகிராமன் ஆகியோரைத் தனது மானசீகக் குருவாகக் கொண்டாடுபவர்.

    இது தவிர, ஆன்மீகம், மருத்துவம், பொறியியல், இசை ஆகிய பல துறைகளிலும் நிறையக் கட்டுரை களை எழுதியுள்ளார். இதுவரை நாற்பத்தைந்து புத்தகங்கள் வெளிவந்துள்ளன.

    இப்போது ‘இதயம் பேசுகிறது’, ‘ஞான பூமி’ ஆகிய பத்திரிகைகளின் துணை ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

    முன்னுரை

    இசை விமர்சகர் திரு. சுப்புடு

    விமர்சன வேலை மிகவும் தொல்லைகள் நிறைந்தது. ஒரு கச்சேரியையோ, புத்தகத்தையோ நன்றாக இருக்கிறது என்று எழுதினால் ஹும்! அவருக்கு வேண்டியவர் போல இருக்கிறது! என்பார்கள். நன்றாக இல்லை! என்று எழுதிவிட்டாலோ, ஹும்! இவனுக்கு என்ன தெரியும்? பிராக்ஞன் என்று எண்ணம்! என்று உதட்டைப் பிதுக்குவார்கள். (இவருக்கு என்ற மரியாதைப் பதத்தை இச்சமயங்களில் உபயோகிக்க மாட்டார்கள்!)

    ஆக எப்படி எழுதினாலும், விமர்சகனுக்கு ஒன்றும் தெரியாது என்றுதான் முடிவு கட்டுகிறார்கள்.

    எனவே எஸ். லட்சுமி சுப்பிரமணியத்தின் நாதமெனும் கோயிலிலே... நாவலைப் பற்றி என்ன எழுதுவது என்று தவிக்கிறேன். அதே சமயம் என்னை முன்னுரை எழுதும்படி கேட்டுக் கொண்டதன் காரணமும் தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறேன். (இப்படி விழிப்பது எனக்குத் திண்ணைப் பள்ளிக்கூட நாட்களிலிருந்தே பழக்கம்.)

    இரண்டு இசைக் கலைஞர்களைப் பற்றிய நாவலானதால் என்னைத் தேர்ந்தெடுத்திருக்கலாம்.

    அல்லது,

    எங்களிருவருக்கும் அமைந்த பெயர்ப் பொருத்தம் காரணமாக இருக்கலாம்.

    இக்கதை தொடர்ந்து வெளி வந்த போது, நான் ஆர்வத்துடன் படித்து வந்தேன். ஏனெனில் இதில் மருந்துக்குக்கூட, தமிழில் பச்சை - ஆங்கிலத்தில் நீலம் என்பது இல்லை. செயற்கை அம்சம் இல்லாத சுருதி சுத்தமான படைப்பு, ஏகப்பட்ட கதாபாத்திரங்களைத் திணித்துக் கடாபுடா பண்ணவில்லை. எல்லாமே மாசு மறுவற்ற (ஸ்டெயின்லெஸ்) பாத்திரங்கள் தாம். நீங்களும் நானும், வீட்டில், தெருவில், வாழ்க்கையில், சந்திக்கும் நபர்களைக் கதையில் பார்க்கும் போது நமக்கு ஈடுபாடு அதிகமாகிறது.

    ***

    கதையோ, நாகரீகமோ நமது புறச்சூழ் நிலைக்கு - அப்பாற்பட்ட ஒரு யதார்த்த நிலையில் உள்ள ‘சர் - ரியலிஸ்டிக்’ வழியில், ஆழமான மன நெருடல்களை உணர்வு பூர்வமாக வெளிப்படுத்துவதுடன், மனக்கிலேசங்களை உருவமைக்கும் சாத்தியக் கூறுகளை ஒருமுனைப் யாட்டுடன் ஆராய வழி வகுக்க வேண்டும்.

    இது என்ன அபஸ்வரம் என்கிறீர்களா?

    (நமக்குள் ஒரு சின்ன இரகசியம். மேலே கூறியுள்ள வாக்கியத்துக்கு எனக்கும் பொருள் தெரியாது. நீங்களும் தெரிந்து கொள்ள முயல வேண்டாம்!)

    இப்படி எழுதினால் தான் இலக்கிய விமரிசனம் என்று சிலர் ஒத்துக் கொள்வார்கள். அவர்களுக்காக இப்படி எழுதியுள்ளேன்.

    கதையை விமர்சிக்கப் போவதில்லை. படிப்பவர்களுக்கு ‘சஸ்பென்ஸ்’ போய்விடும்.

    ***

    இன்னும் கூட முன்னுரையை நீளமாக எழுத ஆசை தான். ஆனால் நாவலை விட முன்னுரை பிரமாதம் என்று சொல்லிவிடப் போகிறீர்களே என்ற அச்சத்தாலும், தன்னடக்கத்தாலும் இவ்வளவோடு நிறுத்திக் கொள்கிறேன்.

    ***

    நட்புக்குரிய லட்சுமி சுப்பிரமணியம் மேலும் பல நாவல்களை எழுதி நம்மை மகிழ்விப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஆனால் மறுபடியும் என்னை முன்னுரை எழுதும்படி கேட்பார் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை! அதற்கு அஸ்திவாரம் போட்டுவிட்டேன்...

    ***

    நாதமெனும் கோயிலிலே

    நல்லதொரு நாவலாம்

    கீதத்தின் இரகசியமும்

    நாதத்தின் ஒலிவடிவும்

    போதைதரும் பொருட்சுவையும்

    ஆதாரமாய் அமைந்த

    சாதனை இது வாகும்

    சத்தியம் - சத்தியமே!

    1

    அத்தனை பேரிலும் அவள் தான் அதிகக் குதூகலமாக இருந்தாள். குழந்தைகளைத் தாயின் இடுப்பிலிருந்து பிடுங்கித் தூக்கிக்கொண்டு சாப்பாடு கொடுக்கும் சுறு சுறுப்பு. வயது வந்தவர்களுக்கு வெந்நீரும் மிளகு ரஸமும் தருவதற்குச் சமையற்காரரை தாஜா பண்ணி வர வழைத்த சாகசம். சிரிப்பும் கேளிக்கையுமாக நலங்கு வரை சளைத்த இடம் ஒவ்வொன்றிலும் விறுவிறுப்பேற்றிய குறும்புத்தனம். ‘தோளோடு தாலி தொங்கத் தொங்கக் கட்டிக்கொண்டு என்றைக்கும் சௌபாக்கியமாக இரு!’ என்று பெரியவளைப் போல விஷமத்தனமாகத் தோழிக்கு ஆசீர்வாதம் செய்த சாதுரியம். எல்லாவற்றிலுமேதான்.

    இப்படி வாளிப்பும் கட்டுமாக, பெங்களூர் சூரிய காந்திப் பூ மாதிரி. கவர்ச்சியும் பூரிப்புமாக வளைய வந்து, எல்லோருடைய கண் பார்வையையும் கட்டி நிறுத்திக் கொண்டிருந்தாள் ராதா.

    ஹல்லோ! குட்லக்! என்று அவளை வாழ்த்தினான் கல்யாணத்தில் கூடியிருந்த வாலிபர்களில் துணிச்சலான ஒருவன்.

    அதிருஷ்டக்காரண்டா! புதுசு புதுசா ஏதாவது சிநேகிதம் கிடைத்துக் கொண்டே இருக்கிறது அவனுக்கு! - இது பக்கத்திலிருந்து ஒலித்த இன்னொரு பொறாமைக் "குரல்.

    அவளைப் பார்த்தாலே ஒரு நம்பிக்கை பிறக்கிறது. நெஞ்சு குளிர்கிறது. அழகையும் அலட்சியத்தையும் தைரியத்தையும் சேர்த்து பார்த்தால் தெம்பாக இருக்கிறது. பதில் பார்வைக்கும் பேச்சுக்கும் மனசு ஏங்குகிறது.

    ராதா ஒரே ஒரு தம்ளர் காப்பி...

    காப்பி வேளை ஆகிவிட்டது ஸார்! கல்யாண வேளையிலே ‘ஸாரி’ ன்னு சொல்லக் கூடாது என்று குழந்தை மாதிரி உதட்டைப் பிதுக்கிக் கொண்டாள். எடுப்பான உயரமும், பாவனைகளில் சிந்தும் கவர்ச்சியும், நிமிர்ந்த நேர்ப் பார்வையுமாகப் பம்பரமாகச் சுழன்றாலும், அவள் சுபாவத்தில் இன்னும் ஒரு குழந்தைதான். கண்களில் இன்னும் அறியாக் குழந்தையின் மழலைப் பார்வைதான்.

    மணப்பெண்ணின் அருகில் உட்கார்ந்து கொண்டு, எதிரே வரைந்திருந்த பிரம்மாண்டமான தாமரைப் பூக் கோலத்தைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள் வித்யா. அமைதியான முகமும், முன் முடி நெற்றியில் வளைந்து வருகிற இசைவும், கோயில் தூணில் தாமரை மொக்குடன் புன்முறுவல் பூக்கிற தேவதையின் நினைவைக் கொண்டு வந்தன. சிலிர்க்க வைக்கும் நிறம், பட்டுப் போன்ற மென்மையான உடல். தயங்கி நிமிர்ந்து தணியும் அமைதியான பார்வை.

    தங்கை ராதாவின் எறும்புச் சுறுசுறுப்பைப் பார்க்க - அவளுக்குப் பெருமையாக இருந்தது. இன்னொரு புறம் வெட்கமாகவும் இருந்தது. உள்ளங்கையில் எடுத்த ஜலம் மாதிரி இப்படி சரளமாகப் பழக இவளால் எப்படி முடிகிறது? கலகலவென்ற சிரிப்பில் உள்ளத்தைக் கொட்டிவிடும் சாதுரியம் பதினெட்டு வயது நிறையாத பருவத்தில் எங்கிருந்து கிடைத்தது? இப்படி வளைய வந்து எல்லோரையும் விசாரித்துக்கொண்டு, கழுத்துமணி அசையத் துள்ளும். கன்றுக்குட்டியைப்போல, பாதம் நின்ற இடத்தில் நிற்காமல் உலாவிக்கொண்டிருக்கிறாளே?

    வித்யா பார்த்த பார்வை அவளை இழுத்ததோ என்னவோ? அங்கே வந்து அருகில் நின்றாள். கையிலிருந்த சர்க்கரையை அவளிடம் நீட்டினாள். அவள் பார்வையில் குறும்பு மிளிர்ந்தது.

    தோழிக்குக் கல்யாணம். ஒரு பாட்டுப் பாடு...

    கனம் தழைந்த புன்னகையுடன் தலையைக் குனிந்து கொண்டாள் வித்யா. அருகே வந்து ராதா அவள் முகவாயைப் பிடித்து நிமிர்த்தினாள்.

    பாடு வித்யா! என்ன பாட்டு என்று சொல்லட்டுமா? மணிரங்கு ராகத்தில் ‘மாமவ பட்டாபி ராமா...’ ஆரம்பித்துக் கொடுக்கட்டுமா?

    மணப்பெண்ணின் மைதீட்டிய பார்வையும் அலை ஒதுங்கினாற்போல அவள்புறம் திரும்பிற்று. பாடேன் வித்யா எனக்கும் சந்தோஷமாக இருக்கும் என்று மூச்சினும் தாழ்ந்த மெல்லிய குரலில் சொன்னாள். அந்தக் குரலிலும் மனத்திலும் இருந்த மென்மையைக் கண்டு கொண்டது போலப் புன்னகை புரிந்தாள் வித்யா. அவள் முகத்தில் பல கணி திறந்தது போன்ற வெளிச்சம்.

    மாமவ பட்டா பிராமா... - நிதானமான குரலில் நயம் மெல்லடி எடுத்து வைத்தது போல, முகம் அசையாமா பாடினாள் வித்யா. கேட்பவர்கள் மனத்தில் அந்த பட்டல் பிஷேகக் காட்சி கம்பீரமாக ஊர்வலம் வந்தது. அழகாக அசைந்து வரும் பெரிய மணித் தேர் ஒன்றை. தெப்பக்குளத்தில் விளக்கு அலங்காரங்களுடன் தெப்பத்தில் மிதந்து வரும் சுவாமியின் திருக்கோலத்தைப் பார்ப்பது போன்ற உணர்ச்சி உள்ளத்தில் படர்ந்து நின்றது.

    பாட்டு முடிந்ததும் கைதட்டினாள் ராதா. அங்கே விரவி நின்ற அமைதியில், அவள் ஒருத்தி மட்டும் கை தட்டியது பளிச்சென்று எல்லோருடைய கவனத்தையும் இழுத்தது. விரலை உதறிக் கொண்டு உதட்டைக் கடித்துக் கொண்டாள் ராதா. ‘கிளிக்’ கென்ற சிரிப்பு.

    மிகவும் நன்றாகப் பாடுகிறீர்கள். என் பாராட்டுக்கள்!- சற்றுத் தள்ளி அமர்ந்திருந்த அந்த வாலிபன், அப்படி அருகில் வந்து பாராட்டியபோது, வித்யாவுக்கு முகத்தில் சந்தோஷமும் பெருமையும் குழம்பின.

    இவன் தான் என் நண்பன் டாக்டர் மனோகர்! பாடியது என் மனைவியின் தோழி வித்யா... என்று அறிமுகம் செய்து வைத்தார் மணமகன். சற்றுத் தலை நிமிர்ந்து வணக்கத்துக்கு அடையாளமாகக் கை கூப்பினாள் வித்யா. மறுபடியும் அவள் கண், மேலே அவன் பேசுவது எதையும் எதிர்பார்க்காதது போல மணமகள் அமர்ந்திருந்த பட்டுப் பாயின் பூக்களின் மீது பார்வையால் கோலம் இட்டது.

    அக்கா தனியாக சுவாமி படத்துக்கு முன்னால் உட்கார்ந்து லயித்துப் போய் பாடுவாள். அப்போது கேட்க இன்னும் இனிமையாக இருக்கும். குளிக்கும்போது கள்ளக் குரலில் ‘ட்யூன்’ மட்டும் பாடுவாள். அது இன்னும் பிரமாதமாக இருக்கும்!

    ராதையின் பேச்சுக்குப் பதிலாக மத்தாப்பூ மழையாகச் சிரிப்பு உதிர்ந்தது. அதில் மனோகரின் சிரிப்பு தனியாகக் கேட்டது.

    மெதுவான குரலில் கடிந்துகொண்டு எழுந்து நின்றாள் வித்யா. அவள் பார்வை நிமிரவில்லை. ராதா அவள் அருகே வந்து வித்யாவின் கையைப் பற்றி, உள்ளங்கையை ஜாடையாக விஷமத்துடன் அழுத்தினாள். வித்யா பதிலுக்கு அழுத்தவில்லை. அவளுக்குக் கொஞ்சம் கோபம். அதைவிட அதிகமாக வெட்கம்.

    நிம்மதியான இரவு வேளை. வித்யா படுத்துக்கொண்டிருந்தாள். இன்னும் தூக்கம் வரவில்லை. பக்கத்து வீட்டிலும், எதிர் வீட்டிலுமாக பத்துமணி மாறிமாறி அடித்தது. ரேடியோவில் நெஞ்சைத் தொட்டுத் தடவிக் கொடுப்பது போலப் புல்லாங்குழல் இசை கேட்டுக் கொண்டிருந்தது. பைரவி ராகத்தையும் கீர்த்தனையையும் வாசித்துவிட்டு, ஸ்வரம் வாசித்துக்கொண்டிருந்தார் மாலி. தேன் துளியாக உதிரும் ஸ்வர ஜாலம்.

    ஒரு மன நிறைவில் அவள் கண்ணில் நீர் முத்திட்டது. எவ்வளவு உன்னதமான சங்கீதம்! வெல்வெட்டில் ஒளிரும் நகையைப்போல, மனதில் ஜ்வலிக்கும் இதமான உணர்வு.

    நீ இன்னும் தூங்க வில்லையா அக்கா? என்று புரண்டு படுத்து, அவள் கழுத்தைக் கட்டிக்கொண்டாள் ராதா.

    கமகமும் குழைவுமாக எப்படி இருந்தது மாலி ஸாரின் இசை... கேட்டாயா? என்றாள் வித்யா. பேச வாய் திறந்ததும், மன மூடியைத் திறந்தது போலக் கண்ணிலிருந்து நீர் வழிந்தது. நெஞ்சக் குளிர்ச்சியில் பொங்கும் பனி.

    எனக்குத் தூக்கம் வருகிறது! என்று ஒரு பெரு மூச்சு விட்டுவிட்டுத் திரும்பிப் படுத்துக்கொண்டாள் ராதா.

    அவள் எப்போதும் அப்படித்தான், அவளுடைய பரபரப்பான உலகத்தில், அமைதியான அழகுகளில் லயிக்க நேரம் இல்லை. பூஜை அறையில் உட்கார்ந்து வித்யா மனம் உருகப் பாடிக்கொண்டிருக்கும்போது, அவள் தட்டை எடுத்து வைப்பதும், சந்தனம் அரைப்பதும், பூவைக் குடலையிலிருந்து, கொட்டிச் சரிப்பதுமாக, விறுவிறு. வென்றுதான் இருப்பாள். கற்பாறைகளில் கால் ஊன்றி நர்த்தனமிடும் அருவி அவள். பெருமிதத்துடன் விம்மிப் படரும் அமைதியான இரவு நதி அல்ல.

    வித்யா ஒரு பெருமூச்சு விட்டாள். பரத நாட்டியம் கற்றுக்கொடுத்திருந்தால் ராதா ஒருவேளை சுறுசுறுப்பாகப் பிடித்துக் கொண்டிருந்திருப்பாளோ என்னவோ? நின்ற இடத்தில் நிற்காத அந்தப் பாதங்களுக்குச் சலங்கைகள் கட்டி, செம்பஞ்சுக் குழம்பில் அலங்காரம் செய்து அழகு பார்த்து இருக்கலாம்!

    ஜன்னல் ஓரமாக நின்ற வேப்பமரம் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தது. எங்கேயோ கத்தும் இரவுப் புள்ளின் ஒலி. ரேடியோவின் இசைகூட அடங்கிவிட்ட அந்த வேளையில், சிறு சப்தங்கள் கூடத் தெளிவாகக் கேட்டன. குளியல் அறையில் குழாயைச் சரியாக மூடவில்லை. ஜலதரங்கமாய் எழும் நீர்த்துளி ஓசை.

    பூக்களின் நுட்பமான வாசனைகளைக்கூட அடையாளம் சொல்வார் அப்பா. அம்மா ஒரு சங்கீதப் பித்து. வாய் எப்போதும் ஒரு ராகத்தை முனகிக்கொண்டே இருக்கும். பாட்டு கேட்டால் பூஜையின் மந்திரம்கூட அடி நழுவிப் பிசகிவிடும். நுட்பமான இந்த ஒலிகளில்கூட நாத மயமான உலகத்தைப் பார்க்க முடியும் அவளுக்கு. கதவு அசைந்து கீல் ஒலி எழுப்பினால்கூட, அதற்கு ஒரு ஸ்வர வரிசையை அவளால் சொல்லிவிட முடியும்.

    அதோ, அந்தப் பூ என்னோடு பேசுகிறது அம்மா! சிவப்பிலே வரி வரியா வெள்ளைக்கோடு போட்டுக்கொண்டிருக்கிறோம் என்று அதற்கு எவ்வளவு பெருமை தெரியுமா? என்பார் அப்பா. பூவின் பேச்சு அதன் அழகும் தனி மணமும் தான். ஆனால் அந்தப் பேச்சை அவரால் தான் புரிந்துகொள்ள முடியும். தென்றலில் ஆடும் அந்தப் பூவின் அசைவுக்குத் தாளம் போட்டு விடுவாள் அம்மா... மலரின் பேச்சும் அவளுக்கு மென் குரலில் இசைத்த இசை யாகத்தான் புரியும்.

    எல்லா ஒலிகளும் மெல்ல அடங்கிவிட்டன. வாசனை தூவினாற்போன்ற பொடி இருள். மனத்தில் இன்னும் குழலோசை. கமகமும் குழைவுமாகக் கேட்டுக்கொண்டு இருந்தது. மலர்ந்த பன்னீரின் மணம் போன்ற மென்மை யான உணர்வு. அவளை மெல்லத் தட்டிக்கொடுத்தது.அப்படியே உறங்கிவிட்டாள்.

    ஒரு வாரம் ஆகி இருக்கும்.

    வித்யா கர்நாடக இசைக் கல்லூரி வாசலிலிருந்து படி இறங்கி நடந்து வந்தாள். குளிர்ந்த நிழல் பரப்பும் மரங்கள். அண்ணாந்து பார்த்தாள். ஒளி ஸ்வப்னம் காணுவது போலச் சுருங்கிக் கொண்டிருந்தது. சூரியன் கண்ணயரும் வேளை. கொஞ்சநேரம் கழித்து இந்த மஞ்சளும் மறைந்து இருளாகிவிடும். இருட்படுதாக்கள் இறங்கிவிடும்.

    பாட்டின் அடியை மெல்ல முனகிக்கொண்டே, ‘கேட்’ டை நோக்கி நடைபாதையில் நடந்தாள். கடற்கரைக் காற்று மழைக் குளிர்ச்சியுடன் சொடுக்கினாற் போல உதறிற்று. வாசலுக்கு வந்து பஸ் ஸ்டாப்பில் நிற்பதற்குள் படபடவென்று தூறல் மணிக்கட்டிலும், கன்னத்திலுமாக மாறி மாறி விழுந்தது.

    கிளம்பும்போது ‘சுள்’ ளென்ற வெய்யில் இருந்தது. அவள் குடை கொண்டு வரவில்லை. எதிர்பாராமல் மழையில் மாட்டிக்கொண்ட பயம், உள்ளத்தைச்சில் என்று கவ்விற்று. புடவைத் தலைப்பை இழுத்துக் கூந்தலுக்கு மேல் திரையாகப் போட்டுக் கொண்டாள்.

    அருகே ஒரு கார் வந்து இடித்தாற்போல நின்றது.

    மழையில் தனியாக மாட்டிக்கொண்டுவிட்டீர்கள் போலிருக்கிறதே, வருகிறீர்களா? நான் வீட்டில் கொண்டு போய் விட்டுவிடுகிறேன். தலையைக் குனிந்து குரல் வந்த திசையில், முகத்தை அடையாளம் காண முயன்றாள் வித்யா. எங்கோ பார்த்தது போன்ற நினைவு. உடனே ஞாபகத்துக்கு வரவில்லை.

    அவள் தயக்கத்தைப் பார்த்து, என்னை அடையாளம் தெரியவில்லையா? நான் தான் டாக்டர் மனோகர். பத்து நாட்களுக்கு முன்பு கல்யாணத்தில் பார்த்தோமே? என்றான் தலையைக் கதவு இடைவெளியின் அளவுக்குத் தாழ்த்திக் கொண்டே. சட்டென்று அவளுக்கும் அதே சமயத்தில் ஞாபகம் வந்து விட்டது, அந்த முகமும் குரலும்.

    கடந்து போகிற மழைத் தூறல் தான். இப்போது பஸ் வந்துவிடும். நான் போய்க் கொள்கிறேன். நீங்கள் சிரமப் படாதீர்கள் என்றாள்.

    எனக்கு ஒரு சிரமமும் இல்லை. ஏறிக்கொள்ளுங்கள். பேச்சுத் துணைகூட இல்லாமல் தனியாகப் போய்க்கொண்டிருக்கிறேன் நான் என்று சிரித்தான் மனோகர். மேலும் மறுக்க முடியாமல், காரின் பின் கதவைத் திறந்து ஏறிக் கொண்டாள் வித்யா.

    கபாலீசுவரர் கோயிலைக் கடந்து, நடுத்தெருவிற்கு வந்து சேரும் வரையில், ஏதேதோ பேசிக்கொண்டே வந்தான் மனோகர். அவள் இரண்டொரு வார்த்தைகள் பதில் சொன்னதோடு சரி. பழக்கம் இல்லாத அந்த அனுபவத்தில், நெஞ்சில் சிட்டுக்குருவி சிறகடித்துக் கொண்டே இருந்தது. மனம், பேச்சில் இழை பின்னவில்லை தான்.

    இதுதான் உங்கள் வீடு இருக்கும் தெருவா? சரிதான், நடுத்தெருவில் இருக்கிறீர்கள்! என்று சிரித்தான் மனோகர். அதற்குப் பதிலாக இங்கிதமாக முறுவல் பூத்துக் கொண்டாள் வித்யா.

    இந்த இடத்தில் ராதை இருந்திருந்தால் என்ன செய்திருப்பாள்? கையைக் கொட்டி, ‘கலீர்’ என்று சிரித்து, பதிலுக்கு இன்னொரு ‘ஜோக்’ அடித்திருப்பாள்...

    கார் நின்றது. மழை தாரை தாரையாக இறங்கிக் கொண்டிருந்தது. இறங்கி வாசலை அடையுமுன் போர்த்திய புடவைத் தலைப்பு நனைந்து விட்டது.. நாலெட்டாய்த்தாண்டி வாசற்படியில் நின்று கொண்டாள்.

    தாங்க் யூ! உங்களுக்கு ரொம்ப சிரமம்...

    மழை ஓசையைக் கடந்து நிமிரும் குரலில் மனோகர் சொன்னான்: அப்படி எல்லாம் ஒன்றுமில்லை. வரட்டுமா?

    கையை அசைத்துவிட்டு, காரைக் கிளப்பிக் கொண்டு போய்விட்டான் மனோகர். உள்ளே திரும்பியபோது தான் ஞாபகம் வந்தது. அப்படி அனுப்பியது மரியாதை இல்லையோ? கொஞ்ச நேரம் மழை நிற்கும்வரை, உள்ளே வந்து உட்கார்ந்திருந்து, காப்பி சாப்பிட்டு விட்டுப் போகச் சொல்லி இருக்கலாமோ என்னவோ? ஏனோ அவளுக்குச் சொல்லத் தோன்றவில்லை...

    பஸ்ஸிலா வந்தாய்? புடவை நனையவில்லையே? என்று கேட்டாள் அம்மா. ‘பஸ்’ ஸென்று சொன்னதும் தான் அதை அவள் உணர்ந்தாள். கையில் வைத்திருந்த பர்ஸை அவள் அந்தக் காரிலேயே விட்டிருக்க வேண்டும்...

    2

    வாசற்புறம் நோக்கி ஜன்னலருகே உட்கார்ந்திருந்தாள் வித்யா. கடிதம் எழுதிக் கொண்டிருந்தவள் தன்னை அறியாமல் காகித மூலையில் குழந்தைப் பாதம் ஒன்றை வரைந்தாள்.

    எதிர்வீட்டுப் பெண், தெருவிலிருந்து இழைத்த மாவில் அடிச்சுவடுகளை எழுதிக்கொண்டே போனதைக் கண்ட உணர்வு. அதன் அச்சு கடிதத்திலும் விழுந்திருக்கிறது. அன்று கோகுலாஷ்டமி. தலை மேஜைமேல் படிந்து முழங்கைவளைவுள் கவிழ்ந்தது. மென் குரலாய் ஓர் அடி, பாட்டு உதிர்ந்தது.

    ‘கிருஷ்ணா நீ பேகனே பாரோ...’

    பின்னாலிருந்து ஒரு கை அவளை மெல்ல அணைத்தது. விரல்களில், வாய்க்கு நேரே ஒரு பாதாம் பெப்பர்மிண்ட் வந்தது.

    கிருஷ்ணன் வரவில்லை; ராதைதான் வந்திருக்கிறேன். வெண்ணெய் கொண்டு வரவில்லை. பெப்பர் மிண்ட்தான் கொண்டு வந்திருக்கிறேன். திரும்பிப் பார்த்தாள் வித்யா. ராதையின் கண் சிரித்தது. உள்ளிருந்து அம்மாவின் குரல் பலமாய் ஒலித்தது.

    என்ன நடந்தது ராதா?

    ஒன்றுமில்லை. குளித்துவிட்டு வந்தேன். பசியாக இருந்தது. நேரே அடுப்பங்கரைக்கு வந்து ‘என்னம்மா பண்ணி இருக்கிறாய்?’ என்று மூடி வைத்திருந்த வாணலியிலிருந்து ஒன்றை விரலால் எடுத்து வாயில் போட்டுக் கொண்டேன். அம்மா கத்துகிறாள், பண்டிகை நாளும் அதுவுமாய் நைவேத்யம்கூடச் செய்யாமல் சாப்பிட்டு விட்டேன் என்று!

    வித்யா மெளனமாகச் சிரித்தாள்.

    "என்ன சிரிக்கிறாய் வித்யா? ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையைப் பெருமாள் போட்டுக்கொள்ள வில்லையா? இந்த ராதை ருசி பார்த்த பின் கிருஷ்ணனுக்கு நைவேத்யம்

    Enjoying the preview?
    Page 1 of 1