Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Puthiya Appa
Puthiya Appa
Puthiya Appa
Ebook295 pages1 hour

Puthiya Appa

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பாக்கியம் ராமசாமி என்று தமிழுலகம் நன்கு அறிந்த ஜ.ரா. சுந்தரேசனை முதன் முதலில் கல்லூரி மாணவனாக 1957'ல் சந்தித்தேன்.

புரசைவாக்கம் சுந்தரம் பிள்ளை தெரு கோடியில் ஓர் அறையில் கீழே அமர்ந்து யாருடனோ கேரம்போர்டு ஆடிக் கொண்டிருந்தார். என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். ஆர்ட்ஸ் காலேஜ் மாணவன். ஆரம்ப ஆரம்ப எழுத்தாளன்... குமுதம் பத்திரிகையின் ரசிகன்... என்றெல்லாம்.

அவருடைய சில கதைகளைப் பாராட்டிச் சொன்னபோது, முகம் மலர்ந்தது. "எப்படி உங்களுக்கு இந்த வயதில் கசப்பான மனோபாவம் (cynical) தோன்றுகிறது?" என்று ஆச்சரியமாகக் கேட்டேன்.

"ஏதோ ஓர் உணர்வு. ஆனால் அது போன்ற கதைகளை எழுதும்போது, காப்பி குடிக்க வெளியே போனால்கூட மூட் போய் விடும்" என்றார். என்னை பங்கஜா கபேக்கு அழைத்துச் சென்று காபி வாங்கிக் கொடுத்தார். சளசளவென்று நானேதான் பேசிக் கொண்டிருந்தேன் என்று கூறத் தேவையில்லை.

ஜராசுவின் பல பழைய கதைகளை மீண்டும் படிக்க, அவர் குடுப்பத்தார் வாய்ப்பு கொடுத்தார்கள். ஒரு சில கதைகளைப் படித்ததாகவே நினைவில்லை. என்றாலும் ஞாபகசக்தி மீது படர்ந்திருந்த ஒட்டடைகளை நீக்கி இது ஒரு நல்ல சந்தர்ப்பம் என்றெண்ணி வாசித்தேன்.

பதின் பருவ மன - உடல் சிக்கல்கள்; தகாத உறவு; மென்மையான நகைச்சுவை; போன்ற பலவகைக் கதைகள் இதில் அடங்கி இருக்கின்றன. விளம்பர மோகத்தை விவரிக்கிற கதையும் உண்டு; மதுவின் கெடுதலைச் சொல்லும் கதையும் உண்டு. இயல்பான முடிச்சுடனேயே எல்லாக் கதைகள் அவிழ்கின்றன.

'காஸ்ஸிரங்காக் காட்டில் ஒரு தேவதை தூங்கவில்லை' முற்றிலும் மிகப் புதிதான சூழலில் அமைந்த கதை. வேறொன்றைப் படிக்கையில் இன்றைய ராணுவ வீரர் அபிநந்தன் கண்ணுக்கு தெரிந்தார்.

'ஒரு கையால் நகைச்சுவை மூலம் நமக்குக் கிச்சுக் கிச்சு மூட்டிக் கொண்டே மறு கையில் இலக்கியத் தராசு படிக்கவும் தெரிந்து வைத்திருக்கும் எனது ஆன்மீகச் சகோதரர்' என்றே எஸ்.ஏ.பி. ஜராசுவைப் பற்றிக் குறிப்பிடுகிறார். இலக்கியத் தராசில் உள்ள கதைகள்தாம் இவை. எடை போடுவது வாசர்கள் கையில்!

- வாதூலன்
(லக்ஷ்மணன்)

Languageதமிழ்
Release dateSep 13, 2019
ISBN6580124104522
Puthiya Appa

Read more from Ja. Ra. Sundaresan

Related to Puthiya Appa

Related ebooks

Reviews for Puthiya Appa

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Puthiya Appa - Ja. Ra. Sundaresan

    http://www.pustaka.co.in

    புதிய அப்பா

    Puthiya Appa

    Author:

    ஜ.ரா. சுந்தரேசன்

    Ja. Ra. Sundaresan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/jarasu

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அண்ணன் பார்த்த 'அடல்ட்ஸ் ஒன்லி'

    அவளுடையது

    Candle கொலை

    சித்திரவதை

    என் பெயர் என் படம்!

    எங்க அப்பா நாஸ்திகர்

    என்ன துணிச்சல்!

    எட்டரை ரூபாய் ஜட்டி

    இப்போது பேசுவதற்கு இல்லை!

    இசையும் இசைவும்

    காதல் சிங்கம்

    கைக்குட்டை!

    கையைக் கடிக்க வந்த கல்யாணம்

    புதையலும் கட்டைவிரலும்

    காஸ்ஸிரங்காக் காட்டில் ஒரு தேவதை தூங்கவில்லை

    கொடுத்தால் பெறலாம்

    மூக்கு

    நந்திதாவின் மகன்

    பேட்டி அளிக்காத பெரிய நட்சத்திரம்

    'நீட் வெரி நீட்!'

    பால் குவளை

    பாவாடையின் உள்ளம்

    புதிய அப்பா

    சிரிக்கும் இரு விழிகள்

    வழிமேல் விழி வைத்து...

    பா.ரா.வின் மறுபக்கம்

    பாக்கியம் ராமசாமி என்று தமிழுலகம் நன்கு அறிந்த ஜ.ரா. சுந்தரேசனை முதன் முதலில் கல்லூரி மாணவனாக 1957'ல் சந்தித்தேன்.

    புரசைவாக்கம் சுந்தரம் பிள்ளை தெரு கோடியில் ஓர் அறையில் கீழே அமர்ந்து யாருடனோ கேரம்போர்டு ஆடிக் கொண்டிருந்தார். என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். ஆர்ட்ஸ் காலேஜ் மாணவன். ஆரம்ப ஆரம்ப எழுத்தாளன்... குமுதம் பத்திரிகையின் ரசிகன்... என்றெல்லாம்.

    அவருடைய சில கதைகளைப் பாராட்டிச் சொன்னபோது, முகம் மலர்ந்தது. எப்படி உங்களுக்கு இந்த வயதில் கசப்பான மனோபாவம் (cynical) தோன்றுகிறது? என்று ஆச்சரியமாகக் கேட்டேன்.

    ஏதோ ஓர் உணர்வு. ஆனால் அது போன்ற கதைகளை எழுதும்போது, காப்பி குடிக்க வெளியே போனால்கூட மூட் போய் விடும் என்றார். என்னை பங்கஜா கபேக்கு அழைத்துச் சென்று காபி வாங்கிக் கொடுத்தார். சளசளவென்று நானேதான் பேசிக் கொண்டிருந்தேன் என்று கூறத் தேவையில்லை.

    ஜராசுவின் பல பழைய கதைகளை மீண்டும் படிக்க, அவர் குடுப்பத்தார் வாய்ப்பு கொடுத்தார்கள். ஒரு சில கதைகளைப் படித்ததாகவே நினைவில்லை. என்றாலும் ஞாபகசக்தி மீது படர்ந்திருந்த ஒட்டடைகளை நீக்கி இது ஒரு நல்ல சந்தர்ப்பம் என்றெண்ணி வாசித்தேன்.

    பதின் பருவ மன - உடல் சிக்கல்கள்; தகாத உறவு; மென்மையான நகைச்சுவை; போன்ற பலவகைக் கதைகள் இதில் அடங்கி இருக்கின்றன. விளம்பர மோகத்தை விவரிக்கிற கதையும் உண்டு; மதுவின் கெடுதலைச் சொல்லும் கதையும் உண்டு. இயல்பான முடிச்சுடனேயே எல்லாக் கதைகள் அவிழ்கின்றன.

    'காஸ்ஸிரங்காக் காட்டில் ஒரு தேவதை தூங்கவில்லை' முற்றிலும் மிகப் புதிதான சூழலில் அமைந்த கதை. வேறொன்றைப் படிக்கையில் இன்றைய ராணுவ வீரர் அபிநந்தன் கண்ணுக்கு தெரிந்தார்.

    'ஒரு கையால் நகைச்சுவை மூலம் நமக்குக் கிச்சுக் கிச்சு மூட்டிக் கொண்டே மறு கையில் இலக்கியத் தராசு படிக்கவும் தெரிந்து வைத்திருக்கும் எனது ஆன்மீகச் சகோதரர்' என்றே எஸ்.ஏ.பி. ஜராசுவைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.

    இலக்கியத் தராசில் உள்ள கதைகள்தாம் இவை. எடை போடுவது வாசர்கள் கையில்!

    - வாதூலன்

    (லக்ஷ்மணன்)

    8, ஐந்தாம் அவென்யூ

    ஊரூர் ஆல்காட் குப்பம் சாலை

    பெசன்ட் நகர், சென்னை - 90

    *****

    அண்ணன் பார்த்த 'அடல்ட்ஸ் ஒன்லி'

    (1968'ல் வெளிவந்த கதை)

    உசிரை ஏண்டா எடுக்கிறாய்? என்று தம்பியைப் பார்த்து ரகசியமாகப் பல்லை நறநறத்தான் நவநீதன்.

    வாசல் ஊஞ்சலில் அரைத் தூக்கத்தில் படுத்திருந்த அப்பாவுக்குத் தெரியாமல் இரவு ஒன்பதரை மணி சுமாருக்கு அவன் வெளியே கிளம்பிக் கொண்டிருந்தான். முகத்துக்குப் பவுடர் போட்டுக்கொண்டு, கிராப்பை வாரிக்கொண்டது தப்பாகப் போயிற்று. அதனால்தான் தம்பிப் பயல் மாணிக்கம் கண்டு கொண்டுவிட்டான்.

    வயசு இன்னும் ஒன்பதுகூட ஆகவில்லை. பிடாரிப் பயலின் பிடிவாதத்தைப் பார், என்று ஆத்திரப்பட்டவன் தாயாரிடம் சிபாரிசுக்குப் போனான்.

    அம்மா.... பாரும்மா... இந்த மாணிக்கம்.... அவனும் வருவானாம்....

    ஏண்டா.... அவன் பெரியவன். அவனோடு உனக்கென்னடா போட்டி? ராத்திரி ஆட்டம்... கண்ணுக்கு உனக்கு ஆகுமா?

    ஊஹும்... அப்பாகிட்டே அப்படியானால் சொல்றேன்...

    மாணிக்கம் பிடித்தால் குரங்குப் பிடிதான். அவனைப் பார்க்கப் பார்க்கப் பற்றிக்கொண்டு வந்தது நவநீதனுக்கு. தயாராக டிரஸ்கூடப் பண்ணிக்கொண்டு ரெடியாக நிற்கிறானே?

    டேய்! நான் போகிறது பெரியவங்க படம்டா.... உன்னையெல்லாம் விடமாட்டாங்க.

    என்னையெல்லாம் விடற மாதிரிப் படமாப் போயேன்.

    ஊஞ்சலில் அப்பா புரண்டு படுக்கும் சத்தத்தைச் சங்கிலி அஞ்சல் செய்தது.

    சரி. கூட்டிக்கொண்டு தொலை. இவ்வளவு ஆசைப்படறானே... அம்மா வேறு சிபாரிசு செய்துவிட்டாள்.

    வா. உன்னைச் சரியானபடி கவனித்துக் கொள்கிறேன். டிக்கெட்டுக்கு என்கிட்டே துட்டு கிடையாது. உன் உண்டியிலிருந்து எடுத்துட்டு வா.

    தயாராக வச்சிருக்கேன். நறுக்கென்று மாணிக்கம் உள்ளங்கையைத் திறந்து காட்டினான்.

    அவனுடைய பொப்பிளிமாஸ் கன்னத்தையும் உருண்டைக் கண்ணையும், 'ஜிறுக் ஜிறுக்' என்று அடிக்கடி உறிஞ்சிக் கொள்ளும் மூக்கையும் அப்படியே பெயர்த்துவிடலாமா என்று ஆத்திரமாக வந்தது நவநீதனுக்கு. இவ்வளவு பிடிவாதமா உனக்கு?

    ஜாக்கிரதையாப் போய்விட்டு வா. அண்ணனைத் தொந்தரவு பண்ணாதே - இதை வாங்கித் தா அதை வாங்கித்தான்னு... என்று தனலட்சுமியம்மாள் தன் இளைய பிள்ளைக்குப் புத்திமதி சொல்லி அனுப்பி வைத்தாள்.

    நவநீதன் உள்ளம் எரிமலையாக இருந்தது. அவனுடைய நண்பன் செல்வராஜுடன் அன்றைய இரவு உல்லாசமாகச் சுற்றுவது என்ற திட்டத்துக்காக அவன் புறப்பட்டானே தவிர, சினிமா நோக்கத்துக்காக அல்ல. தம்பிப் பயல் இப்படி வந்து ஒட்டிக்கொண்டு விட்டானே! ஆத்திரமாக வந்தது அவனுக்கு.

    காரியாலயத்தில் அவனுடைய நண்பர்களில் அவனுக்கு மிகவும் அந்தரங்கமானவன் செல்வராஜ் என்பவன். அவனும் நவநீதனைப்போலப் பிரம்மசாரிக் கட்டைதான். ஆனால்...

    நவநீதன் பெருமூச்செறியாத நாள் இல்லை அவனைப் பார்த்து.

    பிரம்மச்சாரி என்றால் அவன் பிரம்மச்சாரி... தனியாக ரூம் எடுத்துக்கொண்டு ஓட்டலில் சாப்பிட்டுக்கொண்டு, நினைத்தபோது சினிமா, சினிமா மட்டுமா... நினைத்தபோது நினைத்தது. ராத்திரி படுக்க வராவிட்டால் யாரும் அவனைக் கேட்மாட்டார்கள். சாப்பிட வராவிட்டால் அதற்கும் கேள்வி கிடையாது. சம்பளத்தைக் கொண்டுபோய்ப் பைசா உட்பட எண்ணிப் பெற்றோரிடம் கணக்கு ஒப்பிக்கும் அவலம் இல்லை. கவர்ச்சிகரமான படங்கள் கொண்ட ஆங்கிலப் பத்திரிகை ஒன்றை அன்றைக்குத் தெரியாத்தனமாக அப்பா எதிரில் நவநீதன் படித்துக்கொண்டிருந்துவிட்டான். 'பேஷ்! ரொம்ப லட்சணமான பத்திரிகை!' என்று அவன் கையிலிருந்து பறித்துக் கிழித்தே போட்டுவிட்டார்.

    குடும்பத்தோடு அப்பா - அம்மா, தம்பி என்ற பந்தங்களோடு இருக்கிற பிரம்மச்சாரி ஒரு பிரம்மசாரியா! அவன் எத்தனையோ ஜென்மங்கள் பாவம் பண்ணினவன். வேறென்ன?

    பல்லைக் கடித்துக் கொண்டான். நிழல்போலக் கூட நடந்து கொண்டிருந்த தம்பியிடம் ஒரு வார்த்தை பேசவில்லை.

    அடல்ட்ஸ் ஒன்லின்னா என்ன படம் அண்ணா? என்று மாணிக்கம் மெதுவாகக் கேட்டான்.

    உன் முகறைக் கட்டைப் படம். என்கிட்டே ஒண்ணும் நீ பேசத் தேவையில்லை. நான் சினிமாவுக்கு இன்னிக்குப் போகலை. என் சினேகிதர் செல்வராஜ்கூட வேறு ஒரு பிரண்ட் வீட்டுக்கு ஆபீஸ் காரியமாகப் போகப் போகிறேன்.

    ஊம்... என்னை அப்படிச் சொல்லி ஏமாத்திட்டு நீ மட்டும் போலாம்ணு பார்க்கிறே?

    சரி. இங்கே இப்படியே தங்கம் டாக்கீஸண்டை நிற்போம். செல்வராஜ் வந்தானானால் நீ மரியாதையா வீட்டுக்குப் போயிடறியா?

    ஓ. செல்வராஜ் வரலைன்னா சினிமாவுக்குக் கூட்டிட்டுப் போகணும்.

    தம்பியை ஒரு வழியாகச் சமாளிக்க முடிந்ததே என்று நவநீதனுக்கு மிகுந்த மகிழ்ச்சி.

    எப்படியும் செல்வராஜ் அவனை வந்து தங்கம் டாக்கீஸ் அருகே பார்ப்பதாகச் சொல்லியிருந்தான்.

    ஆபீஸில் ஓவர் டைம் செய்த பணம் முப்பது ரூபாயை - அம்மாவுக்குக் கூடக் கணக்குக் காட்டாத தொகை - பாண்ட் பாக்கெட்டுக்குள் அவன் வைத்துக் கொண்டிருந்தான்.

    நீண்ட நேரமாயிற்று. செல்வராஜ் வரவில்லை.

    அண்ணாச்சி! பொய்தானே சொன்னீங்க... உங்க பிரண்டு செல்வராஜ் வரவே இல்லையே.

    திகுதிகுவென்று என்னவோ உள்ளத்தில் எரிந்தது நவநீதனுக்கு.

    'செல்வராஜ் பயல் இப்படி ஏமாற்றிவிட்டானே. எந்தக் கிராக்கியையாவது தேடிக்கொண்டு அந்தக் கழுதையே போயிருப்பானோ?'

    இப்படி வீணாகத் தூண்டிவிட்டு ஏமாற்றிவிட்டானே... தம்பி மீதுதான் ஆத்திரமாக வந்தது நவநீதனுக்கு.

    தரித்திரப் பயலே... கிளம்புகிறபோதே அபசகுனம் மாதிரி கூடவே கிளம்பினாயில்லையா? தம்பியின் கிராப்பைப் பிடித்து ஓர் உலுக்கு உலுக்கிக் கன்னத்தை ஒரு திருகு திருகினான்.

    அவ்வளவுதான். மாணிக்கம் சைரன் பிடித்த மாதிரி பெரிதாக ஓலமிடத் தொடங்கி அவனை நடுநடுங்க வைத்து விட்டான்.

    சினிமாக் கொட்டகை வாசலிலிருந்த கும்பல் பூராவையும் மாணிக்கத்தின் கூக்குரல் கவர்ந்துவிட்டதுபோல் அத்தனை பேரும் அவனையே பார்க்கத் தொடங்கினர். நவநீதனுக்கு நாக்கைப் பிடுங்கிக்கொள்ளலாம் போலிருந்தது. சரி சரி சரி.. தப்பு... நான் அடிச்சது தப்பு. மன்னித்துக்கொள். இதோ.... இப்போதே சினிமாவுக்குக் கூட்டிப் போகிறேன்... என்று தம்பியைச் சமாதானப்படுத்தியவன் 'தலைவிதியே' என்று இரண்டு டிக்கெட்டுகள் வாங்கிக்கொண்டு தியேட்டருக்குள் நுழைந்தான்.

    அடல்ட்ஸ் ஒன்லின்னியே... அந்தப் படம் இல்லையாண்ணா? 'விசித்திரப் பாவை' அல்லவா இங்கே ஓடுது?

    மண்ணாங்கட்டிப் பாவை. இழவுப் பாவை. ஏதோ ஒரு தரித்திரப் படம். உன் வாய் அடைந்தால் சரி.

    படம் வெகு சுமாரானதாலும், இரவு ஒன்பதரை மணியாட்டமாதலாலும் மேல் வகுப்பு ஸீட்டுகள் முழுதும் நிரம்பாமல் பல வரிசைகள் காலியாகக் கிடந்தன.

    நான் இப்படியே தூங்கறேன். என்னைத் தொணதொணன்னு பிடுங்காமே நீயே படம் பார்... தெரிந்ததா? என்று ஆத்திரத்துடன் தம்பியிடம் சொல்லிவிட்டு, பின்னுக்குச் சாய்ந்து கால்களைக் காலியான எதிர் ஸீட்டில் நீட்டிக்கொண்டு தொய்ந்து படுத்தான்.

    செய்திப் படம் முடிந்து, 'உங்களுக்குத் தலையை வலிக்கிறதா?' என்று விளம்பரத் துணுக்குப் படங்கள் தொடங்கின.

    'அக்சூ!' என்று தும்மிவிட்டு ஒரு பெண் குடுகுடுவென்று ஜலதோஷ மருந்தைத் தேடிப் படத்தில் ஓடிக் கொண்டிருந்தபோது -

    நிஜமாகவே யாரோ 'அக்சூ' என்று தும்மினார்கள். கும்மென்று ஒரிஜினல் மதுரை மல்லிகைப் பூ வாசனை.

    தொய்ந்து உட்கார்ந்திருந்த நவநீதன் நிமிர்ந்து உட்கார்ந்தான்.

    மிகவும் கவர்ச்சிகரமாகவும் ஆடம்பரமாகவும் பளீரென்று கண்ணைக் கவர்கிற மாதிரியும் உடுத்துக்கொண்டு ஒரு பெண் அவன் இருந்த வரிசையில் மெதுவே வந்து கொண்டிருந்தாள்.

    படம் ஆரம்பித்து வந்தவளாதலால் இருட்டில் அவள் தடுமாறுகிறாளோ? அல்லது ரிஸர்வேஷன் செய்திருந்த தனது நாற்காலி நம்பரைத் தேடுகிறாளா? நவநீதனுக்குப் புரியவில்லை.

    ஆனால் பெரும்பான இடங்கள் காலியாக இருக்கும்போது குறிப்பாக அவள் ஏன் இப்படி இடம் தேடுகிறாள் என்று நவநீதன் எண்ணிக்கொண்டு அந்தப் பெண்ணைத் திரும்பி நன்றாகக் கவனித்தான்.

    வாளிப்பான கட்டான உடம்பு. தங்கப் பட்டை மாதிரி இடுப்பு குறை ரவிக்கையில் ஜொதித்தது. முகப் பவுடரும் மையும் எக்கச் சக்கம். நிறம் நல்ல சிவப்பு. குள்ளம்தான். பெரிய மை தீட்டின கண்கள். கை இல்லாத ரவிக்கை. நாணேற்றப்படத் தயாரான வில் போன்ற கழுத்தின் இறக்கம்.

    நவநீதனுக்கு உள்ளத்தை என்னவோ செய்தது. அந்த மல்லிகை வாசனை அவனுடைய வரிசைக்குப் பின் வரிசையில் மெதுவே வந்து கொண்டிருந்தது. ஓர் இடத்தில் உட்கார்ந்தாள். ஆனால் இரண்டு வினாடியில் அங்கிருந்து மறுபடி எழுந்து இன்னோர் இடத்தில் உட்காந்தாள். இப்படி நாலைந்து தடவை மாறியவள், 'உஸ்ஸ்...' என்று புழுக்கம் தாளாதவளைப் போல் புழுங்கினாள்.

    திரும்பித் திரும்பி நவநீதன் பார்த்தான். அவனுடைய உள் மனத்தில் என்னவோ பரபரப்பு. என்னென்னவோ ஊகங்கள்.

    ஐந்தாம் முறையாக இடம் மாறிய அந்தப் பெண் நவநீதனுக்குச் சரி நேராக அவனுடைய பின் ஸீட்டில் வந்து ஒரு வழியாக உட்கார்ந்து விட்டாள்.

    அவனுக்கு உடம்பு சிலிர்த்து. அந்த மல்லிகை வாசனையை நன்றாக இழுத்து அனுபவித்து உறிஞ்சினான். எங்கே மறுபடியும் இடம் மாறிவிடப் போகிறாளோ என்று அவன் உள்ளம் கிடந்து தவித்தது.

    திரையில் 'விசித்திரப் பாவை' ஓடிக்கொண்டிருந்தாள்.

    லேசாகவும் துணிச்சலாகவும் நவநீதன் திரும்பிப் பார்த்தான்.

    அவள் கைக்குட்டையால் மேல் உதட்டுக்கு மேல் நாசூக்காக ஒற்றிக் கொண்டிருந்தவள், சிறிது முன்புறமாக அவன் பக்கம் குனிந்து, மன்னிக்க வேண்டும். படம் ஆரம்பித்து ரொம்ப நேரமாச்சுங்களா...? என்றவள், மிஸ்டர் செல்வராஜுடன் உங்களைப் பார்த்திருக்கிறேன். அவர் இன்றைக்கு வர்றதா இருந்தார். வரலை... என்றாள்.

    சொர்க்கத்தில் மிதப்பது போலிருந்தது நவநீதனுக்கு. கடைசியில் செல்வராஜ் அவனை ஏமாற்றவில்லை. ஆளை டகார் என்று அனுப்பியிருக்கிறானே.... புல்லரித்தது அவனுக்கு.

    வாயெல்லாம் பல்லாக, இப்போதான் படம் ஆரம்பிச்சுது... என்றான்.

    ரொம்பவும் வியர்க்குதுங்க. இல்லை? என்ன புழுக்கம்! இங்கேதான் கொஞ்சம் காற்று நல்லா வருது...

    ஆமாம்.... ஆமாம்.... ரொம்பப் புழுக்கம்.... என்றான் நவநீதன்.

    அவள் அவனைப் பார்த்து முல்லைச் சிரிப்பொன்று சிரித்தாள்.

    கையைப் பின்னுக்குப் போட்டுக் கொண்டான் நவநீதன்.

    சற்று நேரத்தில் அவன் இதயத்தின் படபடப்பு இன்னும் அதிகமாயிற்று.

    அவனுடைய கையின்மேல் அவளுடைய கை பட்டுக் கொண்டிருப்பது போலிருந்தது. பிரமையா? இல்லை. அவள் தன் கையை அவன் கையால் குலுக்குவது போல ஒரு தரம் பிடித்துவிட்டாள். சிலீரென்று இன்பமான மின்சாரம் பாய்ந்தது நவநீதனுக்கு.

    பின்புறம் திரும்பிப் பார்த்து ரகசியச் சிரிப்பொன்று சிரித்தான். அவளும் சிரித்தாள்.

    பின் ஸீட்டிலிருந்து அவள் கால் அவனது முன் சீட்டை நெருடிக் கொண்டிருந்தது. அந்தக் கால்களை லேசாக வருடி நவநீதன் விஷமம் செய்தவாறே நடுநடுவே தம்பியைப் பார்த்துக் கொண்டான். மாணிக்கம் ஸீட்டில் முன்புறமாக நகர்ந்து உட்கார்ந்து உன்னிப்பாகப் படம் பார்த்துக் கொண்டிருந்தான்.

    அது யாருங்க. ஜெயலலிதாவா, என்று பின்புற ஸீட்டுக்காரி புன்னகையுடன் முன்புறமாகக் குனிந்து கேட்டாள்.

    நவநீதன் மெதுவே கைகளைப் பின்னுக்கு உயர்த்தி அவளது கன்னங்களை வருடினான். லேசாகக் கிள்ளினான். அந்த உதடுகளில் விரலை ஈரப்படுத்திக் கொண்டான்.

    அட நாசமாய்ப் போக! அதற்குள் இடைவேளை வந்துவிட்டதா?

    பளீரென்று எரிந்த விளக்கு வெளிச்சத்தில் அவன் அவளை நன்றாகப் பார்த்தான். அவள் நாணத்தோடு குறும்புச் சிரிப்புடன் தலையைக் குனிந்து கொண்டு கையிலிருந்த பத்திரிகை ஒன்றைப் படிப்பதைப்போல் பாவனை செய்தாள்.

    ஏண்ணா, அந்த டான்ஸ் ஆடினாளே அவளை ஏன் வீட்டை விட்டுத் துரத்திட்டாங்க? என்று மாணிக்கம் சந்தேகம் கேட்டான் அண்ணனை.

    எவளை? யார் வீட்டை விட்டு ஏன் அனுப்பினார்கள்? நவநீதனுக்குப் படம் ஒரு துளியும் பார்த்ததாக நினைவில்லை.

    பையன் ரொம்பச் சுட்டியாப் பேசறானே... யாருங்க? உங்க தம்பியா? என்று பின்னாலிருந்த பெண் தானாகப் பேச்சில் கலந்து கொண்டாள்.

    யாருண்ணா இது? உனக்குத் தெரியுமா? என்று மாணிக்கம் அவளைப் பார்த்துக் கேட்டான்.

    நவநீதன் கொஞ்சம் தடுமாறிப் போனவன் சமாளித்துக் கொண்டு, ஆமாம்... ஆமாம்... தெரியும்.... முன்னே நம்ம எதிர் வீட்டுலே குடியிருந்தாள்.. உனக்குத் தெரியாது... நீ சின்னப் பையன் அப்போ.... என்றான்.

    ஆமாண்டா தம்பி. நான் உன் எதிர் வீட்டிலிருந்தேன்.... நீ என்ன க்ளாஸ் படிக்கிறே? என்றாள் அவள்.

    படம் மீண்டும் தொடங்கியது. சொர்க்க லோகத்தில் சஞ்சரித்த நவநீதனின் உள்ளம் தம்பி மாணிக்கத்துக்கு மிகவும் நன்றி தெரிவித்தது. அவனது பிடிவாதத்தாலல்லவா இவ்வளவு அருமையான சந்தர்ப்பம் கிடைத்தது!

    நண்பன் செல்வராஜ் சதாகாலமும் ஜாலியாக இருக்கிறான் என்றால் ஏன் இருக்கமாட்டான்? ஒரே ஒரு நாள் அனுபவமே இவ்வளவு மனத்தைக் கிளுகிளுக்க வைக்கிறது என்றால்... அதுவும் சும்மா ஒரு மேலோட்ட அனுபவமே இந்தச்

    Enjoying the preview?
    Page 1 of 1