Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Aganaga Natpathu Natpu
Aganaga Natpathu Natpu
Aganaga Natpathu Natpu
Ebook266 pages1 hour

Aganaga Natpathu Natpu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

உண்மையான நட்பைப் பற்றி இந்தப் புதினத்தில் பேசியிருக்கிறேன். இரயில்வே பிளாட்பாரத்தில் ஆரம்பிக்கும் இரண்டு ஏழைச் சிறுவர்களின் நட்பு, அவர்களுடைய வாழ்நாள் முழுவதும் எப்படித் தொடர்கிறது என்று காட்டியிருக்கிறேன். சிரிக்கச் சிரிக்கச் பேசிப் பழகுவது மட்டும் நட்பல்ல. அகம் குளிர நடந்துகொள்வது தான் நட்பு. நட்பின் இலக்கணம் இந்தக் கதையில் வகுக்கப் பட்டிருக்கிறது.

ஒருவரை ஒருவர் நேசிக்கும் நண்பர்கள் வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் பிரிய நேரிடுகிறது. அதன் பின்னர் தவறான புரிதலால் ஒருவரை ஒருவர் வெறுக்கத் தொடங்குகிறார்கள். அடுத்த தலைமுறையிலும் இரண்டு குடும்பங்களிலும் நட்பு தொடர்கிறது.

பிரிந்த நண்பர்கள் கூடுவார்களா? அவர்களுடைய குழந்தைகள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியடையுமா என்பதைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

Languageதமிழ்
Release dateFeb 24, 2024
ISBN6580144610758
Aganaga Natpathu Natpu

Read more from Puvana Chandrashekaran

Related to Aganaga Natpathu Natpu

Related ebooks

Reviews for Aganaga Natpathu Natpu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Aganaga Natpathu Natpu - Puvana Chandrashekaran

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    அகநக நட்பது நட்பு

    Aganaga Natpathu Natpu

    Author:

    புவனா சந்திரசேகரன்

    Puvana Chandrashekaran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/puvana-chandrashekaran

    பொருளடக்கம்

    ஆசிரியர் முன்னுரை

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    ஆசிரியர் முன்னுரை

    உண்மையான நட்பைப் பற்றி இந்தப் புதினத்தில் பேசியிருக்கிறேன். இரயில்வே பிளாட்பாரத்தில் ஆரம்பிக்கும் இரண்டு ஏழைச் சிறுவர்களின் நட்பு, அவர்களுடைய வாழ்நாள் முழுவதும் எப்படித் தொடர்கிறது என்று காட்டியிருக்கிறேன். சிரிக்கச் சிரிக்கச் பேசிப் பழகுவது மட்டும் நட்பல்ல. அகம் குளிர நடந்துகொள்வது தான் நட்பு. நட்பின் இலக்கணம் இந்தக் கதையில் வகுக்கப் பட்டிருக்கிறது.

    ஒருவரை ஒருவர் நேசிக்கும் நண்பர்கள் வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் பிரிய நேரிடுகிறது. அதன் பின்னர் தவறான புரிதலால் ஒருவரை ஒருவர் வெறுக்கத் தொடங்குகிறார்கள். அடுத்த தலைமுறையிலும் இரண்டு குடும்பங்களிலும் நட்பு தொடர்கிறது.

    பிரிந்த நண்பர்கள் கூடுவார்களா? அவர்களுடைய குழந்தைகள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியடையுமா என்பதைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

    புவனா சந்திரசேகரன்.

    அத்தியாயம் 1

    "ஒரு நண்பன் இருந்தால் கையோடு

    பூமியைச் சுழற்றிடலாம்"

    ***

    சென்னை எக்மோர் ஸ்டேஷன். மதுரையில் புறப்பட்ட பாண்டியன் எக்ஸ்பிரஸ் நான்காவது பிளாட்பாரத்தில் வந்து பெருமூச்சு விட்டபடி நின்று, பயணிகளை உதிர்த்தது. அதிகாலை நேரம். பூமியில் இருந்து இருள் பிரியாவிடை பெற்றுக் கொண்டிருந்த நேரத்தில், வெளிச்சம் தயக்கத்துடன் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது. அழையா விருந்தாளி போல வீட்டு வாசலில் தயங்கி நிற்கும் வெயில் இன்னும் கொஞ்ச நேரத்தில் உரிமையுடன் உள்ளே நுழைந்து எல்லோரையும் வறுத்தெடுக்கத் தான் போகிறது. வெயிலை எதிர்த்துப் போராடும் மனத்துணிவு மழை மேகங்களுக்கும், அவற்றைப் பின்தொடரும் ஜில்லென்ற காற்றுக்கும் மட்டுமே உண்டு. ஏழைத் தொழிலாளிகளுக்கும், விவசாயிகளுக்கும் கூட வெயிலை எதிர்த்து நின்று பொருட்படுத்தாமல் உழைக்கும் மனப்பான்மையும் உண்டு.

    தலையில் இருந்து கால் வரை இழுத்துப் போர்த்திக் கொண்டிருந்தான் அந்த இளைஞன். இரண்டாம் வகுப்பு ஏசி கோச்சில் மற்ற பயணிகள் அனைவரும் இறங்கிப் போய்விட, ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த அந்த இளைஞனை அடித்து எழுப்பிக் கொண்டிருந்தான் அவனுடைய நண்பன்.

    தீனா, டேய் தீனா. எழுந்திருடா. சென்னை வந்து எவ்வளவு நேரமாச்சு? இன்னும் நீ தூங்கிட்டே இருக்கயே? எல்லாரும் இறங்கிப் போயாச்சு.

    என்னடா அவசரம்? இன்னும் கொஞ்ச நேரம் தூங்கிக்கறேன் என்பவனைக் கோபத்துடன் வெறித்தான் நீரவ்.

    சரி, நீ தூங்கிட்டே இரு. நான் இறங்கிப் போய் வேலையை முடிச்சிட்டு சாயந்திரம் வரேன். இந்த டிரெயினை இப்போ க்ளீன் பண்ணறவங்க, உன்னைக் குப்பையோடு குப்பையாத் தூக்கிப் போடட்டும். எனக்கென்ன? என்று தன் பயணப்பையை எடுத்துக் கொண்டு கிளம்பினான் நீரவ்.

    அடப்பாவி! என்னை இப்படி தன்னந்தனியா விட்டுட்டு நீ கெளம்பிடுவயா? நண்பேன்டா நான்! என்ன நெனைச்சுட்டுப் பேசறே? என்று பதறியடித்துக் கொண்டு தீனா எழுந்து வர, ஒரு வழியாகத் தங்களுடைய கோச்சில் இருந்து கட்டக் கடைசியாக இறங்கினார்கள் இரண்டு நண்பர்களும்.

    இங்கே பாரு, இப்பவே கெளம்பிப் போய் என்னோட அன்புத் தங்கச்சியைப் பாத்துட்டு, அப்புறமா நாம மூணு பேருமாக் கெளம்பி ‘நண்பன்’ மூவி பாக்கணும்னு தான் பிளான். நீ இப்படி லேட் பண்ணிட்டே போனா நம்ப பிளான் டணால் பணால்னு ஊத்திக்கும் என்றான் நீரவ்.

    டேய், டேய் அப்படில்லாம் பேசாதேடா. நல்ல வார்த்தையாச் சொல்லு. தளபதி படம், அதுவும் சென்னை தியேட்டரில் பாக்கறதுக்காகத் தானே நானே வந்திருக்கேன்? இன் ஃபாக்ட் நீ கூட அதையும் ஒரு காரணமா வச்சுத் தானே கெளம்பினே! இது தீனாவின் நினைவூட்டல்.

    சத்தமாகச் சொல்லிடாதே. எங்க வீட்டுக் குட்டிப் பிசாசு காதில் விழுந்தா ரணகளம் தான். அவளைப் பாக்கறதுக்காகவே நான் மெனக்கெட்டு வரதா நெனைச்சு ஹாஸ்டல் பூரா இவ்வளவு நேரம் டமாரம் அடிச்சிருப்பா. சீக்கிரம் வா, லேட்டாப் போனா அதுக்கு வேற அடி விழும் என்று சொல்லியபடி நண்பனை இழுத்துக் கொண்டு ஓடினான் நீரவ்.

    நண்பனின் பாசமலர்த் தங்கையான குட்டிப்பிசாசைப் பார்க்கும் ஆர்வத்துடன் கூடவே ஓடினான் நீரவ்.

    "ஒரு தங்க ரதத்தில் பொன் மஞ்சள் நிலவு

    என் தெய்வம் தந்த என் தங்கை"

    என்ற தலைவரின் பாடலை ஹம் செய்தபடி தன்னுடன் வந்தவனைப் பார்த்துக் கண்ணடித்தான் நீரவ்.

    பூ மாதிரி மென்மையான ஒரு தங்கையை எதிர்பார்த்து வராதே நண்பா! அவ முள் மாதிரி குத்துவா. தேள் மாதிரிக் கொட்டுவா. பாம்பு மாதிரிச் சீறுவா. புலி மாதிரி உறுமுவா. கெட் ரெடி. அதர்வைஸ் யூ வில் பீ ஷாக்டு என்று எச்சரித்த நீரவ்வைப் பார்த்து தீனா,

    இந்த உலகத்திலேயே தங்கையைப் பத்தி இவ்வளவு புகழ்ச்சியாப் பேசற முதல் அண்ணன் நீயாத் தான் இருப்பே! அதான் சாக்குன்னு அளவுக்கு மீறி ஒரு சின்னப் பொண்ணைத் திட்டாதேடா. நீ கொடுத்து வச்சவன். நான்லாம் கூடப் பிறந்தவங்க யாரும் இல்லையேன்னு எவ்வளவு ஏங்கறேன் தெரியுமா? நான் ஒரு துரதிருஷ்டசாலி. பிறந்த உடனே அம்மாவைத் தொலைச்சாச்சு. அப்பாவாலயும் அம்மாவை மறக்க முடியலை. எங்க காதல் மானுடக் காதல் அல்ல; தெய்வீகக் காதல்னு டயலாக் பேசிக்கிட்டு வேற கல்யாணமும் செஞ்சுக்கலை என்று ஆதங்கப்பட்டான்.

    சரி, சரி, ரொம்ப இமோஷனலாகாதே! நீ சிந்தும் கண்ணீர்த்துளி ஒவ்வொன்றும் என் இதயத்தைக் கோடாரியாகத் தாக்கிக் கிழிக்கிறதே! கண்ணீரைத் துடைக்க நான் இருக்கிறேன். கலங்காதே நண்பா! என்று டயலாக் அடித்த நீரவ்வை முறைத்தான் தீனா.

    உன்னோட டயலாகைக் கேட்டு என் தலை சுக்குநூறாக வெடிக்கப் போகுது. சீக்கிரம் போகலாம் வா. இதை விட உன் தங்கச்சியைப் பாக்கறதே பெட்டர்னு நினைக்கிறேன் என்று நீரவ்வின் ஸோ கால்டு குட்டிப்பிசாசைச் சந்திக்க ஆவலுடன் காத்திருந்தான் தீனா. குட்டிப்பிசாசு என்னவோ அவனை முதல் தடவையிலேயே க்ளீன்போல்ட் செய்து விட்டாள்.

    தென்றலாக வந்து மோதினாள். புயலாக என் வாழ்க்கையில் புகுந்து புரட்டிப் போட்டாள். ஐஸ்க்ரீமாக உள்ளத்தில் ஜில்லென்று இறங்கினாள். பூவாகப் பார்வையால் வருடினாள் என்று கவிதையாக வரிகள் தீனாவின் உள்ளத்தின் ஆழத்தில் இருந்து ஊற்றெடுத்துப் பீறிட்டு வெளியே வந்தன.

    டே அண்ணா என்றபடி ஓடிவந்த நவீனா, கூடவே இருந்த தீனாவைப் பார்த்து சற்றே தயங்கி நின்றாள்.

    இது வேற யாருமில்லடா கேபி. இவன் தான் என்னோட பெஸ்ட் தோஸ்த், தீனா என்று என்னால் அழைக்கப்படும் தீனதயாள். உத்தரப்பிரதேசத்தில் இருந்து மதுரைக்குப் படிக்க வந்திருக்கான் என்று நீரவ் அறிமுகம் செய்து வைத்ததும் தனது வழக்கமான குறும்புத்தனத்தை மூட்டை கட்டி வைத்து விட்டுக் கை கூப்பினாள் நவீனா.

    என்னது? உத்தரப் பிரதேசத்தில் இருந்து மதுரைக்குப் படிக்க வந்திருக்காரா? சென்னைக்குன்னாக் கூடா ஏத்துக்கலாம். மதுரைக்கு எப்படி?

    அது வந்து இவனோட அப்பா, பல வருடங்களுக்கு முன்னால மதுரையிலும், சுத்து வட்டாரத்திலும் இருந்திருக்காராம். அதுனால ஸ்பெஷலா இவனை மதுரைக்குப் படிக்க அனுப்பிச்சிருக்கார். இவனுக்குத் தமிழ் நல்லாத் தெரியும். அம்மா தமிழ்நாட்டுப் பொண்ணு தான். அப்பாவும் தமிழ் நல்லாத் தெரிஞ்சவர் தான். வீட்டில் தமிழில் தான் பேசிக்குவாங்களாம்

    அப்படியா? அப்போ மதுரை அனுப்பினதுக்கு ஏதாவது ஸ்ட்ராங் ரீஸன் இருக்கும். விட்டுட்டுப் போன, இல்லைன்னா தொலைச்ச எதையோ மீட்டு எடுக்க அனுப்பி இருக்கலாம் என்று நெத்தியடியாகத் தனது கருத்தைச் சொல்லி, ‘நான் ஒரு புத்திசாலிப் பெண்’ என்பதை ஆணித்தரமாக நிரூபித்தாள்.

    அது சரி, நைசா என்னவோ கேபின்னு கூப்பிட்டயே? அதுக்கு என்ன அர்த்தம்? என்று முறைத்தவளிடம், தீனா, நான் சொல்லறேன் என்று சொல்ல ஆரம்பிக்க, அவனுடைய காலை நச்சென்று மிதித்துக் கத்த விட்டான் நீரவ்.

    அது வந்து நீ, ஃபிலிம் இன்ஸ்ட்டிடியூட்டில் படிக்கிறே இல்லையா? கே. பாலசந்தர் மாதிரி பெரிய ஆளா வருவேன்னு மனசில் ஒரு நம்பிக்கை. அது தான் அப்படிக் கூப்பிட்டேன் என்று சொல்லி விட்டு, அசட்டுத்தனமாக இளித்தான்.

    இல்லையே! எங்கயோ ஏதோ இடிக்குதே? கேபின்னு சொன்ன போது பி (b) யாக் கேக்கலை. பி(p) தான் காதில் விழுந்தது. நீ வேற ஏதோ பட்டப்பேர் வச்சிருப்பே நிச்சயமாக. குட்டிப் பாப்பா, குட்டிப் பிசாசு, குட்டிப் பேய் இந்த மாதிரி இருக்கலாம். சரியா? என்று வெற்றிப் பெருமிதத்துடன் ஒற்றை விரலை அவர்கள் முன்னே நீட்டியவளுக்கு பதில் சொல்ல முடியவில்லை நீரவ்வால்.

    சரி சரி, அந்த ஆராய்ச்சியை விடு, இந்தா அம்மா, அப்பா கொடுத்து விட்ட சாமான்கள். ரூமில வச்சிட்டு சீக்கிரம் கிளம்பி வா. நண்பன் படம் பாக்கப் போகலாம். உன் ஃப்ரண்ட் யாராவது வந்தாலும் கூட்டிட்டு வந்துடு என்பவனைப் பார்த்து ஏளனமாக சிரித்தாள் கேபி.

    புரியுது, புரியுது பிபி( pp). நீ என்ன சொல்லறேன்னு நல்லாப் புரியுது என்று சொன்னவளை நீரவ்வின் குரல் தடுத்து நிறுத்தியது.

    என்னது பிபியா?

    ஆமான்டா பெரிய பிசாசு என்று சொல்லி விட்டுக் கீழே விழுந்த கோலிக்குண்டு போல குடுகுடுவென்று ஓடினாள் நவீனா. அவளுடைய பேச்சைக் கேட்டுச் சிரிப்பை அடக்க முடியவில்லை தீனாவால்.

    அவளுடைய கையில் ஒரு கட்டைப் பை. மதுரைக்காரர்கள் கையில் கட்டைப்பையுடன் தெருக்களில் அலைவது சர்வ சாதாரணம். ஒரு பிளவுஸ் பீட் வாங்கினால் கூடக் கட்டைப்பை அதனுடன் கிடைக்குமா என்று கேட்டு வாங்கி விடும் சாமர்த்தியம் உள்ள

    மதுரைவாசிகள், விமானப் பயணத்தில் கூட அதைத் துறப்பதில்லை. மதுரை என்ன, தமிழ்நாட்டின் எல்லா ஊர்களிலும் இந்தக் கட்டைப்பை என்று அழைக்கப்படும் இந்த, பிக் ஷாப்பர் பை மீது அபரிதமான காதல் உண்டு.

    நவீனாவின் கையில் இருந்த கட்டைப்பையில் அம்மா, அப்பா அனுப்பிய தின்பண்டங்கள் அவளைப் பாசத்துடன் கூவி அழைக்க, அந்தப் பையை யார் கண்ணிலும் படாமல் ஒளித்து வைத்துவிட்டுத் திரும்பி வந்தாள். யார் கண்ணிலாவது பட்டு விட்டால் போச்சு. நவீனா மாலையில் திரும்பி வருவதற்குள் நிச்சயமாகக் காலியாகி விடும். கடுப்பாகி விடுவாள்.

    அம்மாவின் கைத் தயாரிப்பான நொறுக்குத் தீனியா, தளபதியின் படமா என்ற வழக்காடுமன்றத்தில் ஒரு வழியாக, திரைப்படம் வென்று விட்டது. தனது உயிர்த் தோழி அனகாவை அழைத்துக் கொண்டு வரவேற்பறைக்கு வந்தாள். அனகாவும், நீரவ்வும் அர்த்தமுள்ள பார்வைகளைப் பரிமாறிக் கொள்வதை தீனா கவனித்து விட்டான். அந்த நால்வர் குழு வெற்றிகரமாகத் திரைப்படம் பார்க்க விரைந்தது.

    திரைப்படம் பார்த்து விட்டு மதிய உணவை ஒரு செட்டிநாடு உணவகத்தில் முடித்த பின்னர் நால்வரின் அரட்டைக் கச்சேரி தொடர்ந்தது.

    சரி நவீனா, ஏதோ முக்கியமான விஷயம் டிஸ்கஸ் பண்ணனும்னு ஃபோனில் சொன்னயே? என்னன்னு சொல்லு. பேசி முடிச்சதும், வேகமாகப் போயி ஈவினிங் டிரெயினைப் பிடிக்கணும் நாங்க என்றான் நீரவ், ஓரக் கண்ணால் அனகாவைப் பார்த்தபடி.

    அதுவா, எங்களோட ப்ராஜெக்டுக்காக ஒரு ஷார்ட் ஃபிலிம் தயாரிச்சுக் கொடுக்கணும். நானும் அனகாவும் ஒரு டீம். ஒரு நல்ல தீமும் டைட்டிலும் சொல்லேன், ப்ளீஸ், ப்ளீஸ். ஒரு கண்டிஷன், காதல் தோல்வி, ஆன்ட்டி ஹீரோ, ஹீரோயின் மட்டும் வேணாம். வேற ஏதாவது புதுசாச் சொல்லேன் என்றவளை, தீனா வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

    குறுகுறு கண்கள், குண்டுக் கன்னங்கள், அறிவொளி வீசும் பார்வை, லேசாகப் பூசியது போன்ற தேகம், மிதமான உயரம் எல்லாவற்றையும் மீறி அவளுடைய முகத்தில் இருந்த ஏதோ ஒன்று அவனை ஈர்த்தது. மீண்டும் மீண்டும் அவள் பக்கம் சாய்ந்த பார்வையை அவனால் திசை திருப்ப முடியவில்லை.

    நான் சொல்லட்டுமா? இன்னைக்குப் பாத்த மூவி நண்பர்கள் பத்தித் தானே? நட்பைப் பத்தின கதை ஒண்ணு சுருக்கமாச் சொல்லட்டுமா? என்ற தீனாவை ஆச்சரியமாகப் பார்த்தாள் நவீனா.

    ஓகே சொல்லுங்க. ஆல் ஈஸ் வெல், ஆல் ஈஸ் வெல். நட்பு, தியாகம் இப்படி இருந்தா போரிங்காயிடுமோன்னு தோணுது என்றாள் நவீனா.

    "நட்போட சேந்து பிரியம், தியாகம் இந்த மாதிரி மட்டும் போனால் அப்படி இருக்கும்.

    ஆனா அதுவே துரோகம், சந்தேகம், பிரிவு அப்படின்னு போனா? "என்றான் தீனா.

    அது ஓகே தான். அதுவும் பழைய கான்செப்ட் தானே? புதுமையா ஒண்ணும் இல்லையே? என்று எதிர்வாதம் செய்தாள் அனகா இப்போது.

    "எல்லா தீம்களிலும் அப்படித் தான். இராமாயணம், மகாபாரதம், சிலப்பதிகாரம் போன்ற கதைகளைத் தானே விதவிதமான அலங்காரங்களுடன் வேற வேற மாதிரி ப்ரஸன்ட் பண்ணறோம்? என்ன அதே சாப்பாட்டை வேற தட்டில வேற ஸைட் டிஷ்ஷோட மக்களுக்குக் கொடுக்கறோம்.

    உருளைக்கிழங்கு சிப்ஸைப் புதுப்புது மசாலாக்களுடன் பாக்கெட்டில் போட்டு விக்கலயா? கொழுக்கட்டை வேண்டாம்னு சொல்வறவங்க மோமோஸ் சாப்பிடறதில்லையா? இடியாப்பம் பிடிக்கலைங்கறவங்க நூடுல்ஸ் சாப்பிடலையா?

    இன்றைக்குப் பாத்த படமும் மூன்று நண்பர்களோட நட்பு பத்தித் தானே? கூடவே கல்வியின் உண்மையான அர்த்தத்தையும், வெற்றின்னா உண்மையில் எதுன்னும் காமிச்சிருக்காங்க. பழைய சோறு தான். புதிய பாத்திரம் "என்று விவாதித்த நண்பனின் புதிய அவதாரத்தை வியப்புடன் பார்த்தான் நீரவ்.

    நட்பு தான் பேஸிக்காக் கதையில் இருக்கு... அதையே சொல்லற விதமாச் சொன்னா, கவனத்தை ஈர்க்கலாம். நட்பைப் பத்தித் பேசற போது கதையில் சில திருப்பங்கள், ஸஸ்பென்ஸ், நல்ல முடிவு கொடுத்தா ஜெயிக்கலாம். ஜெஃப்ரி ஆர்ச்சரோட, கேன் அன்ட் ஏபில்( Kane and Abel ) கதை படிச்சிருக்கீங்களா? "என்றவனுக்கு, அனகா பதில் கூறினாள்.

    படிச்சிருக்கோமே? எங்க ரெண்டு பேருக்கும் பிடிச்ச ஆதராச்சே? தி ப்ராடிகல் டாட்டர், ஷேல் வி டெல் தி ப்ரஸிடென்ட், எ பிரிஸனர் பை பர்த், ஸன்ஸ் ஆஃப் பார்சூன், நாட் எ பென்னி லெஸ், நாட் எ பென்னி மோர் இப்படி நிறையப் படிச்சிருக்கோமே? எல்லாமே அற்புதமான கதைகள் என்றாள் நவீனா.

    கேன் அன்ட் ஏபிள் கதையில அவங்க ரெண்டு பேரும் நண்பர்களா? பகைவர்களா?

    என்று நீரவ் கேட்க,

    ரெண்டும் இல்லை. ஒரே சமயத்தில் போராடி வாழ்க்கையில் ஜெயிக்கும் இரண்டு சமகால மனிதர்கள். அவங்க நண்பர்களா, பகைவர்களான்னு அவங்களுக்கே தெரியாது. இரண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் வெறுக்கலை. போட்டி போட்டு முன்னேறினாங்கன்னு கூடச் சொல்லலாம். ஆனா வாழ்க்கையின் எந்தக் கட்டத்திலும் அவங்க ஒருத்தரை ஒருத்தர் மறக்கலை. ஏதோ ஒரு கனெக்ஷன் அவங்களுக்குத் தொடர்ந்து இருந்தது. குஷி படத்தில் காதலர்கள் மாதிரி இந்தக் கதையில் நண்பர்கள். அவ்வளவு தான். அந்த மாதிரி இரண்டு மனிதர்களின் கதையை நான் சுருக்கமாச் சொல்லறேன். அவங்க நண்பர்களா இல்லை பகைவர்களான்னு நீங்களே முடிவு பண்ணிச் சொல்லுங்க என்ற தீனா, அந்தக் கதையை அவர்களுக்கு சுருக்கமாகச் சொன்னான்.

    கதையை அவன் சொல்லி முடித்ததும் அனைவருமே நெகிழ்ந்து போய் நின்றார்கள்.

    அத்தியாயம் 2

    "தோழா, தோழா, தோள் கொடு

    கொஞ்சம் சாஞ்சுக்கறேன்"

    ***

    தீனா கதையைச் சொல்ல ஆரம்பித்தான்.

    "இரண்டு மனிதர்களின் கதை இது. உண்மையாக நடந்தது தான். இரயில்வே பிளாட்பாரத்தில் ஒன்று சேர்ந்து நட்பால் இணைந்தார்கள். பின் பிரிந்தார்கள். தொடர்பு அறுந்து போனது. ஆனால் மனதின் ஆழத்தில் ஒரு பந்தம் தொடர்ந்து கொண்டிருந்தது. இறுதி மூச்சை உதிர்ப்பதற்குள் சந்திக்க வேண்டும் என்ற ஆவல் இன்னமும் உயிர்ப்பாக இருக்கிறது. இதன் முடிவை உங்கள் கிரியேட்டிவிட்டியைப் பயன்படுத்தி நீங்களே உருவாக்கிக் கொள்ளலாம். இவர்கள் வாழ்க்கையில் நடந்த சில உண்மையான நிகழ்ச்சிகளை மட்டும் நான் சொல்லறேன். அதை வச்சு மீதியை நீங்களே டிரை

    Enjoying the preview?
    Page 1 of 1