Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Oonaagi Uravaagi Uyiraagi!
Oonaagi Uravaagi Uyiraagi!
Oonaagi Uravaagi Uyiraagi!
Ebook217 pages1 hour

Oonaagi Uravaagi Uyiraagi!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சங்கமம் தளத்தில் நடந்த எக்ஸ்பிரஸ் நாவல் போட்டியில் ஆறுதல் பரிசு பெற்ற கதை. முண்டாசுக் கவி பாரதியின் இளைய பாரதத்தை இந்தக் கதையில் நான் கொண்டு வர முயற்சி செய்திருக்கிறேன். நல்ல சமூகக் கருத்துக்களைச் சொல்கின்ற ஒரு ஃபேண்டஸி கதையாக என்னுடைய முயற்சியை உங்கள் முன் படைக்கிறேன்.

Languageதமிழ்
Release dateOct 1, 2022
ISBN6580144609112
Oonaagi Uravaagi Uyiraagi!

Read more from Puvana Chandrashekaran

Related to Oonaagi Uravaagi Uyiraagi!

Related ebooks

Reviews for Oonaagi Uravaagi Uyiraagi!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Oonaagi Uravaagi Uyiraagi! - Puvana Chandrashekaran

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    ஊனாகி உறவாகி உயிராகி!

    Oonaagi Uravaagi Uyiraagi!

    Author:

    புவனா சந்திரசேகரன்

    Puvana Chandrashekaran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/puvana-chandrashekaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    முன்னுரை

    யாதுமாகி நிற்பவள் யார்?

    அன்பின் தெய்வமான அன்னையா?

    ஆசானிடம் நாம் கற்கும் கல்வியா?

    மனிதகுலத்தை இணைக்கும் மனித நேயமா?

    கொடிய நோய்களில் இருந்து மனிதரை மீட்டெடுக்கும் மருத்துவமா?

    புத்தம் புது கண்டுபிடிப்புகளை நித்தம் அள்ளித் தரும் அறிவியலா?

    எங்கும் பெருகி வரும் கணினிகளா?

    இடுக்கண் களையும் நட்பு தேவதையா?

    திகட்டாத இன்பம் அள்ளித் தரும் காதலா?

    மழலையின் இனிமையா?

    யாமறிந்த மொழிகளில் சிறந்த நம் தமிழ் மொழியா?

    செல்வமா? வீரமா? ஆன்மீகமா?

    ஐம்பூதங்களின் ஆற்றலா?

    அகிலத்திற்கு எழிலூட்டும் இயற்கை அன்னையா?

    பிறந்த மண்ணின் மீது நாம் கொண்டுள்ள நாட்டுப் பற்றா?

    எதுவாக இருக்கும் என்று நான் தேடி அலைந்தேன். உதவிக்கு வந்த அந்த முண்டாசுக் கவி, முறுக்கிய மீசையுடன் எனக்கு வழிகாட்டினான்.

    "தொன்று நிகழ்ந்ததனைத்தும் உணர்ந்திடும்

    சூழ்கலை வாணர்களும்

    இவள் என்று பிறந்தனள் என்றுணராத

    இயல்பினளாம் எங்கள் தாய்!

    எங்கள் தாய்!" என்று முழங்குகிறான்.

    பாருக்குள்ளே நல்ல நாட்டைப் படைக்கவும், தேடி நித்தம் சோறு தின்று கதைகள் பேசிப் பொழுதைக் கழிக்காமல் நாட்டை மேம்படுத்தவும் இளைய தலைமுறையை அழைக்கிறான்.

    என்ன தான் சொல்லுகிறான் என்று கதையில் பார்ப்போம்! என்னுடன் சேர்ந்து பயணிக்க உங்களையும் அழைக்கிறேன்.

    நாவல் போட்டியில், யாதுமாகி நின்றாய்! என்ற கருவில் எழுதி ஆறுதல் பரிசு பெற்ற கதை.

    அத்தியாயம் 1

    மனதிலுறுதி வேண்டும்!

    யாதுமாகி நின்றாய்- காளீ

    எங்கு நீ நிறைந்தாய்!

    தீது நன்மையெல்லாம்-காளி

    தெய்வ லீலை யன்றோ!

    பூதமைந்து மானாய்!

    பொறிகள் ஐந்துமானாய்!

    போதமாகி நின்றாய்-காளி

    பொறியை விஞ்சி நின்றாய்!

    (சுப்ரமணிய பாரதியார்)

    அப்பாவின் கணீர் குரலுடன் பூஜை மணி அடிக்கும் சத்தமும் கேட்டுக் கண்களை மெல்லத் திறந்தான் பரதன். அவசரமாக மொபைலை எடுத்து நேரத்தைப் பார்க்கக் காலை மணி ஆறு. நல்ல வேளை அதிகம் லேட்டாகவில்லை.

    அப்பா, அம்மா, மற்ற உடன்பிறப்புகள் பூஜையறையில் பக்தியுடன் கைகளைக் கூப்பி நிற்க, பரதன் மட்டுமே லேட். இரவு நீண்ட நேரம் விழித்திருந்து இன்றைய இண்டர்வ்யூவிற்காகத் தயார் செய்து கொண்டு இருந்ததால் எழுந்திருக்கக் கொஞ்சம் தாமதமாகி விட்டது. இல்லையென்றால் சாதாரணமாக இவ்வளவு நேரம் எழுந்திருந்திருப்பான்.

    அப்பா பாரதியின் பாடல்களுக்குத் தீவிர இரசிகர். தன்னம்பிக்கையும் புத்துணர்ச்சியும் ஊட்டும் கவிதை வரிகள் தினப்படி பூஜை முடிக்கும் போது கண்டிப்பாகப் பாடித் தான் முடிப்பார்.

    வேகவேகமாகத் தயாராகி பரத் பூஜையறைக்குச் சென்றான். எல்லோரும் பூஜையறையை விட்டு வெளியேறியிருக்க, அங்கே எரிந்து கொண்டிருந்த குத்துவிளக்கின் முன்னால் நின்று கைகளைக் கூப்பித் தொழுதுவிட்டு பரத் காலை உணவிற்காக வந்தான்.

    எல்லோரும் சேர்ந்து தான் சாப்பிடுவது வழக்கம். தம்பி, தங்கை காலை உணவை முடித்தவுடன் ஸ்கூல் கிளம்ப வேண்டியிருப்பதால் காலை உணவு சீக்கிரம் முடிந்து விடும். அம்மா அதிகாலையில் எழுந்து காலை உணவு, மதிய உணவுக்கான டப்பாக்கள் எல்லாம் தயாரித்து வைத்துவிடுவார். அப்பாவும் நிறைய உதவி செய்வார். மொத்தத்தில் இனிமையான இல்லறம் அவர்களுடையது.

    அப்பா கயிலைநாதர் அரசாங்க வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். அம்மா சிவகாமி அன்பான இல்லத்தரசி. தங்கை பவித்ரா குறும்புத்தனமான உற்சாக மூட்டை. பன்னிரண்டாம் வகுப்பு படிக்கிறாள். அடுத்து மெடிக்கல் படிக்க அவளுக்கு ஆசை. அடுத்து உட்கார்ந்து அமைதியாக சாப்பிட்டுக் கொண்டிருக்கும் தம்பி செழியன் கடைக்குட்டி. பத்தாம் வகுப்பு. எல்லோருக்கும் செல்லம். அவன் எந்த நிமிடத்தில் எப்படி மாறுவான் என்று யாராலும் சொல்ல முடியாது. சில சமயம் ஊசிப் பட்டாசாகப் பொரிந்து தள்ளுவான். சில சமயம் மழையில் நமுத்துப் போன‌ பட்டாசாக, புஸ்ஸாகி விடுவான்.

    அப்பா எதிரில் பவித்ரா, செழியன் இரண்டு பேரும் ஊமைகள் போல வாயை மூடிக் கொண்டு இருந்து விட்டு அப்பா இல்லாத போது ஒரே ரகளை தான்.

    தம்பியும், தங்கையும் ஸ்கூல் பேக்குடன் பள்ளிக்குக் கிளம்பினார்கள்.

    பை ண்ணா. பெஸ்ட் ஆஃப் லக் என்று சொல்லி விட்டு இரண்டு பேரும் சிட்டாகப் பறந்தனர். வெளியே இறங்கியதும் இரண்டு பேருக்கும் ஏதோ விவாதம். சளசளவென்று சத்தம் கேட்க,

    என்னாச்சு அங்கே? என்ன சண்டை அங்கே? என்று அப்பா குரல் கொடுத்தார்.

    ஒண்ணுமில்லைப்பா, ஒண்ணுமில்லை. இதோ கிளம்பிட்டே இருக்கோம் என்று குரல் கொடுத்துக் கொண்டே சைக்கிள் பெடலில் காலை வைத்து மிதித்தார்கள் இரண்டு பேரும். பக்கத்திலேயே ஸ்கூல் இருப்பதால் சைக்கிளில் தான் போவார்கள்.

    பரதன் பொறியியல் முடித்து விட்டு வேலை தேடிக் கொண்டிருக்கும் வி. ஐ. பி. அதாவது வேலையில்லாப் பட்டதாரி.

    கேம்பஸ் இண்டர்வ்யூவில் எதுவும் சரியாகக் கிடைக்காததால் இப்போது வரிசையாக அப்ளை செய்து இண்டர்வ்யூ ஒவ்வொன்றிற்காகப் போய்க் கொண்டிருக்கிறான்.

    பரதா, ஞாபகமா எல்லாச் சான்றிதழ்களும் பாத்து எடுத்துக்கோ. தைரியமாக் கேள்விகளுக்கு பதில் சொல்லு. நம்பிக்கையோட போயிட்டு வா. அம்மாட்டச் செலவுக்குப் பணம் கொடுத்திருக்கேன். ஞாபகமா வாங்கிட்டுப் போ. எத்தனை மணிக்கு இண்டர்வ்யூ? அவங்க கொடுத்த நேரத்துக்கு முன்னாலயே அங்க போய் டாண்ணு நிக்கணும். அவங்க நேரத்துக்கு ஆரம்பிக்கிறாங்களோ இல்லையோ நாம மட்டும் நேரம் தவறக் கூடாது என்று வழக்கமான அறிவுரைகளைச் சொல்லி விட்டு அவரும் கிளம்பினார்.

    அவனுடைய நண்பர்கள் வீட்டில் எல்லாம் அம்மா, அப்பா சலிப்போடு பேசுவதாக நண்பர்கள் வருத்தத்துடன் சொல்வதை பரதன் கேட்டிருக்கிறான். ஆனால் கயிலைநாதனோ, சிவகாமியோ அந்த விஷயத்தில் குழந்தைகள் மனம் புண்படும்படியாக எப்போதுமே பேசியதில்லை.

    ஆனாலும் பரதனுக்குத் தான் வருத்தமாக இருக்கும். அவன் தான் தன்னுடன் கூடப் படித்தவர்கள் பெரும்பாலோர் இஞ்சினியரிங் காலேஜில் சேருகிறார்கள் என்று சேர்ந்தான். அதிலும் அம்மா, அப்பா தலையிடவில்லை. மெக்கானிக்கல் படிக்க ஆசைப்பட்டான். கிடைத்தது ஐ.டி. ஏதோ படித்து முடித்து சுமாராக மதிப்பெண் வாங்கியதால் கேம்பஸிலும் ஸெலக்ட் ஆகவில்லை.

    இப்போது நினைத்துப் பார்த்தால், ‘இன்னும் கொஞ்சம் நல்லாப் படிச்சிருக்கலாமோ? அப்பக் கொஞ்சம் கஷ்டப்பட்டிருந்தா, இப்ப இந்த மாதிரி மனம் நொந்து போய் நிற்கும் நிலை வந்திருக்காது ‘என்று பரதன் மனதிற்குள் எண்ணங்கள் ஓடின.

    ‘எது வாழ்க்கை? கிடைப்பதில் காம்ப்ரமைஸ் செய்து கொண்டு வாழ்வதா? எது கிடைக்கவில்லையோ அதை எண்ணி ஏக்கத்துடன் வாழ்வதா? இல்லை கிடைத்ததில் நிறைவு கொண்டு சந்தோஷமாக வாழ்வதா? இல்லை கிடைக்க வேண்டும் என்று நினைத்ததை இலக்காக வைத்து அதை எட்டிப் பிடிக்க முயற்சி எடுப்பதா?’ பரதனுடைய வயதிற்கு இதெல்லாம் புரிவதில்லை. ஏதோ கையில் கிடைத்த நூலைப் பிடித்துக் கொண்டு முன்னேற வேண்டிய சூழ்நிலை.

    ஆனால் நல்ல வேலை கிடைத்து அம்மா, அப்பாவை நன்றாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை மட்டும் மனதில் நிறைய இருக்கிறது. பாவம் அப்பா, குடும்பத்தில் தலைமகனாகப் பிறந்து பொறுப்பில்லாத அப்பா, நோயாளியான அம்மா, வளர்ந்து கொண்டிருந்த தம்பி, தங்கைகள் என்று எல்லோரையும் சமாளித்து முன்னுக்கு வந்தவர்.

    அதனாலேயே அசாத்தியப் பொறுமையும், சகிப்புத்தன்மையும் உண்டு அவருக்கு. இந்த வேலையாவது கிடைத்தால் அப்பாவின் சுமைகளைக் கொஞ்சமாவது பகிர்ந்து கொள்ளலாம்.

    ஆனால் நாம் நினைப்பதெல்லாம் நடந்து விடுவதில்லையே! வழக்கம் போலத் தோல்வி தான். விரக்தி, ஏமாற்றத்துடன் கிளம்பினான் இண்டர்வ்யூ நடந்த இடத்தில் இருந்து. அவனைப்போல ஆயிரக் கணக்கானவர்கள் வந்து கலந்து கொண்ட தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரைத் தவிர மற்றவர்கள் சோகம் படிந்த முகத்துடன் அங்கிருந்து கிளம்பினார்கள்.

    ‘வீட்டுக்குத் திரும்பிப் போயி என்னத்தை சாதிக்கப் போறோம்? அம்மா, அப்பா, தம்பி, தங்கை எல்லாரும் எனக்கு வேலை கெடைச்சிருச்சுங்கற செய்திக்காக ஆசையாக் காத்துக் கிட்டிருப்பாங்களே! அவங்க முகத்தைப் பாத்து எப்படி பதில் சொல்லறது?’ என்று யோசித்து யோசித்துக் குழம்பிய மனத்துடன் பரதன் கடற்கரைக்குப் போனான்.

    பெசண்ட் நகர் பக்கம் அஷ்டலக்ஷ்மி கோயில் அருகேயிருந்த கடற்கரைக்குத் தான் போனான். வெயிலின் தாக்கம் குறையும் வரை அங்கேயிருந்த டீக்கடை பெஞ்சில் உட்கார்ந்து விட்டு வெயில் கொஞ்சம் தணிந்ததும் அங்கே கடற்கரையை ஒட்டியே திருவான்மியூரை நோக்கி நடக்கத் தொடங்கினான்.

    நடுவில் மீனவர்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதியை அடைந்து ஜன நடமாட்டமில்லாத ஒரு பகுதியை அடைந்து ஒரு உபயோகமில்லாத பழைய படகின் நிழலில் படகில் சாய்ந்து உட்கார்ந்தான். இந்தமுறை அவனால் தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. வாழ்க்கை கசந்து விட்டது.

    நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறனுமின்றி வஞ்சனை செய்வோர் வசிக்கும் உலகில் இனியும் வசிக்கும் ஆசை மனதில் இருந்து போய் விட்டது. உயிரை மாய்த்துக் கொள்ளும் முடிவுடன் தான் இரவை எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருந்தான்.

    தண்ணீர் தாகமெடுக்க எழுந்து ஒரு குடி நீர் பாட்டிலை வாங்கி வருவதற்காக அருகிலிருந்த கடைக்குப் போன போது தான் அந்த சின்னப்பெண்ணைப் பார்த்தான். கையில் ரோஜாப்பூக்களை வைத்துக் கொண்டு இளைஞர்களாகப் பார்த்து ஓடி ஓடிப் போய் விற்றுக் கொண்டிருந்தாள். முகத்தில் புத்துணர்ச்சியும் சுறுசுறுப்பும் பொங்கி வழிந்தன. அவளைப் பார்த்தால் அங்குமிங்கும் சிறகடித்துப் பறக்கும் அழகான பட்டாம்பூச்சி போலத் தான் இருந்தது.

    அவளையே கவனித்துக் கொண்டிருந்த போது தான் ஓரமாக உட்கார்ந்து கொண்டு இருந்த அந்தச் சிறுமியின் பெற்றோரைப் பார்த்தான் பரதன்.

    கால்கள் இல்லாத அப்பா; அருகில் இருந்த கண்பார்வை இழந்த அம்மா; நடுநடுவே ஓடிப்போய் அவர்களுடன் போய்ப் பேசிவிட்டு வந்து தன் விற்பனையைத் தொடர்ந்தாள்.

    புராணக் கதையில் படித்த சிரவணன் பற்றிய நினைவு வந்தது பரதனுக்கு.

    கண்பார்வை இழந்த தாய், தந்தையரைத் தராசு போலத் தோளில் சுமந்து வரும் சிரவணன், வனத்தில் அவர்கள் தாகம் தீர்க்கத் தண்ணீர் எடுத்துவரப் போகும் சமயம் தசரத மகாராஜாவின் அம்புக்கு இரையாகி மடிகிறான். அவனுடைய இறுதி ஆசைப்படி சிரவணனின் தாய் தந்தையரின் தாகத்தைத் தீர்த்து விட்டு நடந்த தவறை தசரத மகாராஜா ஒத்துக் கொள்கிறார். சிரவணனின் தந்தையான ரிஷியால் தசரத மகாராஜா புத்திர சோகத்தால் இறந்து போகும் சாபத்தைப் பெறுகிறார். கைகேயியின் ஆணைப்படி இராமன் வனவாசம் செல்ல, தசரதர் புத்திர சோகத்தால் உயிரிழந்ததும் அந்த சாபத்தின் விளைவால் தான் என்று அந்தக் கதை சொல்கிறது.

    இந்தப் பட்டாம்பூச்சிச் சிறுமியைப் பார்த்ததும் சிரவணனின் மறு அவதாரமாகத் தோன்றியது பரதனின் மனதில். ஏழ்மையிலும் சோகத்திலும் கூடத் தன்னம்பிக்கை இழக்காமல் உழைத்துத் தன் தாய், தந்தையைப் பார்த்துக் கொள்ள ஆசைப்படும் இந்தச் சிறுமியின் முன்னால் நல்ல குடும்பம், அடிப்படை வசதிகளுக்குக் குறைவில்லாமல் தாங்கும் அப்பா, அன்பைப் பொழியும் அம்மா, தன்னைச் சுற்றி வரும் தம்பி, தங்கையென்று எல்லாம் இருந்தும் வேலை கிடைக்காததால் விரக்தியடைந்து தற்கொலைக்குத் துணியும் தான் எங்கே என்று ஒப்பிட்டுப் பார்த்து வெட்கித் தலை குனிந்தான் பரதன்.

    புதிதாகத் துளிர்த்த நம்பிக்கையுடன் எழுந்து நடக்க ஆரம்பித்தான். ‘இந்த வேலை கிடைக்காவிட்டால் என்ன? அடுத்து எத்தனையோ வாய்ப்புகள் வரலாம்? யார் கண்டது? வங்கியில் கடன் வாங்கி ஏதாவது தொழில் கூட ஆரம்பிக்கலாம்? வேற அரசாங்க வேலை, வங்கி வேலை என்று தேர்வுகள் எழுதலாம். இல்லையென்றால் ஐ.ஏ.எஸ். தேர்வுக்குக் கூடத் தயாராகலாம்’என்று மனதில் ஓடிய புதிய கனவுகளுடன் உற்சாகத்துடன் வீட்டை நோக்கி நம்பிக்கையுடன் நடந்தான்.

    வீட்டு வாசலில் பதட்டத்துடன் காத்துக் கொண்டிருந்த அம்மா, ஏண்டா பரதா, எத்தனை தடவை ஃபோன் பண்ணிட்டே இருந்தேன்? ஏன் ஃபோனை எடுக்கல? எவ்வளவு கவலையாயிடுச்சு தெரியுமா? என்று பொரிந்து தள்ள, ஸெல்ஃபோனை எடுத்துப் பார்த்தான். ஏகப்பட்ட மிஸ்ஸுடு கால்கள் அம்மாவிடம் இருந்து வந்திருந்தன.

    "அது தான் வந்துட்டான் இல்லை? தொணதொணன்னு அவனைப் படுத்தாதே. அவனே நாள் பூரா அங்க இருந்துட்டுக் களைப்பா இருப்பான். மதியம் சாப்பிட்டானோ இல்லையோ? சாப்பாடு எடுத்து வை. குடிக்க ஏதாவது கொடு

    Enjoying the preview?
    Page 1 of 1