Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kanney! Kalaimanaey!
Kanney! Kalaimanaey!
Kanney! Kalaimanaey!
Ebook209 pages1 hour

Kanney! Kalaimanaey!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பெற்ற குழந்தையிடம் உரிமை கொண்டாட முடியாமல் தவிக்கும் தாயின் மனக்குமுறலைக் காட்டும் கதை. இரண்டு தோழிகள் உறவாலும் இணைகிறார்கள். தோழிக்காகக் குழந்தையையே தியாகம் செய்யும் மோஹனாவைப் புரிந்து கொள்ளாமல், மாமியாரின் சொல் கேட்டு மோஹனாவைப் புறக்கணிக்கிறாள் ப்ரியா. ப்ரியா, மோஹனா இருவரின் கதை இது. ஏற்கனவே இதே தலைப்பில் அச்சிலும் வந்திருக்கிறது. மோஹனா அன்பால் இறுதியில் வெல்கிறாளா என்பதைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

Languageதமிழ்
Release dateJul 2, 2021
ISBN6580144607234
Kanney! Kalaimanaey!

Read more from Puvana Chandrashekaran

Related to Kanney! Kalaimanaey!

Related ebooks

Reviews for Kanney! Kalaimanaey!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kanney! Kalaimanaey! - Puvana Chandrashekaran

    https://www.pustaka.co.in

    கண்ணே! கலைமானே!

    Kanney! Kalaimanaey!

    Author:

    புவனா சந்திரசேகரன்

    Puvana Chandrashekaran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/ puvana-chandrashekaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 1

    மாங்கல்யம் தந்துனானே மம

    ஜீவன ஹேதுனா

    கண்டே பத்னாமி சுபாகே த்வம்

    சஞ்சீவ சரத சதம்!

    மம ஜீவன ஹேதுனா-என்னுடைய வாழ்க்கையில் இன்றியமையாதவளாக இருப்பவளே!

    மாங்கல்யம் தந்துனானே -இந்த மங்கல நாணை

    கண்டே பத்னாமி -உன் கழுத்தைச் சுற்றி அணிவித்து (நம் உறவை உறுதி செய்கிறேன்)

    சுபாகே -மிகச் சிறந்த குணநலன்களை உடையவளே

    த்வம் சஞ்சீவ சரத சதம் - நீ நூறாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன்!

    மாங்கல்யம் பூட்டும் போது ஒலிக்கும் இந்த மந்திரம் மிகவும் சிறப்பானது. இதை மங்கலநாண் பூட்டும் போது மட்டுமல்லாமல் ஒவ்வொரு நாளுமே ஆண்கள் தங்கள் மனைவிகளைப் பார்த்துச் சொல்லலாம். அவ்வளவு அழகானது. பிறந்த வீட்டு சொந்தங்களை ஒரு நொடியில் துறந்து விட்டுத் தன் நாயகனின் இல்லத்தில் திருமகளாக நுழைந்த உடனே தன்னை அவனுடைய வாழ்க்கையின் இன்றியமையாத அங்கமாகப் பிணைத்துக் கொள்ளும் பெண் எவ்வளவு உயர்ந்தவள்? ஒரு நாற்றை வேரோடு பிடுங்கிப் புது நிலத்தில் நடுவது போன்றது தானே திருமணமாகி வரும் பெண்ணின் நிலையும்? அவளைப் போற்றிப் புகழ்வதில் தவறேயில்லை!

    கெட்டி மேளம், கெட்டி மேளம் உரத்த குரலில் பெரியோர் வாழ்த்த, அட்சதையும் பூக்களும் மேலேயிருந்து அனைவரும்

    பொழிய மணமகன், மணமகள் கழுத்தில் மஞ்சள் கயிற்றை முடிந்தான்.

    மணமக்களைப் பெற்றோரின் கண்களில் இருந்து ஆனந்தக்கண்ணீர் வழிந்தது. பெரிய இறுக்கம் தளர்ந்து மகிழ்ச்சி அலைகள் காற்றில் பரவின. நாதஸ்வரக் காரர் , ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே என்று குதூகலமாக வாசிக்க ஆரம்பித்தார். எல்லோர் முகத்திலும் ஆனந்தமும் திருப்தியும் சேர்ந்து ஒளி வீசின.

    கலகலப்பாக இருந்தது அந்த கல்யாண மண்டபம். திருமணம் முடிந்தவுடனே உறவினர்கள் ஒருவரை ஒருவரை ஒருவர் வாழ்த்திக் கொண்டும் சிரித்துப் பேசிக் கொண்டும் இருந்ததில் மணமக்களை யாரும் அவ்வளவாகக் கண்டு கொள்ளவில்லை பாவம்! மணமகன் நகுலன், ஐயர் சொன்ன மந்திரங்களை கவனத்துடன் உச்சரித்துக் கொண்டு, தனது அருகில் இருந்த புத்தம் புது உறவை அடிக்கடி திரும்பிப் பார்த்து இரசித்துக் கொண்டிருந்தான்.

    மணமகள் மஹின்யா திருமணக்கோலத்தில் அழகு தேவதையாக இருந்தாள். கூறைப் புடவையும் , தலையில் நிறைந்திருந்த பூக்களின் அலங்காரமும், திருமணத்திற்காகப் புதிதாகச் செய்யப் பட்டிருந்த நகைகளுமாகச் சேர்ந்து ஏற்கனவே அழகு மயிலாக இருந்த அந்த மணமகளின் அழகுக்கு அழகு சேர்த்தன. சூடிக் கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள் போல மஹின்யா தனி அழகுடன் திகழ்ந்தாள். மணமகன் நகுலனும் அவளுக்கேற்ற ஜோடியாக இருந்தான். அறிவுக்களை வாய்ந்த முகமும் கம்பீரமான தோற்றமும் அவனை ஒரு சிறந்த ஆணழகனாகவே காட்டின.

    கொஞ்சம் கொஞ்சமாக வந்திருந்த விருந்தினரின் கூட்டம் சாப்பிடும் இடத்தை நோக்கி நகர ஆரம்பித்தது. மிகச் சிலரே அந்த இடத்தில் மணமக்களைச் சுற்றிக் குழுமி இருந்தார்கள்.

    மணமக்களைச் சுற்றி நின்றிருந்த மிகவும் நெருங்கிய உறவினர்கள் தங்களுக்குள் அரட்டை அடித்துக் கொண்டு நின்று கொண்டு இருந்தார்கள். மஹின்யாவின் அம்மாவாகிய பிரியா என்கிற ப்ரியம்வதா, தனது மாமியார் யோகாம்பாளிடம் அடுத்து நடக்க வேண்டிய சடங்கு சம்பிரதாயங்களைப் பற்றி பவ்யமாக விசாரித்துக் கொண்டிருந்தாள். அருகிலேயே ப்ரியாவின் சம்பந்தி தமயந்தியும் நின்று கொண்டு தங்கள் வீட்டு சம்பிரதாயங்களையும் விலாவாரியாக சொல்லிக் கொண்டு நின்றாள். ஒவ்வொரு வீட்டிலும் முறைகளும் வழக்கங்களும் மாறுபட்டு விடுகின்றனவே! நல்ல வேளையாக சம்பந்தி வீட்டில் யோகாம்பாள் அளவு வயதில் முதிர்ந்த பாட்டி என்று வேறு யாரும் இல்லாததால் யோகாம்பாள் சொல்வதற்கு மறு பேச்சுப் பேச அங்கு யாரும் முன்வரவில்லை. அப்படியே வந்தாலும் யோகாம்பாள் ஒன்றும் இலட்சியம் செய்யப் போவதில்லை. வழக்கம் போல ஆணித்தரமாகப் பேசி யோகாம்பாள் தான் நினைத்ததைச் சாதித்துக் கொண்டு விடுவாள். சில பேரோட ராசியே அப்படி அமைந்து விடுகிறது. ப்ரியாவும் பாவம் எப்போதும் மாமியாரை எதிர்த்துப் பேசவே மாட்டாள் .மாமியார் சொன்னதை அப்படியே ஏற்றுக் கொண்டு விடுவாள் என்பதால் அவர்களுக்குள் பிரச்சனையே வராது. அப்படி ஏதாவது வந்தாலும் ப்ரியாவே முன்வந்து எளிதாக விட்டுக் கொடுத்துப் போய் விடுவதால், ப்ரியாவிற்கும் யோகாம்பாளுக்கும் அதிகப் பிரச்சினைகள் வருவதில்லை.

    மேடையின் கீழே , வெகு தூரத்தில் இருந்து மணமக்களைக் கண் குளிரப் பார்த்துக் கொண்டிருந்த அந்தத் தம்பதி, கண்களைத் துடைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பத் தயாரானார்கள். அவர்கள் கிளம்புவதை மேடையில் இருந்து கவனித்து விட்ட மஹின்யாவின் அப்பா மோகன் வேகமாக மேடையில் இருந்து இறங்கி அவர்களை நோக்கி வந்தார். அவரைத் தடுக்க நினைத்த மாதிரி, பிரியா அவரிடம் எதையோ சம்பந்தமில்லாமல் சொல்ல ஆரம்பித்தாள்.

    ஆனால் மோகனோ, பிரியா பேசுவதைக் காதிலேயே வாங்கி கொள்ளாமல் விரைந்து வந்து அவர்கள் அருகில் வந்து நின்று கொண்டார். கைகளைக் கட்டிக் கொண்டு அவர்களைக் கோபத்துடன் முறைத்தார்.

    "என்னடா சொல்லாமக் கொள்ளாமக் கிளம்பிடலாம்னு ஐடியாவா உனக்கு? ஏன்டா இப்படியெல்லாம்

    பண்ணறே? மேல வந்து கொழந்தைகளை ஆசிர்வாதம் பண்ணிட்டுப் போ. யாரோ மாதிரி எங்கயோ தள்ளி நின்னு கல்யாணத்தைப் பாத்திட்டுப் போக எப்படித் தான் மனசு வந்ததோ உனக்கு? மோஹனா, நீயாவது எடுத்துச் சொல்ல மாட்டயாம்மா அவனுக்கு? அவன் சொல்லற எல்லாதையும் கேக்கணும்னு அவசியம் இல்லை. நீங்க முன்னால நின்னு நடத்த வேண்டிய கல்யாணம் இது. வாங்க ரெண்டு பேரும் மேடைக்கு " என்று சொல்லிக் கொண்டே அவர்களை மோகன் வலுக்கட்டாயமாக மேடைக்கு அழைத்துப் போக முயற்சி செய்து கொண்டிருந்தார்.

    மோகன் , நான் சொல்லறதைக் கொஞ்சமாவது காது கொடுத்துக் கேளு. கல்யாண வீட்டிலே பிரச்சினை எதுவும் எங்களால் வர வேண்டாம் என்று புலம்பிக் கொண்டே, அவர்கள் இரண்டு பேரும் தயங்கித் தயங்கி ராகவனுக்குப் பின்னால் நடந்து வந்தார்கள் .சரியாக அந்த சமயத்தில் , அங்கு வந்த மாப்பிள்ளையின் அப்பா , மோகனிடம் ஏதோ சீரியசாகப் பேச ஆரம்பித்தார். அவருக்கு பதில் சொல்லி விட்டு மோகன் திரும்பிப் பார்த்த போது அவர்களைக் காணவில்லை .அதற்குள் மேடையில் இருந்து அவரை ஐயர் கூப்பிட மோகன் எரிச்சலுடன் மேடைக்குச் சென்றார் .ப்ரியாவும் யோகாம்பாளும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு வெற்றிப் புன்னகை பூக்க , மோகன் அவர்களைச் சுட்டெரிப்பது போலப் பார்த்தார். அருகில் சம்பந்தி இருந்ததால் வேறு ஒன்றும் பேசாமல் கோபத்தை அடக்கிக் கொண்டார்.

    திருத்த முடியாத ஜென்மங்கள் என்று அவர்களை மனதிற்குள் திட்டத் தான் முடிந்தது அவரால்.

    அதன் பிறகு அடுத்தடுத்து வந்த வேலைகள் அவரை அதிகம் யோசிக்க விடவில்லை. மகளின் திருமணம் என்ற பெரிய பொறுப்பு நிறைவேறிய மனநிறைவு. இவ்வளவு நாட்கள் கூடவே திரிந்து கொண்டிருந்த செல்லக்கிளி இன்றிலிருந்து இன்னொரு வீட்டிற்குப் போகப் போகிறது. மனதில் பொங்கிய உணர்ச்சிகளை மறைத்துக் கொண்டு சீரோடும் சிறப்போடும் வாழ்த்தி வழியனுப்பி வைக்க வேண்டுமே!

    கல்யாண மண்டபத்தில் இருந்து கிளம்பிய ராகவனும் மோஹனாவும் அருகில் இருந்த ஒரு சிறிய கோயிலின் வெளிப் பிரகாரத்தில் போய் உட்கார்ந்து கொண்டார்கள்.

    மோஹனா, வரயா? பக்கத்தில ஏதாவது ஹோட்டலில போயிச் சாப்பிடலாமா? காலையில இருந்து ஒண்ணுமே சாப்பிடாம இருக்கயேம்மா? தலை சுத்தி வரப் போறது கனிவுடன் மனைவியைப் பார்த்துக் கேட்டார் ராகவன்.

    இல்லைங்க. எனக்கு ஒண்ணும் வேணாம். பசியெல்லாம் இல்லை. மனசெல்லாம் நெறஞ்சு போயிருக்கு. பக்கத்தில இருந்து அவங்களோட கலந்து ஒண்ணா நின்னு கல்யாண வேலையெல்லாம் பாக்கத் தான் நமக்குக் கொடுத்து வைக்கலை. ஏங்க, ஒருவேளை அந்த யோகாம்பாள் அம்மா சொல்லற மாதிரி நான் ஒரு ராசி கெட்டவ தானோ என்னவோ?

    என்ன வார்த்தை சொல்லறே மோஹனா? ஒரு பெரிய குடும்பத்தைத் தாங்கி வளத்த ஆலமரம் மா நீ! மத்தவங்க என்ன வேணாச் சொல்லிட்டுப் போகட்டுமே! அவங்களுக்கு உண்மை எதுவுமே தெரியாம ஒளறினா, நாம என்ன தான் பண்ண முடியும்? விட்டுத் தள்ளு. என்னை அவங்க முன்னால பேசவும் விட மாட்டேங்கற. ஒரு தடவை பேசி உண்மை என்னன்னு எடுத்துச் சொன்னா, அவங்க வாயை அடைக்கலாமா இல்லையா? நீயும் பதில் பேசறதில்லை. அவங்களோட கேவலமான வார்த்தைகளைக் கேட்ட பின்னாலும் கோபப் படுவதில்லை. பொறுமையாப் போயிடற. பதில் சொல்லவும் மாட்டே. அமைதியாப் போகணும்னு சொல்லி என்னையும் பதில் பேச விடமாட்டே. ஒரு நாள் நான் எரிமலையா வெடிக்கத் தான் போறேன். அப்ப நான் என்ன செய்வேன்னு நீயும் ஒரு நாள் பாக்கத் தான் போற

    வேண்டாங்க வேண்டாம். ஏதாவது தப்பா ஓரடி வச்சாலும் நாம இத்தனை நாட்களாக இருந்த பொறுமைக்கு அர்த்தமில்லாமப் போயிடும். நம்ம கொழந்தை நல்லாயிருக்கணும்னா நான் எந்த அவமானத்தையும் தாங்கிப்பேன். என்னைப் பத்தி நீங்க கவலைப் படாதீங்க. என்னால நீங்களும் எதுவும் சாப்பிடாம இருக்கீங்க. உங்களுடைய உடம்புக்கு ஒத்துக்காது. வாங்க போயி எதாவது சாப்பிடுவோம். ஊருக்குக் கெளம்பிப் போகற வேலையைப் பாக்கலாம். நான் இனிமே வருத்தப் பட மாட்டேன் வாங்க. குழந்தை புது இடத்தில் போயி வாழ்க்கையை ஆரம்பிக்கப் போறா. மனசார வாழ்த்துவோம். அவ நல்லா சந்தோஷமா இருந்தா அதுவே போதும் நமக்கு என்று சொல்லி விட்டுத் தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு எழுந்தாள்.

    திடீரென்று கிளம்பியதால் ஒரு ஸெல்ஃபோன் போதும் என்று நினைத்து, மோஹனா தனது ஸெல்ஃபோனைக் கொண்டு வரவில்லை. ராகவனின் ஸெல்ஃபோனிலும் சார்ஜ் இல்லாததால் அடுத்தடுத்து மோகன் செய்த அழைப்புகள் அனைத்தும் பயனில்லாமல் போயின.

    மோகனுக்கும் கல்யாண வீட்டில் அடுத்தடுத்து வேலைகள் பெருகிவிட அவரால் ராகவன், மோஹனா பற்றி யோசிக்கவே முடியவில்லை.

    சாந்தி முகூர்த்தம் அவர்களுடைய சம்பந்தி வீட்டிலேயே ஏற்பாடு செய்திருந்தார்கள். கல்யாணத்திற்கு முதல் நாள் மாலையே வரவேற்பு நடந்து முடிந்து விட்டதால் மாலையில் நலங்கு முடிந்ததும் இரவு உணவை பொட்டலங்களாகப் பேக் செய்து நெருங்கிய உறவினர்களுக்குக் கொடுத்து எல்லோரையும் வழியனுப்பி வைத்தார்கள். மணமக்களைக் கூட்டிக் கொண்டு சம்பந்தி வீட்டுக்காரர்களும் கிளம்பி விட்டார்கள்.

    அதனால் சத்திரத்தைக் காலி பண்ணிக் கொண்டு அங்கிருந்த சாமான்களை பேக் செய்து வீட்டுக்கு அனுப்பும் வேலை சரியாக இருந்தது. நல்லவேளையாக மோகனுக்குச் சென்னையில் பல நண்பர்களும் உறவினர்களும் இருந்ததால் கவலயில்லை. பல வருடங்களாகச் சென்னையில் வசிக்கிற குடும்பமாயிற்றே! உதவி செய்யப் பலர் இருந்தனர். வேலையின் மும்முரத்தில் ராகவன், மோஹனா பற்றிய விஷயத்தை அதிகம் யோசிக்க முடியாவிட்டாலும் அடி மனதில் தணலாகக் கனன்று கொண்டிருந்தது.

    அங்கே ராகவனும் மோஹனாவும் அருகில் இருந்த அடையாறு ஆனந்த பவன் கிளையில் ஏதோ கொஞ்சமாகச் சாப்பிட்டு விட்டு, நேரே இரயில்வே ஸ்டேஷனை அடைந்தார்கள். பாண்டியன் எக்ஸ்பிரஸில் ஏறி அடுத்த நாள் காலை மதுரையை அடைந்தார்கள்.

    மதுரைக்கு வெகு அருகில் உள்ள சோழவந்தான் என்ற செழிப்பான ஊர் தான் அவர்களுடைய சொந்த ஊர்.

    மதுரை ஸ்டேஷனில் இருந்து டாக்ஸி ஒன்றை எடுத்துக் கொண்டு ஊரை அடைந்தார்கள். சோழவந்தானிலேயே வண்டி நின்றாலும் அவசர அவசரமாக இறங்க இஷ்டமில்லை அவர்களுக்கு. உடலும் மனதும் தளர்ந்து போயிருந்தன. வீட்டுக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே போனார்கள். வாசலில் பெரிய மணைக் கோலம் போடப் பட்டிருந்தது. செம்மண் இடப் பட்டுக் கோலம் அழகாகச் சிரித்தது. வீட்டில் வேலை செய்யும் பொன்னியிடம், மோஹனா ஊருக்குக் கிளம்பும் போதே சொல்லிவிட்டுப் போயிருந்தாள்.

    நல்ல பெரிய வீடு. பரம்பரையாக வந்த அந்தக் காலக்

    Enjoying the preview?
    Page 1 of 1