Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Parakkum Yanai
Parakkum Yanai
Parakkum Yanai
Ebook237 pages1 hour

Parakkum Yanai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

குழந்தைகளுக்கான மாயாஜாலக் கதை. சிறுவர்கள் மட்டுமன்றிப் பெரியவர்களும் படித்து இரசிக்கலாம். இரட்டைக் குழந்தைகளாகப் பிறந்த இரண்டு இளவரசர்கள் பிறப்பிலேயே பிரிந்து வேறு வேறு இடத்தில் வளர்கிறார்கள். ஒருவன் தாயின் தோழியுடன் நாட்டை விட்டு வெகு தொலைவில் வசிக்கிறான். மற்றொருவன் விலங்குகளால் வளர்க்கப்பட்டுப் பின்னர் ஒரு முனிவரின் ஆசிரமத்தை அடைகிறான். இருவரும் ஒன்று சேர்ந்து நாட்டை மீட்கும் போராட்டத்தில் பல்வேறு கயவர்களை எதிர்கொண்டு வெட்டி வீழ்த்தும் வீர சாகசக் கதை.

பறக்கும் யானை, பேசும் குரங்கு, செங்கழுகுகளின் தீவு, காளிங்கன் என்ற கொடிய மந்திரவாதி, அவன் நிர்மாணித்திருக்கும் அபாய அரண்கள் என்று பல்வேறு பாத்திரங்களையும், காட்சிகளையும் எனது கற்பனையில் வடித்திருக்கிறேன். படித்துப் பாருங்கள். விறுவிறுப்பான மாயாஜாலக் கதை.

Languageதமிழ்
Release dateJun 1, 2021
ISBN6580144607120
Parakkum Yanai

Read more from Puvana Chandrashekaran

Related to Parakkum Yanai

Related ebooks

Related categories

Reviews for Parakkum Yanai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Parakkum Yanai - Puvana Chandrashekaran

    https://www.pustaka.co.in

    பறக்கும் யானையும்

    Parakkum Yanaiyum

    Author:

    புவனா சந்திரசேகரன்

    Puvana Chandrashekaran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/puvana-chandrashekaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author. All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    அத்தியாயம் 1

    மரகதபுரி என்ற குட்டி தேசம். பெயருக்கு ஏற்றபடி பச்சைப் பசேல் என்று இயற்கை

    அரசியின் அருளால் செழிப்பாகத் திகழும் தேசம். இயற்கை அன்னை கனிவான முகத்துடன் நாடு முழுவதும் செங்கோலோச்சி வந்தாள். மரகதப் பச்சை நாடு முழுவதும் அள்ளித் தெளித்தது போலத் திகழ்ந்தது.

    பச்சைப் பசேலென்று வயல்கள், வனங்கள், நதிகள், அருவிகள் என்று செழுமையாகக் கண்ணுக்குக் குளுமையாகத் திகழ்ந்தன.

    அந்த நாட்டின் ஒரு பகுதியில் அழகான ஒரு கடற்கரை. கடற்கரையிலிருந்து சற்று உள் வாங்கியிருந்த நிலப்பகுதியில் அழகான ஒரு நந்தவனம். வெளியே கடற்கரைக்கே உரிய தென்னை மரங்களும்

    பனை மரங்களும் சுற்றிலும் வரிசையாக நின்றன.

    நந்தவனத்தின் நடுவில் குடில் ஒன்று. அதைச் சுற்றிலும் தள்ளித் தள்ளி இடைவெளி விட்டு இன்னும் சில குடில்கள்.

    நடுவில் இருந்த குடில் கொஞ்சம் பெரியது. சுற்றிலும் இருந்த குடில்கள் அளவில் இன்னும் கொஞ்சம் சிறியவையாக இருந்தன.

    பரத முனி என்று மக்களால் போற்றி வணங்கப்படும் ஒரு தலைசிறந்த மருத்துவரின் ஆச்ரமம் அது.

    அதோ அந்த முனிவர் தனது குடிலை விட்டு வெளியே வந்து நந்தவனத்தில் ஒரு கொன்றை மரத்தின் கீழே அமர்ந்திருந்த சிவலிங்கத்தை நோக்கி நடந்து வருகிறார்.

    அவருடைய கையில் ஒரு கமண்டலத்தில் அபிஷேகத்திற்காகப் புனித நீர். அவருக்குப் பின்னால் முனிவரின் மனைவி கையில் புஷ்பங்கள் அடங்கிய தட்டை ஏந்தி நடந்து வந்து கொண்டிருந்தாள். பார்ப்பதற்கு எளிமையும் அழகும் சேர்ந்த தெய்வப் பெண்ணாகத் திகழ்ந்தாள்.

    சிவனும் பார்வதியுமே தவக்கோலம் புனைந்து பூவுலகிற்கு வந்து அவதரித்தாற்

    போன்று இருவரும் காட்சி அளித்தனர். கருணையும் பாசமும் அவர்களுடைய வதனங்களில் பொங்கி வழிந்தன. பார்த்தோரை பக்தியுடன் கை கூப்பித்

    தொழ வைக்கும் தெய்வீக ஜோடி.

    சிவலிங்கம் இருக்கும் மரத்தடியை அடைந்ததும், அந்த இடத்தை சுத்தம் செய்து அழகாகக் கோலமிட்டு பூஜைக்கு வேண்டிய முன்னேற்பாடுகளை இன்னிலா தேவி (ரிஷி பத்தினி) செய்ய முனிவர் சிவலிங்கத்தின் முன்னே மான் தோலில் அமர்ந்து தனது அர்ச்சனையைத் தொடங்கினார்.

    அந்த சமயத்தில் எங்கிருந்தோ அங்கு ஓடி வந்தான் ஒரு சிறுவன். அழகான முகம். ராஜ களை.ஆனால் மிகவும் பலவீனமான உடல்.

    முகத்தில் ஒரு சோர்வும் சோகமும் கலந்து

    அவனைப் பார்ப்பவர்களுக்கு 'ஐயோ பாவம்' என்று மனதில் இரக்கத்தைத் தூண்டுகிறது.

    "பொன்னார் மேனியனே! புலித் தோலை

    அரைக்கசைத்து

    மின்னார் செஞ்சடையில் மிளிர் கொன்றை

    அணிந்தவனே!

    மன்னே மாமணியே மழபாடியுள்

    மாணிக்கமே!

    அன்னே உன்னையல்லால் இனி யாரை

    நினைக்கேனே!"

    என்று இனிய குரலில் அந்தச் சிறுவன் பாடினான்.

    பூஜையைச் சிறப்பாக முடித்து சிவனுக்கு

    அபிஷேகமும் அர்ச்சனையும் முடித்து முனிவர் பெருந்தகை எழுந்தார். திருநீறை எடுத்து நெற்றியில் அணிந்து கொண்டு அந்தச் சிறுவனையும் பரிவோடு அருகில் அழைத்து நெற்றியில் தீற்றினார்.

    முனிவரையும் அவரது மனைவி இன்னிலாவையும் அந்தச் சிறுவன் ணங்கினான். அவர்களது காலடிகளில்

    விழுந்து தொழுது விட்டு எழுந்தான். அவன் கையில் நைவேத்தியம் செய்த கனிகளை அளித்து விட்டு உள்ளே சென்ற முனிவரைக் குனிந்த தலையுடனும் மனதில் ஆழ்ந்த சிந்தனையுடன் இன்னிலா தேவி பின் தொடர்ந்தாள்.

    என்ன நிலா? என்ன இப்படி ஆழ்ந்த சிந்தனையில் கவலையுடன் தோன்றுகிறாயே! உன் மனதில் தோன்றிய கலக்கம் என்ன?

    பரதர் வினவ இன்னிலா பேசினாள்.

    "இந்தக் குழந்தையை நினைத்து மனம் கலங்குகிறது நாதனே! எவ்வளவு நன்றாக நான் அவனை கவனித்துக் கொண்டாலும் உடல் இன்னும் தேறவில்லையே! பாவம் எவ்வளவு பலவீனமாக இருக்கிறான்?

    அவன் சிறு குழவியாக என் கைகளில் வந்த நொடி முதல் அன்போடும் பரிவோடும் தானே கவனித்து வருகிறேன். நமது காமதேனுவின் (பசு மாடு) பாலையும் அவனுக்காகவே தனியாக வைத்துக் கொடுத்து வருகிறேன்.

    அந்தக் குழந்தைக்காகத் தானே நாம் காமதேனுவையும் இந்த ஆச்ரமத்திற்குக் கொண்டு வந்தோம். ஒன்றும் பயனில்லாமல் இருக்கிறதே என்று தான் கலக்கம்."

    "இல்லை நிலா. குழந்தை உடல் நன்றாகத் தேறி வருகிறான். மனோ பலமும் மிக அதிகம் அவனுக்கு. எவ்வளவு அறிவாளி தெரியுமா? இந்த சிறுவயதிலேயே எவ்வளவு ஞானம் தெரியுமா அவனுக்கு? எனக்கே சில

    சமயங்களில் ஆச்சரியமாக இருக்கிறது சொல்லித் தருவதை எல்லாம் அவ்வளவு விரைவாகக் கற்றுக் கொள்கிறான். அவனுடைய முகத்தில் இருக்கும் ராஜ களை இவன் உயர்குடியில் பிறந்தவனாகத் தான் இருப்பான் என்று உறுதியாகச் சொல்கிறது. விரைவில் தேறி விடுவான். நான் உணவில் அவனுக்குத் தேவையான மருந்துகளைச் சேர்த்துத் தான் கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.விரைவில்

    முன்னேற்றம் தெரியும். கவலை வேண்டாம் தேவி."

    அப்படியே ஆனால் முதலில் மகிழ்ச்சி அடைவது நானாகத் தான் இருக்கும்.

    உனக்கே நினைவிருக்கும் தேவி. அவன் குழந்தையாக நம்மிடம் வந்து சேர்ந்த போது எப்படி இருந்தான்? அதற்கும் இப்போதைய நிலைக்கும் எவ்வளவு வியக்கத் தகுந்த முன்னேற்றம்? அதே போல் இன்னும் சில வருடங்களில் நல்ல ஆரோக்கியமான இளைஞனாகி விடுவான்.

    பரதர் சொன்னதும் இன்னிலா தேவியின் நினைவில் கடந்த காலம் ஓடியது. உடல் சிலிர்த்தது ஒரு கணம்.பின்னர் பழைய நினைவுகளின் தாக்கத்தால் உடல் நடுங்கியது.

    யோசித்துக் கொண்டே தங்களுடைய குடிலுக்குள் சென்று உணவு தயாரிக்கும் பணியில் மூழ்கினாள் நிலா என்ற இன்னிலா.

    உணவருந்தி விட்டு மாலையில் வனத்தில் இருந்த மான்களுடன் ஓடி விளையாடி விட்டு அந்த சிறுவன் எளிமையான இரவு உணவுடன் பனைவெல்லம் கலந்த பசும்பால் அருந்தி விட்டுத் தனது குடிலுக்குள் உறங்கச் சென்றான்.

    நள்ளிரவு நேரம். முகத்தைத் துணியால் மறைத்த இரண்டு நிழல் மனிதர்கள் நந்தவனத்தில் நுழைந்து சிறுவன் இருந்த குடிலுக்குள் நுழைந்தார்கள். நல்ல உறக்கத்தில் இருந்த சிறுவனைத் துணியால் முகத்தை மூடி அள்ளியெடுத்துக் கட்டிக் கொண்டு நந்தவனத்தை விட்டு வெளியே வந்தனர்.

    வெளியே நின்றிருந்த புரவிகளில் ஏறி சிறிது தொலைவு பயணம் செய்த பின்னர் அடர்ந்த வனப்பகுதி ஒன்றை அடைந்தனர்.

    வனப்பகுதியின் உள்ளே ஒரு கொற்றவை கோயில். கோயிலில் காட்டு மலர்களால் அலங்கரிக்கப் பட்டு கைகளில் வாளும் சூலமும் தாங்கிய கொற்றவை தேவியின் சிலையின் முன்னே சிறுவனைக் கிடத்தினார்கள். அந்த இடத்தில் வாளைத் தீட்டிக் கூர்மையாக்கிக் கொண்டிருந்த ஒரு

    கொற்றவை உபாசகன் தனது வாளை சிறுவனின் கழுத்தை நோக்கி வீசினான்.

    அத்தியாயம் 2

    தன் மேல் இறங்கிக் கொண்டிருந்த கூர்மையான வாளைக் கண்டு அச்சத்தில் வாயில் சொற்களே வரவில்லை. கத்தக் கூட உடலில் பலம் இல்லை அவனுக்கு.

    உடலெல்லாம் வியர்த்துக் கொட்ட,வாய் குளறிப் போகச் சட்டென்று கண் விழித்தான் அந்தச் சிறுவன். என்ன ஒரு கொடிய கனவு?அடிக்கடி வரும் இந்தக் கனவின் பொருளென்ன? வரப்போகும் ஏதாவது அபாயத்தை முன்கூட்டி எச்சரிக்கை செய்ய வருகிறதா? என்ன அபாயமாக இருக்கும்?

    சிறுவனின் மனதில் பல்வேறு எண்ணங்கள் குவிந்தன. பத்து வயதிருக்கலாம். ஆனால் உடல் வளர்ச்சி குறைவாக இருந்ததனால் அவனை ஏழு எட்டு வயது நிறைந்தவனாகவே அவனது சிறிய உருவம் காட்டியது. ஆனால் வயதுக்கு மீறிய அவனது அறிவுக் கூர்மையும் பொறுப்பான சிந்தனைகளும்

    அவனை மனதளவில் பெரியவனாக்கிக் காட்டியது.

    முனிவரும் முனிவரின் மனைவி நிலா அம்மாவின் அன்பும் தனக்குக் கிடைத்திருப்பது மிகப் பெரிய வரம் என்று அவனுக்கு நன்றாகவே புரிந்திருந்தது. அவர்களின் கருணைப் பார்வை மட்டும் தன் மீது படாவிட்டால் காட்டு விலங்குகளுக்கு இரையாகியிருப்போம் என்பதும் மறுக்க முடியாத உண்மை தானே!

    தான் அனாதை என்பதும் புரிந்தது அவனுக்கு. தனது பெற்றோர் யார் என்று தெரியாத நிலை எவ்வளவு கொடுமையானது? எங்கேயோ பிறந்து எப்படியோ வனத்தை அடைந்து முனிவரால் காப்பாற்றப்பட்டு உயிர்ப் பிச்சை பெற்ற தனக்குத் தனது பெற்றோரைப் பற்றிய விஷயங்கள் என்று தான் தெரியப் போகிறதோ?

    பல்வேறு யோசனைகளால் தூக்கம் கலைந்த சிறுவன் குடிலை விட்டு வெளியே வந்து ஒரு மரத்தடியில் அமர்ந்தான். பவழமல்லி மரத்தில் இருந்து இரவிலே மலர்ந்த மலர்கள் ஒவ்வொன்றாகக் கீழே உதிர்ந்து கொண்டிருக்க மலரின் மணமும் காற்றில் கலந்து மனதிற்கும் ரம்மியமான சூழல் அங்கு நிலவியது.

    பவளமல்லி,பவழ மல்லி,சேடல் (பழைய சங்க காலப் பெயர்), பாரிஜாதம்,பிரம்மதர்ஷன் புஷ்பம் என்று பல பெயர்களால் அழைக்கப் படும் இந்த

    மலர் பின்னிரவில் மலர்ந்து அதிகாலையில் உதிர ஆரம்பிக்கிறது. மரம் இருக்கும் இடத்தைச் சுற்றி அற்புதமான நறுமணத்தைப் பரப்புகிறது. அதன் சிவப்பு நிறக் காம்பும் வெள்ளை வெளேர் இதழ்களும் சேர்த்து பவித்ரமான அழகைத் தருகிறது இந்த மலருக்கு.

    அந்த மரத்தின் அடியில் சோகத்துடன் சிறுவன் அமர்ந்திருந்த கோலம் இரவின் இருளில் நிலவின் ஒளியில் மலர்களின் ஆசனத்தில் அமர்ந்திருந்த ஒரு குட்டி தேவதையின் அரசவையாகவே தெரிந்தது.

    எங்கிருந்தோ,இளவரசே! இளவரசே!

    என்று கரகரவென்ற ஒரு குரல் கேட்க சுற்றுமுற்றும் பார்த்தான் சிறுவன். முகத்தில் திடீரென்று ஒரு பரபரப்பும் குதூகலமும் வந்து சேர்ந்து கொண்டன. தாமரை மலர் போல அவன் முகம் விரிந்ததைப் பார்த்தால் யாரோ அவனுக்கு மிகவும் பரிச்சயமான மற்றும் மனதிற்கு மிகவும் பிடித்தவர் கூப்பிடுவது போலத் தான் இருந்தது.

    எழுந்து துள்ளிக் குதித்து உற்சாகத்துடன் ஓடினான். நந்தவனத்தின் ஒரு மூலையில் இருந்து தான் அந்தக் குரல் வந்தது. நந்தவனத்தைச் சுற்றி ஒரு படல் அதாவது வேலி போலப் போடப்பட்டிருந்தது. அந்தப் படலில் சில காட்டு மலர்களின் கொடி படர்ந்து ஆங்காங்கே பூக்களுடன் அழகான பூவேலியாகத் தான் இருந்தது. நந்தவனத்தின் அந்தப் பகுதியில் படலுக்குப் பதிலாக மரக் குச்சிகளால் ஆன சிறு கதவு போல இருந்தது. அந்தக் கதவைத் திறந்து கொண்டு வெளியே ஓடினான் சிறுவன்.

    நந்தவனத்திற்கு வெளியே ஒரு பெரிய மரத்தடியை நெருங்கினான் சிறுவன். அவன் செல்லும் வேகத்தைப் பார்த்தால் அந்த இடத்தில் அவனைக் கூப்பிட்டவரை சந்திப்பது அவனுக்கு வழக்கமாகத் தான் இருக்கும் போல இருக்கிறது.

    அவன் மரத்தை நெருங்கியதும் அந்த மரத்தின் பின்னால் இருந்து வெளியே வந்த உருவம் சிறுவனைக் கட்டித் தழுவி நெற்றியில் முத்தமிட்டது. அந்த உருவம் யாரென்று பார்த்தால் என்ன ஆச்சரியம்! ஒரு குரங்கு! அதுவும் பேசும் குரங்கு! அந்தக் குரங்கா இளவரசே என்று மனிதக் குரலில் கூப்பிட்டது?

    அந்தக் குரங்கின் கையில் சின்னதாக பூனைக் குட்டி போல இருந்த ஒரு மிருகம் ஓடி வந்து சிறுவனின் மேல் தாவி ஏறி அவன் தோளில் அமர்ந்து கொண்டு அவன் முகத்தைப் பாசத்துடன் வருடியது.

    அடாடா என்ன மிருகம் இது? பார்க்கப் புதிய உருவம். அருகில் சென்று உன்னிப்பாகப் பார்த்தால் மிகச் சிறிய யானை. வெள்ளை யானை. வெள்ளை என்றால் மல்லிகைப் பூ போல வெண்மை அல்ல. யானைகள் பொதுவாக வெளிறிய கருநிறத்தில் இருக்கும் அல்லவா? இந்தக் குட்டி யானை மிகவும் வெளிறி சாம்பல் நிறத்தில் இருந்தது. தனது மிகச் சிறிய தும்பிக்கையால் சிறுவனின் முகத்தை வருடியது.

    அங்கதா, நீரா,நலமா நீங்கள் இருவரும்? என்னை இளவரசே என்று கூப்பிட வேண்டாம் என்று எத்தனை தடவை சொல்வது? பெற்ற தாய் தந்தையே யாரென்று தெரியாத அனாதை நான். என்னைப் போய் இளவரசே என்று ஏன் அழைக்கிறாய் அங்கதா?

    சிறுவனின் சொற்களைக் கேட்டு அங்கதனின் கண்களில் நீர் சுரந்தது. அந்த யானையின் சிறிய கண்களிலும் நீர். தனது தும்பிக்கையை ஆட்டி ஆட்டி சிறுவன் சொன்னதைத் தான் ஏற்றுக் கொள்ளவில்லை என்று காட்டியது.

    எங்களைப் பொறுத்த வரை நீங்கள் இளவரசர் தானே? இந்த வனத்தின் இளவரசர் என்று வைத்துக் கொள்ளுங்கள். அனாதை என்று இன்னொரு முறை சொல்ல வேண்டாம். உங்கள் மேல் பாசத்தைப் பொழிந்து தன் மகனாகவே வளர்த்து வரும் பரத முனிவரையும் அவரது மனைவி நிலா தேவியையும் நினைத்துப் பாருங்கள். அவர்களுக்காகவாவது இந்த மாதிரி சொல்லாமல் இருங்கள். அவர்களின் செவிகளில் உங்களுடைய சொற்கள் விழுந்தால் எவ்வளவு வருத்தப் படுவார்கள்? நீங்கள் இப்படி எல்லாம் பேசக் கூடாது.

    சற்றுத் தொலைவில் நின்று கொண்டு அவர்கள் பேசுவதைக் கேட்டுக்

    Enjoying the preview?
    Page 1 of 1