Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nugathadi
Nugathadi
Nugathadi
Ebook279 pages1 hour

Nugathadi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பாரம்பரிய முறைப்படி நடக்கும் ஒரு திருமணத்தில் கலந்து கொள்ள வரும் சில கதாபாத்திரங்களின் வாழ்க்கைப் பிரச்சனைகளைப் பற்றியும், திருமணம் முடியும் போது அவர்களுடைய பிரச்சினைகளும் எப்படித் தீர்வடைகின்றன என்பதைப் பற்றியும் இந்தக் கதையில் எழுதியிருக்கிறேன்.

நுகத்தடி என்பது மாடுகள் இழுக்கும் வண்டியில் இரண்டு மாடுகளும் இணைந்து நடப்பதற்காக வைக்கப்படும் மரத்தாலான ஒரு சாதனம். இல்லறம் என்ற பந்தத்தில் கணவனும், மனைவியுமாக இணைந்து சம்சாரத்தில் திளைப்பதனால் இந்த நுகத்தடி சம்பிரதாயத்தைத் திருமணத்தில் ஒரு முக்கிய சடங்காகச் செய்கிறார்கள். நான் கல்யாணங்களில் கேட்டு இரசித்த சில பாடல்களையும் கதையினூடே தந்திருக்கிறேன். ஏற்கனவே அச்சில் வெளிவந்திருக்கிறது.

Languageதமிழ்
Release dateMar 4, 2023
ISBN6580144609574
Nugathadi

Read more from Puvana Chandrashekaran

Related to Nugathadi

Related ebooks

Reviews for Nugathadi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nugathadi - Puvana Chandrashekaran

    A picture containing icon Description automatically generated

    http://www.pustaka.co.in

    நுகத்தடி

    Nugathadi

    Author :

    புவனா சந்திரசேகரன்

    Puvana Chandrashekaran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/puvana-chandrashekaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 1

    கௌரி கல்யாணம் வைபோகமே!

    கௌரி கல்யாணம் வைபோகமே!

    க்ஷேமங்கள் கூறி

    விநாயகனைத் துதித்து

    சங்கரனையும்

    கௌரியையும் வர்ணித்து

    ஸ்ரீ ராமனையும்

    ஜானகியையும் வர்ணித்து

    கௌரி கல்யாண வைபோகமே!

    லக்ஷ்மி கல்யாண வைபோகமே!

    தில்லியின் அருகே உள்ள குர்கான் (gurgaon) பகுதி. இந்தப் பகுதி ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்ததாக இருந்தாலும் தில்லி, அனைத்து திசைகளிலும் விரிவடைந்தபோது என்.சி.ஆர். என்று அழைக்கப்படும் நேஷனல் கேபிடல் டெரிடரி பிரிவில் இதுவும் சேர்க்கப்பட்டது. உயர்தர வகுப்பைச் சேர்ந்த தில்லியின் அமர்க்களமான பணக்காரர்களும், பெரிய பெரிய நிறுவனங்களின் நல்ல வசதிகள் நிறைந்த அலுவலகங்களும் உள்ள இடம்.

    அந்த வணிக வளாகம், தான் வீற்றிருக்கும் இடத்திற்கேற்ப மிக அதிகப் பணக்காரத்தனத்தைப் பறைசாற்றிக் கொண்டு கம்பீரமாக நின்றது.

    பிரம்மாண்டமான அந்தப் பலமாடிக் கட்டிடத்தின் எட்டாவது மாடியில் பாதியை அந்தப் புகழ்பெற்ற நிறுவனத்தின் அலுவலகம் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. பெரிய கான்ஃபரன்ஸ் ஹால் ஒன்று. சிறிய டிஸ்கஷன் ரூம் ஒன்று. இங்கு கம்பெனியின் மிக முக்கியமான நபர்கள் மட்டும் பங்குகொள்ளும் மீட்டிங் நடக்கும். அதைத் தவிர நல்ல மாடர்னாக அமைக்கப்பட்டிருந்த விசாலமான சேம்பர்கள், உயர் அதிகாரிகளுக்காக ஒதுக்கப்பட்டிருந்தன.

    அன்றைய மீட்டிங் சின்ன அறையில் தான். நீண்ட செவ்வக வடிவில் இருந்த அந்த மேஜையைச் சுற்றி முக்கியமான நபர்கள் அமர்ந்திருந்தார்கள். வயதானவர்களும், நடுத்தர வயதுக்காரர்களும் இருந்த அறையில் அந்த இளம்பெண் நுழைந்தாள்.

    ஆண்களைப் போல பேண்ட்டும், முழுக்கைச் சட்டையும் அணிந்திருந்தாள். முகத்தில் அறிவுக்களை சொட்டியது. சிறிய உருவமாகத்தான் இருந்தாள். கம்பெனியின் எக்ஸிக்யூடிவ் டைரக்டர்களும் சேர்மனும் மட்டும் இருந்த அறையில் நுழைந்த அந்தப் பெண்ணை, ஒரு டைரக்டர் வியப்புடன் பார்த்தார். ஒருவேளை சேர்மனுடைய பி.ஏவாக இருக்கலாம் என்று நினைத்துக் கொண்டார். சேர்மன் அந்த டைரக்டரிடம் முகபாவத்தைப் பார்த்து மனதிற்குள் சிரித்துக் கொண்டார்.

    ‘உங்களுக்கு ஒரு பெரிய ஆச்சர்யம் காத்துக் கொண்டிருக்கிறது’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு அந்தப் பெண்ணைப் பார்த்துப் புன்னகை செய்தார்.

    வெல்கம் மிஸ். நளினகாந்தி. ஐ ஹோப் திங்க்ஸ் ஆர் ரெடி என்று கேட்டதும் அவளும், யெஸ் ஸார் என்று சொல்லிவிட்டுத் தலையசைத்தாள்.

    ஓகே நண்பர்களே, இவர்தான் நமது கம்பெனியின் புதிய லீகல் அட்வைஸர், மிஸ். நளினகாந்தி. இவருடைய வயதைப் பார்த்து நீங்கள் இவரைக் குறைத்து எடை போட வேண்டாம். ஷி இஸ் வெரி இண்டலிஜெண்ட். ஹைதராபாத் லா இன்ஸ்டிடியூட்டில் இருந்து டாப் ரேங்கில் வெளியே வந்தவர். கார்பரேட் லாவின் அத்தனை அம்சங்களையும் கரைத்துக் குடித்தவர். இன்று இந்த கேஸில் இவருடைய கருத்தை நாம் கேட்டுவிட்டு முடிவெடுக்கலாம் என்று சொல்லி அவளை அறிமுகப்படுத்த, அத்தனை பேரும் அவளை ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியுடன் பார்த்தார்கள்.

    யெஸ் மிஸ். நளினகாந்தி, யூ மே ப்ரொஸீட் என்று சேர்மன் சொன்னதும், நளினகாந்தி தனது ப்ரெஸெண்டேஷனை ஆரம்பித்தாள். அந்த கேஸ் பற்றிய அத்தனை தகவல்களையும் ஒட்டுமொத்தமாகத் தொகுத்துத் தந்தாள். செய்தித்தாள்கள், டிவி சேனல்களின் ரிப்போர்ட் என்று ஒன்றுவிடாமல் அத்தனையையும் அவள் எடுத்து வைத்தபோதே அவளுடைய திறமை பளீரிட்டது.

    அவர்களுடைய கம்பெனியின் டைரக்டர் ஒருத்தர், வெளிநாடு சென்றிருந்த சமயம் தனது செகரட்டரிக்குப் பாலியல் தொந்தரவு தந்ததாக, இந்தியா திரும்பியவுடன் அந்தப் பெண் கேஸ் போட்டு விட்டாள். அந்த கேஸை, குற்றம் சாட்டப்பட்ட டைரக்டர், தன்னுடைய ஹை லெவல் காண்டாக்டுகளை வைத்து ஒன்றுமில்லாமல் பிசுபிசுத்துப் போக வைக்க முயற்சி செய்தார். அந்தப் பெண், ஒரு புலியாகச் சீறி, புகழ்பெற்ற டிவி. சேனலுக்குப் போய் விஷயத்தைப் போட்டுடைக்க இப்போது அந்த விஷயம் பூதாகரமாகி விட்டது. அதைப் பற்றிப் பேசி விவாதிக்கத்தான் இந்த மீட்டிங் கூட்டப்பட்டிருக்கிறது.

    எல்லாத் தகவல்களையும் வைத்துப் பார்க்கும்போது அந்த டைரக்டர் பேரில் தவறு இருக்கிறது. நமது கம்பெனிக்கு இருக்கும் நல்ல பெயரைக் காப்பாத்திக்கணும்னா, அவர் மேல நாம சிவியர் ஆக்ஷன் எடுத்தே ஆகணும். இல்லைன்னா நம்ப கம்பெனி இவ்வளவு நாளா, ஜனங்கள் மத்தியில் சம்பாதிச்ச நல்ல பேர் சீக்கிரமே கெட்டுப் போயிடும் என்றாள் நளினகாந்தி.

    அப்படியெல்லாம் அவசரப்பட்டு எடுத்தோம் கவிழ்த்தோம்னு முடிவெடுக்க முடியாது. ஆஃப்டர் ஆல் ஒரு சாதாரண செகரட்டரி சொல்லற வார்த்தையை நம்பி, அவரோட பயமுறுத்தலுக்கு நாம அடிபணியக் கூடாது. அந்த டைரக்டர் எவ்வளவு திறமைசாலி தெரியுமா? அவரால நமக்கு எவ்வளவு ஃபாரின் புராஜெக்ட் கெடைச்சிருக்கு? எவ்வளவு பிராஃபிட் இந்த நிதியாண்டில் கூடியிருக்கு தெரியுமா? என்று கொதித்தெழுந்தார் ஒரு டைரக்டர்.

    இருக்கலாம். எவ்வளவோ திறமைசாலியா இருந்தாலும் தப்பு, தப்புதான். இப்ப இந்த கேஸினால நம்ம கம்பெனிக்கு நிறைய அட்வர்ஸ் பப்ளிஸிட்டி (adverse publicity) ஏற்கனவே கெடைச்சாச்சு. அதை சரி பண்ணறதுக்காகக் கொஞ்சம் இலாபத்தை நாம இழக்கறதில ஒரு தப்பும் இல்லை. இல்லைன்னா லாங் ரன்னில, நமக்கு நல்லதில்லை. சரியான முடிவு எடுக்கலைன்னா, நம்ப கம்பெனியோட பங்குகள், ஷேர் மார்க்கெட்டில் சரியக்கூட ஆரம்பிக்கலாம். இட் இஸ் பெட்டர் டு கன்ட்ரோல் தி டேமேஜ், பிஃபோர் இட் இஸ் டூ லேட் என்று தனது வாதத்தைத் துணிவுடன் வைத்துவிட்டு அமைதியானாள் நளினகாந்தி.

    அந்த டைரக்டருக்கு சுருசுருவென்று கோபம் ஏறியது. ஏனென்றால் குற்றம் சாட்டப்பட்டவர், இவருடைய நெருங்கிய உறவினர். மனைவி வழியில் சொந்தம். அவருக்கு எதிராக ஏதாவது நடவடிக்கை எடுக்கப்பட்டால் இவருடைய நிலைமை, இவருடைய வீட்டிலேயே ஐசியூவிற்குப் போய்விடும். அந்த பயம் அவரை எரிச்சல் அடைய வைத்தது. அந்த எரிச்சல் நளினாவின் மீது வெடிக்கத் தயாராக இருந்தது.

    அதெல்லாம் சில பெண்கள் இப்பக் கொஞ்ச நாட்களாக பப்ளிசிட்டிக்காக செய்யறது. எனக்குத் தெரிஞ்சு நம்ப ஆளு அந்த மாதிரி எதுவும் தப்பா செஞ்சுருக்க மாட்டாரு என்று அவர் சொன்னபோது, மனைவி மீதிருந்த பயம் அவருடைய வார்த்தைகளில் நர்த்தனமாடியது.

    அதெப்படி நாம சொல்ல முடியும்? எந்தப் பெண்ணாவது பப்ளிசிட்டிக்காகத் தன் மேலேயே சேத்தை வாரிப் போட்டுக்குவாளா? அவ பேரும் சேந்துதானே கெட்டுப் போகுது? பெண்கள் இதுமாதிரி தைரியமாகப் போராட வெளியே வராததுனாலதான், இந்தப் பாலியல் குற்றங்கள் இப்போல்லாம் கூடிக்கிட்டே போகுது என்று நளினாவும் ஆணித்தரமாகப் பேசினாள்.

    என்னம்மா, நீ விட்டா அறிவில்லாமப் பேசறேயே? அப்படியெல்லாம் யோசிக்காம எதுவும் செய்ய முடியாது என்று வெடித்தே விட்டார் அந்த டைரக்டர்.

    "மைன்ட் யுவர் வேர்ட்ஸ் ஃபர்ஸ்ட். நான் நல்ல அறிவோடு யோசிச்சுத்தான் பேசறேன். சமீபத்தில் நடந்த விஷயங்களை அலசிப் பாருங்க. உங்களுக்கே உண்மை புரியும். பெரிய லெவலில் இருந்த போலீஸ் அதிகாரி, உலக அளவில் புகழ்பெற்ற விருதுகள் வாங்கின பெரிய ஆராய்ச்சியாளர், பெரிய சீனியர்களான நீதிபதிகள்கூட சமீபத்தில் இந்த மாதிரி குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகலை? அவங்க கேஸில எல்லாம் ஒண்ணுமே செய்ய முடியாம, மீடியாவும், பொது ஜனங்களும் சேந்து அவங்களை நாறடிக்கலையா?

    அதுக்குள்ள அதையெல்லாம் மறந்துட்டீங்களா? ஒரு லீகல் அட்வைஸரா இதுதான் என்னோட ரெகமண்டேஷன். இதுக்குமேல கம்பெனி பேரைக் கெடுக்க நீங்க என்ன முடிவு எடுத்தாலும், நான் என்னோட ரெஸிக்னேஷனைக் கொடுத்துட்டு வெளியே போயிட்டே இருப்பேன்" என்று சொல்லி விட்டு, சேர்மனுக்கு மட்டும் வணக்கம் தெரிவித்து விட்டு, நிமிர்ந்த நன்னடையும், நேர்கொண்ட பார்வையும் கொண்ட அந்த புதுமைப்பெண் விருட்டென்று வெளியே சென்றாள்.

    அவளுடன் விவாதம் செய்த அந்த டைரக்டரின் முகம், கோபத்தால் ஜிவுஜிவென்று ஆனது.

    சின்னச் சின்னப் பெண்களையெல்லாம் வேலைக்கு வச்சா, இதுதான் பிரச்சினை? அனுபவமும் இல்லை. வயசும் போதாது. இவளோட பேச்சையெல்லாம் பெருசா எடுத்துக்க வேணாம் என்று அவர் சொல்லிக் கொண்டே சேர்மனைப் பார்க்க, சேர்மனின் முடிவு அவருக்கு சாதகமாக இல்லை.

    இல்லை, அந்தப் பொண்ணு சொல்லறதுல தப்பே இல்லை. இவ்வளவு நாட்களா நான் கட்டிக் காப்பாத்தின இந்த கம்பெனியோட நல்ல பேரை, கேவலமான வேலையைச் செஞ்ச ஒரு மோசமான அதிகாரிக்காக நான் கெடுக்கமாட்டேன். இலாபம் என்ன, இந்த வருஷம் கொறைஞ்சா, அடுத்த வருஷம் கூடிட்டுப் போகுது. எனக்குக் கவலையில்லை. அவனை இன்னைக்கே கம்பெனியின் பொறுப்பிலிருந்து நீக்கறதா நோட்டீஸ் அனுப்பிடுங்க. சாயந்திரம் பிரஸ் கான்ஃபரன்ஸும் கொடுத்துடலாம் என்று சேர்மன் சொன்னதும் அந்த டைரக்டர் வாயடைத்துப் போனார்.

    நாளைக்கே கோர்ட்டில் அவர் பேரில தப்பில்லைன்னு நிரூபணம் ஆச்சுன்னா, அவரு நம்ப பேரில எல்லாம் மானநஷ்ட வழக்கு போடுவார் என்று மிரட்டிப் பார்த்தார். சேர்மன் அசையவில்லை.

    முதலில் அவர் பேரில் தப்பில்லைன்னு நிரூபணம் ஆகட்டும். அப்பப் பாத்துக்கலாம். இந்த மாதிரி குற்றச்சாட்டுகளில், யார் குற்றம் சாற்றப்படுகிறாரோ அவர்தான் தனது பேரில் தப்பு இல்லைன்னு நிரூபிக்கணும். அப்படித்தான் அந்தப் புதுச் சட்டம் சொல்லுது. அப்பப் பாத்துக்கலாம் என்று சொல்லித் திட்டவட்டமாக மறுத்துவிட, மற்ற டைரக்டர்களும் சேர்மனின் முடிவை ஆதரித்தார்கள்.

    அந்த கம்பெனி சேர்மனுக்கு அவ்வளவு நல்ல பேர் இருந்தது. திருமணமே செய்துகொள்ளாமல் எளிமையாக வாழ்ந்து கொண்டிருக்கும் அவர் நாட்டுப் பற்றுடையவர். எதையும் மக்கள் நலனை மனதில் கொண்டு யோசிப்பவர் என்பதால் சமுதாயத்தில் அவருக்கு மிக நல்ல பேர் இருந்தது. வயதாகி விட்ட காரணத்தால் ஒரு தடவை ஓய்வு பெற்றதாக அறிவித்தவர், அவர் விலகிய பிறகு எடுக்கப்பட்ட முடிவுகள் சரியில்லையென்று மீண்டும் நிர்வாகத்தில் தன்னை இணைத்துக் கொண்டவர்.

    குழப்பத்தில் தனது கேபினில் உட்கார்ந்து கொண்டிருந்த நளினகாந்திக்கு, சேர்மனிடம் இருந்து ஃபோன் வந்தது.

    வெல் டன் நளினகாந்தி, ஐ அட்மயர் யுவர் கரேஜ் அன்ட் ஐ அப்ரிஷியேட் யுவர் டிஸிஷன். கம் டு மை கேபின் என்று அழைக்க, மலர்ந்த முகத்துடன் சேர்மனைச் சந்திக்கச் சென்றாள். அவளுடைய கருத்தை ஏற்று சர்ச்சைக்குரிய அந்தக் குற்றம் சாற்றப்பட்ட உயர் அதிகாரிக்கு நோட்டீஸ் தயாரிக்கும் வேலையை அவளிடமே கொடுத்தார்.

    கம்பெனியில் சேர்ந்த பிறகு, ஒரு பெரிய பிரச்சினையைச் சரிசெய்யத் தனது யோசனை ஏற்றுக்கொள்ளப் பட்டதை எண்ணி மகிழ்ந்து கொண்டே தனது அடுத்த வேலையைத் தொடங்கினாள். தான் வெற்றிப் பாதையில் நடை போடத் தொடங்கி விட்டதாக அந்த நொடியில் நளினகாந்தி உணர்ந்தாள்.

    அன்று மாலை தனது அலுவலக வேலை முடிந்து, துவாரகாவில் இருக்கும் தனது ஃப்ளாட்டிற்கு அலுவலக வண்டியில் நளினா போய்க் கொண்டிருந்த போது, அடுத்த சந்தோஷமான செய்தி அவளுக்குக் கிடைத்தது.

    ஹலோ நளினா, எப்படிம்மா இருக்கே?

    அகல்யாச் சித்தியா? நன்னாருக்கேன் சித்தி

    நம்ப விவேக்குக்குக் கல்யாணம் நிச்சயம் ஆகுதும்மா. இன்னும் ரெண்டு மாசத்தில அவனோட லீவைப் பாத்துக் கல்யாணத் தேதி வைக்கணும். அவனே உன்கிட்டப் பேசுவான். நான் தேதி, மண்டபம்லாம் முடிவானதும் உனக்குத் தகவல் அனுப்பறேன். இப்ப இருந்தே பயணத்துக்கு பிளான் பண்ணிக்கோ. அதுக்குத்தான் மொதல்ல சொல்லறேன். ஓகேயா? அப்புறமாப் பேசலாம் என்று சொல்லித் தொடர்பைத் துண்டித்தாள்.

    ‘வாவ், விவேக்குக்குக் கல்யாணமா? ஜாலிதான். நல்லா என்ஜாய் பண்ணலாம். எல்லாரையும் பாக்கலாம். ஆனா ஒரு பிரச்சினை, அம்மா ஊருக்குப் போனதும் என்னோட கல்யாணத்தைப் பத்திப் பேச ஆரம்பிச்சுடுவாங்க. அதிலேருந்து மட்டும் எப்படியாவது தப்பிக்கணும். கல்யாணத்துல இஷ்டம் இல்லைன்னு சொன்னாலும் ஏன் என்னோட முடிவை ஏத்துக்க மாட்டேங்கறாங்க? வயசானாலே இதுதான் கஷ்டம். கல்யாணம் செஞ்சுக்காம ஒரு பொண்ணால வாழ்க்கையில ஜெயிக்க முடியாதா?’ என்று அவளுடைய மனம் அலை பாய ஆரம்பித்தது.

    அவள் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்து கொஞ்ச நேரத்தில் அவள் எதிர்பார்த்தபடியே அம்மா, அப்பாவிடம் இருந்து அழைப்பு வந்தது.

    கல்யாணத்துக்கு வரதுக்கு இப்போ இருந்தே பிளான் பண்ணிக்கோ. இந்தச் சாக்கில எல்லாருமாச் சேந்து இருக்கலாம். பூர்ணசந்திரிகாவும் குடும்பத்தோட வந்துடுவா. மதுரையில் இருந்து அப்படியே பக்கத்தில எங்கேயாவது எல்லாருமாப் போயிட்டு வரலாம் என்றாள் அம்மா நித்யலக்ஷ்மி. ஒரு வாரம் அவர்களுடன் தங்கினால், அந்த ஒரு வாரமும் முழுக்க முழுக்க அவளுடைய திருமணம் பற்றியே தான் அம்மா பேசிக் கொண்டிருப்பாள் என்று நினைத்துச் சிரித்துக் கொண்டாள் நளினா.

    அப்பா, அவளுடைய வேலையைப் பற்றி விசாரித்தார். ரொம்ப நல்லாப் போகுதுப்பா. இன்னைக்குக்கூட சேர்மனோட மீட்டிங் இருந்தது. எவ்வளவு பெரிய மனுஷர் அவர்! இருந்தாலும் கொஞ்சம்கூட மனசில ஈகோ இல்லாம எப்படி பழகறாரு தெரியுமா? என்றாள்.

    ஆமாம், ஆமாம். அவரைப் பத்தி நெறையக் கேள்விப்பட்டிருக்கேன். நிறைகுடம் எப்பயுமே கூத்தாடாது இல்லையா? என்றார்.

    உண்மையில் நளினி வேலை செய்யும் நிறுவனத்தின் தலைவர் போன்ற ஆண் கிடைத்தால் நளினா என்ன கல்யாணத்துக்கு மாட்டேன் என்றா சொல்லப் போகிறாள்? அந்த மாதிரி வாழ்க்கைத் துணை அமைந்தால் நன்றாகத்தான் இருக்கும்.

    ‘சேர்மனுக்கு எழுபது வயசுக்கு மேலே ஆச்சு. இல்லைன்னா பேசாம அவரையே கல்யாணம் செஞ்சுக்கலாம்’ என்று நினைத்துப் பார்த்தவளுக்குத் தன் மனம் போன போக்கைப் பார்த்துச் சிரிப்புத்தான் வந்தது. ஐயோ பாவம், பீஷ்ம பிதாமகராக வாழ்ந்து கொண்டிருக்கும் வயதான அந்த மனிதரைத் திருமணம் என்னும் அம்புப் படுக்கையில் தள்ளப் பார்க்கிறதே இந்த மனது என்று நினைத்துப் பார்த்தபோது சிரிப்புத்தான் வந்தது நளினாவிற்கு.

    வீட்டுக்குப் போய் கொஞ்ச நேரம் ஓய்வெடுத்துக் கொண்டாள். இரவு உணவாகச் சப்பாத்தியும், சப்ஜியும் தயாராகச் செய்து வைக்கப்பட்டிருந்தன. காலையில் கிளம்பும்போது பக்கத்து ஃப்ளாட்டில் சாவி கொடுத்துவிட்டுப் போவாள் நளினா. கிரண் தீதி வந்து, வீட்டை சுத்தம் செய்துவிட்டு, துணிகளைத் தோய்த்து உலர்த்தி எடுத்து மடித்து வைத்துவிட்டு, இரவு உணவும் செய்து வைத்துவிட்டுப் போவாள். காலையில் உப்புமா, பிரட், கார்ன் ஃபிளேக்ஸ், முஸௌலி ஏதாவது நேரத்திற்கேற்றாற் போல் நளினாவே செய்து கொள்வாள். சமையல் தெரியும். ஆனால் அவ்வளவு இண்ட்ரஸ்ட் கிடையாது.

    இரவு ஒன்பது மணி அளவில் விவேக்கிடம் இருந்தே ஃபோன் வந்துவிட்டது.

    டேய் விவா, என்னடா திடுதிப்புன்னு கல்யாண மாப்பிள்ளை ஆயிட்டயே இப்படி? யாருடா அந்தப் பொண்ணு? என் தம்பியின் மனதை மயக்கிய காரிகை யார், யார், யார்? என்றாள் சிரித்துக் கொண்டே.

    ஷிவன்யாதான். போன தடவைகூட ஒனக்கு இன்ட்ரடியூஸ் பண்ணினேனே! ஞாபகம் இருக்கா?

    அட்றா சக்கை. நல்ல பொண்ணுடா. ஆமாம், ஃப்ரண்ட்னு சொன்னே? ஃப்ரண்டில் இருந்து அடுத்த ப்ரோமோஷன் எப்படிக் கொடுத்தே?

    என்ன நளினாக்கா? நீங்க கூட இப்படி? இதோ இங்கதான் இருக்கா. என் பக்கத்தில் நின்னு நாம பேசறதைக் கேட்டு ரசிச்சுண்டு இருக்கா

    நீ எங்கேருந்து பேசறே? வீடா, ஆஃபீஸா?

    நள்ளிக்கா, அது வந்து... என்று இழுத்தான்.

    விவேக், நளினாவின் சித்தப்பா பையன். விவேக்கின் அப்பா, நளினாவின் அப்பாவிற்குத் தம்பி. நளினா, விவேக் இரண்டு பேருக்கும் ஒரு வயசுதான் வித்தியாசம். ஆனால் இரட்டைக் குழந்தைகள் போல ஒன்றாகத்தான் சுற்றுவார்கள். ஆனால், எவ்வளவு சொன்னாலும், நளினகாந்தியை அக்கா என்றுதான் கூப்பிடுவான். அதுவும் ஏதாவது குறும்புத்தனம் செய்து விட்டு நளினாவின் உதவி தேவைப்படும் போது, நளினா அக்கா, அழகாக நள்ளிக்கா என்று மாறி விடும்.

    என்னடா பண்ணித் தொலைச்சே? ஜாஸ்தி கொழையாம விஷயத்தைச் சொல்லு என்றாள்.

    அது வந்து நாங்க ரெண்டு பேரும் கொஞ்ச நாளாவே லிவிங் டுகெதர் தான். அப்புறம் இப்பத்தான் கல்யாணம் பண்ணிக்கறதா டிஸைட் பண்ணி, அம்மா, அப்பாட்ட சொல்லிட்டோம்.

    Enjoying the preview?
    Page 1 of 1