Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Engirundho Vandhaal
Engirundho Vandhaal
Engirundho Vandhaal
Ebook322 pages1 hour

Engirundho Vandhaal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

"The important thing to know about an assassination or an attempted assassination is not who

fired the shot, but who paid for the bullet.Nandhini and Akash, A devote

Languageதமிழ்
Release dateMar 21, 2024
ISBN9789362615039
Engirundho Vandhaal

Related to Engirundho Vandhaal

Related ebooks

Reviews for Engirundho Vandhaal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Engirundho Vandhaal - Prashanth Raghuraman

    நன்றியுரை

    வாசகர்களுக்கு பணிவான வணக்கங்கள். இரண்டாவது முறையாக என் படைப்பை உங்களிடம் சமர்ப்பிப்பதில் அளவில்லாத மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறேன். என் முதல் புத்தகம் நுழையாதே தொலையாதேவிற்கு நீங்கள் அளித்த பேராதரவை இன்னும் என்னால் நம்ப முடியவில்லை.

    ஒரு அழகான கனவு என்பது கனவாகவே இருக்க வேண்டுமென்பது கட்டாயமில்லை. உங்களின் எல்லா உழைப்பையும் முயற்சியையும் கொண்டு போராடினால் அந்த கனவு நிச்சயம் நிஜமாகும் என்னும் வாழ்க்கைப் பாடத்தை இந்த புத்தகம் எனக்கு கற்றுக் கொடுத்துவிட்டது.

    இந்த இடத்தில் நான் பலருக்கும் நன்றிக் கூற கடமைப்பட்டுள்ளேன். என் கதையை ஏற்று அதை புத்தகமாக்கிய ப்ளூரோஸ் பப்ளிஷர்ஸ் நிறுவனம் மற்றும் அதன் செயலாளர் நண்பர்களுக்கும் என் அன்பார்ந்த நன்றிகள்.

    புத்தகத்தையும் முகப்புப் படத்தையும் கண்கவரும் விதத்தில் அற்புதமாக வடிவமைத்து தந்த என் நண்பன் லோகார்ஜூன். உன்னைப் போன்ற நண்பன் கிடைத்தால் இங்கு ஒவ்வொருவருமே சாதனையாளர்கள் தான்.

    புத்தகம் வெளிவந்தப் பிறகு அதை எப்படி வாசகர்களிடம் கொண்டு சேர்ப்பது என்று புரியாமல் வெள்ளத்தில் சிக்கிய ஓடமாய் தவித்தபோது, கலங்கரை ஒளி விளக்காய் வந்த நண்பர்கள்,

    சரண்யா தண்டபானி, புத்தகத்தைப் படித்து முடித்து நீங்கள் காட்டிய மகிழ்ச்சியும், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தந்த விமர்சனமும் இன்றும் எனக்கு நெகிழ்ச்சியை தருகின்றன. மேலும் நீங்கள் செய்த இணையதள நேர்காணலும் அதில் தந்த பாராட்டுக்களும் என் வாழ்விலேயே ஒரு உன்னதமான தருணம்.

    சரண்யா சிதம்பரம், முதன்முதலில் என்னை நேர்காணல் மூலம் வாசகர்களின் முன் எழுத்தாளர் என அறிமுகப்படுத்திய பெருமை உங்களையே சேரும். அந்த நேர்காணல் எனக்கு புதிய நம்பிக்கையையும் ஊக்கத்தையும் தந்தது.

    லஷ்யஸ் புக்ஸ் உமா மகேஸ்வரி, ஆரவ் புக்ஸ் அரவிந்த், ஏகே புக்ஸ் கலெக்ஷன்ஸ் அம்பிகை குமார், தமிழ் புக்ஸ் ரீடர் பாலாஜி, மற்றும் அன்பு சகோதரிகள் சௌந்தர்யா ,ஹரினி, திவ்யா, புவனா, பவித்ரா, நிலா, காவ்யா ஆகிய அனைவரின் விமர்சனமும் புத்தகத்தை பெரும் உயரத்திற்கு கொண்டு சேர்த்துவிட்டது. அந்த அனைத்து உயர்ந்த உள்ளங்களுக்கும் என் உளமார்ந்த நன்றிகள்.

    பலரும் என்னைக் கேட்கும் கேள்வி, ஏன் உன் எழுத்தில் வேகம் இல்லை? உனக்குப் பின் தொடங்கிய பல எழுத்தாளர்கள் இரண்டு மூன்று புத்தகங்களை வெளியிட்டு விட்டனர். ஒவ்வொரு கதைக்கும் நீ ஒன்றரை வருட காலம் எடுத்துக் கொள்வது சரியா? நியாயமான கேள்வி தான்.

    தமிழில் மட்டுமல்ல, இன்னும் எத்தனையோ மொழிகளில் எத்தனையோ எழுத்தாளர்கள் தோன்றியிருக்கிறார்கள். ஆனால் அவர்களில் ஒரு சிலரை மட்டுமே காலம் நம் நினைவில் நிறுத்துகிறது. அதன் காரணம் என்ன? அவர்களிடம் என்ன தனித்தன்மை உள்ளது! அவர்களும் பயன்படுத்துவது அதே பேப்பர் தான். அதே பேனா தான். பின்பு வேறு என்ன?

    அவர்கள் தங்களுக்கென தேர்ந்தெடுத்த தனிப்பாதை. தேர்ந்தெடுத்த கரு. அதை கதையாக்கிய விதம். எல்லாவற்றிர்க்கும் மேல் அதை எழுதி முடிக்க எடுத்துக் கொண்ட அவகாசம்.

    தமிழ் கதைகளில் விஞ்ஞானம் என்றால் சுஜாதா, அமானுஷ்யம் என்றால் இந்திரா சௌந்தராஜன், க்ரைம் என்றால் இராஜேஷ் குமார், குடும்பம் என்றால் அனுராதா இரமணன் மற்றும் தேவிபாலா. ஏன் இந்த வரிசையில் மற்ற யாரும் இடம்பிடிக்கவில்லை. காரணம் ஒவ்வொரு கதையிலும் இவர்கள் கையாண்ட எழுத்து நடை மற்றும் தனித்துவம்.

    என் முதல் கதை ஒரு கிரைம் மற்றும் திகில் சார்ந்தது. இனி பிரஷாந்த் இரகுராமனின் கதைகள் என்றாலே க்ரைம் மட்டும் தான் என்று முத்திரைக் குத்தப்படுவதை நான் விரும்பவில்லை. மேலும் அரைத்த மாவையே பாகம்-2 பாகம் 3 என அரைக்கவும் விரும்பவில்லை. முதல் கதையிலிருந்து முற்றிலும் மாறுப்பட்டு ஒரு புதிய கதைக்களத்தை தேர்வு செய்தேன். இதுவரையில் யாராலும் சொல்லப்படாத விதத்தில் இருக்க வேண்டும் என்று மிகவும் எச்சரிக்கையுடன் ஒவ்வொரு அத்தியாயத்தையும் வடிவமைத்தேன்.

    காதல், வலி, நம்பிக்கை, துரோகம், ஏமாற்றம், நட்பு, சுயநலம், காமம், கோபம், என்னும் பல உணர்வுகளை ஒன்றாக தொடுத்து இந்த எங்கிருந்தோ வந்தாள் என்னும் கதையை உருவாக்கியுள்ளேன்.

    இந்தக் கதை சில இடங்களில் மெதுவாக நகரும். சில பகுதிகள் இலக்கு இல்லாமல் செல்வதைப் போல் தோன்றும். சில காட்சிகள் மீண்டும் மீண்டும் வந்து பொறுமையை சோதிக்கும். ஆனால் கதையின் முடிவு நிச்சயம் உங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தும் என்று நம்புகிறேன். மேலும் கதையோட்டம் எந்த இடத்திலும் ஆர்வம் குறையாமல் இருக்கவும், பரபரப்புக்கு பாதிப்பு இல்லாமலும் எழுத நான் பட்ட பாடு அந்த பரமனுக்குதான் தெரியும்.

    கதையில் ஏதேனும் குற்றம் குறைகள் தென்ப்பட்டால் அவற்றை மன்னித்து இதை முற்றிலும் ஒரு பொழுது போக்கு அம்சமாக எடுத்துக் கொள்ளும் படி வேண்டிக் கொள்கிறேன்.

    என்றென்றும் நன்றியுடன்

    பிரஷாந்த் இரகுராமன்

    முழுக்க முழுக்க உண்மை நிறைந்த ஒரு இடத்தில் எந்த ஒரு உயிரினத்தாலும், வெகு காலம் தெளிவான மனநிலையுடன் வாழ முடியாது.

    ஹான்டிங்க் ஆப் தி ஹில் ஹவுஸ் புத்தகத்தில் ஆசிரியர் ஷ்ர்லி ஜாக்ஸன் எழுதியது

    பாகம்-1

    எங்கிருந்தோ வந்தாள்

    27 ஜீலை 2016

    நந்தினியின் டைரியிலிருந்து

    ஆகாஷ் இன்று எனக்கு இந்த புதிய டைரியை பரிசளித்துள்ளார். நல்ல பளபளப்பான லெதரினால் போடப்பட்ட அட்டை. உயர்ந்த ரக பேப்பர். கையில் இதை எடுத்தப்போதே பரவசமாகி விட்டேன். இந்த டைரியில் நான் என்ன எழுதப்போகிறேன்? எதைப் பற்றி எழுதப் போகிறேன்?

    பேனாவை வாயில் வைத்துக் கடித்தபடியே ஆகாஷைப் பார்த்தேன். கிச்சனுக்குள் மும்முரமாக சமையலில் ஈடுபட்டிருந்தார். அதைப் பார்க்கும் போது சிரிப்புத்தான் வருகிறது.

    என் பெயர் நந்தினி. ஒரு எழுத்தாளர். எழுத்தாளர் என்று முழுமையாகச் சொல்ல முடியாது. என் முதல் நாவல் முடியும் தருவாயில் உள்ளது. கதையின் முடிவை எழுதப் போகிறேன். ஆனால் கண்ணுக்குத் தெரியாத ஒரு சுவற்றில் மோதிக் கொண்டு நிற்பதைப் போல் கதையை எழுதி முடிக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன். மனதில் உள்ள வார்த்தைகள் எழுத்து வடிவமாய் மாற மறுக்கின்றன. அப்படி மீறி எழுதினாலும் அவை திருப்தியாக இல்லை. நேற்று இரவு என் கணவர் ஆகாஷிடம் இதைச் சொல்லி கதறி அழுதே விட்டேன். அவர் என்னை குழந்தை போல் மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டார்.

    நந்தினி, இந்த டைரில உன் மனசுல என்னென்ன தோணுதோ எல்லாத்தையும் எழுது. சின்னச் சின்ன விஷயங்களைக் கூட விடாதே. அது உனக்குள்ள இருக்க பாரத்தைக் குறைக்கும். தங்கு தடையில்லாம நினைச்சதை எழுத இது உதவியா இருக்கும் என்று என்னை கட்டியணைத்து முத்தமிட்டு இந்த டைரியைக் கொடுத்தார். இந்த நொடியை நினைக்கும் போது என் கண் கலங்குகிறது. இன்று இரவு கட்டிலில் அவரைக் கட்டியணைத்து…ச்சீ சொல்லும் போதே வெட்கத்தில் உடல் சிலிர்க்கிறது.

    என் அன்பு ஆகாஷுக்காக இந்த நாவலை சீக்கிரம் முடிக்க வேண்டும். ஒரு வெற்றிகரமான எழுத்தாளராக பலர் முன்னிலையில் என் வெற்றிக்கு காரணம் என் கணவர் ஆகாஷ் தான் என்று சொல்ல வேண்டும். அவர் முகத்தில் நான் மகிழ்ச்சியை மட்டுமே பார்க்க வேண்டும். அவர் முகம் சின்னதாய் வாடினால் கூட அதை என்னால் தாங்க முடியாது.

    இனி இந்த டைரியின் பக்கங்கள் எங்கள் வாழ்வின் மகிழ்ச்சியான நொடிகளால் நிரம்பி வழியும். எங்கள் வாழ்வில் நடக்கும் சிறு சிறு சம்பவங்களைக் கூட விடாமல் சொல்லப் போகும் காலக் கடிகையாய் விளங்கும்.

    *

    1

    உதகையின் கடைக் கோடி மலையுச்சியில் உள்ள சந்திரபவன ஹோட்டலில் ஐந்து மரணங்கள், கொலையாளி யாரென தெரியாமல் குழம்புகிறது போலீஸ்

    என் பக்கத்தில் அமர்ந்திருந்த ஒருவர் செய்தித் தாளை அகலமாக விரித்து வைத்துக் கொண்டு உரக்கப் படித்தார்.

    பேருந்தில் அவ்வுளவாக கூட்டமில்லை. சில இருக்கைகள் காலியாக தான் இருந்தன. முன் இருக்கைகளில் சில பெண்கள் கதை பேசுவதுமாய், சிலர் மொபைல் போனில் மூழ்கியதுமாய் இருந்தனர். அண்மையில் பெய்ந்திருந்த மழை, சாலையை குழிப்பணியார தட்டு போல மாற்றியிருக்க, அதில் சென்ற பேருந்து கவர்ச்சி நடிகையைப் போல் நொடிக்கு ஒரு முறை குலுங்கிக் கொண்டிருந்தது.

    உயர்ந்த மரங்களும் மலைகளும் என்னுடனே வந்தன. குளிர்க்காற்று இதமாக முகத்தை வருடியது.

    என்னை நோக்கி திரும்பியவர் பார்த்தியா தம்பி, ஒரே நாள்ள அஞ்சு பேர் செத்திருக்காங்க, எவ்வுளவு கொடூரம், கலி முத்திப் போச்சு என்று அங்கலாய்த்துக் கொண்டார்.

    அதில் நடிகை பிரசன்னவர்த்தினியும் ஒருத்தராம், எவ்வுளவு புகழ் பெற்ற நடிகை, பாவம் இப்படி போய்டாங்களே என்று முன் சீட்டில் ஒருவர் வந்தினைந்தார்.

    அதோ தெரியுது பாருங்க அந்த மலை, அந்த மலையுச்சியில தான் சந்திரபவன ஹோட்டல் இருக்கு, அதோட உரிமையாளர் ரொம்ப நல்லவரு, பாவிங்க அவரையும் அநியாயமா கொன்னுருக்காங்க

    அந்த ஹோட்டலில என்ன நடந்துச்சோ, ஆண்டவனுக்கு தான் வெளிச்சம் என்றார் மற்றொருவர். ஆனால் அவர் சொன்ன செய்தி யாவும் என் கவனத்தை கவரவில்லை.

    அடுத்து முத்துப் பாறை ஸ்டாப், யாராவது இறங்கறிங்களா என்றார் கண்டக்டர்

    நான் எழுந்து படிக்கட்டின் அருகில் வர ப்ரீஈஈஈ என்று விசில் சத்தம் காதைக் கிழித்தது.

    *

    மேற்கு மலைத் தொடர்ச்சியின் அடிவாரம். சுற்றிலும் பல வகையான மரங்கள். கண்களுக்கு தெரியாத பறவைகளின் கீச் கீச் சத்தம். குளுமையான காற்று உடலை வருடியது. அவற்றை இரசித்தப்படியே நடந்தேன். சில நொடிகள் கடந்தது.

    கடைசியாக சரணாலயம் மனநல மருத்துவமனை கண்களில் பட்டது. சற்று தொலைவில் நின்றுப் பார்த்தப்போது, ஏதோ பழைய ஜமீன் கோட்டைப் போல் காட்சியளித்தது. சுற்றிலும் மரங்கள் வாடியிருந்தன. அவற்றிலுருந்து உதிர்ந்த காய்ந்த இலைகள் வழி முழுக்க சிதறிக் கிடந்தன. வீசிய காற்றிலும் கூட குளுமை இல்லை. மரங்கள் அசையும் சத்தத்திலும் ஒரு சோகம். காகங்கள் கூட அந்த இடத்தைச் சுற்றிப் பறக்கவில்லை. சற்று முன்பு நடந்தது வந்த பச்சைப் பசேல் பாதைக்கும் இந்த இடத்துக்கும் எவ்வுளவு வித்தியாசங்கள். ஒரு உலகை விட்டு மற்றொரு உலகத்திற்க்குள் நுழைந்தது போல் இருந்தது.

    முகப்பில் ஒரு பெரிய இரும்பு கதவு துருப்பிடித்து கிடந்தது. நான் முன்னேறி நடந்தேன். நுழைவாயிலுக்கும் பிரதான கட்டிடத்துக்கும் இருபது அடி தூரம் இருக்கும். கட்டிடத்தின் கொஞ்சம் அருகாமையில் ஒரு சிலை எழுப்பப்பட்டிருந்தது. அநேகமாக அவர் தான் இந்த இடத்தை நிர்மாணித்தவராக இருக்க வேண்டும். அந்த சிலை தந்த நிழலில் நாய் ஒன்று படுத்து தூங்கிக் கொண்டிருந்தது.

    கட்டிடத்திற்க்குள் நுழைந்தேன். அப்படி ஒரு அமைதி. என்னுடைய காலடி சத்தமே அங்கு பெரிதாய் எதிரொலித்தது. என் மூச்சுக் காற்றே எனக்கு பலமாய் கேட்டது. காரிடர் நீளமாக காணப்பட்டது. அதன் முடிவில் ஒரு ரிசப்ஷன். ஒரு வயோதிகர் அங்கு மேஜை மேல் சாய்ந்தபடி நல்ல உறக்கத்தில் இருந்தார்.

    சார், சார் என்று இருமுறை அழைத்தேன். அவர் உறக்கம் கலைவதாய் இல்லை. டம்மென்று மேஜையை தட்டினேன். அலறிக் கொண்டு எழுந்தார்.

    சீஃப் டாக்டரை பார்க்கனும்

    அப்படியா, கொஞ்சம் உட்காருங்க வரேன் என்று சொல்லிவிட்டு எழுந்து தள்ளாடியப்படியே சென்றார். நான் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தேன்.

    அந்த சூழல் எனக்குள் ஏதோ புரியாத பாஷையில் பல விஷயங்களைப் பேசியது. எனக்குள் குழப்பங்கள், அதிர்வுகள், தெளிவுகள் என உணர்வுகள் அலைபாய்ந்தன. உடலின் ரோமங்கள் சிலிர்த்தன. அவற்றில் மூழ்கி இருந்த போது, திடீரென ஒரு பெண் எங்கிருந்தோ ஓடி வந்து என் மீது பாய்ந்தாள்.

    நான் நிலையை உணர்ந்து, அவளை சமாளிப்பதற்க்குள் என் சட்டையை பிடித்து உலுக்கினாள். அதில் என் சட்டை பட்டன்கள் ஒவ்வொன்றாக பட பட வென அறுந்தன. திபு திபு வென மூன்று பேர் ஓடி வந்து அவளைப் பிடித்து பின்னால் இழுத்தனர். அவள் அப்போதும் அடங்கவில்லை. திமிறி குதித்தாள். அப்படியே அந்தப் பெண்ணை கை கால்களை பிடித்து தூக்கிக் கொண்டு சென்றனர்.

    திரும்பி வந்த ரிசப்ஷன் மனிதர், கிழிந்து தொங்கிய சட்டையுடனும் கலைந்த தலையுடனும் பராரி கோலத்தில் நின்ற என்னை வினோதமாக பார்த்தார்.

    அந்தப் பெண் தான் இப்படி. என்று சொல்லி முடிக்க முடியாமல் இழுத்தேன்.

    உங்களை உள்ளே கூப்பிடறாங்க என்றார்.

    .இந்த அலங்கோல உடையுடன் எப்படி உள்ளே நுழைவது! இருந்தாலும் வேறு வழியில்லை. பர்ஸ்யூட் ஆஃப் தி ஹேப்பினஸ் வில் ஸ்மித்திற்க்கு பிறகு இப்படி ஒரு கோலத்தில் இன்டர்வியூக்கு போகிறவன் நான் தான் என்று நினைத்தப்படியே உள்ளே நுழைந்தேன்.

    *

    அந்த அறையில் என் எதிரில் நான்கு பேர் அமர்ந்திருந்தனர். அந்த நான்கு

    Enjoying the preview?
    Page 1 of 1