Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Yenipadigal
Yenipadigal
Yenipadigal
Ebook285 pages1 hour

Yenipadigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

எனது வளர்ச்சிக்கு முக்கிய காரணம் ஒரு பக்கம் பத்திரிகைள் இன்னொரு பக்கம் சினிமா. அதாவது சின்னத்திரை தொடர்கள். 1979 ஆம் ஆண்டு நான் பத்திரிகைகளில் எழுதத் தொடங்கினேன். எழுத வந்து நாற்பத்தி ஒரு ஆண்டுகள் ஆகி விட்டது. சென்னை பொதிகை தொலைகாட்சிக்கு ஒரு மணி நேர நாடகங்களை எழுதத்தொடங்கிய ஆண்டு 1986. வாரத்தொடர்களில் தொடங்கி மெகா தொடர்கள் வரை வளர்ந்து பல சேனல்களுக்கு எழுத வந்தது 1995 ஆம் வருடம். அப்படி பார்த்தால் விஷுவல் மீடியாவில் இது வெள்ளி விழா ஆண்டு. பத்திரிகைகளில் சின்னத்திரையில் பேரும் புகழும் பெற்று இந்த அளவுக்கு வளர்ந்து வர என்னை ஏற்றி விட்ட ஏணிகள் ஏராளம். சின்னத்திரையிலும் பத்திரிகைகளிலும் என்னை வளர்த்து விட்ட அவர்களைப் பற்றி நான் சொல்ல வேண்டிய செய்திகள் ஏராளம். இந்த கொரோனா கால கட்டத்தில் எழுதும் பணிகள் நிறைய இருந்தாலும் சற்றே ஓய்வும் கிடைக்கிறது. அதனால் என்னை ஏற்றி விட்ட ஏணிகளை பற்றி முகநூல் நட்புகளிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்த நாற்பதாண்டு அனுபவங்களை அதில் நான் உழைத்த ரசித்த நெகிழ்ந்த மகிழ்ந்த சம்பவங்களை வெகு விரைவில் உங்களுடன் பகிர்ந்து கொள்ள வருகிறேன். ஏணிப்படிகள் என்ற முகநூல் தொடர் எனது அனுபவங்கள். முதலில் எனது ஆசான் மறைந்த ஆனாலும் இதயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிற இயக்குநர் சிகரம்.கே.பாலசந்தர்.
Languageதமிழ்
Release dateJan 4, 2021
ISBN6580100606365
Yenipadigal

Read more from Devibala

Related to Yenipadigal

Related ebooks

Reviews for Yenipadigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Yenipadigal - Devibala

    https://www.pustaka.co.in/

    ஏணிப்படிகள்

    Yenipadigal

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    http://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    1.கே.பாலசந்தர்

    2. இதயம் பேசுகிறது மணியன்

    3. ஏவி.எம்.சரவணன்

    4. எஸ்.பி.முத்துராமன், இயக்குநர்

    5. அமரர்.சாவி

    6. அமரர். பாலசுப்ரமணியன்

    7. பா. சீனிவாசன்

    8. அமரர்.ஏ.சி.திருலோகசந்தர், இயக்குநர்

    9. ஜி.அசோகன்

    10. ஏவி.எம். குமரன்

    11. ஏவி.எம். கே. சண்முகம்

    12. கீழாம்பூர். எஸ்.சங்கரசுப்ரமணியன்

    13. டி.ஜி.தியாகராஜன், சத்யஜோதி பிலிம்ஸ்

    14. எம்.கே.சாமி, மயிலவன் பதிப்பகம்

    15. ராதிகா சரத்குமார்

    16. வரதராஜன், சி.எம்.டி. ப்ரியா கல்யாணராமன், ஆசிரியர் குமுதம்

    17. நடிகை ரேவதி, தயாரிப்பாளர்

    18. எம்.எஸ்.பெருமாள்

    19. சுஜாதா விஜயகுமார், ஹோம் மூவி மேக்கர்ஸ்

    20. 'மெட்டி ஒலி' சித்திக், தயாரிப்பாளர்

    21. அமரர். பாண்ட்ஸ் பாலா, தயாரிப்பாளர்

    22. குஷ்பு சுந்தர், தயாரிப்பாளர்

    24. விஷன் டைம் ராமமூர்த்தி, தயாரிப்பாளர்

    25. லீலாராம், தயாரிப்பாளர்

    26. பின்னிராஜன்

    27. ராஜேஷ் தேவதாஸ்

    28. சுந்தர்.கே.விஜயன், இயக்குநர்

    29. அமரர்.சுஜாதா, எழுத்தாளர்

    30. ஆர்.கணேஷ், இயக்குநர்

    31. அமரர்.பாலகுமாரன், எழுத்தாளர்

    முன்னுரை

    எனது வளர்ச்சிக்கு முக்கிய காரணம் ஒரு பக்கம் பத்திரிகைள் இன்னொரு பக்கம் சினிமா. அதாவது சின்னத்திரை தொடர்கள். 1979 ஆம் ஆண்டு நான் பத்திரிகைகளில் எழுதத் தொடங்கினேன். எழுத வந்து நாற்பத்தி ஒரு ஆண்டுகள் ஆகி விட்டது. சென்னை பொதிகை தொலைகாட்சிக்கு ஒரு மணி நேர நாடகங்களை எழுதத்தொடங்கிய ஆண்டு 1986. வாரத்தொடர்களில் தொடங்கி மெகா தொடர்கள் வரை வளர்ந்து பல சேனல்களுக்கு எழுத வந்தது 1995 ஆம் வருடம். அப்படி பார்த்தால் விஷுவல் மீடியாவில் இது வெள்ளி விழா ஆண்டு. பத்திரிகைகளில் சின்னத்திரையில் பேரும் புகழும் பெற்று இந்த அளவுக்கு வளர்ந்து வர என்னை ஏற்றி விட்ட ஏணிகள் ஏராளம். சின்னத்திரையிலும் பத்திரிகைகளிலும் என்னை வளர்த்து விட்ட அவர்களைப் பற்றி நான் சொல்ல வேண்டிய செய்திகள் ஏராளம். இந்த கொரோனா கால கட்டத்தில் எழுதும் பணிகள் நிறைய இருந்தாலும் சற்றே ஓய்வும் கிடைக்கிறது. அதனால் என்னை ஏற்றி விட்ட ஏணிகளை பற்றி முகநூல் நட்புகளிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்த நாற்பதாண்டு அனுபவங்களை அதில் நான் உழைத்த ரசித்த நெகிழ்ந்த மகிழ்ந்த சம்பவங்களை வெகு விரைவில் உங்களுடன் பகிர்ந்து கொள்ள வருகிறேன். ஏணிப்படிகள் என்ற முகநூல் தொடர் எனது அனுபவங்கள். முதலில் எனது ஆசான் மறைந்த ஆனாலும் இதயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிற இயக்குநர் சிகரம்.கே.பாலசந்தர்.

    ***

    ஏணிப்படிகள்

    இன்று சர்வதேச தந்தையர் தினம்.மாதா பிதா குரு தெய்வம்.அந்த வரிசையில் என்னைப்பெற்ற தந்தை ஸ்ரீராமன், என் குல(தெய்வம்) தந்தை ஸ்ரீராஜராஜேஸ்வரன், என் அருள் தந்தை சீரடி பாபா, என் கலை உலக ஞானத்தந்தை கே.பாலசந்தர் நால்வருக்கும் வந்தனம் சொல்லி இந்த தொடரை ஆரம்பிக்கிறேன்.

    என் அப்பா எனக்கு ரோல் மாடல். ரயில்வேயில் அதிகாரி. அப்பா, அம்மா என்னை செல்லமாக வளர்த்தார்கள். நான் கடைசி பிள்ளை. சர்வ சுதந்திரத்துடன் வளர்ந்தவன். நாளை பரீட்சை என்றால் இன்று என்னை சினிமாவுக்கு அனுப்புவார் அப்பா. காரணம் என் மேல் உள்ள நம்பிக்கை. கண்ணுக்கு தெரியாத அந்த கண்டிப்பு. மானசீக பயமும் பக்தியும் அப்பாவிடம் உண்டு. அவர் எனக்கு நல்ல தோழர். வழிகாட்டி.. ஒழுக்கமாக வளர்த்தவர். நான் பட்டம் முடித்து வெளியே வரும்வரைதான் அவர் உயிரோடு இருந்தார் என்னுடைய இந்த புகழை வளர்ச்சியை காண அவர் இல்லை. ஆனால் நான் பத்திரிகை உலகில் நுழைந்து ஏழெட்டு சிறுகதைகள் எழுதும் வரை இருந்தார் அதற்காக மிகவும் பெருமைப்பட்டார். இப்போதும் அவரது ஆத்மா என்னை வழிநடத்துகிறது.

    இனி என் ஞானத்தந்தை.

    பத்திரிகையில் நிறைய எழுதி சின்னத்திரைக்கும் நான் வந்த பிறகுதான் இயக்குநர் சிகரத்தின் சந்திப்பு நேர்ந்தது.

    மடிசார் மாமி விகடனில் வெளியாகி மிகப்பெரிய புகழை எனக்கு தந்த பிறகு அது சின்னத்திரைக்கு வந்த போது அதில் நடித்தார் கவிதாலயா கிருஷ்ணன். அந்த நேரம் சன் டீவியில் பாலசந்தர் சார் காதல் பகடை தொடரை முடித்து விட்டு பிரேமி தொடர் ஆரம்பிக்க அவகாசம் எடுத்துக்கொண்டார். அந்த இடைவெளி ஏழு வாரம். அவருக்கு ஒரு தொடர் தேவைப்பட்டது. கிருஷ்ணனை கேட்க அவர் என் பெயரைச்சொல்ல எனக்கு அழைப்பு வந்தது. நானும் இயக்குநர் சுந்தர்.கே.விஜயனும் கே.பி.சார் வீட்டுக்கு ஒரு திங்கள் காலை எட்டு மணிக்கு போனோம். எனக்கு பரபரப்பாக இருந்தது. காரணம் நான் அவரது பரம ரசிகன். அவரது மேஜர் சந்திரகாந்த் படம் வரும்போது எனக்கு ஐந்து வயது. என் அம்மா, என் மூத்த சகோதரர் எல்லாருமே பாலசந்தரின் பரம ரசிகர்கள். அவரது எதிர்நீச்சல்,நூற்றுக்கு நூறு, காவியத்தலைவி, புன்னகை, அரங்கேற்றம் படங்களை இவர்கள் அக்கு வேறு ஆணி வேறாக அலசுவார்கள். எனக்கு பால பருவத்தில் இவர்கள் பேச்சைக்கேட்டு அவர் மேல் அப்படி ஒரு ஈடுபாடு. அந்த மனிதருக்கு நான் கதை சொல்லப்போகும் நாள் வரும் என்று கனவில் கூட நினைக்கவில்லை. அந்த பொன்னான நிமிடங்கள் வந்து விட்டது. வாரன் சாலையில் அவரது இல்லத்தில் காவேரி ஹாலில் முதல் சந்திப்பு. ஏழு வாரத்தொடர் என கிருஷ்ணன் சொல்லிவிட்டதால் கதையோடுதான் நான் போயிருந்தேன். வரவேற்று எங்களை உட்கார வைத்தார். வெள்ளை உடுப்பு. பளிச்சென நெற்றியில் விபூதி, அகன்ற நெற்றி, ஆழமான கண்கள், சிரித்த முகத்துடன் உட்கார்ந்தார். உங்களுக்கு அறிமுகம் தேவையில்லை. பத்திரிகை விஷுவல் மீடியா ரெண்டுலேயும் புகழ் வரத்தொடங்கியாச்சு. காபியை குடிச்சிட்டு பேசலாம் என்றார். எப்ப கதை சொல்ல முடியும். ஏழு எபிசோட், முப்பத்தி அஞ்சு சீன்கள். ஒரு வாரத்துல முடியுமா எனக் கேட்டார். நான் இப்பவே சொல்றேன் சார் என்றதும் நிமிர்ந்து உட்கார்ந்தார். கைல ஸ்க்ரிப்ட் இல்லையே எனக்கேட்டார். மனசுல இருக்கு சார் என்றேன். அவர் முகத்தில் வெளிச்சம். சரி சொல்லுங்க என்றார். நாற்பது நிமிடங்களில் முப்பத்தி ஐந்து சீன்களுக்கான திரைக்கதையை..முக்கிய வசனங்களுடன் ஒரே மூச்சில் நான் சொல்லி முடிக்க எழுந்து வந்தார். கை குலுக்கி என் தோள்களை தட்டித்தந்து பாராட்டி ஏவி.எம்முக்கு மேஜர் சந்திரகாந்த் கதையை இப்படித்தான் நான் சொன்னேன். உங்கிட்ட இப்ப நான் என்னை பார்க்கிறேன் என்றார். ஆனந்தத்தில் பரவசத்தில் என் கண்கள் கலங்கியது. அப்போது ஆரம்பித்த அந்த பாசமும் நட்பும் அவரது இறுதி மூச்சு வரை தொடர்ந்தது. கவிதாலயா மின்பிம்பங்களின் ஆஸ்தான கதாசிரியர் ஆனேன் நான். அதன் பின் ஏற்பட்ட ஆனந்த அனுபவங்களை அடுத்தடுத்து உங்களுடன் பகிரப்போகிறேன்..

    ***

    1.கே.பாலசந்தர்

    எனக்கும் பாலசந்தர் சாருக்கும் நெருக்கத்தை உண்டாக்கிய அந்தத்தொடர் ஒத்திகை. ஏழு வாரங்களுக்கு சன் தொலைகாட்சியில் ஔிபரப்பாகி பலத்த வரவேற்பையும் பாராட்டுதல்களையும் பெற்றது. அதைத் தொடர்ந்து தினசரி என்னுடன் போனில் பேசுவார். அவரது ஜன்னல் தொடர் படப்பிடிப்பு அதற்கும் எனக்கும் அப்போது சம்பந்தமில்லை. ஆனால் வரச்சொன்னார். அதில் வரும் வசனங்களை சரிபார்க்க சொன்னார். அவர் அழகாக நடித்துக் காட்டி டைரக்ட் செய்வதை பக்கத்தில் இருந்து பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அந்த நாள் முழுக்க ஏறத்தாழ எட்டு மணிநேரம் அவருடன் இருந்தேன். அவருடன் அமர்ந்து சாப்பிட்டேன். வசனங்களை சரி பார்த்தேன். மாலை ஆறு மணிக்கு எதுக்கு உன்னை வரச்சொன்னேன் தெரியுமா எனக்கேட்டார். தெரியலை சார் என்றேன். அடுத்த வாரம் தெரியும் என்றார். தெரிந்தது. அடுத்து வரப்போகும் ஐந்து தொடர்களுக்கு எனது ஸ்கிரிப்ட்.

    கடவுளுக்கு கோபம் வந்தது, குகன், மஞ்சள் நிலா, காவ்யா, அடுத்த வீட்டுக்கவிதை. எல்லாமே கவிதாலயா மின்பிம்பங்களின் தயாரிப்பு. அத்தனையும் வெற்றி தொடர்கள். அடிக்கடி அவரது இல்லத்தில் கதை விவாதம். அவரது மேலான ஆலோசனைகள். பாசம் பரிவு எல்லாமே நிறைய கிடைத்தது. அதன் பிறகு ஊஞ்சல் தொடர் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. தவிர மைக்ரோ தொடர்கள் ஏராளம். இந்த நேரம் அவரது புதல்வர் கைலாசம் சாரைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். அவரது அறிவும் ஆற்றலும் செயல்பாடும், தாய் எட்டடி என்றால் குட்டி எண்பதடி. அவர் இப்போது இல்லை. எங்களுக்கெல்லாம் சிறகே முறிந்து விட்டது. புஷ்பா மேடமும் பாசமானவர்கள். கே.பி.சாரிடம் நிறைய கற்றுக்கொண்டேன். என் கதைகளில் இப்போதும் அவரது சாயலும் பாதிப்பும் நிறைய இருக்கும். நல்லதை பாராட்டும் அவர் தப்புக்களை கண்டிக்க தயங்கவே மாட்டார். குறைவாக அவரிடம் திட்டுக்களை வாங்கியது நானாகத்தான் இருப்பேன். ஒருமுறை அவரிடம் அவள் ஒரு தொடர்கதையை ரெண்டரை மணி நேர படமா எடுத்து வேஸ்ட் பண்ணிட்டீங்க சார் என்றதும் முறைத்தார். அடி விழும் என்று எதிர்பார்த்தேன். நீ என்ன செஞ்சிருப்பே என அமைதியாக கேட்டார். பத்து மெகா தொடர் பண்ணியிருப்பேன். அத்தனை கதை அதுல இருக்கு என்றேன். உடனே பூரித்து போய் என் கன்னத்தில் செல்லமாக தட்டி உச்சந்தலையில் கை வைத்து அழுத்தினார். காமராஜ் அரங்கத்தில் அசோகன் எனக்கு பாராட்டு விழா நடத்தும்போது இதை ஓப்பனாக சொன்னார். நான் ஆச்சர்யப்பட்டேன். அப்படிப்பட்ட டைரக்டர் என் மேல் வைத்த அசைக்க முடியாத நம்பிக்கையை ஒரு பதட்டமான சூழ்நிலையில் உணர்ந்தேன். ஏறத்தாழ எங்களுக்குள் பிளவை உண்டாக்கும் ஒரு சம்பவம் அது..

    நேற்று பிளவு என்ற வார்த்தையுடன் அதிர வைத்து விட்டேனா. அந்த எல்லைக்கு போனது நிஜம்தான். ஒரே நேரத்தில் ஐந்து மெகா தொடர்களுக்கு நான் எழுதிக்கொண்டிருந்த நேரம் அது. ஒரு நாளைக்கு இருபது மணி நேர உழைப்பு. அந்த நேரம் ஒரு பத்திரிகையில் சினிமா பிரபலங்களுடன் எனக்கான நெருங்கிய நட்புகளை பற்றி எழுதச்சொன்னார்கள். நானும் கே.பாலசந்தர், ஏவி.எம்.சரவணன், ஏசி.திருலோகசந்தர், எஸ்.பி.முத்துராமன் இவர்களுடன் தொடர்ந்து பணிபுரிந்ததால் இந்த நால்வரைப் பற்றியும் எழுதினேன்.அது அச்சாகி வெளியே வர அந்த நேரம் நான் ஏவி.எம்.மில் இருந்தேன். திரு.சரவணன் சார் என்னை உடனே அழைத்தார். என்ன இப்படி செஞ்சிட்டீங்க என்றார். எனக்கு புரியவில்லை. கே.பாலசந்தரை எழுதாம எங்க மூணு பேரை பற்றி மட்டும் சொல்லியிருக்கீங்க உங்க மேல அதிக அக்கறை உள்ளவராச்சே அவர் என்றார். நான் அதிர்ந்து பத்திரிகையை அப்போதுதான் பார்க்க., கே.பி.சாரை பற்றிய பதிவு வரவில்லை. அந்த நேரம் அவருக்கும் அந்த பத்திரிகைக்கும் சின்ன மனஸ்தாபம். புலவர்களுக்குள் சண்டையும் பின் பாசமும் இயல்புதானே. நக்கீரன் சிவனது புராண சண்டையை விடவா. ஆனால் மாட்டிக்கொண்டது நான். எனக்கு இருவரும் வேண்டும். நீங்க எழுதின விஷயத்தை கே.பி.சார்கிட்ட சொல்லிடுங்க என்றார் சரவணன் சார். நான் டைரக்டருக்கு ஏறத்தாழ டயல் செய்து விட டைரக்டர் கணேஷ் தடுத்தார். அண்ணா… இதை நீ கே.பி.சார் கிட்ட சொல்லி… அவர் அதை உணர்ச்சி வசப்பட்டு ஏதாவதொரு மேடைல பேசிட்டா உனக்கும் பத்திரிகைக்கும் உள்ள உறவு முறியும். பார்த்துக்கோ என்றார். அதை நான் சரவணன் சாரிடம் சொல்ல கணேஷ் சொல்றது நியாயம். விட்ருங்க. தேவைப்பட்டா உங்களுக்காக பாலசந்தர்கிட்ட நான் பேசறேன் என்றார்.

    அதே நேரம் அங்கே கே.பி.சார் வீட்டில் யாரோ ஒரு புனித ஆத்மா பத்திரிகையை டைரக்டரிடம் காட்டி பற்ற வைத்து விட்டது. சில நொடிகள் மௌனம். பிறகு கே.பி.சார் அவன் கண்டிப்பா என்னை பற்றி எழுதியிருப்பான். அவங்க போட்டிருக்க மாட்டாங்க… விடுய்யா… என்றாராம். இந்த தகவல் அன்று மாலையே எனக்கு வந்த போது நான் சிலிர்த்தேன். என்ன ஒரு அபார நம்பிக்கை என் மேல். என் மேல் அளவுகடந்த நம்பிக்கை வைத்த டைரக்டர், எனக்காக பேசத் தயாரான மிகப் பெரிய தயாரிப்பாளர் சரவணன் சார். பிறந்ததன் பயனை அன்றுதான் அடைந்தேன். அந்த பத்திரிக்கையும் இன்றும் என்னை ஆதரித்துக் கொண்டுதான் இருக்கிறது. இரண்டாயிரமாவது ஆண்டில் அசோகன், அமரர் ராது இணைந்து எனக்கொரு பாராட்டு விழாவை சென்னை காமராஜர் அரங்கத்தில் நடத்தினார்கள். 1550 எபிசோடுகளை நான் முடித்திருந்த நேரம். இப்போது பதினைந்தாயிரம் கடந்து விட்டது. அந்த விழாவுக்கு என் பாசமான கே.பி.சார் தான் தலைமை ஏற்று எனக்கு தங்க பேனா பரிசளித்தார். நீ எழுதிகிட்டே இரு. நிறுத்தாதே என்றார். அவர் வாக்கு பலிக்கிறது. இருபது வருடங்கள் கடந்தும் எழுத்து பணி அதே வீச்சில் நடக்கிறது. அந்த விழாவில் பேர் சொல்லும் அத்தனை பெரிய மனிதர்களும் கலந்து கொண்டு சுமார் மூன்று மணிநேரம் எனக்காக ஒதுக்கி என்னை கௌரவித்தார்கள். அதை அசோகனைப்பற்றி எழுதும் போது எழுதுகிறேன். டைரக்டருடன் என் பாசம், பற்று, வாய்ப்புகள் எல்லாமே தொடர்ந்தது.அவர் வேறு சேனல்களில் பணிபுரிந்த போதும் என்னை விடவேயில்லை. அவரது உடல் நிலையில் கொஞ்சம் பின்னடைவு ஏற்பட்ட நேரம். ஒரு முறை கிருஷ்ண கான சபாவில் கவிஞரும் இயக்குநர் சிகரமும்

    Enjoying the preview?
    Page 1 of 1