Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Bhama Gopalanin Sinthanai Chitharalgal
Bhama Gopalanin Sinthanai Chitharalgal
Bhama Gopalanin Sinthanai Chitharalgal
Ebook135 pages45 minutes

Bhama Gopalanin Sinthanai Chitharalgal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பாமா கோபாலன் இருக்கும் இடத்தில் கலகலப்புக்குப் பஞ்சமிருக்காது. சினிமாவில் ‘கவுண்ட்டர்’ டயலாக் ‘பஞ்ச்’ டயலாக் எல்லாம் யோசித்து யோசித்து எழுதுவார்கள். பாமா கோபாலன் சர்வ சாதாரணமாக ஒன் லைனர்கள் அடிப்பார். கையில் காபி டம்ளர் இருந்தால் குலுங்கிச் சிரிக்கும்போது நிச்சயம் சிந்தும். மனதில் ஒரு துளி பொறாமையோ, வஞ்சமோ இல்லாத அற்புதமான மனசு. பேச்சுக்கு நடுவில் எல்லாம் ஆசீர்வதிக்கும் வார்த்தைகள் அன்பு மழையாகக் கொட்டும். இதையெல்லாமா பாராட்டுவார்கள் என்று கூச்சம் கொள்ளும்படியாக அதையெல்லாம் பாராட்டுவார். என்னை மட்டும் அல்ல... எவரையும். எங்கே யாரிடம் திறமை பளிச்சிட்டாலும் வானளவு பாராட்டுவார்.

அப்பேற்பட்ட ஆகச்சிறந்த மனிதரைப் பற்றி தெரிந்துக் கொள்ள வாசிப்போம் வாருங்கள்.

Languageதமிழ்
Release dateJun 17, 2023
ISBN6580128510015
Bhama Gopalanin Sinthanai Chitharalgal

Read more from Bhama Gopalan

Related to Bhama Gopalanin Sinthanai Chitharalgal

Related ebooks

Reviews for Bhama Gopalanin Sinthanai Chitharalgal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Bhama Gopalanin Sinthanai Chitharalgal - Bhama Gopalan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    பாமா கோபாலனின் சிந்தனைச் சிதறல்கள்

    Bhama Gopalanin Sinthanai Chitharalgal

    Author:

    பாமா கோபாலன்

    Bhama Gopalan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/bhama-gopalan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    பாமா கோபாலன் என்கிற பாசக்காரர்!

    கணவரும் அவரே! குருவும் அவரே!

    10800 தடவை மின்சார ரயிலில்...

    மழலையுடன் மல்லாடுகிறவர்களுக்கு...

    ...என்றால், என்ன செய்வீர்கள்?

    குட் பை கபில்!

    எந்த அறை எந்த

    உங்களிடமும் ஒரு கதை இருக்கிறது!

    பொ.போ.பொ. பிறந்தான்

    சுஜாதா போட்ட குண்டு

    என் நாடகத்தில் நடிகர்களே கிடையாது!

    ராஜா, இன்னொரு டேக் போகலாமா?

    ஓசி

    கல்யாணத்திற்கு முன் ரிசப்ஷனா?

    மண(ன) மேடை

    காதல் கடுதாசிங்க காணாமப் பூடுச்சு!

    வாகனம் ரொம்ப கனம்

    பாமா கோபாலன் என்கிற பாசக்காரர்!

    11

    அன்புள்ள உங்களுக்கு...

    வணக்கம்.

    ஆனந்த விகடனில் 1979ம் வருடம் ‘நேர்மையே நீ இன்னும் சாகவில்லை’ என்கிற என் சிறுகதைக்கு ஒரு போட்டியில் மூன்றாம் பரிசு. (அது என் பத்து அல்லது பனிரெண்டாவது சிறுகதை என்று நினைவு) அந்தக் கதையோடு எனது முகவரியும் வெளியிட்டிருந்தார்கள். முதல் முறையாக தபால்காரர் வாசகர் கடிதங்கள் தருகிறார். தினம் இருபது, முப்பது என்று ஒரு வாரத்தில் மொத்தம் இருநூறுக்கும் மேற்பட்ட பாராட்டுக் கடிதங்கள். பெரும்பாலும் போஸ்ட் கார்டுகள். ஒவ்வொரு கடிதத்தையும் பல முறை படிக்கிறேன். தபால் அலுவலகம் சென்று நூற்றுக் கணக்கில் போஸ்ட் கார்டு வாங்கி வந்து ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக பதில் எழுதுகிறேன். அப்போதுதான் முதல்முறையாக என் முகவரி போட்டு ரப்பர் ஸ்டாம்ப் ஆர்டர் செய்து வாங்குகிறேன்.

    அந்தக் கடிதங்களில் ஒரு கடிதம் புருவம் உயர்த்த வைத்தது... அது பாமா கோபாலன் எழுதிய கடிதம். அவர் பெயர் குமுதத்தில் அடிக்கடி பார்த்திருக்கிறேன். ஒரு பிரபல எழுத்தாளர் ஒரு வளரும் எழுத்தாளரைப் பாராட்டி கடிதம் எழுத எத்தனைப் பெருந்தன்மை வேண்டும்?

    அவருக்கு நன்றிக் கடிதம் எழுதும்போது உங்களைப் பற்றி மேலதிக விபரமறிய ஆசை என்று குறிப்பிட்டேன். பதில் வந்தது. தன்னைப் பற்றி அறிமுகம் செய்துகொண்டு அதுவரை எழுதிய சிறுகதைகள் - 127 என்று குறிப்பிட்டிருந்தார். அம்மாடியோவ் என்று வியப்பாய் இருந்தது.

    எங்களுக்குள் கடித நட்பு பற்றிக் கொண்டது. திகுதிகுவென்று சுடர் விட்டுப் படர்ந்தது.

    அடுத்த சென்னைப் பயணத்தின்போது குரோம்பேட்டைக்கு வழி விசாரித்துக்கொண்டு மின்சார இரயிலில் சென்று இல்லம் சென்றேன். வேதா கோபாலனை வேதாவாக அறிமுகம் செய்தார். இனிக்க இனிக்கப் பேசினார். பிரிய மனமில்லாமல் பிரிந்தோம்.

    பாமா கோபாலன், வேதா கோபாலன் திருமணத்தில்தான் பல எழுத்துலக ஜாம்பவான்களை, பத்திரிகை உலகப் பிரமுகர்களைச் சந்திக்கிறேன்.

    கடிதம், கடிதம், கடிதம் என்று மாய்ந்து, மாய்ந்து எழுதிக் கொண்டோம். அன்பும், நட்பும் வளர்ந்து எங்கள் மொத்த குடும்பத்தின் நண்பர்களாகவே மாறிப் போனார்கள்.

    பாமாவையும், வேதவையும் என் அப்பா, அம்மாவுக்கு மிகவும் பிடிக்கும். என் உடன் பிறந்தவர்களும் அவர்கள் மீது பிரியம் வைத்தார்கள். எங்கள் குடும்பத்தின் அத்தனை நிகழ்வுகளிலும் அவர்கள் கண்டிப்பாக முன்னிலையில் நிற்பார்கள்.

    திருச்சியில் நடந்த எனது திருமணத்திற்கு தம்பதியாக வந்து ஆசிகள் வழங்கிவிட்டு, பட்டுக்கோட்டையில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்கள்.

    சும்மா முதல் வரிசையில் கை கட்டிக் கொண்டு உட்காரவில்லை. வாசலில் நின்று வருகிறவர்களுக்கு பன்னீர் தெளித்து, சந்தனம் கொடுத்து வரவேற்று உபசரித்தது அவர்கள்தான்.

    22

    திருமணத்திற்கு பிறகு என் மனைவி, குழந்தைகள் என்று அவர்கள் மனதிலும் இடம் பிடித்து விட்டார்கள்.

    நான் சென்னைக்கு 89ம் வருடம் வந்தது முதல் எங்கள் சந்திப்புகள், தொலைபேசி உரையாடல்கள் மேலும் அதிகரித்தன. நான் குரோம்பேட்டைக்கு அவர்கள் இல்லம் சென்றாலும் சரி, அவர்கள் அடையாறில் இருக்கும் என் இல்லம் வந்தாலும் சரி... மணிக் கணக்கில் பேசுவோம்.

    பாமா கோபாலன் இருக்கும் இடத்தில் கலகலப்புக்குப் பஞ்சமிருக்காது. சினிமாவில் ‘கவுண்ட்டர்’ டயலாக் ‘பஞ்ச்’ டயலாக் எல்லாம் யோசித்து யோசித்து எழுதுவார்கள். பாமா கோபாலன் சர்வ சாதாரணமாக ஒன் லைனர்கள் அடிப்பார். கையில் காபி டம்ளர் இருந்தால் குலுங்கிச் சிரிக்கும்போது நிச்சயம் சிந்தும்.

    மனதில் ஒரு துளி பொறாமையோ, வஞ்சமோ இல்லாத அற்புதமான மனசு. பேச்சுக்கு நடுவில் எல்லாம் ஆசீர்வதிக்கும் வார்த்தைகள் அன்பு மழையாகக் கொட்டும். இதையெல்லாமா பாராட்டுவார்கள் என்று கூச்சம் கொள்ளும்படியாக அதையெல்லாம் பாராட்டுவார். என்னை மட்டும் அல்ல... எவரையும். எங்கே யாரிடம் திறமை பளிச்சிட்டாலும் வானளவு பாராட்டுவார்.

    அவருடைய பல வகையான எழுத்துக்களில் நகைச்சுவை எழுத்தை வெகுவாக ரசிப்பேன். ஒரு முன்னணி பத்திரிகையில் பணிபுரிந்தபடி எழுதுவது சிரமம். அவர் எழுத்தாளனா, பத்திரிகையாளனா என்று தன்னையே கேட்டுக்கொண்டு இரண்டாவதைத் தீர்மானித்து அதிலேயே சிறப்பாக, அர்ப்பணிப்புடன் பணியாற்றியதால், எழுத்தில் அவர் தொட்டிருக்க வேண்டிய நியாயமான உயரத்தைத் தொட இயலாமல் போனது.

    அவர் காலத்தில் எழுதிய முன்னணி எழுத்தாளர்கள் எவருடைய எழுத்துக்கும் குறைந்ததல்ல அவரின் எழுத்து. முதல் வரிசைக்கு உரிய அத்தனைத் தகுதியும் இருந்தும் அவராகத் தீர்மானித்து அதில் அடக்கி வாசித்து விட்டார்.

    அவரின் மிகச் சிறந்த நினைவாற்றலையும், வாசிக்கும் பழக்கத்தையும் குறிப்பிட்டாக வேண்டும். எப்போதோ ஒரு நாள் சந்திப்பில் எங்கள் வீட்டில் சாப்பிட்ட உணவின் மெனு சொல்வார். அப்போது நான் அணிந்திருந்த சட்டையின் நிறமும் சொல்வார். அப்போது ஒரு பூனை கூட குறுக்கே ஓடியதே என்றும் சொல்லி ஆச்சரியப்படுத்துவார்.

    அவரின் தூய்மையான மனதிற்குக் குறையின்றி பெற்ற ஒரேப் பிள்ளைக்கு பெற்றோர் மீது அத்தனைப் பாசம். வருடா வருடம் பெற்றோரை டிக்கெட் அனுப்பி அழைத்து அமெரிக்காவில் தன் வீட்டில் மாதக் கணக்கில் தங்கவைத்து, மகிழவைத்து மகிழும் அன்பு மகன் வரமல்லவா?

    தன் பிரிய மகனின் வீட்டில் இருந்தபோது, குறிப்பாக அவருக்குப் பிடித்த பூஜையறையில் அவருக்குப் பிடித்த இறைவனின் நாமத்தைச் சொல்லிக் கொண்டிருக்கும்போது ஒரு வேதனை, வலியின்றி கூப்பிய கரங்களுடன் இறைவனடி

    Enjoying the preview?
    Page 1 of 1