Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kumudham Office-il Gopalan
Kumudham Office-il Gopalan
Kumudham Office-il Gopalan
Ebook483 pages2 hours

Kumudham Office-il Gopalan

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மலைபோல் உயர்ந்து நின்ற அந்த போதி மரத்தின் கீழே வளர்ந்தவர்கள் ஏராளம்.
1963ம் வருஷம் குமுதம் இதழில் காவல் துறை அதிகாரி ஒருவர், தன் அனுபவங்களை வாரா வாரம் கட்டுரைகளாக எழுதி வந்தார் - 'யூ' என்ற புனை பெயரில், கட்டுரைகள் முடிவு பெற்றவுடன், அதன் சுவாரசியத்தையும், விறுவிறுப்பையும் கண்டு பிரமித்து, "அற்புதமான கட்டுரைகளைப் பிரசுரித்த உங்களுக்கு தாங்க் 'யூ”' என்ற வரிகளுடன் ‘அன்புள்ள ஆசிரியருக்கு' எழுதி அனுப்பினேன் ஒரு அஞ்சல் அட்டையில், பாமா கோபாலன் என்ற பெயரில், மறுவாரமே அது பிரசுரமானது - பர்மா கோபாலன் என்ற பெயரில்!
விடுவேனா? 'எனக்கு பர்மா அகதிகள் பேரில் அனுதாபம் உண்டுதான். ஆனால் நான் இருப்பது சென்னையில் உள்ள குரோம்பேட்டை தான்’ என்று மறுபடியும் அ.ஆ. பகுதிக்கு மீண்டும் ஒரு அஞ்சல் அட்டை!
'எந்த ஊர் கோபாலன்?' என்ற தலைப்பில் அந்தக் கடிதமும் பிரசுரமானது!
இப்படி ஆரம்பமானது தான் என் தொடர்பு. பிறகு பல கடிதங்கள் பெரும்பாலும் பிரசுரமாகவில்லை!
முயற்சி, முயற்சி, விடா முயற்சி, கடிதங்களுக்குப் பதில் தகவல் துணுக்குகள், நகைச்சுவைத் துணுக்குகள், வெளிநாட்டுப் பத்திரிகைகளில் வெளிவந்த சுவையான தகவல்கள், லைப்ரரியில் படித்த புத்தகங்களிலிருந்து சில பகுதிகள், உபன்யாசக் கூட்டங்களில் வாரியார், கீரன், அனந்தராம தீட்சிதர், ஜெயராம சர்மா சொன்ன சுவாரசியமான குட்டிக் கதைகள், இலக்கியக் கூட்டங்களில் சேகரித்த துணுக்குகள் -
இப்படி அடிக்கடி எழுதி அனுப்பிக் கொண்டேயிருந்தேன். ஐம்பது சதவீத வெற்றி!
இடையிடையே, நெய்வேலியில் பணி புரிந்து கொண்டிருந்த எனது மூத்த சகோதரன் அமரர் எஸ். சேஷாத்திரியும் வெளிநாட்டுப் பத்திரிகைகளிலிருந்து அனுப்பி உற்சாகம் அளித்தார். பின்பு அவரே சுமார் பத்து புனை பெயர்களில் துணுக்குகளை அனுப்பினார்.
முதல் இதழ் தயாரித்தவர்: 'இதுதாண்டா போலீஸ்' டாக்டர் ராஜசேகர்! ஒருங்கிணைப்பாளராக நான்! தொலைக்காட்சியில் ‘இந்த வார இதழ் தயாரிப்பாளர்' என்ற அறிமுகத்துடன் வீடியோவும் உண்டு!
இசையுலகம், இலக்கிய உலகம், திரையுலகம், நாடக உலகம், ஓவியர் உலகம் - என்றெல்லாம் தேடித்தேடிப் பிரபலங்களைச் சந்தித்து இதழ் தயாரித்த அனுபவங்கள் இப்புத்தகத்தில் பரவலாகக் காணலாம். ரசியுங்கள். குமுதம் இதழில் பிரசுரமான கட்டுரைகள் இருக்காது
சில குறிப்புகள் தவிர. இதற்காக எனக்கு ஒத்துழைப்பு தந்த புகைப்படக்காரர்கள், திருவாளர்கள் யோகா, கே. எஸ். அருணாசலம், பிரபுசங்கர், ராஜாபொன்சிங், ராதாகிருஷ்ணன், திருஞானம், அமரர் கலை நாகராஜன், மேஜர்தாசன் மேலும் பலர். பெயர் குறிப்பிடவில்லை எனில் மன்னிக்கவும். ஆசிரியர் குழுவிற்கும், உடன் ஒத்துழைத்த எல்லா நிருபர்களுக்கும் நன்றி.
என்னிடமிருந்த சில அரிய புகைப்படங்களையும் தந்துள்ளேன் - ஆதாரத்துக்கு மட்டுமல்ல, கண்டு ரசிக்கவும் கூட!
- பாமா கோபாலன்.
Languageதமிழ்
Release dateMay 1, 2020
ISBN6580128505291
Kumudham Office-il Gopalan

Read more from Bhama Gopalan

Related to Kumudham Office-il Gopalan

Related ebooks

Reviews for Kumudham Office-il Gopalan

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kumudham Office-il Gopalan - Bhama Gopalan

    http://www.pustaka.co.in

    குமுதம் ஆபிஸில் கோபாலன்

    Kumudham Office-il Gopalan

    Author:

    பாமா கோபாலன்

    Bhama Gopalan

    For more books

    http://pustaka.co.in/home/author/bhama-gopalan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. குமுதம் ஆபிஸில் கோபாலன்

    2. ஆசிரியர்களின் ஆசிரியர்

    3. நலம் பெற வேண்டும்

    4. இதுதாண்டா குமுதம்

    5. சுடுகாட்டுக்கு வாங்க!

    6. நீங்களே பில் போடுங்க!

    7. மறக்க முடியாத வெள்ளிகள்!

    8. கோர்ட்டில் ஆஜர்!

    9. போலீஸ் ஸ்டேஷனில் நான்!

    10. பூவால் வந்த ஆபத்து!

    11. இரண்டிலிருந்து நாலு!

    12. மறக்க முடியாத எம்.ஜி.ஆர்!

    13. பிசாசு - ஆவி உண்டா? இல்லையா?

    14. நடிகை ரேகாவும் ஆரஞ்சு பானமும்

    15. உதாரண புருஷர் எஸ்.ஏ.பி.

    16. ஆண்டவனின் குரல்!

    17. எழுத்தைப் பாருங்கள்!

    18. ஆனந்த சுதந்திரம்

    19. இளைய தலைமுறையும் ஜெயராஜும்

    20. சுஜாதா கண்ட பேட்டி!

    21. சுஜாதா போட்ட குண்டு!

    22. எடிட்டரோடு விளையாட்டு!

    23. மறக்க முடியாத நான்கு வார்த்தைகள்

    24. நடுநிசியில் வீட்டுக்கு!

    25. பெரியார் திடலில் துகில் உரிப்பு பற்றி

    26. காட்சி கண்முன்..

    27. புதிய பொறுப்பு....

    28. பாலு மகேந்திராவின் மௌனம்

    29. கேட்டாரே ஒரு கேள்வி!

    30. ஒரு ஃப்ளாஷ் பேக்

    31. வேலைக்கு வேட்டு வைத்த ஆவி!

    32. அவசரம் ஓடுங்க காஞ்சிபுரம்

    33. குன்னக்குடி பேட்டியில் அதிர்ச்சி!

    34. சிரிக்க, சிரிக்க, திருஷ்டி!

    35. இலவச'மாய் குண்டு போட்டார்!

    36. மார்ச்சுவரியில் என்ன மர்மம்?

    37. காதல் மேல் ஆணை!

    38. கமலும், பொன்னியின் செல்வனும்!

    39. எப்படிக் கதை எழுதுவது?

    40. எம்.எல்.வி. பேட்டி என்னாச்சு?

    41. எருமைகளும் ஏரியும்!

    42. காக்காய் பிடிப்பது எப்படி?

    43. வைரமுத்து வீட்டு வாசலில் என்ன சிலை?

    44. பேட்டிக்குப் போக கார்!

    45. காரசாரமாக விமர்சனம் செய்த கை!

    46. எடிட்டர் கண்களில் பட்ட ஒரு வரி!

    47. ஒரு பக்கக் கதையின் கதை!

    48. மிருதங்கத்துக்குப் பூட்டு?

    49. மேதையுடன் 14 வயது சிறுவன்!

    50. காதலர்களுக்கு அனுமதி இல்லை

    51. பதறிவிட்டார் ஃபாத்திமா பாபு!

    52. சைக்கிள் ரிக்ஷாவில் போகிறேன்!

    53. பொ.போ.பொ. பிறந்தான்!

    54. பாகவதர்' காணாமல் போனார்!

    55. எப்படி இத்தனையும் படிக்கிறது?

    56. அரை ஆழாக்கு அரிசி மர்மம்!

    57. வேல்! வேல்! வெற்றிவேல்!

    58. ராஜா இன்னொரு டேக் போகலாமா?

    59. இரவு 11 மணிக்கு என்ன செய்தார்??

    60. ஜோடிகளின் ஆசைகள்!

    61. அனுமான் அருள்!

    62. ராதிகா பேட்டி கண்டார்!

    63. அட! ஜோசியமா?

    64. என் காதலுக்கு உங்கள் நாவலே காரணம்!

    65. குவா! குவா! ஆட்டோ!

    66. உங்களுக்கு வேலை கம்மி!

    67. மதுரைக்குப் போங்க

    68. நடிகை வைஷ்ணவி

    69. நடிகையும் 'ரோபோ'வும்

    70. ‘தமிழ்த் தாத்தா'வின் ஹீரோயிஸம்!

    71. கல்யாண வீட்டில் திக் திக் விஜயம்!

    72. பல் விழுங்கிய பரத்!

    73. பிந்துகோஷும், ஓமகுச்சியும்!

    74. ஐஸ்! ஐஸ்! ஞாயிறு என்ன செய்வீங்க?

    75. மாத்தி யோசி

    76. சரிகாவின் ‘பொம்மை'!

    77. பாலுமகேந்திரா-கமல்-தீபாவளி

    78. வாழ்வில் ஒருநாள்!

    79. புதிய பகுதி 'ஓசி'

    80. எடிட்டரும், குடையும்!

    81. குரோம்பேட்டையில் சுஜாதா!

    82. ராவணன் செய்த ட்ரிக்!

    83. குமுதம் ஆரம்பித்தது ஏன்?

    84. புலிக்குட்டி வளர்க்கிறாரா!

    85. ஆனந்த விழா

    86. புதுப் பத்திரிகைக்கு வாங்க

    87. எடிட்டோரியல் கன்ஸல்டண்ட்

    88. நான் சந்தித்த பிரபலங்கள்

    என்னுரை

    மலைபோல் உயர்ந்து நின்ற அந்த போதி மரத்தின் கீழே வளர்ந்தவர்கள் ஏராளம்.

    1963ம் வருஷம் குமுதம் இதழில் காவல் துறை அதிகாரி ஒருவர், தன் அனுபவங்களை வாரா வாரம் கட்டுரைகளாக எழுதி வந்தார் - 'யூ' என்ற புனை பெயரில், கட்டுரைகள் முடிவு பெற்றவுடன், அதன் சுவாரசியத்தையும், விறுவிறுப்பையும் கண்டு பிரமித்து, அற்புதமான கட்டுரைகளைப் பிரசுரித்த உங்களுக்கு தாங்க் 'யூ' என்ற வரிகளுடன் ‘அன்புள்ள ஆசிரியருக்கு' எழுதி அனுப்பினேன் ஒரு அஞ்சல் அட்டையில், பாமா கோபாலன் என்ற பெயரில், மறுவாரமே அது பிரசுரமானது - பர்மா கோபாலன் என்ற பெயரில்!

    விடுவேனா? 'எனக்கு பர்மா அகதிகள் பேரில் அனுதாபம் உண்டுதான். ஆனால் நான் இருப்பது சென்னையில் உள்ள குரோம்பேட்டை தான்’ என்று மறுபடியும் அ.ஆ. பகுதிக்கு மீண்டும் ஒரு அஞ்சல் அட்டை!

    'எந்த ஊர் கோபாலன்?' என்ற தலைப்பில் அந்தக் கடிதமும் பிரசுரமானது!

    இப்படி ஆரம்பமானது தான் என் தொடர்பு. பிறகு பல கடிதங்கள் பெரும்பாலும் பிரசுரமாகவில்லை!

    முயற்சி, முயற்சி, விடா முயற்சி, கடிதங்களுக்குப் பதில் தகவல் துணுக்குகள், நகைச்சுவைத் துணுக்குகள், வெளிநாட்டுப் பத்திரிகைகளில் வெளிவந்த சுவையான தகவல்கள், லைப்ரரியில் படித்த புத்தகங்களிலிருந்து சில பகுதிகள், உபன்யாசக் கூட்டங்களில் வாரியார், கீரன், அனந்தராம தீட்சிதர், ஜெயராம சர்மா சொன்ன சுவாரசியமான குட்டிக் கதைகள், இலக்கியக் கூட்டங்களில் சேகரித்த துணுக்குகள் -

    இப்படி அடிக்கடி எழுதி அனுப்பிக் கொண்டேயிருந்தேன். ஐம்பது சதவீத வெற்றி!

    இடையிடையே, நெய்வேலியில் பணி புரிந்து கொண்டிருந்த எனது மூத்த சகோதரன் அமரர் எஸ். சேஷாத்திரியும் வெளிநாட்டுப் பத்திரிகைகளிலிருந்து அனுப்பி உற்சாகம் அளித்தார். பின்பு அவரே சுமார் பத்து புனை பெயர்களில் துணுக்குகளை அனுப்பினார்.

    1969 ல் என் முதல் சிறுகதை குமுதத்தில் பிரசுரமானது. அதுவரை என் துணுக்குகளையும், சிறுசிறு கட்டுரைகளையும் மட்டுமே பிரசுரித்த குமுதம், இக்கதையின் தலைப்பில், இடது மேல் மூலையில் 'சிறுகதை' என்று குறிப்பிட்டிருந்தது - இன்றும் மறக்க முடியாதது.

    1971ல் எனது மூத்த சகோதரர் எஸ். சேஷாத்திரியுடன், ஜனவரி போகிப் பண்டிகையன்று, குமுதம் அலுவலகம் சென்று ஆசிரியரை, திரு ரா. கி. ரங்கராஜன் அவர்களின் துணையோடு நேரில் - சில நிமிடங்கள் - சந்தித்துப் பேசியது பற்றிய நிகழ்ச்சி இப்புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிறது. அன்று ஆசிரியரும், இணை ஆசிரியரும் 'ஆசி' கூறி 'நிறைய படிங்க, நிறைய எழுதுங்க' என்று சொன்ன சொற்களும் என்றென்றும் மறக்க முடியாதவை.

    பிறகு சின்னச் சின்ன 'கருக்'களை வைத்துக் கொண்டு ஒரு பக்கக் கதைகளை (குமுதம் அளவில்) எழுதி, எழுதி அனுப்பினேன். நாட்கள், மாதங்கள் ஆக ஆக ஐந்துக்கு ஒன்று என்ற விகிதத்தில் பிரசுரமாயின!

    1971க்குப் பிறகு, 1980-ல் திருமணப் பத்திரிகையைக் கொடுத்து, 'அழைக்க'ச் சென்றேன். ஆசிரியரைச் சந்திக்க வேண்டும் என்ற என் வேண்டுகோள் நாசூக்காக மறுக்கப்பட்டு, ஆசிரியர் குழுவினரிடமே அழைப்பிதழ்களைத் தந்துவிட்டு 'ஆசீர்வதிக்க அவசியம் வரணும்' என்ற வேண்டுகோளுக்கு அழகாகச் சிரித்து அனுப்பிவிட்டனர்! ஆனால், அப்பத்திரிகையைப் பார்த்துவிட்டு, ஆசிரியர் செய்த உத்தி, பலபேருடைய புருவங்களை உயர்த்திவிட்டது! அப்படி எங்களைப் (மனைவி வேதாவையும், என்னையும்) பெருமைப்படுத்தி விட்டார்! அது மட்டுமல்ல, திருமண வரவேற்புக்கு குமுதம் சார்பாக திரு. பால்யூ வந்திருந்தார். ஆசிரியர் செய்த உத்தி என்ன? இப்புத்தகத்தைப் படியுங்கள்!

    1986ல் தீபாவளி நெருங்கிவரும் சமயம். அந்த சில வருடங்களுக்குள் சிறுகதைகள், மாலைமதியில் நாவல்கள் பிரசுரமாயிருந்தன. அந்தத் தெம்பு தந்த தைரியத்தில் தீபாவளி சிறப்பிதழுக்கு ஒரு கட்டுரை எழுதிக் கொண்டு போனேன். நேரில் தந்தேன். அந்தக் கட்டுரையை மேலோட்டமாகப் படித்து மேசையின்மீது ஒரு ஓரமாக வைத்தார்.

    எத்தனை வருஷமா எலக்ட்ரிக் ட்ரெயினில் போய் வருகிறீர்கள்? என்று மிகச் சாதாரணமாகக் கேட்டார்.

    சொன்னேன். அவர் ஆசிரியரிடம் போனார். நான் அந்த ஹாலில் ஆசிரியரின் அறையின் அரைக்கதவைப் பார்த்தபடி இருந்தேன்.

    வெளியே வந்தார் திரு. ஜ. ரா. சுந்தரேசன். என்னிடம் பேசினார். உற்சாக ஊசி செலுத்தினார்.

    என்ன ஆயிற்று? இப்புத்தகத்தில் அந்நிகழ்ச்சியைப் படியுங்கள்!

    அன்று தீபாவளி சிறப்பிதழுக்கு எழுதப்பட்ட கட்டுரை தான் என் நிருபர் வாழ்க்கைக்கு ஏற்றப்பட்ட திரி! மிக நீண்ட திரி…

    பிறகு நாலைந்து வருடங்கள் நான் ஆசிரியர் அறைக்குள் சென்றதே இல்லை. வெள்ளிக்கிழமை மாலை பிரார்த்தனைக் கூட்டங்களில் அவரை மிக அருகில் பார்த்துக் கை கூப்பியதோடு சரி.

    பேட்டிகள், கட்டுரைகள், கதைகள், அப்பவும் ஜோக்ஸ், துணுக்குகள், சுவாரசியமாகக் கழிந்தன.

    திரு.ஜ. ரா. சு. கூப்பிட்டு அனுப்பினார்.

    எடிட்டர் உங்களை உள்ளே வரச் சொன்னார்! என்றார்.

    சென்றேன். உட்காரச் சொன்னார்.

    ம்.... இன்னும் எத்தனை நாள் நிருபராகவே இருக்கப் போறீங்க? என்று கேட்டாரே ஒரு கேள்வி!

    இன்ப அதிர்ச்சி. சில வினாடிகள் மௌனம். நான் என்ன பதில் சொன்னேன்? நடந்தது என்ன? இப்புத்தகத்தில் அந்நிகழ்ச்சி பதிவாகியுள்ளது.

    1991-ல் ஆசிரியரின் அதிரடி அறிவிப்பு, பிரபலங்களைச் சிறப்பாசிரியராகப் பொறுப்பேற்கச் செய்து இதழ்களைத் தயாரிக்கச் செய்தல்! 'இதுதாண்டா குமுதம்' என்ற விளம்பரங்கள்! சுறுசுறுப்புத் தீ பரவியது!

    104 இதழ்கள் - இருவருடங்கள் - பல்வேறு துறையில் பிரபலமானவர்கள். 49 இதழ்களின் சிறப்பாசிரியர்களுக்கு ஒருங்கிணைப்பாளராக எனக்குப் பொறுப்பு தந்தார்!

    முதல் இதழ் தயாரித்தவர்: 'இதுதாண்டா போலீஸ்' டாக்டர் ராஜசேகர்! ஒருங்கிணைப்பாளராக நான்! தொலைக்காட்சியில் ‘இந்த வார இதழ் தயாரிப்பாளர்' என்ற அறிமுகத்துடன் வீடியோவும் உண்டு!

    இசையுலகம், இலக்கிய உலகம், திரையுலகம், நாடக உலகம், ஓவியர் உலகம் - என்றெல்லாம் தேடித்தேடிப் பிரபலங்களைச் சந்தித்து இதழ் தயாரித்த அனுபவங்கள் இப்புத்தகத்தில் பரவலாகக் காணலாம். ரசியுங்கள். குமுதம் இதழில் பிரசுரமான கட்டுரைகள் இருக்காது

    சில குறிப்புகள் தவிர. இதற்காக எனக்கு ஒத்துழைப்பு தந்த புகைப்படக்காரர்கள், திருவாளர்கள் யோகா, கே. எஸ். அருணாசலம், பிரபுசங்கர், ராஜாபொன்சிங், ராதாகிருஷ்ணன், திருஞானம், அமரர் கலை நாகராஜன், மேஜர்தாசன் மேலும் பலர். பெயர் குறிப்பிடவில்லை எனில் மன்னிக்கவும். ஆசிரியர் குழுவிற்கும், உடன் ஒத்துழைத்த எல்லா நிருபர்களுக்கும் நன்றி.

    என்னிடமிருந்த சில அரிய புகைப்படங்களையும் தந்துள்ளேன் - ஆதாரத்துக்கு மட்டுமல்ல, கண்டு ரசிக்கவும் கூட!

    - பாமா கோபாலன்.

    எல்லோரையும் கவரும் எழுத்தாற்றல்!

    பாமா கோபாலன், வேதா கோபாலன் என்ற இலக்கிய இணையரை எனக்குப் பல்லாண்டுகளாகத் தெரியும். அதாவது அவர்கள் இருவரும் காதலித்துக் கல்யாணம் செய்து கொள்வதற்கும் முன்பிருந்தே என்று நினைக்கிறேன். எழுத்தின் மேல் கொண்ட காதல் அவர்களைக் காதலர்களாக்கியது.

    அவர்கள் இருவரும் ஜோடியாக இருக்கும் படத்தைப் போட்டு அவர்கள் திருமண விவரத்தைக் குமுதத்தில் போட்டார்கள். குமுதம் என்கிற பெரிய பத்திரிகை, அவர்கள் படத்தை வெளியிட்டிருக்கிறது. நல்ல லட்சணமான ஜோடி, திருஷ்டிபடாமல் இருக்க வேண்டும்! என்று என் அம்மா குமுதம் நடுப்பாகத்தைப் பார்த்து ஆசீர்வதித்தார்.

    திருஷ்டிபடவில்லை. ஆனால் பலரின் திருஷ்டி அவர்களின் எழுத்தின் மேல்பட்டது. நிறைய ரசிகர்கள் அவர்களுக்கு உருவானார்கள்.

    இருவருமே எதை எழுதினாலும் ஜனரஞ்சகமாக எழுதக் கூடியவர்கள். ஜனரஞ்சகம் என்பது பாவமல்ல. புரியாமல் எழுதினால்தான் இலக்கியம் என்றொரு கருத்து இப்போது உருவாகி வருகிறது. எழுதியவருக்கே புரியவில்லை என்றால் அது உன்னத இலக்கியம் என்ற அந்தஸ்தைப் பெறும் போல் தோன்றுகிறது!

    எல்லோருக்கும் புரிகிற மாதிரியும் எல்லோரையும் கவர்கிறமாதிரியும் எழுதும் ஆற்றல் அமைவது ஒரு பெரியவரம். எழுத்தாளர் சுஜாதாவுக்குக் கிட்டியமாதிரி அந்த வரம் இந்த இருவருக்கும்கூடக் கிட்டியிருக்கிறது.

    நேர்காணல் என்பது எழுத்தில் ஒருவகை. கதை கட்டுரை கவிதை எழுதுகிறவர்கள் எல்லாம் நேர்காணல் கண்டு எழுதிவிட முடியாது. தன்னை அடக்கிக் கொண்டு அடுத்தவர்களின் சாதனையைப் பெருந்தன்மையோடு பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் அதில் உண்டு.

    இன்றைய பத்திரிகை உலகில் தமிழின் நேர்காணல் துறையில் கொடிகட்டிப் பறக்கும் மிகச் சிலரில் இவர்கள் இருவரும் உண்டு. எந்தத் துறை சார்ந்தவர்களையும் பேட்டி காணும் சாமர்த்தியமும் இவர்களிடம் உண்டு. பேட்டி காண்பதற்கு முன், காணப்படும் பிரமுகர் பற்றிய விவரங்களையும் அவரது துறை தொடர்பான செய்திகளையும் சேகரித்துக் கொண்டு அவரை நேரில் சென்று அவரே வியக்கிறவகையில் கேள்விகளைக் கேட்டு பதில் வாங்கி விடுவார்கள்.

    நான் பத்திரிகை ஆசிரியன் என்ற வகையில் இவர்களிடம் பலமுறை நேர்காணல், கதை, கட்டுரை உள்ளிட்ட படைப்புகளைக் கேட்டு வாங்கி வெளியிட்டிருக்கிறேன். சொன்னால் சொன்ன சொல் தவறாது குறிப்பிட்ட நாளில் படைப்பை அனுப்பிவிடும் செயலொழுங்கு இவர்களிடம் உண்டு. பத்திரிகை ஆசிரியர்களுக்கு இது பெரிய சௌகரியம்,

    இன்னொன்று, எத்தனை வார்த்தைகள் படைப்பு இருக்க வேண்டும் என்று பத்திரிகை சொல்கிறதோ அத்தனை வார்த்தைகளில் படைப்பை முடித்து விடும் நிச்சயமும் இவர்களிடம் உண்டு. குமுதத்தில் புரிந்த காரணத்தால் பத்திரிகைகளின் இடப் பிரச்னையை இவர்கள் அனுபவபூர்வமாக உணர்ந்திருப்பதே அதற்குக் காரணம்.

    பாமாகோபாலன், வேதா கோபாலன் படைப்புகள் என்றால் வாங்கிப் படித்துப்பார்த்து விட்டு அந்தப் பிரதியில் கையே வைக்காமல் அப்படியே அச்சுக்கு அனுப்பிவிடலாம். பத்திரிகைக்குப் பிரச்னை தரக்கூடிய விஷயங்களை அவர்கள் எழுத மாட்டார்கள். பத்திரிகையையோ பத்திரிகை ஆசிரியரையோ சிக்கலில் ஆழ்த்தமாட்டார்கள்.

    இந்த இணையர்கள் எதை எழுதலாம் என்று தெரிந்து வைத்திருப்பதோடு எதை எழுதக்கூடாது என்றும் தெரிந்து வைத்திருக்கிறவர்கள்.

    இவர்கள் மேல் எத்தனைபேர் அன்பு செலுத்துகிறார்கள் என்பதை அறிந்து கொள்ள ஒரு சந்தர்ப்பம் நேர்ந்தது. பாமா கோபாலன் சற்று இதய நோய்வாய்ப்பட்டு விஜயா மருத்துவமனையில் சில நாள்கள் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்குப் பணிவிடை செய்வதற்காக அவரது அன்பு மனைவியும் அதே மருத்துவமனையில் அவரது உதவியாளராக அந்த நாள்களில் தங்கியிருந்தார்.

    அந்தக் கால கட்டத்தில் இவர்களை நேரில் வந்து சந்தித்து ஆறுதல் சொன்னவர்களின் பெயர்ப் பட்டியல் மிக நீண்டது. தவிர இவர்கள் இருவரும் எனது நெருங்கிய நண்பர்கள் என்பதால் பாமாகோபாலனின் உடல்நலம் குறித்து என்னிடம் தொலைபேசியில் உள்ரூரிலிருந்தும் வெளியூரிலிருந்தும் விசாரித்தவர்களும் பற்பலர். கல்கி முன்னாள் ஆசிரியரும் உயர்ந்த பண்பாளருமான சகோதரி சீதாரவி உள்ளிட்ட பலரின் அன்பைப் பெற்றவர்கள் இவர்கள் என்பதை அந்த சந்தர்ப்பத்தில் நான் உணர்ந்து மகிழ்ந்தேன்.

    சென்னை குரோம்பேட்டையில் இவர்கள் இல்லத்திற்கு நான் சென்ற சந்தர்ப்பங்களில் இவர்கள் வீடு விழாக்கோலம் பூண்டுவிடும். அத்தனை அன்பு. அத்தனை உபசாரம். நம் சொந்த வீட்டிற்கு வந்திருப்பது போல் நம்மை உணரச் செய்வதில் இவர்கள் நிபுணர்கள்.

    பல்லாண்டுகாலமாக (ஏறக்குறைய அரை நூற்றாண்டுக் காலம்!) இவர்கள் எழுதிக் குவித்த எழுத்தெல்லாம் இப்போது நூற்றாண்டு கண்ட பதிப்பக உரிமையாளர் அல்லயன்ஸ் ஸ்ரீனிவாசன் மூலம் புத்தகங்களாக வெளிவருவதை அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். சுருக்கமாகவும் அதே நேரம் விறுவிறுப்புக் குறையாமல் சுவாரஸ்யமாகவும் எப்படி எழுதுவது என்பதை இன்றைய இளைய தலைமுறை இந்தப் புத்தகங்களைப் படித்துக் கற்றுக் கொள்ளலாம் எனப் பரிந்துரைக்கிறேன். இவர்களின் கண்ணியமான எழுத்துப்பணி மேலும் பற்பல ஆண்டுகள் கம்பீரமாய்த் தொடர இறையருள் துணை நிற்கட்டும்!

    வாழ்த்துக்களுடன்,

    திருப்பூர் கிருஷ்ணன்,

    1. குமுதம் ஆபிஸில் கோபாலன்

    1986-ம் ஆண்டு அக்டோபர் மாதம். ஒரு புதன்கிழமை. தீபாவளி நெருங்கிக் கொண்டிருக்கிறது. கையில் ஒரு கட்டுரையுடனும், சிறுகதை ஒன்றினையும் எடுத்துக் கொண்டு நுழைகிறேன்.

    பத்திரிகைகளின் கோட்டை. குமுதம் காம்பவுண்டு. வாசலில் சின்ன கேட். அதன் அருகில் வாகனங்கள் நுழைய பெரிய கேட். சின்ன கேட் மூடியிருந்தது. உள்பக்கம் வாட்ச்மேன். கேட்டில் கை வைத்து உள்ளே நுழைந்தேன். யாரைப் பார்க்கணும்? வரச் சொன்னாங்களா?

    ஆமாம், ரா. கி. ரங்கராஜன்.

    போய் ரிஸப்ஷனில் உட்காருங்க. டெலிபோன் ஆபரேட்டர் நாராயணன் ஸார் இருப்பார். போங்க.

    வழிவிட்டார். சந்தோஷத்துடன் ஓடாத குறையாக, அந்தச் சிறு அறைக்குள் நுழைந்தேன். இடது கையில் டெலிபோன் ரிஸீவரைப் பிடித்தபடி, ம்... அங்கே உட்காருங்க என்று சொல்லிவிட்டு, அவர் பேச்சைத் தொடர்ந்தார்.

    நாற்காலியின் நுனியில் உட்கார்ந்தேன். மனம் பின்நோக்கிப் போயிற்று.

    1980 ம் ஆண்டு அக்டோபர் முதல் வாரம் கைப்பையில் என் கல்யாணப் பத்திரிகைகள். இதே அறையில் உட்காரச் சொன்னார். அதே நாராயணன்தான்.

    என்ன விஷயம்?

    மேரேஜ் இன்விடேஷன் தரணும்.

    என்கிட்டே கொடுத்திடுங்க

    இல்லே ஸார், நேரிடையாகக் கொடுக்கணும்

    சிறிது தயக்கத்துக்குப் பிறகு, அவர் டெலிபோன் மூலம் உள்ளே இருப்பவர்களிடம் பேசினார்.

    ரிஸீவரைச் சற்று நகர்த்திக் கொண்டு, பேர் என்ன? என்று கேட்டார்.

    பாமா கோபாலன்

    ஓ! அப்படியா? அவர் ஏதோ பேசிவிட்டு, நீங்கள் தானா அது? மார்ச் மாதம் மாலைமதி நாவல் எழுதியவரா?.. ம்... போங்க... அதோ அந்த வழியா போய், இடது பக்கம் திரும்பினால் மாடிப்படி வரும். அதில் ஏற வேண்டாம். சற்று தள்ளி, ஆசிரியர் குழு உள்ள ஹாலுக்குள் போங்க.

    மட்டற்ற மகிழ்ச்சி, மனதுக்குள் ஃபவுண்டன் பொங்கிற்று!

    வேஷ்டி தடுக்காமல், எச்சரிக்கையாக நடந்து உள்ளே நுழைந்தேன்.

    ஹாலில் இரண்டு மேஜைகள்.

    முதலில் நுழைந்தவுடன், சற்றே நரைத்த தலையுடன், ஜிப்பா அணிந்து (கை மடிக்கப்பட்டிருந்தது) ஒருவர்... வாயில் வெற்றிலையை அடக்கியிருந்தார்.

    அவருக்கு வலது புறம், தூயவெள்ளை கதர் சட்டையும், எட்டுமுழ வேட்டியுடனும், சற்றே தூக்கிவாரிய கிராப்புடன் (பாதி வெள்ளை, பாதி கறுப்பு) அரைக்கைச் சட்டையுடன், நெற்றியில் விபூதிக் கீற்றும், குங்குமமும் அணிந்தவர், வாங்க, பாமா கோபாலன், உட்காருங்க என்றார், அகலமான சிரிப்புடன்.

    அவர் கையோ, பென்சிலைச் சீவிக் கொண்டிருந்தது. மேசைமீது ஒரு பேப்பர் கூட இல்லை. சுத்தம்.

    ம்... எப்படியிருக்கீங்க?... வீட்டிலே எல்லோரும் சௌக்கியமா?

    எனக்கிருந்த படபடப்பு, படிப்படியாகக் குறைந்து கொண்டே வந்தது. எனினும், அந்த ஸ்டீல் சேரின் நுனியிலே அமர்ந்திருந்தேன். மடியில் பத்திரிகைப் பை.

    எல்லோரும் சௌக்யம் ஸார்... என்றபடி மடியில் இருந்த பையில் இருந்து கல்யாண அழைப்பிதழை எடுத்தேன்.

    ம்... நீங்க... ஒரு முத்தம், ஒரு டைரி, ஒரு கல்யாணம்... மாலைமதி நாவல் எழுதினீங்க இல்லே என்றார் இடப் பக்கம் ஜிப்பாக்காரர்.

    ஆமாம் ஸார் என்றேன், புன்னகையுடன்,

    அவர் ஏதோ காரியமாக எழுந்து உள்ளே சென்றார்.

    முன்பே எழுதி வைத்திருந்த இன்விடேஷனை ஸார், இதோ… என்று நீட்டினேன்.

    அட, என் பெயர் சுந்தரேசன்னு தெரியுமா? சிரித்தார்.

    இங்கே உட்கார்ந்திருந்தவர் புனிதன்னு தெரியும்! ஆசிரியர் ஸாரிடம் பத்திரிகை தரணுமே? என்று மெதுவாக இழுத்தேன்…

    … அது… வந்து.. என் கிட்டயோ, இந்த தடுப்புக்குப் பின்னாடி உள்ள... முடிக்கவில்லை.

    ரா. கி. ரங்கராஜன்… என்று அவசரமாகச் சொன்னேன்.

    அட! ஞாபகம் வைச்சிருக்கீங்களே… ம் அவரிடம் கொடுங்க... போங்க... என்றார்.

    சுந்தரேசனுக்குக் கொடுத்துவிட்டு, தடுப்புக்குப் பின்னால் சிறு அறை. மேசை மீது ஏகப்பட்ட புத்தகங்கள், பேப்பர்கள்.

    நாற்காலியில் ரா. கி. ர. பற்கள் தெரிய சிரிப்பு, அந்தச் சதுர முகம். நெற்றியில் சிறு விபூதிக் கீற்று…

    இன்விடேஷனை நீட்டினேன்.

    பேஷ்! பேஷ்!.. என்னைக்கு...ம் 27ம் தேதியா? அட!. மணப்பெண் பெயர் எஸ் வேதா… பத்திரிகையை சற்று மடித்து, எழுத்தாளர் வேதாவா! ம்... மாலைமதி... எழுதியிருக்காங்க இல்லே?

    ஆமாம்... ஜனவரி.... 1980ல்.. நீ வெறும் பெண்தான்! சந்தோஷமாகச் சொன்னேன்.

    பலே... பலே... அவர் மனதுக்குள் ஏதோ வரிகள் ஓடின மாதிரி எனக்குப் பிரமை…

    ஸார்... இந்த இன்விடேஷன். ஆசிரியருக்கு… என்று தயங்கித் தயங்கி அவரிடம் கொடுத்தேன்.

    நிச்சயமா கொடுத்துடறேன் தலையை ஆட்டினார்.

    அவசியம் வந்து ஆசீர்வாதம் செய்யணும்.

    மீண்டும் சிரிப்பு. ஜமாய்ச்சிடுவோம்

    வெளியே வந்தேன். புனிதன் ஸாரிடம் பத்திரிகையை நீட்டினேன்.

    ஓ!. மைலாப்பூரா? அட! வெங்கடேச அக்ரஹாரமா? என்று சொல்லிவிட்டு, பொருள் பொதிந்த பார்வையுடன் சுந்தரேசா.. என்று குரல் கொடுத்தார்.

    ம் ம்... பார்த்தேன். என்ற குரலில் சற்று அவசரம். 'அவரை அனுப்பு' என்ற தொனியோ!

    அடுத்த நாவல் எழுதலையா? கூர்மையான பென்சிலை உள்ளங்கையில் குத்திப்பார்த்தபடி கேட்டார் சுந்தரேசன்...

    மழுப்பலான சிரிப்புடன் அறையை விட்டு வெளியேறினேன்.

    படிக்கட்டை விட்டுக் கீழிறங்கி, நேரே தெரிந்த ஆர்டிட்ஸ்ட், லே அவுட் ஆர்ட்டிஸ்ட் அறையை நோட்டம் விட்டேன் சில வினாடிகளில்.

    மறக்க முடியாத இடம்.

    மனம் இன்னும் கொஞ்சம் பின்னோக்கியது...

    1979 டிசம்பர் கடைசி வாரம்.

    அதற்குள் 1980 ஜனவரி மாலைமதி வந்துவிட்டது. எஸ்.வேதா எழுதிய 'நீ வெறும் பெண்தான்' நாவல் கடைகளுக்கு வந்துவிட்டிருந்தது.

    எனக்குள் உற்சாகம். 1979 செப்டம்பரில் முதல் கதை பிரசுரமானவரின், முதல்நாவல் 1980 ஜனவரியில் பிரசுரம்!

    அவள் எழுதுவதற்குத் தூண்டுகோலாக இருந்த எனக்குள் ஒருவேகம். நாவல் எழுதினால் என்ன?

    ஆபீஸுக்கு ஐந்து நாட்கள் லீவு போட்டுவிட்டு ராப்பகலாய் எழுதிவிட்டேன். டிசம்பர் கடைசிவாரம் நேரில் கொண்டு போய்க் கொடுத்துவிட்டேன். 120பக்கங்கள் எழுதிய என் முதல் நாவல். தபாலில் அனுப்பத் தயக்கம்! போய்ச் சேருமோ என்ற பயம்.

    ஜனவரி 1980. பொங்கல் விடுமுறை நாட்கள் கழித்து, ஒரு வியாழன் மதியநேரம். ஆபீஸில் எனக்கு போன் வந்தது. வீட்டில், ஓய்வுபெற்ற அப்பா, பக்கத்துத் தெருவில் இருந்த பார்மஸியிலிருந்து செய்தார்.

    கோபாலா, குமுதம் ஆபீஸிலிருந்து ஒரு கடிதம். உன்னை உடனே அங்கே வரும்படி... மனம் துள்ளிற்று. கூடவே பயமும். நாவலை வாங்கிக் கொண்டு போகச் சொல்கிறார்களோ?

    ஆவல் தாங்கவில்லை. ஆபீஸில் அனுமதி பெற்று, லஞ்ச் நேரத்தில் கிளம்பிவிட்டேன்.

    கெல்லீஸ் ஸ்டாப்பில் இறங்கிப் போகணும். என் சக நண்பர் சொன்னார்.

    விடுவிடுவென்று நடந்து, பஸ் ஸ்டாண்டில் நின்றேன். மதியவேளை. பஸ் வருவதாக இல்லை.

    நடையைக் கட்டினேன். சுமார் அரைமணி நேரம் நடந்து காசாமேஜர் சாலையிலிருந்து கெல்லீஸ் வந்து, மீண்டும் குமுதம் ஆபிஸ்!

    இப்போது சற்று தெம்புடன் வாட்ச்மேனிடம் பேசி, டெலிபோன் ஆபரேட்டர் நாராயணனிடம் பேசி...

    ரா. கி. ர. உள்ளே வரச் சொல்றார்.

    ஹால் காலியாக இருந்தது. லஞ்ச் டைம்.

    ரா. கி. ர. வின் அறைக்குள் சென்றேன்.

    ஸார், உங்களிடமிருந்து கார்டு வந்தது. அப்பா போன் செய்தார்... நாவல் விஷயமாக… குரலில் சற்று தளர்வு.

    அட! நேத்திக்கு தானே போட்டோம்.... ம்..... உட்காருங்க...

    உட்கார்ந்தேன்.

    உங்க நாவலை எடிட்டர் படிச்சார்... சஸ்பென்ஸ் தொடர்ந்தது.

    முதல்லே 100 பக்கம் நல்லா போயிருக்குன்னார்... கடைசியிலே ரொம்ப ரொம்ப வேகமா எழுதியிருக்கீங்களாம்.. அந்த வேகத்தைக் கட்டுப்படுத்தி... நிதானமா நாவலை முடிக்கணும்னு அபிப்பிராயப்படறார்…

    எனக்கு வியர்த்து விட்டு, சில வினாடிகளில் சமனப்பட்டது.

    அதனாலே.... என்ன பண்றீங்க... மேஜையில் டெலிபோன் மணி அடித்தது.

    நாராயணா! ப்ரஸ்லேர்ந்து பாமா கோபாலன் எழுதிய மாலைமதி நாவல் ஸ்கிரிப்டை உடனே கொண்டுவரச் சொல் என்று சொன்னார்.

    மனதில் சிறகடித்தது.

    நிறைய உரையாடல்களை நீக்கிடுங்க... அதற்குப் பதிலா, எண்ணங்களை எழுதுங்க.... எப்படின்னா, ஒரு திருடனோ, நல்லவனோ, எங்கேயிருந்தோ தப்பி ஒரு காம்பவுண்டுச் சுவர் மீது நிற்கிறான். அவன் மனசுலே ஒரு குழப்பம். இந்தப் பக்கம் குதிக்கலாமா, அந்தப் பக்கம் விழலாமான்னு குழப்பம். அவன் மனசுலே பின் விளைவுகள் எல்லாம் சினிமாபடம் போல ஓடறதுன்னு வைச்சுக்கங்களேன்.. சில நிமிடங்கள் கழிச்சுதான் அவன் குதிக்கப் போறான்... புரியுதா... அந்த மாதிரி உங்க கதையிலே கடைசி 26ம்பக்கத்துலே வர்ற நிகழ்ச்சிகளை யோசிச்சு யோசிச்சு செயல்படறாங்க மாதிரி...

    மௌனமாகத் தலையாட்டினேன்.

    .... அதெல்லாம் நீங்க.... பிரமாதமா எழுதி ஜமாய்ச்சிடுவீங்க. என்றார் ப்ரஸ்ஸிலிருந்து என் நாவல் கொத்தாய் வந்தது!

    அதில் கடைசியில் நாற்பது பக்கங்களை எடுத்துக் கொடுத்தார்.

    நீங்க மாற்றி எழுதவேண்டியது கடைசி 26 பக்கங்கள் தான். ஆனால் உங்களுக்குக் கதை போக்கு புரியறதுக்காக அதுக்கு முன்னாடி 14 பக்கங்களையும் தர்றேன்.. உங்க கிட்டே நாவல் பிரதி இருக்கா? என்றபடி கடைசி 46 பக்கங்களைப் பிய்த்துக் கொடுத்தார்.

    பிரதி வைச்சுக்கலையே? என் குரல் எனக்கே கேட்கவில்லை.

    சரி போனால் போறது. இனிமே வைச்சுக்கங்க.

    நாற்பது பக்கங்களை நீட்டினார். எழுந்து நின்று பெற்றுக் கொண்டேன்.

    ஸார் எப்போ கொண்டு தரணும்? என் கைவிரல்கள் நடுங்கின.

    26ம் பக்கங்களை மீண்டும் எழுத. நேரம்?...

    இப்போ வியாழன் மதியம் இரண்டே கால் மணி ஆறது.. ம். நாளை வெள்ளிக்கிழமை இதே மாதிரி லஞ்ச் டயத்துலே கொடுத்துடுங்க! என்று போட்டார் குண்டு!

    மிடறு விழுங்கினேன். சரி ஸார்... வேறு என்ன சொல்ல?

    ஏன்னா, ஓவியருக்கு அனுப்பிப் படம் போடச் சொல்லணும் என்றார்.

    உற்சாக டானிக்! ஸோ, ‘நாவல் பிரசுரமாகும்’ மனம் குதிபோட்டது. உடலே லேசாகிப் பறப்பது போன்ற உணர்வு!

    அந்த வியாழன் இரவு எட்டு மணிக்கு ஆரம்பித்து இரவு ஒரு மணிக்கு எழுதி முடித்தேன். அப்பாவிடம் விஷயத்தையும்

    Enjoying the preview?
    Page 1 of 1