Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Rasavadhi Sirukathaigal
Rasavadhi Sirukathaigal
Rasavadhi Sirukathaigal
Ebook320 pages2 hours

Rasavadhi Sirukathaigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ரஸமாக எந்த விஷயத்தைப் பற்றியும் விவாதிக்கக்கூடியவர் என்ற பொருளில் 'ரஸவாதி' என்ற புனைபெயர் வைத்துக் கொண்டதாகக் கூறுவார். 1950 களிலிருந்த சிறந்த இலக்கிய மாதப் பத்திரிகைகளான 'அமுதசுரபி' நாவல் போட்டி பரிசும் (அழகின் யாத்திரை) 'கலைமகள்' நாராயணஸ்வாமி அய்யர் நாவல் போட்டி (ஆதாரஸ்ருதி) பரிசும் இவரை புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றன. ஆனந்த விகடனில் பல முத்திரை சிறுகதைகள் வெளியாகி உள்ளன. பல மேடை நாடகங்களை எழுதி, நடித்தும் இருக்கிறார். திரு வி.ஸ்.ராகவனின் ஐ.என்.ஏ. தியேட்டருக்கு எழுதிய 'வழி நடுவில்' நாடகம் மதராஸ் மாநிலத்தின் இயல் இசை நாடக மன்றத்தின் பரிசினை வென்றது.

இவருடைய ஒரு சிறுகதை 'உயிர்' என்ற பெயரில் சினிமாவானது. தயாரிப்பாளர் பி.ஆர்.சோமுவிடம் உதவி இயக்குனராக 'எங்கள் குல தெய்வம்; என்ற படத்தில் பணியாற்றிய அனுபவமும் உண்டு.

Languageதமிழ்
Release dateNov 23, 2019
ISBN6580129304711
Rasavadhi Sirukathaigal

Read more from Rasavadhi

Related to Rasavadhi Sirukathaigal

Related ebooks

Reviews for Rasavadhi Sirukathaigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Rasavadhi Sirukathaigal - Rasavadhi

    http://www.pustaka.co.in

    ரஸவாதி

    சிறுகதைகள்

    Rasavadhi

    Sirukathaigal

    Author:

    ரஸவாதி

    Rasavadhi

    For more books

    http://pustaka.co.in/home/author/rasavadhi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அப்பாவைப் பற்றி...

    அணிந்துரை - கவிஞர் வாலி

    அணிந்துரை - ரஸவாதியும் சில இனிய நினைவுகளும்

    நாவல் கதாபாத்திரம் நேரில் வந்தால்....

    தோடி

    பெற்றவள்

    ரோஜாமுள்

    புரிந்தது

    ஆசை

    விஜயாளின் கல்யாணம்

    கௌரவம்

    கர்மயோகி

    கறுப்பு அரிசி

    தோழர் கஜபதி

    சத்திரத்து சாமா அய்யர்

    பொறுப்பு

    நடுவழியில் நடந்தது!

    வித்வானும் ரசிகையும்

    சங்கராபரணம்

    தவிப்பின் எல்லை

    சுபாவம்

    கோபால் ராவும் கடனும்

    அரங்கேற்றம்

    விழிப்பு

    இனி யாருக்காக?

    சிகிச்சை

    அப்பாவைப் பற்றி...

    யாருக்குமே அவரவர் தாய் தந்தையரின் நினைவுகள் மறக்க முடியாத பொக்கிஷந்தான். அந்த வகையில் 06.10.1928 இல் பிறந்து 66 வயது வரையில் வாழ்ந்த எங்கள் தந்தை ஓர் எழுத்தாளருமானதால் எங்களுக்கு அவரைப் பற்றிய மறக்க முடியாத நினைவுகள் ஏராளம். ரஸவாதி என்ற புனைபெயர் கொண்ட எங்கள் தந்தை திரு ஆர். ஸ்ரீநிவாசனின் சொந்த ஊர் நன்னிலம் தாலுகாவிலுள்ள நல்லமாங்குடி. அவர் பிறந்தது திருச்சியை அடுத்த துறையூரில். ரஸமாக எந்த விஷயத்தைப் பற்றியும் விவாதிக்கக் கூடியவர் என்ற பொருளில் 'ரஸவாதி' என்ற புனைபெயர் வைத்துக் கொண்டதாகக் கூறுவார்.

    பி.ஏ கணிதத்தில் மிகச் சிறப்பாகத் தேர்ச்சி பெற்று பிற்காலத்தில் கல்லூரியில் படிப்பவர்களுக்கு டியூஷன் வகுப்புகள் கூட எடுத்திருக்கிறார். இயற்கையாகவே அமைந்திருந்த சங்கீத ஞானத்தைப் பிற்காலத்தில் புல்லாங்குழல் கற்று அபிவிருத்தி செய்து கொண்டார்.

    எழுத்தாளராக ஆவதற்கு முன்னோடி அனுபவமாக அந்தக் காலத்தில் கையெழுத்துப் பத்திரிக்கையொன்றும் நடத்தியிருக்கிறார். அதில் அவருக்குத் துணை நின்றவர்கள் ஸ்ரீவேணுகோபாலன் மற்றும் பிற்காலத்தில் கர்நாடக சங்கீதத்தில் விற்பன்னராக விளங்கிய திரு டி.ஆர். சுப்ரமணியம் ஆகியோர்.

    மிகுந்த தேசபக்தியுள்ள எங்கள் தந்தை எங்களுக்கு நினைவு தெரிந்த நாளாக கதர் வேட்டியும் ஜிப்பாவும் அணிந்துதான் பார்த்திருக்கிறோம். கல்லூரி நாட்களிலேயே எழுதத் தொடங்கியவர். 1949 இல் அவருக்குத் திருமணம் நடைபெற்றபோது புகழ் பெற்ற எழுத்தாளராக இருந்தார். சிறந்த இலக்கிய மாதப் பத்திரிகைகளான 'அமுதசுரபி' நாவல் போட்டிப் பரிசும் (அழகின் யாத்திரை) 'கலைமகள்' நாராயணஸ்வாமி அய்யர் நாவல் போட்டிப் பரிசும் (ஆதாரஸ்ருதி) பெற்றது இவரை புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றது.

    அமுதசுரபியின் அப்போதைய ஆசிரியர் விக்கிரமன் மீதும் அந்நாளைய கலைமகள் ஆசிரியர் கி.வா.ஜ. மீதும் மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொண்டவர். பின்னர், பரிசு பெற்ற அந்த நாவல்களில் 'அழகின் யாத்திரை’ மேடை நாடகமாக எங்கள் தந்தையாலேயே மேடை ஏற்றப்பட்டது. ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் அவரே நடிக்கவும் செய்தார். 'ஆதார ஸ்ருதி' புகழ் பெற்ற கன்னட எழுத்தாளர் மாஸ்தி வெங்கடேச அய்யங்கார் அவர்களின் பேத்தி திருமதி. ரமாதேவியார் (பிலாஸபி என்கிற புனைபெயரில் எழுதுபவர்) மொழிபெயர்க்கப்பட்டு 'ஜீவனா' என்கிற கன்னட வாரப் பத்திரிகையில் தொடர்கதையாக வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்றது.

    சக எழுத்தாளர்களான தி.ஜானகிராமன், கு.ப.ரா., ந. பிச்சமூர்த்தி, எம்.வி.வெங்கட்ராம், மீ.ப.சோமசுந்தரம், பி. எஸ்.ராமையா, வல்லிக்கண்ணன் ஆகியோருடன் நல்ல பரிச்சயம் இருந்திருக்கிறது. இவரும் தி.ஜானகிராமனும் ஒருவர் எழுத்தை மற்றவர் கையெழுத்துப் பிரதியாகவே வாசித்துவிமர்சித்த அனுபவங்களும் உண்டு. சுகி.சுப்ரமணியம், நாங்குநேரி சீ.வரதராஜன் (பீஷ்மன்), லா.ச.ரா ஆகியோர் மற்ற நெருக்கமான எழுத்தாள நண்பர்கள். இவர் தபால் தணிக்கை அலுவலகத்தில் வேலை செய்தபோது இவருடன் பணிபுரிந்தவர்கள் கே.ஆர்.கல்யாணராமன் (மகரம்), ஜடாதரன் (பிற்காலத்தில் பால்யூ) ஆகியோரும் எழுத்தாளர்களே! 1957 இல் கல்கத்தாவில் நடைபெற்ற தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டில் பங்கேற்றிருக்கிறார். அதே வருடத்திலேயே நல்லெண்ண அழைப்பின் பேரில் இலங்கைக்கு சக எழுத்தாளர்களுடன் சென்று சுற்றிப் பார்த்த அனுபவமும் உண்டு.

    எஸ்.வி.சஹஸ்ர நாமத்தின் 'சேவாஸ்டேஜ்' குழுவின் முக்கிய நாடகங்களான 'பிரஸிடன்ட் பஞ்சாட்சரம்', 'பாஞ்சாலி சபதம்' போன்றவற்றில் நடித்த அனுபவங்களும் உண்டு. பிறகு இவரே எழுதி மேடையேற்றிய நாடகங்களில் புகழ்பெற்ற நடிகரும் மூத்த நாடகக் கலைஞருமான வி.ஸ்.ராகவனின் ஐ.என்.ஏ. தியேட்டருக்கு எழுதிய 'வழி நடுவில்' நாடகம் மதராஸ் மாநிலத்தின் இயல் இசை நாடக மன்றத்தின் பரிசினை வென்றது. 'வழி நடுவில்' நாடகம் கன்னட நடிகர் வாதிராஜ் அவர்களால் கன்னடத்தில் திரைப்படமாக எடுக்கப்பட்டது. 1960களில் சென்னை வானொலி நிலையத்தில் இவருடைய எண்ணற்ற நாடகங்கள் ஒலிபரப்பாகியுள்ளன. இவருடைய ஒரு சிறுகதை 'உயிர்' என்ற பெயரில் சினிமாவானது. தயாரிப்பாளர் பி.ஆர். சோமுவிடம் உதவி இயக்குனராக எங்கள் குல தெய்வம் என்ற படத்தில் பணியாற்றிய அனுபவமும் உண்டு.

    அலுவலகப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின் பக்கவாதத்தால் தாக்கப் பெற்று வலது கை செயலிழந்து போனபோது சிறிதும் மனந்தளராமல் விடா முயற்சியோடும் பகவான் ஸ்ரீராமரின் மேல் அபார நம்பிக்கையோடும் லட்சக்கணக்கில் 'ஸ்ரீராமஜயம்' எழுதி தன் கையைச் சரிப்படுத்திக் கொண்டதோடு மட்டுமில்லாமல், அதற்குப் பிறகும் ‘சேது பந்தனம்' என்கிற நாவலை அதே மணிமணியான கையெழுத்தில் எழுதியதை எண்ணி இன்றளவும் நாங்கள் பிரமிக்கிறோம். இவருடைய எழுத்தில் மெலிதான நகைச்சுவை இழையோடுவதை நாம் பார்க்கமுடியும்.

    புகைப்படக்கலையிலும் ஜோதிடக்கலையிலும் மிகுந்த ஆர்வம் கொண்டு கற்றுக் கொண்டவர். மிக அழகாக வரைவார். சிறிது காலம் 'வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா'விற்காக நிருபராக வேலை பார்த்த அனுபவமும் உண்டு.

    இவருக்கு மூன்று பெண்கள், நான்கு பையன்கள். அதில் இரண்டு பையன்கள் இரட்டைக் குழந்தைகள். தன் வாழ்நாள் முழுவதும் பொருளாதார ரீதியில் எண்ணற்ற சோதனைகளையும் இடர்ப்பாடுகளையும் சந்தித்த போதும், தன் குழந்தைகளைப் பட்டப் படிப்பு படிக்க வைத்து, தன் நான்கு சகோதரிகளுக்கும், மூன்று பெண்களுக்கும் சிறப்பாகத் திருமணம் செய்வித்து தன் கடமையை ஆற்றிய இவருக்கு உறுதுணையாகவும் பக்க பலமாகவும் இருந்தவர் எங்கள் தாயார் திருமதி. ராஜம்தான்.

    பணத்தை என்றுமே ஒரு பொருட்டாக எண்ணியதில்லை. அது வரும் போகும், அவ்வளவுதான்! என்று எளிதாக எடுத்துக்கொள்வார். அதேபோல உடல் நலக்குறைவுகளையும் பெரிதுபடுத்திக் கொள்ளமாட்டார். விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும், மனஉறுதியும் பூண்டு எங்களுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக (ரோல்மாடல்) வாழ்ந்து காட்டியவர். மிக எளிமையாக வாழ்ந்தவர். அவர் தேவைகளே மிகக்குறைவு. பன்னீர்ப் புகையிலையை உள்ளங்கையில் அழுந்தத் தேய்த்து ரசனையோடு வெற்றிலை போட்டுக் கொள்வார்.

    அலுவலகமாக இருக்கட்டும் அல்லது வீடாக இருக்கட்டும், எப்போதுமே அவர் இருக்கும் இடத்தில் சிரிப்பும் குதூகலமும் இருக்கும். வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் அணுஅணுவாக ரசித்து சந்தோஷமாக வாழ்ந்தவர். தன் கூட இருந்தவர்களையும் எப்போதும் சந்தோஷமாக வைத்துக் கொண்டவர். அப்பாவைப்பற்றிய அனுபவங்கள் என்றென்றும் மறக்க முடியாதவை தான்.

    அன்புடன்,

    ரேவதி பாலு

    அணிந்துரை - கவிஞர் வாலி

    சென்ற நூற்றாண்டின், ஐம்பதுகளில் - ஸ்ரீரங்கத்தில் ஒரு பெரும் வாசக வட்டமே செயல்பட்டு.

    அன்றைய நட்சத்திர எழுத்தாளர்களின் படைப்புகளை - நடுமுள் நடுங்காத ஒரு தராசாக இருந்து-

    எடைபோட்டு விமர்சித்ததுண்டு. நான் ஸ்ரீரங்கத்துக்காரன்.

    ஞாயிறுகளில், என் வீட்டுக்கு வந்து - என் தாயார் கையால் அற்புதமான காப்பி சாப்பிட்டுவிட்டு-

    அம்மா மண்டபம் காவிரிப் படித்துறையில் அமர்ந்து பல்வேறு இலக்கியப் படைப்புகள் பற்றி வாயாடியதுண்டு.

    திருலோக சீதாராம்; அகிலன்;துறைவன்;பாரதியார் தங்கம்மாள் ஆகியோர்.

    அந்தக் கூட்டத்தில் நான்தான் இளையவன் எனினும் - என் கருத்தும் அந்த வட்டத்தில் கோலோச்சி நிற்க-

    திருலோக சீதாராம் அனுமதிப்பார். அதற்கு காரணம், அப்பொழுது-

    அதாவது 1952இல் நான் ‘பிராந்தி' எனும் தலைப்பில் ஒரு சிறுகதை 'கலைமகளில்' எழுதியிருந்தேன். பிறகு ஓரிரு மாதங்கள் கழித்து - 'என்ன பதில் சொல்வது?' எனும் தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியிருந்தேன்.

    என் எழுத்து நடை கொஞ்சம் லா.ச.ரா.வின் நடைபோல் பூடகமாக இருக்கும். எதையும் 'நேரே வா; நேரே போ' என்கிற மாதிரி எழுதியதில்லை நான். அதற்குக் காரணம் அடிப்படையில் நான் ஒரு கவிஞனாக இருந்ததால்தான்.

    நான் நடத்திய கையெழுத்துப் பத்திரிகையை, என் வீட்டிற்கே வந்து கல்கி அவர்கள் வெளிட்டிருக்கிறார்கள். உடன் சின்ன அண்ணாமலையும் வந்திருந்தார். இது நடந்தது 1947 அல்லது 1948 என்று நினைக்கிறேன்.

    என் எழுத்தையும் அதற்கான என் படங்களையும் பார்த்து விட்டுத்தான், கல்கி என்னை அகில இந்திய வானொலியின் தலைமை இயக்குநராக இருந்த திரு.பார்த்தசாரதி அவர்களிடமும்; 'வானொலி' பத்திரிகையில் ஆசிரியராயிருந்த திரு.சிட்டி அவர்களிடமும் அறிமுகம் செய்து வைத்து -

    எனக்கு வானொலியில் தற்காலிகமான ஓர் உத்தியோகம் வாங்கிக் கொடுத்தார்.

    எதற்கு இவ்வளவு சுயதம்பட்டம் அடித்துக் கொள்கிறேன் என்றால் சிறுகதைகள், நாவல்களைப் பற்றி ஒரு சினிமாக்காரனுக்கு என்ன தெரிய இருக்கிறது என எவரும் எண்ண நேருமோ என்பதற்கான ஒரு தன்னிலை விளக்கம்தான்.

    ஸ்ரீரங்கம் கீழச் சித்திரை வீதியில் நான், சுஜாதா, சுஜாதாவின் அண்ணன் கிருஷ்ணசாமி, 'ஜனனி' எனும் புனைபெயர் கொண்ட ஸ்ரீனிவாசன் ஆகியோர் - அன்றைய நாளில் 'கலைமகள்', 'அமுதசுரபி' ஆகிய இரண்டிலும் வெளியாகிற கதைகளைப் படித்துவிட்டு - கோபுரவாசலில் மணிக்கணக்காக நின்று பேசியதுண்டு.

    'அமுதசுரபி'யில் வெளியான லா.ச.ரா.வின் 'பஞ்சபூதக் கதைகள்' மற்றும் 'கலைமகளில்' வெளியான ராஜம் கிருஷ்ணனின் 'மணல்வீடு', ரஸவாதி அவர்கள் நாராயணசாமி அய்யர் பரிசு பெற்ற 'ஆதார ஸ்ருதி' ஆகிய எழுத்துகள் எங்களை வெகுவாக ஈர்த்ததுண்டு.

    திரு. ரஸவாதி அவர்களை நான் நேரில் பார்த்ததில்லை. ஆனால் அவருடைய படைப்புகளை நான் ஸ்ரீரங்கத்தில் இருந்த காலத்தில் நிறையப் படித்திருக்கிறேன்.

    ஆற்றொழுக்கான நடை; அப்பழுக்கற்ற பாத்திரப் படைப்புகள்; தன் தமிழ் ஆளுமையைக் காட்ட வேண்டி, சொற்சாலங்களை நிகழ்த்தாமை; 'அடுத்து என்ன நேரும்' என வாசகனை நாற்காலி நுனிக்கு வரவழைக்கும் அற்புதம் என்றெல்லாம் திரு. ரஸவாதி அவர்களின் படைப்புகளைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்.

    நீண்ட நெடுங்கதைகளில் தொய்வின்றி வாசகனைத் தன்னுடன் அழைத்துச் செல்வது என்பது சாதாரண விஷயமல்ல. அந்தக் கலை திரு.ரஸவாதி அவர்களுக்குக் கைவந்திருக்கிறது.

    நாம் தொட்டால் தொடர்வதன்றி இடையில் மீள இயலாதவாறு இருக்கும்-

    ரஸவாதியின் ரசமான நாவல்கள். அந்த நாவல்கள் - இன்றளவும் நம் நாக்கில் தித்தித்திருக்கும் 'நாவல்கள்'.

    அன்று படித்த ரஸவாதியின் 'ஆதார ஸ்ருதியை' இன்று படித்தேன். அதே நிலைதான். எடுத்தால் கீழே வைக்க முடியாதபடி-

    'பாகீரதி' எனும் பெண்ணின் சுயமரியாதை உணர்வு - என்னை இழுத்துக் கொண்டது.

    அன்றைய நடுத்தரக் குடும்பத்தின் ஆசைகள்; அவலங்கள்; ஏற்றங்கள்; இறக்கங்கள்; பெண் கல்வி; பெண்ணடிமை என.

    ரஸவாதியின் பேனா தொட்டு நிகழ்த்தாத ரஸவாதமே இல்லை.

    அன்றைய பொலிவும் வலிவும் - இன்றும் ரஸவாதியின் எழுத்தில் பார்க்கிறபோது-

    ரஸவாதி வையமிசை வாழ்ந்து கொண்டிருக்கிறார் - தன் எழுத்துகளில் என உறுதியாய்ச் சொல்லுவேன்.

    அணிந்துரை - ரஸவாதியும் சில இனிய நினைவுகளும்

    கன்னட எழுத்தாளர்: ஃபிலாஸஃபி

    தமிழில்: அனுராதா ஜெயந்த்

    நான், என் கல்லூரிப் படிப்பை முடித்தவுடன் பட்ட மேற்படிப்பிற்குச் செல்ல ஆர்வமாயிருந்தேன். ஆனால் என் பெற்றோர் அதற்கு அனுமதிக்கவில்லை. வீட்டில் சும்மாயிருந்தபடி நேரத்தைச் செலவிடுவது பெரும் போராட்டமாக இருந்தது.

    அப்பொழுது நான் என் பாட்டி வீட்டிலிருந்ததால் என் பாட்டியை (மாஸ்தி வேங்கடேச ஐயங்கார் அவர்களின் மனைவி பங்கஜம்மா, எங்களுக்கெல்லாம் அவர் 'அம்மணி') 'கலைமகளில்' வரும் கதைகளைச் சொல்லச் சொல்லிக் கேட்பேன்.

    அந்த நேரத்தில் ரஸவாதியின் ‘ஆதார ஸ்ருதி' தொடராக வந்து கொண்டிருந்தது. கதை சுவாரஸ்யமாக இருந்ததால் ஒவ்வொரு முறையும் கலைமகள் வருவதற்கு காத்திருப்பேன். வந்தவுடன் முதலில் ரஸவாதியின் தொடரைப் படிக்கச் சொல்லிக் கேட்பேன். அதன் பின்புதான் மற்றவற்றைப் படிக்கவிடுவேன்.

    அத்தொடர் முடிவிற்கு வந்தது. என் பாட்டி ஒருநாள் என்னைப் பார்த்து ஒவ்வொரு முறையும் கதையை என்னைப் படிக்கச் சொல்லிக் கேட்பதை விட நீயே படித்துப் பார்க்க முயற்சி செய் என்று கூறினார் (அதுவரை எனக்கு தமிழ் எழுதவோ, படிக்கவோ தெரியாது). எனக்குத் தமிழை எழுதவும், படிக்கவும் பாட்டியே கற்றுக் கொடுத்தார். அந்த நாவலை கன்னடத்தில் மொழி மாற்றம் செய்யுமாறும் கூறினார் (வீட்டில் என்னைத் தவிர அனைவரும் சமஸ்கிருதத்தைப் பாடமாக எடுத்திருந்தனர்; நான் மட்டுமே கன்னடத்தைப் படித்திருந்தேன்). ரஸவாதியின் மொழிநடை எளிமையாக இருந்ததால் எனக்கும் அந்நாவலை மொழிபெயர்க்க வேண்டும் என்ற ஆவல் பிறந்தது.

    ரஸவாதி அவர்களின் முகவரியைப் பெற்று அவருக்குக் கடிதமெழுதினேன். அக்கடிதத்தில் அவரது நாவலாகிய ஆதார ஸ்ருதியைக் கன்னடத்தில் மொழிபெயர்க்கவும் அதனை இங்குள்ள இதழில் வெளியிடவும் அனுமதி கோரியிருந்தேன்.

    என்னைப் பற்றி எதுவும் தெரியாத நிலையிலும் மிக்க மகிழ்ச்சியுடன் அனுமதி அளித்தார். நான் அவருக்கு எவ்வளவு பணம் கொடுக்க முடியும் என்றும் அவர் கேட்கவில்லை. நானும் அந்நாவலை முழுமையாக மொழியாக்கம் செய்துவிட்டு என் அம்மா மற்றும் பாட்டியிடம் படிக்கக் கொடுத்தேன்.

    கன்னடத்தில் வரும் பத்திரிகை ஒன்றுக்கு அனுப்பலாம் என்று எண்ணினேன். அவ்வாறு செய்யும் முன் என் தாத்தாவின் (மாஸ்தி அவர்கள்) பத்திரிகையான ஜீவனாவில் பணியாற்றிக் கொண்டிருந்த சுப்பிரமணியம் என்பவரிடம் படிக்கக் கொடுத்தேன். அவருக்குத் தாய்மொழி கன்னடம். அதனால் அவரின் மதிப்பீடு முக்கியமானதாக இருந்தது.

    என் மொழிபெயர்ப்பைப் படித்த அவர் வேறு ஏதாவது வார இதழுக்கு அனுப்பிவிட்டு ஏன் காத்திருக்க வேண்டும் நம் 'ஜீவனா'விலேயே பிரசுரிக்கலாம் என்றார். என் தாத்தா ஒப்புக் கொள்வாரா என்று யோசித்தேன். ஆனால் சுப்பிரமணியம் பேசிப்பேசி சம்மதம் வாங்கினார். நான் மீண்டும் ரஸவாதி அவர்களுக்குக் கடிதம் எழுதிக் கேட்டபோது அனுமதிக் கடிதம் அனுப்பியதோடு என்னை ஆசீர்வதித்தும் எழுதியிருந்தார்.

    என் பாட்டி என்னை வீட்டில் செல்லமாக 'ஃபிலாஸஃபி' (Philosophy) என்றே அழைப்பார். அவரே இம்மொழிபெயர்ப்பைச் செய்யத் தூண்டுதலாக இருந்ததால் அப்பெயரிலேயே இந்நாவலை வெளியிட முடிவு செய்தேன்.

    என் பாட்டியிடம் கேட்டபோது அவர், உனக்கு அப்பெயர் பிடித்திருந்தால் அப்பெயரில் ஒன்னை அழைப்பது அவமானமாக இல்லாவிட்டால் வைத்துக்கொள் என்றார். எனக்குப் அப்பெயரின் புதுமை பிடித்திருந்தது. (எனக்குத் தெரிந்து வேறு எந்த மொழியிலும் இப்பெயரில் யாரும் எழுதுவதில்லை). என் தாத்தாவிடம் அப்பெயரிலேயே அத்தொடரை வெளியிடுமாறு கோரினேன். இப்படியாக என் முதல் மொழிபெயர்ப்பு 1965 இல் வெளியானது. வாசகர் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்தது.

    1967இல் சென்னைக்குச் சென்றபோது ரஸவாதி அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் என்னை முதலில் கேட்ட கேள்வி ஆங்கிலச் சொல்லாகிய ஃபிலாஸபி ஏன் புனைபெயராகத் தேர்ந்தெடுத்தாய்? என்பதுதான். மேற்சொன்ன காரணத்தைக் கூறியபோது சிரிப்புடன் ஒப்புக்கொண்டார்.

    கன்னடப் பத்திரிகை உலகிலும் வாசகரின் மனத்திலும் இப்பெயருடன் நான் என்றென்றும் வாழ விரும்புகிறேன். மேன்மேலும் எழுதச் சொல்லி என்னை ஆசீர்வதித்த அவரின் ஆசிகளே இன்றுவரை என்னை எழுதத்தூண்டுகிறது. 150க்கும் மேற்பட்ட சிறுகதைகளை மொழிபெயர்த்துள்ளேன். 'சுதா', 'தரங்கா', 'ப்ரியங்கா', 'மங்களா', கர்மவீரா', 'கன்னட பிரபா' ஆகிய பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன.

    'ரமாதேவி ராமானுஜம்' என்ற பெயரில் என்னை யாரும் அறியார். 'ஃபிலாஸபி' என்ற புனைபெயரே அனைவருக்கும் தெரியும்.

    'ப்ரியங்கா' நடத்தும் 'மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்' போட்டியில் தொடர்ந்து நான்கு வருடங்களாக பரிசு வென்றுள்ளேன் (மூன்று முறை ஆறுதல் பரிசும், ஒருமுறை இரண்டாம் பரிசும் கிடைத்துள்ளது). இதையெல்லாம் எண்ணிப்பார்க்கும் இத்தருணத்தில் ரஸவாதி அவர்களுக்கும் என் பாட்டிக்கும் நன்றி கூறுகிறேன். அவர்கள் இல்லாமல் நான் ஓர் எழுத்தாளர் ஆகியிருக்க முடியாது.

    நாவல் கதாபாத்திரம் நேரில் வந்தால்....

    திடீரென்று ஒரு நாள் தொலைபேசியில் உங்களுக்கு ஓர் அழைப்பு வந்து, உங்க தந்தை ரஸவாதி எழுதிய ஆதாரஸ்ருதி நாவலில் 189 ஆம் பக்கத்தில் 'அட்வகேட் கோபு' என்று ஒரு கதாபத்திரம் வருகிறதே, அவரோட மகன் நான்! என்று ஒருவர் அறிமுகப்படுத்திக் கொண்டால் எப்படியிருக்கும்?

    நான் சூளைமேட்டில் உங்க அத்தை திருமதி மங்களம் வீட்டுக்கருகேதான் வசிக்கிறேன். அவரிடமிருந்து 'ஆதாரஸ்ருதி' வாங்கி படிச்சேன். நீங்க எழுதிய புத்தகம் ஒண்ணும் படிச்சு நீங்களும் ஒரு எழுத்தாளர்னு தெரிஞ்சுண்டேன். உங்களை நேரில் சந்திச்சுப் பேசணுமே? எப்ப உங்களுக்கு செளகரியப்படும்?

    1956 இல் கலைமகளில் நாராயண ஸ்வாமி அய்யர் நினைவு நாவல் பேட்டியில் பரிசு பெற்ற நாவலான 'ஆதாரஸ்ருதி'யில் கதைக்களனாக திருச்சி, மதராஸோடு எங்கள் தந்தை சிறு வயதில் வசித்த துறையூரும் வரும். தன் தாத்தா வக்கீல் கோபாலய்யர் வீட்டில் தங்கிப் படித்தபோது, தான் துறையூரில் கண்ட காட்சிகள், விழாக்கள், மனிதர்களைப் பற்றிய விவரங்கள் அந்த நாவலில் அழகுறப் பதிவு செய்யப்பட்டிருக்கும்.

    அந்தந்த தெருக்களில் வசித்த பிரபலஸ்தர்களின் பெயர்கள் மாற்றப்படாமல் அப்படியே கொடுக்கப்பட்டிருக்கும். முக்கியமாக ஐப்பசி மழை முடிந்து கோலாகலமாக நடக்கும் ஜோத்திரை உற்சவம். நாவலில் படிக்கும் போது நேரிலேயே பார்ப்பது போல வர்ணனை அவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கும்.

    துறையூரில் எங்கள் கொள்ளுத்தாத்தா கோபலய்யரிடம் ஜுனியர் வக்கீலாக இருந்த திரு. ராஜகோபாலனின் மகன் திரு.பாலசுப்ரமண்யம் தான் ஆர்வம் வழியப் பேசிய அந்த தொலைபோசிக் குரலுக்கு சொந்தக்காரர்.

    நாவல் வெளிவந்து ஐம்பத்தாறு வருடங்கள் கழித்து இப்போது அவரை நேரில் சந்தித்த போது அவருக்கு வயது எண்பது!

    அக்ரஹாரத்தில், மேட்டுத் தெருவில் இருந்தவர்களின் வாரிசுகள் யாரும் தற்போது ஊரில் இல்லையென்றும், தன்னுடைய சகோதரர் ஒருவர் மட்டும் தங்கள் பூர்வீக வீட்டில் இன்றும் துறையூரில் வசித்து வருகிறார் என்றும் சொன்னார். நாவலில் துறையூர் சம்பந்தப்பட்ட மற்றொரு முக்கிய கதாபாத்திரமான டாக்டர் ராஜுவின் வாரிசுகளில் திரு.ராமமூர்த்தியுடனும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது அவருக்கும் மிக்க சந்தோஷம். அவரும் துறையூர் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.

    அடுத்ததாக அவர் கேட்டது "எங்கள் தந்தை

    Enjoying the preview?
    Page 1 of 1