Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sankarabharanam
Sankarabharanam
Sankarabharanam
Ebook229 pages1 hour

Sankarabharanam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இது என் கதைகளின் முதல் தொகுதி. அப்பாவின் சிறுகதைத் தொகுதி ஒன்றுகூட இதுவரை வெளிவரவில்லையே என்கிற ஆதங்கத்துடன், என் குழந்தைகள் முனைந்து ஏற்பாடுகள் செய்ததன் விளைவு!

நாற்பது ஆண்டுகால அளவில் இருந்த, இன்னமும் இருக்கப் போகிறபல பத்திரிகைகளில் இவை பிரசுரமாயின. அவைகளுக்கு என்பால் இருந்த மரியாதையும், நம்பிக்கையும் கொஞ்ச நஞ்சமல்ல. அவைகளிடம் குறையாத நட்பும் விசுவாசமும் எனக்கு இன்னமும் உண்டு.

''உங்களைப் போன்றவர்கள் எங்களுக்கு எழுதுவது பத்திரிக்கைக்கு ஒரு கௌரவம். நல்ல கதாசிரியர்களை வளர்த்து கூடவே தாமும் வளர்வதில்தான் பத்திரிகை தர்மம், சிறப்பு எல்லாமே இருக்கின்றன.'' அமரர் கி.வா.ஜ அவர்கள் எப்போதோ சொன்னது. நவரத்தினங்கள் பதித்த தங்கக் கிரீடம்கூட இதற்கு இணையாகாது, ஆரம்ப காலத்திலிருந்தே சாவி, தேவன், விக்கிரமன், சுதேசமித்திரன் ரங்காச்சாரி இவர்களும் எனக்கு ஊக்கமும் உற்சாகமும் அளித்து வந்திருக்கிறார்கள். இவர்களையும் இங்கு நான் குறிப்பிட வேண்டியது ரொம்ப அவசியம்.

மனித இயல்பு - அறிவுடைய அனைவருக்குமே தெரியும், விசித்திரமான ஓர் குணப்பாங்கு. யார், எப்போது யாரிடம், எப்படி, ஏன் நடந்து கொள்கிறார்கள்? சரியாகப் பதில் புரிந்து கொள்ள முடியாத இந்தக் கேள்வியில் தான் பல கதைகளின் மூலக்கருவே ஒளிந்து கொண்டிருக்கிறது. அவரவர் மனப்பாங்குக்கு ஏற்றாற் போல அவரவர் ஒரு அர்த்தம் புரிந்து கொண்டு, எழுத்தாளர்கள் தம் கதைகளைப் படைக்கிறார்கள். அவ்வளவுதான்.

''மனுஷ மனசுகள் ஒவ்வொண்ணும் ஒரு டைப், அதுகளை வச்சு கதை எழுதறபோது கழைக்கூத்தாடி கம்பி மேல நடக்கற மாதிரி ஜாக்ரதையா இருக்கணும். அசந்தாப் போச்சு.'' என்று தி. ஜானகிராமன் சொல்வார். ஒரு நல்ல கதைக்கு என்ன அடையாளம் என்று ஒரு தடவை கேட்ட போது அவர் சொன்னார் - ''படிச்சு முடிச்சதும் ஒருத்தன் 'டிஸ்டர்ப்' ஆகணும். அதான் என்று. வாசகன் மன நிலையில் இனம் புரியாத ஆனால் ஆரோக்கியமான ஒரு சலனம் ஏற்படவேண்டும், கதையைப் படித்ததும். இதுதான் இதற்கு அர்த்தம். இத்தொகுதியில் உள்ளவற்றில் ஒன்றிரண்டு கதைகளாவது அந்த 'உரைகல் பரீட்சையில் தேறிவிடும் என்பது என் நம்பிக்கை. ஒரு வேளை படித்த பிறகு வாசகர்களில் சிலர் வேறு விதமாக 'டிஸ்டர்ப்' ஆகி என்னைத் திட்டினால், அப்போதும் எனக்குத் திருப்தியே!

இனி வந்தனோபச்சாரம் கூறவேண்டிய கட்டம்.

என் உளங்கனிந்த நன்றி.

- ரஸவாதி

Languageதமிழ்
Release dateNov 10, 2019
ISBN6580129304687
Sankarabharanam

Read more from Rasavadhi

Related to Sankarabharanam

Related ebooks

Reviews for Sankarabharanam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sankarabharanam - Rasavadhi

    http://www.pustaka.co.in

    சங்கராபரணம்

    சிறுகதைகள்

    Sankarabharanam

    Sirukathaigal

    Author:

    ரஸவாதி

    Rasavadhi

    For more books

    http://pustaka.co.in/home/author/rasavadhi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    என்னுரை

    1. சங்கராபரணம்

    2. விடுதலை

    3. சுபாவம்

    4. ஆசாரம்

    5. குறையா? எனக்கா?

    6. கோபால் ராவும் கடனும்

    7. அரங்கேற்றம்

    8. விழிப்பு

    9. தொண்டு

    10. ஆராதனை

    11. என் வீடு

    12. சோகத்தின் முன்

    13. இப்போ என்னை பாத்தியாடி?

    14. ஒரே ஒரு தரம்....

    என்னுரை

    இது என் கதைகளின் முதல் தொகுதி. அப்பாவின் சிறுகதைத் தொகுதி ஒன்றுகூட இதுவரை வெளிவரவில்லையே என்கிற ஆதங்கத்துடன், என் குழந்தைகள் முனைந்து ஏற்பாடுகள் செய்ததன் விளைவு!

    நாற்பது ஆண்டுகால அளவில் இருந்த, இன்னமும் இருக்கப் போகிறபல பத்திரிகைகளில் இவை பிரசுரமாயின. அவைகளுக்கு என்பால் இருந்த மரியாதையும், நம்பிக்கையும் கொஞ்ச நஞ்சமல்ல. அவைகளிடம் குறையாத நட்பும் விசுவாசமும் எனக்கு இன்னமும் உண்டு.

    உங்களைப் போன்றவர்கள் எங்களுக்கு எழுதுவது பத்திரிக்கைக்கு ஒரு கௌரவம். நல்ல கதாசிரியர்களை வளர்த்து கூடவே தாமும் வளர்வதில்தான் பத்திரிகை தர்மம், சிறப்பு எல்லாமே இருக்கின்றன. அமரர் கி.வா.ஜ அவர்கள் எப்போதோ சொன்னது. நவரத்தினங்கள் பதித்த தங்கக் கிரீடம்கூட இதற்கு இணையாகாது, ஆரம்ப காலத்திலிருந்தே சாவி, தேவன் விக்கிரமன், சுதேசமித்திரன் ரங்காச்சாரி இவர்களும் எனக்கு ஊக்கமும் உற்சாகமும் அளித்து வந்திருக்கிறார்கள். இவர்களையும் இங்கு நான் குறிப்பிட வேண்டியது ரொம்ப அவசியம்.

    மனித இயல்பு - அறிவுடைய அனைவருக்குமே தெரியும், விசித்திரமான ஓர் குணப்பாங்கு. யார், எப்போது யாரிடம், எப்படி, ஏன் நடந்து கொள்கிறார்கள்? சரியாகப் பதில் புரிந்து கொள்ள முடியாத இந்தக் கேள்வியில் தான் பல கதைகளின் மூலக்கருவே ஒளிந்து கொண்டிருக்கிறது. அவரவர் மனப்பாங்குக்கு ஏற்றாற் போல அவரவர் ஒரு

    அர்த்தம் புரிந்து கொண்டு, எழுத்தாளர்கள் தம் கதைகளைப் படைக்கிறார்கள். அவ்வளவுதான்.

    மனுஷ மனசுகள் ஒவ்வொண்ணும் ஒரு டைப், அதுகளை வச்சு கதை எழுதறபோது கழைக்கூத்தாடி கம்பி மேல நடக்கற மாதிரி ஜாக்ரதையா இருக்கணும். அசந்தாப் போச்சு. என்று தி. ஜானகிராமன் சொல்வார். ஒரு நல்ல கதைக்கு என்ன அடையாளம் என்று ஒரு தடவை கேட்ட போது அவர் சொன்னார் - "படிச்சு முடிச்சதும் ஒருத்தன் 'டிஸ்டர்ப்' ஆகணும். அதான் என்று. வாசகன் மன நிலையில் இனம் புரியாத ஆனால் ஆரோக்கியமான ஒரு சலனம் ஏற்படவேண்டும், கதையைப் படித்ததும். இதுதான் இதற்கு அர்த்தம். இத்தொகுதியில் உள்ளவற்றில் ஒன்றிரண்டு கதைகளாவது அந்த 'உரைகல் பரீட்சையில் தேறிவிடும் என்பது என் நம்பிக்கை. ஒரு வேளை படித்த பிறகு வாசகர்களில் சிலர் வேறு விதமாக 'டிஸ்டர்ப்' ஆகி என்னைத் திட்டினால், அப்போதும் எனக்குத் திருப்தியே!

    இனி வந்தனோபச்சாரம் கூறவேண்டிய கட்டம்

    என் உளங்கனிந்த நன்றி.

    பழைய எழுத்தாளர் ஒருவரது கதைகளின் தொகுதி ஒன்றை துணிச்சலுடன் வெளியிட முன் வந்துள்ள நர்மதா திரு. இராமலிங்கம் அவர்களுக்கு எனது நன்றியும், ஆசியும்.

    ரஸவாதி

    1. சங்கராபரணம்

    ஜடாதரனின் மகுடத்தில் கட்டுப்பட்டிருந்த சந்திரனின் பிரகாசத்தில் கைலாசத்தின் பனிச்சிகரங்கள் ஒளிர்ந்தன. அங்கே சூழ்ந்திருந்த மெல்லிய பனிப் படலத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தார்கள். பரமேசுவரனைத் தரிசித்து வந்து போய்க் கொண்டிருந்த தேவதைகளும், தேவ கணங்களும். மத்தளத்தைச் சுருதி சேர்த்துத் தயாராக வைத்துக் கொண்டு மகாதேவனின் அடுத்த திருநடனத்தை ஆவலுடன் எதிர்பார்த்த வண்ணம் வாயிலில் நந்திதேவன் தயாராக நின்று கொண்டிருந்தார். பவானின் அருகே அமர்ந்து அருள் பாலித்துக் கொண்டிருந்தாள் பராசக்தி. கருணையும் கனிவும் அவள் கண்களில் சுரந்து கொண்டிருந்தன.

    தீட்ரென்று அங்கே சூழ்ந்திருந்த கின்னரர்களின் இன்னிசை ததும்பும் வாத்திய ஒலிகளையும் துளைத்துக் கொண்டு, ஏதோ ஓலம் ஒன்று சத்திய லோகத்தையும் கடந்து வந்து அன்னையின் திருச்செவிகளில் வீழ்ந்தது. புருவங்கள் சுருங்கின, யோசனையில்.

    சம்பு திரும்பிப் பார்த்தார்.

    தேவி, ஏன் முகவாட்டம் இருந்தாற் போல் இருந்து?

    பார்வதி கலங்கும் கண்களுடன் பர்த்தாவை நோக்கினாள்.

    பிரபோ, ஏதோ ஒரு சோகக் குரல் எங்கிருந்தோ ஒலித்து என்னை நிலை தடுமாற வைத்து விட்டது. இதோ பாருங்கள், பழையபடி அதே குரல்!

    சர்வேசுவரன் கையமர்த்தவே சகல வித ஒலி அலைகளும் கண நேரத்தில் தாமாகவே நின்று அமைதி நிலவியது. அந்த இடத்தில். இப்போது மிகவும் தெளிவாக அந்தப் பிரலாபம் வெகு தூரத்திலிருந்து கேட்டது.

    சிவபிரான் சில விநாடிகள் கண் மூடி யோசனையில் ஆழ்ந்தார். பிறகு புன்னகை மிளிரும் வதனத்துடன் உமாதேவியை நோக்கினார்.

    'பிரியே, பூலோகத்திலிருந்து தான் வருகிறது இந்த அவல ஒலி. இதோ கீழே பார்,"

    தேவலோகம் முழுவதுமே நீலகண்டனின் சுட்டு விரலின் வழியே பார்வையை ஓட்டிக் கவனத்தைப் பூமியில் ஓட்டியது.

    அந்த இடம் ஓர் ஆலயம். அகாலமான அந்த வேளையில் பிரகாரத்தில் நந்தியின் சிலையருகே மூலஸ்தானத்தை நோக்கி நெடுஞ்சாண்கிடையாக, மொழியின் உருவமே புரியாதபடி ஏதேதோ புலம்பிக் கொண்டிருந்தது ஒரு மானிடப் பிறவி.

    நாதா, இந்த ஜீவன் யார்? என்ன வேண்டுமாம் இதற்கு? ஏன் இவ்விதம் தீனமான ஒலி இதன் கண்டத்திலிருந்து சோகத்துடன் கலந்து வருகிறது? பெருமான் சிரித்தார்.

    தேவி, பிரம்மாவின் அவசர வேலையின் கோளாறுகளில் இது ஒன்று. சிருஷ்டிகர்த்தா தன் கடமையை நிறைவேற்றும் வேகத்தில் தவறி நேர்ந்த ஒரு சிறு குறை, இந்த உயிரை இந்த மாதிரி சங்கடத்தில் வைத்திருக்கிறது."

    பார்வதி மௌனமாக இருந்தாள்.

    பிரியே, நான்முகன் அழகையும், சகலவித குணங்களையும் ஒன்று சேர்த்துத் தான் படைத்த இந்த ஜீவனுக்கு, பேசும் சக்தியை அளிக்க மறந்து போய் விட்டான். பர்த்தாவின் நாவிலேயே சதா உறைபவளான வாக்தேவிகூட ஏனோ அந்தச் சந்தர்ப்பத்தில் இதைக் கவனியாமல் இருந்து விட்டாள். அந்தச் சிருஷ்டியின் உள்ளத்தில் உணர்ச்சிகள் குமிழி இடுகின்றன. ஆசைகள் அலைமோதுகின்றன. ஆனால் சொல்லின் பிறப்பிடமான நா அசைந்தால்தானே அவற்றைப் பூரணமாக வெளிப் படுத்த வாய்ப்புக் கிடைக்கும்? வேறு அங்கங்களால் மனத்தில் இருப்பதைச் சைகையின் மூலங்கூட வெளிக் கொணர முடியாமல் தத்தளிக்கும் அந்த ஜீவன் படுகிற பாட்டைப் பார்!

    லோகமாதா, வைத்த கண் வாங்காமல் அந்த மனிதப் பிறவியின் துடிப்பை, தவிப்பைப் பார்த்து, உணர்ந்து மனம் கசிந்தாள். தயை அவள் விழிக் கோணங்களில் நீர் முத்தாகத் துளிர்த்தது.

    பிரபோ, இந்தச் சிருஷ்டிக்கு வாழ்வே கிடையாதா? பிரம்மாவின் தவறுதலுக்காக, இது இப்படியே அந்தகன் அணுகும் வரையில் அவதிப் படவேண்டியதுதானா? இதற்குப் பரிகாரம் ஏதும் செய்யாவிடில் லோகரட்சகி என்ற பெயர் எனக்குத் தகுமா?

    எல்லாம் வல்ல இறைவன் உமையைக் கனிவுடன் நோக்கினார்.

    'தேவி, உன் மன நிலை எனக்குப் புரிந்து விட்டது. உன் விருப்பப்படியே உன் கருணையை அந்த உயிருக்கு நீ அருளலாம். ஆனால் ஒன்றை மட்டும் மறந்து விடாதே. சிருஷ்டிகர்த்தா தெரிந்தோ தெரியாமலோ ஒரு முறை செய்துவிட்டதை என்னால்கூட மாற்றி அமைக்க முடியாது. பூர்வஜன்ம வினைப் பயனாக, சாகும் வரையில் இதே நிலைதான் அந்த ஜீவனுக்கு. ஆகவே. பேசும் சக்தியை அதற்கு அளிக்கமுயன்றால் அது வியர்த்தந்தான். வேறு வழிகளில் அதன் மனக்குறையைத் தீர்க்கும் வழியைப் பார்."

    உமை சிந்தனை வசப்பட்டாள்.

    ‘வேறு வழி என்ன இருக்கிறது? குமுறும் மனமும் கவலை புகுந்த உள்ளமும் உள் இருப்பது வாய் மூலம் வார்த்தைகளாக வெளியே வந்தால் அல்லவா நிம்மதி அடையும்? அந்த வரத்தை அளிக்கக் கூடாதா?'

    சிந்தனை, கவலையையும் துணை சேர்த்துக் கொண்டு அன்னையின் இருதயத்தில் குடி புகுந்தது.

    யட்ச கின்னரர்கள் தூக்க மயக்கத்திலிருந்து விடுபட்டவர்களைப் போல் தத்தம் இசைக் கருவிகளை மீட்டி இனிய கீதங்களை மறுபடியும் வாசிக்கத் தொடங்கினர். அந்தக் கான வெள்ளம் அலை பாய்ந்து. சென்று பார்வதி தேவியின் செவிகளில் மெல்ல மோதியது.

    தன்னையும் மறந்து இசை வசப்பட்டாள் ஜகன்மாதா. அவள் மனத்தில் இருந்த கவலை, கறையான் பிடித்த மரத்தைத் தட்டினதும் கறையான் உதிர்வது போல், சங்கீதத்தினால் தாக்குண்டு வெளியேறி விட்டது. ஆஹா! என்ன நிம்மதி! என்ன சாந்தி!

    சட்டென்று அம்பிகை தன் நினைவுக்கு வந்தாள். பூலோகத்தில் இருந்த அந்த ஜீவனை மறு முறை உற்றுப் பார்த்தாள். அதைப் பற்றி இத்தனை நேரமாக அவள் மனத்தை வாட்டிய கவலை எங்கே போயிற்று?

    கண்டு பிடித்து விட்டேன்! உமை உள மகிழ்வுடன் புன்னகை ததும்பப் பரமனை நோக்கினாள்.

    என்ன தாக்ஷாயணி, என்ன முடிவுக்கு வந்தாய்?

    பிரபோ, இப்போது கண்டு பிடித்து விட்டேன். கவலைகளுக்கும் மனப் போராட்டங்களுக்கும் ஏற்றசஞ்சீவியான ஔடதம் சங்கீதந்தான்! இதை நானே அநுபவத்தில் கொஞ்ச நேரத்தில் உணர்ந்து விட்டேன்.

    ஓஹோ! என்றார் திரியம்பகன்.

    ஆதலால் இந்த ஜீவனுக்குச் சங்கீத ஞானத்தைப் பரிபூரணமாகப் பாலிக்க விரும்புகிறேன். அதன் உதவியால் ராக சஞ்சாரங்களையும், இனிய கீதங்களையும் கேட்டு அநுபவித்துச் சாந்தி அடையட்டும் அந்தப் பிறவி! என்றாள் சதி பெருமையுடன்.

    அப்படியே ஆகட்டும். சரசுவதி செய்யாமல் விட்டு விட்ட காரியத்தை நீயாவது செய். கல்வி ஞானத்துக்குப் பதில், உன் விருப்பப்படி இசை அறிவை அந்த ஜீவன் வளர்த்துக் கொள்ளட்டும். எப்படியாவது அதன் உள்ளக் குமுறல் தணிந்தால் எனக்கும் திருப்திதான்.

    லோகமாதாவின் கடைக்கண் பார்வை பூலோகத்தில் அந்தப் பிறவியின் மீது விழுந்தது.

    ஞான சூனியனாக இருந்த அதன் உள்ளத்தைச் சங்கீதம் தன் முழு உருவத்துடனும் வேகத்துடனும் சக்தியுடனும் போய் ஆக்கிரமித்து, அங்கே முன்பு குடி கொண்டிருந்த உணர்வெழுச்சிகளை விரட்டியது. ஆஹா! அந்த மானிடப் பிறவியின் முகத்தில் தான் என்ன ஆனந்தம்! பட்சி ஜாலங்கள், நீலவானம், கருங்கடல் இவையெல்லாம் அதற்குப் பண் இசைத்தன. நாத மயமான அந்தச் சூழ் நிலை அதனுள் புகுந்திருந்த சங்கீதத்தை முழு உத்வேகத்துடன் தூண்டி விட்டது.

    இப்போது சந்தோஷந்தானே? என்றார் இறைவன்.

    ஆம், பிரபு! என்று பதில் அளித்த பார்வதியின் முகத்தில் செயற்கரிய காரியம் ஒன்றைத் திறம்படச் சாதித்துவிட்ட நினைப்பில், கர்வத்தின் ரேகை லேசாகப் படர்ந்தது. சங்கரன் குறும்புப் புன்னகையுடன் முகத்தை மறு பக்கம் திருப்பிக் கொண்டார்.

    நாழிகைகள் கடந்தன. பிரதோஷ வேளை.

    நந்தி மத்தளம் கொட்ட, நாரதரும் தும்புருவும் யாழ் இசைக்க, பதஞ்சலியும் வியாக்கிரபாதரும் அஞ்சலி செய்து நிற்க, சிவபிரான் சாம்பலை வாரிப் பூசிக்கொண்டு, கபால மாலையுடன் பூதகணங்கள் சகிதமாகப் பேய்க் கூத்து ஆடிக்கொண்டிருந்தார். மானும் மழுவும் கூட ஆடின.

    அப்போது இரைக்க இரைக்கப் பார்வதி ஓடி வந்து கொண்டிருந்தாள்.

    பிரபோ!

    க்ஷண் நேரத்தில் அங்கு அமைதி நிலவியது.

    'பிரியே, என்ன நடந்தது? ஏன் இந்தப் பதற்றம்?’

    நாதா, என்னவென்று சொல்வேன்! நன்மை என்று நினைத்து நான் செய்தது கடைசியில் தீமையிலா முடிய வேண்டும்? அதோ பாருங்கள், அந்த ஜீவனின் கோலத்தை!

    பூலோகத்தில் அதே ஆலயத்தில் நெஞ்சுக் குழி துடிக்க அந்த மனிதப்பிறவி ஈசுவர சந்நிதானத்தில் ஏனோ இன்னும் புரண்டு கொண்டிருந்தது. அதன் மனத்தை ஏதோ பாரம் அழுத்திக் கொண்டு அதைத் திணற அடித்துக் கொண்டிருந்தது. இமைப்பொழுதில் நடந்தது அனைத்தையும் உணர்ந்தார் முழுமுதற் கடவுள்.

    உடனே முன்பு திரிபுரத்தை எரித்தபோது எழுந்தது போன்ற அட்டகாசச் சிரிப்பு வெடித்து எழுந்து அண்ட வெளியையே கிடு கிடுக்கச் செய்தது. சிரசில் இருந்த கங்கை தவித்தாள். சந்திரன் தடுமாறினான். மூவுலகங்களும் தத்தளித்தன. உயிர்கள் எல்லாம் இகத்துக்கும் பரத்துக்கும் நடுவே ஊசலாடின.

    உடல் குலுங்க நகைத்த அதிர்ச்சியில் கங்காதரனின் ஆபரணமாகிய நச்சரவம், அவர் கழுத்திலிருந்து நழுவிக் கீழே கீழே அதல பாதாளத்தை நோக்கிப் போய்க்கொண்டிருந்தது. ஆனால் அது நேராக ஆலயத்தில் பழியாகக்கிடந்த அந்த மனித உடலின் அருகே போய்த்தான் விழுந்தது.

    சந்திரமௌலி நிதானத்துக்கு வந்தார். சற்று முன்பு அவர் இருந்த நிலைக்கும் இப்போது அவரிடம் குடிகொண்டிருக்கும் அலாதியான சாந்தத்துக்கும் காரணம் புரியாமல் தேவலோகம் திகைத்தது.

    சங்கரன் பேச ஆரம்பித்தார்: 'தேவர்களே, நடுங்க வேண்டாம். உற்பாதம் ஏதும் நிகழவில்லை. இந்தத் தாண்டவத்தில். நன்மைதான் விளைந்திருக்கிறது. பார்வதி, அதோ பார். அந்த ஜீவனுக்கு வரப்பிரசாதமாக நீ அளித்த சங்கீத ஞானம் எவ்வளவு தூரம் அதன் மனத்துக்குள்ளேயே விருத்தி அடைந்து, ஆனால் வெளியே வர முடியாமல் தவிக்கிறது. தெரியுமா? அந்த மனிதப்பிறவி தன் மன விகாரங்களையாவது அடக்கிவிடும். ஆனால் சங்கீதத்தின் தன்மை அப்படிப்பட்டதல்ல. அரைகுறை ஞானமே, சுருதி லயம் இவற்றின் குணா நுகுணங்களை அநுசரித்தோ அநுசரிக்காமலோ ஸ்வர சாகித்திய ரூபமாக வாய் மூலம் எப்படியாவது வெளிவந்து விடும். அப்படி இருக்க, பூரண ஞானத்தின் கடுமையான சக்தியை நீ உணர்ந்திருக்கவில்லை. தெரிந்திருந்தால் இந்த மாதிரி வரமே அளித்திருக்க மாட்டாய். நீ அருளிய சங்கீத அறிவு அந்த ஜீவனுக்குள் வளர்ந்து பெருகி, காதுகளின் மூலம் கேள்வி ஞானத்தையும்

    Enjoying the preview?
    Page 1 of 1