Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Muruga Peruman Kathai
Muruga Peruman Kathai
Muruga Peruman Kathai
Ebook130 pages47 minutes

Muruga Peruman Kathai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தமிழர்தம் மாண்பும், தமிழின் மாண்பும் சொல்லி மாளாதவை. தமிழ்க்கடவுள் முருகப்பெருமான் மாண்பு? எத்தனை ஆயிரம் பக்கங்களில் விவரித்தாலும் நிறைவு பெறாதன.

இங்கே பெருமானின் கதையை உரைநடையில் சுருக்கமாகச் சொல்லப் புகுந்துள்ளேன். ஏதோ ஓரளவு செய்திருக்கிறேன். அவ்வளவே. நாட்டில் தமிழை நேசிப்பவர்களும், தமிழ்க் கடவுளை நேசிப்பவர்களும் அதிகம்.

அதனால் யான் இதைச் செய்ய வேண்டியது அவசியமாகியது. இதுவரை என் எழுத்துகள் என்கிற அடிப்படையில் எனது படைப்புகளை வாசித்த பெருமக்கள் நம் பெருமான் முருகக் கடவுளின் திறன்களை முழுவதுமாக புரிந்துகொள்ளும் நோக்கில் இந்நூல் அமைக்கப்பட்டுள்ளது.

Languageதமிழ்
Release dateApr 9, 2022
ISBN6580130908322
Muruga Peruman Kathai

Read more from Mk.Subramanian

Related to Muruga Peruman Kathai

Related ebooks

Reviews for Muruga Peruman Kathai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Muruga Peruman Kathai - MK.Subramanian

    https://www.pustaka.co.in

    முருகப்பெருமான் கதை

    (சுருக்க உரைநடை நூல்)

    Muruga Peruman Kathai

    (Surukka Urainadai Nool)

    Author:

    எம்கே.சுப்பிரமணியன்

    MK.Subramanian

    For more books

    https://www.pustaka.co.in/home/author/mk-subramanian

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    என்னுரை

    அம்பிகையின் தவம்

    சூரபத்மனின் கொடுங்கோல்

    பிரம்மதேவர் மன்மதனை ஏவுதல்

    தவம் கலைத்தார் சிவம்

    நாதர் திருமணம்

    குமரன் உதித்தார்

    முருகப்பெருமானின் இளமைப் பருவம்

    வீரவாகு திறன்

    பிரம்ம தேவரைச் சிறை வைத்தல்

    இரு நங்கையர் தவம்

    தாரகாசூரன் வதம்

    அமோகனின் நல்வார்த்தை

    அசுரர் வரலாறு

    வீரவாகு தூது

    போர் முடிவானது

    போர்

    சூரபத்மன் போர்

    மீளவும் பானுகோபன்

    அக்கினிமுகா சூரன் போர்

    தருமகோபன் - பானுகோபன் வதம்

    போர் ஆரம்பமாயிற்று

    சிங்கமுகா சூரன் – போர்

    போர் துவங்கியது

    சூரபத்மன் பெருவாழ்வு

    பெருமான் – திருக்கல்யாணம்

    வள்ளித் திருமணம்

    என்னுரை

    தமிழர்தம் மாண்பும், தமிழின் மாண்பும் சொல்லி மாளாதவை. தமிழ்க்கடவுள் முருகப்பெருமான் மாண்பு? எத்தனை ஆயிரம் பக்கங்களில் விவரித்தாலும் நிறைவு பெறாதன.

    இங்கே பெருமானின் கதையை உரைநடையில் சுருக்கமாகச் சொல்லப் புகுந்துள்ளேன். ஏதோ ஓரளவு செய்திருக்கிறேன். அவ்வளவே. நாட்டில் தமிழை நேசிப்பவர்களும், தமிழ்க் கடவுளை நேசிப்பவர்களும் அதிகம். அதனால் யான் இதைச் செய்ய வேண்டியது அவசியமாகியது.

    இதுவரை என் எழுத்துகள் என்கிற அடிப்படையில் எனது படைப்புகளை வாசித்த பெருமக்கள் நம் பெருமான் முருகக் கடவுளின் திறன்களை முழுவதுமாக புரிந்துகொள்ளும் நோக்கில் இந்நூல் அமைக்கப்பட்டுள்ளது.

    வாசிக்கிறவர்கள் வழிமொழியுங்கள். யான் மேலும் சில பல புதிய புனைவுகள் செய்ய வசதியாய் இருக்கும்.

    சிவ அன்புடன்

    எம்.கே. சுப்பிரமணியன்

    8610527640

    அம்பிகையின் தவம்

    கைலாய மலை தகதகவென்று பொன்னொளி வீசிக் கொண்டிருந்தது. அதன் நடுவே குளிர் நிலவின் ஒத்த மனம் உடையவராய் சிவபிரான் கோயில் கொண்டிருந்தார். அவர் எதிரே தேவர்கள், முனிவர்கள், சித்தர்கள் முதலானோர் பெருமானைத் துதித்தபடியிருந்தனர். சற்று வெளியே நந்தியம்பெருமான் கையில் பொற்பிரம்போடு காவல் காத்திருந்தார். கானங்கள் பாடவல்ல தும்புருவர், நாரதர், கந்தர்வர் போன்றோர் இனிய நாதங்கள் இசைத்து பெருமானைப் போற்றி மகிழ்ந்திருந்தனர்.

    அப்போது அம்பிகை மன சஞ்சலம் உடையவராகி, பெருமானை வணங்கினார். சிவபிரான் கண் மலர்ந்தார்.

    தாட்சாயணி, இன்றென்ன உன் திருமுகத்தில் வாட்டம் படிந்து கிடக்கிறது? நீ எப்போதும் இப்படி இருந்ததில்லையே? என்னவாயிற்று இன்று உனக்கு? எதுவாயினும் தயங்காது என்னிடத்து எடுத்துரைப்பாயாக. என்று அம்பிகையிடம் வினவினார்.

    அவ்வினாவிற்கு அம்பிகையும் பதில் பகர ஆரம்பித்தாள்.

    தேவரீர்! தட்சன் தங்களை நிந்தித்தார். தாங்களும் அவருக்கு தக்க பாடம் புகட்டி, தண்டனையையும் தந்து முடித்தீர். ஆனால் அவர் வளர்த்த இந்த உடம்பு எந்த பிராயசித்தமும் செய்திடவில்லை. எனவே எனக்கு என்மீதே கழிவிரக்கம் சுரந்துள்ளது. இவ்வுடலை யான் ஒழிக்க உத்தேசித்துள்ளேன். இதற்கு தங்கள் அனுமதி வேண்டும். தயவுசெய்து திருவருள் சுரக்க வேண்டும் நாயகரே! என்று வேண்டினாள்.

    அம்பிகையின் பதிபக்தி சிவபிரானை சிலிர்க்க வைத்தது. ஆனாலும் மௌனமாயிருந்தார். பிராட்டி விடவில்லை. தன் கருத்தை மீளவும் எடுத்துரைத்தாள். பெருமான் நாயகியின் உள்ளக் கருத்தை ஏற்றார்.

    நீ நினைப்பது நல்லதுவாகவே இருக்கும். அதைச் செய்க. என்று வரம் ஈந்தார்.

    அம்பிகை, இமயமலையரசன் இமவான் பர்வதராஜன் நெடுங்காலமாக தவம் செய்து வருகிறான். உன்னைப் புதல்வியாக பெற்றிட வேண்டுமென்பது அவர் விழைவு. நீ அவருக்கு மகளாகப் பிறந்து, தவம் செய்வாயாக. யாம் அப்போது உம் தவத்தை மெச்சிக் கருணை புரிவோம். நின்னைத் திருமணம் செய்து கொள்ளவும் இசைவோம். என்றார்.

    இது கேட்டு தாட்சாயணி பேரின்பம் எய்தினாள். தம் கருத்திற்கு துணைவரின் இசைவு கிடைத்தது அவளுக்கு பேருவகையாக இருந்தது. அந்தக் கணமே அவள் காற்றில் கரைந்தாள்.

    அழகு மிகுந்த இமயமலையில், பத்மை என்னும் தடாகத்தின் கரையில் பர்வதராஜன் தவம் செய்து கொண்டிருந்தார். அம்பிகை தமக்கு மகளாகப் பிறக்க வேண்டுமென்பது அவர் தவத்தின் மையப்பொருள்.

    ஒருநாள் அவர் சந்தியா வந்தனம் செய்திட தடாகத்தில் இறங்கியப் போழ்தில், ஆயிரத்தெட்டு இதழ்த் தாமரைப் பூத்திருப்பதைக் கண்டார். அங்கே அம்பிகை குழந்தையாக மரகத மேனியுடனும், பொன்னெழில் தோற்றம் உடையவளாகவும் தோன்றி இருந்தாள்.

    பிராட்டி எந்தவொரு தாய் வயிற்றிலும் கருவுற்றிருக்கவில்லை. அவளே உலகத்தார்க்கு அன்னை! அவளுக்கு யார் அன்னையாகிட இயலும்?

    தெய்வ அம்சம் பொருந்திய குழந்தையைக் கண்டதும் இமவான் மகிழ்ந்தார். அவர் ஆனந்தத்திற்கு எல்லையே இல்லை. ‘யான் செய்த தவம் பலித்துவிட்டது’ என்றெண்ணியவராய் புளகாங்கிதம் அடைந்து, குழந்தையைக் கையிலெடுத்து உச்சி மோந்தார்.

    ஆனந்தம் குறைவுபடாது தம் மாளிகையை வந்தடைந்தார். பெருமான் கொடுத்த பெருங்கருணை என்றவாறு அக்குழந்தையை தன் பத்தினி மேனையின் கரத்தில் கொடுத்தார். அவளும் அளவிலா ஆனந்தம் கொண்டாள். குழந்தையை மார்போடு அணைத்தாள். அன்பு சுரக்கிற மாதிரியே பாலும் சுரந்தது.

    குழந்தை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர ஆரம்பித்தது. தாய் மேனை குழந்தைக்குத் தண்டை, பரிபுரம், சங்குவளை, ரத்தினச் சுட்டி, மதானி, பொற்தோடு, அங்கதம் முதலான பொன்னாபரணங்களைச் சூட்டி, தாலாட்டும் பாடினாள்.

    குழந்தைக்குப் பார்வதி என்னும் பெயர் இட்டு அகம் மகிழ்ந்தனர், பெற்றோர்.

    சில வருடங்கள் ஆகின.

    தெய்வக் குழந்தையாகிய பார்வதி, அப்பா, என் சிந்தை சிவபிரானைச் சார்ந்து நிற்கிறது. எனவே யான் அவரை நோக்கித் தவம் செய்திட வேண்டும். ஆவன புரியுங்கள். என்று கேட்டது.

    பர்வதராஜன் அதிர்ந்தார். தவம் செய்வதற்கான வயது இது அல்ல என்பது அவர் எண்ணம். எனவே தம் மகளிடம், உமக்கு இது தவம் செய்வதற்கான நேரமன்று; அதற்குக் காலம் இருக்கிறது. இப்போது தேவையில்லை. என்று எடுத்துரைத்தார். தாயும் இதையே கூறித் தடுத்தாள். ஆனால் குழந்தைப் பார்வதி அவற்றை ஏற்றுக் கொண்டாளில்லை. தான் தவம் செய்திட வேண்டுமென்று பெரு விருப்பம் தெரிவித்தாள். வேறு வழியின்றி பர்வதராஜன் தவச்சாலை அமைத்துக் கொடுத்தார்.

    பார்வதி மனம், மொழி, மெய்களால் ‘சிவசிவ’ என்று தியானித்தாள்.

    சூரபத்மனின் கொடுங்கோல்

    பார்வதி தேவி தவம் செய்துகொண்டிருந்த அவ்வேளையில், ஆயிரத்தெட்டு அண்டங்களையும் ஆட்சி செய்து வரும் சூரபத்மன் ஏகபோகமான செருக்குற்றுத் திகழ்ந்து வந்தான். அச்செருக்கின் விளைவாக மானுடர்களும், முனியோர்களும், தேவர்களும் சொல்லொணாத் துயரத்தில் தள்ளப்பட்டனர். வேதனை மிகுந்திருந்தது.

    இந்நிலையில், எல்லாம் தெரிந்த

    Enjoying the preview?
    Page 1 of 1