Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ramapiran Kathai
Ramapiran Kathai
Ramapiran Kathai
Ebook89 pages32 minutes

Ramapiran Kathai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இந்திய நாட்டின் இணையில்லா இதிகாசங்களுள் மிக முக்கியத்துவம் வாய்ந்தது இராமாயணம். இதற்குப் பல காரணங்கள் உண்டு. கதையால், கருத்தால், நீதியால், தரும சிந்தனையால், அறத்தால் ஒப்புயர்வற்ற நூல் இது.

இதன் கதைத் திறத்தை இங்கு காண்போம்.

Languageதமிழ்
Release dateDec 21, 2021
ISBN6580130907896
Ramapiran Kathai

Read more from Mk.Subramanian

Related to Ramapiran Kathai

Related ebooks

Reviews for Ramapiran Kathai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ramapiran Kathai - MK.Subramanian

    https://www.pustaka.co.in

    இராமபிரான் கதை

    (சுருக்க உரைநடை நூல்)

    Ramapiran Kathai

    (Surukka Urainadai Nool)

    Author:

    எம்கே.சுப்பிரமணியன்

    MK.Subramanian

    For more books

    https://www.pustaka.co.in/home/author/mk-subramanian

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    இராமபிரானது பிறப்பு - சிறப்பு

    விசுவாமித்திரர் வருகை - தாடகை வீழ்ச்சி

    இராமபிரான் சுயம்வரம்

    கூனியின் சூழ்ச்சி

    இராமன் வனவாசம் புகுதல்

    கணவன் எவ்வழியோ மனைவி அவ்வழி

    குகன் அன்பு - தசரதன் மறைவு

    பரதன் அன்பு

    சூர்ப்பனகையின் மூக்கறுபடுதல்

    மாயமான்

    இராவணன் சீதையைக் கவர்தல்

    சுக்ரீவன், அனுமன் தொடர்பு

    அனுமனின் தேடுதல் வேட்டை

    அனுமனின் அடுத்த கட்ட வேலை

    விபீஷணனின் நல்லெண்ணம்

    சேது பாலம் - அங்கதன் தூது

    போர்

    போரில் கும்பகர்ணன்

    இந்திரஜித் வீழ்ச்சி

    எல்லாம் இன்ப மயம்

    இராமபிரானது பிறப்பு - சிறப்பு

    இந்திய நாட்டின் இணையில்லா இதிகாசங்களுள் மிக முக்கியத்துவம் வாய்ந்தது இராமாயணம். இதற்குப் பல காரணங்கள் உண்டு. கதையால், கருத்தால், நீதியால், தரும சிந்தனையால், அறத்தால் ஒப்புயர்வற்ற நூல் இது.

    இதன் கதைத் திறத்தை இங்கு காண்போம்.

    கங்கை நதியின் வடக்குத் திசையில் கோசல நாடு இருந்தது. கோசல நாட்டை சூர்ய குலத்தைச் சேர்ந்தவர்கள் ஆண்டு வந்தனர். சூர்ய குலத்தில், ரகு வம்சத்தில் தசரதச் சக்கரவர்த்தி மிகச் சிறந்த அரசராக விளங்கினார். இவர் காலத்தில் அயோத்தி தலைநகராய் விளங்கியது.

    தசரதச் சக்கரவர்த்திக்கு கைகேயி, கோசலை, சுமத்திரை என்று மூன்று மனைவியர். ஆனால் யாவர்க்கும் குழந்தைப்பேறு அமையவில்லை. சக்கரவர்த்தியின் மனம் வாடிற்று. குழந்தைப்பேறு அமையும் பொருட்டு, ஏதாவது சடங்கு ஒன்றை மேற்கொள்ள யோசித்தார்.

    இந்த கால கட்டத்தில் தென்திசையாகிய இலங்கையை இராவணன் என்ற ஒரு அரக்கன் ஆண்டு வந்தான். அவனுக்குப் பத்துத் தலைகள் இருந்தன. மிகுந்த சிவபக்தியும் பேராற்றலும் அவனிடத்து மிகுந்திருந்தன. தனது ஆற்றலை மேலும் பெருக்கிக்கொள்ளத் தக்க வகையில் படைக்கும் தொழில் செய்யும் பிரம்ம தேவரிடம் கடுந்தவம் ஒன்றை மேற்கொண்டான். அவரும் மனம் இரங்கி, இராவணனுக்கு விரும்பிய வரங்களை ஈந்தார்.

    அரக்கனுக்கு செருக்கு உருவாயிற்று. பிரம்மதேவர் அளித்த வரங்களின் உற்சாகத்தில் தன்னிலை மறந்து திரிந்தான். உலகத்தை கட்டிக்காக்கும் தேவர்களிடம் போர் தொடுத்தான். தேவர்களால் ஈடுகொடுக்க இயலவில்லை. அரக்கனிடம் தோற்றனர். அரக்கன் இம்சைகள் புரியத் தொடங்கினான். தேவர்கள் தங்களுக்குத் தீர்வு தேட முனைந்தனர். முடிவாக பாற்கடலில் துயின்றிருக்கும் திருமாலே தீர்வு தரத் தக்கவரென உணர்ந்தனர். அனைவருமாக திருப்பாற்கடலை அடைந்து, பாம்புப் படுக்கையில் சயனித்திருந்த திருமாலை வணங்கி வழிபட்டனர். பெருமாள்கண்கள் மலர்ந்தார்.

    இன்னலுற்றிருக்கும் தேவர்களை நோக்கி, அஞ்ச வேண்டா. பூலோகத்தில் தசரதச் சக்கரவர்த்தி என்பவர் புத்திர காமேஷ்வர யாகத்தை மேற்கொண்டுள்ளார். அவருக்கு யாம் புதல்வராக அவதரித்து உம் குறைகள் போக்குவோம்; இராவணன் வதம் செய்யப் படுவான். என்று அருளினார்.

    தேவர்கள் களிப்படைந்தனர். இராம அவதாரத்தை உவகையுடன் எதிர்நோக்கினர்.

    இந்தச் சூழ்நிலையில்தான் தசரதச் சக்கரவர்த்தி புத்திர காமேஷ்வர யாகத்தைத் தொடங்கினார். யாகத்தைச் சிறப்பாக நடத்தித்தர, அதில் வல்லவராய் விளங்கிய ரிஷ்யசிருங்கர் என்னும் முனிவரை அணுகினார். அவரும் மன்னனுடைய வேண்டுகோளை ஏற்று, யாகத்தை நடத்தித் தர முழுமனதுடன் இசைந்தார்.

    வேள்வி துவங்கியது. முனிவரின் திறத்தால் யாகத்தின் இறுதியில், வேள்வித் தீயில் தேவர் ஒருவர் தோன்றினார். தோன்றிய தேவர் பொற்கிண்ணம் ஒன்றைத் தசரதச் சக்கரவர்த்தியிடம் தந்து மறைந்தார்.

    சக்கரவர்த்தி மிகவும் அகம் மகிழ்ந்தார். அமுதத்தைத் தம் மனைவியர்களிடம் பருகத் தந்தார். அவர்களும் பயபக்தியுடன் அவ்வமுதத்தை வாங்கிப் பருகினர்; பலன் விளைந்தது. கோசலை ராமனையும், கைகேயி பரதனையும் பெற்றெடுத்தனர். சுமத்திரைக்கு இலக்குவன், சத்துருக்கனன் என்கிற இரண்டு மகன்கள் பிறந்தனர்.

    தசரதன் பெரிதும் மகிழ்ந்தார்; நாடு முழுக்க விழா எடுத்தார். மக்கள் உற்சாகம் கொள்ளத் தக்க வகையில் பல்வேறு விழாக்கள் எடுக்கப்பட்டன. நாட்டு மக்களும் இராமபிரானது வருகைக்கும், ஏனைய அரச குமாரர்கள் வருகைக்கும் உற்சாகமும் பெரு மகிழ்ச்சியும் கொண்டனர்.

    இளவரசர்கள் எந்தவித குறையுமின்றி வளரத் தொடங்கினர். இராமனுக்கு நிழலாக இலக்குவனும், பரதனுக்கு நெருக்கமாக சத்ருக்கனனும் இருந்து வந்தனர்.

    தசரதச் சக்கரவர்த்தி தம் புதல்வர்களுக்கு முறையாக கல்வி-கேள்வி முதலானவற்றையும், நற்பண்புகள்-கலைகள்

    Enjoying the preview?
    Page 1 of 1