Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kamba Ramayanam Part - 1
Kamba Ramayanam Part - 1
Kamba Ramayanam Part - 1
Ebook161 pages39 minutes

Kamba Ramayanam Part - 1

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இந்தியாவின் பெருமைகளைப் பறைசாற்றும் இதிகாசங்களுள் இராமாயணமும் ஒன்று. ஆதியில் இதனை வடமொழியில் வால்மீகி எழுத, ஏனையோர் அதனைத் தத்தம் மொழிகளில் யாத்தனர். அப்படி இதைத் தமிழ்படுத்தியவர் கம்பர். கம்பர் தமிழை பெருமைப்படுத்தினார்; மேன்மைப்படுத்தினார். தமிழ் நாட்டுப் பண்பாட்டிற்கு ஏற்ப பண்படுத்தினார்.

தமிழ் இலக்கிய வரலாற்றில் சங்க இலக்கியம் தொடங்கி இராமாயணம் பற்றிய குறிப்புகள் பல கிடைத்துள்ளன. அவற்றின் முதல் பாகமே இந்நூல்

Languageதமிழ்
Release dateMay 28, 2022
ISBN6580154608385
Kamba Ramayanam Part - 1

Read more from Dr. Jayanthi Nagarajan

Related to Kamba Ramayanam Part - 1

Related ebooks

Reviews for Kamba Ramayanam Part - 1

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kamba Ramayanam Part - 1 - Dr. Jayanthi Nagarajan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    கம்பராமாயணம் பாகம் – 1

    Kamba Ramayanam Part – 1

    Author:

    முனைவர் ஜெயந்தி நாகராஜன்

    Dr. Jayanthi Nagarajan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/dr-jayanthi-nagarajan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    கம்பன் காட்டும் ராமகாதை

    1. அயோத்தி மாநகரின் சிறப்பு

    2. இராமாவதாரம்

    3. இராமனைத் தருவாய்

    4. இராமனின் கன்னிப்போர்

    5. விசுவாமித்திரரின் வேள்வி

    6. அகலிகை சாபம் நீங்குதல்

    7. அழகிய கண்ணே

    8. இராமனின் வில்லாற்றல்

    9. ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே

    10. பரசுராமரின் கர்வம் தணிந்தது

    1. மந்திரப் படலம்

    2. மந்தரை சூழ்ச்சிப் படலம்

    3. கைகேயி சூழ்வினைப் படலம்

    4. நகர் நீங்கு படலம்

    5. தைலம் ஆட்டும் படலம்

    6. கங்கைப் படலம்

    7. குகப் படலம்

    8. வனம் புகு படலம்

    9. சித்திரகூடப் படலம்

    10. பள்ளியடைப் படலம்

    11. கங்கை காண் படலம்

    12. திருவடி சூட்டுப் படலம்

    1. இராமனுக்கு முடிசூட்டும் விழா

    2. மந்தரையின் சூழ்ச்சி

    3. கூற்றுவனாக வந்த கைகேயின் கூற்று

    4. பெற்ற தாய் உற்ற துன்பம்

    5. அந்த நாள் ஞாபகம்

    6. சீதையின் துயரம்

    7. நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்

    8. கங்கைக்கரை மன்னன் குகன்

    9. சித்திர கூடத்தில்

    10. பரதனும் சத்ருக்கனனும் நாடு திரும்புதல்

    11. உத்தம பரதனின் உயர்ந்த பண்பு

    12. பரிசல் ஓட்டும் குகன்

    13. திருவடி சரணம்

    கம்பராமாயணம் பாகம் - 1

    (பால காண்டம், அயோத்தியா காண்டம்)
    முனைவர் ஜெயந்தி நாகராஜன்
    முனைவர் பூ. பூங்கோதை

    எங்கள் உரை...

    இந்தியாவின் பெருமைகளைப் பறைசாற்றும் இதிகாசங்களுள் இராமாயணமும் ஒன்று. ஆதியில் இதனை வடமொழியில் வால்மீகி எழுத, ஏனையோர் அதனைத் தத்தம் மொழிகளில் யாத்தனர். அப்படி இதைத் தமிழ்படுத்தியவர் கம்பர். கம்பர் தமிழை பெருமைப்படுத்தினார்; மேன்மைப்படுத்தினார். தமிழ் நாட்டுப் பண்பாட்டிற்கு ஏற்ப பண்படுத்தினார்.

    தமிழ் இலக்கிய வரலாற்றில் சங்க இலக்கியம் தொடங்கி இராமாயணம் பற்றிய குறிப்புகள் பல கிடைத்துள்ளன.

    மக்கள் இடையே வழக்கத்தில் இருந்த சில இராமாயணக்கதை நிகழ்ச்சிகளைச் சங்க இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன. புறநானூற்றில் வரும் ஒரு குறிப்பு குரங்குகள் அணிந்த நகைகளைப் பற்றிய செய்தியை எடுத்துரைக்கிறது.

    குரங்குகள் அணிந்த நகைகள்

    மிகுந்த ஆற்றல் உடைய இராமன் சீதையுடன் காட்டிற்குச் சென்றான். அப்போது வலிமையுடைய இராவணன் சீதையைக் கவர்ந்து சென்றான். விண்வழியே கொண்டு செல்லும்போது அவள் அணிந்து இருந்த மதிப்புமிக்க நகைகளை ஒவ்வொன்றாய்க் கீழே போட்டுக்கொண்டே சென்றாள். அவற்றைக் கிட்கிந்தா பகுதியில் வசித்து வந்த குரங்குகள் கண்டெடுத்தனவாம். எந்த நகையை எந்த உறுப்பில் அணிந்துகொள்வது என்னும் அறிவு இல்லையாதலால் அவற்றை மாற்றி மாற்றி அணிந்து அழகு பார்த்துக் கொண்டன. இதைப்போல், இளஞ்சேட் சென்னி என்ற வள்ளலிடம் இசைக் கலைஞன் பரிசாகப் பெற்ற விலை மதிக்க முடியாத பொன் நகைகளை, அவனது வறுமைமிக்க உறவினரும் சுற்றத்தாரும், அணிந்துகொள்ளும் முறை தெரியாமல் உடம்பில் மாற்றி மாற்றி அணிந்து அழகு பார்த்துக் கொண்டனர். இது வறுமைத் துன்பத்தையே கண்டு வந்த கலைஞனுக்கு நினைக்க நினைக்கச் சிரிப்பைத் தந்தது என்று அவன் கூறுவதாக ஊன்பொதி பசுங்குடையார் என்ற புலவர் புறநானூற்றில் பாடியுள்ளார். இராமாயண நிகழ்ச்சி சங்கப் பாடலில் இவ்வாறு உவமையாகப் பாடப்பட்டுள்ளது. தெரிந்த ஒன்றைக் காட்டித் தெரியாததை விளக்குவதே உவமையின் முதன்மையான பயன்பாடு. எனவே இராமாயணக் கதை அன்று மக்களுக்கு நன்கு தெரிந்த ஒன்றாக இருந்திருக்கிறது என்பதை அறிய முடிகிறது.

    கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை

    வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை

    நிலம்சேர் மதர் அணி கண்ட குரங்கின்

    செம்முகப் பெருங்கிளை இழைப்பொலிந்து ஆங்கு

    மேலே குறிப்பிட்டதைப் போன்று அகநானூற்றுப் பாடல் ஒன்றிலும் இராமாயணக் காட்சி ஒன்று இடம் பெற்றுள்ளது.

    காதலில் ஈடுபட்டிருக்கும் தலைவி ஒருத்தியைப் பற்றி ஊரார் பழி தூற்றிக் கொண்டிருந்தனர். இதற்கு அலர் தூற்றுதல் என்று பெயர். ஒருநாள் அத்தலைவன் அத்தலைவியையே மணம் செய்து கொண்டான். அன்றே ஊரார் பழி தூற்றுவதை நிறுத்திக் கொண்டனர். இதனால் அத்தலைவியைப் பற்றி ஊர் முழுதும் ஒலித்துக் கொண்டிருந்த பழிப்பேச்சின் ஓசை உடனடியாக நின்றுவிட்டது. இதற்குப் புலவர் ஓர் உவமையை அழகாகக் கூறியுள்ளார். இலங்கைப் படையெடுப்பின்போது இராமன் ‘தொன்முதுசோடி’ எனப்படும் தனுஷ்கோடியில் தங்கி இருந்தான். அவ்வாறு தங்கி இருந்த இடம் பறவைகள் ஓயாது ஆரவாரம் செய்துகொண்டிருந்த ஆலமரத்தின் நிழல். இராமன் இலங்கைப் படையெடுப்பு தொடர்பாகத் தன் தோழர்களோடு கலந்து உரையாடிக் கொண்டிருந்தான். பறவைகளின் ஓசை தடங்கலாக இருந்தது. தன் கையை உயர்த்திக் காட்டினான். உடனே அத்தனை பறவைகளும் அமைதி கொண்டு அடங்கிவிட்டன. இதைப்போல், தலைவன் தலைவியை மணமுடித்துக் கைப்பிடித்த உடனேயே, அதுவரை ஊரெல்லாம் முழங்கிக் கொண்டிருந்த பழிப்பேச்சுகள் அடங்கின என்று தோழி கூறுவதாக அந்தப் பாடலில் புலவர் இராமாயண நிகழ்ச்சியை உவமையாகக் கையாண்டுள்ளார்.

    அப்பாடல் வரிகள் இதோ:

    வெல்வேல் கவுரியர் தொன்முது கோடி

    முழங்குஇரும் பௌவம் இரங்கு முன்துறை

    வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த

    பல்வீழ் ஆலம் போல

    ஒலிஅவிந் தன்றுஇவ் அழுங்கல் ஊரே.

    வாழ்க்கைத் தத்துவங்கள், தனி மனிதன் பின்பற்ற வேண்டிய குணநலன்களான தாய் சொல் மதித்தல், சகோதர ஒற்றுமைப் பேணல், பிறன் மனை நோக்காமை, நட்பின் மேன்மை எனப் பலவற்றை இந்நூல் நமக்கு எடுத்துக் காட்டுகிறது. விதி வலியதுதான் எனினும் அதனால் பாதிக்கப்படாத மன வலிமையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பன போன்ற வாழ்வியல் நுட்பங்களை இந்நூல் போதிக்கிறது. நடையில் நின்றுயர்ந்த இராமனைக் காண்கையில் உலகில் உள்ள ஆண்மக்கள் யாவருமே இராமனைப் போல் இருக்க வேணும் என்று மனம் விழைவதை மறுக்கவோ மறைக்கவோ இயலாது. மேலும் ஓர் அரசன் என்பவன் எப்படி இருக்க வேண்டும்? அவனுடைய ஆட்சி முறை எப்படித் திகழ வேண்டும் என்பதைப் படிக்கையில் நம் உள்ளம் ஏக்கத்தில் துடிக்கின்றது.

    தெய்வ நிலையில் இருந்து இறங்கி மானுட நிலையில் மனிதனாக வாழ்ந்த இராமனின் பண்பு நலன்களை விளக்கும் ஒப்பற்ற நூல். இந்நூலில் கம்பர் வலியுறுத்தும் நீதியும், அறனும் மக்கட் சமுதாயம் அனைத்திற்கும் பொதுவான ஒன்றாகும். கல்வியிற் பெரியவர் கம்பர் என்று ஆசிரியர் போற்றப்படுகின்றார். திருவரங்கத்தில் இந்நூலை அவர் அரங்கேற்றியதாக அறியப்படுகிறது. விருத்தம் எனும் பாவகையில் வித்தகர் கம்பர். கவிச்சக்கரவர்த்தி என்ற பெருமையைப் பெற்றவர் கம்பர்.

    சிறப்பு மிக்க இந்நூலை இனிய தமிழில் எளிய நடையில் மாணவ உலகு பண்படவும், பயன்பெறவும் தந்திருக்கிறோம். இது எங்கள் இருவரின் கன்னி முயற்சி.

    சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரையும், சென்னையும் இணைந்து இலக்கியப் பணியாற்றும் வகையில் கை கோர்த்துக் கொண்டு செயலாற்ற முன்வந்துள்ளோம். இக்கால அங்கவை சங்கவையாகப் பயணிக்க அடி எடுத்து வைத்துள்ள எங்களையும், இந்நூலையும் இலக்கிய உலகு வரவேற்கும் என்று நம்புகிறோம்.

    அன்புடன்

    முனைவர் ஜெயந்தி நாகராஜன் &

    முனைவர் பூ. பூங்கோதை

    கம்பன் காட்டும் ராமகாதை

    நமது பாரத நாட்டின் பெருமைகளைப் பறைசாற்றும் இதிகாசம் இராமாயணம். இரகு வம்ச அரசனான இராமனின் கதையினைக் கூறுவது இராமாயணம் ஆகும். கம்பர் எழுதியதால் கம்பஇராமாயணம் என்றானது.

    வாழ்க்கையின் தத்துவங்களை, ஒரு மனிதனுக்கு இருக்க வேண்டிய உன்னத பண்புகளை, சகோதர ஒற்றுமையை நட்பின் மேன்மையை, விதியின் வலிமையை, அரசரின் கடமைகளை, பெண்டிரின் ஒழுக்கத்தை எனப் பலவற்றை இது எடுத்தியம்புகிறது. வெறும் கதை சொல்லியாக இல்லாமல் நல்ல பல

    Enjoying the preview?
    Page 1 of 1