Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nee Pathi Naan Pathi Kanney
Nee Pathi Naan Pathi Kanney
Nee Pathi Naan Pathi Kanney
Ebook180 pages1 hour

Nee Pathi Naan Pathi Kanney

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வாழ்வியல் அறங்கள் பலவற்றைச் சங்க இலக்கியங்கள் எடுத்தோதுகின்றன. எட்டுத்தொகை நூல்களில் கலித்தொகையில் இடம் பெற்றுள்ள காதல் காட்சிகளை நாடக வடிவில் நீ பாதி நான் பாதி கண்ணே எனும் இந் நூல் எடுத்து இயம்புகிறது.

Languageதமிழ்
Release dateJun 25, 2022
ISBN6580154608397
Nee Pathi Naan Pathi Kanney

Read more from Dr. Jayanthi Nagarajan

Related to Nee Pathi Naan Pathi Kanney

Related ebooks

Reviews for Nee Pathi Naan Pathi Kanney

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nee Pathi Naan Pathi Kanney - Dr. Jayanthi Nagarajan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    நீ பாதி நான் பாதி கண்ணே

    [கலித்தொகை காட்டும் காதல் நாடகம்]

    Nee Pathi Naan Pathi Kanney

    [Kalithogai Kaattum Kadhal Naadagam]

    Author:

    முனைவர் ஜெயந்தி நாகராஜன்

    Dr. Jayanthi Nagarajan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/dr-jayanthi-nagarajan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    என்னுரை

    அணிந்துரை

    1 நீ பாதி நான் பாதி கண்ணே

    2. கண்கள் இரண்டால் என்னைக் கட்டி இழுத்தாய்

    3. நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா சொல்வேன் கண்ணா

    4 முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்ததே

    5 கன்னத்தில் என்னடி காயம்

    6 வாராயோ தோழி வாராயோ! மணப்பந்தல் காண வாராயோ!

    7 அடி ஏண்டி அசட்டுப் பெண்ணே உன் எண்ணத்தில் யாரடி கண்ணே

    8 அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே தோழியே

    9 என்னவென்று சொல்வதம்மா வஞ்சி உந்தன் பேரழகை

    10 அன்பே அன்பே என்னைக் கொல்லாதே!

    11. காதல் வந்திருச்சு ஆசையில் ஓடி வந்தேன்

    12. விழியாலே காதல் கதை பேசு

    13. அடி போடி பைத்தியக்காரி

    14 என் உயிர் நீதானே!

    15. சொன்னது நீ தானா சொல் சொல் என் உயிரே

    16. மூடிக் கிடந்த இமை இரண்டும் நில் நில் என்றது

    17.எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு

    18. என்னவோ நடக்குது மர்மமாய் இருக்குது

    19 படகு படகு காதல் படகு

    20. நெஞ்சே நெஞ்சே நெகிழ்ந்துவிடு.

    21. உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வே

    22. ஒரு நாடகத்தில் ஒரு நாயகி

    23. ஒரே பாடல் உன்னை அழைக்கும்

    24. ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்

    25. தூது செல்வதாரடி

    என்னுரை

    சங்க இலக்கியங்கள் என்பது பல நூற்றாண்டுகட்கு முன் எழுதப்பட்ட செவ்வியல் இலக்கியங்கள் ஆகும். சங்க இலக்கியங்களை அகம், புறம் என்று பகுப்பர். காதலைப் பற்றிப் பாடுபவை அகம் என்றும், காதல் அல்லாத பிற செய்திகளைப் பாடுவதைப் புறம் என்றும் அழைப்பர்.

    வாழ்வியல் அறங்கள் பலவற்றைச் சங்க இலக்கியங்கள் எடுத்தோதுகின்றன. எட்டுத்தொகை நூல்களில் கலித்தொகையில் இடம் பெற்றுள்ள காதல் காட்சிகளை நாடக வடிவில் நீ பாதி நான் பாதி கண்ணே எனும் இந் நூல் எடுத்து இயம்புகிறது.

    கடல் ஓடி மறுநாட் காலைவரை அலைகளுடன் போராடி மீன்கொணரும் தம் தலைவரின் வரவை நாளும் மிகுந்த பதட்டத்துடன் எதிர்பார்க்கும் தலைவியர் தம் காதலர் திரும்பும்வரை அவரை நினைந்து இரங்குவதே கலித்தொகை குறிப்படுகின்றது . பண்டைய தமிழரின் அகவாழ்வைப் படம் பிடித்துக் காட்டும் அகத்திணை நூலாகும். பாலை, குறிஞ்சி, மருதம் முல்லை, நெய்தல் ஆகிய ஐவகை நிலங்களிலும் வாழ்ந்த பண்டைத்தமிழரின் காதல் வாழ்வு பற்றிய செய்திகளை இந்நூல் கூறுகின்றது.

    மனித வாழ்வில் இல்லறம் முக்கிய பங்கு வகிக்கின்றது. இல்வாழ்வை அறநெறியுடன் வாழ்தல் தவநெறியைசிடச் சிறந்ததாகும். மனம் ஒன்றி வாழும் வாழ்க்கையே சிறந்த இல்லற வாழ்க்கை என்பதை எடுத்துக்காட்டும் வகையில் கலித்தொகை விளங்குகின்றது .

    பாலைக்கலி

    கலித்தொகையில் முதலில்இடம் பெறுவது பெருங்கடுங்கோவின் பாலைக்கலியாகும்.

    ஆறலை கள்வர் களவும் கொலைத் தொழிலும் புரியும் வறண்ட பாலைநிலத்தைக் கடந்து பொருள் தேடும் பொருட்டுச் செல்ல முயலும் தலைவனது பிரிவாற்றாமையால் வருந்தும் தலைவியின் நிலைப்பாடு, தலைவி சார்பாகத் தோழி தலைவனிடம் தலைவியின் வருத்தம்பற்றி எடுத்துக் கூறல், பிரிவின் வாடும் தலைவியைத் தேற்றல் இவை பாலைக்கலியின் உரிப்பொருளாகும். மேலும் காதலனுடன் உடன்போக்கில் ஈடுபட்ட தலைவியைத் தேடும் பெற்றோரின் அவல நிலைகளும் இங்கே காட்சிப்படுத்தப்படுகின்றன.

    பாலையின் கொடுமை, வெம்மை, வறட்சி போன்ற புறச்சூழல்களையும், தலைவியின் பிரிவுத்துயர், தலைவனின் பிரிவால் அவளுக்கேற்படும் கையறுநிலை உட்பட்ட அகச்சூழல்களையும் வர்ணனைகளுடன் ஆசிரியர் விளக்கியுள்ளார். பாலைக்கலி முப்பத்தைந்து பாடல்களைக் கொண்டது.

    குறிஞ்சிக்கலி

    கபிலர் பாடிய குறிஞ்சிக்கலி மலைப் பிரதேச மக்களின் காதல் வாழ்வை மையப்படுத்தி எழுதியதாகும். குறவன் , குறத்தி ,வேடுவன், வேட்டுவிச்சி போன்ற தலைவன் தலைவியரைச்சுற்றிப் பின்னப்பட்ட அழகிய காதற் குறிப்புகளைக் கொண்டு குறிஞ்சிக்கலி அமைந்துள்ளது. கிளி, மயில், மான்கள், புலி, கரடி, சிங்கம், யானையென்று பல சாதுவானதும், கொடியவையுமான காட்டுவிலங்குகள் வாழும் கானகத்தில் சந்தனம், அகில் போன்ற வாசனை மரங்கள் நிறைந்த சூழலில் தினைப் புனங்காக்கும் வஞ்சியருக்கும் வேட்டையாடும் வாலிபருக்குமிடையில் நிகழ்ந்த களவொழுக்கம் எனப் பலவற்றைச் சுவை பட இருபத்தியொன்பது கலிப்பாக்களடங்கிய அழகிய இலக்கியமாகக் கபிலர் படைத்துள்ளார்.

    மருதக்கலி

    மிகுந்த பொருள் வளமுடைய பெருநிலக்கிழார்கள் வாழ்ந்த பிரதேசம் மருதநிலமாகும். இல் வாழ்வை அறத்துடன் ஆற்றி வந்த அதே வேளை காமக் களியாட்டங்களும் நடைபெற்றது. எனவே பரத்தமை இம்மாந்தர் வாழ்வின் ஒரு பகுதியாயிற்று. இல்லங்களில் கற்பின் செல்வியர் கணவன் வரவை எதிர்பார்த்து வழிமேல் விழிவைத்துக் காத்திருக்க , கணிகையருடன் களியாட்டம் நடாத்திவிட்டுப் பொழுது புலரும் வேளையில் வீடுதிரும்பும் தலைவன்பால் தலைவியர் காட்டும் ஊடலே மருதக்கலியின் உரிப்பொருளாயிற்று.

    சிறியதோர் ஊடலுடன் கணவனின் இப்பரத்தமைப் பண்பை மன்னித்து அவனை இல்லத்தில் ஏற்றுக்கொள்ளும் அன்புடை நெஞ்சம் கொண்ட தலைவியரின் தாபங்களை அழகுறப் படைத்துள்ளார் மருதனிளநாகர். முப்பத்தைந்து அழகிய பாடல்கள் மருதக்கலியில் காணப்படுகின்றன.

    முல்லைக்கலி

    மந்தைகளை மேய்க்கும் ஆயர் குலத்தவர் பாடிகள் அமைத் து வாழ்ந்த இடம் முல்லையாகும். அதனால் இவர்கள் நாடோடிகளாகவே இருந்திருக்க வேண்டும்.

    இவர்களின் காதல் வாழ்வில் தலைவன் தலைவியரது திருமணம் நிறைவேறும் பொருட்டுக் காளையர் ஏறுதழுவித் தம்வீரத்தைக் காட்டவேண்டிய நிர்ப்பந்தம் காணப்பட்டதால் தலைவி தலைவனை அடைவதற்காகக் காத்திருக்கவேண்டிய நிலை உருவாகின்றது. அதனால் தலைவியர் தமக்குரிய தலைவன் அல்லது காதலன் வந்து ஏறு தழுவித் தம்மை வெற்றி கொள்ளும்வரை களவொழுக்கங்களில் ஈடுபடாது நிறைகாத்து இருத்தல் முல்லையின் உரிப்பொருளாகின்றது. காதலும் கூடலும் இம்மாந்தர் வாழ்விலே இல்லாமலும் இல்லை .இத்தகைய காதலரின் மனவுணர்ச்சிகளைச் சித்தரிக்கும் குறுங்கதைக் கூறுகளை பதினேழுபாடல்களில் புலவர் நல்லுருத்திரனார் தமிழுலகு மகிழத் தனது முல்லைக்கலியிற் தந்துள்ளார்.

    நெய்தற்கலி

    நெய்தல் நிலம் வாழ் மாந்தர் கடற்றொழில் செய்தனர். இரங்கலும், இரங்கல் நிமித்தமும் நெய்தற்கலியின் உரிப்பொருளாயமைகின்றது.

    காதலன் பிரிவால் கலக்கமுற்ற காதலியர் கடலை, காற்றை ,நிலவை, விலங்குகளை விளித்துத் தம் துயர்கூறல், பொருள்தேடி அன்றேல் போர்புரியக் கடல்மீது கலஞ் செலுத்திச் சென்ற கணவனுக்காக வருந்துதுல் போன்ற காட்சிகளைக் கொண்ட நெய்தற்கலியை முப்பத்திரண்டு பாடல்கள் கொண்ட சொற்சித்திரங்களாக வகுத்தவர் நல்லந்துவனார் ஆவர்.

    கலித்தொகையில், மனித வாழ்வைச் செம்மையுறச் செய்யும் பல அறக்கருத்துக்கள் பொதிந்து கிடக்கின்றன. சிறிய சிறிய சொற்றொடர்கள் மூலம் நல்ல பல வாழ்வியற் போதனைகள் எடுத்துக் கூறப்பட்டுள்ளன.

    அன்பு

    அன்பே வாழ்வின் ஆதாரமாகும். பொருளை விடவும் அன்பு சிறந்ததாகும். கலித்தொகையில் அன்புநெறி பலவாறு எடுத்துக் காட்டப்படுகிறது.:

    இந்நூலில் கூறப்படும், பண்புடமை, அன்பு, மனையறம், கற்புநெறி, ஈகை போன்ற வாழ்வியற் சிந்தனைகள் யாவும் மனித வாழ்வின் மேன்மைக்கு மிகமுக்கியமானவை.

    கலித்தொகைப் பாடல்களின் மூலம் அக்காலத்து ஐவகை நிலத்து மக்களின் வாழ்க்கை நிலைமைகள், ஒழுக்க வழக்கங்கள், நிகழ்ச்சிகள், மரபுகள் ஆகியனவற்றை நாம் அறிந்து கொள்ள முடிகிறது. இவற்றின் மூலம் நல்வாழ்வுக்குத் தேவையான போதனைகளைத் கலித்தொகை தந்துவிடுகிறது.

    கற்றறிந்தோர் ஏத்தும் கலி என்று சிறப்பிக்கப்படும் கலித்தொகை முழுவதுமே நாடகக் கூறுகளைத் தன்னக்த்தே கொண்டுள்ளது.

    நாடகம் கட்புலனுக்கும், செவிப் புலனுக்கும் இன்பம் தரக் கூடிய அற்புதக் கலையாகும். அவ் வகையில் அழகிய காதல் காட்சிகளைப் படிப்போர் நயந்து போற்றும் வண்ணம் எளிய நடையில் காட்சிப் படுத்தியுள்ளேன். தமிழ் பயிலும் மாணாக்கர்கள் படித்து இன்புறத்தக்க வகையில் இந் நூல் அமைந்துள்ளது .

    மேடையில் நடிப்பதற்கு ஏதுவாகவும் இந் நூல் விளங்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. தமிழ் கூறும் நல்லுலகம் எனது இந் நூலை வரவேற்கும் என்ற நம்பிக்கையுடன் நீ பாதி நான் பாதி கண்ணே எனும் இந் நூல் உங்கள் கைகளில்.

    இந் நூலுக்கு அணிந்துரை வழங்கிய முனைவர் பாரதராஜா

    [ தமிழ்ப்பேராசிரியர் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம். ராமாபுரம் சென்னை ]

    அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.

    அன்புடன்

    முனைவர் ஜெயந்தி நாகராஜன்

    ஊரப்பாக்கம். சென்னை 603210

    அணிந்துரை

    முத்தமிழ் வித்தகி ‘ முனைவர் ஜெயந்தி நாகராஜன் அவர்கள் தமிழுக்காகவும்,கல்விக்காகவும், குழந்தைகள் நலனுக்காகவும் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட தமிழ்க் கற்பகத்தரு ". எளிய நடையில். இனிய முறையில் யாவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் இயம்பிடும் இலக்கியப் படைப்பாளிர் ; உரையாளர், கல்வியாளர் , பாடகர் , நடிகர் எனப் பன்முக ஆற்றல் கொண்ட உலாவரும் முத்தமிழ் நிலா .

    களிப்புத்தரும் கலித்தொகை இன்று வரை உரை மற்றும் பாடல் வடிவில் பவனி வந்ததை அவனியோர் அறிந்து போற்றும், நடித்துக் களிக்கும் நாடக வடிவில் நல்லாக்கம் செய்து, சிலப்பதிகாரத்தைப்போல,கலித்தொகையை முத்தமிழ்ச் சித்திரமாக்கியுள்ளார். தமிழ்ப் படைப்புலக வரலாற்றில் அம்மா நிலைத்து நிற்பார் என்பதில் ஐயமில்லை.

    கடினமான பாடல்களைக்கூட எளிய , நாடக வடிவிலான உரையாடல் மூலம் பொருள் புரியும் வண்ணம் ஆக்கி, தம் எண்ணக் களஞ்சியத்திற்கு மேலும் வளம் சேர்த்துள்ளார்.

    பாலைக்கலி, குறிஞ்சிக்கலி, மருதக்கலி, முல்லைக்கலி , நெய்தற்கலி என ஐந்திணைகளையும் ஐம்பூதங்களாக [ பஞ்சாமிர்தம் ] குழைத்து

    அன்பை முன்னிலைப்படுத்திஅழகுறப் படைத்துள்ளார். இடையிடையே

    நகைச்சுவை உணர்வுகள் ததும்பி வழிகின்றன. தலைவன், தலைவியின் அன்பு நிறைந்த காதற்காட்சிகள் படங்களோடும், திரைப்படப் பாடல்களைப் பாடல்களுக்கேற்றவாறும், அதன் முழுப் பொருளும் உள்ளடக்கி நிற்கும் வகையிலான தலைப்புகளும் தந்திருப்பது வியப்பின் விளிம்பிலே கொண்டு நிறுத்துகின்றன.

    நீபாதி நான் பாதி கண்ணே, நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா சொல்வேன் கண்ணா , முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்ததே என்ற தலைப்புகளே கதைகளை விளக்கிவிடுகின்றன.

    ஆற்றங்கரை,

    Enjoying the preview?
    Page 1 of 1