Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Konja Neram Konja Neram
Konja Neram Konja Neram
Konja Neram Konja Neram
Ebook135 pages46 minutes

Konja Neram Konja Neram

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சங்க இலக்கியங்கள் என்பது பல நூற்றாண்டுகட்கு முன் எழுதப்பட்ட செவ்வியல் இலக்கியங்கள் ஆகும். சங்க இலக்கியங்களை அகம், புறம் என்று பகுப்பர். காதலைப் பற்றிப் பாடுபவை அகம் என்றும், காதல் அல்லாத பிற செய்திகளைப் பாடுவதைப் புறம் என்றும் அழைப்பர்.

வாழ்வியல் அறங்கள் பலவற்றைச் சங்க இலக்கியங்கள் எடுத்தோதுகின்றன. எட்டுத்தொகை நூல்களில் ஒன்று குறுந்தொகை. மனித வாழ்வில் இல்லறம் முக்கிய பங்கு வகிக்கின்றது. இல்வாழ்வை அறநெறியுடன் வாழ்தல் தவநெறியைசிடச் சிறந்ததாகும். மனம் ஒன்றி வாழும் வாழ்க்கையே சிறந்த இல்லற வாழ்க்கை என்பதை எடுத்துக்காட்டும் வகையில் குறுந்தொகை விளங்குகிறது.

அக ஒழுக்கம் பற்றி இந் நூல் விரிவாகப் பேசுகிறது. அக ஒழுக்கம் என்பது என்னவென்றால் உள்ளத்திலே எழுகின்ற உணர்ச்சியே. ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால் அவர்கள் உள்ளத்தில் காதல் உணர்வு பொங்கும்; இந் நூலில் அவ் வுணர்ச்சி உயிர்ப்புடனும், துடிப்புடனும் காட்டப்படுகிறது. காதலன், காதலி, தோழி, செவிலி, பாங்கன்,பாணன், பரத்தை ஆகிய ஏழு விதமான பாத்திரங்களை இந் நூலில் காண்கிறோம். தொடர் எழு வகை ஸ்வரங்கள் என்பதைப் போல் இவர்கள் அழகிய இசையினை மீட்டுகின்றனர். நான்கே வரிகள் இல்லை இல்லை இரண்டே வரிகளில் பல அற்புதமான உவமைகளைக் கொண்டு நம்மை வியக்க வைக்கின்றன.

Languageதமிழ்
Release dateJun 20, 2022
ISBN6580154608399
Konja Neram Konja Neram

Read more from Dr. Jayanthi Nagarajan

Related to Konja Neram Konja Neram

Related ebooks

Reviews for Konja Neram Konja Neram

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Konja Neram Konja Neram - Dr. Jayanthi Nagarajan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்

    Konja Neram Konja Neram

    Author:

    முனைவர் ஜெயந்தி நாகராஜன்

    Dr. Jayanthi Nagarajan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/dr-jayanthi-nagarajan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அணிந்துரை

    1 குறிஞ்சியிலே பூ மலர்ந்து குலுங்குதடி தன்னாலே

    2. நல்ல பெண்மணி இவள் நல்ல பெண்மணி

    3 மயங்குகிறாள் ஒரு மாது மனதுக்கும் செயலுக்கும் உறவுமில்லாது

    4. ராசாவே உன்னை நம்பி இந்த ரோசாப் பூ இருக்குதுங்க

    5. நாளாம் நாளாம் திருநாளாம் நம்பிக்கும் நங்கைக்கும் மண நாளாம்

    6. என்னோடு நீ இருந்தால் உன்னோடு நான் இருப்பேன்

    7 கண்ணில் என்ன கங்கை நதி. சொல்லம்மா.

    8 பொத்தி வைச்ச மல்லிகை மொட்டு

    9. மாறியது நெஞ்சம் மாற்றியது யாரோ?

    10 இதழில் கதை எழுதும் நேரம் இது

    11 என் மனம் என்னையன்றி யாருக்குத் தெரியும்

    12. என் புருசன் தான் எனக்கு மட்டுந்தான்

    13. உன் பார்வை தூண்டிலா

    14. இதய வீணை தூங்கும் போது

    15. உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே

    16. சத்தியம் இது சத்தியம்

    17. வளையோசை கலகலவென

    18. கண்டு பிடிச்சேன் கண்டு பிடிச்சேன் காதல் நோயைக் கண்டு பிடிச்சேன்.

    19. மன்மத ராசா கன்னி மனசைக் கிள்ளாதே

    20 நீ போகும் இடம் : எல்லாம் நானும் வருவேன்

    21. என் அருகில் நீ இருந்தால்

    22 மானே தேனே கட்டிப்பிடி

    23. கா கா கா

    24. அந்த மான் இந்தச் சொந்த மான் பக்கம் வந்துதான் சிந்து பாடும்

    25. கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்

    அணிந்துரை

    முனைவர் ஜெயந்தி நாகராஜன் அவர்களின் கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் (குறுந்தொகை காட்டும் காதல் நாடகம்) எனும் நூலினை முழுமையாகப்படித்தறிந்தேன்.

    படித்துணர்ந்தேன். முதற்கண் என் இனிய வாழ்த்தினையும், பாராட்டினையும் உரித்தாக்கி மகிழ்கிறேன்.

    நாலடி முதல் எட்டடி வரை உள்ள ஐந்திணை (குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை)தழுவிய 400 பாக்களைக் கொண்டது குறுந்தொகை. 205 புலவர்கள் பாடியுள்ளனர். இந்நூலைத் தொகுத்தவர் பூரிக்கோ. உரையாசிரியர்களால் மிகுதியாக மேற்கோள் காட்டி எடுத்தாளப் பெற்ற ஆசிரியப் பாவினால் ஆகிய சங்க நூல் குறுந்தொகை.

    தலைவன் : , தலைவி, தலைவியின் தாயாகிய நற்றாய், தோழி தோழியின் தாயாகிய செவிலி என நிறைவான அக மாந்தர்கள், நிறைவான வாழ்வியல் விழுமியங்களை உள்ளடக்கிய நூல் நல்ல குறுந்தொகை

    ஒவ்வொரு பாடலும் ஒரு சிறு நாடகம். இல் வாழ்க்கை அக நெறியினை இந் நூலில் ஆசிரியர் முனைவர் ஜெயந்தி நாகராஜன் அவர்கள் மிக எளிய நடையில் புனைந்தளித்துள்ளார். நாடகமாக ஆக்கியுள்ளார்.

    காட்சி அக மாந்தர்கள், மாந்தர்களின் உரையாடல், நிறைவாகக் குறுந்தொகை பாடல் என படைத்தளித்துள்ள பாங்கு பாராட்டத்தக்கது.

    பாடலுக்கு ஏற்ற தலைப்பு, அழகிய மனம் கவரும் வண்ணப் படங்கள் என இந்நூலினை மிகச் சிறப்பாக யாத்து அளித்துள்ளார் நூலாசிரியர்.

    குறுந்தொகைப் பாடலைப் பாடிய புலவர்கள், பாடப் பெற்றவர்கள், பூக்கள், மரங்கள், பறை, யாழின் படங்கள் என அனைத்தையும் முறையாக இன் நூலினுள் பதிவு செய்துள்ளார் ஆசிரியர்.

    அன்பின் இரு வகைகளைப் படம் பிடித்துக் காட்டியுள்ள வேம்பின் பைங்காய் (பாடல் எண் 196)எனத் தொடங்கும் குறுந்தொகை ப் பாடலின் நாடகப் பாங்கு என்னை மிக மிக ஈர்த்தது.

    தோழியே உன் பெயரையே என் குழந்தைக்கு வைக்கிறேன் என்று தலைவி கூறுகிறாள். காதலின் போது தலைவி அளித்த வேப்பங்காயை வெல்லக் கட்டி என்று கூறிய தலைவன் : திருமணத்திற்குப் பிறகு தலைவி தந்த அருவி நீரை உவர்க்கும் என்று கூறினான்.

    உடன் தோழி, உன் அன்பின் தன்மை மாறுபட்டது என்று உரைத்து தலைவனைத் திருத்திய பான்மை என அனைத்தையும் இந்நூலாசிரியர் எளிய நடையில் நாடக உரையாடல் வழி புனைந்து அளித்துள்ள பாங்கு அருமை.

    திருமணத்திற்கு முன் உன் பேச்சு தேன்போல் இனித்தது. திருமணத்துக்குப்பின் உன் பேச்சு தேள் போல் அல்லவா கொட்டுகிறது என்ற எண்ணத்தை மாற்றி அன்பின் வழிப்படும் நட்பு இதயத்தைச் சிறுசிறு அழகிய சொற்களால் கற்பனை செய்து எழுதியுள்ளார் ஆசிரியர் முனைவர் ஜெயந்தி நாகராஜன் அவர்கள்.

    இந்நூல் ஆசிரியர் முனைவர் ஜெயந்தி நாகராஜன் அவர்களின் புராண நாடகங்கள் (பல தன்னாட்சிக் கல்லூரிகளில் பாடநூல்) இலக்கிய நாடகங்கள் என்பன போன்ற நூல்களைப் பலமுறை படித்துள்ளேன் மகிழ்ந்தேன். அதேபோல இந்நூலினையும் படித்தேன். மகிழ்ந்தேன். இன்புற்றேன். சுவைத்தேன். மனம் நெகிழ்ந்தேன்.

    முனைவர் ச. ஈஸ்வரன்

    இணைப் பேராசிரியர் -

    தலைவர் தமிழ்த் துறை [தன்னாட்சி]

    தேசியக் கல்லூரி

    திருச்சிராப்பள்ளி & 620001

    நன்றி

    கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்

    [குறுந்தொகை காட்டும் காதல் நாடகம்]

    சங்க இலக்கியங்கள் என்பது பல நூற்றாண்டுகட்கு முன் எழுதப்பட்ட செவ்வியல் இலக்கியங்கள் ஆகும். சங்க இலக்கியங்களை அகம், புறம் என்று பகுப்பர். காதலைப் பற்றிப் பாடுபவை அகம் என்றும், காதல் அல்லாத பிற செய்திகளைப் பாடுவதைப் புறம் என்றும் அழைப்பர்.

    வாழ்வியல் அறங்கள் பலவற்றைச் சங்க இலக்கியங்கள் எடுத்தோதுகின்றன. எட்டுத்தொகை நூல்களில் ஒன்று குறுந்தொகை. இது ‘நல்ல’ என்ற அடைமொழி பெற்றுச் சிறந்து விளங்குகிறது. இந்நூல் தமிழர்களிள் வாழ்வியலைப் படம் பிடிக்கும் பெட்டகமாக விளங்குகிறது..

    மனித வாழ்வில் இல்லறம் முக்கிய பங்கு வகிக்கின்றது. இல்வாழ்வை அறநெறியுடன் வாழ்தல் தவநெறியைசிடச் சிறந்ததாகும். மனம் ஒன்றி வாழும் வாழ்க்கையே சிறந்த இல்லற வாழ்க்கை என்பதை எடுத்துக்காட்டும் வகையில் குறுந்தொகை விளங்குகிறது.

    அக ஒழுக்கம் பற்றி இந் நூல் விரிவாகப் பேசுகிறது. அக ஒழுக்கம் என்பது என்னவென்றால் உள்ளத்திலே எழுகின்ற உணர்ச்சியே.

    ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால் அவர்கள் உள்ளத்தில் காதல் உணர்வு பொங்கும்; இந் நூலில் அவ் வுணர்ச்சி உயிர்ப்புடனும், துடிப்புடனும் காட்டப்படுகிறது. காதலன், காதலி, தோழி, செவிலி, பாங்கன்,பாணன், பரத்தை ஆகிய ஏழு விதமான பாத்திரங்களை இந் நூலில் காண்கிறோம். தொடர் எழு வகை ஸ்வரங்கள் என்பதைப் போல் இவர்கள் அழகிய இசையினை மீட்டுகின்றனர். நான்கே வரிகள் இல்லை இல்லை இரண்டே வரிகளில் பல அற்புதமான உவமைகளைக் கொண்டு நம்மை வியக்க வைக்கின்றன.

    இல் வாழ்வின் சிறப்பு

    சங்க கால

    Enjoying the preview?
    Page 1 of 1