Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kalkiyin Ponniyin Selvan Kathai Surukkam
Kalkiyin Ponniyin Selvan Kathai Surukkam
Kalkiyin Ponniyin Selvan Kathai Surukkam
Ebook195 pages1 hour

Kalkiyin Ponniyin Selvan Kathai Surukkam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

காற்றை அடைத்துப் பையில் நிரப்ப முடியுமா? மிகப் பெரிய பிரம்மாண்டத்தைச் சுருக்கத்தான் முடியுமா? முயன்றிருக்கிறேன்.

கல்கியின் மிகப்பெரிய பிரம்மாண்ட புதினமான பொன்னியின் செல்வன் காலத்தால் அழியாத காவியச் செல்வம். மக்கள் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்த இந்நாவலை இன்றைய இளந்தலைமுறையினரும் படித்து மகிழ வேண்டியே இதனைச் சுருக்கித் தந்துள்ளோம்.

Languageதமிழ்
Release dateApr 15, 2023
ISBN6580154609782
Kalkiyin Ponniyin Selvan Kathai Surukkam

Read more from Dr. Jayanthi Nagarajan

Related to Kalkiyin Ponniyin Selvan Kathai Surukkam

Related ebooks

Related categories

Reviews for Kalkiyin Ponniyin Selvan Kathai Surukkam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kalkiyin Ponniyin Selvan Kathai Surukkam - Dr. Jayanthi Nagarajan

    A picture containing icon Description automatically generated

    https://www.pustaka.co.in

    கல்கியின் பொன்னியின் செல்வன் கதைச் சுருக்கம்

    (ஐந்து பாகங்கள்)

    Kalkiyin Ponniyin Selvan Kathai Surukkam

    Author:

    முனைவர் ஜெயந்தி நாகராஜன்

    Dr. Jayanthi Nagarajan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/dr-jayanthi-nagarajan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    என்னுரை

    முதல் பாகம்

    புது வெள்ளம்

    பாகம் 2

    சுழற்காற்று

    பாகம் 3

    கொலை வாள்

    பாகம் 4

    மணி மகுடம்

    பாகம் 5

    தியாக சிகரம்

    முடிவுரை

    நாவலில் இடம் பெற்ற முக்கிய கதாபாத்திரங்கள்

    என்னுரை

    அக்காலத்தில் தமிழகத்தை மூவேந்தர்கள் ஆண்டு வந்தனர். சோழப் பேரரசரது காலத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளை ஆசிரியர் கல்கி அவர்கள் கற்பனை கலந்து மிகப் பிரமாண்டமான நாவலாகப் படைத்துள்ளார்.

    பொன்னியின் புதல்வர் என்று போற்றப்படும் கல்கி அவர்கள் 1950ஆம் ஆண்டில் தொடங்கி ஏறக்குறைய ஐந்து ஆண்டுகளாக மெகா தொடராக கல்கி வார இதழில் எழுதிய பொன்னியின் செல்வன் எனும் வரலாற்று நாவல் வாசகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுத்தந்தது. தொடர் வெளிவந்த அக்காலத்தில் வாசகர்கள் போட்டி போட்டுக் கொண்டு படித்து மகிழ்ந்தனர் என்பதை அறியும்போது இந்நாவலின் வீச்சு நமக்குப் புரிகிறது.

    தொடர்ந்து பல பதிப்புக்களைக் கண்டு இன்றும் அது வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது என்றால் அது கல்கி அவர்களின் எழுத்தாற்றலுக்குக் கிடைத்த வெற்றி என்றே சொல்லலாம்.

    உண்மையும், கற்பனையும் கலந்து எழுதப்பட்ட இப்புதினம் பல்லாயிரக்கணக்கான வாசகர்களைக் கட்டி இழுத்தது.

    ஆழ்வார்க்கடியான் என்னும் பாத்திரம் கற்பனைப் பாத்திரம் என்று நம்பமுடியவில்லை. இன்னும் நாம் எதிர்பார்க்காத பல கற்பனைப் பாத்திரங்களும் இந்நாவலில் உண்டு.

    கி.பி. 1000 ஆம் ஆண்டுகளில் இருந்த சோழப்பேரரசை மையமாகக் கொண்டு புனையப்பட்ட இப்புதினத்தில் ஒரு வருடத்திற்குக் குறைவான நாட்களில் நடைபெற்ற சம்பவங்களே இடம் பெற்றுள்ளன. அதுவே இத்துணைப் பக்கங்கள் என்று எண்ணும்போது ஆச்சர்யமளிக்கிறது.

    அறிவியல் வளர்ச்சி மிகுந்த இக்காலத்தில் 2000 பக்கங்கள் எழுதுவது என்பது வியக்க வைக்கும் விஷயமல்ல. ஆனால் கையெழுத்துப் பிரதியாக எழுதும்போது 2000 பக்கங்களுக்கும் மேல் எழுத வேண்டும். அதனை எண்ணும்போதே எண்ணிக்கை மலைப்பைத் தருகிறது. இதுவே கல்கியின் அர்ப்பணிப்புக்கு சாட்சியாக உள்ளது.

    இந்த நாவலில் 50க்கும் மேற்பட்ட கதாபாத்திரங்கள் இடம் பெற்றுள்ளனர். கதைக் களங்களும், வர்ணனைகளும், செதுக்கப்பட்ட பாத்திரப் படைப்புக்களும் நாவலின் வெற்றிக்குப் பெரிதும் உதவுகின்றன.

    இந்த நாவலில் காணப்படும் பாத்திரங்களான வந்தியத்தேவன், குந்தவை, வானதி, அருள்மொழிவர்மர், பழுவேட்டரையர், நந்தினி, குடந்தை ஜோதிடர் ஆகிய கதாபாத்திரங்கள் வாசகர்கள் மனதில் நீண்ட காலமாக வாழ்ந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    இந்தப் பிரம்மாண்டமான படைப்பைத் தமிழில் திரைப்படமாக உருவாக்க எம்ஜிஆர், மற்றும் கமல் உட்படப் பலரும் முயன்றும் முயற்சி கைகூடவில்லை. ஆனால் அண்மையில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் மணிரத்தினம் அவர்களின் இயக்கத்தில் படம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதைப் பார்க்கையில் காலம் கடந்தும் கல்கியின் புகழ் நிற்பதை உணர முடிகிறது.

    இந்நாவலில் முடிக்கப்படாத செய்திகள் சில உள்ளன என்றே ஆசிரியர் குறிப்பிடுகிறார். சில பாத்திரங்களின் பிந்தைய நிலை பற்றி வாசகர்கள் அறிய முடியவில்லை.

    சின்னப் பழுவேட்டரையர் உயிர் தப்பினாரா? ஆழ்வார்க்கடியான், நந்தினி இவர்கள் என்ன ஆனார்கள்? வந்தியத்தேவனுக்கும், குந்தவைக்கும் திருமணம் நடந்ததா? என்றெல்லாம் தெரியவில்லை என வாசகர்கள் குறிப்பிட்டதாக ஆசிரியர் தமது முடிவுரையிலேயே குறிப்பிட்டுள்ளார்.

    ஆனால் கல்கி அவர்கள் கதையை விறுவிறுப்புடன் கொண்டு சென்ற பாங்கு, வர்ணனைகள், உரையாடலின் வீச்சு, பாத்திரங்களின் ஆளுமை என அனைத்துமே இந்நாவலில் முக்கிய இடத்தைப் பெற்று வாசகர்களின் மகத்தான ஆதரவைப் பெறக் காரணிகளாக அமைந்துள்ளன.

    இந்த நவீன யுகம் அவசர கதியில் இயங்கி வருகிறது. வாசிக்கும் பழக்கமும் அருகி வருகிறது. முகநூல், புலனம் என மக்கள் அதியிலேயே மூழ்கிக் கிடக்கும் இன்றைய காலகட்டத்தில் புத்தகங்களை வாசிக்கும் பழக்கமும் அருகிக் கொண்டே வருவது கவலைக்குரியது. வாசிப்புப் பழக்கத்தை மீட்டெடுக்கப் பலரும் பலவித முயற்சிகளை எடுத்து வருவதும் பாராட்டத்தக்கதே.

    அவ்வகையில் மிகப்பெரிய இந்நாவலைப் பொறுமையாகப் படித்து மகிழ்வது என்பது மிகப்பெரிய கேள்விக்குறியே. இதனைக் கருத்திற்கொண்டே ஓர் எண்ணம் உதயமானது.

    இந்த நாவலை அனைவைரும் படித்து மகிழ வேண்டும் என்ற தாக்கமே இதனைச் சுருக்கி எழுதத் தூண்டியது என்று கூறலாம். இதனைப் படித்து மகிழ்ந்த பின் முழு நாவலையும் பொறுமையாகப் படிக்க, மலரைத் தேடி வரும் வண்டினைப் போல் வாசகர்கள் வருவது திண்ணம்.

    இத்தகையச் சிறப்பினைப் பெற்ற இந்நாவலை அனைவரும் அறிந்து கொள்ள கூடிய வகையிலே எளிமையான வடிவில் சுருக்கித் தந்துள்ளேன்.

    இன்னும் இந்நாவலை இளந்தலைமுறையினரும் அறிந்து கொள்ள ஏதுவாகக் கதையின் போக்கிற்கு எவ்விதக் குந்தகமும் ஏற்படாத வண்ணம் அதன் அழகு கெடாத வண்ணம் முக்கிய நிகழ்வுகளை மனத்திற்கொண்டு உருவாக்கியுள்ளேன்.

    அனைவரும் இதனைப் படித்துப் பயன் பெறவேண்டும் எனும் நோக்கில் நல்முறையில் பதிப்பித்த பதிப்பகத்தார்க்கு என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    காற்றை அடைத்துப் பையில் நிரப்ப முடியுமா? மிகப்பெரிய பிரம்மாண்டத்தைச் சுருக்கத்தான் முடியுமா? முயன்றிருக்கிறேன். படித்துவிட்டுத் தங்களின் மேலான கருத்தினைச் சொல்லுங்கள்.

    அன்புடன்,

    முனைவர் ஜெயந்தி நாகராஜன்

    முதல் பாகம்

    புது வெள்ளம்

    கி.பி 980 காலகட்டத்தில் சோழப் பேரரசு குமரி முனையிலிருந்து வடபெண்ணைக்கரை வரை விரிந்து பரவியிருந்தது. சுந்தர சோழர் என்றழைக்கப்பட்ட இரண்டாம் பராந்தகச் சோழன் அந்த நாட்டைச் சிறப்புற ஆண்டு வந்தார். கும்பகோணத்திற்கு அருகில் உள்ளப் பழையாறை எனும் பகுதி சோழ நாட்டின் தலைநகராக இருந்து வந்தது. ஆனால் இவரது காலத்தில் தஞ்சாவூர் தலைநகராக மாற்றம் பெற்றது.

    சுந்தரசோழ சக்கரவர்த்தி திருக்கோவலூர் மலையமான் மகளான வானமா தேவியை மணம் செய்து கொண்டு ஆண்டு வந்தார். மூத்த மகன் ஆதித்த கரிகாலன். அடுத்து குந்தவையும், கடைசியாக அருள்மொழி வர்மனும் அவரது வாரிசுகள். அருள்மொழி வர்மனே இராஜராஜ சோழன் என்று பிற்காலத்தில் புகழப்பட்டார்.

    தொண்டை நாட்டுக்கும், சோழ நாட்டுக்கும் இடையே திருமுனைப்பாடி நாட்டின் தென் பகுதியில் தில்லை சிதம்பரம் இருக்கிறது. அதிலிருந்து சற்றுத் தொலைவில் வீரநாராயண ஏரி என்னும் மிகப்பெரிய ஏரி இருக்கிறது.

    அன்று ஆடிப்பெருக்கு. மக்கள் வெள்ளம் திரண்டு காணப்பட்டது. ஆண்களும், பெண்களுமாகத் தங்கள் மன்னர்களைப் போற்றிப் பாடி மகிழ்கின்றனர்.

    அப்போது குதிரையின் குளம்பொலி கேட்கிறது. அதில் ஓர் இளைஞன் மிடுக்காக அமர்ந்து விரைந்து வந்து கொண்டிருந்தான். யார் அந்த இளைஞன்? இந்நாவல் முழுதும் அவன் இடம் பெறுகிறான். நம் மனதிலும் அவன் இடம் பெறுவான்.

    அவன் தமிழரின் வீரர் குலச் சரிதத்தில் இடம் பெற்ற வாணர்குல வீரன் வந்தியத்தேவன். அவனது குதிரை மிகவும் களைப்பாகக் காணப்பட்டதால் அதற்கு ஓய்வு கொடுக்க விரும்பினான். அவனும் சற்று ஓய்வு எடுத்தான். அந்த ஏரியின் அழகைத் தன் கண்களால் பருகினான்.

    அச்சமயத்தில் அந்த நீர்ப்பரப்பில் பல படகுகள் வந்தன. அவை வெண் சிறகுகளை விரித்துக் கொண்டு நீரில் மிதந்து வரும் அன்னப் பறவைகளைப் போல வந்ததைக் கண்ட மக்கள் கூட்டம் உடனே வேகமாக அங்கிருந்து செல்ல முயன்றனர்.

    அப்படகில் வந்த வீரர்கள் அங்கிருந்த பலரை விரட்டிக் கொண்டிருந்த காட்சியை வந்தியத்தேவன் கண்டான்.

    ம். போங்கள். சீக்கிரம் என்று அதட்டிய வீரர்கள் சுற்றும் முற்றும் பார்த்தபடி சென்றனர்.

    படகில் யார் வருவது? ஏனிந்த ஆர்ப்பாட்டம் என்பது புரியாத வந்தியத்தேவன் அதன் காரணத்தை அறிய விரும்பினான். அருகில் இருந்த ஒரு முதியவரிடம் இது பற்றிக் கேட்க, அவரோ அப்படகுகளில் ஒரு படகில் என்ன கொடி பறக்கிறது என்று எதிர் கேள்வி கேட்டார்.

    பனைக் கொடி என்றதும் அக்கொடி யாருடைய கொடி என்பது உனக்குத் தெரியாதா? அது பழுவேட்டரையார் கொடி என்றார்.

    என்ன! பழுவேட்டரையாரா வருகிறார்?

    அவர் சோழ நாட்டின் மிகப்பெரிய அதிகாரி. அரசருக்கு அடுத்து என்று கூடச் சொல்லலாம்.

    ஆஹா! அவரா வருகிறார்? என்று வியந்த வந்தியத்தேவன் அவரைப் பார்க்க விரும்பினான்.

    ஆனால் அவன் வந்தது இதைவிட முக்கியமான காரியத்திற்கு அல்லவா? அப்படி என்ன முக்கியமான காரியம்? அவன் வந்ததே அதற்குத்தானே!

    காஞ்சியில் ஆண்ட இளவரசர் ஆதித்த கரிகாலன் அவனிடம் அந்தரங்க ஓலைகளைக் கொடுத்து அவற்றை அவனுடைய தந்தை சுந்தர சோழரிடமும், அவனது சகோதரி குந்தவை பிராட்டியிடமும் கொடுக்கச் சொல்லி அல்லவா அனுப்பிவைத்தான். மேலும் வந்தியத்தேவா! வழியில் நீ யாரிடமும் பேசக்கூடாது; சண்டையும் போடக் கூடாது எனப் படித்து படித்துச் சொல்லி அனுப்பியதால் அவனும் மிகவும் எச்சரிக்கையுடனே இருந்தான் எனலாம்.

    எனவே பழுவேட்டரையரைப் பார்க்க வேண்டும் என்ற தன் விருப்பத்தை அடக்கிக் கொண்டான். அன்று இரவு தன்னுடைய நண்பன் கடம்பூர் சம்புவராயர் புதல்வன் கந்தன்மாறனின் அரண்மனையில் தங்க வேண்டும் என்று எண்ணியபடியே அவன் விண்ணகரக் கோவிலை நோக்கி நடந்தான்.

    கோவில் அருகில் மக்கள் கூட்டமாகக் கூடி இருந்ததைக் கண்டான். அங்கு மூன்று பேர் விவாதித்துக் கொண்டிருந்தனர். அவர்களுள் ஒருவர் சைவ மதத்தைச் சார்ந்தவர். மற்றொருவர் வைணவ மதத்தை சார்ந்தவர். மூன்றாமவர் வேதாந்தி.

    சைவமதத்தைச் சார்ந்தவர் சைவமே பெரிது என விவாதிக்க அவரை ஆதரித்து ஒரு கூட்டம் கர ஒலி எழுப்பியது. வைணவரோ திருமாலே உயர்ந்தவர் என்று பேச அவருக்குப் பலர் கர ஒலி எழுப்பினர். வேதாந்தியோ இருவரது கருத்துக்களையும் மறுத்துப் பேசலானார்.

    இந்த இடத்தில் கல்கி அவர்களின் சொல்லாடல் அருமை.

    விவாதம் காரசாரமாகிப்போனதை வந்தியத்தேவனும் ஆவலோடு கவனித்தான்.

    வைணவமதத்தை ஆதரித்துப் பேசியவன் ஆழ்வார்க்கடியான் என்பவன் ஆவான். அவன் தன் தடியை எடுக்கத் தொடங்கியதைக் கண்ட வேதாந்தி ஓடலானார்.

    அப்போது வந்தியத்தேவன் இடையில் புகுந்து நீங்கள் இருவரும் ஏன் இப்படி அடித்துக் கொள்கிறீர்கள்? என்று சமாதானம் பேசலானான்.

    அதற்குள் பழுவேட்டரையாரின் ஆட்களுள் ஒருவன் வந்தியத்தேவனின் குதிரையைச் சீண்ட அது வேகமாக ஓடலானது.

    அப்போது சிவிகையில் இருந்து ஒரு பெண் திரையை விலக்கிப் பார்த்ததை வந்தியத்தேவனும் பார்த்தான்.

    அப்பப்பா! முகமா! அல்லது முழு நிலவா? அடுத்த நொடி அவள் திடீரென அலறித் திரையை மூடிக் கொண்டாள்.

    Enjoying the preview?
    Page 1 of 1