Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vettri Thilagam
Vettri Thilagam
Vettri Thilagam
Ebook147 pages52 minutes

Vettri Thilagam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பெரும் வல்லரசு பாண்டிய நாடு. துணிவு மிகுந்த விடுதலை விரும்பி அதியமான். விரோதி நாட்டவனை இதயச் சிறையிலிடுகிறாள் அதியமான் மகள். காதல் வயப்பட்டு பாண்டிய தூதன் தன் கடமையை இழந்துவிடுவானா? தன் மகளைக் காப்பாற்றியவன், தன் மகளுக்குப் போர் முறைகளைக் கற்றுத்தரும் ஆசானாக இருக்கப் போகிறவன் என்பதற்காக, பாண்டிய தூதனை எளிதில் வெளியே விடவும் தயாராயில்லை; அதியமானை அடிபணிய வைக்காது விட்டுவிடவும் பாண்டியனுக்கு விருப்பமில்லை. அதன் பிறகு, கதையின் முடிவு என்ன? வாருங்கள் வாசித்து தெரிந்துகொள்வோம்...!

Languageதமிழ்
Release dateApr 27, 2024
ISBN6580102009660
Vettri Thilagam

Read more from Gauthama Neelambaran

Related to Vettri Thilagam

Related ebooks

Related categories

Reviews for Vettri Thilagam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vettri Thilagam - Gauthama Neelambaran

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    வெற்றித் திலகம்

    Vettri Thilagam

    Author:

    கெளதம நீலாம்பரன்

    Gauthama Neelambaran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/gauthama-neelambaran-novels

    பொருளடக்கம்

    முன்னுரை

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    முன்னுரை

    வரலாற்றுக் கதை எழுதுவதற்கு சிறு அக்கினிக் குஞ்சு ஒன்று போதும். அணுவைப் பிளந்தது போன்று சதகோடி உண்மைகள், கற்பனைகள், சம்பவங்களாக அணி வகுத்து வந்து மாளிகையாக எழுந்து நிற்கும்.

    கௌதம நீலாம்பரன் எழுதியுள்ள வெற்றித் திலகமும் அப்படியே.

    நெடுஞ்சடைய பராந்தக பாண்டியன் கொங்கு நாட்டின் மீது படை எடுத்துச் செல்கிறான். ஆயிரவேலி ஆயிரூர்க் கோட்டை அதியமான், பாண்டியனுக்குப் பணிய விரும்பாத சுதந்திரப் போக்குடையவன்.

    பாண்டிய தூதனை அவமதித்து, பின்விளைவுகள் எப்படியிருப்பினும் துணிவுடன் அவனைச் சிறையிலடைக்கிறான். அந்தத் தூதனைச் சிறையிலடைக்க, வீரர்கள் அழைத்துச் செல்லும்போது, அரசகுமாரி மதம் பிடித்த யானையிடம் சிக்கித் தடுமாறுகிறாள். பாண்டிய வீரர் காப்பாற்றுகிறார். காதல் மலர்கிறது. மகளைக் காப்பாற்றியவன் என்பதாலேயே பாண்டிய தூதனை விடுதலை செய்ய விரும்பவில்லை. ஆனால், தன் மகளுக்கு ஆசிரியராக இருந்தால் தண்டனையை மறுபரிசீலனை செய்வதாகக் கூறுகிறார். இப்படிச் செல்கிறது கதை. கதை இவ்வளவுதானா என்று கேட்காதீர்கள்.

    பெரும் வல்லரசு பாண்டிய நாடு. துணிவு மிகுந்த விடுதலை விரும்பி அதியமான். விரோதி நாட்டவனை இதயச் சிறையிலிடுகிறாள் அதியமான் மகள். காதல் வயப்பட்டு பாண்டிய தூதன் தன் கடமையை இழந்துவிடுவானா? தன் மகளைக் காப்பாற்றியவன், தன் மகளுக்குப் போர் முறைகளைக் கற்றுத் தரும் ஆசானாக இருக்கப் போகிறவன் என்பதற்காக, பாண்டிய தூதனை எளிதில் வெளியே விடவும் தயாராயில்லை; அதியமானை அடிபணிய வைக்காது விட்டுவிடவும் பாண்டியனுக்கு விருப்பமில்லை.

    பிறகு, கதையின் முடிவு? கதையின் கடைசிப் பகுதியில்தான் எதிர்பாராத திருப்பம்.

    கதை ஆசிரியரின் திறமை அங்கேதான் பளிச்சிடுகிறது.

    சரித்திரக் கதைகள் எழுதுவோர் மிகக் குறைவு. ஒரு சிலரில் கௌதம நீலாம்பரன் மிகச் சிறப்பாக முன்னேறி வருகிறார்.

    வரலாற்றுக் கதை எழுதுபவர்களுக்கு, தமிழ்ப் புலமை, இலக்கிய அறிவு, நுட்பமாக வரலாற்றுச் சம்பவங்களை அறிந்திருக்கும் ஆற்றல், கற்பனை வளம், வர்ணிக்கும் சக்தி இவ்வளவும் வேண்டும்.

    கௌதம நீலாம்பரன் இவை அனைத்தும் கைவரப் பெற்றிருக்கிறார். ‘அதியமான்’ என்றால் சங்ககால அதியமான் நினைவே வரும். ஆனால், இந்த வரலாற்றுப் புதினத்தில் வரும் அதியமான் கி.பி. எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவன். சிறு சம்பவமொன்று ஆசிரியரிடம் சிக்கவே அதைக்கொண்டு ‘வெற்றித்திலகம்’ என்ற வெற்றிகரமான நாவலாகப் படைத்து விட்டார்.

    ஆசிரியர் கௌதம நீலாம்பரனின் எழுத்தாற்றலுக்கு வண்ணத் திலகமாக இந்த நாவல் அமைந்துவிட்டது.

    அடக்கமான ஆனால், ஆழமான வர்ணனைகள். குறைவான பாத்திரங்கள். அவர்களது குணங்களை எழுத்தோவியமாக்கி நம்முன் நிலைநிறுத்தும் கலையில் சிறந்து விளங்குகிறார் ஆசிரியர்.

    * சினத்தை உள்ளடக்கி சிரித்த முகத்துடன் பூமியில் புதைத்து வைத்த ஓர் இரும்புத் துவஜம் போல் நின்றிருந்தான் அவன்,

    * இளவரசி சுருதி மீட்டத் தயாரானதொரு வீணை மாதிரி இருந்தாள். அதன் விண்ணென்று புடைந்த நரம்புகளில் காற்று மோதினாலே கானம் கொப்பளிக்கும். ஒரு வாலிபக் கரம் பட்டுவிட்டால் ஓர் இசை நதியே உடலில் பிரவகித்து விடாதா?

    * வேல்விழி மாதின் நூலிடை மீது ஓர் நூதன நாட்டியம் நிகழ்த்தின அவன் இருகரத்து ஈரைந்து விரல்களும்.

    இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். முன்னுரை எழுதச் சொன்னார்கள்; திறனாய்வு அன்று.

    ஆசிரியர் கௌதம நீலாம்பரன் இதுபோன்ற பல வரலாற்று நாவல்கள் படைத்து வெற்றியடைய வாழ்த்துகிறேன்.

    சென்னை - 33

    - விக்கிரமன்

    தலைவர்: அகில இந்தியத்தமிழ் எழுத்தாளர் சங்கம்,

    ஆசிரியர்: இலக்கியப்பீடம்

    1

    (இந்த நாவலின் நாயகன் நெடுஞ்சடைய பராந்தக பாண்டியனின் புதல்வன் ஸ்ரீமாற ஸ்ரீவல்லபன் நாயகனாக உலவும் நவீனமே இந்நூலில் இடம்பெற்றுள்ள முதல் நவீனமான விஜயநந்தினி.)

    காவிரியின் வடகரையில் உள்ளதும் தகடூர் அதியமானால் வெற்றி கொள்ளப்பட்ட கொங்குநாட்டைச் சேர்ந்ததுமான ஆயிரவேலி அயிரூரில் எழுப்பப்பட்டிருந்த புதிய அரண்மனை, அதோ கம்பீரமாகக் காட்சியளிக்கத் துவங்கிவிட்டது.

    மேட்டுப்பாங்கான பகுதியில் அமைக்கப்பட்டிருந்ததால், வெகு தொலைவிலிருந்து பார்க்கும்போதே அந்தக் கொங்குநாட்டுக் கோட்டை நன்றாகவே கண்ணுக்குப் புலனாயிற்று.

    இன்னும் இரண்டு நாழிகைப் போதில் ஆயிரவேலியை அடைந்து விடுவோம் என்று கணக்கிட்டுக் கொண்ட அந்தப் பாண்டிய நாட்டு ராஜ தூதன், அதியமானின் புதிய கோட்டையை வைத்தவிழி வாங்காமல் உற்று நோக்கியபடியே புரவியைச் செலுத்திக் கொண்டிருந்தான்.

    தொலைவில் நீலம் பாரித்துக் கிடந்த மேற்கு மலைத் தொடர், வானுக்கும் மண்ணுக்குமாக ஓர் அரண் எழுப்பப்பட்டிருப்பதுபோல் தோற்றமளித்துக் கொண்டிருந்தது. அந்த அரண் சுவரில் எழுதப்பட்ட பிரம்மாண்டமானதோர் ஓவியம்போல் காட்சியளித்தது அதியமானின் கோட்டை.

    எட்டுத் திக்கையும் வென்றுவிடத் துடிப்பதுபோல், கோட்டையின் எண் திசைகளிலும் மிக உயர்ந்த காவல் கோபுரங்களை அமைத்திருந்தான் அதியமான். பலமானதாகவும் பாதுகாப்பானதாகவும் நன்கு திட்டமிட்டு அந்தக் கோட்டை உருவாக்கப்பட்டிருப்பதை, பாண்டிய ராஜதூதனால் உணர முடிந்தது.

    அதை அவன் வாய்விட்டுச் சொல்லவும் செய்தான். அழகாக இருக்கிறது என்றுவேறு சிலாகித்தான்.

    அந்த ராஜதூதனுடன் மேலும் இருவர் புரவிகளில் வந்து கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவனின் செவியில் இந்தச் சிலாகிப்பு விழுந்ததும், எனக்கு எரிச்சலாக இருக்கிறது என்று சினத்துடன் கூறினான்.

    போகிற பாதையில்தான் காவிரி இருக்கிறது. வேண்டுமானால் அதில் ஒரு முழுக்குப் போட்டுவிடு. எல்லாம் சரியாகிவிடும்... என்று அவனிடம் கூறினான். இளைஞனாகவும் குறும்புக்காரனாகவும் தோன்றிய அந்த ராஜ தூதன்,

    இது அபசகுனமான பேச்சு. அதுவும் அதியமான் கோட்டையை நெருங்கும்போது நீ இப்படிக் கூறுவது அத்தனை நன்றாயில்லை...

    விஜயா, நான் எதையாவது நன்றாக இருக்கிறது என்றால், உடனே எதற்காகவாவது ‘நன்றாக இல்லை’ என்று ஒரு வார்த்தை பேசியாக வேண்டும் உனக்கு... அப்படித்தானே?

    நான் அந்தக் கோட்டையைச் சொல்லவில்லை. உன் பேச்சைத்தான் சொன்னேன்...

    அப்படியானால் ஆயிரவேலிக்கோட்டை அழகாக இருப்பதை நீ ஒப்புக்கொள்கிறாய், இல்லையா?

    அழகானது மட்டுமல்ல; ஆபத்தானதும்கூட என்பதை ஒப்புக்கொள்கிறேன்... என்றான் விஜயன்.

    அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை.

    நீ கவலைப்படாமலிருக்கலாம். எங்களால் அப்படி இருக்க முடியாது. அதியமான் கொடூரமான குணம் கொண்டவன் என்றும் கொலைக்கு அஞ்சாத கொடியவன் என்றும், புதிய கோட்டையில் ஏராளமான இளைஞர்களை வெட்டிப் பலியிட்டு, பூதகணங்களைத் திருப்தி செய்து கொண்டிருக்கிறான் அந்த மூர்க்கன் என்றும் சிலர் கூறுவதை நான் கேட்டிருக்கிறேன்...

    எதற்காகவாம்...?

    புதிய கோட்டைக்கு எந்த ஆபத்தும் நேரக்கூடாது என்பதற்குத்தான்...

    பயப்படாதே. உன்னையோ, இந்த தடியன் கறுத்த பீமனையோ அப்படி அந்த அதியன் ஏதும் செய்துவிட முடியாது...

    எதனால் அப்படி உறுதியாகச் சொல்கிறாய்...?

    நீங்கள் யாரும் என்னுடன் கோட்டைக்குள் வரப் போவதில்லையே, அதனால்தான்...

    நாங்கள் வரக்கூடாது என்று நீ சொல்லக்கூடாது என்று, நாம் புறப்பட்டபோதே பேசிக்கொண்டிருக்கிறோம்... விஜயன் குரலில் உஷ்ணம் வெளிப்பட்டது.

    ஆனால், அதைச் சற்றும் பொருட்படுத்தாத ராஜ தூதன், "விஜயா, நான் உன்னை என்னுடன் வருமாறு அழைக்கவே இல்லை. நான் ராஜ காரியமாக ஆயிரவேலிக்குப் புறப்பட்டபோது, நீதான் அது ஆபத்தான இடமென்று கூறினாய். என்னோடு துணைக்கு வருவதாகவும் கூறினாய். நான் வேண்டாமென்று மறுத்தும் கேளாமல், ஒரு நண்பன் என்ற உரிமையுடன் புறப்பட்டுவிட்டாய். வழிப்பயணத்தில் பேச்சுத் துணையாக இருக்கட்டுமே என்று நானும் அனுமதித்தேன். மல்யுத்த வீரன் மாதிரி இருக்கும் இந்தக் கறுத்த பீமனைவேறு அழைத்துக்கொண்டு வந்து விட்டாய். பிறகு, வழிப் பயணம் முழுவதும், ‘நாம் மூன்று பேராகப் புறப்பட்டிருக்கக்கூடாது. சகுனம் சரியில்லை’

    Enjoying the preview?
    Page 1 of 1