Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Idhaya Nathi
Idhaya Nathi
Idhaya Nathi
Ebook214 pages1 hour

Idhaya Nathi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கௌதம நீலாம்பரன் வாழ்வில் ஒளியேற்றி வைத்த சில எழுத்தாளர்களின் தித்திக்கும் சந்திப்புகளையும், சரித்திர நாவல்களையும், ஆயிரம் ஆசைக் கனவுகளையும் நெஞ்சில் தேக்கி, எழுதுகோலால் இதய நிலங்களில் உழுது கொண்டிருக்கும் ஒரு சாதாரண எழுத்தாளனின் வழிப்பயணத்தை காண வாருங்கள் வாசிப்போம்...!

Languageதமிழ்
Release dateJun 17, 2023
ISBN6580102009656
Idhaya Nathi

Read more from Gauthama Neelambaran

Related to Idhaya Nathi

Related ebooks

Reviews for Idhaya Nathi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Idhaya Nathi - Gauthama Neelambaran

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    இதய நதி

    (நினைவலைகள்)

    Idhaya Nathi

    Author:

    கெளதம நீலாம்பரன்

    Gauthama Neelambaran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/gauthama-neelambaran-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரைத்த சான்றோர்கள்

    1. நெஞ்சும் நினைவுகளும்

    2. தீபத்தின் ஒளியில் நான்...

    3. தித்திக்கும் சந்திப்புகள்

    4. சரித்திர நாவல்கள்

    5. என் இதயத்தில் எம்.ஜி.ஆர்

    6. மாற்றுக் கருத்துகளுக்கும் மதிப்பளித்த முரசொலிமாறன்

    7. கனவுகளில் தமிழ் வளர்த்த கவிதை நாயகன் கலைஞர்

    8. மறக்க முடியாத மாமனிதர் காமராஜர்!

    9. என் பார்வையில் காதல்!

    10. திரைப்படப் பாடலாசிரியர் - கவிஞர் பொன்னடியானுடன் ஒரு நேர்முகம்...

    11. தமிழ்ச் சினிமாவின் தற்காலப் போக்கு...!

    முன்னுரைத்த சான்றோர்கள்

    கடந்த காலத்தின் காலடிச் சுவடுகள், நிகழ்காலத்துக்கான நடைபாதை, சம்பவங்களைச் சரித்திரங்களாய் மதிப்பிட்டுவிடுவதும், சரித்திரங்களைச் சம்பவங்களாய் விலக்கிவிடுவதும், பெரும்பாலான கல்வியாளர்களின் பலவீனம். ஆனால்... காலத்தின் கணக்கில், வரவு வைக்கப்பட வேண்டியவற்றைத் தேர்ந்து தெளிவதே வரலாற்று நவீனம்.

    இந்தக் கூர்மையோடு, களத்தில் இறங்கிய பெருமை. கௌதம நீலாம்பரனுக்கு உண்டு. அமரர் நா.பா. ஏற்றி வைத்த இலக்கிய தீபங்களில் ஒரு எழுச்சி தீபம். சரித்திர நவீனங்களில் சரித்திரம் படைக்கும் இவர் குங்குமச் சிமிழுக்குள் குடியிருக்கும் சிங்கம்.

    இவரது விரிந்த அறிவின் விலாசமாகவும், தெளிந்த நடையின் பிரவாகமாகவும், பல்லவ மோகினி பரிமளிக்கிறது.

    உணர்வு ரீதியான ஒருமைப்பாட்டுக்கு உரக்கக் குரல் தரும் பல்லவ மோகினி உறங்கிக் கிடக்கும் இன உணர்வுக்குப் பள்ளியெழுச்சி பாடப் புறப்பட்டு வருகிறாள். எழுங்கள் தமிழர்களே!

    இது வைகறைக் காலம்!

    வெளிச்சத்தை எதிர்நோக்கி

    கவிப்பேரரசு வைரமுத்து

    (‘பல்லவ மோகினி’ முன்னுரையில்...)

    ***

    ‘வானத்தில் பல நட்சத்திரங்கள் மின்னுகின்றன என்றாலும், ஒரு சில நட்சத்திரங்களே சுடர்விட்டுப் பிரகாசிக்கின்றன. தமிழ் இலக்கிய வானில் சுடர்விடும் நட்சத்திரங்களில், கௌதம நீலாம்பரனும் ஒருவர். பல ஆண்டுகளுக்கு முன்பே ‘தினத்தந்தி’ ஞாயிறுமலரில் அவர் எழுதிய அருமையான சிறுகதை ஒன்று பிரசுரமானது. அப்போது அவரிடம், ‘உங்கள் புனை பெயரில் சரித்திரகாலத்தின் கம்பீரம் இருக்கிறது. சரித்திரக் கதைகள் எழுதுங்கள். மிகப்பெரும் வெற்றி பெறுவீர்கள்’ என்றேன். என் வாக்கு பலித்துவிட்டது. கௌதம நீலாம்பரன் சமூக நாவல்கள், வரலாற்று நாவல்கள் இரண்டிலுமே முத்திரை பதித்துள்ளார்..."

    (‘கலா என்றொரு நிலா’ நாவலின் முன்னுரையில்...)

    ஐ. சண்முகநாதன்

    (ஆலோசகர் - தினத்தந்தி)

    ***

    வரலாற்றுக் கதை எழுதுபவர்களுக்கு தமிழ்ப் புலமை, இலக்கிய அறிவு, நுட்பமான வரலாற்றுச் சம்பவங்களை அறிந்திருக்கும் ஆற்றல், கற்பனை வளம், வர்ணிக்கும் சக்தி இவ்வளவும் வேண்டும். கௌதம நீலாம்பரன் இவை அனைத்தும் கைவரப் பெற்றிருக்கிறார். சரித்திரக் கதைகள் எழுதுவோர் மிகக் குறைவு. ஒரு சிலரில் கௌதம நீலாம்பரன் மிகச் சிறப்பாக முன்னேறி வருகிறார். வெற்றியடைய வாழ்த்துகிறேன்.

    (வெற்றித்திலகம் நாவலின் முன்னுரையில்...)

    கலைமாமணி விக்கிரமன்

    (அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர்,

    ஆசிரியர்: ‘இலக்கியப் பீடம்’ மாத இதழ்)

    ***

    வரலாற்றுப் புதினத் துறையில் கௌதம நீலாம்பரன் மிகவும் பிரபலமானவர். விகடனில் அவர் எழுதிய ‘சேது பந்தனம்’, இதயத்தில் அவர் வரைந்த ‘நிலாமுற்றம்’, கலைமகளில் வெளியான ‘ராஜகங்கணம்’, மலேசிய ‘வானம்பாடி’யில் வந்த ‘பல்லவ மோகினி’ தினமலர் கதைமலரில் வந்த ‘பாண்டியன் உலா’ போன்ற புதினங்கள், கௌதம நீலாம்பரன் அவர்களை கல்கியின் பரம்பரையில் ஒரு முக்கிய வாரிசாக ஆக்கி உள்ளன. வரலாற்றுக் கதைகள் வெறும் வர்ணனை ஜாலம் எனக் கருதப்படுகிறது. ராஜா - ராணிகளின் காதல், கத்திச்சண்டை, குதிரைகளின் ஓட்டம்... இத்தோடு சரி என நினைக்கிறார்கள். எனவே, வரலாற்றுக் கதைகளில் அனேகமாக சமூகப் பிரக்ஞை இருக்கமுடியாது எனவும் உரைக்கப்படுகிறது. ஆனால், கௌதம நீலாம்பரனின் வரலாற்றுக் கதைகள் அப்படிப்பட்டவை அல்ல என்று என்னால் உறுதியாகக் கூறமுடியும். தமிழ்கூறும் நல்லுலகத்துக்கு இன்னும் பல்வேறு படைப்புகளை அவர் அளிக்கவேண்டும் என வாழ்த்துகிறேன்.

    (பாண்டியன் உலா’ முன்னுரையில்...)

    டாக்டர் கி. வேங்கட சுப்பிரமணியன்

    (புதுவை மத்திய பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர்)

    ***

    வரலாற்றுப் புதினங்களைப் புனைவதில் துரிதமாக முன்னுக்கு வந்து கொண்டிருக்கும் இளம் எழுத்தாளர்களில் கௌதம நீலாம்பரன் ஒருவர். அவர் எழுதிய ‘சேதுபந்தனம்’ தரமான நூல்களின் வரிசையில் இடம் பெறத் தக்கது என்பதில் ஐயமில்லை... நல்லதொரு சரித்திரக் கதையைத் தமிழுக்கு அளித்தது பற்றி இந்த ஆசிரியரைப் பாராட்டுகிறேன். இன்னும் பல இளம் சரித்திரக் கதாசிரியர்கள் வருவதற்கு இந்த ஆசிரியர் முன்னோடியாக இருக்கட்டும். இவர் இது போலவே இன்னும் பல சரித்திர நவீனங்களைப் புனைய ஆண்டவன் அருள்புரிவானாக.

    (‘சேது பந்தனம்’ முன்னுரையில்...)

    சாண்டில்யன்

    ***

    இன்றைக்கு இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு நான் ‘தீபம்’ அலுவலகத்திற்கு அநேகமாகத் தினமும் போக வேண்டியிருந்தது. ‘தீபம்’ அச்சகத்தில் நான் பங்கு பெற்ற ஒரு பத்திரிகையும் (கணையாழி) தயாராகிக் கொண்டிருந்தது. கௌதம நீலாம்பரனின் எழுத்துத்துறை வாழ்க்கை ‘தீபம்’ அலுவலகத்தில்தான் தொடங்கியிருந்தது. நான் பங்கு பெற்ற பத்திரிகையில் அவருடைய சிறுகதைகளும் கவிதைகளும் வெளியாகின. அன்றே அவரிடமிருந்த பண்பும் ஆற்றலும் என் கவனத்தைக் கவர்ந்தன. இன்று தமிழ் வாசகர்கள் அனைவரும் அறிந்த எழுத்தாளர் அவர்.

    (‘மாசிடோனிய மாவீரன்’ முன்னுரையில்...)

    அசோகமித்திரன்

    ***

    சிறப்பான இலக்கியப் பணியாற்றி வரும் கௌதம நீலாம்பரன், ‘இதயம் பேசுகிறது’ இதழில் ஆரம்பகாலத்திலிருந்து எனது ஆசிரியர் குழுவில் பணியாற்றி வருகிறார். ஆசிரியர் குழு சந்தித்து உரையாடும் நேரங்களில் எல்லாம் போர்வாள் போன்று கூர்மையான கருத்துக்களை அச்சமில்லாமல் தெரிவிப்பார்; பல சரித்திரச் சான்றுகளைத் தெள்ளென விளக்குவார்; சமயச் சர்ச்சைக்கு அத்தாட்சிகளுடன் காரணம் காட்டுவார். கொந்தளிக்கும் இலக்கிய ஆர்வத்துடன் அவர் கலந்துரையாடும் பொழுதெல்லாம், அதற்கேற்ற வடிகால் ஒன்றை தக்கசமயத்தில் உருவாக்கத் திட்டமிட்டுக் கொண்டிருக்கும் பொழுதுதான், ஆனந்தவிகடனில் அவரது ‘சேதுபந்தனம்’ சரித்திர நவீனம் வெளிவரத் தொடங்கியது. கிடைத்தற்கரிய பேறாகக் கருதப்படும் இப்படியொரு சந்தர்ப்பத்தை எனது ஆசிரியர் குழுவைச் சேர்ந்த ஓரிளைஞர் பெற்றதை எண்ணி மகிழ்ச்சி அடைந்தேன். இதோ அவரது ‘நிலாமுற்றம்’ நம் ‘இதயம் பேசுகிறது’ இதழில் ஆரம்பமாகிறது. காதல், வீரம், சாகசம், சாதுர்யம் என்று சரித்திர காவியங்களுக்கே உரித்தான நடையில் இந்த சரித்திர நவீனத்தை எழுதியிருக்கிறார் கௌதம நீலாம்பரன்.

    (‘நிலாமுற்றம்’ தொடர் ஆரம்ப அறிவிப்பில்...)

    மணியன்

    ***

    நண்பர் கௌதம நீலாம்பரனின் வரலாற்றுப் புதினத்துக்கு நான் முன்னுரை தருவது என்பது கொஞ்சம் அதிகப் பிரசங்கித்தனம். காரணம், நான் ‘இதயம் பேசுகிறது’ இதழில் ‘அந்தப்புரம்’. ‘இந்திரவிழா’ ஆகிய வரலாற்றுத் தொடர்கதைகளை எழுதியபோது எனக்குச் சட்டாம்பிள்ளையாக இருந்து, ‘இது இந்த வரலாற்றுக் காலகட்டத்தில் வராதே சார்’, ‘அதே மாதிரி ஏதோ ஒன்று வந்திருக்கிறதே!’ என்றெல்லாம் கூறி, அவ்வப்போது எழும் என் வரலாற்றுச் சந்தேகங்களுக்கு விளக்கம் கூறியும், சிவப்புக் கொடி காட்டியும், தார்க்குச்சி போட்டும் அந்த நவீனங்களை எழுத உதவியவர் கௌதம நீலாம்பரன். நான் வரலாற்று ஆவணங்களையும் சதாசிவ பண்டாரத்தாரையும், நீலகண்ட சாஸ்திரியையும் புரட்டத் துவங்கு முன், அவர்களோடு நீச்சலடித்துக் கொண்டிருந்தவர் கௌதம நீலாம்பரன். அதனால்தான் அவருடைய வரலாற்று நவீனத்துக்குப் போய் நான் முன்னுரை எழுதுவது அதிகப் பிரசங்கித்தனம் என்று கருதினேன். அன்பின் வற்புறுத்தலை மதித்து, தயக்கத்தை உதறும்படி ஆயிற்று.

    நா.பா. அவர்களால் ‘தீபத்தில்’ பயிற்றுவிக்கப்பட்டு இன்று ‘குங்குமம்’ குடும்பத்தில் ஒளிரும் நண்பர் கௌதம நீலாம்பரனின் அயரா உழைப்பிற்கும் துள்ளும் ஆற்றலுக்கும் ‘நிலாமுற்றம்’ ஒரு சுகமான சான்று.

    (‘நிலாமுற்றம்’ நூலின் முன்னுரையில்...)

    தாமரை மணாளன்

    ***

    வரலாற்றுக் கட்டுரைகள், வரலாற்றுச் செய்திகளையும், களத்தையும் நம் காலத்திற்குக் கொண்டு வருவன. வரலாற்று நாவல்களோ, வரலாற்றுக் காலத்திற்கும் களத்திற்கும் நம்மைக் கொண்டு செல்வன. 1983-ல் ஈழப்பிரச்சனை தமிழகத்தை ஆட்கொண்டபோது, எல்லோர் மனமும் உணர்ச்சிவசப்பட்டதுபோல் என் மனமும்...

    ஈழப்பிரச்சனையை அறிவு வழியிலேயே அணுகிக்கொண்டிருந்தபோது உணர்ச்சி நிலையற்றுப் போனதால் ஓர் வறட்சி எனக்குள் வந்தது நிஜம். அந்த வறட்சியை ஈரப்படுத்த அன்று எனக்கு உதவியாய் இருந்தது ஒரு சரித்திர நாவல். அதுதான் கௌதம நீலாம்பரன் எழுதிய ‘ஈழவேந்தன் சங்கிலி’ பற்றிய நாவல்.

    (‘ஈழவேந்தன் சங்கிலி’ நூலின் முன்னுரையில்...)

    பெரியார்தாசன்

    ***

    தமிழகத்தைச் சேர்ந்த கௌதம நீலாம்பரன் எழுதிய ‘யாழ்ப்பாணத்தின் வீரத்தமிழ் மன்னன் இரண்டாம் சங்கிலி’ என்னும் நூலை வெளியிட்டு வைப்பதில் பேருவகை அடைகிறேன். தமிழினத்திற்கு குறிப்பாக ஈழத்தமிழினத்திற்கு ஒரு வரலாற்றுக் கடமையை ஆற்றுவதாக மனநிறைவு அடைகிறேன். ஏன் தெரியுமா? ஈழத்தமிழ் வரலாற்று நாயகன் ஒருவனைப் பற்றி தமிழகத்திலிருந்து எழுதப்பட்ட முதலாவது வீரகாவியம் கலைஞர் மு. கருணாநிதியால் எழுதப்பட்ட ‘பாயும் புலி பண்டாரக வன்னியன்’ அடுத்து கௌதம நீலாம்பரன் எழுதிய ‘யாழ்ப்பாண வீரத் தமிழ் மன்னன் இரண்டாம் சங்கிலி’ என்னும் காவியப் படைப்பு. ஈழத்திலேயே முதலாம் சங்கிலி இரண்டாம் சங்கிலி ஆகியோரின் வரலாறுகள் தவறுதலாக, குழப்பமாக இருக்கும் நிலையில், தமிழகத்திலிருந்து கொண்டு தெளிவாக இனம் கண்டு ஓர் அற்புதக் காவியமாகப் படைத்த கௌதம நீலாம்பரனுக்கு ஈழத்தமிழ் நெஞ்சங்களின் பாசப்பிணைப்புடன் கூடிய நன்றியறிதல்கள் என்றென்றும் இருக்கும் என்பதில் ஐயமில்லை.

    (சங்கிலி மன்னன் பற்றிய நாடக நூலின் முன்னுரையில்...)

    டாக்டர் க. இந்திரகுமார்

    (மனநல மருத்துவர், இலண்டன்)

    ***

    கௌதம நீலாம்பரன் நா. பார்த்தசாரதியின் ‘தீபம்’ பாசறையில் உருவானவர். கலைமகள் ஆசிரியர் கி.வா.ஜ.வின் பாராட்டைப் பெற்றவர். அவ்விதம்தான் அவர் எனக்கு அறிமுகமானார். அவரை இதயம் பேசுகிறது இதழில் பணிபுரிய மணியன் அழைப்பதற்கு நானும் காரணமாக இருந்தேன். இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக்கொண்டு, தன்னுடைய செயல் திறனை வளர்த்துக் கொண்டார் அவர். மணியன் தொடங்கிய ‘இதயம் பேசுகிறது’ வார இதழ் மற்றும் இளைய தலைமுறையினருக்கான ‘மயன்’, ஆன்மீகப் பற்றுக் கொண்டவர்களுக்கான ‘ஞானபூமி’ ஆகிய யாவுமே பிற்கால பத்திரிகை முயற்சிகளுக்கு வழிகாட்டியாக அமைந்தவை. அந்த முயற்சிகள் அனைத்திலும் அவர் தன்னுடன் எழுத்துப் பணியில் ஈடுபட்ட அனைவரையும் பங்குபெறச் செய்தார். அப்படி உருவானவர்தான் கௌதம நீலாம்பரன்.

    (‘பல்லவன் தந்த அரியணை’ நூலின் முன்னுரையில்)

    எஸ். லட்சுமிசுப்பிரமணியம்

    ***

    தமிழ் வாசகர்களுக்கு நன்கு அறிமுகமானவர் கௌதம் நீலாம்பரன். பெரும்பாலும் வரலாற்றுச் சிறுகதைகள், நாவல்கள் மூலமே இவரை ரசிகர்கள் அறிந்திருக்கிறார்கள். ‘மாயப் பூக்கள்’ மூலம் சிறுவர் இலக்கியப் படைப்பிலும் இவர் திறமையானவர் என்பதை நிரூபித்துள்ளார். சிறுவர்களுக்கான கதைகள் எழுதுவதிலாகட்டும். பெரியவர்களுக்கான கதைகள் எழுதுவதிலாகட்டும் அதனதன் இயல்பு மற்றும் தனித்தன்மைகளை இழக்காமல் எழுதுவதில் இவருக்கு நிகர் இவரே!

    வாசகர்களின் ரசனை என்ற நாடித்துடிப்பைச் சரியாகக் கணித்துக் கதைகள் எழுதுவதில் திறமையுள்ள இவரது எழுத்துப் பணி மேலும் சிறப்படைந்து பல சாதனைகள் புரிய வாழ்த்துகிறேன்.

    (‘மாயத்தீவு’ முன்னுரையில்...)

    கி. ராமசுப்பு

    (பொறுப்பாசிரியர் தினமலர் - வாரமலர் - சிறுவர் மலர்)

    ***

    கதை வல்ல கௌதம நீலாம்பரன் தமிழக வரலாற்றுப் பேழையிலிருந்து எடுத்த பாண்டி முத்துக்களைப் பாங்குறக் கோத்து அழகிய ஆரமாக்கி, ‘கலிங்க மோகினி’ என்று நம் கைகளில் கொடுத்துள்ளார். நாகரிகப் பண்பாட்டு வரம்புக்குள் வரலாற்று அடிப்படையிலான கற்பனையைச் சுவை சொட்டும் கதைக்குள் சொக்க வைக்கும் நடையில் சொல்லியிருப்பதன் மூலம் ‘கலிங்க மோகினி’யில் கௌதம நீலாம்பரன் கல்கியின் கான் முளைகளில் ஒருவராகவே முகம் காட்டுகிறார்.

    (‘கலிங்கமோகினி’ முன்னுரையில்...)

    கவிஞர் ஈரோடு தமிழன்பன்

    என்னுரை

    இதய நதி...

    இது ஒன்றும் என் வாழ்க்கைச் சரிதமல்ல; எண்ணங்களின் தொகுப்பு என்பதை முதலிலேயே சொல்லிவிடுகிறேன்.

    வாழ்க்கைச் சரிதம் எழுதுகிற அளவு நான் ஒன்றும் மகத்தான மனிதனும் அல்ல; மாபெரும் சாதனைகளின் தொகுப்பான சம்பவங்களும் என் வாழ்வில் இல்லை. தோல்விகளின் தொகுப்பெழுதி வைத்தால் பயன்தரும் என்றால், எழுதலாம் என் சரிதமும் வெற்றி விலாசம் பெற்ற

    Enjoying the preview?
    Page 1 of 1