Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sivaneri Seelargal
Sivaneri Seelargal
Sivaneri Seelargal
Ebook128 pages43 minutes

Sivaneri Seelargal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

உலகம் முழுவதும் மழை பெய்து, வளம் சேர்ந்து, எல்லாரும் நலமாக வாழ வேண்டி, துயர் நீக்கும் அரனைத் துதி பாடினார்கள், சிவநெறிச் செல்வர்கள். இன்னல் கடந்து இன்ப நலன்கள் அருளும் ஈசன் பற்றியும், இளைக்காத கொடையுள்ளம் கொண்ட இளையான்குடி மாறன்! பற்றியும், தாயுமான ஈசனுக்கு தாயானது எப்படி? என்பதையும், இந்நூலில் படித்துத் தெரிந்துகொண்டு ஈசனின் அருள் பெறுவோம்! வாருங்கள்...!

Languageதமிழ்
Release dateNov 4, 2023
ISBN6580102009651
Sivaneri Seelargal

Read more from Gauthama Neelambaran

Related to Sivaneri Seelargal

Related ebooks

Reviews for Sivaneri Seelargal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sivaneri Seelargal - Gauthama Neelambaran

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    சிவநெறிச் சீலர்கள்

    Sivaneri Seelargal

    Author:

    கெளதம நீலாம்பரன்

    Gauthama Neelambaran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/gauthama-neelambaran-novels

    பொருளடக்கம்

    அணிந்துரை

    முன்னுரை

    1. இன்னல் கடந்து இன்ப நலன்கள் அருள்வான் ஈசன்

    2. உள்ளத்தில் எழுந்த உன்னத ஆலயம்!

    3. மானிடக் காதலுக்கு மகேசன் தூது செல்வதோ!

    4. பகைவனுக்கருளிய பண்பு நெஞ்சம்!

    5. இல்லை என்ற சொல்லை அறியாத இயற்பகை நாயனார்

    6. அருள் உள்ளம் கொண்ட அப்பய்ய தீட்சிதர்

    7. கந்தன் அருள்பெற்ற கச்சியப்ப சிவாச்சாரியார்

    8. மனித முகத்தை மறுத்த முசுகுந்த சக்கரவர்த்தி!

    9. பரமன் மடிமீது அமர்ந்த பசுபதி நாயனார்

    10. திருவருள் பெற்ற குருஞான சம்பந்தர்

    11. சீடனை குருவாய் ஏற்ற செம்மல்!

    12. ஆசாரமா, அன்பா?

    13. அன்னை மீனாட்சி அருள் பெற்ற நீலகண்ட தீட்சிதர்

    14. ஆடற்பெருமானின் கால்நோகுமே என்று வருந்திய இராஜசேகர பாண்டியன்!

    15. இளைக்காத கொடையுள்ளம் கொண்ட இளையான்குடி மாறன்!

    16. ராஜ பொக்கிஷம்

    17. சாட்சிக்கு வந்த சர்வேஸ்வரன்

    18. தாயுமான ஈசனுக்குத் தாயானவள்!

    19. கந்தன் அருள்பெற்ற கட்டபொம்மன்

    20. திரவுபதி ஏன் சிரித்தாள்?

    தென்னாடுடைய சிவனே போற்றி!

    என் நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!

    அணிந்துரை

    தமிழ் வளர்த்த மதுரையில், தெய்வக் குழந்தையான திருஞான சம்பந்தர் சமணர்களுடன் வாதிட்டபோது, தனது துதிப்பாடலைப் புனல்வாதத்துக்கு உட்படுத்தினார். சைவத்தை நிலைநாட்ட அவர் வைகையின் பிரவாகத்தில் போட்ட ஓலை, நீரோட்டத்தை எதிர்த்து நீந்திவந்து கரை சேர்ந்தது.

    இப்படி வெற்றியை நிலைநாட்டிய ஓலையில் சம்பந்தர் என்ன எழுதினார்?

    வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்

    வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக

    ஆழ்க தீயதெல்லாம் அரன் நாமமே

    சூழ்க வையகமும் துயர் தீர்கவே!

    முறைப்படி யாகங்களும் இறைவழிபாடும் நடந்தால் அரன் நாமம் வையக முழுவதும் சூழ்ந்து துயரங்களைத் தீர்த்து வைக்கும் என்று பாடுகிறார் இந்தத் தெய்வக் குழந்தை. இன்று உலக முழுவதும் மழை பெய்து, வளம் சேர்ந்து, எல்லாரும் நலமாக வாழவேண்டிய அவசியம் உள்ளது. குறிப்பாக பாரத புண்ணிய பூமியிலும் தமிழ்நாட்டிலும் இது மிகமுக்கியமான தேவை.

    அவ்வாறு துயர் நீக்கும் அரனைத் துதி பாடிய சிவநெறிச் செல்வர்களின் கதைகளைக் கைலாசநாதன் தொகுத்து எழுதுவது வெகுபொருத்தம். ஆம்; கௌதம நீலாம்பரன் என்ற எழுத்தாளரின் இயற்பெயர் அது. இப்போது ஆன்மிக மாத இதழான திருவடியின் திருவருள் ஆசிரியராகப் பணியாற்றிவரும் அவர் பத்திரிகை உலகில் பலதுறைகளிலும் அனுபவம் பெற்றவர். ஜனரஞ்சகமான வார இதழானாலும், குறுநாவல்களை வெளியிடும் மாத இதழானாலும், ஆன்மிகத்துக்கே முழுவதும் ஆன மாத இதழானாலும் அவர் பங்கு பெற்று, உழைத்துப் பாடுபட்டு வளர்ந்திருக்கிறார். சரித்திர நாவல்களை எழுதிப் பரிசுகளையும் பெற்றிருக்கிறார்.

    அவருடைய எழுத்தாற்றலுக்கும் அநுபவத்துக்கும் இந்த நூல் ஒரு சான்று. அவருடைய உயரிய பணி மேன்மேலும் சிறக்க உளம் கனிந்து வாழ்த்துகிறேன்.

    எஸ். லட்சுமி சுப்பிரமணியம்

    முன்னுரை

    இருபதாண்டுகளுக்கு முன் ‘ஞான பூமி’ ஆன்மிக மாத இதழை மணியன் அவர்கள் தொடங்கியபோது, அதில் ஒவ்வோர் இதழிலும் என் எழுத்துப் பங்களிப்பும் இருக்க வேண்டுமென்று கட்டளையிட்டிருந்தார். ‘இதயம் பேசுகிறது’ வார இதழில் உதவி ஆசிரியன் என்ற நிலையில் எனக்குப் பணிச்சுமை நிறைய. ‘ஞான பூமியி’ன் பக்கங்களைத் தயார் செய்வதிலும் நான் உழைக்க வேண்டியிருந்தது. இந்த நிலையில் எழுத வேண்டும், அதுவும் ஆன்மிக விஷயங்களாக எழுத வேண்டும் என்று சொன்னதும் நான் யோசித்தேன்.

    எனக்கு ஆன்மிக ஈடுபாடு உண்டு என்றாலும், என் கண்ணோட்டம் சற்று வித்தியாசமானது. ‘ஞானபூமி’ இதழில் ‘ஞான மன்றம்’ என்னும் பகுதி ஒன்று உண்டு. ஒவ்வோர் இதழிலும் ஒரு மகானை, மடாதிபதியை, சமய ஆசார்யரைச் சந்தித்து உரையாடி மக்களின் சார்பில் தொகுத்து வெளியிடுவோம். இப்பணியை அன்பிற்குரிய எஸ். லட்சுமி சுப்ரமணியம்தான் செய்வார். அப்போதெல்லாம் ஆசிரியர் மணியன் அவர்களுடன் சென்று, சந்திக்கும் மகான்களிடம் நான் சற்று நாத்திகத்தனமான கேள்விகளைக் கேட்பேன். விவாதம் அனல் பறக்கும். இருப்பினும் பயனுள்ள பல விஷயங்கள் வெளிப்படும். எனினும் பலரும் என்னை நாத்திகன் என்றே எண்ணினர். ‘என்ன இப்படியெல்லாம் கேள்வி எழுப்புகிறீர்கள்?’ என்று நேரில் பலர் என்னைக் கடிந்துகொண்டதும் உண்டு.

    மணியன் என்னை ‘ஞானபூமி’யில் எழுதக் கட்டளையிட்டதும் அதனால்தான் தயங்கினேன். ஆனாலும் இறையடியார்களின் வரலாற்றுச் செய்திகளை எழுதுவதில் தவறில்லை என்று கருதி, சிவநெறிச் சீலர்களைப்பற்றி எழுதினேன். முழுவதும் தொகுக்க முடியாது போயினும், கையில் கிடைத்த சில கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூலை ‘தெய்வம் பேசுகிறது’ இதழை நடத்திய மதி நிலையம் திரு. மெய்யப்பன் கொண்டு வருகிறார். அவருக்கும் இனியதொரு அணிந்துரை வழங்கிய எஸ். லட்சுமி சுப்பிரமணியம் அவர்களுக்கும் என் இதய நன்றி.

    - கெளதம்ப நீலாம்பரன்

    1. இன்னல் கடந்து இன்ப நலன்கள் அருள்வான் ஈசன்

    ஓர் உருவம், ஒரு நாமம் இல்லாத சிவபெருமானை அநேக திருவுருவங்களில் கண்டு மகிழ்ந்து கொண்டாடலாம்.

    இந்த உலகின் தலைவர், ஜகத்தை சிருஷ்டித்த சர்வேஸ்வரன், பார்க்கும் இடமெங்கும் ஒரு நீக்கமற நிறைந்த பரிபூரணானந்தன்தான் பரமேஸ்வரன்.

    சிவபெருமான் பல்வேறு தருணங்களில், பக்தர்களைப் பரிபாலிக்க பல்வேறு தோற்றங்களில் பிரத்யட்சமானதுண்டு. அதன் நினைவாக அந்தத் தோற்றங்களில் உருவம் அமைத்து சிவபெருமானை வழிபடுகின்ற மரபு உண்டு. சிவபெருமானின் தோற்றங்களில் குறிப்பிடத்தக்க சில:

    சந்திரசேகரர், உமாமகேசுவரர், ரிஷபாரூடர், சபாபதி, கல்யாணசுந்தரர், பிட்சாடனர், காமதகனர், அந்தகாரி, திரிபுராரி, சலந்திராரி, விதித்வம்சர், வீரபத்திரர், நரசிங்க நிபாதனர், அர்த்தநாரீசுவரர், கிராதர் (வேடர்), கங்காளர், சண்டேச அனுக்கிரகர், கங்காதரர், கஜமுகாநுக்கிரகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோற்பவர்.

    இந்தத் தோற்றங்கள் ஒவ்வொன்றைப் பற்றியும் ஒவ்வொரு நீண்ட புராணக் கதைகள் உண்டு. இத்தனைக் தோற்றங்கள் இருப்பினும் சிவலிங்க சொரூபம் மட்டுமே மிகவும் பிரசித்தம். சிவபெருமானை இலிங்க ரூபத்தில் வழிபடுவதே சிறப்பானது.

    ‘காணாத அருவினுக்கும் உருவினுக்கும் காரணமாய் நீணாகம் அணிந்தார்க்கு நிகழ்குறியாம் சிவலிங்கம்.’

    என்பது சேக்கிழாரின் பெரிய புராணச் செய்யுள். மிகத்தொன்மையான இலிங்க வழிபாடு பற்றிய அநேக செய்திகள் பல உண்டு. தத்துவரீதியில் இரண்டு கருத்துகளை அறிஞர்கள் வலியுறுத்துகிறார்கள்.

    ஒன்று,

    வேத காலத்தில் வேள்வித் தூண்களாக அமைந்த யூபஸ்தம்பங்களே பின்னர் இலிங்கங்களாக மாறுதல் அடைந்திருக்கலாம் என்பது.

    ஸ்தம்பம்

    Enjoying the preview?
    Page 1 of 1