Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Navagiragangal - Kalai Kalanjiyam
Navagiragangal - Kalai Kalanjiyam
Navagiragangal - Kalai Kalanjiyam
Ebook90 pages30 minutes

Navagiragangal - Kalai Kalanjiyam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மனிதனின் வாழ்வில் அன்றாடம் தோன்றும் பிரச்சினைகள் ஏராளம். வேத அங்கங்கள் ஆறில் ஒன்றான ஜோதிடம் மனிதன் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், அதற்கான காரணங்கள், அந்தப் பிரச்சினைகளைத் தீர்க்கும் வழிமுறைகள் ஆகியவற்றை மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது. ஆனால் மிகவும் நுட்பமான கலையான இதில் தேர்ந்தவர்கள் சிலரே. ஆகவே ஜோதிடக் கலையை நன்கு அறிந்த ஒருவர் மூலமே ஜோதிடத்தில் முக்கிய பங்கு வகிக்கும் நவகிரகங்கள் பற்றிய அனைத்து ரகசியங்களையும் விவரங்களையும் ஒருவர் அறிய வேண்டியது இன்றியமையாததாகிறது. அந்த வகையில் பல்லாண்டுகள் இந்தக் கலையை ஊன்றிப் பயின்று பலருக்கும் இதன் மூலம் சேவை செய்யும் ஒருவர் எழுதிய இந்த நூல் அனைவருக்கும் மிக அருமையாக உதவி செய்கிறது.

நவகிரகங்களைப் பற்றிய அரிய விவரங்களை இது தருகிறது. ஆகவே பிரச்சினைகளைத் தீர்க்கும் கலைக் களஞ்சியமாக அமைகிறது. திரு. சந்தானம் சீனிவாசன் தனது ஆழ்ந்த அறிவுடன் அனுபவத்தைக் குழைத்து இந்த நூலைப் படைத்துள்ளார். அனைவரும் படிக்க உகந்த நூல் மட்டுமல்ல இது; நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பரிசளிக்கவும் ஏற்ற நூல் இது.

Languageதமிழ்
Release dateSep 4, 2023
ISBN6580168210131
Navagiragangal - Kalai Kalanjiyam

Related to Navagiragangal - Kalai Kalanjiyam

Related ebooks

Reviews for Navagiragangal - Kalai Kalanjiyam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Navagiragangal - Kalai Kalanjiyam - Santhanam Srinivasan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    நவகிரகங்கள் – கலைக்களஞ்சியம்

    Navagiragangal - Kalai Kalanjiyam

    Author:

    சந்தானம் சீனிவாசன்

    Santhanam Srinivasan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/santhanam-srinivasan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    அணிந்துரை

    1. சூரியனே போற்றி!

    2. அம்புலிமாமா வா, வா!

    3. மங்களம் தரும் அங்காரகன்!

    4. புத்தி தரும் புதன்

    5. குரு பகவான்!

    6. சௌபாக்யம் அருளும் சுக்கிரன்!

    7. சனீஸ்வர பகவான்!

    8. ராகு பகவான்!

    9. கேது பகவான்!

    10. நவக்ரஹ மஹா மந்த்ரம்!

    முன்னுரை

    தமிழ் உலகில், ‘நவகிரகங்கள் - கலைக் களஞ்சியம்’ என்ற இந்த நூலை சமர்ப்பிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

    இளமை முதல் ஜோதிடத்தில் ஒரு ஈடுபாடு எனக்கு உண்டு. மதுரையில் தினமணியில் ராசிபலன் எழுதி வந்த திரு ரங்கநாத ஜோசியர், காரைக்குடியைச் சேர்ந்த, ஓலைச் சுவடிகள் மூலம் சித்த வைத்தியம், ஜோதிடம் இவற்றை நுணுக்கமாக அறிந்து எங்களுக்குக் கூறி வந்த, ஶ்ரீ கிருஷ்ண ஐயர், முகத்தைப் பார்த்தவுடன் வருங்காலம் உரைக்க வல்ல மதுரை காளி ஜோஸியர் உள்ளிட்டோருடன் நல்ல பழக்கம் ஏற்பட்டதால் பல விஷயங்களை அறிந்து கொண்டேன்.

    பரசுராமரால் ஸ்தாபிக்கப்பட்ட ஶ்ரீ ஐயப்பனின் விக்ரஹத்தை மீண்டும் கண்டெடுத்து அச்சன்கோவிலில் பிரதிஷ்டை செய்து அச்சன்கோவிலை நிர்மாணித்த ஆயக்குடி ஶ்ரீ ஸ்வாமிஜி கிருஷ்ணா அவர்கள் எங்கள் குடும்பத்தினருக்கு குரு. அவர் அருளால் பல தெய்வீக நுட்பங்கள் விளங்கின.

    இது தவிர பல பழம் பெரும் ஜோதிட புத்தகங்கள், சாஸ்திர நூல்கள் இவற்றையும் இல்லத்தில் எனது நூலகத் தொகுப்பில் சேர்க்க முடிந்தது.

    இதன் பலனாகவே இந்தத் தொடரை என்னால் உருவாக்க முடிந்தது.

    லண்டனிலிருந்து வாரம் தோறும் ஒளிபரப்பாகி வந்த ஞானமயம் ஒளிபரப்பில் நவகிரகங்களைப் பற்றிப் பேசும் வாய்ப்பை திரு கல்யாண்ஜி மற்றும் திரு ஸ்வாமிநாதன் ஆகியோர் வழங்கினர்.

    உலகெங்கிலுமிருந்தும் இதைக் கேட்ட பல்லாயிரக் கணக்கானோர் இந்த உரைகளை ரசித்துக் கேட்டதோடு பயனுள்ள உரைகள் என்று பாராட்டினர்.

    இவை உடனடியாக கட்டுரைகளாக லண்டன் திரு சுவாமிநாதன் அவர்களின் www. tamilandvedas. com பிளாக்கிலும் பிரசுரிக்கப்பட்டன.

    இந்த நூலை உருவாக்குவதில் இவர்கள் அனைவரும் எனக்கு உறுதுணையாக இருந்தனர். அனைவருக்கும் எனது நன்றியை இங்கு பதிவு செய்கிறேன்.

    அடுத்து உரைகளை நூல் வடிவில் ஆக்க உதவி செய்த திரு ச. நாகராஜன் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக.

    இவற்றைத் தொகுக்கும் போது பல்வேறு விதங்களில் எனக்கு உதவி செய்த எனது மனைவி, மகன்கள், மகள், மருமகள்கள், சகோதரர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி உரித்தாகுக!

    இதைப் படித்து அவ்வப்பொழுது என்னைப் பாராட்டி ஊக்குவித்த அனைவருக்கும் எனது நன்றி.

    இதை டிஜிடல் வடிவிலும், அச்சுப் பதிப்பாகவும் கொண்டு வர முன்வந்துள்ள பெங்களூர் நிறுவனமான PUSTAKA DIGITAL MEDIAவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவராஜ் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    நன்றி.

    சந்தானம் சீனிவாசன்

    சென்னை

    31-7-2023

    அணிந்துரை

    வேத அங்கங்கள் ஆறில் ஜோதிடமும் ஒன்று. இது மிக அகன்ற ஆழமான நுட்பமான கலை.

    மற்ற கலைகள் எல்லாம் வெறும் பொழுதுபோக்கிற்காக மட்டுமே உள்ளன. மிகவும் தேவையான காலத்தில் அவை உதவாது. ஆனால் வைத்தியம், ஜோதிடம், மந்திரம் ஆகியவையே உயிர் காக்கும் கலைகள் என்று கீழ்க்கண்ட சுபாஷிதம் கூறுகிறது.

    அன்யானி சாஸ்த்ராணி விநோத மாத்ரம்

    ப்ராப்தேஷு காலேஷு நதைச்ச கிஞ்சித்

    சிகித்ஸித ஜ்யோதிஷ மந்த்ரஹதா

    பதே பதே ப்ரத்யய பாவஹந்தி

    மனிதனின் வாழ்வில் அன்றாடம் தோன்றும் பிரச்சினைகள் ஏராளம்.

    இருபதாம்

    Enjoying the preview?
    Page 1 of 1