Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mahangalin Saritham Part 1
Mahangalin Saritham Part 1
Mahangalin Saritham Part 1
Ebook211 pages1 hour

Mahangalin Saritham Part 1

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அருளாளர்களை எப்பாடுபட்டேனும் அணுகி ஆசி பெற வேண்டும்; அவர்கள் உபதேசங்களைக் கேட்க வேண்டும்; அதை வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும். அவர்களின் அருளாசி ஆபத்தைச் சம்பத்தாக்கும். அசுபத்தைச் சுபம் ஆக்கும்!

அத்துடன் அவர்கள் பூவுலகில் பூதவுடலுடன் இல்லாவிட்டாலும் கூட ஜீவசமாதியில் இருந்து அருள் பாலிக்கிறார்கள். ஆகவே அவர்களை நினைப்பதும், அவர்களை வணங்கிப் போற்றுவதும், அவர்கள் கூறிய அருளுரைகளைப் படித்து அதன்படி வாழ்க்கையை அமைத்துக் கொள்வதும் நற்பயன் அளிக்க வல்லதே. இந்த வகையில் முதலில் அருளாளர்களைப் பற்றி முதலில் அறிவதே இதற்கான முதல் படி.

இந்த நூலில் 18 மகான்களின் சரிதத் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.

Languageதமிழ்
Release dateJan 8, 2021
ISBN6580151007950
Mahangalin Saritham Part 1

Read more from S. Nagarajan

Related to Mahangalin Saritham Part 1

Related ebooks

Reviews for Mahangalin Saritham Part 1

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mahangalin Saritham Part 1 - S. Nagarajan

    https://www.pustaka.co.in

    மகான்களின் சரிதம் பாகம் 1

    Mahangalin Saritham Part 1

    Author:

    ச. நாகராஜன்

    S. Nagarajan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/s-nagarajan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அணிந்துரை

    என்னுரை

    அத்தியாயங்கள்

    1. ஸ்வாமிஜி கிருஷ்ணா!

    2. பகவான் ஸ்ரீ ரமண மஹரிஷி!

    3. ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள்!

    4. குகை நமச்சிவாயர், குரு நமச்சிவாயர்!

    5. ஸ்ரீ குழந்தையானந்த ஸ்வாமிகள்!

    6. ஸ்ரீ அப்பைய தீட்சிதர்

    7. ஸ்ரீ நீலகண்ட தக்ஷிதர்

    8. திருவிசைநல்லூர் ஸ்ரீதர வெங்கடேச ஐயாவாள்!

    9. பகவந்நாம போதேந்திரர்

    10. ஸ்ரீ சமர்த்த ராமதாஸ்

    11. ஸ்ரீ துளஸிதாஸர்!

    12. பக்த மீராபாய்

    13. ஸ்ரீ ஜெயதேவர்

    14. ஸ்ரீ சைதன்ய மஹா ப்ரபு!

    15. ஸ்ரீ நாராயண தீர்த்தர்!

    16. சேக்கிழார்!

    17. ஸ்ரீ குமரகுருபரர்!

    18. திரு அருட்பிரகாச வள்ளலார்

    அணிந்துரை

    C:\Users\INTEL\3D Objects\picture\7.JPG

    பல ஆயிரக்கணக்கான தமிழ் உள்ளங்கள் பெரிதும் ஆவலுடன் ஞானமயம் ஒளிபரப்பில் பார்த்தும், கேட்டும் ரசித்த பாரததேச மகான்களின் சரிதத்தைப் புத்தக வடிவில் அனைவரும் படித்து மகிழும் வகையில் திரு.ச.நாகராஜன் அவர்கள் அளிக்க முன்வந்திருப்பது போற்றுதற்குரியதாகும். அவர் ஒரு பன்முகம் கொண்ட வித்தகர்.

    இதழியல் எழுத்தாளர், வானொலி, தொலைக்காட்சி விரிவுரையாளர், நிர்வாக இயல், அறிவியல், இசை மற்றும் சுயமுன்னேற்றக் கட்டுரையாளர், தேசியவாத சிந்தனையாளர்.

    ஆன்மிகமும், தேசியமும் தன் இரு கண்கள் என பாவித்த தேவர் ஐயாவைப் போல் இவரும் விஞ்ஞானத்தையும், ஆன்மிக நெறியையும் தனது இரு நயனங்களாகப் போற்றிப் பாதுகாத்து வருகிறார். "ஜாக் ஆஃப் ஆல் டிரேடு, (ஆல்ஸோ) ஈக்வெலி

    மாஸ்டர் ஆஃப் எவ்வெரிதிங்" என்றுதான் இவரைப் பற்றிச் சொல்ல வேண்டும்!

    தமிழ், ஆங்கிலம், சம்ஸ்கிருத மொழிகளில் புலமைப் பெற்றவர். மொழி மாற்றம் செய்து வெளியான அவரது கட்டுரைகள் கொம்புத் தேனில் தோய்த்து எடுத்தப் பலாச்சுளையைக் கண் மூடி அனுபவித்து ருசிக்கும் ரசனையைத் தருகின்றன, மேன்மேலும் படித்தாலும் திகட்டாமல் சுவைக்கத் தோன்றுகிறது என்பது என்னவோ, உண்மை தான்!

    ஒருவன் முதலில் தன் தாயிடமிருந்து கொஞ்சம், பின்னர் தந்தையிடமிருந்து கொஞ்சம், அடுத்து ஆச்சாரியாரிடமிருந்து கொஞ்சமும் கற்கிறான். ஆனால் அவன் பூரண அறிவைப் பெற நன்கு கற்றறிந்தப் பெரியோர்களின் அனுக்ரகம் வேண்டும் என்ற (நீலகண்ட தீட்சிதரின்) வாக்குப்படி இந்நூலாசிரியரின் வாழ்க்கை அமைந்திருப்பது தான் அற்புதம். பல மகான்களின் அருளாசியும் கிட்டியிருக்கிறது.

    சங்கம் வளர்(ந்த) மதுரையில் வசித்ததும், சுதந்திரப் போராட்டத் தியாகியும், பத்திரிகைத் துறை அனுபவம் வாய்ந்த தன் தகப்பனார் தெய்வத்திரு சந்தானம் அவர்களின் பேராற்றலும் இயல்பாகவே அவரிடம் வேரூன்றி விட்டதை அவரது எழுத்துக்களில் காணலாம். எளிய தமிழில் அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதில் நிபுணர்.

    அதை இத்தொகுப்பிலுள்ள கட்டுரைகள் மூலம் அறியலாம்.

    இனிய வாக்கு எதையும் வெல்ல வல்லது.

    ஹுவே வாசம் எனும் ஸாமகானம் இனிய சொற்களைப் பேசவும்,கேட்கவும் அறிவுறுத்துகிறது. மகான்கள் இதைத்தான் உபதேசிக்கிறார்கள் என்பது இங்குக் கோடிட்டுக் காட்டப்படுகிறது.

    குரு வணக்கக் கட்டுரையுடன் தொடங்கி மொத்தம் 18 மகான்களின் மகோன்னத வாழ்க்கைச் சரிதையை எங்கும் தொய்வின்றிச் சுவாரசியமாக எடுத்துச் சொல்லியி ருக்கிறார். தற்போதையச் சூழ்நிலையில் நம் கலாச்சாரம், பாரம்பரியத்தை இளம் தலைமுறையினர் அறிந்து கொள்வது மிக மிக அவசியமாகிறது.

    இப்போது இவையெல்லாம் பள்ளிப் பாடப் புத்தகத்தில் இடம் பெறாத நிலை உள்ளது நம்மைச் சங்கடத்தில் ஆழ்த்துகிறது. இத்தொகுப்பைப் படிப்பவர்கள் தங்கள் சந்ததியினருக்கும் எடுத்துச் சொல்ல வேண்டியது அவர்களின் கடமைகளுள் ஒன்றாகும்.

    அப்போதுதான் இந்நூலாசிரியரின் எதிர்பார்ப்பும் நிறைவேறும். வருங்காலச் சந்ததியினரின் வாழ்வும் நலம் பெறும்.

    "துல்யம் கர்ஷந்தி ப்ரதிவீம்

    துல்யம் சாஸ்த்ராணி அதீயதே

    உன்மஜ்ஜந்தி நிமஜ்ஜந்தி

    தைவஸ்யைகஸ்ய சேஷ்டயா"

    விவசாயிகள் பலர் ஒரே மாதிரியே பாடுபட்டு நிலத்தை உழுது பயிரிடுகிறார்கள். அதே போல் பலர் மிகச் சிரமப்பட்டுச் சாஸ்திரங்களை நன்கு கற்கிறார்கள். ஆனாலும் சிலர் தங்கள் வாழ்க்கையில் முன்னேறி வெற்றிப் பெறுகின்றனர். மற்றவர்கள் பெரும் தோல்வியையே சந்திக்கிறார்கள்.இதுதான் விதியின் விளையாட்டு.

    இந்த விதியின் விளையாட்டில் புறம் பார்க்காமல் முன்னேறிக் கொண்டிருக்கிறார் திரு ச.நாகராஜன் அவர்கள்.

    அது தொடரட்டும்.மகான்கள் அருளிய ஆசிகள் அவருக்கு என்றும் நல்வழி காட்டிடும். அவர் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

    வாழ்க தமிழ், வெல்க தமிழ்.

    டிசம்பர் 22, 2021

    பா.கிருஷ்ணன்

    புது டில்லி

    என்னுரை

    லண்டனிலிருந்து வாரந்தோறும் ஒளிபரப்பாகும் ஞானமயத்தில் பங்கு கொள்ளுமாறு லண்டன் திரு சுவாமிநாதன் மற்று சிவஸ்ரீ கல்யாண்ஜி அழைப்பு விடுத்த போது அதை ஏற்றுக் கொண்டு வாரந்தோறும் ஒரு மகானின் சரிதத்தைக் கூறும் பாக்கியம் கிடைத்தது.

    அந்த உரைகளில் ஒரு பகுதியே இந்த நூலாக அமைகிறது. ஆகவே திரு சுவாமிநாதன், திரு கல்யாண்ஜி ஆகியோருக்கு எனது உளம் கனிந்த நன்றியை காணிக்கை ஆக்குகிறேன்.

    ஆதி சங்கரரின் அற்புதமான பஜகோவிந்தத்தில் வரும் முக்கியமான அருளுரை இது:

    "ஸத் ஸங்கத்வே நிஸ்ஸங்கத்வம்

    நிஸ்ஸங்கத்வே நிர்மோஹத்வம்

    நிர்மோஹத்வே நிச்சல தத்வம்

    நிச்சல தத்வே ஜீவன் முக்தி"

    சாதுக்கள், மகான்களின் உறவு கிடைத்தால் பந்தபாசத்திலிருந்து விடுதலை கிடைக்கும். பந்தபாச விடுதலையானது நம்மை மோகத்திலிருந்து விடுபடச் செய்யும். மோகத்திலிருந்து விடுபட்டால் என்றும் உள்ள வஸ்து விளங்கும். என்றும் ஸ்திரமாக உள்ள வஸ்து விளங்கினால் ஜீவன் முக்திப் பேறு கிடைக்கும்.

    இதையே யோகவாசிஷ்டமும் இப்படி வலியுறுத்துகிறது :-

    "அறக்குறைவை நிறைவாக்கும், சம்பத்தாக்கும்

    ஆபத்தை, சுபமாக்கும் அசுபம் தன்னை,

    சிறக்கும் உயர்ந்தவர் கூட்டம் என்னும் கங்கைச்

    சீத நீர் ஆடினார்க்குச் செந்தீ வேள்வி

    இறக்கரிய தவம் தானம் தீர்த்தம் வேண்டா,

    இடர் பந்தம் அறுத்தெவர்க்கும் இனியோர் ஆகிப்

    பிறப்பெனும் வேலைப் புணயாம் உணர்வு சான்ற

    பெரியோரை எவ்வகையும் பேணல் வேண்டும்"

    அருளாளர்களை எப்பாடுபட்டேனும் அணுகி ஆசிபெற வேண்டும்; அவர்கள் உபதேசங்களைக் கேட்க வேண்டும்; அதை வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும். அவர்களின் அருளாசி ஆபத்தைச் சம்பத்தாக்கும். அசுபத்தைச் சுபம் ஆக்கும்!

    அத்துடன் அவர்கள் பூவுலகில் பூதவுடலுடன் இல்லாவிட்டாலும் கூட ஜீவசமாதியில் இருந்து அருள் பாலிக்கிறார்கள். ஆகவே அவர்களை நினைப்பதும், அவர்களை வணங்கிப் போற்றுவதும், அவர்கள் கூறிய அருளுரைகளைப் படித்து அதன்படி வாழ்க்கையை அமைத்துக் கொள்வதும் நற்பயன் அளிக்க வல்லதே. இந்த வகையில் முதலில் அருளாளர்களைப் பற்றி முதலில் அறிவதே இதற்கான முதல் படி.

    இந்த நூலில் 18 மகான்களின் சரிதத் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.

    குருவந்தனமாக அச்சன்கோவில் ஸ்வாமிஜி கிருஷ்ணாஜி பற்றிய கட்டுரை முதல் கட்டுரையாக அமைகிறது.

    அதை அடுத்து வரும் கட்டுரைகள் ஞானமயம் ஒளிபரப்பில் இடம் பெற்றவை.

    இந்த நூலுக்கு அணிந்துரை கொடுத்து என்னை கௌரவித்திருப்பவர் பிரபல எழுத்தாளர் திரு டில்லி பா.கண்ணன் அவர்கள். தமிழ், ஆங்கிலம், சம்ஸ்கிருதம், ஹிந்தி ஆகிய பல்மொழி வல்லுநரான இவர் வால்சந்த் நகர் கனரகத் தொழிற்சாலை, புனேயிலும் டாடா ஸ்டீல் டின்பிளேட், ஜாம் ஜெட்பூரிலும் உயர் பதவிகளை வகித்துள்ளார். தற்சமயம் ஓய்வு பெற்று புது தில்லியில் வசித்து வருகிறார். கல்கி, ஆனந்தவிகடன், குமுதம் பக்தி ஸ்பெஷல், தீபம், ஞான ஆலயம் உள்ளிட்ட ஏராளமான பத்திரிகைகளில் அருமையான கட்டுரைகளை ஆன்மீக்த்தில் தோய்த்து அளித்து வந்தார்; அளித்து வருகிறார். இவருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்தப் புத்தகத்தை வெளியிட முன் வந்த Pustaka Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கும் அவரது குழுவினருக்கும் என் நன்றி உரித்தாகுக!

    இதைப் படிக்கும் அனைவர் வாழ்விலும் சர்வ மங்களத்தை எல்லா மகான்களும் அருளட்டும் என்ற பிரார்த்தனையுடன் நன்றி கூறி புத்தகத்தின் உள்ளே வாருங்கள் என உங்களை அழைக்கிறேன்.

    22-12-21

    ச.நாகராஜன்

    பங்களூர்

    1. ஸ்வாமிஜி கிருஷ்ணா!

    (Swamiji Krishna of Achankovil!) – 1

    1

    மகானுடனான அறிமுகம்!

    ஸ்வாமிஜி கிருஷ்ணா எங்கள் குடும்பத்தினரின் குரு. குரு வந்தனமாக இந்த முதல் கட்டுரை அமைகிறது.

    ஆயிரத்தி தொள்ளாயிரத்து ஐம்பதுகளின் பிற்பகுதி, ஆயிரத்தி தொள்ளாயிரத்து அறுபதுகளின் ஆரம்ப காலம்! எங்களது அதிர்ஷ்டம் ஆரம்பமானது!

    ஸ்வாமிஜி கிருஷ்ணா பெரும் மகான். அவருடைய ஆசீர்வாதம் எங்கள் குடும்பத்திற்கு கிடைத்தது பூர்வ ஜென்ம புண்ணிய பயனே!

    மதுரையில் பெரும் வக்கீலாகத் திகழ்ந்த ராமாராவ் ஸ்வாமிஜியின் நெடுநாளைய பக்தர்.

    ஸ்வாமிஜி தினமும் காலையில் கணபதி ஹோமம் செய்வது வழக்கம். அவரது இளம் பருவத்திலிருந்தே இது ஆரம்பமானது. மஹா கணபதியின் பரிபூரண அனுக்ரஹம் பெற்றதால் அவரை அனைவரும் மஹா கணபதியாகவே பாவித்தோம்.

    எனது தந்தையார் தினமணி திரு வெ.சந்தானம் தினமணி நாளிதழில் ஆன்மீகச் செய்திகளுக்கு உரிய முக்கியத்துவம் கொடுத்து பத்திரிகைத் துறையில் ஒரு புதிய வழியைக் காண்பித்தார்.

    ஸ்வாமிஜியின் கணபதி ஹோமம் பற்றிய செய்திகளும் அச்சன்கோவில் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியும் தினமணியில் தவறாமல் இடம் பெறவே அட்வகேட் ராமாராவ் அவரது இல்லத்தில் நடக்கும் கணபதி ஹோமத்திற்கு அழைப்பு விடுத்தார்.

    ஸ்வாமிஜியின் அருளாசி கிடைக்க ஆரம்பித்தது. ஏராளமான அற்புதங்கள் நிகழலாயின. சில சொல்லக் கூடியவை; சில தனிப்பட்ட நபர்களுக்கு மட்டுமே தெரிந்த அந்தரங்க விஷயங்கள்!

    ஸ்வாமிஜி வசித்து வந்த ஊர் தென்காசியை அடுத்துள்ள ஆயக்குடி.

    லக்ஷக்கணக்கான பக்தர்கள் அச்சன்கோவில் அரசே, சரணம் ஐயப்பா என்று கோஷம் போடுகிறார்களே இன்று, அந்த அச்சன் கோவிலை ஸ்தாபித்தவரே அவர் தான்.

    பரசுராமர் ஸ்தாபித்து அச்சன்கோவில் மலைப் பகுதியில் ஆழப் புதைந்து கிடந்த ஐயப்பனை எடுத்து அதை ஸ்தாபித்து கோவிலை அமைத்து புஷ்பாஞ்சலி வழிபாட்டையும் அவரே தொடங்கி வைத்தார்.

    ஐயப்பன் அவரைக் கனவில் வந்து தன்னை பிரதிஷ்டை செய்யுமாறு அவருக்கு அருள் பாலிக்க அவரும் பலருடன் தான் கனவில் கண்ட இடத்திற்குச் சென்று அங்கு ஓரிடத்தைக் காட்டித் தோண்டச் சொல்ல அங்கே கிடைத்தார் பரசுராமர் ஸ்தாபித்த விக்ரஹமான ஐயப்பன்.

    2

    அச்சன்கோவிலுக்கு சாலை வேண்டும் : ஸ்வாமிஜியின் சங்கல்பம்!

    இடம் தென்காசி.

    டிராவலர்ஸ் பங்களா வாரண்டாவில் காலையில் ஒரு கும்பலாக சேர்களில் அமர்ந்து கொண்டிருந்தோம்.

    விஷயம் என்னவெனில் தென்காசி ஆலயத்தில் கும்பாபிஷேகம்.

    இந்த ஆலயத்தைப் பற்றிய முக்கிய விசேஷம் ஒன்று உண்டு.

    இதைக் கட்டிய பராக்ரம பாண்டியன் ஒரு கல்வெட்டில் இப்படிப் பொறித்து வைத்திருந்தான்.

    "ஆராயினும் இந்த தென்காசி மேவும் பொன்னாலயத்து

    வாராததோர் குற்றம் வந்தாலப்போதங்கு வந்ததனை

    நேராகவே யொழித்துப் புரப்பார்களை நீதியுடன்

    பாராரறியப் பணிந்தேன் பராக்ரம பாண்டியனே"

    என்ன ஒரு பக்தி வினயம் பாருங்கள். பின்னால் ஒரு குற்றம் கோவிலுக்கு வந்து அதை சரி செய்பவர்களுக்கு இப்போதே எனது நமஸ்காரம் என்று பெரும் மன்னனான அவன் கல்வெட்டில் செதுக்கி வைத்திருந்தான்.

    அந்தக் கோவில் கோபுரம் தான் விரிசல் கண்டிருந்தது. அதற்குத் தான் அதை புனருத்தாரணம் செய்து கும்பாபிஷேகம்.

    நானும் ஒட்டிக் கொண்டு அங்கு சென்றிருந்தேன்.

    டிராவலர்ஸ் பங்களாவில் என் முன்னே கம்பீரமாக வீற்றிருந்தவர் மாதவன் நாயர். கேரளாவின் டிரான்ஸ்போர்ட் பிரிவின் மிக உயரிய அதிகாரி.

    மனிதர் கடும் ஆசாமி. யாராவது தாடி மீசை வைத்திருந்தால் நம்பக் கூடாது; இழுத்துப் பார்க்க வேண்டும் என்று சொல்பவர் அவர்.

    அவரிடம் சும்மா இருக்காமல், எப்படி ஸ்வாமிஜியுடனான உங்கள் அறிமுகமும் தொடர்பும் ஏற்பட்டது என்று கேட்டேன்.

    வேறு யாரும் அவருடன் பேசக் கூட பயப்படுவர். அப்படி ஒரு மிடுக்கும் அதிகார தோரணையும் கொண்டவர் அவர்.

    தைரியமாகக் கேட்டு வைத்தேன்.

    அவர் உற்சாகமாகச் சொல்லத் தொடங்கினார். அது தான் இந்த சம்பவம் :-

    மாதவன் நாயரிடம் அச்சன்கோவிலுக்கு சரியான பாதை இல்லை என்றும் கரடுமுரடாக உள்ள மலைப்பாதையை சரி செய்து சாலை அமைத்து பக்தர்கள் செல்வதற்கு உரியதாக ஆக்க வேண்டும் என்பது ஸ்வாமிஜியின் ஆசை. சங்கல்பம்.

    சொல்லிச் சொல்லிப் பார்த்தார்.

    கடைசியில் ஒரு நாள் மாதவன் நாயர் தானே இன்ஸ்பெக்ட் செய்ய வருகிறேன் என்று வந்தார்.

    ஸ்வாமிஜியுடன் அந்த கரடு

    Enjoying the preview?
    Page 1 of 1