Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Natchathira Athisayangalum Marmangalum
Natchathira Athisayangalum Marmangalum
Natchathira Athisayangalum Marmangalum
Ebook125 pages45 minutes

Natchathira Athisayangalum Marmangalum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பிரபஞ்சம் பற்றி நமது மஹரிஷிகள் அறியாத விஷயமே இல்லை. அவற்றில் ஒன்று நட்சத்திர மர்மங்கள். இவற்றை எளிதாக புராணக் கதைகளாகவும், கவிதைகளாகவும் அவர்கள் நமக்கு வழங்கினர். அத்தோடு மட்டுமின்றி மனித குலத்தின் மீது அவர்களுக்குள்ள எல்லையிலாக் கருணையினால் மனித வாழ்வில் ஏற்படக் கூடிய கஷ்டங்களைப் போக்க உரிய வழிகளையும் காட்டினர். இதில் முக்கியமான ஒன்று பரிகாரங்கள். நட்சத்திரம் சம்பந்தமான வழிபாடு, பரிகாரம் ஆகியவற்றை அவர்கள் மிகத் தெளிவு பட வழி வழியாகக் கற்பித்தனர். அன்னிய ஆட்சியால் நாம் இழந்த பலவற்றுள் இந்த நட்சத்திர வித்யாவும் ஒன்று.

இந்த நூலில் ஏராளமான நட்சத்திர அதிசயங்களையும் அறிவியல் செய்திகளையும் காணலாம். நூலில் உள்ள சில அத்தியாயங்களின் தலைப்புகள்: பாற்கடலில் பள்ளி கொண்ட பரந்தாமன்!, காமனை எரித்த சிவனின் நட்சத்திரம் திருவாதிரை!, கார்த்திகை மைந்தா கந்தா சரணம்!, பிருந்தாவனத்தில் நந்தகுமாரன்... அந்த நாளும் வந்திடாதோ!, வானில் ஒரு மாபெரும் மஹாபாரதப் போர்!, வானில் நாம் காணும் அர்ஜுனனும் திரௌபதியும்!, ஒன்பது கோடி சூரியன்களை தனக்குள் அடக்கக்கூடிய அதிசய கேட்டை நட்சத்திரம்!, சப்த ரிஷி மண்டல அதிசயங்கள்!, வானத்தில் ராமாயணக் காட்சிகள், அதிசய நட்சத்திரம் ஸ்வாதி!, வான மண்டலத்தைப் பிரிக்கும் விசாகம்!, அதிசயமான அகத்திய நட்சத்திரம்!, அஸ்வினி ரஹஸ்யம்!, நிலவைக் கவர்ந்த ரோஹிணி!,விண்ணிலே வீணை மீட்டும் சரஸ்வதியும், பிரம்மாவும்!, ஆரோக்கியம் அருளும் சதயம், ரேவதி ரஹஸ்யம் நலம் தரும் நட்சத்திர சூக்தம்!

Languageதமிழ்
Release dateAug 26, 2023
ISBN6580151009632
Natchathira Athisayangalum Marmangalum

Read more from S. Nagarajan

Related to Natchathira Athisayangalum Marmangalum

Related ebooks

Reviews for Natchathira Athisayangalum Marmangalum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Natchathira Athisayangalum Marmangalum - S. Nagarajan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    நட்சத்திர அதிசயங்களும் மர்மங்களும்

    Natchathira Athisayangalum Marmangalum

    Author:

    ச. நாகராஜன்

    S. Nagarajan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/s-nagarajan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    இரண்டாம் பதிப்பின் முன்னுரை

    1. பாற்கடலில் பள்ளி கொண்ட பரந்தாமன்!

    2. காமனை எரித்த சிவனின் நட்சத்திரம் திருவாதிரை!

    3. கார்த்திகை மைந்தா கந்தா சரணம்!

    4. பிருந்தாவனத்தில் நந்தகுமாரன்… அந்த நாளும் வந்திடாதோ!

    5. வானில் ஒரு மாபெரும் மஹாபாரதப் போர்!

    6. வானில் நாம் காணும் அர்ஜுனனும் திரௌபதியும்!

    7. ஒன்பது கோடி சூரியன்களை தனக்குள் அடக்கக்கூடிய அதிசய கேட்டை நட்சத்திரம்!

    8. சப்த ரிஷி மண்டல அதிசயங்கள்!

    9. வானத்தில் ராமாயணக் காட்சிகள்!

    10. அதிசய நட்சத்திரம் ஸ்வாதி!

    11. வானமண்டலத்தைப் பிரிக்கும் விசாகம்! - 1

    12. வானமண்டலத்தைப் பிரிக்கும் விசாகம்! - 2

    13. வானமண்டலத்தைப் பிரிக்கும் விசாகம்! - 3

    14. அதிசயமான அகத்திய நட்சத்திரம்!

    15. அஸ்வினி ரஹஸ்யம்! - 1

    16. அஸ்வினி ரஹஸ்யம்! - 2

    17. நிலவைக் கவர்ந்த ரோஹிணி! - 1

    18. நிலவைக் கவர்ந்த ரோஹிணி! - 2

    19. விண்ணிலே வீணை மீட்டும் சரஸ்வதியும், பிரம்மாவும்!

    20. ஆரோக்கியம் அருளும் சதயம்

    21. ரேவதி ரஹஸ்யம்!

    22. 27 நட்சத்திரங்களின் பெயர்களும் வானவியல் பெயர்களும்

    23. நலம் தரும் நட்சத்திர சூக்தம்!

    24. முடிவுரை

    இரண்டாம் பதிப்பின் முன்னுரை

    ஆன்மீக மாத இதழான ஞான ஆலயம் இதழில் ஆன்மீக சம்பந்தமான கட்டுரைகளை எழுதி வந்தேன். ஆலயம் குழுமத்தின் சார்பில் ஆலயம் ஶ்ரீ ஜோசியம் பத்திரிகை தொடங்கப்பட்டது. அதில் ஜோதிடம் சம்பந்தமான கட்டுரைகளையும் நட்சத்திர மர்மங்களையும் பற்றி எழுதி வரலானேன்.

    24-5-2011 இதழ் தொடங்கி நட்சத்திர அதிசயங்கள் என்ற தொடர் வெளிவர ஆரம்பித்தது. வாசகர்களின் கவனத்தை ஈர்த்தது. அதுவே இந்த நூல்.

    அனைவரது வேண்டுகோளுக்கும் இணங்க இந்த நூல் மின்னணு - டிஜிட்டல் புத்தகமாக வெளிவந்தது.

    முதல்பதிப்பு வெளியாகி ஆண்டுகள் பல கடந்துவிட்ட நிலையில் சில கூடுதல் அத்தியாயங்களோடு செம்மைப்படுத்தப்பட்ட நூலாக இப்போது பலரின் வேண்டுகோளுக்கிணங்க இந்தப் புத்தகம் மின்னணு நூலாகவும் அச்சுப்பதிப்பாகவும் வெளிவருகிறது.

    டிஜிட்டல் வடிவிலும், அச்சுப்பதிப்பாகவும் இதை மறுபதிப்பாகக் கொண்டுவர முன்வந்துள்ள பெங்களூர் நிறுவனமான PUSTAKA DIGITAL MEDIA-வின் உரிமையாளர் திரு. ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    பிரபஞ்சம் பற்றி நமது மஹரிஷிகள் அறியாத விஷயமே இல்லை. அவற்றில் ஒன்று நட்சத்திர மர்மங்கள். இவற்றை எளிதாக புராணக் கதைகளாகவும், கவிதைகளாகவும் அவர்கள் நமக்கு வழங்கினர். அத்தோடு மட்டுமின்றி மனித குலத்தின் மீது அவர்களுக்குள்ள எல்லையிலாக் கருணையினால் மனித வாழ்வில் ஏற்படக்கூடிய கஷ்டங்களைப் போக்க உரிய வழிகளையும் காட்டினர். இதில் முக்கியமான ஒன்று பரிகாரங்கள். நட்சத்திரம் சம்பந்தமான வழிபாடு, பரிகாரம் ஆகியவற்றை அவர்கள் மிகத்தெளிவுபட வழிவழியாகக் கற்பித்தனர்.

    அன்னிய ஆட்சியால் நாம் இழந்த பலவற்றுள் இந்த நட்சத்திர வித்யாவும் ஒன்று.

    இயல்பாகவே எனக்கு நட்சத்திரங்கள் மீதிருந்த ஆர்வமானது இது பற்றிய மஹரிஷிகளின் வாக்குகளையும் அறிவியல் அறிஞர்களது நவீன கண்டுபிடிப்புகளையும் பற்றி அறியத்தூண்டியது.

    ரிஷிகள் கூறிய அனைத்தையும் நவீன கண்டுபிடிப்புகள் உறுதிப்படுத்துவதைப் பார்த்தபோது பிரமிப்பு ஏற்பட்டது.

    இவற்றைக் கட்டுரை வாயிலாக அன்பர்களுடன் பகிர்ந்து கொண்ட போது அனைவரும் வரவேற்றனர். மேலும் மேலும் எழுதுமாறு வற்புறுத்தினர். அவர்கள் அனைவருக்கும் எனது நன்றி.

    இதை ஶ்ரீ ஜோசியம் பத்திரிகையில் வெளியிட்ட திருமதி. மஞ்சுளா ரமேஷ் அவர்களுக்கும் எனது உளம்கனிந்த நன்றி.

    இந்த நூலைப் படிப்பவர்கள் நான் எழுதியுள்ள ‘ஜோதிடம் உண்மையா’, ‘ஜோதிட மேதைகளின் வரலாறு’, ‘நவக்கிரகங்கள்’ மற்றும் ‘ஜோதிடம் பார்க்கும் முன் தெரிந்துகொள்ளுங்கள்’ ஆகிய நூல்களையும் படித்தால் கூடுதல் விவரங்களைத் தெரிந்துகொண்டு நலம் பெறலாம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    நன்றி.

    ச. நாகராஜன்

    பங்களூர்.

    18-2-2023

    1. பாற்கடலில் பள்ளி கொண்ட பரந்தாமன்!

    விஷ்ணு எங்கு உள்ளான்?

    பாற்கடலில் பள்ளி கொண்ட பரந்தாமன் என்றும் ஆதிசேஷன் குடைபிடிக்க அனந்த சயனத்தில் படுத்திருக்கும் பெருமாள் என்றும் நாம் கொண்டாடும் மஹாவிஷ்ணு எங்கு உள்ளான்? இதற்கு விடையைக் கண்டுபிடிக்க திருவோண நட்சத்திரத்தைத் தான் நாம் நாடவேண்டும்.

    27 நட்சத்திரங்களில் இரண்டு நட்சத்திரங்களுக்கே திரு என்ற அடைமொழி வழங்கப்பட்டு அவை சிறப்பிக்கப்படுகின்றன. ஒன்று மஹாவிஷ்ணுவின் நட்சத்திரமான திருவோணம். இன்னொன்று சிவபெருமானின் பெருமையை விளக்கும் திருவாதிரை!

    மஹாவிஷ்ணுவின் அவதார நட்சத்திரமான திருவோணத்திற்கு அதிதேவதை மஹாவிஷ்ணு. இது மகர ராசியில் உள்ளது. இதை மேலை நாட்டில் அக்கிலா என்றும் ஆல்டேர் என்றும் அழைக்கின்றனர். எட்டு நட்சத்திரத் தொகுதியான அக்கிலாவின் மேலே உள்ள மூன்று நட்சத்திரங்கள் கருடனின் தலைப்பகுதியை உருவாக்கும். இந்த மூன்று நட்சத்திரங்களே விஷ்ணுவின் மூன்றுபாதம் எனப் புராணம் போற்றும்.

    மூவுலகும் ஈரடியால் அளந்த திருமால் பெருமையைக் கேட்காத செவி என்ன செவியே என்று இளங்கோவடிகள் கேட்பதை அனைவரும் அறிவர். மாபெரும் அரசனான மகாபலி இந்திரனுக்குத் தொல்லை தந்து அசுர ஆட்சியைப் புரிந்து வரும் போது அவன் கொடுமையை நீக்க கச்யப மஹரிஷிக்கும் அதிதிக்கும் மகனாக மஹாவிஷ்ணு அவதரிக்கிறார்.

    வாமனனாக- குள்ளமாகத் தோன்றிய அவர், மகாபலி யாகம் ஒன்று நடத்தும் போது யாகசாலைக்குச் செல்கிறார். என்ன வேண்டும் என்று கேட்ட மகாபலியிடம் மூன்று அடி நிலம் கேட்கிறார். திருவிக்ரமனாக உருமாறி இரு அடிகளால் மண்ணையும் விண்ணையும் அளந்து மூன்றாவது அடியை எங்கு வைப்பது என்று கேட்க மகாபலி தன் சிரத்தைக் காண்பிக்கிறான். அவனை பாதாளலோகம் அனுப்பிய விஷ்ணு வருடம் ஒருமுறை அவன் பூமிக்கு வர வரம் தருகிறார். அதுவே ஓணம் பண்டிகையாக மலர்கிறது.

    பிரபஞ்சத்தின் தலைநகரம் எது?

    இந்த பிரபஞ்சத்தின் தலைநகரம் எது? அதைக் காப்பவன் யார்? என்ற வேதம் கேட்கும் அற்புதமான கேள்விக்கு அதுவே பதிலும்

    Enjoying the preview?
    Page 1 of 1