Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Paravaigal Sagunam Unmaiyaa? Kadavulukku Vaganam Etharkkaga?
Paravaigal Sagunam Unmaiyaa? Kadavulukku Vaganam Etharkkaga?
Paravaigal Sagunam Unmaiyaa? Kadavulukku Vaganam Etharkkaga?
Ebook203 pages1 hour

Paravaigal Sagunam Unmaiyaa? Kadavulukku Vaganam Etharkkaga?

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இந்துக் கடவுளரின் வாகனங்கள் பலரையும் சிந்திக்க வைக்கும். பிள்ளையார் சிலையைப் பார்த்தவுடன் இது என்ன கூத்து? எலி மீது யானை உட்கார முடியுமா? என்று சிந்திப்போம். முருகன் சிலையைப் பார்த்தவுடன் 12 கைகளில் 12 பொருள்கள் எதற்கு? என்று வியப்போம். ஒவ்வொரு கடவுளருக்கும் உள்ள கொடிகள், வாகனங்கள் பற்றி புறநானூறு முதலிய சங்க நூல்களில்கூட புலவர்கள் பாடியுள்ளனர். தொல்காப்பியமோ பலராமனின் பனைக்கொடியைக் குறிப்பிடுகிறது. இது ஒரு புறமிருக்க பஞ்சாங்கம் முதல் புற நானூறு வரை பறவைகளின், பல்லியின் சகுனம், நிமித்தம் பற்றிப் பேசுகின்றன.

இந்துக்களைப் பின்பற்றி இராக், எகிப்திலும் வாகனங்களைக் காண்கிறோம். ராவணனின் வீணைக் கொடி, அர்ஜுனனின் குரங்குக்கொடி, துரியோதனனின் பாம்புக்கொடி போல இன்று உலக நாடுகள் அனைத்தும் கொடியை வைத்துக் கொண்டு இருக்கின்றன. இந்துக்களின் கலாசார செல்வாக்கை உலகம் முழுதும் காணமுடிகிறது.

Languageதமிழ்
Release dateSep 10, 2022
ISBN6580153509006
Paravaigal Sagunam Unmaiyaa? Kadavulukku Vaganam Etharkkaga?

Read more from London Swaminathan

Related to Paravaigal Sagunam Unmaiyaa? Kadavulukku Vaganam Etharkkaga?

Related ebooks

Reviews for Paravaigal Sagunam Unmaiyaa? Kadavulukku Vaganam Etharkkaga?

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Paravaigal Sagunam Unmaiyaa? Kadavulukku Vaganam Etharkkaga? - London Swaminathan

    http://www.pustaka.co.in

    பறவைகள் சகுனம் உண்மையா? கடவுளுக்கு வாகனம் எதற்காக?

    Paravaigal Sagunam Unmaiyaa? Kadavulukku Vaganam Etharkkaga?

    Author :

    லண்டன் சுவாமிநாதன்

    London Swaminathan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    1. புதையல் கிடைக்க, காதலில் வெற்றி பெற குருவி சோதிடம்!!

    2. ரிக் வேதத்தில் புறா ஜோதிடம்; தமிழர்களின் புறா கண்டுபிடிப்பு – 1

    3. ரிக் வேதத்தில் புறா ஜோதிடம் & தமிழர்களின் அதிசயக் கண்டுபிடிப்பு -2

    4. பிரிட்டனில் ‘காக்கா’ ஜோதிடம்! மேலும் ஒரு அதிசயம்!!

    5. கா…கா…கா…!!! கா..கா..கா..!!!

    6.காகத்திடம் கற்க வேண்டிய ஆறு விஷயங்கள்!

    7. காகம் மீது சாணக்கியன் (வசை) பாடியது!

    8.ஆந்தைகள் அலறல்: நல்ல சகுனமா? கெட்ட சகுனமா?- பகுதி 1

    9.ஆந்தைகள் அலறல்: நல்ல சகுனமா? – பகுதி 2

    10. சகுனமும் ஆரூடமும்: வேத கால நம்பிக்கைகள்

    11. அன்னப் பறவை பற்றிய அதிசயச் செய்திகள்!!

    12. எந்தக் கடவுளுக்கு என்ன வாகனம்?

    13. சங்க இலக்கியத்தில் வாகனங்கள்

    14.வாகனங்கள் தோன்றியது எங்கே? ஏன்? எப்போது?

    15. உலகம் முழுதும் இந்து தெய்வ வாகனங்கள்

    16.பறவைகளும் மிருகங்களும் வழிபட்ட தலங்கள்

    17. காளை வாகனம் எப்படிக் கிடைத்தது?

    18. முள்ளங்கிப் பிள்ளையாரும் ஒட்டக அனுமனும்

    19. கிளியின் சகோதர பாசம்!

    20. சிலைத் திருடனைக் காட்டிக்கொடுத்த கிளி!

    21. கொலைகாரனைக் காட்டிக்கொடுத்த கிளி

    22.தமிழ், சம்ஸ்கிருத இலக்கியத்தில் சிங்கம்!

    23. இலக்கியத்தில் அதிசய மான்கள்!

    24. மான் குட்டிக்குப் பால் கொடுத்த புலி!

    25. தமிழ் இலக்கியத்தில், அதர்வண வேதத்தில் புலிப்பல் தாலி

    26. மஹாபாரதத்தில் ஒரு அதிசய பறவை

    27. ரிக் வேதத்தில் ஒரு பறவைப் பாட்டு!

    28. வேதத்தில் கபிஞ்ஜலா பறவை மர்மம்!

    29. கொடுங்கோலன் கஜினி முகமதுவுக்கு ஆந்தைகள் கற்பித்த பாடம்

    30. பாப்பா பாப்பா கதை கேளு; புறாத் திருடன் கதை கேளு!

    31. மனு ஸ்மிருதியில் மிருகங்கள்!

    32. தமிழில் ஒட்டக மர்மம்

    33. மஹாபாரதத்தில் ஒட்டகக் கதை

    34. பிராணிகளின் அபூர்வ சக்தி! பேசும் ரஷ்ய யானை!!

    35. கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை?

    36. ரிக்வேதத்தில் நெருப்புக் கோழி வந்த மர்மம்

    37. வேத நாயும் மாதா கோவில் நாயும்

    38. பாரதி பாடலில் மிருகங்கள்!

    39. புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது-பர்த்ருஹரி

    முன்னுரை

    இந்தப் புஸ்தகத்தில் மூன்று விஷயங்கள் அலசி ஆராயப்படுகின்றன

    1.பறவைகளும் சகுனங்களும்

    2..கடவுளர்களும் வாகனங்களும்

    3.உயிரினங்களின் அபூர்வ சக்தி

    இந்துக் கடவுளரின் வாகனங்கள் பலரையும் சிந்திக்க வைக்கும். பிள்ளையார் சிலையைப் பார்த்தவுடன் இது என்ன கூத்து? எலி மீது யானை உட்கார முடியுமா? என்று சிந்திப்போம். முருகன் சிலையைப் பார்த்தவுடன் 12 கைகளில் 12 பொருள்கள் எதற்கு? என்று வியப்போம். ஒவ்வொரு கடவுளருக்கும் உள்ள கொடிகள், வாகனங்கள் பற்றி புறநானூறு முதலிய சங்க நூல்களில்கூட புலவர்கள் பாடியுள்ளனர். தொல்காப்பியமோ பலராமனின் பனைக்கொடியைக் குறிப்பிடுகிறது. இது ஒரு புறமிருக்க பஞ்சாங்கம் முதல் புற நானூறு வரை பறவைகளின், பல்லியின் சகுனம், நிமித்தம் பற்றிப் பேசுகின்றன.

    இந்துக்களைப் பின்பற்றி இராக், எகிப்திலும் வாகனங்களைக் காண்கிறோம். ராவணனின் வீணைக் கொடி, அர்ஜுனனின் குரங்குக்கொடி, துரியோதனனின் பாம்புக்கொடி போல இன்று உலக நாடுகள் அனைத்தும் கொடியை வைத்துக் கொண்டு இருக்கின்றன. இந்துக்களின் கலாசார செல்வாக்கை உலகம் முழுதும் காணமுடிகிறது. நான் பல்லாண்டுகளாக செய்த ஆராய்ச்சி மேலை நாட்டினரின் விளக்கங்களைத் தவிடு பொடியாக்குகின்றன. 11 ஆண்டுகளாக என்னுடைய இரண்டு பிளாக்குகளில் எழுதிய கட்டுரைகளின் முதல் தொகுதி இது. மேலும் பல வியப்பான செய்திகளை பத்திரிக்கைகளும் அவ்வப்போது வெளியிடுகின்றன. அவைகளையும் காலப்போக்கில் தொகுத்து வைத்தேன். ஆங்ககாங்கு அவைகளையும் சேர்த்துள் ளேன். கட்டுரை வெளியான தேதி, என் பிளாக்கில் அதற்காக கொடுக்கப்பட்ட எண்களையும் ஒவ்வொரு கட்டுரையிலும் காணலாம். சில விஷயங்கள் மட்டும் திரும்பிச் சொல்லப்பட்டிருக்கலாம். வாசகர்கள் அவைகளைப் பொறுமையுடன் படிக்க வேண்டுகிறேன். உங்கள் கருத்துக்களை அறிய ஆவலு டன் உள்ளேன். எனது தொடர்பு முகவரியும் இந்தப் புஸ்தகத்தில் உள்ளது. என்னுடைய 'பிளாக்'குகளில் கூடுதல் படங்களையும் காணலாம்.

    லண்டன் சுவாமிநாதன்

    ஆகஸ்ட் 2022, லண்டன்

    1. புதையல் கிடைக்க, காதலில் வெற்றி பெற குருவி சோதிடம்!!

    Article No.1669; Dated 23 February 2015.

    வராகமிகிரர் சொல்லும் வாலாட்டிக் குருவிகள் ஆரூடம்

    சகுனம் என்றால் பறவை என்று சம்ஸ்கிருதத்தில் அர்த்தம். இதை வைத்து தான் சகுனம் பார்ப்பது, நல்ல சகுனமா?, கெட்ட சகுனமா? என்ற சொற்றொடர்கள் உருவாயின. தமிழ் நாட்டில் கிளி ஜோதிடம் உண்டு. ஊருக்கு ஊர் இத்தகைய கிளி சோதிடர்களைக் காணலாம். ஆனால் வராகமிகிரர் கூறுவது வாலாட்டிக் குருவி ஜோதிடம்!

    பஞ்சாங்கங்களில் காணப்படும் பல்லி சொல்லுக்குப் பலன், பக்ஷி சாஸ்திரம் ஆகியவை நமக்குத் தெரியும். ஆனால் வராஹமிகிரர் சொல்லும் வாலாட்டிக் குருவி விஷயம் நமக்குத் தெரியாது. சங்கத் தமிழர்களுக்கு இதில் நம்பிக்கை உண்டு. பல்லி சொல் கேட்டு, காட்டுப் பன்றி கூட வெளியே போக பயந்த சங்க இலக்கியப் பாடலை ஏற்கனவே கொடுத்துள்ளேன். வராஹமிகிரரோ நரி ஜோதிடம், பறவைகள் ஜோதிடம் எல்லாவற்றுக்கும் பல அத்தியா யங்களை ஒதுக்கியுள்ளார். அவர் ஒரு விஞ்ஞானி. இருந்தபோதிலும் 1500 ஆண்டுக ளுக்கு முன்னர் இந்தியாவில் நிலவிய எல்லா விஷயங்களையும் தொகுத்து அளிப்பது அவர் தம் பணி.

    இனி, வாலாட்டிக்குருவிகள் (Wagtail Birds) பற்றி அவர்தம் பிருஹத் சம்ஹிதா – என்னும் அற்புதமான சம்ஸ்கிருத கலைக் களஞ்சியத்தில் சொல்லும் சுவையான சில விஷயங்களை மட்டும் காண்போம்.

    "வாலாட்டிக் குருவிகளைப் பார்ப்பது பற்றி பழங்கால முனிவர்கள் சொன்னதை இதோ எடுத்துரைக்கப் போகிறேன்.

    "முகம் முதல் கழுத்து வரை கறுப்பாக இருக்கும் வாலாட்டிகளுக்கு சம்பூர்ணம் என்று பெயர். இதை முதலில் கண்டால் உங்கள் ஆசை அபிலாஷைகள் நிறைவேறும்.

    "வெள்ளைக் கழுத்து, அதில் கறுப்புப் புள்ளிகளுடன் உடைய வாலாட்டிக் குருவிகளுக்கு ரிக்தா என்று பெயர். அதைப் பார்த்தால் ஏமாற்றமான செய்திகளே கிடைக்கும்.

    "மஞ்சள் நிறத்திலுள்ள வாலாட்டிக் குருவிகளுக்கு கோபிலா என்று பெயர். அதைப் பார்த்தால் தொல்லைகளே வரும்.

    "கீழ்கண்ட இடங்களில் வாலாட்டிக் குருவிகளைப் பார்த்தால் மங்களகரமான செய்திகளே கிடைக்கும்:– பூ, பழம் உடைய மரங்கள், கோவில், நல்லோர் கூடிய சபைகள், பசு,யானை, குதிரை, பாம்பு ஆகியவற்றின் முதுகில் அமர்ந்த பறவைகள், புனித ஏரி, ஆறு,குளங்கள், யாக சாலைகள், மாட்டுத் தொழுவம் ஆகியன

    காதலன், காதலி கிடைக்க…

    "வண்டல் மண்ணில் பறவையைப் பார்த்தால்- இனிய உணவு

    மாட்டுச் சாணத்தில் பறவையைப் பார்த்தால் – பால், தயிர், வெண்ணெய்

    புல் தரை – துணிகள்

    வண்டிகள் மீது – நாட்டுக்கு சேதம்

    வீட்டுக் கூரை- செல்வம் இழப்பு

    தோல் முதலியன – சிறை வாசம்

    ஆடு, செம்மறி ஆட்டின் முதுகு மேல் பறவையைப் பார்த்தால் – காதல் கைகூடும்; காதலன் – காதலி உடனே சேருவர்!

    எதிரிடைப் பலன்கள்

    வாலாட்டிக் குருவிகளை கீழ்கண்ட இடங்களில் பார்த்தால் கெட்ட செய்திகளே கிடைக்கும்:–

    சாம்பல்- எலும்புகள் மீது, சுடுகாட்டில், மண்ணாங்கட்டியில், கழுதை, ஒட்டகம், எருமை முதுகின் மேல், வீட்டுக் காம்பவுண்ட் சுவர் மீது

    சிறகு அடிக்கும் நிலையில், மாலை வேளையில்

    ஆனால் தண்ணீர் குடிக்கும் நிலையிலும் காலை நேரத்திலும் பார்த்தால் நல்ல செய்தி வரும்.

    புதையல் வேண்டுமா?

    வாலாட்டிக் குருவிகள் புணரும் இடத்தில் பூமியைத் தோண்டிப் பார்த்தால் புதையல் கிடைக்கும்.

    உணவைக் கக்கும் இடத்தில் மைகா/ அபிரகம் கிடைக்கும்.

    மலஜலம் கழிக்கும் இடத்தில் நிலக்கரி கிடைக்கும்

    விதி விலக்கு

    எல்லா விதிகளுக்கும் சில விதிவிலக்குகள் இருக்கும்; எல்லா நோய்களுக்கும் மருந்துகள் இருக்கும். அதே போல எல்லா பாபங்களுக்கும் பரிகாரம் உண்டு.

    வராஹமிகிரர் சொல்லுகிறார்: மேற்கண்டவற்றில் ஒரு அரசன் தீய நிமித்தங்களைக் கண்டாலும், அவன் பிராமணர்களையும் குரு மார்களையும், புனித மகான்களையும் வணங்கினாலோ ஒரு வாரத்துக்கு மாமிச உணவு சாப்பிடாமல் இருந்தாலோ தீமைகள் வாரா.

    என் கருத்து:

    இந்த நூலில் சொன்ன வாலாட்டிக் குருவி எது என்பதை முதலில் நாம் சரியாக இனம் காண வேண்டும். நான் ஆங்கில மொழி பெயர்ப்பைத் தழுவி எழுதியுள்ளேன். பின்னர் அதை நம்புவதும் நம்பாததும் தனி நபரின் அனுபவத்தில் தெரியும்.

    இது ஒரு புறம் இருக்க, பொய்யோ நிஜமோ, நம்முடைய முன்னோர்கள் 2000 ஆண்டுக ளுக்கு முன்னர் இயற்கையை எவ்வளவு கூர்ந்து கவனித்துள்ளனர் என்பதை நினைக்கையில் வியப்பு மேலிடுகிறது.

    2. ரிக் வேதத்தில் புறா ஜோதிடம்; தமிழர்களின் புறா கண்டுபிடிப்பு – 1

    Post No. 10,290

    Date uploaded in London –2 NOVEMBER 2021

    ரிக் வேதத்தில் ஏராளமான ஆராய்ச்சி விஷயங்கள் உள்ளன. அதுவும் உலகிலேயே பழமையான நூல் என்பதால் அவற்றின் முக்கியம் அதிகரிக்கிறது. ரிக் வேதத்துக்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் சங்கத் தமிழ் இலக்கியம் வந்தது. சங்கத் தமிழ் 18 நூல்களிலும் புறாக்கள் பற்றி நிறைய வியப்பான செய்திகள் உள்ளன. ஆண் புறா, வெய்யிலில் வாடும் பெண் புறாவுக்கு சிறகால் விசிறி வீசுவதும், புறாக்கள் ஜீரணத்துக்காக கற்களை சாப்பிடுவதும் சங்கத் தமிழ் புலவர்கள் நேரில் கண்ட காட்சி.

    ஆனால் ரிக் வேதத்தில் இரண்டு காட்சிகள் 2 மண்டலங்களில் வியப்பான செய்தியைத் தருகின்றன. அவற்றைக் கண்டுவிட்டு தமிழ் நூல்களை ஆராய்வோம். ரிக் வேதத்தின் பத்தாவது மண்டலத்தில் 165ஆவது துதியைக் (RV. 10-165) காண்போம். இந்தத் துதியை இயற்றியவர் பெயரும் ‘புறா’! அதாவது ‘கபோதன்’ அவர் அம்மா பெயர் மரண தேவதை. புறாவுக்கு சம்ஸ்க்ருதத்தில் கபோத என்று பெயர்; மரண தேவதைக்கு நிர்ருதி என்று பெயர்.

    முதல் ஆராய்ச்சி

    தமிழ் இலக்கியத்தில் காக்கை பாடினியார், தேய் புரிப் பழங்கயிற்றனார், செம்புலப் பெயல் நீரார் என்ற பல விநோதப் பெயர்களைக் காணலாம். உலகில் இந்துக்களைத் தவிர வேறு எவரும் இந்த உத்தியை – டெக்னீக்கை- கையாளவில்லை.

    ரிக் வேதத்தை, உலக மஹா ஜீனியஸ் – மாமேதை- காக்கா கறுப்பு–என்று அழைக்கப்படும் வேத வியாசர், நமக்கு

    Enjoying the preview?
    Page 1 of 1