Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Katturai Kadhambam
Katturai Kadhambam
Katturai Kadhambam
Ebook150 pages1 hour

Katturai Kadhambam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பல்வேறு விஷயங்களைப் பற்றி நான் எழுதிய 30 கட்டுரைகள் அடங்கியது இந்த நூல். இதற்குப் பெயர் சூட்டுவது மிகவும் கடினமான பணி. இதிலுள்ள விஷயங்களை வரலாறு என்பதா? கலை, பண்பாடு என்பதா? ஆன்மீகம் என்பதா? என்று பார்த்தால் எல்லாமே இருக்கிறது; அதற்கு மேலும் இருக்கிறது. அமர கோசம் என்னும் நிகண்டுவில் பிரம்மாவுக்கு எத்தனை பெயர்கள், சூரியனுக்கு எத்தனை பெயர்கள் என்பது முதல் யோகாசனத்தை நமக்குக் கற்பித்தது மிருகங்களே, தமிழர்களுக்கு 4 எண்ணின் மேல் உள்ள பைத்தியம், ரஷ்யா சுமேரியாவில் கங்கை நதி, முட்டாள்தனத்துக்கு மருந்து இல்லை என்று பல்வேறு விஷயங்களை நூலில் காணலாம். பலரும் இதைப் பயன்படுத்தி ஆராய்ச்சி செய்யலாம். சுவையூட்டுவதாவும் சிந்தனையைத் தூண்டுவதாகவும் உள்ள தகவல்கள் இவை.

Languageதமிழ்
Release dateJan 21, 2023
ISBN6580153509336
Katturai Kadhambam

Read more from London Swaminathan

Related to Katturai Kadhambam

Related ebooks

Reviews for Katturai Kadhambam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Katturai Kadhambam - London Swaminathan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    கட்டுரைக் கதம்பம்

    (அக்னி - ஆசனம் - குரு - கங்கை நதி)

    Katturai Kadhambam

    Author:

    லண்டன் சுவாமிநாதன்

    London Swaminathan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    1.அக்னி பகவான் பற்றிய அதிசய விஷயங்கள்!

    2.பிரம்மாவின் 29 பெயர்கள்!

    3.நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே

    4.சூரியனுக்கு 37 பெயர்கள்!

    5.தாமரைக்கு தமிழில் எத்தனை பெயர்கள்?

    6.சேலைக்கும் மாலைக்கும் எத்தனை பெயர்கள்?

    7.இந்து மத இடி தாங்கி அர்ஜுனன்!

    8.மன்னர்களின் விநோதப் பெயர்கள்_ யானை, கழுதை, குதிரை!

    9.தண்ணீர் என்னும் தாய்; அம்ப-வும், அம்பா-வும்

    10.குரு யார்? ஆசிரியர் யார்? என்ன வேறுபாடு?

    11.தமிழர்களின் எண் ‘ஜோதிடம்’

    12.டாக்டர் கடவுள் யார்? புதையல் கடவுள் யார்? ரிக் வேதப் புலவர் புதிர்!

    13.ரிக்வேத எட்டாவது மண்டல அதிசயங்கள்

    14.மூன்று புகழ்பெற்ற பிரிவுபசார உரைகள்

    15.ஒரே தமிழ்ப் புலவருக்கு 40 லட்சம் தங்கக் காசுகள்!

    16.தமிழ்ப் புலவர் மாயமாய் மறைந்தது எப்படி?

    17.கங்கை, காவிரி, குமரி பற்றி அப்பரும் ஆழ்வாரும் பாடியது ஏன்?

    18.சுமேரிய நாகரீகத்தில் கங்கை நதியும் கைலாஷ் பர்வதமும்

    19.ரஷியாவுக்குள் கங்கை நதி; சிந்துவெளி நாகரீகம்!!

    20.கருமிகள் பெரும் கொடையாளிகள்! ஒரு கவிஞரின் கிண்டல்!!

    21.வாதக்கோன், வையக்கோன், ஏதக்கோன்: யார் நல்லவர்?

    22.உத்தமன் யார்? மத்யமன் யார்? அதமன் யார்?

    23.‘நல்லோர்கள் எங்கே பிறந்தாலுமென்?’ – நீதி வெண்பாவும் மனு நூலும்

    24.புத்தரை சிந்திக்க வைத்த 4 நிகழ்ச்சிகள்

    25.யோகாசனத்தை நமக்குக் கற்றுக் கொடுத்தது மிருகங்கள்!

    26.மரங்களை வளர்த்தால் சொர்க்கம் கிடைக்கும்

    27.தமிழில் யமன்!!

    28.கஜினி முகமது நாணயத்தில் சம்ஸ்கிருதம்!

    29.முட்டாள்தனத்துக்கு மருந்தே இல்லை; பர்த்ருஹரி, வள்ளுவர் உடன்பாடு

    30.முட்டாள்கள் பற்றி வள்ளுவன், பர்த்ருஹரி - ஒரு குட்டிக் கதை

    முன்னுரை

    பல்வேறு விஷயங்களைப் பற்றி நான் எழுதிய 30 கட்டுரைகள் அடங்கியது இந்த நூல். இதற்குப் பெயர் சூட்டுவது மிகவும் கடினமான பணி.இதிலுள்ள விஷயங்களை வரலாறு என்பதா? கலை, பண்பாடு என்பதா? ஆன்மீகம் என்பதா? என்று பார்த்தால் எல்லாமே இருக்கிறது; அதற்கு மேலும் இருக்கிறது. அமர கோசம் என்னும் நிகண்டுவில் பிரம்மாவுக்கு எத்தனை பெயர்கள், சூரி யனுக்கு எத்தனை பெயர்கள் என்பது முதல் யோகாசனத்தை நமக்குக் கற்பித்தது மிருகங்களே, தமிழர்களுக்கு 4 எண்ணின் மேல் உள்ள பைத்தியம், ரஷ்யா-சுமேரியாவில் கங்கை நதி, முட்டாள்தனத்துக்கு மருந்து இல்லை என்று பல்வேறு விஷயங்களை நூலில் காணலாம்.பலரும் இதைப் பயன்படுத்தி ஆராய்ச்சி செய்யலாம். சுவையூட்டுவதாவும் சிந்தனையைத் தூண்டுவதாகவும் உள்ள தகவல்கள் இவை.

    பத்தாண்டுகளுக்கும் மேலாக என்னுடைய பிளாக்குகளில் வெளியான கட்டுரைகளாகையால், முதலில் வெளியான தேதியும், வரிசை எண்களும் ஒவ்வொரு கட்டுரையிலும் இருக்கும். உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க என் தொடர்பு ஈ மெயில், தொலைபேசி எண்ணும் உள்ளது அச்சடித்த பிரதிகள் வேண்டுமானால் என்னையோ புஸ்தக நிறுவனத்தையோ தொடர்பு கொள்ளலாம்

    லண்டன் சுவாமிநாதன்

    டிசம்பர் 2022

    1.அக்னி பகவான் பற்றிய அதிசய விஷயங்கள்!

    1.உலகின் முதல் அகராதியும் முதல் திசாரஸுமான Thesarus (ஒரு பொருள் குறித்த பல சொற்கள் வழங்கும் நிகண்டு) அமரகோசம், — அக்னி பகவானுக்கு 34 பெயர்களை அடுக்குகிறது. இதற்கு உரை எழுதிய உரைகாரர்கள் ஒரு கலைக் களஞ்சியம் கொள்ளும் அளவுக்கு அரிய தகவல்களை அளிக்கின்றனர்.

    2.உலகின் மிகப் பழைய நூலும் மனித குல வரலாற்றின் – குறிப்பாக இந்தப் பூ உலகின் ஆதி குடிகளான இந்துக்களின் – குறிப்புப் புத்தகம் என்று கருதப்படும் ரிக் வேதத்தில் அக்னி பகவான்தான் அதிக துதிகளில் அடிபடுகிறார். தனியான துதிகள் என்றால் இந்திரனுக்கு முதல் பரிசு— தனியாகவும் வேறு பல துதிகளிலும் சேர்ந்து புகழப்படுபவர் யார் என்றால் அக்னி பகவானுக்கு முதல் பரிசு!

    3.அக்னி பகவானுக்கும் எண் ஏழுக்கும் (Number Seven) ஏனோ ரகசிய தொடர்பு இருக்கிறது. அவருக்கு நாக்குகள் ஏழு— அவருடைய ரதத்தின் சக்க்ரங்கள் ஏழு—- அவருடைய பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், மனைவி ஸ்வாஹா தேவி என்பவர்கள் கூட்டுத் தொகை 49. அதாவது ஏழு X ஏழு.—(7X7=49) ரிக் வேதத்தில் பல துதிகளிலும் இவர் ஏழு அல்லது ஏழின் மடங்குகளில் போற்றப் படுகிறார். புது மணத் தம்பதிகள் அக்னியை வலம் வருகையில் ஏழு அடி (சப்த பதி Saptapadi) நடந்த பின் அது சட்டபூர்வ கல்யாணம் ஆகிவிடும்—- அக்னி பகவானுக்கு சப்த ஜிஹ்வா, சப்த அர்ச்சி என்ற பெயர்கள் உண்டு. இதன் பொருள்—ஏழு நாக்குடையோன், ஏழு கிரணம் உடையோன்.

    4.அக்னிக்கு அம்மாவும் அப்பாவும் இரண்டு குச்சிகள் அல்லது இரண்டு கட்டைகள். அதை இரண்டையும் உரசினால் அவர் பிறக்கிறார். அதாவது ஆதிகாலத்தில் யாகம் செய்யும் வேதப் பிராமணர்கள் அரணிக்கட்டை என்று ஒன்று வைத்திருப்பார்கள். அதில் தயிர் கடைவது போல ஒரு கட்டையின் குழியில் இன்னொரு கட்டையை வைத்துக் கடைவார்கள். தீப்பொறி எழும். இதில் ஒரு கட்டை பூமி என்றும் மற்றொன்று ஆகாயம் அல்லது சுவர்கம் என்றும் தத்துவ விளக்கம் கொடுப்பர்.

    5.அக்னியை அப்பா, நண்பன், குரு, புரோகிதர் என்று பல வகைகளில் பாடும் வேதகால ரிஷி முனிவர்கள் அந்த அக்னியைக் கொண்டு நம் வீட்டிலும் விளக்கேற்றுகிறார்கள். நமது ஆன்மாவிலும் விளக்கு ஏற்றுகிறார்கள். சாதாரணக் கொள்ளிக் கட்டையைப் பாடுபவர்கள் பெரிய ஆன்ம ஞானத்தை தட்டி எழுப்பவும் பாடுகிறார்கள்.

    6.வேதம் பயின்ற பிராமணர்கள் தினமும் அக்னியை வழிபடுவர். சந்தியா வந்தனம் செய்யும் பிராமணர்கள் ஒரு நாளைக்கு மூன்று முறை அக்னியை வழிபடுவர். ((அக்னி, வாயு, அர்க, வாகீச, வருண, இந்திர, விஸ்வே தேவா: என்ற மந்திரத்தைச் சொல்லுவர்.))

    7.அக்னியின் சொரூபமே சுப்ரமண்யர் எனப்படும் முருகப் பெருமான். ஆகவே முருகனை வழிபடுவோர் எல்லோரும் ஒரு வகையில் அக்னியை (யாகத் தீ எழுப்பாமல்) — வழிபடுவதாகச் சொல்லலாம்.

    8.முருகனை ஆறு கார்த்திகைப் பெண்கள் வளர்த்ததாகச் சொல்லுவர். அக்னியை பத்து பெண்கள் — அதாவது பிராமணர்களின் பத்து விரல்கள் — வளர்த்ததாகப் பாடுவர் வேத கால ரிஷி முனிவர்கள்— விரல் என்பதற்கு அங்குலி என்ற பெண்பாற் சொல் பயன்படுத்தப்படும்.

    வேத காலக் கவிஞர்கள் பாடும் பாடல்களைப் படித்தால் பாபிலோனிய, எபிரேயப் பாடல்கள் எல்லாம் நாகரீகமற்ற ஆதிமனிதன் பாடல்கள் என்னும் முடிவுக்கு வர அதிக நேரம் பிடிக்காது. இவ்வளவுக்கும் அவை எல்லாம் வேதத்துக்குப் பின் எழுந்தவை. இப்போது மைகேல் விட்சல் போன்ற அமெரிக்க அறிஞர்கள்கூட இதற்கு கி.மு.1700 என்று முத்திரை குத்திவிட்டார்கள். இந்திய அறிஞர்கள் வேத காலத்தை கி.மு 6000 வரை கொண்டு செல்கின்றனர்.

    9.ரிக் வேதத்தின் முதல் துதியும் கடைசி துதியும் அக்னி பகவான் மேல்தான் — அளவில், ரிக் வேதம் என்பது ஏறத்தாழ சங்க இலக்கியத்தின் 2400 பாடல்களுக்குச் சமமானது– ஆனால் முழுக்கவும் இறைவனைப் பற்றியது.

    10.எப்படி ரிக் வேதத்தின் முதல் துதியும் கடைசி துதியும் அக்னி பகவான் பற்றி இருக்கிறதோ அப்படியே மனிதனின் வாழ்வும் நெருப்புடன் பின்னிப் பிணைந்தது.

    Enjoying the preview?
    Page 1 of 1