Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Bharatha Natiya Kathaigalum Pazhamozhi Kathaigalum
Bharatha Natiya Kathaigalum Pazhamozhi Kathaigalum
Bharatha Natiya Kathaigalum Pazhamozhi Kathaigalum
Ebook178 pages1 hour

Bharatha Natiya Kathaigalum Pazhamozhi Kathaigalum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தமிழ் மொழியில் 20,000 பழமொழிகளுக்கு (Proverbs) மேல் உள்ளன. அவற்றில் நிறைய பழமொழிகளின் பின்னுள்ள அர்த்தம் என்ன என்று தெரிவதில்லை. மேலும் பல பழமொழிகளுக்கு இப்போதுள்ள மக்கள் ஊகித்து எழுதும் பொருளை நம்பவேண்டியுள்ளது. 100 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான கதை, கட்டுரைகளில் காணப்படும் பழமொழிகள் அனைத்தும் இன்னும் தொகுக்கப்படவில்லை. இந்த நூலில் நான், சில பழமொழிகளுக்கு உரிய கதைகளை, கிடைத்த மட்டிலும், சேர்த்துள்ளேன்.

பரத நாட்டிய சாஸ்திரத்தை ‘நாட்டிய ராணிகள்’ மிகவும் புகழ்ந்தபோதும் அதை தமிழில் முழுதும் மொழிபெயர்த்ததாகத் தெரியவில்லை. அதன் முதல் அத்தியாயத்திலும் கடைசி அத்தியாயத்திலும் சுவையான கதைகள் இருக்கின்றன. அவைகளையும் வாசகர்களுக்குத் தந்துள்ளேன்.

Languageதமிழ்
Release dateNov 1, 2022
ISBN6580153509202
Bharatha Natiya Kathaigalum Pazhamozhi Kathaigalum

Read more from London Swaminathan

Related to Bharatha Natiya Kathaigalum Pazhamozhi Kathaigalum

Related ebooks

Reviews for Bharatha Natiya Kathaigalum Pazhamozhi Kathaigalum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Bharatha Natiya Kathaigalum Pazhamozhi Kathaigalum - London Swaminathan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    பரத நாட்டியக் கதைகளும் பழமொழிக் கதைகளும்

    Bharatha Natiya Kathaigalum Pazhamozhi Kathaigalum

    Author:

    லண்டன் சுவாமிநாதன்

    London Swaminathan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    1. நாட்டிய நாடகம் பிறந்த சுவையான கதை

    2. பரதநாட்டியம் பூமிக்கு வந்த கதை!

    3. ஆனந்த ராமாயணத்தில் ஒரு புதுக்கதை

    4. ‘டன்’வந்து ‘டிக்’கொண்டு போய்ட்டான்

    5. சுக்குமி, ளகுதி, ப்பிலி கதை!

    6. மாப்பிள்ளை நாயக்கர் தட்டை அறுத்தது போல - ஒரு பழமொழிக் கதை

    7. மனைவி கர்ப்பிணி, கணவன் பிரம்மச்சாரி! ஒரு சுவையான கதை

    8. துளசியின் மகிமையை விளக்கிய ருக்மணி!

    9. கஷ்டம் வந்தால் கவிதை பிறக்கும்: பால முரளி கிருஷ்ணா அனுபவம்

    10. மெதுவாக ருசித்து சாப்பிடுங்கள்: பால முரளி கிருஷ்ணா 'அட்வைஸ்'

    11. நாரதா கலகப் ப்ரியா! பாரிஜாத மரத்தின் கதை

    12. தேவர் கோ அறியாத தேவ தேவன்’ யார்? திருவாசகக் கதை

    13. கண்கள் இருந்தும் காணாதார்- திருவாசகக் கதை!

    14. அன்னதான மகிமை: கைதியின் கண்ணீர்

    15. குட்டிக்கதை- கழுதைப் பிரம்மச்சாரி

    16. பொறுமை: மூன்று குட்டிக் கதைகள்!

    17. ஒரு குட்டிக் கதை: நுணலும் தன் வாயால் கெடும்

    18. உலகமஹா கவிஞன் பற்றி ஒரு சுவையான கதை!

    19. நடிகைக்குக் கிடைத்த அற்புதப் பரிசு!

    20. கணவனே கண் கண்ட தெய்வம்!!!

    21. செத்துப் போன நடிகர் படம்!!

    22. பவிஷ்ய புராணத்தில் சுவையான யமன் கதை!

    23. பெண்ணின் கண்களில் தீப்பொறி! வள்ளுவன் தோற்றான்!

    24. ஆண்களின் புகழ்ச்சிக்கு பெண்கள் அடிமை!

    25. டேய்! போண்டா மூக்கு!

    26. மரண தேவனுடன் சுல்தான் வாக்குவாதம்

    27. தத்துவ ஞானியும் மரணமும்

    28. செத்துப் பிழைத்தார் மார்க் ட்வைன்!

    29. பதினான்கு கோடிக்கு மேல் ஒரு பைஸா கூட வேண்டாம்!

    30. காதலியை பிக்குணியாக மாற்றினார் புத்தர்

    31. பழ மரமும் ஆறு வர்ண மனிதர்களும் -சமண மதக் கதை

    32. யானை விரட்டிய கர்வம் பிடித்த கவிஞர் மனம் மாறிய கதை

    33. பேராசை பெரு நஷ்டம் - பழமொழிக் கதை

    34. சுவத்துக் கீரையை வழித்துப் போடடி...

    35. ஒருபேய்க் கதை! சொக்கா, சொக்கா சோறுண்டோ?

    36. பழமொழிக் கதை- ‘சுழியா வருபுனல் இழியாதொழிவது’

    37. அன்பின் சின்னம் யொவன்னாஸ் பிராம்ஸ்

    38. இளிச்சவாயனைக் கண்டால் எருதும் மச்சான் முறை கொண்டாடும்!

    39. பாட்டுக்கு பத்து ரூபாய்! ஞானியார் அடிகள் கதை

    40. நாக்கு பெரிதா? மூக்கு பெரிதா?

    41. ஏன் மனைவியைத் தள்ளி விட்டாய்?

    42. ஞாபக மறதிப் பேராசிரியர்கள்!

    43. வேகமாகப் போ! ம்ம்... இன்னும் வேகம்!

    44. கறார் பேர்வழி! கணக்கான பேர்வழி!

    45. புத்தி கூர்மை: பலே! பலே! ரபலே!!!

    46. மேலும் ஒரு தண்ணீர் அதிசயம்: சுவையான சமண மத சம்பவம்

    47. ஆத்திரக் காரனுக்கு புத்தி மட்டு!

    48. கீரியைக் கொன்ற அவசரக் கொடுக்கு

    49. ஒரு நல்ல கதை வாளும் நாளும் ஒன்று!

    50. ‘கடவுளுக்கு ஞாபக மறதி உண்டு’- தாமஸ் ஆல்வா எடிசன்

    51. மாதா கோவில் (Church ) தமாஷ்கள்

    முன்னுரை

    தமிழ் மொழியில் 20,000 பழமொழிகளுக்கு (Proverbs) மேல் உள்ளன. அவற்றில் நிறைய பழமொழிகளின் பின்னுள்ள அர்த்தம் என்ன என்று தெரிவதில்லை. மேலும் பல பழமொழிகளுக்கு இப்போதுள்ள மக்கள் ஊகித்து எழுதும் பொருளை நம்பவேண்டியுள்ளது. 100 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான கதை, கட்டுரைகளில் காணப்படும் பழமொழிகள் அனைத்தும் இன்னும் தொகுக்கப்படவில்லை. இந்த நூலில் நான், சில பழமொழிகளுக்கு உரிய கதைகளை, கிடைத்த மட்டிலும், சேர்த்துள்ளேன் ; அத்தோடு 11 ஆண்டுகளாக என்னுடைய ‘பிளாக்’ குகளில் நிறைய துணுக்குகளை (anecdotes) ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்து வெளியிட்டேன். அவைகளையும் இந்நூலில் அடக்கியுள்ளேன். பரத நாட்டிய சாஸ்திரத்தை ‘நாட்டிய ராணிகள்’ மிகவும் புகழ்ந்தபோதும் அதை தமிழில் முழுதும் மொழிபெயர்த்ததாகத் தெரியவில்லை. அதன் முதல் அத்தியாயத்திலும் கடைசி அத்தியாயத்திலும் சுவையான கதைகள் இருக்கின்றன. அவைகளையும் வாசகர்களுக்குத் தந்துள்ளேன். இந்தக் கதைகளும் துணுக்குகளும் சொற்பொழிவு ஆற்றும் பேச்சாளர்களுக்கும், கட்டுரைகள் எழுதும் மாணவர்களுக்கும் கட்டாயம் பயன்படும். மேலும் ரயில், பஸ்களில் பயணம் செய்வோருக்கும் நல்ல துணையாக அமையும் என்பதில் ஐயமில்லை. கொஞ்சம் வாசித்துப் பாருங்கள்; கடைசி அட்டை வரை நீங்களே செல்வீர்கள் படித்து முடிக்க.

    பற்பல கட்டுரைகளாக வந்ததால் சில விஷயங்கள் மீண்டும் மீண்டும் வரலாம். உங்கள் கருத்துக்களை எழுதினால் பிற்காலத்தில் அதற்குத் தக மாற்றி அமைக்கலாம். முதலில் நான் கட்டுரைகளை எழுதிய தேதியும், கட்டுரை வரிசை எண்ணும் ஆங்காங்கே தென்படும். இதுவரை வெளியான 60-க்கும் மேலான நூல்களுக்கு வழங்கிய ஆதரவினைத் தொடர்ந்து வழங்குங்கள்.

    அன்புடன்

    லண்டன் சுவாமிநாதன்

    அக்டோபர் 2022

    1. நாட்டிய நாடகம் பிறந்த சுவையான கதை

    நாட்டிய நாடகம் பிறந்த சுவையான கதையை பரத முனி சொல்கிறார்

    நாட்டிய சாஸ்திரம் என்னும் சம்ஸ்க்ருத நூலில் 6000 ஸ்லோகங்கள் இருக்கின்றன. இது 2500 ஆண்டுகளுக்கு முன்னர் பரத முனியால் இயற்றப்பட்டது. இதில் 36 அத்தியாயங்கள் இருக்கின்றன. முதல் அத்தியாயத்தில் நாட்டியம்/ நாடகம் பிறந்த சுவையான கதை உளது. இதை பரத முனிவரே சொல்லும் பாணியில் அமைந்துள்ளது. பிற்காலத்தில் இந்தப் புஸ்தகத்தில் பல பகுதிகள் சேர்க்கப்பட்டதால் கொஞ்சம் முன்னுக்குப் பின் முரணான விஷயங்களும் உள. முதலில் சுவையான கதையைக் காண்போம்.

    பரத முனிவர் தன்னுடைய தினசரி பிரார்த்தனைகளை முடித்து விட்டு தன்னுடைய மகன்களுடன் (சீடர்களுடன்) அமர்ந்து இருந்தார். அப்பொழுது ஆத்ரேயரும் பிற ரிஷிகளும் வந்து, நீங்கள் வேதத்துக்குச் சமமான நாட்ய வேதத்தை இயற்றியுள்ளீர்கள். ஏன், யாருக்காக இதை எழுதினீர்கள்? இது அதிகாரபூர்வமானதா? இதை எப்படி பயன்படுத்துவது என்று கேட்டனர்

    அதற்குப் பதில் கொடுக்கும் வகையில் பரத முனி சொன்னார்:-

    "நீண்ட காலத்துக்கு முன்னர் வேதனையும் துன்பமும் மிக்க இந்த பூவுலகத்தில் பேராசை, பொறாமை, கோப தாபங்களால் உந்தப்பட்ட மக்கள் நாகரீகமற்ற வாழ்க்கை வாழ்ந்தனர். அப்போது இந்த உலகத்தில் தேவர்கள், அரக்கர்கள், நாகர்கள், யக்ஷர்கள், கந்தர்வர்கள் வாழ்ந்தனர். பல மன்னர்கள் இந்த உலகை ஆண்டு வந்தனர். தேவர்கள், இந்திரன் தலைமையில் பிரம்ம தேவனைத் தரிசித்தார்கள்.எங்களுக்கு வெறும் உபதேசம் மட்டுமின்றி கண்ணுக்கும் காதுக்கும் விருந்தளிக்கும் ஒன்றைத் தந்தருளுங்கள். வேதங்கள் ஏற்கனவே இருப்பது எங்களுக்குத் தெரியும். ஆனால் அதை சூத்திரர்கள் கேட்க முடியாதே. எல்லா வர்ணங்களுக்கும் (ஜாதிகளுக்கும்) பொதுவான ஐந்தாவது வேதத்தை நீங்கள் ஏன் உண்டாக்கக் கூடாது என்று கேட்டனர்.

    பிரம்மா அவர்கள் சொன்னதை ஒப்புக்கொண்டு, நீங்கள் போய்வாருங்கள் என்று சொல்லிவிட்டு ஆழ்ந்த தியானத்தில் அமர்ந்தார். பின்னர் எல்லா கலைகளையும் உடைய கேளிக்கை அளி க்கும் ஐந்தாவது வேதத்தை உருவாக்க முடிவு செய்தார்.

    ரிக் வேதத்திலிருந்து சொற்களையும்,

    சாம வேதத்திலிருந்து இசையையும் யஜுர் வேதத்திலிருந்து ஒப்பனை, அபிநயம் ஆகியவற்றையும்

    அதர்வண வேதத்திலிருந்து மனோ பாவங்களை வெளிப்படுத்தும் நடிப்பையும் எடுத்துக் கொண்டு ஒரு வேதம் உண்டாக்கினார்.

    இந்திரனை அழைத்து இந்தாருங்கள் நாட்டிய வேதம். தேவர்கள் (சுரர்) இதைப் பயிலட்டும்.

    (ஆனால் நடிகர்களுக்கான QUALIFICATIONS ‘க்வாலிபிகேஷன்’களை சொல்லிவிடுகிறேன்)

    திறமையான, விழிப்புள்ள, புத்திசாலியான, புலன் அடக்கமுள்ள ஆட்கள் இதைப் பயிற்சி செய்யவேண்டும் என்றார் பிரம்மா.

    இந்திரன் யோசித்தார். பிரம்ம தேவனே! நீவீர் சொல்லும் தகுதிகள் தேவர்கள் இடத்தில் இல்லை. யோகியர் ஞானிகள் ஆகியோருக்குத்தான் நீர் சொல்லும் அத்தனை தகுதிகளும் உண்டு. ஏனெனில் அவர்களுக்கு வேத ஞானமும் இருக்கிறது. புலன் அடக்கமும் இருக்கிறது.

    இப்படி இந்திரன் சொன்ன பிறகு பிரம்மா, இந்தக் கலையை என்னிடம் ஒப்படைத்தார் என் று பரத முனிவர் சொன்னார்.உம்மிடம் நிறைய மகன்கள் (சீடர்கள்) இருக்கிறார்கள் என்றார்.நானும் என் பிள்ளைகளுக்கு பாரதி, ஸாத்வதி, ஆரபட்டி, வ்ருத்தி ஆகியவற்றைக்(சொற்கள், உணர்ச்சி, நடிப்பு) கற்பித்துவிட்டு பிரம்மாவிடம் போனேன்.

    அவர் சொன்னார். கொஞ்சம் கருணை ரசமும் இருக்கட்டும். உமக்கு வேண்டிய பொருள்களை எல்லாம் நான் ‘சப்ளை’ SUPPLY செய்கிறேன்."

    நானும் சிவ பெருமான் ஆடும் நடனத்தைப் பார்த்து உணர்ச்சி பாவங்கள், நடிப்பு, அசைவுகள், அபிநயங்களை அறிந்தேன். பின்னர் பிரம்மாவிடம் சொன்னேன்- பெண்களுக்கு இயற்கையான நளினம்

    Enjoying the preview?
    Page 1 of 1