Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Arputham Arubathu
Arputham Arubathu
Arputham Arubathu
Ebook265 pages1 hour

Arputham Arubathu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஸத்ய ஸாயி பாபா என்றாலே அற்புதங்களைத்தான் உலகம் நினைப்பதாக ஸமீப காலம் வரையில் இருந்தது. இப்போதுதான் அவரால் நடக்கும் பொதுத் தொண்டு, கல்வித் தொண்டுகளின் சிறப்பையும் உலகம் பாராட்டத் தொடங்கியிருக்கிறது. ‘உம்’ போட்டோ ‘சிறப்பையும்’ என்றுதான் இன்றும் சொல்ல வேண்டியதாயிருகிறது. இன்றைக்கும் அவருடைய அற்புத மிராகிள்களை உலகம் முதற்கண் நினைத்து, அப்புறமே உலக உத்தாரணப் பணியையும் எண்ணுகிறது.

Languageதமிழ்
Release dateSep 24, 2022
ISBN6580151507941
Arputham Arubathu

Read more from Ra. Ganapati

Related to Arputham Arubathu

Related ebooks

Reviews for Arputham Arubathu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Arputham Arubathu - Ra. Ganapati

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    அற்புதம் அறுபது

    Arputham Arubathu

    Author:

    ரா. கணபதி

    Ra. Ganapati

    For more books

    https://www.pustaka.co.in/home/author/ra-ganapati

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    1. மத வாரணமுகனே!

    2. கூடியிருந்து குளிர்ந்து

    3. அன்பின் வண்ணம்

    4. பாலகாண்ட லீலை: ஒளி விந்தைகள்!

    5. பாலகாண்ட லீலை: மஹா விபூதிகள் குடி

    6. ‘வார்டன்’ ஸாயி: வாழ்வு முழுவதற்குமே!

    7. கொண்டு வா புட்டபர்த்தி!

    8. ஆவியே, ஆரமுதே!

    9. அமுது பெருகும் சிரத்தில் ஆவிநோய் நஞ்சு!

    10. ஸுதர்சன ஸாயி

    11. மலர் மருத்துவம்

    12. சுவர் வழி புகுந்த அருட்சூறாவளி!

    14. பேற்றில் கைகொடுத்த பெற்றி பலம்

    15. கருக் காக்கும் நாயகி!

    16. ஸவாலுக்கு ஜவாப்!

    17. சுருக்க அருள் சுரக்கும் ‘சுருக்’!

    18. தோலோடு வாழைப்பழம்!

    19. வெள்ளை ஆடை பாபா

    20. பிழைத்த குழந்தையைக் குழைத்த அருமை!

    21. இப்படியும் உண்டோ ஒரு ப்ளாஸ்டிக் ஸர்ஜரி?

    22. ஓர் இனிய துணுக்கு; அல்ல, பானம்!

    23. இன்னோர் இனிய துணுக்கு; அல்ல, இரண்டு பட்டைப் பொங்கல்!

    24. ‘கேக்’ எப்படி ஆயினும் விலை கட்டி துணுக்கு இனியதுதான்!

    25. மற்றுமொரு துணுக்கு; கார பகோடா!

    26. காயரஸமும் ஸாயிரஸமும்

    27. உருண்ட வண்டியுள் திரண்ட காப்பு

    28. ‘இன்வால்வ்’ ஆகும் இனியர்

    29. கா(ர்)க்கும் கருணை!

    30. போக்குவரத்துப் போலீஸ்காரர்!

    31. யமாலயமாகாத ஹிமாலயம்!

    32. உதகை வெள்ளத்தில் உதவிய கை!

    33. துர்க்கத்தில் தூக்கிய துர்க்கையின் கை!

    34. ‘ஓசைப்படாமல்’ ஓர் அற்புதம்!

    35. ‘பழியஞ்சிய படலம்’

    36. பிழைப்புத் தருவான், பிழையின்றி!

    37. ஸமய ஸஞ்ஜீவிச் சமையற்காரர்!

    38. தக்ஷிணை தண்டிக்கொண்ட ஸாயி சாஸ்திரிகள்!

    39. ‘தீராத விளையாட்டு’ தீர்த்து வைத்த பிரச்னை

    40. ஸாயிராமுக்கு ஜே! ஜே! ஜே!

    41. ‘விமான நடு’வில் வித்தகம்!

    43. கொள்ளையரைக் கொள்ளை கொண்ட ஐயர்!

    44. கறுப்பரின் களிம்பு தேய்த்த காதை

    45. நீயாகவே வந்தால் வா!

    46. பிரேம ஸாயியின் பிரமிப்பு ஸாதனை

    47. கல்லும் மலரும் மணமும்

    48. ‘வெறும்’ விளையாட்டு!

    49. ‘துணி’கரமான லீலை! (ஷீர்டி டெக்ஸ்டைல்ஸ்!)

    50. ‘துணி’கரமான லீலை! (பர்த்தி டெக்ஸ்டைல்ஸ்!)

    51. டிக்கெட் கலெக்டர்!

    52. கோட்டய வழியில் ஒரு காப்புக் கோட்டை

    53. பக்தர் ஏறாமல் வண்டி போகுமா?

    54. அவயவ அதிசயம்!

    55. அதீத அற்புதங்கள்

    56. அருட்புயல்!

    57. சரிவிலும் சரியாத அருள்முட்டு!

    58. ‘சபரிகிரி நாயகனே! ஸாயி, வரதாயகனே!’

    59. முருக ஸாயி

    60. ஸிந்தூர மாருதியும் சிருங்கார மாநிதியும்!

    முன்னுரை

    ஸத்ய ஸாயி பாபா என்றாலே அற்புதங்களைத்தான் உலகம் நினைப்பதாக ஸமீப காலம் வரையில் இருந்தது. இப்போதுதான் அவரால் நடக்கும் பொதுத் தொண்டு, கல்வித் தொண்டுகளின் சிறப்பையும் உலகம் பாராட்டத் தொடங்கியிருக்கிறது. ‘உம்’ போட்டோ ‘சிறப்பையும்’ என்றுதான் இன்றும் சொல்ல வேண்டியதாயிருகிறது. இன்றைக்கும் அவருடைய அற்புத மிரகிள்களை உலகம் முதற்கண் நினைத்து, அப்புறமே உலக உத்தாரணப் பணியையும் எண்ணுகிறது.

    ஸ்வாமியின் அற்புதங்களுக்கு அதிமுக்யத்துவம் தருவதும் சரியல்ல. அதை அடியோடு புறக்கணிப்பதும் சரியல்ல. சரியான கணிப்பு என்னவெனில்: அன்பும் உலக மேம்பாடுமே ஸ்வாமியின் ஜீவன ஸாரம். அந்த அன்பின் வடிகாலாகவே, மக்களின் பலவிதப் பிரச்னைகள் தீர அற்புதம் புரிகிறார். எனவே ப்ரேம வாஹனமாக இவ்வற்புதத்துக்கும் பெருமையுண்டு.

    இரண்டாவதாக இன்னொரு பெருமை, இயற்கை என்ற ஒரு ஜட சக்தியின் ஆட்டுவிப்பில்தான் ஜகம் உள்ளதோ என்ற கருத்தைப் பொய்யாக்கி, இயற்கையையும் மீறிய இறைவனின் அருட்சக்தி இருப்பதை நிதர்சனம் செய்யவும் அற்புதம் உதவுகிறது.

    மூன்றாவதாக, வெறும் லீலாவிநோதமாகவே அது உள்ளபோதும், பல விதங்களில் வாடி வதக்குண்டுள்ள மக்களுக்கு தெய்வ சக்தியையும் அதன் கல்பனா விலாஸத்தையும் நினைவூட்டிக் குற்றமற்ற ஆனந்தமூட்டும் உபாயமாகப் பெருமை பெறுகிறது.

    இறைவனின் அற்புத சக்தியை வேதமே வெகுவாக வியந்து அவனை ‘தம்ஸிஷ்ட’ எனப் போற்றும். அற்புதம் புரிவதில் தன்னிகரிலாதவன் என்று பொருள்.

    இயற்கையாய் நடப்பது ப்ரக்ருதி. இயற்கைக்கு மாறாக நடப்பது விக்ருதி. இப்படி மாறாக நடத்துவிப்பவன் விக்ருதன். ‘விகிர்தன்’ எனத் தமிழில் மருவி வரும். நால்வரும் ஆழ்வாரும் ‘விகிர்தன்’, ‘விகிர்தன்’ என்றே இறைவனைப் பரக்கப் பேசுகிறார்கள். வெறுமே சக்தியைக் காட்டுவதற்கோ, ஸ்வய நலன் பேணியோ, பிறர் நலத்தை பாதிக்கும்படியோ இந்த விக்ருத ஆற்றலைக் காட்டாமல் அருளின் பாற்படுத்தி அற்புதம் செய்வதால் விகிர்தனான ஆண்டவனை அந்த மஹா பெரியோர் நாவாரப் போற்றினர். எனவே நாமும் ஸ்வயமே அற்ற அன்பு மூர்த்தமான நம் ஸ்வாமியை அவரது விகிர்தத்துக்காக எவ்விதக் கூச்சமும் குற்ற உணர்ச்சியுமின்றி தாராளமாகப் போற்றிப் பணியலாம்.

    மானுட உயிரின் ஓர் அம்சமாகவே ஈசன் அற்புதத்தில் விழைவை உண்டாக்கியிருக்கிறான். அதனால்தான் குழந்தைப் பருவத்திலேயே விசித்ர தேவதையர் பற்றிக் கதை கேட்கத் துடிக்கிறோம். அக்குழந்தையின் தன்மையிலேயே மானுடத்தின் தூய்மை இருப்பதை ஒருபுறம் வேர்ட்ஸ்வர்த், டாகூர் போன்ற கவிஞரும் கூறுகின்றனர். மறுபுறம் ஐன்ஸ்டைன், ராமன் போன்ற ஸயன்டிஸ்ட்களும் கூறுகின்றனர். ஸயன்டிஸ்ட் ஐன்ஸ்டைன் அற்புத உணர்வையே தம் கண்டுபிடிப்புக்களுக்கு ஆதாரமாகச் சொல்வதுபோலவே, தத்வஞானி ஸாக்ரடீஸும், தத்வ சாஸ்திரம் அற்புதத்தில்தான் தொடங்குகிறது என்கிறார். நமது புராண நாயகர்கள், புராணம் கூறும் மஹான்கள் காட்டாத அற்புதமும் உண்டோ? எனவே உரிய விகிதாசாரத்தில் அற்புதத்தைப் போற்றும் உணர்வை நாம் அமுக்கிப் போட வேண்டியதேயில்லை.

    அவதாரனின் செயல் அனைத்தும் இனியதே ‘அகிலம் மதுர’மே! அவ்வாறிருக்க அவர் ஏராளமாகப் புரியும் அத்புதத்தில் இன்னாததாக எதையோ காண்பானேன்? எத்தனையெத்தனை மக்களுக்கு எப்பேர்ப்பட்ட காப்புக் கவசமாகவும், அன்பனோடு அவர்களை ஒட்டிவைத்து அவர்களையும் அன்பில் ஈடுபடுத்தும் உபகரணமாகவும், விநோத ரஸ இன்பங்கள் பில்கும் ஆனந்த வடிகால்களாகவும் ஸாயி மிரகிள்கள் உள்ளன! அவற்றுக்குப் போற்றியோ போற்றிக் கூற நான் தயங்கவில்லை.

    கணக்கிறந்த அவ்வற்புதங்களில் அறுபது மட்டுமே இங்கு தந்திருக்கிறேன்.

    ***

    ஸ்வாமியோட ‘ஸிக்ஸ்டியத் பர்த்டே’க்கு நீதான் டான்ஸ்! மூணு டான்ஸ் பண்ணப்போறே! என்று அந்த ஸாயி நடராஜனே அநுக்கிரஹித்ததில் மூன்றாவது டான்ஸ் இந்நூலோடு அவனருளால் சுபமே பூர்த்தியாகிறது. அண்மையில்தான் மற்ற இரு டான்ஸ்களான அறிவு அறுபதும், அன்பு அறுபதும் அரங்கநாத ஸாயி அருளில் அரங்கேறின!

    அற்புத கோலாஹல நாடகலோலன் அறுபது தொடங்கும் திருநாளில், ஸர்வ மங்களங்களும் உங்கள் எல்லோருடைய இல்லங்களிலும் உள்ளங்களிலும் ‘டான்ஸ்’ செய்ய வாழ்த்துகிறேன். பிரார்த்திக்கிறேன்.

    ஆபூத் பத்ரா தேவஹூதிர் நோ அத்ய!

    ப்ராஞ்சோ அகாம ந்ருதயே ஹஸாய

    த்ராகீய ஆயு: ப்ரதரம் ததாநா!

    நமக்கின் றவன் அழைப்பு

    நன்மங் கலமாமே!

    நாட்யமும் நகையொலியும்

    நுகரப் புறப்பட்டோம்

    நாளு(ம்)நம் வாழ்வதுதான்

    நீடித் தின்புற்றிடவே!

    (ரிக்வேதம்: 10.18.3)

    சென்னை

    20.11.85

    ரா. கணபதி

    1. மத வாரணமுகனே!

    இனியதில் இனியது அன்பு. அந்த இனிமையே ஸாயி. நம்முடைய வழிபாட்டு முறையே இவ்வினிமையில்தான் தொடங்குகிறது. பிள்ளையாரப்பனில்தானே தொடங்குகிறோம்? அவன் மிக மிக இனியன். க்ருபா கோமள உதார லீலாவதாரனாக அவனை ஆதி சங்கரர் ‘புஜங்க’த் துதியில் இனிக்க வர்ணிப்பது நமது ஸாயியின் வர்ணனை போலத்தானே இருக்கிறது?

    நம் சிரஸினுள் சிவாநந்த அமுதம் பெருகுவதற்குத் தொடக்கமாக மூலாதாரத்தில் நுந்திவிடும் ஆனந்த விநாயகன் ‘அம்ருத கணேசன்’ என்றே பெயர் பெற்றவன். அவன் இனிமையாயின்றி வேறெப்படி இருப்பான்? அவன் வஸிப்பது கருப்பஞ்சாற்றுக் கடலின் மத்தியிலாகும்!

    அக்கடலத்தனைத் தித்திப்பும் அவனுள்ளேயே அடக்கம். அதுவே யானையிடமிருந்து பெருகும் மதநீராக அவனது திருமேனியிலிருந்து எப்போதும் வடிகிறது.

    ஆகம, புராணங்கள் கூறும் இவ்வுண்மையை இந்நூல் நாயகர் நம் கண்ணுக்கு மெய்யாக்கிக் காட்டியிருக்கிறார், பினாங்கில் பட்டர்வொர்த்திலுள்ள ஸ்ரீமதி லா காம் ஸு என்ற ஸாயி பக்தையின் வழிபாட்டு மேடையிலே!

    அம்மேடையில் கார்வண்ண கணபதிச் சிலை ஒன்று நின்ற நிலையில் அருள் பொழியும். அந்த அருட்பொழிவைத்தானே மதநீர்ப் பொழிவெனும் அமுத நீர்ப் பொழிவாக ஆகம, புராணங்கள் சொல்வது? லா காம் ஸுவின் பூஜா க்ருஹத்தில் விந்தை பல காட்டியுள்ள ஸ்வாமி, இந்தக் கறுப்புப் பிள்ளையாரின் கருப்பினிமையை (கரும்பினிமையை) வெளிப்படுத்தியிருக்கிறார்! அந்த அமுத கணேசச் சிலையின் கார்மேனியிலிருந்து தேன் போன்ற பரம மதுரமான ஒரு திரவம் அனவரதமும் உருவாகிச் சொட்டுச் சொட்டாக உருண்டு விழுமாறு செய்திருக்கிறார்! ப்ரேம ஸிந்துவின் மதுர பிந்துக்கள்! அதையே ஸாயி கணேச ப்ரஸாதமாகக் கொண்டு தொடங்குகிறோம்.

    2. கூடியிருந்து குளிர்ந்து

    ‘மதுரப் பிரஸாதம்’ பற்றி ஒரு நிகழ்ச்சி.

    ஸஹோதரி மதுரத்தை ஸஹோதரத்துவ உணர்வில் மதுரமாக்கவே மதுர ஸாயி காரமாக ஆனார்! அதில் ஓர் அற்புதமுண்டு. நமக்கொரு பாடமும் உண்டு.

    மதுரத்தின் ஸஹோதரர் - அதாவது ரத்த உறவுப்படித் தமையனார், மீனம்பாக்கம் விமான நிலைய ஊழியராவார். அவர் ஸ்வாமியிடம் பெற்ற ஒரு பேட்டியில் நிலைய அதிகாரிகளுக்காகவும் விபூதி கேட்டார். ஸ்வாமி அன்போடு ஒரு குத்து திருநீற்றுப் பொட்டலங்களை அள்ளிக் கொடுத்தார்.

    பிற்பாடு தமையனார் ஒவ்வோர் அதிகாரிக்கும் ஒரு பொட்டலம் என்று எடுத்து வைத்தபோது இரண்டு பொட்டலங்கள் தேவைப்படுவதாகக் கண்டார். பற்றாக்குறையை நிரப்பத் தன் பொட்டலங்களில் மேலும் ஒன்றைப் போட்டார். இன்னொன்றுக்காகத் தங்கையிடம் கேட்டார்.

    மதுரமோ, ஸ்வாமி எனக்கென்று கொடுத்த பிரஸாதத்தை நான் வேறொருவருக்குத் தருவதற்கில்லை என்று மறுத்து விட்டார்.

    எனவே தமையனார் தாம் பெற்றதிலிருந்தே இன்னொரு பொட்டலமும் எடுத்து வைத்தார்.

    பிறகு ஸ்வாமி சென்னைக்கு விஜயம் செய்து ஸ்ரீ வேங்கடமுனியின் வீட்டில் தங்கியிருந்தார். தமையனார் விமான நிலைய அதிகாரிகளோடு அங்கே ‘லௌஞ்’ஜில் தரிசனத்துக்காகக் காத்திருந்தார். மதுரமும் உடனிருந்தார்.

    மாடியிலிருந்து இறங்கி வந்த பகவான் அவர்களைக் கண்டதுமே தமது அருள் நினைவின் கரிசனத்தோடு, இவங்களுக்கெல்லாம் ப்ரஸாதம் கொடுத்தியா? என்று தமையனாரிடம் வினவினார். தமது திருக்கரத்தால் இப்போதும் விபூதி படைத்து ஒவ்வொருவராக அவர்கள் யாவருக்கும் போட்டுக்கொண்டே சென்றார்.

    மதுரத்தின் கையில் மட்டும் போடாமல் அடுத்த நபருக்கு நகர்ந்தார்.

    மதுரம் கையை முந்தி நீட்டினார்.

    சண்டை! விபூதி கேட்டால் தரமாட்டேன்-கிறது! என்று சொல்லியவாறு யாவுமறியும் ஸ்வாமி நகர்ந்தே விட்டார்! ஆம், மதுரத்துக்குப் பிரஸாதம் தராமல் அழ அழவிட்டுப் போய்விட்டார், ‘அகிலம் மதுர’மானவர்!

    இப்படிச் செய்யலாமா என்றால், அவர் செய்யும் அகிலமும் மதுரம் என்பதில் இந்தக் காரமுங்கூட மதுரந்தான்! அதனால் அந்தக் காரமே ஸஹோதரியின் மனத்தில், ‘ஸ்வாமி நமக்குத் தருவது, நம் போலவே அவரது குழந்தைகளான ஸகலரோடும் நாம் பகிர்ந்து கொள்ளத்தான்’ என்ற ஸோதர உணர்வை அழுத்தமாக ஏற்படுத்தி விட்டது. கார நெடி கொண்ட எருவைப் போட்டு மதுர மாங்கனி பழுக்கச் செய்யும் அற்புதந்தான்!

    ஸ்வாமியின் முக்யமான விபூதி என்னவெனில் அவரது லீலா விபூதிதான்! அதாவது, திவ்ய சக்தியில் விளைந்த திருவிளையாடல்கள்தான்! இந்த விபூதியின் ஸாம்பிள்களை பக்த-ஸோதரர்களான உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ளவே இந்நூல். விபூதி வேண்டாம் என்பவர்களிடம் திணிக்க வேண்டாம்.

    தன் விபூதிகளை மதிப்போர் பற்றிக் கண்ணன் சொல்வானே, போதயந்த; பரஸ்பரம்; கதயந்தச்ச மாம் நித்யம் துஷ்யந்தி ச ரமந்தி ச என்று! அவர்கள் ஒருவருக்கொருவர் என்னைப் பற்றியே அறிவுறுத்திக் கொண்டிருப்பார்கள்; எக்காலமும் என் கதைகளையே பேசிக் கொண்டிருப்பார்கள்; அதிலேயே நிறைவுறுவார்கள்; அதிலேயே களிப்படைவார்கள் என்று! அப்படிக் களிக்கவே கூடியிருக்கிறோம்.

    ‘வேள்வியில் தரப்படும் அவிர்பாகத்தை ஒரு தேவதை மட்டுமின்றி அனைத்து தேவதையரும் பகிர்ந்து கொள்வதுபோல, நீங்களும் எல்லாவற்றையும் எல்லோருடனும் பகிர்ந்து வாழுங்கள்’ என்று வேத மாதா உபதேசிக்கிறாள்: தேவா பாகம் யதா பூர்வே ஸஞ்ஜாநாநா உபாஸதே. தான் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெற வைப்பதில் ஸாயிமயமான இன்பத்தை ஸோதர அடியாரோடு பகிர்ந்துகொள்வது போல் ஒன்றுண்டோ?

    3. அன்பின் வண்ணம்

    ‘மாலின் நீர்மை’ என்று ஆழ்வார் எதைச் சொன்னார்? நீராய்க் குளிர்ந்து, இனித்து, உயிர்ச்சார மூட்டும் ‘நீர்-மை’யாக நம் ஸ்வாமி காட்டும் ப்ரேமையைத் தானே? ஆழ்வார் கண்ட ‘பாலின் நீர்மை, செம்பொன் நீர்மை, பாசியின் பசும் நீர்மை, நீல நீர்மை’ யாவுமே காட்டுவது ஸாயியின் அன்பு. அது தூய்மையில், தாய்மையில் பால். உள்ளொளி துலக்கும் பொன். பசுமைக் கொழிப்பில் பாசி. அகண்ட விசாலத்தில் வான்நீலம், கடல் நீலம்.

    *அன்பு அறுபது நூலில் 23-ம் அத்யாயமும் பார்க்க.

    ஆயினும் காய் கனிகையில் செம்மை பெறுவதே போல இதயக் கனிவையும் கருதி நமது மரபானது அன்பைச் சிவந்ததாகவே கூறும். அமைதி வெண் சிவமே அன்பில் சிவந்த லலிதையாவதை மஹான்கள் அனுபவத்தில் கண்டு, மற்றோர்க்கும் காட்டிக் கொடுத்திருக்கிறார்கள்.

    மனிதனின் உணர்வுகளையும் எக்ஸ்-ரே போல் கிர்லியன் புகைப்படம் எடுப்பவர்கள் அன்பை ‘பிங்க்’ என்ற இளஞ்சிவப்பாகவே கூறுகிறார்கள். ‘இளம்’ என்பது ‘சோகை’ச் சிவப்பல்ல. இளமைக்குள்ள வளமையும் வலிமையும் கொண்ட லேசான செந்நிறம். ரோஜா நிற மென்மையில்லை. ஆரஞ்ஜின் கண் கூச்சும் இல்லை. அழகான, இதமான ஒரு வண்ணம்.

    ஆங்கிலத்தில் ‘பிங்க்’ முழுமைக்கு உருவகம் - நமக்குச் செம்மை போல், ஒன்றின் பூர்ண நிலையைச் சொல்ல, in the pink of it என்பார்கள். அன்பெனும் பிங்க் தனது இம்முழுமைப் பிங்கைத் தொடுவது நம் ஸ்வாமியிடமே என்று உலகப் புகழ் கிர்லியன் நிபுணர் பாரனௌவ்ஸ்கி கூறியிருப்பதை ஸாயி பக்தருலகு அறியும்.

    கனடாக்காரரான ஸ்ரீமதி மேரிலின் ரோஸ்னெர் ஓரளவு புகழ் பெற்ற ‘ஸென்ஸிடிவ்’ அல்லது ‘ஸைகிக்’ - அதாவது ஐம்புலனுக்கப்பாற்பட்ட அதிர்வலைகளை உணரவும், அதீந்திரிய சக்திகளோடு தொடர்பு கொள்ளவும் திறம் பெற்றவர். தாமே அதிசய சக்தி படைத்தவரான இப்பெண்மணி கூறுகிறார்: "ஸாயிபாபா

    Enjoying the preview?
    Page 1 of 1