Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Chinna Chinna Kathaigal 100
Chinna Chinna Kathaigal 100
Chinna Chinna Kathaigal 100
Ebook307 pages2 hours

Chinna Chinna Kathaigal 100

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சிறியவர்களுக்கு மட்டுமின்றிப் பெரியவர்களுக்கும் கூட நீதியைச் சொல்கிற நல்ல கதைகள் எப்போதும் தேவைப்படுகின்றன. இதை முழுமையாக உணர்ந்த 'தினமலர்' குழுமத்தின் ‘காலைக் கதிர்' நாளிதழின் 'வாரக்கதிர்' இணைப்பில் இந்தக் கதைகளை எழுதும் வாய்ப்பை எனக்கு நல்கினார்கள். ஒவியர் சேகர் அவர்கள் வரைந்த அருமையான சித்திரங்களுடன் இவற்றை வாரா வாரம் அழகுற வெளியிட்டார்கள். இந்தக் கதைகள் 'வாரக்கதிர்' வாசகர்களின் வரவேற்பை யும் நிறையப் பெற்றன.

இவை பெரும்பாலும் அனைவரும் அறிந்திருக்கக் கூடிய புராண, இதிகாசக் கதைகள்தான், ஒன்றிரண்டு கதைகளை நானே புனைந்தும் எழுதினேன். இவற்றை 'ஆத்மேஸ்வரன்' என்னும் புனை பெயரில் அப்போது எழுதினேன். இப்போது என்னுடைய பெயரிலேயே திருவரசு புத்தக நிலையத்தார் நூலாக வெளியிடுகிறார்கள்.

இந்தக் கதைகளை வெளியிட்டமைக்கும், இவை 'வாரக்கதிர்' இதழில் வெளியானபோது இடம்பெற்ற ஓவியர் சேகரின் சித்திரங்களை, இந்த நூலில் பயன்படுத்திக்கொள்ள அனுமதித்தமைக்கும் 'தினமலர்' நிர்வாகத்துக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மிக்க அன்புடன்
சுப்ர. பாலன்.

Languageதமிழ்
Release dateSep 13, 2019
ISBN6580127904455
Chinna Chinna Kathaigal 100

Related to Chinna Chinna Kathaigal 100

Related ebooks

Reviews for Chinna Chinna Kathaigal 100

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Chinna Chinna Kathaigal 100 - Subra Balan

    http://www.pustaka.co.in

    சின்னச் சின்னக் கதைகள் 100

    Chinna Chinna Kathaigal 100

    Author:

    சுப்ர. பாலன்

    Subra Balan

    For more books

    http://pustaka.co.in/home/author/subra-balan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    என்னுரை

    சின்னச் சின்னக் கதைகள் 100!

    1. பாத தூளியும், பரம்பொருளும்!

    2. அனுமனுக்கே தெரியாத வலிமை!

    3. தேடி வந்த பெருமை!

    4. ருக்மணி பெற்ற சாபம்!

    5. மன்னிப்பதும் மனித இயல்பே!

    6. திருடனுக்குத் துணை போன மாயத் திருடன்!

    7. நெஞ்சுக்குள் உறையும் கடவுள்!

    8. கடலில் வீசிய தங்க மீன்!

    9. மெளனமாக இருத்தலின் பயன்!

    10. தன்னை நினைக்காத தருமம்!

    11. மனமே கோவில்!

    12. சுயமரியாதையை கைவிடாத மகாகவி!

    13. முழுமையான சரணாகதி!

    14. சத்ய காமனின் கதை!

    15. விளையாட்டாக ஒரு பொய்!

    16. நன்றி மறக்காத பச்சைக்கிளி!

    17. கட்டுண்டார், பொறுத்திருந்தார்!

    18. கண்ணுக்குத் தெரியாத பேருதவி!

    19. வேடனாக வந்தருளிய சிவபெருமான்!

    20. கடமையை மறக்கலாமா?

    21. ஜனகரின் மனத்திண்மை!

    22. கூடு கட்டிய குருவிகள்!

    23. பறவைகள் சண்டை!

    24. நண்பனைப் பற்றிய கவலை!

    25. தராசு முள்ளை ஏமாற்றிய கதை!

    26. இராமனை தரிசித்த துளசிதாசர்!

    27. உடைந்த சிலையை கங்கையில் விடலாமா?

    28. எது உண்மையான துறவு?

    29. அறுந்த வாலின் கதை!

    30. பகைவனுக்கும் அருள வேண்டிய பக்குவம்!

    31. பாவமும், கங்கையும்!

    32. என்றும் வெல்லும் தர்மம்!

    33. ஆடம்பரமான பூஜை எதற்கு?

    34. தர்ம தேவதைக்கே சாபம் தந்தவர்!

    35. முதுகெலும்பைத் தந்த முனிவர்!

    36. நட்பை மறந்த துருபதன்!

    37. ஆணவம் தோற்றது!

    38. இப்படியும் ஒரு சகோதரன்!

    39. கங்காதேவியின் ஆணவம்!

    40. கருடனின் கருணை!

    41. மூலிகை தேடியவன் பெற்ற வரம்!

    42. படகோட்டி அறிந்த உண்மை!

    43. துறவியின் வெற்றி!

    44. கண்களை மறைக்கும் மாயம்!

    45. அளவுக்கு மீறிய ஆசை

    46. எளிமையான ஆடை எது?

    47. கண்ணனே போதும்!

    48. அனுமனுக்குத் தந்த பரிசு!

    49. பூக்களே போதும்!

    50. தன்னையே சுட்ட வினை!

    51. உதவிக்கு வந்த கடவுள்!

    52. தாமதமாய் வந்த ஞானம்!

    53. கண்ணனைக் கண்டவர்!

    54. பாதையில் கிடந்த தங்கக் காசுகள்!

    55. தேடிவந்த தெய்வம்

    56. பழம் திருடியவர்கள்!

    57. உணவுக்குத் தகுந்த மனம்!

    58. குழந்தையால் கிடைத்த பரிசு!

    59. தகுதியான குரு யார்?

    60. சீடனை வணங்கிய குரு!

    61. தர்மவானின் கதை!

    62. மனமே முக்கியம்!

    63. வேறு துணை வேண்டுமா?

    64. அப்பா கவனித்துக் கொள்வார்!

    65. ராமன் செய்த தவறு!

    66. கொம்பில்லாத மனிதன்!

    67. வெய்யிலும், நிழலும்!

    68. கைதொழுது நிற்கும் கருடன்!

    69. சொல் எதற்கு வேண்டும்?

    70. மரத்தின் பாசம்!

    71. பொய் சொன்னதன் பலன்!

    72. அகந்தை அழிவு தரும்!

    73. நான் நாத்திகனா?

    74. வசமான கன்றுக்குட்டி!

    75. அடைக்கலம் தந்த பரம்பொருள்!

    76. வேடனைக் காத்த கரடியின் கதை!

    77. முள்செடியின் சோகம்!

    78. சரணடைந்த வெள்ளை முயல்!

    79. கடவுளையே மடக்கிய பிரகலாதன்!

    80. போதும் என்ற மனம்!

    81. கன்றுக்குட்டியைத் துரத்தியவன்!

    82. மேன்மக்கள் மேன்மக்களே!

    83. பறங்கிக் கொடியின் ஏக்கம்!

    84. கடலன்னையின் சிரிப்பு!

    85. மன்னிக்கும் மனவளம்!

    86. திட்டமிட்ட வெற்றி!

    87. வெளியேறிய விலங்கு!

    88. சீறிய பாம்பு; பிளிறிய யானை!

    89. நாளையைப் பற்றிய கவலை!

    90. ஒட்டைப் பானை!

    91. பழத்தை வீழ்த்திய கதை!

    92. குளக்கரையில் கிடந்த காசுகள்!

    93. பகவானின் பாதம் பட்டால்...

    94. பொறுமைக்கு ஒரு விலை!

    95. துறவியும், சீடனும்!

    96. மூங்கிலில் குடைந்த வண்டு!

    97.மாமரத்துப் பொந்து!

    98. பேச முடியாத அனுமன்!

    99. பாம்பும் குழந்தையும்!

    100. பறவை அனுப்பிய செய்தி!

    என்னுரை

    சிறியவர்களுக்கு மட்டுமின்றிப் பெரியவர்களுக்கும் கூட நீதியைச் சொல்கிற நல்ல கதைகள் எப்போதும் தேவைப்படுகின்றன. இதை முழுமையாக உணர்ந்த 'தினமலர்' குழுமத்தின் ‘காலைக் கதிர்' நாளிதழின் 'வாரக்கதிர்' இணைப்பில் இந்தக் கதைகளை எழுதும் வாய்ப்பை எனக்கு நல்கினார்கள். ஒவியர் சேகர் அவர்கள் வரைந்த அருமையான சித்திரங்களுடன் இவற்றை வாரா வாரம் அழகுற வெளியிட்டார்கள். இந்தக் கதைகள் 'வாரக்கதிர்' வாசகர்களின் வரவேற்பை யும் நிறையப் பெற்றன.

    இவை பெரும்பாலும் அனைவரும் அறிந்திருக்கக் கூடிய புராண, இதிகாசக் கதைகள்தான், ஒன்றிரண்டு கதைகளை நானே புனைந்தும் எழுதினேன். இவற்றை 'ஆத்மேஸ்வரன்' என்னும் புனை பெயரில் அப்போது எழுதினேன். இப்போது என்னுடைய பெயரிலேயே திருவரசு புத்தக நிலையத்தார் நூலாக வெளியிடுகிறார்கள்.

    இந்தக் கதைகளை வெளியிட்டமைக்கும், இவை 'வாரக்கதிர்' இதழில் வெளியானபோது இடம்பெற்ற ஓவியர் சேகரின் சித்திரங்களை, இந்த நூலில் பயன்படுத்திக்கொள்ள அனுமதித்தமைக்கும் 'தினமலர்' நிர்வாகத்துக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஒவ்வொரு கவிதைக்கும் அற்புதமான முறையில் சித்திரங்களை வரைந்த ஓவியர் சேகருக்கும் என் நன்றி.

    மேலட்டையை அழகுற வடிவமைத்துள்ள ஹரீஷ்குகன் அவர்களுக்கும், என்னுடைய விருப்பம் போல் அழகுற ஒளியச்சுச் செய்துள்ள நண்பர் நாஞ்சில் பெ. மணிக்கும் என் நன்றி.

    மிக்க அன்புடன்

    சுப்ர. பாலன்.

    சின்னச் சின்னக் கதைகள் 100!

    1. பாத தூளியும், பரம்பொருளும்!

    பரம்பொருள் மேல், யார் யாரெல்லாம் உண்மையான அன்புடன் பக்தி செலுத்துகின்றனரோ அவர்களுக்கு, தங்களின் பக்தியின் மேல் அவநம்பிக்கை ஏற்படாது. அத்தகையோரின் பக்திக்கு, ஆண்டவனும் அடிபணிவான்.

    ஒரு சமயம், விண்ணுலகில், பரம்பொருளான மகா விஷ்ணுவுக்கு, தலைவலி ஏற்பட்டது. என்ன செய்தால், அந்தத் தலைவலி போகும் என்று அனைவரும் யோசித்தனர், என்னுடைய உண்மையான பக்தர் ஒருவரின், காலடி மண் கிடைத்தால், தலைவலி போய்விடும்... என்று கூறினார் எம்பெருமான்.

    இதோ... இப்போதே பூலோகம் சென்று, பரமபக்தர் ஒருவரின் காலடி மண்ணைக் கொண்டு வருகிறேன்... என்று சொல்லி, தம்புராவும் கையுமாக புறப்பட்டார் நாரதர்.

    பூமிக்கு வந்த நாரதர், எம்பெருமானின் உண்மையான பக்தர் யார் என்று ஒவ்வொருவராக விசாரித்த போது, அப்படி யாரும் கிடைக்கவில்லை. மனம் சோர்ந்து, யமுனை ஆற்றங்கரையில் போய், அமர்ந்தார்.

    குறும்புக்காரிகளான கோபியர் சிலர், நாரதரைப் பார்த்து, அவரோடு வம்பு செய்யலாம் என்று, அருகில் வந்தனர்.

    கவலையோடு நாரதர் அமர்ந்திருப்பதைப் பார்த்து, சுவாமி... என்ன விஷயம், ஏன் கவலையோடு இருக்கிறீர்கள்? என்று கேட்டனர். அவர்களிடம், பரம்பொருளின் தலை உயியைப் பற்றிச் சொல்லி, அதற்கு மருந்தாக, பக்தர் ஒருவரின் பாத தூளியைத் தேடி அலைவதாகக் கூறினார் நாரதர்.

    ப்பூ... இவ்வளவுதானே... இதோ நாங்கள் தருகிறோம். நாங்கள் பரம்பொருளான கண்ணனின் பரமபக்தர்கள் இல்லையா... என்று கேட்டவாறே யமுனையாற்று மணல் பரப்பில் இறங்கி, மிதித்து, அதை, ஒரு சிறு கூடையில் வாரி எடுத்து, நாரதரிடம் கொடுத்தனர்.

    நாரதருக்கு அதிர்ச்சியாக இருந்தது. பாமரத்தனமான இந்தக் கோபிகைகள், தங்களை பகவானின் உண்மையான பக்தர்கள் என்று நம்பி செயல்படுகிறபோது, எப்போதும் ‘நாராயணா' என்று முழங்கிக் கொண்டே வலம் வரும் தன்னால், ஏன் அப்படி பரமபக்தானாக எண்ண முடியாமல் போனது என்று நினைத்து வருத்தப்பட்டார்.

    கோபியர் கொடுத்த, காலடி மண்ணை எடுத்துச் சென்று, விஷ்ணுவின் நெற்றியில் பூச, அவரது தலைவலி தீர்ந்ததாகப் புராணக் கதை!

    "வயதும், அறிவும் கூடக் கூட, தன்னையே நம்பாத நிலை ஏன் ஏற்பட வேண்டும்...'' என்று எண்ணிப் பார்த்தார். எல்லாம் அறிந்த மகா ஞானியான நாரதர்.

    படித்தவர்களுக்குத்தான், எல்லாவிதமான சந்தேகங்களும் வருகின்றன. கள்ளங்கபடமில்லாத பாமரர்கள், எதிலும் சந்தேகப்படுவதே இல்லை.

    2. அனுமனுக்கே தெரியாத வலிமை!

    அனுமனுக்கு அவருடைய பலமே தெரியாதாம். யாராவது, நீ இவ்வளவு பெரிய பலசாலி... என்று நினைவூட்டினால் தான், தெரியுமாம். அதற்கு என்ன காரணம்?

    அஞ்சனைக்கும், வாயு பகவானுக்கும் குழந்தையாய்ப் பிறந்தவர் அனுமன். அந்த அதிசயக் குழந்தைக்கு, அளவில்லாத சக்தியை, படைப்புக் கடவுளான பிரம்மாவும், மற்ற தேவர்களும் வாரி வழங்கினார்கள்.

    தனக்குள்ள அபார சக்தியின் பெருமையால், குழந்தை அனுமன், குறும்புத்தனமாக, முனிவர்களின் ஆசிரமங்களில், ஹோமகுண்டங்களைச் சிதைத்து. அட்டகாசம் செய்தார்.

    அதைப் பொறுத்துக்கொள்ள முடியாத முனிவர்கள், உனக்குள்ள சக்திகளையெல்லாம் நீ மறந்து போகக் கடவது…. என்றும், யாராவது நினைவூட்டினால்தான், உன்னுடைய பலம் உனக்கே தெரியும்... என்று சாபம் கொடுத்து விட்டனர். அதனால்தான் மகா பலசாலியான வாலியை சமாளிக்க முடியாமல், ஓடி ஒளிந்த சுக்ரீவன் முன்னால், அடங்கி, ஒடுங்கி, பல ஆண்டுகள், அமைச்சராக இருந்தார் அனுமன்.

    இராவணன் கவர்ந்து சென்ற சீதையைத் தேடி, இராம பிரான், காடு, மேடெல்லாம் அலைந்த போது, கரடிகள் இனத் தலைவரான ஜாம்பவான்தான், அனுமனின் வலிமையை, அவருக்கு நினைவூட்டினார். உடனே, வாலைத் தரையில் ஓங்கி அடித்து, வானளாவ உயர்ந்து நின்றாராம் அனுமன். அவருடைய இந்தத் தோற்றத்தைப் பார்த்த உடனேயே, இனிமேல் எல்லாம் ஜெயம்தான் என்று, தெரிந்து கொண்டனர் மற்றவர்கள்.

    அனுமனைப் போல், பலர் தங்களுடைய உண்மையான பலம் மற்றும் திறமை என்ன என்பதைத் தெரிந்துகொள்ளாமலே இருக்கின்றனர். பாகன் கையிலுள்ள குச்சிக்கு பணிந்து போகிற யானை, தன்னுடைய வலிமையை உணர்ந்து கொண்டால் என்ன ஆகும்! அந்த யானையைவிட, நாம் கூடுதலான அறிவு பெற்றவர்கள் என்று, வெறுமனே சொல்லிக் கொண்டிருந்தால் போதுமா?

    ஜாம்பவான் மாதிரி யாராவது எடுத்துச் சொல்லித்தான், மனிதர்களையும், உற்சாகப்படுத்த வேண்டியிருக்கிறது. அனுமன் மாதிரி, விஸ்வரூபம் எடுக்க வேண்டியவர்கள் எல்லாம், யார், யாரிடமெல்லாமோ கைகட்டி நிற்க வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. தங்களுடைய பலத்தை, தாங்களே உணர்ந்தவர்கள் தான், வாழ்க்கையில் வெற்றி பெற்று, மேலே மேலே, உயர முடிகிறது. மற்றவர்களின் பலவீனத்தைச் சுட்டிக் காட்டுவதைத் தவிர்த்து, அவர்களுடைய பலத்தை மட்டும் கொண்டாடி, மகிழலாமே!

    3. தேடி வந்த பெருமை!

    மதிப்பும், மரியாதையும், நம்மைத் தேடி வரவேண்டும். நாம், அவற்றைத் தேடி அலையக் கூடாது.

    மரியாதை நம்மைத் தேடி வந்து, கௌரவப்படுத்திய நிகழ்வுகள், புராண காலத்திலும் உண்டு; காந்திஜியின் அப்பழுக்கற்ற தியாக வாழ்க்கையிலும் உண்டு.

    மகாபாரதத்தில், பாண்டவருக்காக, துரியோதனனின் அவைக்கு தூது போனான் பரம்பொருளான கண்ணன். தூதராக வருகிறவர்களை, கௌரவமாக நடத்த வேண்டும் என்பது

    Enjoying the preview?
    Page 1 of 1