Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ammai Vadumugaththu Oru Naadodiyin Ninaivu Kurippugal
Ammai Vadumugaththu Oru Naadodiyin Ninaivu Kurippugal
Ammai Vadumugaththu Oru Naadodiyin Ninaivu Kurippugal
Ebook224 pages4 hours

Ammai Vadumugaththu Oru Naadodiyin Ninaivu Kurippugal

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

மிகெய்ல் நைமி எத்தகைய ஞானச் சிகரம் என்பது தெரிந்ததுதானே! இந்த எதிர்பார்ப்போடு உள்ளே புகுந்தால், மீண்டும் திகைப்புத்தான்! திகைப்பிற்கு மேல் திகைப்பு!

இந்த முறை - பச்சையாகச் சொன்னால் - ஒரு சாராயக் கடையிலிருந்து ஊற்றெடுத்துப் பொங்கிப் பிரவகிக்கிறது ஞானவெள்ளம்! ஞானப் புயல்! ஞானத்தின் பிறப்பிடம், நாம் எதிர்பார்ப்பதுபோல, ஒரு மகானின் ஆசிரமமாகத்தான் இருக்க வேண்டுமா? ஒரு மதுபானக் கடையாக இருக்காதா என்ன?

“ஒரு பிராமணர் காட்டில் கடுந்தவம் புரிந்து வந்தார். தவமுடிவில், அவர் எழுந்துபோக முயலும்போது, அவர் தோளின் மீது ஒரு பறவையின் எச்சம் விழுந்தது. அவர் அருவருப்பும் சினமும் கொண்டு மேலே பார்த்தார். அவரது பார்வையில் பட்ட கொக்கு சட்டென எரிந்து சாம்பலாயிற்று! தனது தவ வலிமையின் கர்வத்துடன் அவர் சென்று ஒரு வீட்டின் முன் நின்றார். உணவுக்காகத்தான். குறிப்புணர்ந்த அந்த வீட்டுப் பெண்மணி வெளியே வர என்ன காரணத்தாலோ தாமதமாகிவிட்டது. அதைச் சகித்துக் கொள்ளாத அவர் அவளைச் சினந்து பார்த்தார். எரித்துவிடத்தான்! ஆனால், அந்த அம்மையார் எரிந்துவிடவில்லை. அது மட்டு மல்ல, அவரைப் பார்த்து, “கொக்கென்று நினைத்தீரோ?” என்று கேட்டார்! துறவி அதிர்ந்துபோனார்! காட்டிலே நடந்தது, வீட்டிலே இருக்கும் இவளுக்கு எப்படித் தெரிந்தது என்றும், தனது சினத் தீஇங்கே செல்லுபடியாக வில்லை என்றும் கண்ட அவரிடம், அந்தப் பெண்மணி, ஒரு பெயரும் அடையாளமும் சொல்லி ‘அவரிடம் போ, ஞானம் பெறுவாய்!” என்று அனுப்பிவைத்தார். அவர் போனார். அம்மையார் குறிப்பிட்ட இடம் ஒரு கசாப்புக்கடை அவர் ஞானம் பெற வேண்டிய குருநாதர் கசாப்புக் கடைக்காரர். இவர், அவரிடம் மெய்ஞ்ஞானம் பெற்றார் என்பது கதை!

ஆனால், ஆழமான கருத்துள்ள கதை இது. மெய்யுணர்வு பெற்றவர் என்ன உருவில், என்னவாக, எப்படி இருப்பார் என்று சொல்லமுடியுமா என்ன?

Languageதமிழ்
Release dateJan 6, 2017
ISBN6580104201788
Ammai Vadumugaththu Oru Naadodiyin Ninaivu Kurippugal

Read more from Puviyarasu

Related to Ammai Vadumugaththu Oru Naadodiyin Ninaivu Kurippugal

Related ebooks

Reviews for Ammai Vadumugaththu Oru Naadodiyin Ninaivu Kurippugal

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ammai Vadumugaththu Oru Naadodiyin Ninaivu Kurippugal - Puviyarasu

    http://www.pustaka.co.in

    மிகெய்ல் நைமியின்

    அம்மை வடுமுகத்து ஒரு நாடோடி ஆத்மாவின் நினைவுக் குறிப்புகள்

    Mikhail Naimy’s

    Ammai Vadumugaththu Oru Naadodiyin Ninaivu Kurippugal

    Author: Mikhail Naimy

    மிகெய்ல் நைமி

    Translated By: Puviarasu

    புவியரசு

    For other books

    http://www.pustaka.co.in/home/author/puviyarasu

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    அம்மை வடுமுகத்து

    ஒரு நாடோடி ஆத்மாவின்

    நினைவுக் குறிப்புகள்

    இளைஞன் : மரணம் வரும்போது நீ என்ன செய்வாய்?

    பூனை : செத்துப்போவேன்!

    இளைஞன் : மரணம் வேதனையாயிற்றே! நீ என்ன செய்வாய்?

    பூனை : நான் அதை அனுபவிப்பேன்!

    ‘இதை

    மொழிபெயர்த்துவிட்டு

    செத்துப்போ!’

    ஆமாம், இப்படிச் சொல்லிவிட்டுத்தான் இதன் மூலப் பிரதியை என்னிடம் கொடுத்தார்கள் அன்பு இளவல்கள்.

    கூடவே, இதை நாங்கள் சொல்லவில்லை அண்ணா, எங்களிடம் தந்தவர், இப்படிச் சொல்லச் சொல்லி உங்களிடம் தரச் சொன்னார், என்றார்கள்!

    சொன்னவர் யார் என்று நான் கேட்கவில்லை அப்போது. பின்னால் கேட்டுத் தெரிந்து கொண்டேன். இந்த ஞானக் களஞ்சியத்தில் எந்த அளவு மூழ்கிப் பரவச மடைந்திருந்தால் ஒருவர் இப்படிச் சொல்லியிருக்கக் கூடும் என்றுதான் தோன்றியது.

    ஓர் அதிசயம் பாருங்கள், லெபனான் நாட்டு ஞானவான் மிகெய்ல் நைமி எப்போதும் ஒரு மடாலயத்திலிருந்தே என்னிடம் வந்து சேர்கிறார். சென்றமுறை ரிஷிகேசம் சிவானந்த ஆசிரமத்திலிருந்து அன்பர் செல்லப்பா மூலம் என்னிடம் வந்து சேர்ந்தார்.

    இந்தமுறை, திருவண்ணாமலை ரமணாஸ்ரமத்திலிருந்து என் அருமை இளவல்கள் செந்தில்குமரன், சீனிவாசன் ஆகியோர் மூலம்.

    செந்தில் குமரன் ஒரு பொறியியல் கல்லூரியின் முதல்வர். சீனி, வழக்குரைஞர். இவ்விருவரும் இளம் வயதினர். ஞானத் தேடலின் தீவிரவாதிகள்!

    அதிசயம்தான். மிர்தாத் எப்படி வந்ததோ அப்படியே இதுவும்! ஒரு செராக்சின், செராக்சின், செராக்சின் செராக்ஸ் பிரதி!

    மூலப் பரம்பொருள் எங்கே ஒடுக்கம் கொண்டதோ அறியேன்!

    ஒர் இஸ்லாமிய ஞானச் செல்வர் சிவானந்த ஆசிரமத்திற்கு மிர்தாதை வழங்கியதுபோலவே, கே.என். பாண்டே என்ற மெய்யுணர்வாளர், இந்த நூலை, ஏ 4 அளவில் தட்டச்சு செய்து, 1955 பிப்ரவரி 5 ஆம் நாள், "மெய் தேடிச் செல்லும் எல்லா அன்பர்களின் நலனுக்காக, என்று குறித்து, ரமணாஸ்ரமத்திற்கு அன்பளிப்பாக வழங்கிச் சென்றிருக்கிறார். அதன், தொடர் செராக்ஸ் வரிசையில் கடைசிப் பிரதி என்னிடமே வந்து சேர்ந்து விட்டது என் பெரும்பேறு என்றே கருதுகிறேன்.

    மிகெய்ல் நைமி எத்தகைய ஞானச் சிகரம் என்பது தெரிந்ததுதானே! இந்த எதிர்பார்ப்போடு உள்ளே புகுந்தால், மீண்டும் திகைப்புத்தான்! திகைப்பிற்கு மேல் திகைப்பு!

    இந்த முறை - பச்சையாகச் சொன்னால் - ஒரு சாராயக் கடையிலிருந்து ஊற்றெடுத்துப் பொங்கிப் பிரவகிக்கிறது ஞானவெள்ளம்! ஞானப் புயல்!

    ஞானத்தின் பிறப்பிடம், நாம் எதிர்பார்ப்பதுபோல, ஒரு மகானின் ஆசிரமமாகத்தான் இருக்க வேண்டுமா? ஒரு மதுபானக் கடையாக இருக்காதா என்ன?

    ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிட வேண்டும். என் நீண்ட நாள் நண்பர் சுரேஷீம் அவரது நண்பர்களும் சேர்ந்து ‘அருவி' என்ற அமைப்பை நடத்தி வருகிறார்கள்.

    அதன் சார்பில், எழுத்தாளர் சுரேஷ்குமார இந்திரஜித் அவர்களைப் பேச அழைத்திருந்தார்கள். பேச்சினிடையில் மகாபாரதக் கிளைக் கதை ஒன்றை அவர் குறிப்பிட்டார். அது இது:

    ஒரு பிராமணர் காட்டில் கடுந்தவம் புரிந்து வந்தார். தவமுடிவில், அவர் எழுந்துபோக முயலும்போது, அவர் தோளின் மீது ஒரு பறவையின் எச்சம் விழுந்தது. அவர் அருவருப்பும் சினமும் கொண்டு மேலே பார்த்தார். அவரது பார்வையில் பட்ட கொக்கு சட்டென எரிந்து சாம்பலாயிற்று! தனது தவ வலிமையின் கர்வத்துடன் அவர் சென்று ஒரு வீட்டின் முன் நின்றார். உணவுக்காகத்தான். குறிப்புணர்ந்த அந்த வீட்டுப் பெண்மணி வெளியே வர என்ன காரணத்தாலோ தாமதமாகிவிட்டது. அதைச் சகித்துக் கொள்ளாத அவர் அவளைச் சினந்து பார்த்தார். எரித்துவிடத்தான்! ஆனால், அந்த அம்மையார் எரிந்துவிடவில்லை. அது மட்டு மல்ல, அவரைப் பார்த்து, கொக்கென்று நினைத்தீரோ? என்று கேட்டார்! துறவி அதிர்ந்துபோனார்! காட்டிலே நடந்தது, வீட்டிலே இருக்கும் இவளுக்கு எப்படித் தெரிந்தது என்றும், தனது சினத் தீஇங்கே செல்லுபடியாக வில்லை என்றும் கண்ட அவரிடம், அந்தப் பெண்மணி, ஒரு பெயரும் அடையாளமும் சொல்லி ‘அவரிடம் போ, ஞானம் பெறுவாய்! என்று அனுப்பிவைத்தார். அவர் போனார். அம்மையார் குறிப்பிட்ட இடம் ஒரு கசாப்புக்கடை அவர் ஞானம் பெற வேண்டிய குருநாதர் கசாப்புக் கடைக்காரர். இவர், அவரிடம் மெய்ஞ்ஞானம் பெற்றார் என்பது கதை!

    இது வியாச பாரதத்திலோ, வில்லி பாரதத்திலோ, பெருந்தேவனார் மற்றும் நல்லாப்பிள்ளை பாரதத்திலோ இருக்கக் கூடும். வள்ளுவரின் மனைவி வாசுகியிடம் போன ஒரு முனிவர்மேலும் வைத்து இந்தக் கதை சொல்லப் படுவதுண்டு.

    ஆனால், ஆழமான கருத்துள்ள கதை இது. மெய்யுணர்வு பெற்றவர் என்ன உருவில், என்னவாக, எப்படி இருப்பார் என்று சொல்லமுடியுமா என்ன?

    அஸ்டாவக்கிரன் கதை நமக்குத் தெரிந்ததுதானே!

    எட்டுக் கோணலான அவனது உருவம் கண்டு அனைவரும் சிரிக்கவே செய்தார்கள். ஆனால், அவனது ‘அஸ்டாவக்கிர கீதை’ மாபெரும் ஞான நூலாக இன்றும் நின்று நிலவுகிறது.

    நமது காலத்தின் அஸ்டாவக்கிரர் யார்? ஸ்டீபன் ஹாக்கிங் இதுவரை அறியப்படாதிருந்த பிரபஞ்சப் ‘பெரும் பாழ்' என்ற கருத்துளைகளைப் ("பிளாக் ஹோல்') பற்றிய உண்மைகளைச் சொன்னவர்; காலத்தின் வரலாற்றை வரைந்தவர், (‘எ பிரீஃப் ஹிஸ்டரி ஆஃப் டைம்').

    இவர்களெல்லாம் நம் பொதுப் பார்வைக்கும், பொது அளவுகோல்களுக்கும் பொருந்திவராத அருவருப்பானவர்கள். இப்பட்டவர்களிடமும் ஞானம் நிலை கொண் டிருக்கும் என்பதை உணர்த்தவே, மடாலய வேலைக்காரனாக ஏழாண்டுகள் மெளனியாகப் பணி புரிந்து வந்த மிர்தாதிட மிருந்து ஞானப் பெருக்கை நமக்குக் காட்டினார் நைமி.

    இப்போது-இங்கே -தன் பெயரே தனக்குத் தெரியாத ஒர் இளைஞன், மெளனமே கவசமாகப் பூண்டு, நியூயார்க் நகரின் ஒதுக்குப் புறமான ஒரு காப்பி/மதுக்கடையில் பணியாளாக இருக்கிறான். முகமெல்லாம் கடுமையான அம்மைத் தழும்புகள். அந்த அனாதைப் பையனனின் நினைவுப் பதிவுகளாக இந்த ஞானநூல் மலர்ந்திருக்கிறது.

    'உருவு கண்டு எள்ளாமை வேண்டும்' என்பது வள்ளுவர் வாக்கு.

    எல்லா ஞானங்களுக்கும் அடிப்படை, உண்மைதான். அதைக் கண்டடையும்போது மட்டுமல்ல, தேடிச் செல்லும் வழியிலேயே கூட ஞானம் சித்திக்கலாம். அதனால், தேடு வோர் பாக்கியவான்கள். அவர்கள் தேடுவதைக் கண்டடைவார்கள்!

    ‘தேடிக் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்' - என்ற ஆழ்வாரின் வாக்கில், 'தேடுதல்’ என்ற அம்சத்தை நன்றாகப் பற்றிக் கொள்ள வேண்டும்.

    அப்புறம்தான் உண்மை.

    நாம் நினைப்பது போல உண்மை அரிதானதுதான். ஆனால் உண்மையில், உண்மையோ மிகமிகமிக எளிமை யானது; இயல்பானது! அதுதான் அதன் சிறப்பு. அதுதான் அதன் சிக்கல்!

    நாம் ஒரு மாபெரும் பொய்ம்மைப் போர்வைக்குள் முடங்கிக் கிடப்பதால், உண்மை நமக்கு அந்நியமாகவும், அதிர்ச்சி தருவதாகவும் அமைந்துவிடுகிறது. அதனால்தான், 'உண்மை சுடும்' என்ற வாக்கே பிறந்தது.

    எது உண்மை என்று யாரிடமும் கேட்க வேண்டிய தில்லை. அது அவரவர் மனசாட்சிக்கே தெரியும். என்றாலும், நாம்தான் நமது மனசாட்சியின் குரலை மதிப்பதில்லையே! அதுதான் நமது விவகாரம்!

    அதனால், மாயையின் வழியாகச் சென்றுதான் மெய்காண வேண்டியிருக்கிறது. ஆனால், மாயையை, முதலில் மாயை என்று கண்டுகொள்ள வேண்டியிருக்கிறது! அதுதான் முதற்படி, ஒரு வேளை முதல் படியிலேயே கூட நமக்கு உண்மை தரிசனமாகலாம்!

    "சாத்தானைச் சந்தித்த பின்பே

    கடவுளைச் சந்திக்க முடிகிறது!"

    என்ற மொழி எவ்வளவு உண்மையானது பாருங்கள்!

    இந்த அருட் களஞ்சியத்தில் சொல்லப்படும் சில உண்மைகள் சவுக்கடி போல நம்மீது விழுகின்றன!

    மொழியைக் கடவுளாக்கிக் கோயில் கட்டிக் கும்பிட்டு, அதன் உற்சவமூர்த்தியைத் தோளில் சுமந்து செல்லும் இயல்புபடைத்தவர்கள் நாம்.

    ‘தேசியம்’ என்ற மாபெரும் கோட்டை மதில்மிது எப்போதும் ஆயுதம் ஏந்தி யுத்த சன்னத்தராய் இருப் பவர்நாம்.

    இந்த இரண்டு அம்சங்களையும், மாயை என்று தகர்க்கிறார் நைமி! இவை, நமக்கு அதிர்ச்சிதருவன.

    உண்மை, சுடும் தீ மட்டுமல்ல; விழுங்கவும் கசப் பானது. குளிர்ந்த ஈரமான நாவுகளுக்கு, பொய்மையின் இனிப்புத் தடவிய நாவுகளுக்கு அப்படித்தான் இருக்கும்.

    உண்மை சுடுவது மட்டுமல்லாமல், கசப்பது மட்டு மல்லாமல், எரிச்சல் தருவதாகவும், வருத்தம் உண்டாக்கு வதாகவும், கவலை ஏற்படுத்துவதாகவும், அவமானத்தை ஏற்படுத்துவதாகவும் இருக்கின்றது!

    அந்த அளவுக்கு நாம், உண்மையிலிருந்து அந்நியப்பட்டிருக்கிறோம்.

    நம்மில் பலரும், வாழ்வில் பெரும்பாலும் உண்மை பேசுகிறவர்கள்தாம். எப்போதாவது பொய் சொல்வோம், வள்ளுவரின் விதிவிலக்கை மனதில் கொண்டு!

    ஆனால், நாம், பேசிவரும் உண்மைகள் மேலோட்டமானவை; பெரிய பாதிப்புகளை உண்டாக்காதவை; சில சமயம் செளகரியமானவை; சில சமயம் சங்கடம் தவிர்ப்பவை. இவை சமரச உண்மைகள். நம்மைப் பாதிக்காத உண்மைகள்!

    மெய்யான உண்மையைச் சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம், நெருக்கடி, சங்கடம் ஏற்படும்போது நாம் பொய்ம்மைக்குள் அடைக்கலம் தேட வேண்டி நேர்கிறது; வேறு வழியில்லாமல்! சமூக நிர்ப்பந்தம்!

    மெய் x பொய் - தவிர மூன்றாவது வழி ஏதாவது இருக்கிறதா? தெரியவில்லை.

    மெளனம் நடுவழி எனலாம். ஆனால், மெய் பேச வேண்டிய சமயத்தில் மெளனம் கொள்வது நடுநிலை அன்று. அது மெய்யுக்கு எதிரான கோழைத்தனம். பொய்யின் இரகசியத் தோழன் நடுநிலை!

    என்ன நேர்ந்தாலும் சரி, எல்லாக் கட்டங்களிலும் உண்மையே பேசுவேன் என்று வாழ்ந்தவர் உண்டு. அவர்கள் வரலாற்று மனிதர்கள்.

    நமக்குத் தெரிந்த ஒருவன் அரிச்சந்திரன். அதனால் அவன் பட்டபாடுதான் என்ன!

    இன்னொருவன் சத்யகாம ஜவாலி. அப்புறம், நமது தந்தை காந்தி,கலிலியோ, ஜியார்ட்டானோ புரூனோ போன்றவர்கள்.

    எவ்வித மேற்பூச்சுமின்றி உண்மை பேசும் இந்த நூலுக்குள் பிரவேசிக்கும் முன்பு, இந்த சத்யகாமனைப் பற்றித் தெரிந்து கொள்வது நல்லது. அவனுக்குத் தாய் வைத்த பெயரைப் பாருங்கள்:

    ‘சத்யகாமன்’ சத்தியத்தை நேசிப்பவன் என்று பொருள். சிவகாமி என்றால் சிவனை நேசிப்பவள் என்பது போல.

    தனது பிள்ளைக்குப் பெயர் வைக்கும்போதே அந்த ஏழைத் தாய்க்கு ஒரு தெளிவு இருந்திருக்கிறது!

    உண்மையான நிலைமை என்னவென்றால், உண்மையை வெளியில் சொல்ல முடியாத அபலைத் தாய் அவள்!

    பெரிய மனிதர் வீடுகளில் வீட்டுவேலை செய்து வந்தவள். அவள் பெயர் ஜவாலி. சத்யகாமன் என்பது, ஞான நாட்டம் கொண்ட ஒரு மகானின் பெயர். அந்தப் பெயரைத் தன் பிள்ளைக்குப் பெயரிட்ட அவளுக்கு, தன் பிள்ளை யாருக்குப் பிறந்தான் என்பதே தெரியாது!

    ஒன்பது வயதுப் பிள்ளைக்கு, மற்ற பிள்ளைகளைப் போலவே தானும் ஒர் ஆசிரமத்தில் சேர்ந்து கற்க வேண்டும் என்ற ஆசை வந்தது. அதைத் தன் தாயிடம் தெரிவித்தான். தாய் தயங்கினாள்.

    மகனே, இதில் ஒரு சிக்கல் இருக்கிறது. நீ எந்த ஆசிரமத்தை அடைந்தாலும், உன்னிடம் கேட்கப்படுகின்ற முதல் கேள்வி, உன்தந்தை யார்? அப்புறம், நீ என்ன சாதி? அவர் பெயரென்ன?’ என்பது. அதற்கு நீ என்ன பதில் சொல்வாய் மகனே? உன் தந்தை யாரென்று எனக்கே தெரியாதே! நான் பல பெரிய மனிதர் வீடுகளில் வேலை பார்த்தேன். அவர்களில் பலர் என்னைக் கெடுத்தார்கள். நான் பரம ஏழையாக இருந்ததால், தடுக்கவோ, எதிர்க்கவோ முடிய வில்லை. அப்புறம் நீ பிறந்தாய். யாருக்கென்று நான் எப்படிச் சொல்வேன்! அதனால், நீ ஒன்று செய்ய வேண்டும். நான் இப்போது சொன்னதை அப்படியே சொல்லிவிடு! உன் பெயருக் கேற்றபடி நீ உண்மையே பேசு! தந்தை யாரெனத் தெரியாததால், என் தாயின் பெயரோடு சேர்த்து என்னை, சத்யகாம ஜவாலி, என்றே அழையுங்கள், என்று சொல்லிவிடு" என்றாள் அந்த ஏழைத்தாய்.

    அவன் காட்டுக்குப் போனான். ஓர் ஆசிரமத்தின் ஆசானைச்சந்தித்தான். அவன் எதிர்பார்த்தபடியே கேள்விகள் கேட்கப்பட்டன. அவன் தன் தாய் சொன்னபடியே உண்மை பேசினான்.

    ஆசான் அதிர்ந்துபோனார்! இப்படியும் இருப்பாளா ஒர்ஏழைத்தாய், என வியந்தார். உன் அன்னை ஓர் உயர்ந்த பெண்மணி. அவள் உண்மையின்மீது வைத்திருக்கும் மதிப்பிற்கு ஈடு இணையே இல்லை. அதே பண்பு உன்னிடமும் காணப்படுவதால் நீ ஓர் உயர்சாதிப் பையன், என்று அவனைச் சேர்த்துக் கொண்டதாகக் கதை.

    இப்படி உண்மை பேச அசாத்தியத் துணிச்சல் வேண்டும்.

    அந்தத் துணிச்சல் கொண்டு, இங்கே "அம்மை மூஞ்சிக்காரப் பையன்' பேசுகிறான்.

    திருமணம் என்பது காதலின் சவதகனம், என்கிறான்!

    ஒரு முழு வாழ்க்கைக்கு ஒரு பாடம் போதாதா? வாழ்க்கை மாளிகையைக் கட்ட, பணம் அடித்தளமாக அமையாது என்கிறான்.

    கட்டற்ற தம் நாவுகளால் வதந்திகள் பேச நாடுகளே இருக்கின்றன! அவர்களுக்கு ஒருமாத மெளனமே தண்டனை'யாகத் தர வேண்டும்," என்கிறான்.

    மனிதர்கள் ஒன்று இந்தப் பட்டியின் சொந்தக்காரர்கள்; அல்லது அந்தப் பட்டியின் சொந்தக்கார்கள். மோதல் ஏற்படும்போது தலைகள் சீவப்படுகின்றன. ஏதாவது ஒரு நாட்டோடு ஒட்டிக் கொண்டிருப்பது ஒரு பழக்க மாகிவிட்டது. அவ்வகை மூட நம்பிக்கைக்கு ‘தேசபக்தி' என்று பெயர், என்று நம்மை அதிர வைக்கிறான்.

    செல்வ வளம் மிக்க ஒரு வணிகன், தனக்குப் போட்டியாகவுள்ள ஏழை வணிகனை, சகல வியாபார தந்திர, சதிகளைப் பயன்படுத்தி அவனை ஒழித்துக் கட்டு கிறான். அதற்கு அவன் சொல்லிக் கொள்ளும் சமாதானம், அது கடவுளின் விருப்பம்; இயற்கையின் நியதி. ஒரு பூனை எலியை அடித்துச் சாப்பிடுவதில்லையா? என்பது தான், என்று அநியாயத்திற்கு எதிராகப் பேசுகிறான்.

    "வல்லரசுகள் சின்னஞ்சிறிய நாடுகளை விழுங்கி விடுகின்றன. குற்றம் செய்பவர்கள் தம் கைகளைக் கழுவி

    Enjoying the preview?
    Page 1 of 1