Vaazha Ninaithaal Vaazhalaam Vaazhviyal Thodar
()
About this ebook
She has won many laurels for her stories and novels. The title of-Ezuthu Sudar was conferred on her by-Urattha chinthanai. Outstanding novelist award was given to her by Rotary club of Coimbatore. She was honoured by V G P award also. She has also got other titles like Novel arasi, Pudinaperarasi, Manida neya manpalar and Samuganala thilagam. She has participated in many seminars conducted by Unicef, Air Chennai and Sahitya Academy. Her dramas and serials have been telecasted in Chennai Doordarshan.
Her Novels have been translated and published in Vanitha (Malayalam) Raga Sangama (Kannada), Mayura (Kannada) and Sudha (Kannada).
She has stage experience as a drama script writer and director. She had a dramatic troupe named Navaratna in late seventies. Her Novel - Ula Varum Urayugal has been pictured in the name of Kanne Kaniyamude in late seventies.
Sri Ramakrishna Mission Vidyalayam conferred on her Sadanai Magalir award for Tamil literature. She has participated in the World Tamil conference held at Coimbatore and submitted an article on feminism.
Read more from Vimala Ramani
Paathaiyora Paathigal Rating: 0 out of 5 stars0 ratingsUn Madiyil Naan Uranga... Rating: 0 out of 5 stars0 ratingsNeer Kolangal Rating: 0 out of 5 stars0 ratingsKannalaney Rating: 0 out of 5 stars0 ratingsCherry Pookkal Pookkum Rating: 0 out of 5 stars0 ratingsAnandha Raagangal! Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Thoranangal Katti Rating: 0 out of 5 stars0 ratingsVaigarai Vidiyal Rating: 0 out of 5 stars0 ratingsRaathirigal Vandhuvittal! Rating: 0 out of 5 stars0 ratingsVasantha Kaala Vaanampadikal Rating: 0 out of 5 stars0 ratingsKallichedi Kaadhal Rating: 0 out of 5 stars0 ratingsAbaya Valaivu Rating: 0 out of 5 stars0 ratingsUnmaigal Urangattum Rating: 0 out of 5 stars0 ratingsAnjali Ennai Kaadhali Rating: 0 out of 5 stars0 ratingsKumari Penne! Kuyilaale! Rating: 0 out of 5 stars0 ratingsKadathal Nadagam Rating: 0 out of 5 stars0 ratingsMegapaaraigal Rating: 0 out of 5 stars0 ratingsPalingu Mandapam Rating: 0 out of 5 stars0 ratingsAkkaraiyil Ore Anniya Paravai... Rating: 0 out of 5 stars0 ratingsVaasalil Vandha Nila Rating: 0 out of 5 stars0 ratingsDeluxe Kanavugal Rating: 0 out of 5 stars0 ratingsMegam Thedum Vaanam Rating: 0 out of 5 stars0 ratingsAnubavam Pazhamai Rating: 0 out of 5 stars0 ratingsUzhaipal Uyarntha Uthamar Rating: 0 out of 5 stars0 ratingsNee Oru Kadhal Sangeetham Rating: 0 out of 5 stars0 ratingsSirukathai Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsTher Yeri Vandha Nila Rating: 2 out of 5 stars2/5
Related to Vaazha Ninaithaal Vaazhalaam Vaazhviyal Thodar
Related ebooks
Paattudai Thalaivi Rating: 0 out of 5 stars0 ratingsAahaya Malargal Rating: 0 out of 5 stars0 ratingsVaasalil Oru Vennila Rating: 5 out of 5 stars5/5Mannukku Vandha Nila Rating: 0 out of 5 stars0 ratingsAagaya Thottil Rating: 0 out of 5 stars0 ratingsThunbam Nerkaiyil Rating: 0 out of 5 stars0 ratingsKadaisiyai Oru Muthaliravu Rating: 5 out of 5 stars5/5Nijamai oru kanavu Rating: 4 out of 5 stars4/5Vennilave… Vennilave! Rating: 0 out of 5 stars0 ratingsUyarntha Manithargal Rating: 0 out of 5 stars0 ratingsVaasagargalal Paarattu Pettra Sirukadhaigal! Rating: 0 out of 5 stars0 ratingsசுடர் விளக்கு Rating: 0 out of 5 stars0 ratingsPerarignar Annavin Kurunavalgal Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsஉள்ளத்தால் நெருங்குகிறேன்... Rating: 0 out of 5 stars0 ratingsMalligai Mu(yu)tham Rating: 0 out of 5 stars0 ratingsPirabala Natchathiram Rating: 0 out of 5 stars0 ratingsNesam Marakavillai Nenjam! Rating: 0 out of 5 stars0 ratingsRadhaiyum Kunti Deviyum Rating: 0 out of 5 stars0 ratingsIruthi Iravu Rating: 0 out of 5 stars0 ratingsAnbai Sumanthu Rating: 0 out of 5 stars0 ratingsPuyal Veesiya Iravil Rating: 0 out of 5 stars0 ratingsUtharayanam Rating: 0 out of 5 stars0 ratingsKarthikkai Poovey! Rating: 0 out of 5 stars0 ratingsMayiliragu Rating: 5 out of 5 stars5/5Mazhaikooda Thenagalam Rating: 0 out of 5 stars0 ratingsIvanum Oru Parasuraman Rating: 0 out of 5 stars0 ratingsYaarukku Mappillai Yaaro? Rating: 0 out of 5 stars0 ratingsPakkathil Paruva Nila Rating: 0 out of 5 stars0 ratingsEn Peyar Ranganayagi Rating: 0 out of 5 stars0 ratingsவிட்டு விடுதலையாகி... Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Vaazha Ninaithaal Vaazhalaam Vaazhviyal Thodar
0 ratings0 reviews
Book preview
Vaazha Ninaithaal Vaazhalaam Vaazhviyal Thodar - Vimala Ramani
http://www.pustaka.co.in
வாழ நினைத்தால் வாழலாம்
வாழ்வியல் தொடர்
Vaazha Ninaithaal Vaazhalaam
Vaazhviyal Thodar
Author:
விமலா ரமணி
Vimala Ramani
For more books
http://www.pustaka.co.in/home/author/vimala-ramani-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 1
அகல்யா தெரியுமா? ஆம் அதே அகல்யா தான். கௌதம முனிவரின் மனைவி, ரிஷி பத்தினி தன் கணவரால் கல்லாகச் சபிக்கப் பட்டு ராமர் பாதம் பட்டு சாப விமோசனம் பெற்றவள்.
இந்த அகல்யாவின் புது வடிவமாக ஒரு குறும் படம் யூ டியூபில் வெளியாகி உள்ளது. வங்காள மொழிப் படம் சப் டைட்டில் ஆங்கிலத்தில். இவள் மார்டன் அகல்யா.
படத்தின் ஆரம்பம் இப்படித் தான். இந்திரன் என்கிற இன்ஸ்பெக்டர் காணாமல் போன ஒருவனைத் தேடி ஒரு வீடு தேடி வந்து அழைப்பு மணியை அழுத்த கவர்ச்சி உடையில் கதவு திறக்கும் அகல்யா.
அவள் வழிகாட்ட நடந்த இந்திரன் அவள் தரும் காபியை பருகி காத்திருக்கும் நேரத்தில் அவன் கண்களில் அங்கு டீப்பாயில் வைக்கப் பட்ட மினியேச்சர் பொம்மைகளில் லயிக்க அதில் ஒரு உருவம் இவன் தேடி வந்த அர்ஜுன் போல் தோன்றுகிறது. உள்ளே இருந்து வந்த பெரியவரிடம் (அவர் பெயர் கௌதம்) அகல்யாவை அவர் மகளென்னு கூற பெரியவர் சிரிக்கிறார். அவள் என் மனைவி என்கிறார்.
சற்றே திகைத்த இந்திரன் காணாமல் போன அர்ஜுனைப் பற்றி விசாரிக்க
சில மாதங்களுக்கு முன் மாடலிங்கிற்காக அவன் இங்கு வந்ததாகவும் அதன் பிறகு காணவில்லை என்றும் பெரியவர் கூற டீப்பாயில் இருக்கும் அந்த பொம்மை கீழே விழுகிறது. இவைகள் என் படைப்புக்கள் என்கிறார் கௌதம். ஒரு கல்லைக் காட்டி இது மந்திர சக்தி வாய்ந்த கல் என்று கௌதம் கூற
இந்திரன் அதை அலட்சியமாகப் பார்க்கிறான்.
மாடியிலிருந்து அகல்யா தன் செல் போனை எடுத்து வரச் சொல்கிறாள்.
கௌதம் அந்த போனை இந்திரனிடம் கொடுத்தனுப்ப அங்கே அகல்யா
படுக்கையில் கவர்ச்சியாக காட்சியளித்தபடி இந்திரனை வா என்று அழைக்க திகைத்த இந்திரன் தன் முகத்தைக் கண்ணாடியில் பார்க்க அது
அகல்யாவின் கணவர் கௌதம் முகம் போல் தோன்றுகிறது. இந்திரன் அகல்யாவை அணுகி கட்டிலில் அமருகிறான்.
அதன்பின் இவனால் விடுபட முடியவில்லை. அவன் முகம் ப்ரீஸ் ஆகி விடுகிறது. கத்துகிறான். என்னைக் காப்பாற்றுங்கள் என்று கத்துகிறான். அவன் குரல் யாருக்கும் கேட்கவில்லை.
கீழே அடுத்தவன் வர அகல்யா காபி தர இந்திரன் வேண்டாம் என்று கத்தும் கதறல் யாருக்கும் கேட்கவில்லை. இந்திரனின் பொம்மை டீப்பாயில் புதிதாக இடம் பெறுகிறது. கௌதமின் அடுத்த படைப்பு
படம் முடிகிறது.
இதன் மூலம் என்ன சொல்ல வருகிறார்கள்? (இந்தப் படத்தில் நடித்த ராதிகா ஆப்தேக்கு ரஜினியின் கபாலியில் நடிக்க சந்தர்ப்பம் கிடைத்தது என்கிற செய்தி தான் உருப்படியான ஒன்று.)
புராண அகல்யாவை இந்திரன் அவள் கணவர் கௌதம் முனிவர் வேடத்தில் வந்து ஆட் கொள்ளுகிறான். அதிகாலை நேரத்தில் கோழி கூவுதைப் போல் போலியாக இந்திரன் கூவ முட்டாள் முனிவரும் நேரம் காலம் தெரியாமல் ஆற்றில் நீராடப் போகிறார் (கொஞ்சம் ஞான திருஷ்டியில் பார்த்திருக்கக் கூடாதோ?) கடைசியில் சபிக்கப் பட்டவள் அகல்யா. அவள் ஏமாந்தது நிஜம்
இந்திரனை மயக்க போலி நாடகம் ஆடவில்லை ஆனால் கல்லானாள். கதையானாள்...
அந்தப் பழைய முனிவருக்கு இந்தப் புதிய கௌதம் தேவலை.
தன் மனைவியிடம் தவறாக நடந்து கொண்ட ஆண்களைச் சிலையாக்குகிறார்.
ஆனால் புராண அகல்யா எந்த நிலையிலும் கவர்ச்சி காட்டவில்லை கட்டிலில் சயனித்து கை நீட்டவில்லை. இந்த நவீன அகல்யா காட்டிய கவர்ச்சியில் இந்திரன் சந்திரன் ஏன் கௌதமனே கூட தலை குப்புற விழலாம்.
அது தான் பாரதி கூறினார்... கற்பு நிலையென்னு சொல்ல வந்தால் இரு கட்சிக்கும் அதனைப் பொதுவில் வைப்போம்
என்றார்.
ஆண் கற்பு பெண் கற்பு என்று உண்டா என்ன?
தவறு செய்த பெண்மை தான் தண்டிக்கப் படுகிறது. தலாஷ் என்ற ஹிந்திப் படத்தில் (அமீர் கான் நடித்தது.) ஒரு கார்ல் கேளை அழைத்துக் கொண்டு ஜாலியாக சில நண்பர்கள் காரில் செல்லும்போது விபத்து ஏற்பட்டு
உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் அந்தப் பெண்ணை நடு வீதியில் அம்போ என்று விட்டு விட்டு இவர்கள் மட்டும் தப்பிக்கிறார்கள். துப்பறிய வந்த காவல் துறை அதிகாரி அமீர்கான் மூலம் ஆவியான அந்தப் பெண் தன் கதையைக் கூறி அந்த நண்பர்களை தண்டிப்பது தான் கதை.
இப்படி பாதிக்கப் பட்ட பெண்கள் எல்லாம் ஆவியாகி பழி வாங்க முற்பட்டால் ஊர் முழுவதும் ஆவிகள் தான் அலையும். மனிதர்கள் தென்பட மாட்டார்கள் இன்றல்ல அன்றே பழையனூர் நீலி பழி வாங்கிய கதையும் உண்டு. (பெரிய கதை தேவையானதை மட்டும் சொல்கிறேன்) தனக்குத் தெரியாமல் திருமணம் செய்த கொண்ட தன் கணவனை நீலி தட்டிக் கேட்க கணவனால் அவள் கொலை செய்யப் படுகிறாள்.
ஆவியான நீலி தன் கணவனைப் பழிவாங்க மனைவி உருவில் வர
பயந்த கணவன் அவளுடன் செல்ல மறுக்க வழக்கு விசாரணைக்கு வருகிறது. வழக்கை விசாரித்த நீதிபதிகளான எழுபது வேளாளர்களும் அந்த வணிகனின் உயிருக்கு தாங்கள் பாதுகாப்புத் தருவதாகக் கூறி அனுப்பி வைக்க மறுநாள் அந்தக் கணவன் இறந்து கிடக்கிறான். உண்மை உணர்ந்த அவர்கள் தாங்கள் செய்து கொடுத்த சத்தியத்தின் படி தற்கொலை செய்து கொள்கின்றனர்
(திருவாலங்காடு என்கிற பாடல் பெற்ற ஸ்தலத்தில் நடந்த சம்பவம் இது. காரைக்கால் அம்மையார் சிவனின் நாட்டியத்தை இந்த ஆலங்காட்டின் மரங்களிடையே கண்டு களித்ததாக புராணத் தகவலும் உண்டு.)
இந்த நீலிக் கதை த்ரில்லருக்கு ஏற்றது ஆனால் தற்போது இப்படி நடந்தால் என்னவாகும்? ஆக பெண்களுக்கு எந்தக் காலத்திலும் பாதுகாப்பு இல்லை. அவர்களே ஆவியாக மாறி பழி வாங்கினால் அல்லாமல்…
அதுவும் இந்த கற்பு மட்டும் மத்திய தர குடும்பங்களுக்கு ஏற்பட்ட ஒரு சோதனை.
அவர்களால் பழைமையை ஏற்கவும் முடியவில்லை. புதுமைக்கும் தாவவும் முடியவில்லை. பப்புக்குப் போய் பீர் அருந்தவும் முடியாது. பழங் கஞ்சியையும குடிக்கவும் முடியாது. திரைப் படங்களில் மட்டும் காதலன் தன் காதலிக்கு பீர் அருந்த கற்றுக் கொடுப்பானாம். என்ன முக்கியமான காதல் பாடம்… பாருங்கள்
அரங்கேற்றம் திரைப்படத்தில் நடுத்தர வர்க்கப் பெண் தேவை வரும்போது வேறு வழியின்றி திசைமாறிப் போகும் அவலத்தை பாலசந்தர் அவர்கள் அற்புதமாகச் சித்தரித்திருப்பார்.
ராஜம் கிருஷ்ணன் அவர்கள் எழுதிய நாவல் ஒன்றில் வேலைக்குப் போகும் பெண்கள் எதிர் கொள்ள வேண்டிய பிரச்சனைகளை அழகாக விளக்கி இருப்பார். ஒரு அத்தாட்சி பத்திரம் வாங்க வேலை கிடைக்க பதவி உயர்வு பெற பல பெண்கள் காம்பரமைஸ் செய்து கொள்ள வேண்டிய கட்டாயத்தை அழகாக வருணித்திருப்பார். இந்த
