Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ivanum Oru Parasuraman
Ivanum Oru Parasuraman
Ivanum Oru Parasuraman
Ebook64 pages24 minutes

Ivanum Oru Parasuraman

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கதையின் நாயகியான பார்வதி அர்ச்சகரான சபேசனை திருமணம் செய்து கொள்கிறாள். திருமணமாகி கொஞ்ச நாட்களிலே அவனுக்கு வெளியூரில் அர்ச்சகராக பணியாற்ற வாய்ப்பு கிடைக்கிறது. மூன்று வருட ஒப்பந்தத்தில் செல்கிறான். பார்வதி பயந்த சுப்பாவம் கொண்டவள். மிகவும் அழகாக இருப்பவள். தனியாக இருக்கும் பார்வதியிடம் தவறாக நடந்துகொள்ளும் இளைஞன் ஒருவன். இந்த விஷயம் சபேசனுக்கு தெரிய வருமா? பார்வதி இதை எப்படி கையாள்வாள்? வாசியுங்கள்...

Languageதமிழ்
Release dateMar 23, 2024
ISBN6580155610861
Ivanum Oru Parasuraman

Read more from Lakshmi

Related to Ivanum Oru Parasuraman

Related ebooks

Reviews for Ivanum Oru Parasuraman

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ivanum Oru Parasuraman - Lakshmi

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    இவனும் ஒரு பரசுராமன்

    Ivanum Oru Parasuraman

    Author:

    லக்ஷ்மி

    Lakshmi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/lakshmi

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    1

    சந்தனக் கட்டைகள் போன்று நிமிர்ந்து

    புடைத்த தோள்கள், பரந்த மார்பு,

    தீர்க்கமான கண்கள், நடையில் எத்தனை

    மிடுக்கு! பார்வையில் என்ன கம்பீரம்!

    அன்று காலை பார்வதிக்கு திடீரென்று வீடு தொலை தூரத்திலிருப்பது போன்றதொரு மலைப்பு ஏற்பட்டது.

    இடுப்பில் அவள் சுமந்து கொண்டிருந்த குடம் இரும்புக் குண்டாகக் கனத்தது.

    வெட்கமும் துயரமும் கலந்த உணர்வு நெஞ்சில் சுமையாகக் கனக்க மூச்சுத் தடுமாறி குடத்து நீர் தளும்பி இடுப்புப் புடவையை நனைக்க சோர்வுடன் அவள் வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தாள்.

    என்றும்போல அவள் மௌனமாக மற்ற பெண்கள் பேசுவதைக் கேட்டபடி குடத்தைத் தேய்த்து அலம்பிவிட்டு காவேரி நீரை முகந்துகொண்டு வந்திருக்க வேண்டும்.

    லதா வாயாடி என்பதைக் கேள்விப்பட்டிருந்தாள். அதுவும் சென்னைக்குச் சென்று கல்லூரிப் படிப்பு படித்துவிட்டு திரும்பிய பின்னர்...

    சங்கநல்லூரைத் தொட்டுக்கொண்டு ஓடிய அகண்ட காவேரியைவிட அவள் வாய் அகன்று விட்டதாக மற்ற பெண்கள் கேலி செய்ததையும் அவள் அறிவாள். பம்பாயில் வேலை பார்த்த பெரியதொரு ஆபீசருக்கு வாழ்க்கைப்பட்டிருந்தாள். பிறந்த வீட்டுக்குச் சில நாட்கள் சீராட வந்தவள் தன் புக்ககத்துப் பெருமையைப் பறைசாற்றிக்கொள்ள சில நாட்களாக காலை வேளைகளில் காவேரிக்குக் குளிக்க வந்து கொண்டிருந்தாள்.

    பார்வதி வீட்டிலேயே குளித்து முடித்துவிட்டு சிவன் கோயிலில் பூஜை செய்யும் தன் பெரிய மாமனாருக்குக் குடிக்கத் தண்ணீர் எடுக்கத்தான் தினசரி காவேரிக்கு வருவது வழக்கம்.

    கிழவருக்கு வீட்டுப் புழக்கடையிலிருக்கும் கிணற்றுத் தண்ணீர் தொண்டையில் இறங்காது.

    கணவன் வெளியூரிலிருந்து திரும்பும்வரை கிழவரை நன்றாகக் கவனித்துக்கொள்ள வேண்டியது அவள் பொறுப்பில் இருந்தது.

    பாவம் வயசானவர் உன் பெரிய மாமனார். சின்ன வயசில் பெற்றோர்களை இழந்த உன் கணவனைத் தன் பிள்ளையாக நினைத்து ஆளாக்கினவர். அவருக்கும் அவனைத் தவிர ஆதரவு தர வேறு யார் இருக்கா? இன்னும் கொஞ்சம் நாள்தான். பொறுத்துக்கோ. மாப்பிள்ளை வந்ததும் கோவில் அர்ச்சகர் பதவியை ஏத்துக்கொண்டு விடுவார். அப்படித்தான் ஏற்பாடு. அதுக்கப்புறம் கிழவர் க்ஷேத்திராடனத்திற்குப் புறப்பட்டு விடுவார். உனக்கு ஓடற பாம்பை மிதிக்கிற வயசு. ஒரு குடம் ஜலத்தைத் தூக்கிக்கொண்டு வரது கஷ்டமா என்ன?

    அவள் அப்பா நடராஜன் வற்புறுத்தலாக உத்தரவிட்டு இருந்ததைத் தவிர்க்க இயலவில்லை.

    அன்று வெள்ளிக்கிழமை; விடியற்காலையிலேயே அவள் வீட்டில் ஸ்நானத்தை முடித்துக்கொண்டு விட்டிருந்தாள். மாமனார் கோவிலுக்குப் புறப்பட்டு விட்டிருந்தார். அவள் கணவன் கேட்டுக் கொண்டபடி தம் மகளுக்கு உதவி செய்யவும் துணையாக இருக்கவும் அரசலூரிலிருந்து வந்து அவர்களோடு தங்கிவிட்டிருக்கும் நடேசன், வாயில் வராந்தாவில் கிடந்த பெஞ்சில் காலைப் பத்திரிகையைப் புரட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தார். அவருக்குக் காப்பியைக் கலந்து கொடுத்து விட்டுத்தான் அவள் கிளம்பினாள்.

    சீக்கிரம் வந்துடு, ரொம்ப ஆழமான இடத்தில் இறங்காதே தினமும் சொல்லும் எச்சரிப்பை முணுமுணுத்தபடி நடேசன் பத்திரிகையிலேயே ஆழ்ந்து கிடந்தார்.

    காலை பூஜை முடிந்ததும் மாமனார் கோவிலிலிருந்து பசியோடு திரும்புவார். கொஞ்ச நாளாக அவருக்குப் பசியே தாளமுடிவதில்லை.

    எல்லாம் ஒருபிடி சோற்றுக்குத்தானே அம்மா, இந்தக் கல்லைக் கட்டிக்கொண்டு சிரமப்படறேன்.

    ஒருநாள் அவர் அலுத்துச் சலித்துக்கொண்டு பேசியபோது அவள் மனம் வேதனைப்பட்டது.

    வெளிநாட்டிற்கு அர்ச்சகராகப் பணிசெய்ய, தன்னைத் தவிக்கவிட்டுப் போய்விட்டான் தம்பி மகன் என்று அவர் அப்படிச் சாடுகிறார்.

    Enjoying the preview?
    Page 1 of 1