Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaadhal Poiyin
Kaadhal Poiyin
Kaadhal Poiyin
Ebook302 pages1 hour

Kaadhal Poiyin

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மூன்று வேளை உணவு முழுதாக கிடைக்கபெறாத ஓர் ஏழைக் குடும்பம். தன் பிள்ளைகளை படிக்க வைக்க கிராமத்திலிருந்து, நகரத்திற்கு குடிபெயர்ந்தார் ராகவன். ராதா இவரின் மூத்த மகள், 10வது வரை படித்த ராதாவுக்கு ஒரு அலுவலகத்தில் வேலையும் கிடைத்து விட்டது. அந்த அலுவலகத்தில் ஒரு தோழி கிடைக்கிறாள். அந்த தோழியினால் ராதாவின் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றம் என்ன? வாங்க வாசிக்கலாம்.

Languageதமிழ்
Release dateFeb 8, 2022
ISBN6580101507800
Kaadhal Poiyin

Read more from Jyothirllata Girija

Related to Kaadhal Poiyin

Related ebooks

Reviews for Kaadhal Poiyin

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaadhal Poiyin - Jyothirllata Girija

    https://www.pustaka.co.in

    காதல் போயின்...

    Kaadhal Poiyin…

    Author:

    ஜோதிர்லதா கிரிஜா

    Jyothirllata Girija

    For more books

    https://www.pustaka.co.in/home/author/jyothirllata-girija-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    1

    என்னம்மா, ராதா? இன்டர்வியூவில நன்னாப் பன்னி இருக்கியா? என்று ராகவன், ராதா வீட்டுக்குள் நுழைந்ததும் நுழையாததுமாய்க் கேட்டார். எதனாலோ இந்தத் தடவை தம் மகளுக்கு வேலை நிச்சயமாய்க் கிடைக்கப்போகிறது என்று அவருக்குத் தோன்றிவிட்டது.

    ரொம்ப நன்னாப் பன்னி இருக்கேம்ப்பா. அநேகமாய்க் கிடைக்கலாம்னுதான் தோன்றது. என்று முகமலர்ச்சியுடன் பதிலிறுத்த ராதா, அம்மா, அம்மா என்று கூவிக்கொண்டு உள்ளே விரைந்து சென்றாள்.

    என்னடி, இந்தத் தரமாவது கிடைக்குமா? என்றவாறு லலிதா மகளை ஆவலுடன் நோக்கினாள்.

    கிடைச்சுடும்னுதான் சொல்றாம்மா.

    எப்ப ஆர்டர் அனுப்புவாளாம்?

    இன்னும் ஒரு வாரத்துக்குள்ளே அனுப்பிடுவாங்களாம்.

    என்ன சம்பளம் கிடைக்கும்?

    சம்பளம் எண்ணூறுக்குக் குறையாதுங்கறாம்மா.

    லலிதாவின் விழிகள் அகலம் கொண்டு வியப்புடன் ஒளிர்ந்தன.

    அட. எடுத்த எடுப்பிலேயே எண்ணூறு கொடுப்பாளாமா?

    அப்படித்தாம்மா சொன்னா.

    லலிதாவின் கண்கள் சிவந்து கலங்கின. முருகா இப்பவாவது கண்ணைத் திறந்தியே, என்று அவள் ஆகாயம் நோக்கிக் கை குவித்துக் கண் மூடி நின்றாள்.

    ராதா சிரித்தாள். அதுக்குள்ள முருகனுக்கு நன்றி சொல்லாதேம்மா. முதல்ல வேலைக்கான ஆர்டர் கைக்கு வரட்டும் என்றாள்.

    இன்னும் ஒரு வாரத்துக்குள்ளே ஆர்டர் கிடைச்சுடும்னியேடி? அதுக்குள்ளே உனக்கே சந்தேகமா இருக்கா? என்று வினவிய லலிதாவின் முகத்தில் கணத்துக்குள் மகிழ்ச்சிக் குறைவு ஏற்பட்டது.

    இல்லேம்மா. கட்டாயம் கிடைச்சுடும்னுதான் சொல்லி இருக்கா. ஆனாலும் கையில ஆர்டரை வாங்கற வரைக்கும் நிச்சயமாச் சொல்ல முடியாதோல்லியோ? அதுக்காகச் சொன்னேன். என்ற ராதா தாயின் முகத்தில் கணத்துக்குள் தோன்றிய கருமையைக் கவனித்து வருந்தியபடி பதில் கூறினாள்.

    நீ சொல்றதும் ஒரு விதத்துல சரிதான்டியம்மா. எதுவுமே கைக்கு வந்து சேர்றதுக்கு முந்தியே ஆகாசக்கோட்டை கட்டக் கூடாதுதான். நீ சொல்றாப்ல முதல்ல வேலை கிடைக்கட்டும். அதுக்கு அப்புறம் முருகனுக்கு நன்றி சொல்றேன், என்று புன்னகை செய்தாள்.

    அப்ப, வேலை கிடைக்கல்லேன்னா முருகனைத் திட்டுவே போலிருக்கே?

    நல்ல பேச்சுப் பேசறே போ. முருகனைத் திட்டிட்டு எங்கடி போறது? அவன் படியளக்கிறதாலதான் இந்த மட்டுமாவது உயிர்னு ஒண்ணைவிடாம இருந்தின்டிருக்கோம்.

    பின்புறம் காலடியோசை கேட்டு இருவரும் திரும்பிப் பார்த்தார்கள். ராகவன்தான் புன்சிரிப்புடன் வந்து கொண்டிருந்தார்.

    இந்தத் தடவை வேலை அநேகமாய்க் கிடைச்சுடும்னு எம்மனசுக்கும் தோன்றதுடி, லலிதா. காலம்பறக் கிளம்பிப் போன பொன்ணு. அவளுக்கு ஒரு வாய்க் காப்பிகூடக் கொடுக்காம பேசத் தொடங்கிட்டியாக்கும்?

    அடுப்பில பாலை வெச்சுட்டுத்தான் பேச்சுக் குடுத்தேன். அய்யய்யோ. பால் பொங்கற வாசனை வருது. என்ற லலிதா ஓட்டமும் நடையுமாக அடுப்படியை நெருங்கினாள்.

    இரண்டே நிமிடங்களில் காப்பியைக் கலந்து எடுத்து வந்து மகளின் கையில் கொடுத்தாள்.

    அதைப் பெற்றுக்கொண்டே, நீங்கல்லாம் குடிச்சாச்சா? என்று கேட்ட ராதா இருவரையும் மாற்றி மாற்றிப் பார்த்தாள்.

    ஓ குடிச்சாச்சு, குடிச்சாச்சு, என்ற ராகவன் அவசரமாக அப்பால் நகர்ந்தார். பிற்பகலில் தானும் லலிதாவுமாய் ஆளுக்கு அரைத் தம்பளர் காப்பியே குடித்திருக்க, மகளிடம் உண்மையைச் சொன்னால் அவள் தன் காப்பியில் கொஞ்சத்தைத் தியாகம் செய்துவிடுவாள் என்பதால்தான். லலிதாவும் விரைவாக அடுப்படிக்குப் போய்விட்டாள். ராதா காப்பியைப் பருகியவாறு கனவுகளில் ஆழ்ந்தாள்.

    சற்றுப் பொறுத்து ராதாவிடம் வந்து அவளுக்குப் பக்கத்தில் உட்கார்ந்துகொண்ட அவள், ராதாவுக்கு இந்த வேலை கிடைச்சுட்டா குபேர சம்பத்தே கிடைச்சுட்ட மாதிரிதான். இல்லியா? இனிமே நமக்கு நல்ல காலம் பொறக்கப் போறதுன்னுதான் எனக்கும் தோன்றது. ஏன்னா கடவுள் தொடர்ந்து ஒரு குடும்பத்தைச் சோதிச்சுண்டிருக்க மாட்டார்... இன்னிக்கு உங்கப்பாவுக்குப் பாட்டு டியூஷன் வேற ரெண்டு வந்தது. என்றாள்.

    அட. பரவா இல்லியே? என்று ராதா உண்மையாகவே வியந்துபோனாள்.

    திருவல்லிக்கேணி ஒண்டுக் குடித்தனத்தில் ராகவன் நாலைந்து பேருக்குப் பாட்டுச் சொல்லிக் கொடுத்து ஏதோ சம்பாதித்துக் கொண்டிருந்தார். நிலையான வருவாய் என்று அதைச் சொல்ல முடியாது. அவ்வப்போது அந்த நான்கு இரண்டாவதும், சமயங்களில் ஒன்றுமே இல்லாமற்போவதும் கூட உண்டு. அப்போதெல்லாம் அந்தக் குடும்பம் அனுபவித்த இல்லாமை இவ்வளவு அவ்வளவு இல்லை.

    லலிதா ஒரு வீட்டில் சமையல் வேலை செய்துகொண்டிருந்தாள். காலையில் ஆறுக்கெல்லாம் போய்ச் சமையல் செய்து வைத்துவிட்டு எட்டரைக்கு வீடு திரும்பி விடுவாள். பக்கத்துத் தெருவிலேயே அவள் வேலை செய்த வீடு இருந்ததில் கொஞ்சம் சவுகரியம் இருந்தது. சாப்பாடு போட்டு மாதம் நூறு ரூபாய் கொடுத்தார்கள். லலிதாவின் அந்த நூறு ரூபாய்தான் நிரந்தரமான மாத வருவாய். ராகவனின் பாட்டுக் கற்றுக்கொடுத்தலின் மூலமான வரவு ஏறுவதும் இறங்குவதுமாகத்தான் இருந்து வந்தது.

    ஆக, சராசரியாக முந்நூறு ரூபாய்க்குள் குடித்தனம் நடத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்த தாங்கள் இனி அந்த அளவுக்கு வறுமையையோ அல்லது பசி, பிணிகளையோ சகிக்கும்படி இராது என்பது லலிதாவுக்கு மகிழ்ச்சியையும் நிம்மதியையும் அளித்ததில் வியப்பு இல்லைதானே.

    சொந்தக்கிராமத்தை விட்டு அவர்களின் குடும்பம் பட்டணத்துக்கு வந்து ஒரு வருடந்தான் ஆகியது. கிராமத்தில் குப்பை கொட்ட முடியாத நிலையில், பட்டணத்து நண்பர் ஒருவரின் உதவியுடன் ராகவன் பாட்டு டியூஷனில் சம்பாதிக்கும் திட்டத்துடன் சென்னைக்கு வந்தார். கிராமத்தில் இருந்ததைக் காட்டிலும் அவர்களது நிலைமை சென்னையில் மேலானதாக இருந்தாலும், குழந்தைகள் வளர வளர, அவர்களது படிப்பு, வயிறு ஆகியவும் முன்னேறிக் கொண்டு சென்றதில் ராகவன் குடும்பத்தை நிர்வகிப்பதில் திணறிப் போனார்.

    கிராமத்து ஆசாமியாக இருந்தாலும், கல்விதான் பிற்காலத்தில் கை கொடுக்கும் என்கிற முன்யோசனையுடன் ராகவன் தம் மூத்த மகள் ராதாவைப் பள்ளி இறுதி வரையில் எப்படியோ படிக்க வைத்துவிட்டார். மற்றக் குழந்தைகள் இன்னும் படித்துக்கொண்டிருந்தார்கள். கிராமத்தில் பெண்கள் கல்வியறிவு அற்றவர்களாக இருந்தமையால் அவர்களுக்கு விளைந்த இன்னல்களைப் பார்த்து அடிபட்டுப் போனதால்தான் அப்படி ஒரு முன்யோசனையே அவருக்கு வந்தது.

    அவருடைய கிராமத்தில்தான் எத்தனை இளம் வாழாவெட்டிகள்! அற்பக் காரணங்களுக்காகத் தள்ளி வைக்கப்பட்ட அவ்விளம் பெண்கள் வருங்காலம் பற்றிய நம்பிக்கைகளை இழந்து தம் பெற்றோர்க்குச் சுமையாக வந்து சேர்ந்து இறுதி மூச்சுப் பிரியும் வரையில் கண்ணீரில் கரைந்த கதைகள் அவருக்கு நூற்றுக் கணக்கில் தெரிந்திருந்ததால் ஏற்பட்டிருந்த முன்னேற்பாடுதான் அவர் தம் மக்களுக்கு அளித்துக்கொண்டிருந்த கல்வியறிவு. பட்டினி கிடந்தாலும் பரவாயில்லை. படித்து முடித்துவிடவேண்டும் என்பதே அன்றாடம் அவர் தம் மக்களுக்கு அளித்து வந்த அறிவுரையாக இருந்தது.

    நேர்முகத் தேர்வு கழிந்து சரியான ஒரு வாரத்தில் வேலைக்கான உத்தரவு ராதாவுக்கு வந்துவிட்டது. அதைப் பார்த்ததும் அவளுக்கு மகிழ்ச்சியில் ஒரு கணம் ஒன்றுமே புரியவில்லை. ஏற்கெனவே எதிர்பார்த்ததுதான் எனினும் அவள் ஆகாயத்தில் மிதக்கலானாள்.

    லலிதாவைப் பற்றியோ சொல்லவே வேண்டியதில்லை. ராதாவைக் காட்டிலும் உண்மையில் அவள்தான் அதிகமான உற்சாகத்திலும் போதையிலும் இருந்தாள்.

    ஒரு வாரத்துக்குள் வேலையில் சேர்ந்துவிட வேண்டும் என்று அவ்வுத்தரவில் கண்டிருந்தது. அண்ணா சாலையில் அவள் வேலை செய்ய வேண்டிய அலுவலகம் இருந்தது. திருவல்லிக்கேணியிலிருந்து மிகவும் குறைவான பேருந்துக் கட்டணம்தான். சமயங்களில் நடந்தேகூடப் போகலாம். ரொம்பவும் வெயில் அல்லது மழை என்றிருந்தாலல்லாது, பொடி நடையாக நடந்தே அலுவலகத்துக்குப் போய் வந்தால் அந்த அளவுக்குக் காசை மிச்சப்படுத்தலாம் என்று ராதா எண்ணிக் கொண்டாள். போக வர அறுபது காசுகள் ஒரு ரூபாய் இருபது காசுகள் வீதம் மாதா மாதம் கிட்டத்தட்ட இருபத்தைந்து ரூபாய் வரையில் மிச்சம் பிடிக்கலாம் என்று அவள் மனம் கணக்குப் போடலாயிற்று.

    அது பற்றி அவள் லலிதாவிடம் தெரிவித்தபோது, சீ. அசடு. அப்படியெல்லாம் நடந்து போகாதே. அப்புறம் ஆபீசுக்குப் போய்ச் சேர்றப்பவே களைச்சுப் போயிடுவே. இத்தனை நாள்தான் நடையா நடந்து கஷ்டப்பட்டாச்சு. இன்னமுமா நடக்கணும்? பஸ்லயே போயிட்டு பஸ்லயே வா, என்றாள் அவள்.

    ராதா சிரித்துக்கொண்டாள். குழந்தைகள் துன்பப்படுவதை எந்த அம்மாதான் பொறுத்துக்கொள்வாள் என்று தன்னையே வினவிக் கொண்டாள்.

    உத்தரவு வந்த அன்று நாள் நன்றாக இல்லை என்று ராகவன் சொல்லிவிட்டதால் மறுநாள் போய்ச் சேர்ந்துகொள்ளுவது என்று முடிவாயிற்று...

    அன்று அதிகாலையிலேயே அவள் உறக்கத்திலிருந்து விடுபட்டுவிட்டாள். பின்புறத்துக்குப் போய்ப் பல் துலக்கியவாறு அவள் கனவுகாணத் தொடங்கினாள். வேலையை நன்றாய்க் கற்றுக்கொண்டு நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்பதே அவளது கனவின் மையமாக இருந்தது. புதிய அலுவலகத்தில் தனக்கு நல்ல தோழிகள் கிடைப்பார்களா என்பது அவளது கவலையாக இருந்தது. கிராமத்தில் அவளுக்கு நல்ல சிநேகிதிகள் இருந்ததில்லை. வம்பும் தும்பும் நிறைந்த அக்கிராமத்தில் பெண்கள் ஒருவருக்கொருவர் மனம்விட்டுப் பேசிக்கொள்ளும் பழக்கமே அரிதாக இருந்தது. அவளுடன் படித்தவர்களிடம் அவளது மனப்போக்குக்கு ஒத்துவருபவர்களாக யாரும் இருந்ததில்லை...

    காலைக் கடன்களை முடித்து அவள் அந்தச் சிறிய வீட்டுப் பகுதியின் கூடம் எனப் பெயர் பெற்ற, சமையலறைக்கு முன் அமைந்த, சிறு பகுதிக்கு வந்தபோது ராகவன் தம்பூராவை மீட்டிக் கொண்டிருந்தார் வீட்டுச் சுவர்களின் அமைப்பாலோ என்னவோ அந்த வீட்டில் அவர் பாடியபோதெல்லாம் எதிரொலித்தது. அந்த எதிரொலியை விரும்பாது அவர் அடிக்கடி சலித்து முகம் சுளித்த போதிலும், அவரது கம்பீரக்குரல் காம்போதி காற்றில் மிதந்து வந்தது.

    அவளைப் பார்த்ததும், ஆலாபனையை நிறுத்திவிட்டு அவர் புன்னகை செய்தார். இசை நின்றுவிட்ட போதிலும், தம்பூராவின் ரீங்காரம் அந்தச் சிறிய கூடத்தை நிறைத்திருந்தது.

    என்னம்மா இன்னிக்கு வேலையில் சேர்றே, இல்லியா?

    ஆமாம்ப்பா.

    ஆபீசுக்குப் போறதுக்கு முந்தி மறக்காம முருகனை நமஸ்காரம் பண்ணிட்டுப் போ. அவன் அருள் இல்லைன்னா இந்த வேலை உனக்குக் கிடைச்சிருக்காது.

    ஆகட்டும்ப்பா பன்றேன், என்று பதில் சொல்லிவிட்டு அவள் வழக்கத்தைக் காட்டிலும் விரைந்த நடையில் அடுக்களைக்குப் போனாள்.

    சமையலறையின் சுவரோரத்தில் சரிந்து உட்கார்ந்துகொண்டு அவள் தலையை உயர்த்திப் பார்த்தபோது, அம்மா லலிதா, லலிதா சமஸ்ர நாமம் சொல்லிக்கொண்டிருந்தாள். அம்மா தன் பெயருள்ள அம்மனின் மீதான சோத்திரங்களையே தினமும் சொல்லுவதைப் பற்றி ராதா அவ்வப்போது அவளைக் கேலி செய்வதுண்டு. ‘என்னம்மா உன் பேருள்ள அம்மன் மேலேயே பாடிக்கிறியே?’ என்று அவள் சிரித்தபோதெல்லாம், ‘அப்படியெல்லாம் நினைச்சா சொல்றேன்?’ ஏதோ உங்கப்பா சொல்லிக்குடுத்தது. புக்காத்துக்கு வந்ததும் எனக்குப் பாட்டுச் சொல்லிக் கொடுப்பேன்னு ஒத்தைக்கால்ல நின்றார். பாட்டு அவ்வளவா வரலை. அதனால ஸ்லோகங்களையாவது சொல்லுன்னு இதைச் சொல்லிக் குடுத்தார் சொல்றேன். உங்கப்பாவைப் போய்க் கேளுடி, அம்மா பேரு லலிதாங்கிறதால அம்மாவுக்கு லலிதா சகஸ்ரநாமம் சொல்லிக்குடுத்தேளான்னு’ என்று அவள் சிரிப்பதுண்டு.

    அவள் உதடுகள் புன்சிரிப்புக்கொண்டன. லலிதா முணு முணுப்புடன் அவள் பக்கம் காப்பித் தம்ளரை நீட்டினாள். அம்மாவின் முகத்திலும் சிரிப்புத் தெரிந்ததைக் கவனித்த ராதா மகிழ்ச்சியடைந்தாள். அந்தக் குடும்பத்திலுள்ள அனைவரும் மகிழ்ச்சியடையக் காரணமாக இருப்பதை ஒரு பெருமையாக நினைத்துத் தானும் மகிழ்ந்தவாறு அவள் காப்பியைப் பருகலானாள். வழக்கமாய்க் குடிக்கிற நீர்த்த காப்பியானாலும் அன்று அது வாய்க்கு நன்றாக இருந்ததாய்த் தோன்றியது. காப்பியைக் குடித்துவிட்டு அவள் ஒரு துள்ளலுடன் எழுந்து குளிக்கப்போனாள்... ஒரு பரபரப்பான வாழ்க்கை தனக்கு அமையப்போகிறது என்பது தெரியாமல்.

    2

    அந்த அலுவலகத்துக்குள் அவள் காலடி எடுத்துவைத்தபோது மணி என்னவென்று அவளுக்குத் தெரியவில்லை. வாசலில் நின்றிருந்த கூர்க்கா விவரம் கேட்டுவிட்டு அவளை உள்ளே அனுப்பினார். இன்னும் பத்து மணி ஆகாததால் ஒரு சிலரே அங்கிருந்தனர் என்ற தகவலைச் சொன்னார். வரவேற்பறைக்குப் போய் உட்காரப் பணித்தார். வரவேற்பாளப் பெண்மணி வந்துள்ளதால் அங்கே போய்த் தயக்கமில்லாமல் அமருமாறு கூறினார். சிரிப்பும் நடைத்துள்ளலும் நிறைந்த அந்தப் பெண்ணை அவள் ஏற்கெனவே ஒரு தரம் பார்த்திருந்தாள். வயதில் அவளைக்காட்டிலும் பத்து ஆண்டுகளாவது மூத்தவளாக இருப்பாள் என்று அவள் வயதை இவள் ஏற்கெனவே கணித்துவிட்டிருந்தாள். அன்று காலை அந்த அலுவலகத்தில் எத்தனை பெண்கள் இருப்பார்களோ. யார் தனக்குத் தோழியாக அமைவாளோ என்றெல்லாம் யோசித்தபோது இந்தப் பெண் பற்றிய ஞாபகம் தனக்கு ஏன் வரவில்லை என்று அப்போது நினைத்தாள். வயதில் இருந்த வேறுபாட்டால் அந்நினைப்பு வரவில்லை போலும் என்றும் எண்ணிக்கொண்டாள். ஊன்றிப் பார்த்தபோது பத்து வயசாவது வேறுபாடு இருக்கவேண்டும் என்று தன்னால் கணிக்கப்பெற்ற அந்தப் பெண்மணி ஒருவேளை இன்னும்கூட அதிக வயதானவளாக இருப்பாளோ என்றும் நினைத்தாள். அந்த அளவுக்கு அவள் ஒப்பனை செய்து கொண்டிருந்தாள்.

    ராதா வரவேற்பறைக்குள் நுழைந்தபோது வரவேற்புப் பெண்மணி தொலைபேசியில் யாருடனோ பேசிக்கொண்டிருந்தாள். அடிக்கடி வாய்விட்டுச் சிரித்துக் கொண்டிருந்தாள். ராதா, அவள் பேசிக்கொண்டே கை நீட்டிக் காட்டிய நாற்காலியில், உட்கார்ந்து கொண்டாள். ‘அவள் பெயர் என்னவாக இருக்கும்?’ நிச்சயமாய் ஏதேனும் நவநாகரிகப் பெயராய்த்தான் இருக்கும். என்று நினைத்தாள். பேசிக்கொண்டே அவள் கபகபவென்று அட்டகாசமாய்ச் சிரித்தபோது, அவளது சிரிப்புத் தன்னையும் தொற்றிக்கொண்டு விட்டதுபோல் ராதா உணர்ந்தாள். ஏனெனில், தன்னையும் மீறித் தன் உதடுகள் மேனோக்கி வளைந்தது அவளுக்கே தெரிந்தது. கையில் ஏதேனும் பத்திரிகையோ அல்லது புத்தகமோ எடுத்து வந்திருக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டாள். எடுத்து வந்திருந்தால், இப்படி விட்டத்தை வெறித்தபடியோ, அல்லது தான் பேசுவதையெல்லாம் இந்தப் பெண் ஊன்றிக் கேட்டுக் கொண்டிருக்கிறாளோ என்கிற ஐயம் அந்தப் பெண்ணுக்கு வரும்படியாகவோ உட்கார்ந்து கொண்டிருக்க வேண்டி வந்திருக்காதே என்று எண்ணினாள். இனி எந்த இடத்துக்குப் போவதாக இருந்தாலும் கையில் படிக்க எதையாவது எடுத்துப் போகவேண்டும் என்று தீர்மானித்துக்கொண்டாள்.

    மேலும் இரண்டு மூன்று நிமிடங்கள் போல் பேசிவிட்டு, ‘பை’ சொன்னபிறகு, அவள் ஒலிவாங்கியை வைத்தவாறே ராதாவைப் பார்த்துப் பல்வரிசை தெரியச் சிரித்தாள். பதிலுக்குப் புன்னகை செய்தபடி, ‘இவள் தன் பல்வரிசை தெரியச் சிரிப்பதை இயல்பாகவோ, இல்லாவிட்டால் தன் வரிசையான பற்களைக் காட்டுவதற்காகச் செயற்கையாகச் சிரிக்கிறாளா?’ என்று கேட்டுக்கொண்டாள்.

    ஹல்லோ... உங்களுக்கு செலக்ஷன் ஆயிடுச்சா? என்று அவள் ஹல்லோவில் ல்-ஐ அழுத்தியபடி வினவியதில் தெரிந்த தோழமை ராதாவை அயர்த்தியது. முன்பின் பழக்கமில்லாத தன்னிடம் இவ்வளவு நட்புணர்வுடன் பேசும் இவளைப்போல் தன்னால் பிறரிடம் பழக முடியுமா என்று தனக்குள் அதிசயித்தபடி, ஆமாங்க. எனக்கு செலக்ஷன் ஆயிடுத்து என்று பதில் சொன்னவள் உறையிலிருந்து வேலை உத்தரவை எடுத்து அவளிடம் நீட்டினாள். அதை வாங்கிப் படித்த அவள், டைப்பிஸ்டாவா? என்று இழுத்தாள். அவளது மகிழ்ச்சியில் கொஞ்சம் குறைந்திருந்ததைக் கவனித்த ராதா, ஏங்க? என்றாள்.

    ... வேற ஒன்றுமில்லை. டைபிஸ்ட்னா கொஞ்சம் கஷ்டம். அதுலயும் புதுசா வேலைக்கு வந்தவங்களை சீனியர்ஸ் நிறைய வேலை குடுத்து ஏமாத்துவாங்க. தைரியசாலியா இருந்தா அவாளோட டைப் அடிச்சுட்டுப் போகலாம். என்று அவள் சிரித்தாள்.

    உங்க பேரென்னங்க?

    என்பேர் மான்விழி

    ராதா உடனே அவளைக் கூர்ந்து பார்த்தாள். கவர்ச்சியான அந்தப் பெரிய விழிகளைப் பார்த்தபோது பொருந்துகிற பெயர்தான் என்று மனத்துள் தீர்மானித்துக்கொண்டாள்.

    என்ன பார்க்குறீங்க? மான்விழிங்கிறதுக்குப் பதிலா, பூனை விழின்னு வெச்சிருந்தாப் பொருத்தமாய் இருந்திருக்குமேன்னா? என்று கேட்டுவிட்டு அவள் பெருங்குரலில் சிரித்தபோது ராதாவுக்கு வெட்கமாக இருந்தது. அதுவும் கொஞ்சம் உண்மைதான் என்று பட்டது. அவள் விழிகள் கறுப்பாக இல்லை. கொஞ்சம் மரத்து வண்ணத்தில் இருந்தன. ஆனால் பூனைக்கண்கள் என்று சொல்லுகிற அளவுக்கு நிறக்குறைவு அவற்றில் இல்லை என்றும் தோன்றியது.

    சேச்சே உங்க கண்ணு ஒண்ணும் பூனைக் கண் மாதிரி இல்லே.

    நீங்க சொன்னாப்ல எனக்கு என் கண்ணைப் பத்தித் தெரியாதா என்ன?. அது இருக்கட்டும். இதுதான் உங்களுக்கு முதல் வேலையா?

    ஆமா

    அப்ப பரபரன்னு இருக்குமே?

    ஆமாமா ராதா வெட்கப்பட்டுச் சிரித்தாள்.

    எதுவரைக்கும் படிச்சிருக்குறீங்க?

    டென்த் வரைக்கும்தான் படிச்சிருக்கேன்

    அதென்ன ‘வரைக்கும் தான்’ குறீங்க?

    உங்கமாதிரி எல்லாம் நிறையப் படிக்கலைங்கிறதத்தான் சொன்னேன்

    உங்க மாதிரி எல்லாம்னு எதை வச்சுச் சொல்றீங்க? நானும் ஒன்றும் நிறையப் படிக்கலை. பி.யு.சி. வரைக்கும் படிச்சிருக்கேன். அவ்வளவுதான்.

    எப்படியோ, நான் நினைச்சது சரிதான். என்னைவிட அதிகமாத்தானே படிச்சிருக்கீங்க?

    "நான் படிச்சதுக்கும் நீங்க படிச்சதுக்கும் இடையில் அதிக வித்தியாசம்

    Enjoying the preview?
    Page 1 of 1