Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Purushan Veettu Ragasiyam
Purushan Veettu Ragasiyam
Purushan Veettu Ragasiyam
Ebook102 pages35 minutes

Purushan Veettu Ragasiyam

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Mrs. Jyotirllata Girija, born in Chennai. She wrote her first story when she was at the age of thirteen. She has written in so many forms - Stories for children, novels, short stories, dramas etc. So far, she has written more than 600 short stories, 19 novels, 60 novelettes and 3 dramas. She has also written 25 short stories in English and she has written around 150 stories for children.
Languageதமிழ்
Release dateSep 9, 2016
ISBN6580101501458
Purushan Veettu Ragasiyam

Read more from Jyothirllata Girija

Related to Purushan Veettu Ragasiyam

Related ebooks

Reviews for Purushan Veettu Ragasiyam

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Purushan Veettu Ragasiyam - Jyothirllata Girija

    http://www.pustaka.co.in

    புருஷன் வீட்டு ரகசியம்

    Purushan Veettu Ragasiyam

    Author :

    ஜோதிர்லதா கிரிஜா

    Jyothirllata Girija

    For other books

    http://www.pustaka.co.in/home/author/jyothirllata-girija

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    புருஷன் வீட்டு ரகசியம்

    1

    ராஜாராமனின் உள்ளம் துள்ளிக் கொண்டிருந்தது. சிந்துஜாவுடன் அவன் கழித்த அந்த இரண்டரை மணி நேரமும் - ஸ்கூட்டர் பயண நேரத்தையும் போக, வர, சேர்த்துக் கொண்டால் நான்கு மணி நேரமும் - அவனால் மறக்க முடியாதது. அவன் பேசிப் பார்த்த வரையில் சிந்துஜா நல்லவளாகவும், கெட்டிக்காரியாகவும் இருந்தாள்.

    தன் உடம்பு அவன் மீது பட்டுவிடாதபடி மிகவும் ஜாக்கிரதையுடன் அவள் ஸ்கூட்டரில் செய்த சவாரிக்கே அவளுக்கு நூறு மதிப்பெண்கள் கொடுக்கலாமென்று நினைத்துச் சிரித்துக் கொண்டான்.

    அடக்கம் நிறைந்த எளிமையான பெண். கல்லூரிப் படிப்பை முடித்துவிட்ட போதிலும், துளியும் செருக்கோ மண்டைக்கனமோ, தனக்கு அது தெரியும், இது தெரியும் என்றெல்லாம் பீற்றிக் கொள்ளுகிற அகந்தையோ இல்லாமல் அவன் தூண்டிக் கேட்ட பிறகே தன் பொழுது போக்குகள், திறமைகள் ஆகியவை பற்றி அவள் தெரிவித்தாள்.

    முக்கியமான 'அந்த விஷயத்தை' அவளிடமிருந்தும் அவள் வீட்டாரிடமிருந்தும் தன் அம்மாவின் சொற்படி அவன் மறைத்ததுதான் பானகத் துரும்பாய் நெருடிற்று.

    பின்னர் ஒருநாள் தெரிய வந்தால்...? இந்தக் கேள்வியால் அவனது மகிழ்ச்சி குறைந்தது. எப்படியோ திருமணம் என்பது நடந்து முடிந்துவிட வேண்டும். அதன் பிறகு தெரிய வருவதைப் பற்றி அவனுக்குக் கவலை இல்லை. திருமணம் நடந்து முடிந்து விட்டால் பிறகு யாராலும் எதுவும் செய்ய முடியாது.

    பின்னால் காலடியோசை கேட்டு அவன் சட்டென்று அவளது புகைப்படத்தைப் புத்தகத்துள் வைத்து அவசரமாய் மூடினான். அவன் அம்மாதான் காப்பியுடன் அவனை நோக்கி வந்து கொண்டிருந்தாள். அவள் வீட்டுக்குப் போய்வந்தது பற்றி அவன் தாயிடம் தெரிவிக்கவில்லை. தப்பு என்று சொல்லுவாள். மருமகப்பிள்ளை எனும் ஹோதாவிலிருந்து தான் தாழ்ந்து விட்டதாய்க் கருதி அவனை அவள் கடிந்து கொள்ளவும் கூடும் என்பதால் அவன் அதை இரகசியமாக வைத்துக் கொண்டு விட்டான்.

    தாயின் கையிலிருந்த காப்பியை வாங்கிக் கொண்டவன், சிந்தனையுடன் அதைப் பருகலானான்.

    சிந்துஜாவை அவன் முதன் முதலாய் ஒரு கல்லூரி விழாவில்தான் பார்த்தான். பெர்பெக்ட் கம்ப்யூட்டர்ஸ் எனும் கம்பெனியில் விற்பனையாளனாகப் பணிபுரிந்து கொண்டிருந்த ராஜாராமன் ஓர் எலெக்ட்ரானிக் சமாசாரத்தை அவள் படித்துக் கொண்டிருந்த கல்லூரிக்கு விளக்குவதற்காகச் சென்றபோது, அவளைச் சற்றுத் தொலைவிலிருந்து பார்த்தது உண்மையில் முதன் முறை என்றாலும், அவளது முழு அழகும் அந்தப் பார்த்தலின் போது தெரிய வராததால், அவளைத் தான் முதன் முதலாகப் பார்த்தது விழாவில்தான் என்று அவனே தன் தாயிடம் சொன்னான்.

    திருமணத்தை ஏதேதோ சாக்குப் போக்குகள் கூறித் தள்ளிப் போட்ட வண்ணம் இருந்த அவன், சிந்துஜாவின் அழகில் மயங்கித் தான் திருமணத்துக்கு ஒப்புக் கொண்டான். இந்த உண்மையை ஒப்புக் கொள்ளவும் அவன் வெட்கப்படவில்லை. அவன் அம்மா அவனுக்கு ஒரு தோழி போன்றவள்தான். அல்லது மூத்த சகோதரி போன்றவள். அம்மா-மகனுக்குரிய தொலைவும் ஒதுங்கி இருத்தலும் சில குடும்பங்களில் உள்ளது போல் அவன் வீட்டில் இல்லை. சிறு வயதில் அப்பா செத்துப் போய் விட்டதுகூட அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

    அன்றே, அந்த விழாவிற்கு வந்திருந்த ஒரு நண்பனிடமிருந்து நாசூக்காய்ச் சிந்துஜாவைப் பற்றி விசாரித்து அறிந்து கொண்டான்.

    சிந்துஜாவின் அப்பா சிவகுருநாதனைப் பற்றி - அவனுக்குக் கிடைத்த தகவல் - அவர் கறார்ப் பேர்வழி என்பது, தனது ரகசியத்தை அவன் பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தை அவனுக்கு ஏற்படுத்தியது. அவன் அம்மா அந்த ரகசியத்தை அவருக்குச் சொல்ல விடாமல் அவனைத் தடுத்ததற்கு அது ஒரு சரியான காரணம்தான்; எனவே, அந்த விஷயத்தில் அவன் அம்மாவை ஒரேயடியாகக் குற்றம் சொல்லிவிடுவதற்கு இல்லை.

    அதன் பிறகு படிப்பை முடித்துவிட்ட சிந்துஜாவை எவனாவது அடித்துச் சென்று விட்டால் என்ன செய்வது என்னும் அச்சத்தில் அவசரமாய் ஒரு தரகரைப் பிடித்து அவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைத்தான். தன்னைப் பற்றிய விவரங்கள், கல்லூரி விழாவில் அவளைப் பார்த்ததன் விளைவாக அவளையே மணப்பதென்று தான் தீர்மானித்திருக்கும் விஷயம் ஆகியவற்றையும் தரகரிடம் சொல்லி அனுப்பினான். அவளுக்கு வேறு யார் மீதும் நோக்கம் இல்லாதிருப்பின் என்று சேர்த்துச் சொல்லச் சொன்னான். சிந்துஜாவின் பெற்றோர் எவ்வகை முயற்சியிலும் ஈடுபடாமல் அவளது திருமணம் குதிர்ந்து விட்டது இப்படித்தான்.

    தரகர் வந்து போனதன் பிறகு பெண் பார்த்தல் - சிந்துஜாவைப் பொறுத்த மட்டில்

    Enjoying the preview?
    Page 1 of 1