Explore 1.5M+ audiobooks & ebooks free for days

From $11.99/month after trial. Cancel anytime.

Theruvil Vizhuntha Maalaigal
Theruvil Vizhuntha Maalaigal
Theruvil Vizhuntha Maalaigal
Ebook100 pages36 minutes

Theruvil Vizhuntha Maalaigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தன் கணவனை பிரிந்து தனியாக வசிக்கும் சௌந்தர்யா வீட்டின் மாடிக்கு திவ்யா தனது குழந்தை கோபியுடன் குடிபெயர்கிறாள். சௌந்தர்யாவும் திவ்யாவும் உடன்பிறவா சகோதரிகளாகிறார்கள். சௌந்தர்யா தன் கணவனுடன் மீண்டும் புது வாழ்க்கையை தொடங்கும் நேரத்தில் திவ்யாவின் திடீர் உடல் நலமின்மையால் தனது கிட்னியை தனது கணவனுக்குத் தெரியாமல் கொடுத்து காப்பாற்றுகிறாள்.
வீட்டிற்கு வந்த திவ்யா தனது அண்ணன் பிரபாகரனுக்கு கடிதம் எழுதி வரவைக்கிறாள். பிரபாகரன் சௌந்தர்யாவைப் பார்த்ததும், தன் தங்கை திவ்யாவிற்காக தான் அவளுக்கு இழைத்த துரோகத்தை நினைத்து செய்வதறியாது திகைக்கிறான்.
சௌந்தர்யாவும் அவள் கணவனும் இணைவார்காளா? சௌந்தர்யாவிற்கு பிரபாகரன் இழைத்த துரோகம் என்ன? திவ்யாவின் வாழ்க்கையில் நடந்த மர்மம் என்ன? மேலும் பல திருப்பங்கள் நிறைந்த கதைகளுடன்.
Languageதமிழ்
PublisherPustaka Digital Media
Release dateJan 4, 2021
ISBN6580137106152
Theruvil Vizhuntha Maalaigal

Read more from R. Sumathi

Related to Theruvil Vizhuntha Maalaigal

Related ebooks

Related categories

Reviews for Theruvil Vizhuntha Maalaigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Theruvil Vizhuntha Maalaigal - R. Sumathi

    http://www.pustaka.co.in

    தெருவில் விழுந்த மாலைகள்

    Theruvil Vizhuntha Maalaigal

    Author:

    ஆர். சுமதி

    R. Sumathi

    For more books

    http://www.pustaka.co.in/home/author/r-sumathi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    1

    சௌந்தர்யா கடைசி வினாத் தாளையும் திருத்தி கட்டியபோது அழைப்பு மணி அழைத்தது. விடைத்தாள்கள் அடங்கிய கட்டை மேசை மீது போட்டுவிட்டு எழுந்து வந்து கதவை திறந்தாள்.

    முப்பது வயது மதிக்கத்தக்க பெண் ஒருத்தி நின்றிருந்தாள். சற்று குண்டாக இருந்தாள். வெளிர் நீல நிற சேலையும் அடர்ந்த நீலத்தில் சட்டையும் அணிந்திருந்தாள். காதில் சின்ன முத்துதோடும் கழுத்தில் தங்க சங்கிலியில் இடையிடையே கோர்க்கப்பட்ட முத்தும் அணிந்திருந்தாள்.

    'என்ன வேணும்?' என்றாள் சௌந்தர்யா.

    'மாடி போர்ஷன் வாடகைக்கு விடப்படும்னு போர்டு பார்த்தேன். அதான் கேட்டுட்டுப் போலாம்னு...'

    'உள்ள வாங்க'

    காலணிகளை கழற்றிவிட்ட அவள் உளளே வந்தாள். சௌந்தர்யா காட்டிய பிரம்பு நாற்காலிகளில் அமர்ந்தாள். சினேகமாய் சிரித்தாள்.

    'நீங்க யாருன்னு நான் தெரிஞ்சுக்கணும் எதிர் நாற்காலியில் அமர்ந்தபடியே கேட்டாள் சௌந்தர்யா.

    'என் பெயர் திவ்யா. ப்ரைவேட் கம்பெனியில டெம்ரவரியா டைப்பிஸ்டா இருக்கேன். ஒரு குழந்தை எல்.கே.ஜி. படிக்கிறான்.'

    அவள் கழுத்தில் தாலி இல்லை என்றதும் அவளை திருமணம் ஆகாதவள் என சென்ற கணம் வரை நினைத்திருந்தாள் சௌந்தர்யா.

    'உங்க கணவர்?'

    ‘செத்துட்டார்'

    திடுக்கிட்டாள் சௌந்தர்யா. காரணம் திவ்யாவின் நெற்றியில் பொட்டு இருந்தது.

    'பரவாயில்லை. மூடத்தனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தவள் போலும்'

    'அம்மா, அப்பா இருக்காங்களா?'

    'ஒரு அண்ணன் மட்டும் உண்டு. வெளிநாட்ல இருக்கார். எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்லேர்ந்தே என்னை வளர்த்தவர் எங்க அண்ணன்தான்'

    'இவ்வளவு நாளா எங்க குடியிருந்தீங்க?'

    'விமன்ஸ் ஹாஸ்டல்ல இருந்தேன்...'

    'ஏன் அதைவிட்டு வர்றீங்க?'

    'பிடிக்கலை, தனியா இருந்தா தேவலைன்னு நினைக்கிறேன்'

    ம்... சரி நீங்க தாராளமா குடிவரலாம். வாடகை ஐநூறு ரூபாய். கட்டுப்படியாகும் தானே?

    'எனக்கு சம்பளம் குறைச்சல்தான். நீங்க சொல்ற வாடகை அதிகம் இல்லை . என்னால தரமுடியும். என் அண்ணன்தான் மாசாமாசம் பணம் அனுப்புவார். அவருக்குன்னு குடும்பம் இல்லை, அதனால பண செலவுக்கு அவருக்கு வேலையே இல்லை'

    'சரி... நீங்க என்னைக்கு வர்றீங்க?'

    'நாளைக்கே வர்றேன். அட்வான்ஸ் எவ்வளவுன்னு சொன்னீங்கன்னா...'

    'நான் பணத்துக்காக குடி வைக்கலை. நானும் உங்களை மாதிரிதான். உங்க வீட்டுக்காரர் செத்துட்டார். என் வீட்டுக்காரர் இருக்கார். அதான் வித்தியாசம். நான் தனியா இருக்கேன். இது எங்க அம்மா வீடு. அவங்க போன மாசம் போய் சேர்ந்துட்டாங்க. தனியா இருக்க பயமாயிருந்தது. அதனாலதான் குடிவைக்கிறேன். நான் ஹைஸ்கூல்ல டீச்சராயிருக்கேன். நீங்க அட்வான்ஸெல்லாம் தரவேண்டாம். குடிவந்தா போதும். வாடகையை மட்டும் கொடுங்க' என்றாள்.

    திவ்யா, சௌந்தர்யாவை ஆச்சர்யத்துடனும் அனுதாபத்துடனும் பார்த்தாள்.

    பின் சற்று நேரம் கழித்து,

    'சரி... போர்ஷனைப் பார்க்கலாமா?' என்றாள்.

    'இருங்க. அதுக்கு முன்னாடி ஒரு வாய் காபி குடிங்க' என்று உள்ளே சென்று காபி கலந்து வந்து தந்தாள்.

    'நன்றி' என வாங்கி உறிஞ்சினாள் திவ்யா.

    பின் சௌந்தர்யா அவளை மாடிக்கு அழைத்து வந்து அறையை காட்டினாள்.,

    ஒரு சமையலறை. சின்ன கூடம். படுக்கையறை. சமையலறையை ஒட்டி பக்கவாட்டில் பூஜையறை. பின் பக்கம் குளியலறை, இதுபோதும்.

    இந்த சென்னையில் தொண்ணையளவு உள்ள ஒரு வீட்டிற்கே ஆயிரக்கணக்கில் கேட்கும் போது வெறும் ஐநூறு ரூபாய்க்கு இதை யார் தருவார்கள்?.

    பணத்துக்கு மதிப்பு கொடுக்காமல். பக்கத்துணைக்கு மதிப்பு தரும் சௌந்தர்யா வித்தியாசப்பட்டாள்.

    கைகுவித்து வணங்கிவிடை பெற்றுக் கொண்டு வந்தாள் திவ்யா .

    2

    திவ்யா விடுதிக்கு வந்தபோது கோபி பாடம் எழுதிக்கொண்டிருந்தான். திவ்யாவை கண்டதும் எழுந்து ஓடிவந்தான்.

    'மம்மி...'

    'கோபி கண்ணா' மகனை தூக்கி முத்தமிட்டாள், பாட நோட்டில் தன் பிஞ்சுவிரலால் எ.பி. என கிறுக்கி வைத்திருந்தான்.

    'மம்மி... நீ எங்கே போனே?' என்று கோபித்தான்,

    'மம்மி புது வீடு பார்க்கப் போனேன்'

    'ஐய்... அப்படின்னா நாம ஹாஸ்டலை விட்டுப் போறமா?'

    'ஆமா'

    'என்னிக்கு போறோம் மம்மி?'

    'நாளைக்கே போறோம்'

    'ஐய்யா... ஜாலி ஜாலி' கை தட்டினான் கோபி.

    'அந்த

    Enjoying the preview?
    Page 1 of 1