Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

இதயமே விட்டு விலகாதே...!
இதயமே விட்டு விலகாதே...!
இதயமே விட்டு விலகாதே...!
Ebook139 pages51 minutes

இதயமே விட்டு விலகாதே...!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அனல் காற்று சற்று தணிந்திருந்த மாலை வேளை...

"டேய் ராமு... என்னடா... திடுதிடுப்புன்னு புறப்பட்டு வரச்சொல்லிட்டே என்னடா விசயம்?" என்றவாறு சங்கர் வந்தான். "என்னடா... போனில் வேண்டாம் நேரில் வான்னு சொல்லிட்டு எதுவுமே பேசாம அமைதியா இருக்கே... சொல்லேன்டா...?"

"சங்கர்... நான் இன்று இரவு கனடா புறப்படறேன்டா..." 

"டேய்... ராமு... என்னடா சொல்றே! பொய்தானே...? ஏன்னா... நாளைதானே எனக்காக... வீட்ல பெண் பார்க்க போறோம்னு சொல்லியிருக்கேனே... மறந்திட்டியா...?" 

"நான் வர முடியாதுடா... சாரி... அதான். உன்கிட்டே எப்படி சொல்றதுன்னு... யோசிக்கறேன்" 

"இதோப் பார் ராமு...! உனக்கு பெண் பார்த்து திருமணம் முடியும் ஒவ்வொரு தருணத்திலும் உன் பக்கத்தில் நான் இருந்திருக்கிறேன். அதேபோல... எனக்கு பெண் பார்த்து திருமணம் முடியும் வரை நீ... என்னுடன் இருப்பேன்னு... வாக்கு கொடுத்திருக்கே மறந்திட்டியா...?"

"அதாண்டா... சங்கர் என்ன பண்றதுன்னு குழம்பி முழிச்சிட்டு இருக்கேன்... நீதான்டா என்னை நிறைவான மனசோட அனுப்பி வைக்கணும்... ப்ளீஸ்டா..." 

"எப்படிடா...! என்னடா... திடீர்ன்னு..." 

"அப்பா... கம்பெனி விசயமா... கண்டிப்பா... கனடா ட்ரிப் போயிட்டு வரணும்னு கண்டிஷனா சொல்லிட்டாரு... அதோட மட்டும் இல்லாம... டிக்கெட் கூட எடுத்து ரெடியா வச்சிருக்காரு... என்கிட்டே... இப்பதான்... விசயத்தையே... சொன்னாரு... இரண்டு நாட்கள் தள்ளி டிக்கெட் போட்டிருக்கலாமேன்னு கேட்டா... கான்பரன்ஸ்... நடக்கும் நாளில் தானே... நீ அங்கே இருக்கணும்னு... நக்கலா கேட்கறாரு... அதோடு மட்டுமில்லாம... கம்பெனிக்கு தேவையான இரண்டு மெஷின் வாங்க வேண்டியிருக்காம்... அதைப்பற்றி ஒரு மாதம் படிப்பு வேற எனவே, நான் திரும்பி வர ஒன்று அல்லது இரண்டு மாதங்கள் ஆகும் போல..."

"என்னடா... சொல்றே... நீ சொல்றதைப் பார்த்தா என்னோட திருமணத்திற்கு கூட வரமாட்டே போல தெரிகிறது..." 

"சாரிடா... என்னை மன்னிச்சிடு" 

"............"

"ஏன்டா சங்கர் மவுனமாயிட்டே...? அப்போ... அப்பாகிட்டே... நான் போகலைன்னு சொல்லிடவா...?" 

"ம்கூம்... வேணாம்... உங்கப்பா இதுக்கு ஒருகாலும் சம்மதிக்கமாட்டாரு..." 

"இப்ப என்னடா பண்றது...?" 

"ம்ம்... கேன்சல் பண்ணிட வேண்டியதுதான்." 

"டேய்... இடியட்... என்னடா பேசறே...!" 

"ஆமாடா... நீ வந்த பிறகு இந்தப் பெண் பார்க்கும் படலத்தை வைச்சுக்கலாம்." 

"இதோ பாருடா, நான் சொல்றேன்... நீ இந்தப் பெண்ணைப் போய் பாரு... உனக்குப் பிடிச்சிருந்தா எனக்கும் பிடிச்ச மாதிரிதான்... திருமணத்திற்கு சம்மதம் சொல்லிடு சரியா..." 

"அப்ப நீ என்கூட இருக்கமாட்டியே... எனக்குன்னு நீ மட்டும்தாண்டா... நண்பன்னு இருக்கே... எப்படிடா...?" 

"நான் என்ன...? பெரிய இவனா...! எனக்கு உன் திருமணம் நன்றாக நடந்தால் அதுவே போதும் ஏற்கனவே... உன்னோட ராசிப்படி பெண் கிடைக்க மாட்டேங்குதுன்னு... உன் அம்மா... புலம்பிகிட்டு... இருக்காங்க... இதிலே... இந்த இடத்தை என்னைக் காரணம் காட்டி உன் கல்யாணம் தள்ளிப்போக விடமாட்டேன். புரிஞ்சதா...? நாளைக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு பெண் பார்க்கப் போறே...! பெண்ணை பிடிச்சிருந்தா...! திருமணத்தை முடிக்கிறே... சரியா?" 

"............"
"நான் சொல்றதை கேட்பே இல்லை.....?" 

"டேய்..... எஸ்கேப் ஆகப் பார்க்கிறே!" 

"அடேய்... மடையா... நாம இரண்டு பேரும்... உயிருக்கு உயிரான நண்பர்கள்தானே..." 

"இப்ப எதுக்குடா இதை கேட்கிறே...?"

"சொல்லுடா... காரணம் கேட்காம...?" 

"ம்ம்... எனக்கு என்னவோ... பிடிக்கலை... நீயும்... பெண்ணை பார்த்துட்டு என்கிட்ட பெண் எப்படின்னு சொல்லாம எப்படிடா..." 

"இதான்... இப்போ... உன் பிரச்சனையா...? பெண்ணை உனக்குப் பிடிச்சிருந்தா போட்டோ எடுத்து அனுப்பு... வாட்ஸ் அப்ல... நான் பார்த்துட்டு என்னன்னு சொல்றேன்... ஓகேவா... 

"என்னவோ... சொல்றே... என்னை விட... உன் மனைவி ராகவி... நிறைமாத கர்பிணியாச்சே... உன் குழந்தை பிறக்கும் இந்த நேரம்... நீ இங்கே இருக்க வேணாமா...?" 

 

 

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateNov 15, 2023
ISBN9798223725237
இதயமே விட்டு விலகாதே...!

Read more from Sundari Murugan

Related to இதயமே விட்டு விலகாதே...!

Related ebooks

Reviews for இதயமே விட்டு விலகாதே...!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    இதயமே விட்டு விலகாதே...! - Sundari Murugan

    1

    அனல் காற்று சற்று தணிந்திருந்த மாலை வேளை...

    டேய் ராமு... என்னடா... திடுதிடுப்புன்னு புறப்பட்டு வரச்சொல்லிட்டே என்னடா விசயம்? என்றவாறு சங்கர் வந்தான். என்னடா... போனில் வேண்டாம் நேரில் வான்னு சொல்லிட்டு எதுவுமே பேசாம அமைதியா இருக்கே... சொல்லேன்டா...?

    சங்கர்... நான் இன்று இரவு கனடா புறப்படறேன்டா...

    டேய்... ராமு... என்னடா சொல்றே! பொய்தானே...? ஏன்னா... நாளைதானே எனக்காக... வீட்ல பெண் பார்க்க போறோம்னு சொல்லியிருக்கேனே... மறந்திட்டியா...?

    நான் வர முடியாதுடா... சாரி... அதான். உன்கிட்டே எப்படி சொல்றதுன்னு... யோசிக்கறேன்

    இதோப் பார் ராமு...! உனக்கு பெண் பார்த்து திருமணம் முடியும் ஒவ்வொரு தருணத்திலும் உன் பக்கத்தில் நான் இருந்திருக்கிறேன். அதேபோல... எனக்கு பெண் பார்த்து திருமணம் முடியும் வரை நீ... என்னுடன் இருப்பேன்னு... வாக்கு கொடுத்திருக்கே மறந்திட்டியா...?

    அதாண்டா... சங்கர் என்ன பண்றதுன்னு குழம்பி முழிச்சிட்டு இருக்கேன்... நீதான்டா என்னை நிறைவான மனசோட அனுப்பி வைக்கணும்... ப்ளீஸ்டா...

    எப்படிடா...! என்னடா... திடீர்ன்னு...

    அப்பா... கம்பெனி விசயமா... கண்டிப்பா... கனடா ட்ரிப் போயிட்டு வரணும்னு கண்டிஷனா சொல்லிட்டாரு... அதோட மட்டும் இல்லாம... டிக்கெட் கூட எடுத்து ரெடியா வச்சிருக்காரு... என்கிட்டே... இப்பதான்... விசயத்தையே... சொன்னாரு... இரண்டு நாட்கள் தள்ளி டிக்கெட் போட்டிருக்கலாமேன்னு கேட்டா... கான்பரன்ஸ்... நடக்கும் நாளில் தானே... நீ அங்கே இருக்கணும்னு... நக்கலா கேட்கறாரு... அதோடு மட்டுமில்லாம... கம்பெனிக்கு தேவையான இரண்டு மெஷின் வாங்க வேண்டியிருக்காம்... அதைப்பற்றி ஒரு மாதம் படிப்பு வேற எனவே, நான் திரும்பி வர ஒன்று அல்லது இரண்டு மாதங்கள் ஆகும் போல...

    என்னடா... சொல்றே... நீ சொல்றதைப் பார்த்தா என்னோட திருமணத்திற்கு கூட வரமாட்டே போல தெரிகிறது...

    சாரிடா... என்னை மன்னிச்சிடு

    ............

    ஏன்டா சங்கர் மவுனமாயிட்டே...? அப்போ... அப்பாகிட்டே... நான் போகலைன்னு சொல்லிடவா...?

    ம்கூம்... வேணாம்... உங்கப்பா இதுக்கு ஒருகாலும் சம்மதிக்கமாட்டாரு...

    இப்ப என்னடா பண்றது...?

    ம்ம்... கேன்சல் பண்ணிட வேண்டியதுதான்.

    டேய்... இடியட்... என்னடா பேசறே...!

    ஆமாடா... நீ வந்த பிறகு இந்தப் பெண் பார்க்கும் படலத்தை வைச்சுக்கலாம்.

    இதோ பாருடா, நான் சொல்றேன்... நீ இந்தப் பெண்ணைப் போய் பாரு... உனக்குப் பிடிச்சிருந்தா எனக்கும் பிடிச்ச மாதிரிதான்... திருமணத்திற்கு சம்மதம் சொல்லிடு சரியா...

    அப்ப நீ என்கூட இருக்கமாட்டியே... எனக்குன்னு நீ மட்டும்தாண்டா... நண்பன்னு இருக்கே... எப்படிடா...?

    நான் என்ன...? பெரிய இவனா...! எனக்கு உன் திருமணம் நன்றாக நடந்தால் அதுவே போதும் ஏற்கனவே... உன்னோட ராசிப்படி பெண் கிடைக்க மாட்டேங்குதுன்னு... உன் அம்மா... புலம்பிகிட்டு... இருக்காங்க... இதிலே... இந்த இடத்தை என்னைக் காரணம் காட்டி உன் கல்யாணம் தள்ளிப்போக விடமாட்டேன். புரிஞ்சதா...? நாளைக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு பெண் பார்க்கப் போறே...! பெண்ணை பிடிச்சிருந்தா...! திருமணத்தை முடிக்கிறே... சரியா?

    ............ நான் சொல்றதை கேட்பே இல்லை.....?

    டேய்..... எஸ்கேப் ஆகப் பார்க்கிறே!

    அடேய்... மடையா... நாம இரண்டு பேரும்... உயிருக்கு உயிரான நண்பர்கள்தானே...

    இப்ப எதுக்குடா இதை கேட்கிறே...?

    சொல்லுடா... காரணம் கேட்காம...?

    ம்ம்... எனக்கு என்னவோ... பிடிக்கலை... நீயும்... பெண்ணை பார்த்துட்டு என்கிட்ட பெண் எப்படின்னு சொல்லாம எப்படிடா...

    "இதான்... இப்போ... உன் பிரச்சனையா...? பெண்ணை உனக்குப் பிடிச்சிருந்தா போட்டோ எடுத்து அனுப்பு... வாட்ஸ் அப்ல... நான் பார்த்துட்டு என்னன்னு சொல்றேன்... ஓகேவா...

    என்னவோ... சொல்றே... என்னை விட... உன் மனைவி ராகவி... நிறைமாத கர்பிணியாச்சே... உன் குழந்தை பிறக்கும் இந்த நேரம்... நீ இங்கே இருக்க வேணாமா...?

    அது தான்... அவ... வீட்ல தானே இருக்கா... அவ அம்மா... அப்பா... தம்பி, தங்கைன்னு அவளுக்கு துணைக்கு நிறைய பேர் இருக்காங்களே...

    எத்தனை பேர் இருந்தாலும்... உன் குழந்தைக்கு நீதானே... அப்பா. நீ அருகில் இருக்கணும்னு ராகவி நினைக்கும்தானே...!

    அதெல்லாம் அவ புரிஞ்சுப்பா... இருடா... அப்பா... கால் பண்றாரு என்றவன் செல்லைத் தொட்டு பேசினான்.

    டேய் சங்கர் அப்பா அவசரமா கூப்பிடறாரு நான் உன்கிட்டே பேசினதை ஞாபகம் வச்சிக்கோ. அப்ப நான் வரட்டுமா...?

    ............

    என்னடா பேசாம இருக்கே... கோபமா... சங்கர்... என்னோட நிலைமையை புரிஞ்சுக்கடா...!

    ..............

    டேய்... எதுவுமே பேசாம போறே... என்ற ராமு... திரும்பவும். அப்பா போனில் வர...

    ‘சரி, சரி பிறகு அவனை சமாதானப்படுத்தலாம்’ என்ற எண்ணத்துடன் போனை தொட்டு காதில் வைத்தான் ராமு.

    தூரத்தில் சங்கர்... தன் ஸ்கூட்டரை உதைத்து கிளம்புவதை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே இதோ இப்பவே வீட்டுக்கு வந்திடறேன்பா என்றவன்... காரில் ஏறி அதை ஸ்டார்ட் செய்தான்.

    2

    பெரிய ரோஜா மாலையில் நெற்றியில் சந்தனப் பொட்டுடன் மோகனமாய் சிரித்துக் கொண்டிருந்த தன் மகன் கோமுவின் போட்டோ முன்பு கண்ணீருடன் அமர்ந்திருந்தாள் கவுசல்யா.

    ஏய்... கவுசி... எதுக்காக இப்படி எதுவுமே சாப்பிடாம... அழுது புலம்பிக்கிட்டு இருக்கே... நம்மை பற்றி சிறிதும் நினைத்துப் பார்க்காம எவளோ ஒருத்திக்காக தன் உயிரை விட்ட கோழைப் பயலுக்காகவா...? எழுந்து போய் வயிற்றுக்குப் பாரு... இல்லேன்னா பிரஷர் உன்னைக் கீழே தள்ளிடும் என்றார் பரமு என்ற பரமசிவன் தன் மனைவியிடம் உண்மையான கரிசனத்துடன்.

    ஏங்க... இப்படி... விட்டேத்தியா... பேசறீங்க... என்னமோ... அவன் மேல பாசமே இல்லாத மாதிரி... அவன் இருந்தப்ப... இந்த வீடு எப்படி கலகலன்னு இருந்திச்சி... இப்ப அவன் இல்லாம வீடே... களை இழந்து வெறிச்சோடி கிடக்கிறதைப் பார்த்துட்டுதானே இருக்கீங்க...

    அதான் சொல்றேன்... அந்தப் பயல் இதை எல்லாம் நினைக்காம... யாரோ ஒரு பெண்ணை மனதில் நெனைச்சானாம் அவள் இவனை பார்க்க வராம... இருந்தாளாம்... அதனால இவரு மலையில் இருந்து குதித்து உயிரைவிட்டாராம்... வீட்ல தாய், தந்தை, தமையன்னு இருக்கோமே... நம்மை நெனைச்சி பார்த்தானா...? நாம் எதுக்காக அப்படிப்பட்டவனை நெனைக்கணும்... கண்ணீர் சிந்தணும் சொல்லு...

    ஆனாலும் உங்க இதயம் கல்லுதான் என்றாள் கவுசி.

    ஆமான்டி... நீ நினைக்கிற மாதிரி நான் கல்லாவே இருந்துட்டுப் போறேன்... இப்படி ஒரு திடமான மனசு இல்லாத பையனை பெற்றதற்கு அப்படி இருப்பது தான் சரி...

    அப்போது கார் வந்து நிற்க... அதிலிருந்து இறங்கினான் ராமு...

    டேய்... ராமு வந்திட்டியா...

    என்னப்பா... அவசரமா வரச் சொன்னீங்க?

    டேய்... உன் மனைவியை மருத்துவமனையில் சேர்த்திருக்காங்களாம்... அனேகமா... இன்று குழந்தை பிறந்திடும்... உனக்கு போன் போட்டாங்களாம் டவர் இல்லையாம். அதான் ராகவியோட அம்மா எனக்கு போன் போட்டாங்க. நீ பிளைட்டுக்கு போறதுக்குள்ள போய்... பார்த்திட்டு வந்திடேன்...

    சரிப்பா...

    ஆங்... ராமு... உன் அம்மாவை சமாதானப்படுத்தி சாப்பிட வைச்சிட்டுப் போ..... இல்லேன்னா உன் தம்பியை இழந்தது போல்... உன் அம்மாவையும் நாம் இழக்க நேரிடும்...

    என்னப்பா... பேசறீங்க...

    தற்கொலைப் பண்ணின அந்தப் பயலை நெனைச்சுக்கிட்டு பச்ச தண்ணீர் கூட குடிக்காம காலையில் இருந்து உங்கம்மா அவன் போட்டோவையே வெறிச்சி... பார்த்துட்டு இருக்கா... உடம்புல பிரசர், சுகர்ன்னு வியாதிகளை வைச்சுக்கிட்டு... இவளுக்கு ஏதாவது ஆயிடப் போகுது. அவளை கொஞ்சம் சாப்பிட வைச்சுட்டுப் போய் உன் மனைவியை பார் என்றவர் அறைக்குள் நுழைந்தார்.

    தன் தாயின் அருகில் வந்த ராமு என்னம்மா இது அப்பா சொல்றது நிஜமா?

    "டேய் ராமு... இன்று என்ன நாள்னு...

    Enjoying the preview?
    Page 1 of 1